Wednesday, March 31, 2010

கலைஞரை நான் வெறுக்கிறேன்

நான் கலைஞரை வெறுக்கிறேன்.நேற்றிலிருந்து தான் வெறுப்பு தொடங்கியது.ஒரே நாளில் அளவில்லாமல் பெருகி விட்டது.காரணம் பெண்ணாகரம் தேர்தலா என்றால் அதுவும் இல்லை.இப்படி எல்லையில்லாமல் வெறுப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.அது விஜய் சொன்ன வார்த்தைகள் தான்.த்ரீ இடியட்ஸ் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது என்று சொல்லி விட்டார்.இதை தடுக்க யாருமே இல்லையா.

இதற்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தமா என்று கேட்காதீர்கள்.இருக்கிறது.ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்திருக்கும்.நாற்பது வருடம் கழித்து பூமராங் தாக்க வந்திருக்காது.யாராவது சொல்லுங்களேன்.தலைப்பைத் தவிர அவருக்கு அந்த படத்தில் எதுவும் பொருந்தாது என்று.

விஷப் பரீட்சை செய்யலாம்.விஷம் வைக்கிற பரீட்சை செய்யலாமா.இதை பார்ப்பதை விட அமீர் கான் ஏதாவது நாட்டில் குடியுரிமை வாங்கி கொண்டு போய் விடலாம்.சரி அவருக்கு எந்த கேரக்டர் தான் பொருந்தும் என்று யோசித்ததில் பொம்மன் இரானி,சவுத் இண்டியன் கதாபாத்திரம் என்று வந்தாலும் அவர்களும் நன்றாக நடித்திருந்தார்கள்.அப்பறம் என்ன கதாபாத்திரம் கொடுக்கலாம்.சத்யராஜிடம் சத்யன் கதை சொல்வாரே அந்த குழந்தையே நீங்க தான் சார் என்று அது மாதிரி பிறக்கும் வைரஸின் பேரன் கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கலாம்.குழந்தை மட்டும் தான் சரியாக அவர் அளவிற்கு நடித்திருந்தது.

சுறா விமர்சனம் எழுத வேண்டும் என்று விஜய்யின் அன்பு ரசிகர்கள் என்னை கேட்டார்கள்.நான் இப்போ எல்லாம் உலக சினிமாக்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை என்று சொல்லி விட்டேன்.

இனி மேலாவது ஹிந்தி படிக்காமல் இருக்காதீங்க.படிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை.அப்படி ஏதாவது கொலை முயற்சி நடந்தால் அதற்கு ஆதரவு தெரிவித்து விடாதீர்கள்.அப்புறம் கலைஞரை என்னை மாதிரி அதிகம் பேர் வெறுத்து விடுவார்கள்.இப்படி செய்தால் கூட தி.மு.கவின் ஓட்டு வங்கி குறையும் என்று 2011 முதலவருக்கு தெரிந்திருக்கிறது.

Tuesday, March 30, 2010

அய்யனார்,சுரேஷ் கண்ணன் மீது சங்கம் நடவடிக்கை எடுக்குமா

 அய்யனார்,சுரேஷ் கண்ணன் இருவரும் அங்காடித் தெருவை விமர்சனம் செய்து அவர்கள் பாணியிலேயே படம் பார்க்க வைக்கிறார்களோ என்று சந்தேகம் லேசாகவருகிறது.யார் கண்ணுக்கும் தெரியாத குறியீடுகள்,அளவுகள் இவர்கள் கண்ணுக்கு மட்டும் எப்படி தெரிகிறது.எனக்கு தெரிந்த இன்னொரு குறியீடு பைத்தியக்காரனின் பார்வை.இதற்கு முன் நான் கடவுள் படத்தைப் பற்றி ஒரு நீண்ட பின்னூட்டம்.இரண்டு படத்தக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.அது தான் நான் கண்ட குறியீடு.முடிந்தால் சங்கம் இவர்கள் மூவரையும் ஒரு மாதத்திற்கு எங்காவது அடைத்து வைக்கலாம்.அதற்குள் நான் படம் பார்த்து விடுவேன்.(இப்படி எழுத முடிவு செய்து இருக்கிறேன் என்று சொன்னவுடன் நீங்கள் மட்டும் ஒழுங்கா.உங்களையும் அந்த அறையில் அடைக்க வேண்டும் என்ற தோணியில் திட்டு கிடைத்தது.மக்கா எனக்கு இந்த தண்டனை எல்லாம் கொடுக்க வேண்டாம்)

நான் எழுதாமல் இருக்கும் போது ஏன் எழுதவில்லை என்று உரிமையாக குட்டாதவர்கள் தினமும் ஏன் எழுதி எங்கள் உயிரை வாங்குகிறாய் என்று அன்பாக குட்டுபவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்குமா.

ஒரு காலத்தில் மைனஸ் ஓட்டுகள் போட்டு என்னை புளங்காகிதம் அடைய செய்தவர்கள் இன்று பெயர் தெரிகிறது என்றவுடன் மைனஸ் போடாமல் இருக்கிறார்களே அவர்கள் யார் என்று சங்கம் கண்டுப்பிடித்து சொல்லுமா.

பதிவு பரிந்துரையில் ஏற இன்னும் ஆறு ஓட்டு வேண்டும் என்று தெரிந்தும் அதற்கு உதவி செய்யாமல் போனால் அவர்களாகவே ஓட்டு போடும் வரை சங்கம் பதிவைப் படிக்க வைக்குமா.

யாராவது நான் இருக்கும் இடத்திற்கு ஆட்டோ அனுப்பினால் சங்கம் அந்த ஆட்டோவை கட் செய்யுமா.

பா.ம.கவின் மக்கள் தொலைக்காட்சியைப் பாராட்டி எழுதிய போது இதை ஐயாவிடம் அனுப்பட்டுமா என்று கேட்காத நண்பர்கள் பா.ம.கவை விமர்சித்த போது இதை ஐயாவுக்கு அனுப்பட்டுமா என்று கேட்டு ஒரு ஜர்க் உண்டாக்கும் அன்பர்களின் ஐ.பியை சங்கம் கண்டுப்பிடித்து தருமா

எதிர்வினை எழுத மாட்டேன் என்று சொல்லி விட்ட பிறகும் நீ எழுதியே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்ற சங்கத்தின் நிரந்தர(நிராதரவான) தலைவர் சாறு சங்கர் மீது சங்கம் நடவடிக்கை எடுக்குமா.தலைவர் பதவி கிடைக்காத பதற்றத்தில் ஆணியே பிடுங்க வேண்டாம் என்றும்,தண்ணீர் வாங்கி தராமல் வாங்கி தந்தேன் என்று பொய் சொன்ன சாறு சங்கரின் மீது வழக்கு தொடுக்குமா.

சாந்தாமணியின் மீது உரிமை கொண்டாடிய அதிஷாவிற்கு கென் என்னுடைய சாதாமணியை வேணா தர்றேன் என்று என்னை கேட்காமல் சொல்லி விட்டார்.கென்னுக்கு சங்கம் கண்டனம் தெரிவிக்குமா.

மும்பையில் தங்கமனியிடம் அடி வாங்கிய ரங்கமணியை காப்பாற்ற வீடியோ எடுத்து உதவியது போல் சென்னையில் தங்கமணி அடி வாங்கும் தங்கமணி புகழ் பதிவரின் அந்த வீடியோவை சங்கம் ஒளிப்பரப்புமா.முடியும் போது ஏ பிலிம் பை __ என்று அவர் பெயர் வர வழி(லி) வகை செய்யுமா.

இந்த பதிவுக்கும் சேர்த்து யாராவது வழக்கு போட்டால் சங்கம் என் கைச்செலவுக்கு பணம் தருமா.

சொல்லுங்க ஏன்னா நான் இப்போ சங்கத்தோட உறுப்பினர்.

Monday, March 29, 2010

துவையல் - கொலைவெறி ஸ்பெஷல்

பதிவர்கள் சந்திப்பிற்கு போய் விட்டு வந்த நர்சிமே கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடிவு செய்து விட்டாராம்.போகாமல் இருந்த நான் செய்யலாம் என்று யோசித்ததில் அண்ணன் சாறு சங்கருக்கு பதவி கிடைக்கும் வரை அவர் உண்ணாவிரதம் இருப்பார் என்று அறிவிக்கிறேன்.ஏதாவது சொன்னால் இந்த தலைப்பு மாதிரி துவைத்து எடுத்து விடுவார்கள்.சங்கம் தொடங்கும் முன் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தது மாதிரி தான் தெரிந்தது.சங்கம் ஆரம்பிக்கும் முன்னாடி ஆள் ஆளுக்கு மாற்றி மாற்றி கும்மாங்குத்துகளாக தருகிறார்கள்.எல்லாம் முடிந்த பின் சுபமான முடிவு எடுக்கப்பட வேண்டும் அப்படி நடந்தால் தான் யாரிடமாவது நாம் கேட்கலாம் - "என் சங்கத்து ஆளை அடிச்சது யாருடா..".சாறு சங்கர் சொன்னார் நீங்களும் வந்திருக்கலாம் வடை நிறைய கிடைத்தது.ஒரு வாரத்திற்கு பொழுது போகும் என்றும் நான் வந்திருந்தால் களை கட்டியிருக்கும் என்றும் சொன்னார்.எனக்கு சர்ச்சைகளே பிடிக்காது என்று சொன்னால் அவருக்கு புரியவில்லை.ஆனால் இந்த உள்குத்திலும் பதிவர் விதூஷ் விடாப்பிடியாக வந்தது சாரு நிவேதிதா என்று பதிந்துள்ளார்.ஞானியை விட சாரு பிரபலம் என்று எடுத்து கொள்ளலாமா அது தான் எனக்கு தெரியவில்லை.

தேங்க்ஸ் மா படத்தில் எந்த காட்சியையும் சொல்லி விடக் கூடாது என்ற பதற்றத்தில் சொல்ல நினைத்த ஒரு காட்சியை விட்டு விட்டேன்.ஒரு ஆறு வயது சிறுமியையும் இன்னும் பத்து வருடங்கள் கழித்து என்று கணக்கு போட்டு பார்க்கும் விபச்சார விடுதியில் இருக்கும் மாமாவின் செய்கையால் கொஞ்சம் திகைத்து தான் போனேன்.இது சென்னையில் நான் படித்த ஆண்கள் பள்ளியின் மன நிலையை ஒத்துயிருந்தது.ஆறு படிக்கும் சிறுமியைக் கூட விடாமல்  நக்கல் பறக்கும்.அப்படி சொன்னதற்காக ஏற்பட்ட ஒரு சண்டையின் போது எனக்கு கடியும் பதிலுக்கு அவனுக்கு அடியும் கிடைத்தது.பேருந்தில் இடிப்பவர்களில் பெரும்பாலோனோர் வீட்டில் ஒற்றைப் பிள்ளைகளாகவும்,அல்லது பெண் பிள்ளைகளோடு பிறந்தவர்களாக இருந்தது ஒரு ஆச்சர்யமே.

என்றாவது பேப்பர் படித்தாலும் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கும் ஆசாமிகள் தொல்லை தாங்க முடியவில்லை.ஆஸ்கர் வாங்கிய உடன் கணவனை விட்டுப் பிரிந்த நடிகைகள் என்று ஒரு பட்டியலே உள்ளது.கேட் வின்ஸ்லட்,சான்ரா புல்லக்,ஹாலி பெர்ரி,ஏஞ்சலினா ஜோலி என்று வருடத்தோடு குடுத்து இருக்கிறார்கள்.இதுவாவது பரவாயில்லை - டேவிட் பெக்காமிற்கு காலில் அடிபட்டதால் அவர் கால்பந்தோடு இன்னொரு விளையாட்டையும் விளையாட முடியாது என்று விளையாட்டு பக்கத்தில் வந்துள்ளது.நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை.

ஒரு வழியாக வேட்டைக்காரன் பார்த்து விட்டேன்.பார்த்தால் புது வேலை கிடைக்கிறதாம்.அருமை அண்ணன் நையாண்டி நைனா கூட அந்த வழியில் தான் போனார்.அதனால் வலியை பொறுத்து கொண்டு அந்த படத்தைப் பார்த்து விட்டேன்.தலைவா சுறா பாருங்க.வெளி நாட்டில் வேலை கிடைக்கும். இதை நம்பி இப்படி தொடர்ந்து மக்கள் விஜய் படம் பார்த்தால் வேலை சொர்க்கத்தில் தான்.

சென்னை இனி வரும் எல்லா போட்டிகளையும் ஜெயிக்க வேண்டும்.நடக்கிற கதையா.ஹர்பஜன் சிங்கிடம் பேட்டிங் கற்றுக் கொள்ள பதிரிநாத்தையும்(45 பந்தில் 55 ரன்கள்),இன்னும் சிலரையும் அனுப்ப வேண்டும்.இன்னும் ஒரு சிக்ஸ் அடித்திருந்தால் ஹர்பஜனும் அதே ரன்களை சமன் செய்திருப்பார்.சச்சின் பேட்டை வைத்து ஆடினார் என்று சொன்னார்கள்.என்ன நடந்தாலும் நான் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை.

அமீரை சொன்னால் சிலருக்கு இன்னும் கோபம் வருகிறது.நியாயமாக பார்த்தால் அந்த ஆப்பிரிக்க படத்தின் இயக்குனருக்கு தான் கோபம் வர வேண்டும்.இரண்டு மூன்று பதிவுகளில் பார்த்தேன்.பழைய கதைகளை அப்படியே உல்டா அடித்திருக்கிறார்கள்.கட் காப்பி பேஸ்ட் அடிச்சா நன்றி போடணும்.சொந்தமாக யோசித்தது மாதிரி போட கூடாது.சிக்கினால் அமீரின் நிலையை விட மோசமாக போய் விடும்.நண்பர் ஆதாரங்களைக் காட்டிய போது கொஞ்சம் அதிர்ச்சி தான்.நடக்கட்டும் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.இதை விட உச்சக்கட்ட அதிர்ச்சி போன வருடம் நடத்திய உரையாடல் கதை போட்டியில் அப்படியே எஸ்.ராமகிருஷ்ணனின் கதை ஒன்று உருவப்பட்டிருந்தது.

Sunday, March 28, 2010

தேங்க்ஸ் மா - அமீரும்,அங்காடித் தெருக்களும் காட்டாத உண்மைகள்

ஸ்லம்டாக் படம் தான்  மும்பையின் கோர முகத்தைக் கிழித்து காட்டியது என்று இதுவரை நினைத்து இருந்தேன்.அது எவ்வளவு பொய் என்பது இந்த படத்தில் தான் தெரிந்தது.உண்மைகளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கொஞ்சம் லேசாக கண் கலங்கி விட்டது.நான் பிராண்ட் நேம் பின்னால் ஓடிக் கொண்டிருப்பவன் என்று இன்னொரு முறை இந்த படம் பார்த்ததும் என் முகத்தில் அறைந்த உண்மை.

சாம்ஸ் பட்டேல் தான் சிறந்த குழந்தை நட்சத்திரமாக இந்த ஆண்டு தேசிய விருதுகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது தான் ஒரே ஒரு ஆறுதல்.தலைப்பைப் படத்தில் காட்டவே ஒரு அதிர வைக்கும் காட்சி.கோளை வடிந்த முகத்துடன் நடித்த அந்த சிறுவனுக்கு இந்த தேசிய விருதெல்லாம் சாதாரணம் என்று தான் தோன்றியது.

நகரத்தில் வாழ திருடுவது ஒன்று தான் அனாதை ஆக்கப்பட்ட குழந்தைகளின் வழி என்பது போல வாழும் சிறுவர்கள் - முனுசுபாலிட்டி,கட்டிங்,சோடா.ஆட்களை எப்படி குறி வைக்கிறார்கள் என்பதை ஒரு விளையாட்டுப் பொருள் வைத்து காட்டுகிறார்கள்.அப்படி திருடி மாட்டிக் கொள்ளும் முனுசுபாலிட்டியை ஒழுக்கம் சொல்லி தரும் விடுதியில் அடைக்கிறார்கள்.வார்டன் தப்பாக நடக்க முயல அதிலிருந்து ஓடி ஒரு நல்லவரால் காப்பாற்றப்பட,இரவே தப்பிக்க முயல்கிறான்.அந்த சமயம் வாசலில் ஒரு குழந்தையை விட்டு விட்டு செல்லும் பெண்ணைப் பார்க்கிறான்.குழந்தையை நாய் உணவாக்க முயல,வேறு வழியில்லாமல் குழந்தையுடன் தப்பிக்கிறான்.

குழந்தையை அம்மாவிடம் சேர்த்து விடும் வேட்கை தான் மிஞ்சி நிற்கிறது.விளைவு நண்பர்கள் குழுவுடன் தேடுதல் வேட்டை தொடங்குகிறது.அந்த குழந்தைக்கு பசியாற்றும் புத்திசாலிதனத்தில் கொஞ்சம் உறைந்து தான் போனேன்.கோவில்,திருநங்கை,குழந்தைதையைத் தொலைத்த ஒரு அம்மா(இதன் நீட்சியாக அண்டி கிறிஸ்ட் என்ற படத்தைப் பார்த்தேன்),கார் டிரைவர்,சமூகத்தில் பெரிய பதவி வகிக்கும் "நல்லவன்",விபச்சார விடுதி,மருத்துவமனை,ஐடி கம்பேனி,அனாதை இல்லம் என்று பயணித்து முடியும் போது அதில் தெரிந்த உண்மைகள் இப்படி எல்லாம் நடக்குமா என்று முன்னரே யோசித்து பார்த்ததையை எல்லாம் பகடி செய்கிறது.

கிரிக்கெட் செய்திகளுக்கு கீழே வரும் செய்தியைப் பார்த்தவுடன் அன்றாடம் இந்த ஐ.பி.எல் எப்படி எல்லாம் என் நேரத்தை உறிஞ்சுகிறது என்பதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.ஐ.பி.எல் என்று சொல்வதை விட கிரிக்கெட் என்ற பதம் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

கடைசியில் சொல்லும் செய்திகள் எல்லாம் உண்மையாக இருக்கவே கூடாது என்று நினைத்து கொண்டேன்.படம் பார்க்கும் இரண்டு மணி நேரத்தில் இந்தியாவில் பதினொரு குழந்தைகள் அனாதை ஆக்கப் படுகிறதாம்.ஒரு நாளில் மட்டும் 240 குழந்தைகள்.நாய்களுக்கும்,குப்பைத் தொட்டிகளுக்கும் உணவாகிறது என்று நினைக்கும் போது இந்த காதல்,கள்ளத் தொடர்பு மீதெல்லாம் எரிச்சல் வருகிறது.ஒரு காண்டம் உபயோகிக்க தெரியாத நாய்களுக்கெல்லாம் என்ன மயித்துக்குடா காதல்.

அந்த அனாதை சிறுவன் பனிரெண்டு ஆண்டுகளாக அம்மா ஒரு நாள் வருவாள் என்ற நம்பிக்கை நாலே நாளில் ஒரு குழந்தையால் உடைத்து போகும் போது ஏற்படும் வலி அம்மா என்று உருகும் நமக்கு  தெரியாது  தான்.

கடைசி காட்சியில் இருந்த அதிர்ச்சி இன்னும் மறையவில்லை.அங்காடித் தெரு பார்த்து உரைந்தவர்கள் எல்லாம் இந்த படத்தைப் பார்த்தால் அது ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றும்.அமீர் இந்த படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் எப்படி குழந்தையை வைத்து படம் எடுப்பது என்று.தயவு செய்து இந்த படத்தை எல்லாம் பார்ப்பதோடு நிறுத்தி கொள்ளலாம்.ரீமேக் செய்ய வேண்டாம்.

அனானி ஜேம்ஸ் - பின்னூட்டம் வரவில்லை என்றால் ஏன் எழுத வேண்டும் என்று கேட்டீர்களே.யாரும் பதியாமல் விட்டதை என்றாவது நான் பதிவேன்.எனக்கு இந்த பின்னூட்டம்,ஓட்டு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.பின்னூட்டம் வரவில்லை என்றாலும் நான் எழுதுவதை நிறுத்த முடியாது.இதை படித்தால் அந்த படத்தைப் பார்க்கவும்.

Saturday, March 27, 2010

இனி எதிர்வினைகள் கிடையாது

தேவைப்படும் போதெல்லாம்
திருடுகிறேன் அது
மனதாக இருந்தாலும்

சண்டைக்கு தயாராக
இறுக்கி கட்டிக் கொண்டேன்
கோமணத்தை
இணையத்தில் அங்காடி தெருவை
விமர்சித்து எதிர்மறையான பதிவு

தப்பானவனாகவே தெரிகிறேன்
ஆடைகளை சீர் செய்ய
நகர்ந்த கைகளைப்
பின் தொடர்ந்ததால்

நல்லவனை நாய்க்குத் தான்
கட்டுவார்கள் - தாத்தா சொன்னது
அவருக்கு தெரியுமா
நாய்கள் தான் முன்வருவதில்லை
நல்லவனைக் கட்ட.

மனது சரியில்லாத சமயம்
உடம்பு பெண் கேட்கிறது
மனதோ பெண்ணின் அருகாமையைக்
கேட்கிறது உடம்பு சரியில்லாத போது
இரண்டு சரியில்லாத போது
சுயமாய் திரிகிறேன்.

அடிக்கடி மறந்து விடுகிறேன்
வரும் பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்ல
இன்று முதல் சொல்கிறேன்
எனக்கு நானே
பதிவிற்கு நன்றி

Friday, March 26, 2010

ஒரு மழை நாள் இரவு

எல்லோருடைய காதலும் விவாதிக்கப்பட்டது
அமைதியாக இருப்பவன் காதல் லேசுபாசாகவும்
கோபப்படுபவன் காதல் இன்னும் அதிகமாகவும்
கிளறப்பட்டு தொடுபொருளாக மாறத் தொடங்கியது
அப்பா அம்மா நாய்க்குட்டி என வார்த்தைகளில் ஆரம்பித்தது
எவனோ ஒருவன் எடுத்ததில் எழுத்துகளாக சிதறியது
தேவைப்பட்ட வார்த்தைகளுக்காக கழுவப் பொறுக்கினால்
மழையில் அடித்து செல்லப்படும் போது
இடம் மாறி புரியாத பாஷையில் ஏதோ சொன்னது
கடைசியாக அவள் கண்களில் பார்த்த மினுமினுப்பு
ஓடைத் தண்ணீரில் இழுக்கப்பட்ட சொற்களில் தெரிந்தது
இன்னொரு மழைநாள் இரவிற்காக

காத்திருக்கிறேன்
 அவர்களும் காத்திருக்கலாம்

Thursday, March 25, 2010

நாளைய இயக்குனர்

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் குறும்படங்கள் எல்லாம் என் கல்லூரி காலத்தை நினைவு ஊட்டுகிறது.

கூகுள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சில சமயம் நான் மூச்சுத் திணறி இறந்திருப்பேன்.எந்த இடத்தில் திருடிய கோடிங்கை எல்லாம் உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரிந்திருந்தால் அவன் பிழைக்க முடியும்.லாஜிக் தெரிந்தால் எந்த மொழியிலும் எழுதலாம்.கண்டபடி திருடக் கூடாது.அப்போதெல்லாம் கூகிளை உபயோகிக்கத் தெரியவில்லை.போலீஸ் குறும்படங்கள் தான் போன ஞாயிறு அன்று கருப்பொருள்.ரொம்ப திராபையான டிவிஸ்ட் கொண்ட இரண்டாவது திரைப்படம்.முதல் காட்சியிலேயே ஊகித்திருந்தேன்.கடைசி காட்சியில் நான் நினைத்தது தான்  வந்தது.முடியும் போது போக்கிரி வாய்ஸ் ஓவர் வேறு.முடியலடா சாமி.அந்த இயக்குனருக்கும் ரெபரன்ஸ் எடுக்க தெரியவில்லை.போகப் போக தெரியும்.

எப்பவும் லேப் நடக்கும் போது நான் அவுட் ஸ்டாண்டிங் மாணவன் தான்.வெளியிலேயே நிற்பேன்.சில துரோகிகள் உண்டு.காலில் விழுந்து உள்ளே சென்று விடுவார்கள்.அந்த அளவிற்கு உருக்கமாக நடிப்பார்கள்.அந்த அளவிற்கு நாளைய இயக்குனர் எடுக்கும் குறும்படத்தில் நடிக்க மறுக்கிறார்கள்.உதாரணம் சுஜாதாவின் சைன்ஸ் ஃபிக்ச்ஷன் கதை.

செய்முறை தேர்வு நடக்கும் போதெல்லாம் பிட் அடிக்க முடியாமல் ஃபார் லூப்பை இறுதி வரியாக அடித்தது உண்டு.அது மாதிரி எடிட்டிங் தெரியும் என்பதற்காக இப்படியெல்லாம் வெட்டி ஒட்டி பார்வையாளனின்  உயிரை வாங்கக் கூடாது.

லேப்பில் வெளியே நின்றவன் எல்லாம் இன்னைக்கு பொட்டி  தட்டுறான். உள்ளே இருந்த திறமைசாலி கேஷியர் வேலை பாக்குறான்.அது மாதிரி தான் குறும்படங்களை வைத்து முடிவுக்கு வர முடியாது.அமீர் சொன்னது தான் சசிகுமார் இயக்குனர் ஆவான் என்று நான் நினைக்கவில்லை.

எக்ஸிட் கமெண்ட் அடிக்க தெரியாமல் திட்டு வாங்கிய காலம் எல்லாம் உண்டு.சொல்லித் தந்த அந்த மகாமேதைக்கு அது மட்டும் தான் தெரியும் என்பது பின்னால் தான் தெரிந்தது.நடுவர்கள் என்று வரும் மொக்கைகள் எல்லாம் அது தப்பு இது தப்பு என்று சொல்லும் போது தான் சிரிப்பு வருகிறது.

சி பிரோகிராம் எழுதும் போது ஹெட்டர் தவிர எதுவும் தெரியாது.அதை மட்டும் எழுதி விட்டு காலரை தூக்கிக் கொண்ட காலமெல்லாம் உண்டு.மொக்கை படங்களுக்கு பாராட்டு கிடைக்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தேன் என்று சொல்கிறார்கள் சிரிப்பு வந்து விடுகிறது என்னையும் அறியாமல்.சிங்கப்பூரில் கல்லூரியில் படிக்கும் போது புதிதாக ஒரு கணினி மொழி கண்டுப்பிடிப்பார்களாம்.ஏன் கூகிளே கடைசி வருட பிராஜக்ட் தான்.நமக்கு சொல்லி தரும் லட்சணத்தில் இருப்பதையே ஒழுங்காக படிக்க மாட்டோம்.அதே மாதிரி தான் இருக்கிறது.போலீஸ் என்று சொன்னால் விரைப்பாக நடப்பது,வந்த தமிழ்ப்படங்களில் இருந்து திருடுவது எல்லாம் காட்டுகிறது முன்னேர் சென்ற வழியில் தான் பின்னேர் செல்லும் என்று.புதிதாக ஒரு கதை சொல்லியையும் நம்மால் உருவாக்க முடியாது.அடுத்தவன் கண்டுப்பிடித்ததை திறமையாக நாம் உருவாக்குவோம்.

கிழிக்கப்பட்ட டைரியின் பக்கங்கங்களிலிருந்து

முதல் தடவை காலேஜ் போகும் போதுதான் பார்த்தேன்.டிபன் பாக்ஸை ஒரு ஐயர் பொண்ணைப் பிடிக்க சொல்லி விட்டு சிக்கனை வெளுத்து கொண்டிருந்தாள்.அவள் அளுமை எனக்கு பிடித்திருந்தது.கூடவே அவளையும்.அவ எனக்கு தான் என்று சொல்லும் அளவிற்கு எனக்கு வெளியுணர்வு கூட வேலை செய்யவில்லை.

எனக்கு அமீபா கூட ஒழுங்காக வரைய தெரியாது.அவளுக்கு இஞ்சினீரிங்க் டிராயிங்க் கூட அமீபா தான்.நான் அவளுடன் பேசிய வார்த்தையே "எனக்கும் வரைந்து தர முடியுமா.." என்று தான்.பின் கேட்காமலே எல்லா முறையும் வரைந்து தந்தது அவளுக்கும் என்னை பிடித்ததை காட்டியது.
அவ ஏரியாவுக்கு வீடு மாறியிருந்தேன்.அவளுக்காக மாறினேன் என்று அவள் நினைத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன்.வீட்டில் பொருள்களை அடுக்காமல் தப்பிக்க அவள் வீட்டுக்கு போனால் அவள் பாட்டிக்கு என்னை பிடிக்கவில்லை.முறைத்து கொண்டேயிருந்த காரணத்தால் அவளுக்கு குடுக்க வைத்திருந்த கேட்பரீஸ் சாக்லேடடி நான் சாப்பிட்டு விட்டு தாளை அங்கிருந்த புத்த்கத்தில் வைத்து விட்டேன்.அது இன்னமும் இருப்பதாக அவள் ஒருமுறை சொன்னதாக ஞாபகம்.

"எங்க அக்கா யாரையாவது அவ பிரெண்டை முன்னாடியே வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது.." அவள் சொல்லி முடிக்கும் முன் நான் "நான் ஒண்ணும் உன் பாட்டியைக் கல்யாணம் செய்ய போவதில்லையே.." முடித்திருந்தேன்.

கைவளையம் அணிவது எனக்கு பிடிக்கும்.வீட்டில் அப்பாவுக்கு பிடிக்காது.அவ குடுத்த வெள்ளி கைவளையத்தை கல்லூரியில் மட்டும் அணிந்து கொள்வேன்.எனக்காக என் ஸ்டாப்பில் இறங்குவாள்.அங்கிருக்கும் சந்தில் பேசும் போது அப்பா பார்த்து விட்டு திட்டியதாக சொன்னாள்."முன்னாடி என் பின்னாடி வந்த பையனை அடித்து விட்டார் தெரியுமா.நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.." சொல்லும் போது கண் கலங்கியது."எவனாவது இளிச்சவாயன் கிடைச்சா ஏன் உங்க அப்பன் அடிக்க மாட்டான்..கை வச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்.." போபத்தில் உதடு துடிப்பது பார்த்து அவள் அழுதாள்.கொஞ்சம் சந்தோஷம் தான்.எனக்காக ஒரு பொண்ணு அதுவும் எனக்கு பிடிச்ச பொண்ணு அழும் போது எல்லா அப்பாகளையும் திட்டலாம்னு தோணிச்சி.துடைக்க முயற்சித்தேன்.முகத்தைத் திருப்பி கொண்டாள்.தெறித்த கண்ணீரின் சூடு இன்றும் அப்படியே இருக்கிறது.
அழுது கொண்டிருந்தவளை எப்படி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை."எனக்காக அழுத பெண்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது.." மெதுவான குரலில் சொன்னேன்.

அழுகையை நிறுத்தியிருந்தாள்.கொஞ்ச நேரம் கழித்து "இதுக்கு முன்னாடி எத்தனை பேர் அழுதாங்க.." சஜக நிலைக்கு வந்திருந்தாலும் குரலில் தழுதழுப்பு மிச்சமிருந்தது.

"இதென்னடா புது வம்பு வருது.." என்று நினைத்தாலும் சுதாரித்து விட்டேன்."அப்படியெல்லாம் யாருமில்லை..நீ தான் முதல் பொண்ணு.."

"அப்புறம் எப்படி எண்ணிக்கையில் ஒண்ணு கூடும்.." பவுன்சர் கேள்வி முகத்தில் அறைந்தது.

"ஜீரோவுல இருந்தது..இப்போ ஒண்ணு கூடியிருக்கு..அதான் அப்படி சொன்னேன்.."

"நல்லா பொணுங்களைக் கவுக்கற மாதிரி பேசுறடா..உன்னால நிறைய பேர் அழுதுருப்பாங்கடா.." சொல்லிக் கொண்டே கட்டிப் பிடித்தாள்.டாவினால் வந்த கொஞ்ச நஞ்ச கோபமும் அடுத்து வந்த முத்ததில் அடங்கியது.

கல்லூரியில் இரண்டாம் வருட பீஸிற்கு பேங்க் பேங்காக ஏறிக் கொண்டியிருந்தோம்.அலைய வைத்து கொண்டிருந்தார்கள்.போன் செய்து "எங்கப்பா ஒட்டியாணம் வாங்கி தந்திருக்கிறார்..ரொம்ப நல்லாயிருக்கு.." சொல்லும் போதே கோபம் தலைக்கேறியிருந்தது.

"இப்போ அங்க என்ன இருக்குன்னு ஒட்டியாணம்..உங்க அப்பனுக்கு தான் அறிவில்ல..உனக்குமா.."

"இப்போ ஏன் எங்க அப்பாவை திட்டுற.."

"உங்க அப்பனுக்கு எல்லாம் உங்க ஸ்டேட்ல வேலை கிடைக்காதா..இங்க வந்து எங்களுக்கு லோன் கொடுக்காம தாலிய அறுக்கிறான்.."

"எங்க அப்பாவா.."

"அவனை மாதிரியே ஒருத்தன்..எல்லோரும் உங்க அப்பன் மாதிரியே இருக்காங்க.."

இயலாமை அவள் மேல் வெடித்திருந்தது.லோன் கிடைக்கும் வரை அவளிடம் பேசவில்லை.கிடைத்த உடன் கோவிலுக்கு வர சொல்லியிருந்தாள்.ஆளே மாறியிருந்தாள்.நிறைய அழுதிருப்பாள் போல.

"உனக்கு எப்பவும் யார் மேலயாவது கோபப்படலைனா தூக்கம் வராதா..அதுவும் நான்,எங்க அப்பான்னா போதும்.."

"ஒட்டியாணம் நல்லாயிருக்கா.."

"பேச்ச மாத்தாதே.."

"எங்கூட ஓடி வரும் போது அந்த ஒட்டியாணம் எடுத்திட்டு வருவியா.."

"உனக்கு ரொமன்டிக்காவே பேச தெரியாதா..பாக்க தெரியாதா..எப்ப பாத்தாலும் யாரைடயாவது முறைக்கிறது.."

"ஆமா..அது ஒண்ணு தான் குறைச்சல் ரொமாண்டிக் லூக் விட்டா கவுண்டமணி மாதிரியே இருக்கும்.." நினைத்தை வெளியே சொல்லவில்லை.

"எங்க வீட்ல வி.சி.டி ப்ளேயர் வாங்கியிருக்கோம்..வீட்லையும் யாரும் இல்ல..ஒரு முக்கியமான சிடி இருக்கு..நீ வாயேன் சேர்ந்து பாக்கலாம்.."

"நீ எதுக்கோ அடி போடுற..திஸ் இஸ் நாட் ரொமாண்டிக்..நான் வர்றலப்பா இந்த ஆட்டதுக்கு.."

"பார்த்தா ரொமான்ஸ் என்ன எல்லாமே வரும்.."

"என்ன சிடி.."

"அதான் வரலன்னு சொல்லிட்ட..அப்புறம் என்ன.."

"என்ன சிடி.."

"உங்க மாமா,அத்தையோட கல்யாண சிடி.."

(தொடரும்..)

Wednesday, March 24, 2010

எதிர்வினைக்கு ராமின் பதில்களும்,சில விளக்கங்களும்

http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_19.html

ராம் அவர்களுக்கு, எதிர்வினை எழுதியிருந்தாலும் எனக்கு அவருடைய பதிலை தெரிந்து கொள்ள ஆசை.விளைவு அதிகாலை மூன்று மணிக்கு அவருக்கு ஒரு கடிதம்.

தலைப்பு - ராம் நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர் கிடையாது....

ராம்,

முதலில் ஒரு வேண்டுகோள் காட்சி என்பதை கற்றது தமிழ் ராம் என்று மாற்றிக் கொள்ளுங்கள்.நிறைய பேர்களுக்கு அது கொண்டு சேர்க்கும்.

அடுத்தது ஒரு அவதானிப்பு.நிச்சயம் நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர் கிடையாது(இப்படி சொல்வதை விட நீங்கள் என்னை ஈர்க்கவில்லை என்று வைத்து கொள்ளலாம்).அதே சமயம் திறமையான பேச்சாளர் என்பதில் எனக்கு துளியளவிற்கு கூட சந்தேகமில்லை.

பின் குறிப்பு : உங்களை இப்படி விமர்சனம் செய்ய நான் சிறந்த பேச்சாளனாகவோ,எழுத்தாளனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

நான் உங்களிடம் பேச அழைப்பு விடுத்துள்ளேன்.உங்களுக்கு விருப்பமிருந்தால் நாளையோ அல்லது என்றாவது நாம் பேசலாம்.

ஒரு எதிர்வினை எழுதியுள்ளேன்.நீங்கள் படித்து விட்டு என்னிடம் விவாதம் செய்யலாம்.நான் சமரசம் அடையும் வரை நான் விவாதிக்க விரும்புகிறேன்.

http://irumbuthirai.blogspot.com/2010/03/blog-post_9172.html

************************

அதற்கு ராமின் பதில் என்னுடைய பதிவில் பின்னூட்டமாக.


வணக்கம் தோழர்களே.


1.நீங்கள் என் உதவியாளரிடமும், இயக்குநர் வெற்றிமாறனிடமும் கேட்க வேண்டிய கிசுகிசுவிற்கான பதிலை என்னிடம் கேட்கிறீர்கள்.


2.இறுதி யுத்தம் நடந்த கணத்தில் என் சாட்சியத்தைப் பதிவு செய்து குழப்பத்தைக் கூட்ட வேண்டாம் என்பதே அப்போது எழுதாத காரணம்.யாராலாவது எவ்வித உதவியாது கிடைக்காத என ஈழம் தவித்திருந்த போது குழப்பத்தை ஏற்படுத்துதல் என்பது முட்டாள்தனம் என நான் நினைத்தேன்.


3. இறுதி யுத்தத்திற்குப் பின் எனக்கு ஏற்பட்ட மனப்பிறழ்வு, குழப்பங்கள், அப்போது தமிழ் இனம் இருந்த உணர்ச்சிவசப்பட்ட மனநிலை, ஆகியவை எழுதவிடாமல் தடுத்தன.


4.சமீபத்தில் மீனகம்.com ல் திரு.இராவணண், தோழர்.வன்னியரசு அவர்களின் கட்டுரைகளைப் படித்த பின் எனக்குத் தெரிந்த விடயங்களை     பதிவு செய்வதை இப்போது விட்டாமல் பதிய இயலாமலெயே போய் விடும் என்று தோன்ற பதிவு செய்தேன்.


5.வரலாற்றில் பதிவு செய்வது என்பது யாரையும் குற்றம் சாட்டவோ, அவர்களின் இத்தனை வருட காலத்து அர்ப்பணிப்புகளை கேள்விக்குள்ளாக்கவோ இல்லை. வரலாற்றில் பதிவு செய்வது என்பது நீதி வழங்குவதற்காய் இல்லை. என் சாட்சியம் மட்டும்மே வரலாறாய் ஆக முடியாது. என் கட்டுரையின் முதல் பாராவைப் படிக்கவும் -

"முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்."


6. யாரையும் வழிமுறைப்படுத்தும் அளவிற்கோ, வழி நடத்திற்கும் அளவிற்கோ பக்குவமும்,ஞானமும் பொறுமையும்  தலைமைப் பண்பும்  அற்றவன் நான். பெரும் சுயநலவாதி.


8.முத்துக்குமரன் வரலாறு இவற்றின் முன்னால் நான் ஒரு தமிழன். திரைப்பட இயக்கம் என்பது என் தொழில். நீங்கள் என்னை இயக்குநராய்ப் பார்ப்பது என்பது உங்களுடைய பார்வை. என் தொழிலை நான் செய்வது என்பது என் அகப் பொருளாதார வாழ்க்கைக்கு முக்யம்.நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.உங்க வேலையை பாருங்க இதெல்லாம் எதுக்கு எழுதறீங்கன்னு நான் கேக்கவோ சொல்லவோ மாட்டேன். உங்களின் சமூக உணர்வே உங்களை எழுத வைக்கிறது.


9.நான் வெறும் ஒரு தமிழன்.என் பெயர் ராம்.என்னை ஒரு இயக்குநர் என்று பார்க்காதீர்கள். நானெ அவ்விருக்கையைப் பொருட்படுத்தாமால் உங்களிடம் உரையாடும் போது நீங்கள் ஏன் அதை நினைவில் கொள்கிறீர்கள். சைக்கிளுக்குப் பஞ்சர் போடுவதைப் போல் ஒரு தொழில் திரைப்பட இயக்கம். அவ்வளவே.


அப்புறம் இவ்வுண்மைகளை அப்போதே தெரிந்திருந்தால் நீங்கள் அல்லது நம் இனம் என்ன செய்திருப்பீர்கள் எனச் சொல்லுங்கள்?
இவ்வுண்மைகளை விட பேர் உண்மைகளும் வலிகளும் நம் முகத்தில் அறைந்த அக்காலத்தில் நாம் என்ன செய்தோம்? அல்லது செய்ய முடிந்தது. ஏன் உங்கள் யரையும் நாங்கள் புழல் சிறையில் இருந்த தருணங்களில் சந்திக்க வில்லை? அல்லது தஞ்சாவூர் விமானப்படைத்தள முற்றுகையில் அல்லது வடபழனி போராட்டத்தில் அல்லது எதாவது ஒரு போராட்டத்தில் ஒருவேளை சந்தித்து இருந்தால் நேரில் நிறைய பேசி இருக்கலாம்?


நன்றி

***********************

ராம்,

அன்புள்ள ராம்,

1.அது கிசுகிசு என்றும் நீங்கள் அதில் இருக்க மாட்டீர்கள் என்றும் நான் சொல்லியிருக்கிறேன்.

2 மற்றும் 3வதில் நீங்கள் சொன்னதை  நான் ஏற்றுக் கொள்கிறேன்.

4.ராவணன்,தோழர் வன்னியரசு எழுதியதால் தான் எழுதினேன் என்று சொல்வது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் முதல் சாட்சியமே உங்களுடையதாகயிருந்தால் அது இன்னும் பலமாகவும்,வேகமாக சென்றடைந்திருக்கும் என்பது தான் என்னுடைய எதிர்பார்ப்பு.அவர்கள் எழுதாமலிருந்திருந்தால் என்று கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.இதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

5.அதில் நீங்கள் யாரையும் குற்றம் சாற்றாமல் இருந்தாலும் அவர்கள் முகத்திரை தான் அந்த பதிவில் கிழிந்து விட்டதே.சாயமும் வெளுத்து விட்டதே.

6.யாரையும் நீங்கள் வழி நடத்த வேண்டாம்.உங்களுடைய நேற்றைய பதிவு படித்தவுடன் மாரி செல்வராஜ் மாதிரி இன்னும் நிறைய இயக்குனர்களை உருவாக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன்.

8.நான் உங்களை இயக்குனர் என்ற கோணத்திலேயே பார்த்து விட்டேன்.கணினித் துறையில் இருந்தாலும் கற்றது தமிழ் வைத்த குற்றச்சாட்டுகளின் போது சிரித்துக் கொண்டு தான் இருந்தேன்.

9.நான் ஏன் உங்களுடைய இயக்குனர்  என்ற பார்வையிலேயே உரையாடுகிறேன் இது நல்ல கேள்வி.எனக்கு நீங்கள் அளித்த பதிலிலும் ராம் என்று தான் இருக்கிறது.என்னுடைய கடிதத்திலும் அப்படிதான் எழுதியிருக்கிறேன்.பிறகு அந்த பார்வைக் கோணம் மாறுகிறது என்றால் உங்களுடைய ஒவ்வொரு பதிவின் தலைப்பிலும் இயக்குனர் ராம் என்றே வருகிறது.அதனால் அந்த தாக்கம் வந்திருக்கலாம்.

//அப்புறம் இவ்வுண்மைகளை அப்போதே தெரிந்திருந்தால் நீங்கள் அல்லது நம் இனம் என்ன செய்திருப்பீர்கள் எனச் சொல்லுங்கள்?

இவ்வுண்மைகளை விட பேர் உண்மைகளும் வலிகளும் நம் முகத்தில் அறைந்த அக்காலத்தில் நாம் என்ன செய்தோம்? //

இந்த கேள்வி என்னை மட்டும் அல்ல நிறைய பேரை பகடி செய்கிறது.நான் என்ன செய்தேன் நாடாளுமன்றத் தேர்தலின் போது.என் கட்சி சார்பை உதிர்த்து விட்டு சுயேட்ச்சை வேட்பாளருக்கு ஓட்டு போட முடிவு செய்தேன்.என் குடும்பத்தினரையும் அதையே செய்ய சொன்னேன்.நண்பர்களையும் கேட்டுக் கொண்டேன்.அப்போது இந்த பதிவு வந்திருந்தால் நிறைய பேர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்திருக்கலாம்.

நிச்சயம் ஒரு நாள் நேரில் சந்திப்போம் ராம்.உங்களுடைய தங்க மீன் படமும் உங்கள் உதவியாளர்களின் படமும் வெற்றி அடையட்டும்.நிறைய விவாதிப்போம்.

வாழ்த்துக்கள் ராம்.

ரோட் இந்தி படமும்,திருப்பாச்சி டெம்பிளேட் சட்டைகளும்

படம் மாதிரியே கதையும் மிகவும் சிறியது தான்.அப்பாவின் எண்ணெய் வியாபாரத்தில் சிக்காமல் தப்பிக்கும் வாய்ப்பாக ஒரு பழைய டிரக் கிடைக்கிறது.அதை அருங்காட்சியத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பை ஏற்க முன் வருகிறார் அபய் தியோல்.பாலைவனம் வழியாக பயணம் தொடர்கிறது.சக பயணிகளாக ஒரு சிறுவன்,ஒரு வயதானவர்,ஒரு பெண் மூவரும் வந்து சேர தண்ணீரைத் தேடி பயணம் ஊர்கிறது.

வழியில் வரும் இன்னல்களை எல்லாம் சினிமா புரோஜக்டர் மூலமாகவும்,கடைசி சிக்கலை தந்தையின் ஆயுதத்தாலும் தப்பிக்கிறார்கள்.பயணத்தில் அபய் தியோல் என்ன தெரிந்து கொண்டார் என்பதை வெள்ளித்திரையில் காண்க.

பாலைவனத்தில் செல்லும் தண்ணீர் இல்லாமல் நாக்கு வறண்டு கொண்டே போவதை ஒளிப்பதிவாலும்,படத்தொகுப்புமே செய்து காட்டி விடுகிறது.நான் படம் பார்க்கும் அடிக்கடி தண்ணீர் குடித்து நாவறட்சியைப் போக்கி கொண்டேயிருந்தேன்.படம் மிக மெதுவாக போனதால் அடிக்கடி கண்ணயர்ந்து விட்டேன்.கண் விழிக்கும் போதெல்லாம் அவர்கள் பயணித்தப்படியே இருந்ததால் நானும் எந்த கட்டத்திலும் படத்தோடு இணைந்து கொள்ள முடிந்தது.இதை இவர்கள் குறும்படமாக எடுத்திருக்கலாம்.அபய் தியோலின் முந்தைய படத்தின் எதிர்பார்ப்புகளால் இது கொஞ்சம் ஏமாற்றம் தான்.ஆனால் இந்த படம் சொல்ல வருவது..

(தூள்,திருப்பாச்சி படத்தில் ஆரம்பித்த டெம்பிளேட் கதையான  ஊரில் இருந்து வந்து சென்னை ரவுடிகளை ஒழித்து கட்டும் நாயகன் அதுவும் கிருஸ்மஸிற்கு வந்தால் புத்தாண்டிற்கு முன்னால் எல்லோரையும் சம்காரம் செய்து விட்டு அடுத்த தீபாவளிக்கு அடுத்த படத்திற்கும் இதே கதையை சிபாரிசு செய்வார்கள்.

ஜீவா தான் பதில் சொல்ல வேண்டும்.கச்சேரி ஆரம்பம் படத்திற்கும் தெனாவட்டு படத்திற்கும் உள்ள வித்தியாசங்களை அவர் தான் சொல்ல வேண்டும்.

இதே மாதிரியான படத்தில் விஜய்யின் பையனோ,ஜீவாவின் பையனோ நடிக்கும் போது போய் பார்க்காமல் இருக்க என் பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.)

இப்படி எல்லோ நடிகர்களும் ஒரே கதையில் நடிக்கும் படத்தை பார்ப்பதை விட அபய் தியோல் போன்றவர்கள் செய்யும் அபத்தங்களை ரசிக்கலாம்.

Tuesday, March 23, 2010

என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது

நான் எதிர்வினை எழுதினா மட்டும் தமிழ்மணத்துக்கே பொருக்காது போல.எப்ப எழுதினாலும் தமிழ்மணம் ஸ்தம்பித்து போய் விடுகிறது.எந்த பதிவை யாரும் பார்க்க கூடாது என்று நினைக்கிறேனோ அது நிச்சயம் பரிந்துரையில் ஏறும்.ஏற வேண்டியது என் ஓட்டையும் சேர்த்து அதே ஒரு ஓட்டிலே நிற்கும்.

நான் ட்ரெயின் பாஸ் எடுக்க போனா மட்டும் பிரிண்டர் வேலை செய்ய மாட்டேங்குது.நானும் பாக்குறேன் நான் என்ன பாஸ் மணிகண்டனா சிவபூஜை நடக்கும் போது பஸ் பாஸ் எடுக்க.போங்கடா நீங்களும் உங்க சர்வீஸூம்.

நான் ரெசும் அனுப்பும் போது இந்த பாழாய் போன நெட்வொர்கிங் பசங்க என்ன பண்றாங்கன்னு தெரியல.அப்ப நெட் வேலை செய்யாது.அட போங்கடா போக்கத்தப் பசங்களா.

நானும் இண்டர்வியூக்கு போறேன்னு அன்னைக்காவது துணியை ஒழுங்கா துவைச்சிட்டு போனா டிரெயின் இவனுங்க வந்து ஓசியிலே இஸ்திரி போடுறாங்க.டேய் நானும் பாக்குறேன் நான் போற அன்னைக்கு தான் உங்களுக்கும் இண்டர்வியூவா இல்ல சும்மா சுத்தப் போறீங்களா.

நான் ஷேர் வாங்கினா கீழே போகுது.வித்தா மேல போகுது.என்ன உசுப்பேத்தி விடுறதுலே இந்த பசங்களுக்கு என்ன ஆர்வமோ தெரியல.கோமணம் கிழிஞ்ச வரைக்கும் போதும்.

சரி எல்லோரும் பஸ்ல கும்மியடிக்கும் போது நான் ஏற வந்தா மட்டும் எவனாவது கிளையண்ட் போன் பண்ணி உயிரை வாங்குறான்.பதிவு படிக்கும் போது கிரெடிட் கார்ட் விக்க வர்றாங்க.நானே கேட்டா மட்டும் தர மாட்டேன்னு சொல்றான்.அப்புறம் எதுக்கு கேக்காதப்போ தர்றேன்னு சீன் போடுறாங்களோ தெரியல.

கதை எழுதலாம்னு தலைப்பு மட்டும் அடிச்சா போதும் சர்வ்ர் ரூம்ல போய் டீ ஆத்த வர் சொல்லி கதற கதற கால் தரையிலே தேய்ற அளவுக்கு இழுத்துட்டு போறாங்க.அங்க போனா ரீஸ்டார்ட் மட்டும் பண்ணிட்டு போலாம்னு சொல்றாங்க.அதுக்குள்ள பதிவு எல்லாம் மறந்து போகுது.

நாளைக்கு லீவு.நிம்மதியா தூங்க விட மாட்டாங்க.எதையாவது தப்பா குடுத்திட்டு குளிக்காம ஆபிஸ் வர வைப்பாங்க.அங்க போறதுகுள்ள சரி பண்ணிட்டோம்னு சொல்றாங்க.பாதி வழியிலே நான் நிற்கும் போது தான் இது நடக்குது.சொல்லுங்கப்பா நான் எங்க போகணும்.

நான் வீட்டுக்கு போகும் போது தான் டீம் மீட்டிங் போடுறாங்க.கடைசி வரைக்கும் ஒரு முடிவுக்கு வராம சொம்புல இருக்கிற தண்ணி காலி ஆனது தான் மிச்சம்.

எனக்கு போனஸ் குடுக்கும் போது தான், பாருங்க நீங்க ஒரு நாள் கழிச்சி கன்பார்ம் ஆனதால கிடையாதுன்னு சொல்றாங்க.இந்த வருசம் குடுங்கன்னு கேட்டா புதுசா ஏதாவது காரணம் கண்டுப் பிடிக்கிறாங்க.ஏம்பா என்ன பார்த்தா எப்படி இருக்கு.இ.வான்னு எழுதி ஒட்டியிருக்கா.

இதே மாதிரி முன்னாடி எழுதின பதிவு ஒண்ணு இருக்கு.உங்களுக்கு நாள் நல்லா இருந்தா இதை மட்டும் படிங்க.ரொம்ப நல்லா இருந்தா இதையும் சேர்த்து படிங்க.

Monday, March 22, 2010

கற்றது தமிழ் ராம் ஒரு எதிர்வினை லட்டு சாப்பிடுகிறீர்களா

கற்றது தமிழ் ராம் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு.முதல் காரணம் பாலுமகேந்திராவின் சிஷ்யன் என்பதாலும், அவர் இயக்கும் படத்திற்கு பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்ய ஆசைப்பட்டதும் அடுத்த காரணமாக இருக்கலாம்.எங்கு போனாலும் பைக்கில் பயணித்தது அவரை இன்னும் எனக்கு நெருக்கமாக உணர வைத்தது.மொத்தமாக கற்றது தமிழ் பிடிக்கவில்லை என்றாலும் படத்தில் வந்த சில காட்சிகள் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அவர் மீது மதிப்பு குறைந்த இரண்டு சம்பவங்களில் முதலாவது ஒரு கிசுகிசுவால் உருவானது.

பைக் இயக்குனர் இயக்கும் மைதானம் படத்தின் கதை தமிழ் கற்ற இயக்குனரின் உதவியாளரின் கதை என்றும் தமிழ் கற்ற இயக்குனர் ராம் தான் அவருக்கு படிக்க கொடுத்தாகவும் அதை பைக் இயக்குனர் எடுத்து  கொண்டதாகவும் முதல் கிசுகிசுவில் எழுதப்பட்டது.அந்த கதையின் பெயர் ஆண் கோழியின் கானகம்.அஞ்சாநெஞ்சன் இருக்கும் ஊரின் பிண்ணனியில் நடக்கும் கதை என்றும் வழக்கைத் தவிர்க்க  அந்த உதவியாளருக்கு  பெரும் பணம் பேரம் பேசப்பட்டதாகவும் உதவியாளர் கதை என்ற இடத்தில் அவர் பெயர் வர வேண்டும் என நிர்பந்திக்கிறார் என்றும்  இரண்டாவது கிசுகிசுவில் முடிந்தது.கிசுகிசு படிக்கும் போது அதில் ஐம்பது சதவீதம் தான் உண்மை இருக்கும் என்பதால் தமிழ் கற்றவர் அப்படி செய்து இருக்க மாட்டார் என்று நினைத்துக் கொண்டேன்.

இரண்டாவது சம்பவம் தான் எனக்கு அதிகம் அதிர்ச்சியை அள்ளித் தெளித்தது. அது முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம் என்ற பேட்டி அல்லது உரையாடல்.படித்து முடித்ததும் நான் என்ன நினைத்தேனோ அது முதல் பின்னூட்டமாக வந்திருந்தது.அதுவே கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.மஞ்சூர் ராசாவின் பின்னூட்டம் என் கருத்தை சரியாக பிரதிபலித்த காரணத்தால் (காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது. என்று அதே முத்துக்குமரன் எழுதிய வாசகங்கள் தான் நினைவுக்கு வந்தது.. இந்தப் பதிவைப் படித்து முடித்த போது.!) எதிர்வினை எழுத வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லவே இல்லை ஒரே ஒரு பின்னூட்டத்தைப் பார்க்கும் வரை.அது என்னவென்றால் ராம் போன்றவர்கள் முன் வந்து இளைஞர்களை வழி நடத்த வேண்டுமாம்.என்ன கொடுமைடா சாமி.

என்னை  பொறுத்த வரை பேச்சாளனையும்,எழுத்தாளனையும் நான் முழுதாக நம்பியதேயில்லை.எழுத்து மற்றும் பேச்சாற்றலை வைத்து ஒருவரின் குணாதியங்களை எடைப் போட்டால் அது மாதிரி முட்டாள்த்தனம் வேறு எதுவுமில்லை.

அந்தக்  கட்டுரையின் அடிநாதமாக  கருதுவது மாணவர்களின் பார்வையும் புரிதலும் தான்.அதை  தங்களுக்கு சாதமாக மாற்றுவதே இரத்தம் சூடாகும் வரை பேசும் திறமையுள்ள பேச்சாளர்கள் தான். அந்த திறமையுள்ளவர்களில் வைகோ,திருமாவளவன்,சீமான்,நெடுமாறன் இப்படி எல்லோருக்குமே அந்த  பட்டியலில் நிரந்தர இடம் கொடுத்து வைத்துள்ளேன்.இந்திய அரசு அனுமதிக்கட்டும் பதினைந்து லட்சம் பேர் போருக்கு செல்லத் தயார் என்று சீமான் வாயால் வெடித்தது எனக்கு கொஞ்சம் கூட புல்லரிக்கவில்லை.வாயால் வெடிப்பவர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு அவர் முன்னேறியிருந்தார். அவர் எவ்வளவு நேரம் முத்துகுமாரின் ஊர்வலத்தில் பங்கேற்றார் என்பது அவருக்கே வெளிச்சம்.இன்று ஈழத் தமிழர்கள் நம்பும் இவரும் விஜய்யும் சேர்ந்து படம் செய்யப் போகிறார்களாம்.இதற்குத் தானே ஆசைப்பட்டீர்கள் சீமான்.தலைப்பு  கோபம்.இதை விட தார்மீக  கோபம் என்று வைத்து கொள்ளுங்கள்.இன்னும் நன்றாகயிருக்கும்.

முத்துக்குமாரின் புரட்சியை முடக்குவதில் ஒன்று சேர்ந்தவர்கள் தேர்தல் சமயத்தில்  கூட்டணியில் தனித்தனியாக நின்றார்கள்.சேறை லேசாக பூசிக் கொண்டதோடு இல்லாமல் ஆடு திருடிய களவாணிகளாக அடித்து  கொண்டார்கள்.நீங்கள் அந்த சமயத்தில் சொல்லியிருக்கலாமே ராம்,ஏன் சொல்லவில்லை.ஆனந்த விகடன் எழுதாமல் போய் விடும் என்பதாலா.ஆனந்த விகடனை நிச்சயம் பதிவுலகம் ஜெயித்து  காட்டும்.பதிவுலகத்தில் அன்றே பதிவு செய்திருந்தால் காட்டுத்தீ மாதிரி பரவியிருக்கும்.அன்று இருந்த நிலைமை அப்படி.நிச்சயம் அதை நீங்கள் செய்யாமல் விட்டது உங்கள் மீதிருந்த மதிப்பில் ஒரு படி இறங்கி விட்டது.

நீங்கள் இன்று இந்த உண்மையை உடைத்தது எதற்காக ஒரு யுகம் எழுந்தது.அதை  சொன்னால் இன்று நான் துரோகியாக்கப்படுவேன்.நானும் காலம் கடந்து இரண்டு வருடங்கள் கழித்து பதிவு செய்கிறேன்.எனக்கு வந்த ஒரே ஒரு எண்ணம் உங்களை வெற்றி இயக்குனராக ஆக்கியிருக்க வேண்டும்.அப்படி செய்திருந்தால் இரண்டு சாத்தியங்கள் இருந்திருக்கும்.இந்த உண்மை சீக்கிரமே வந்திருக்கும்.அல்லது இன்னும் புதைந்தேயிருக்கும். காலை வெட்டி எடுத்தப்பின் மருந்து தந்தது போலிருந்தது.பரவாயில்லை புண் பரவாமல் நிறுத்தப்படும் என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.மாணவர்களுக்கு வழி நடத்த யாரும் தேவையில்லை. வழிகாட்ட ஆளிருந்தால் போதும். அது உங்களால் முடியுமா என்று நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள் ராம்.நீங்கள் செய்ய வேண்டியது செய்ய முடிந்தது எல்லாம் ஒன்று தான்.துடிப்புமிக்கவர்களுக்கு நல்ல சினிமா எடுக்க கற்றுத் தாருங்கள்.பிறகு எல்லாம் அவர்களே பார்த்து  கொள்வார்கள்.

துவையல் - கிரிக்கெட் ஸ்பெஷல்

எப்பவுமே மேட்ச் பார்க்க மாட்டேன்.மங்கூஸ் பேட்டைப் பார்க்கும் ஆசையில் போய் பார்த்து அப்புறம் நொந்து விட்டேன்.சென்னை - 600028 அணி மாதிரி விளையாடடி பஞ்சாப் அணியிடம் முதல் முறையாக தோல்வியைத் தழுவியிருக்கிறது சென்னை அணி.பெரிய ஸ்கோரை எல்லாம் சேஸ் செய்ய முடிந்த சென்னையால் இப்படி சின்ன ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் தோற்பதற்கு காரணம் வெளிநாட்டு வீரர்களை முரளி விஜய்,பத்ரிநாத் போன்ற மொக்கைகளுக்குப் பின் இறக்கி விடுவது தான்.டெக்கான் சார்ஜர்ஸின் பலமே இது தான் - கில்கிரிஸ்ட்,கிப்ஸ்,சைமண்ட்ஸ்.  அதை மாதிரி தான் டெல்லியும் - வார்னர்,தில்ஷான்,டிவில்லியர்ஸ்.தவறு செய்வது சென்னையும் நான் இருக்கும் மும்பை அணியும் தான்.மங்கூஸ் எங்கே அதை வைத்து விளையாட வேண்டுமோ அங்கே விளையாடவில்லை.எங்கே விளையாட கூடாதோ அங்கே விளையாடுவது.ஜெயித்திருந்தால் கதையே வேறு.மாற்றி சொல்லியிருப்பேன்.கடவுள் கூட அழகானப் பெண்களுக்கு காது கொடுப்பதால் தான் கடவுள் நம்பிக்கை எனக்கெல்லாம் குறைந்து கொண்டே வருகிறது.

சென்னைக்கு திரிஷா தான் பிராண்ட் அம்பாஸிடரா.என்ன கொடுமைடா ஸ்ரீகாந்த் இது.முதல் போட்டியில் தோற்ற சமயம் பெங்களூர் அணியை உற்சாகப்படுத்த கத்ரீனா கைப் வந்திருந்தார்.போட்டி காலி.உடனே ஆளையே மாற்றி விட்டார்கள்.அது தீபிகா படுகோன்.மூன்று போட்டிகளும் வெற்றி.கத்ரீனாவுக்கும் தீபிகாவுக்கும் ஆகாது.காரணம் எனக்கு தெரியாது.நான் ரொம்ப நல்லவன்.வீரர்களை சரக்கிலேயே குளிப்பாட்டி எடுக்கிறார்கள்.அதே மாதிரி நன்றாக சாமி கும்பிடும் பெண்ணை அழைத்து வரவும்.முடியவில்லை என்றால் சும்மா வரவும்.

ரெய்னா ஒரு போட்டியில் ஜெயித்த உடன் பிளெமிங் கேப்டன் பதவிக்கு ரெய்னா தகுதியானவர் என்று பேட்டி தந்துள்ளார்.உடனே தோனிக்கும்,ரெய்னாவுக்கும் ஓப்பீடுகள் ஆரம்பித்து விட்டாகி விட்டது.இப்படி உசுப்பேத்தி விட்டே யுவராஜ் டவுசரைக் கிழித்தார்கள்.சேவக் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.அடுத்தது ரெய்னா தான்.தோனி மாதிரி ஒரு வில்லனையும் பார்க்க முடியாது.நல்லவனையும் பார்க்க முடியாது.எல்லா விஷயத்திலும் பத்து கங்குலிக்கு சமம்.இந்த போட்டியில் யார் கேப்டனாக இருந்தாலும் பெரிய மாற்றமிருக்காது.

சினிமாவில் தான் காப்பி அடிக்கிறோம் என்றால் இங்கேயுமா.வார்னே தொடங்கி வைத்தார்.அடிக்கடி முதல் ஒவரே யூசுப் பதான் தான் வீசுவார்.டெல்லி அணியில் அமித் மிஸ்ரா வீசினார்.கேப்டன் நம்ம தினேஷ் கார்த்திக்.முதல் ஒவரில் விக்கெட்.பிறகு வந்தது எல்லாம் எம்டன்கள்.விடாமல் சாத்தினார்கள்.கில்கிறிஸ்ட் சொன்னது தான்.எல்லா வீரர்களுக்கும் நாங்கள் திட்டம் வைத்திருக்கிறோம் என்று சொன்னார்.அவங்க பிளான் பண்ணாமல் எதையும் செய்வதில்லை.ஆஸ்திரேலியா இரண்டு அருமையான கேப்டங்களை இழந்து விட்டது.இவர்களை ஓப்பிடும் போது பாண்டிங் ஒரு திராபை தான்.

அடுத்து ரெண்டு அணி ஏலம் விட்டு விட்டார்கள்.அந்த அணிகள் புனே மற்றும் கொச்சின்.இவ்வளவு காசா என்று ஒரு நிமிஷம் கண்கள் இருட்டி விட்டது.புனே அணியில் விளையாட தான் கிராக்கி இருக்கும் என்று நினைக்கிறேன்.இந்திய அணியின் ஸ்பான்சரே புனே அணியை ஏலம் எடுத்த சகாரா தான்.இந்த முறை தோனி அறுபது கோடிக்கு போனாலும் ஆச்சர்யமில்லை.

அடுத்த முறை தொன்னூறு லீக் போட்டிகள் ப்ளஸ் நான்கு போட்டிகள் .எப்படி லலித் மோடி நடத்துகிறார் என்று பார்க்க வேண்டும்.நிச்சயம் ஐ.சி.சியுடன் மோதும் நாள் தூரத்தில் இல்லை.இல்லை அது நாற்பத்தைந்து லீக் போட்டிகளாக குறையலாம்.பொறுத்திருந்து பார்ப்போம்.இன்றும் லலித் மோடி மீது போதைப் பொருள் வைத்திருந்தார் என்று இங்கிலாந்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.அதை சமாளிக்கும் லலித் மோடிக்கு ஐ.சி.சி எம்மாத்திரம் தான்.

Sunday, March 21, 2010

நைஜீரியப் படுகொலைகள் - ஜெயமோகனுக்கு ஒரு எதிர்வினை

எவ்வளவு நாளைக்கு தான் சின்ன வட்டத்திலேயே குதிரை ஓட்டுவது.ஒரு இலக்கில்லாத வாதியின் பரிமாண வளர்ச்சியின் ஒரு அங்கமாக இதை நினைத்து கொள்கிறேன்.முதலில் ஜெயமோகனின் பதிவு.கடைசியில் எதிர்வினை.

ஒரு சிறப்புக்கவனத்துடன் சிலகாலமாக நான் நைஜீரிய அரசியலைக் கவனித்து வருகிறேன். அதற்குக் காரணம் நைஜீரிய அரசியலும் தேசியப்பிரச்சினைகளும் பல வகைகளில் இந்தியாவுடன் ஒப்பிடத்தக்கவை. இந்தியவரலாற்றை ‘வேறுவகையில் அது சென்றிருந்தால்’ என்று கற்பனை செய்து ‘என்ன நடந்திருக்கும்’ என ஊகிப்பதற்கானச் சாத்தியங்களைக் காட்டும் நாடுகளில் ஒன்று நைஜீரியா. நைஜீரியாவை வைத்து ‘தேவதை’ என்று ஒரு கதையும் எழுதியிருக்கிறேன்.

பெயர்கள் மற்றும் நுண்தகவல்களுக்குள் செல்லாமல் ஒரு சித்திரத்தை அளிக்கிறேன்.நைஜீரியா நம்மைப்போலவே பல இனங்கள் கூடிவாழ்ந்த நிலப்பரப்பு. அவர்களுக்குள் இனப்பகையும் போர்களும் இருந்திருக்கின்றன. கூடவே சமரசங்களும் ஒத்துவாழ்தலுக்கான வழிமுறைகளும் ஆசாரங்களும் இருந்தன. நம்மைப்போலவே மிகமிகத் தொன்மையான ஒரு நாகரீகம் விளங்கிய மண் அது. தொல்பொருள்த் தடையங்கள் நைஜீரியாவின் பாரம்பரியத்தின் ஆழத்தை ஒவ்வொரு அகழ்வுக்கும் விரிவாகக் காட்டிக்கொண்டே செல்கின்றன.

நைஜீரியாவில் இருந்த தொன்மையான மதத்தையும் பண்பாட்டையும் எப்படி விவரிக்கலாம்? வைதிகம், வேதாந்தம்,சமணம்,பௌத்தம் போன்ற  பெருமதங்களால் மையத்தில் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டு, சமரசப்படுத்தப்படாத இந்துமதப்பிரிவுகள் எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்தது அது. அதாவது பல்வேறு வகையான பழங்குடிகள் அவரவர் தெய்வங்களை வழிபட்டுக்கொண்டு அவரவர் ஆசாரங்களின்படி வாழ்ந்தார்கள்.

அங்கே பலதெய்வக் கோட்பாடு வலுவாக திகழ்ந்தது. அவற்றில் பல இனக்குழுக்கள்  உயர்ந்த நாகரீகத்தை அடைந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் நடுவே  தத்துவப் பரிமாற்றம் நிகழவில்லை. ஒருசாராரின் தெய்வங்கள் இன்னொரு சாராருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. காரணம் தெய்வங்கள் குலதெய்வங்களாக இருந்தனவே ஒழிய  அவற்றுக்கு தத்துவார்த்தமான உயர் விளக்கம் அளிக்கப்படவில்லை. அப்படி அளிக்கப்பட்டால் மட்டுமே ஒரு தெய்வம் இன்னொரு இனக்குழுவுக்குச் செல்ல முடியும். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்  இந்தியாவில் நிகழ்ந்தது அதுவே.

இந்தச் சூழலில் அங்கே அரேபியாவில் இருந்து இஸ்லாம் வந்தது. இஸ்லாம் எல்லா பழங்குடி தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் அழித்து ஒற்றைநம்பிக்கையை முன்வைத்தது. நைஜீரிய வரலாற்றில் பத்தாம் நூற்றாண்டு முதல் எண்ணூறு வருடம் ஒவ்வொருநாளும் குருதி கொட்டியிருக்கிறது. அதுவும் இந்தியாவைப்போலவே.

நைஜீரியாவில் உள்ள மேய்ச்சல் சாதிகள் எளிதில் அரேபியர்களுடன் ஒத்துபோயின. இஸ்லாமை ஏற்றுக்கொண்டன. வேட்டைசாதிகளால் அதற்கு முடியவில்லை. ஆகவே வேட்டைச்சாதிகளை மதப்பகைவர்களாக அறிவித்து கொன்றே ஒழித்தது இஸ்லாம். மனிதவரலாற்றின் ஆகப்பெரிய மானுடவேட்டைகளில் ஒன்று சொல்லப்படும்  இந்தப் படுகொலைகள் தொடர்ந்து பலநூற்றாண்டுக்காலம் நடந்தன. வேட்டைச்சாதிமக்கள் ஒருகட்டத்தில் முழுமையாகவே அடிமைகளாக ஆக்கப்பட்டார்கள்.

இந்தியவரலாற்றில் என்ன வேறுபாடு? இங்குள்ள இஸ்லாம் அல்லாத பேரரசுகள் இஸ்லாமை கட்டுப்படுத்தி பேரழிவில் இருந்து இந்தியாவைக் காத்தன என்பதே. தங்குதடையிலா அதிகாரம் இஸ்லாமுக்கு எப்போதுமே கிடைத்ததில்லை. ராஜபுத்திரர்கள், அதன்பின் விஜயநகரம், அதன் பின் மராட்டியர்கள் என வலுவான எதிர்விசை எப்போதும் இருந்தது.  எந்நிலையிலும் போர் நிகழ்ந்துகொண்டே தான் இருந்தது. ஆகவே சமரசம் மூலமே இஸ்லாமியர் ஆளமுடிந்தது. நேரடி ஆட்சி அமையவில்லை, கப்பம் கட்டும் நாடுகளின் தொகையாகவே இஸ்லாமிய ஆட்சி நீடிக்க முடிந்தது.

அத்துடன் இந்திய ஞானமரபின் தாக்கம் கொண்ட அக்பர் போன்ற பேரரசர்கள் சமரசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தார்கள் என்பதும் ஒரு மாபெரும் ஆசியே ஆகும். அக்பரினால் மட்டுமே இந்தியாவை ஓரளவேனும் ஒருகு டைக்கீழ் ஆள முடிந்தது என்பது ஆச்சரியமல்ல. போர்க்குணம் கொண்ட ஆதிக்க இஸ்லாமில் ஞானத்தின் சமரசத்தின் ஒளியுடன் சூ·பி மரபு  ஊடுருவியதும் இந்தியாவில் நழ்லூழ்தான்.

அதன்பின் நைஜீரியாவில் காலனியாதிக்க காலகட்டம். இந்தியாவைப்போலவே முதலில் போர்ச்சுக்கல்காரர்கள். கடைசியில் பிரிட்டிஷார். இஸ்லாமாகாமல் எஞ்சிய மக்களை காலனியாதிக்க சக்திகள் கிறித்தவர்களாக ஆக்கினார்கள். நைஜீரியாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட சரிபாதியாகவே இஸ்லாமியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஆகியது. இரண்டுமே தங்களுடையது மட்டுமே மெய் என்ற ஒற்றை தரிசனம் கொண்ட மதங்கள். எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லாதவை.மரபான  மதநம்பிக்கை கொண்ட நைஜீரிய சாதிகள் இன்று உதிரிநாடோடிகளாக வரலாறே இல்லாமல் வாழ்கிறார்கள்.

இந்தியாவில் என்ன வேற்றுமை? இந்தியாவை கிறித்தவ மயமாக்கும் காலனியாதிக்க முயற்சிகளை இந்துமதம் அனுமதிக்காமல் எதிர்த்து நின்றது. இஸ்லாமின் ஆதிக்கத்தை வென்றதுபோலவே கிறித்தவ ஊடுருவலையும் அது வென்றது. அதற்கான காரணம் என்ன? மிக எளிய விடைதான் ஏற்கனவே இந்து,சமண,பௌத்த மதங்களால் இந்தியாவின் சிறுவழிபாட்டுமரபுகள் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டுவிட்டிருந்தன. ஆகவே அவை நைஜீரியா போல தனித்தனி வழிபாட்டுக்குழுக்களாக தேங்கி இருக்கவில்லை. ஒன்றுடன் ஒன்று உரையாடி வளர்ந்து ஒருங்கிணைந்த  சக்தியாக, வலுவான தத்துவ – வழிபாட்டு அடிபப்டையுடன் விளங்கின. ஆகவேதான் நைஜீரிய பழங்குடி மதங்களுக்கு நிகழ்ந்தது இந்துமதப்பிரிவுகளுக்கு நிகழவில்லை.

அவ்வாறு இந்து,பௌத்த,சமண மதங்கள் செய்தது பெரும் வரலாற்றுப்பிழை என்று இப்போது மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஆய்வேடுகள் உருவாக்குகிறார்கள். கருத்தரங்குகள் நிகழ்த்துகிறார்கள். இந்தியப்பண்பாட்டின் வேர்களை அழித்துவிட்டார்களாம். சொல்லாமல் இருப்பார்களா என்ன?  

1960ல் சுதந்திரம் பெற்ற நைஜீரியா நம்மைப்போலவே குருதியில் நனைந்துதான் அதை அடைந்தது. பிரிட்டிஷார் வெளியேறியபோது அதிகாரம் ஒருங்குதிரண்ட பெரும்பான்மையினரான இஸ்லாமிய மேய்ச்சல் சாதிகளிடம் சென்று சேர்ந்தது. அதற்கு எதிராக கிறித்தவ சாதிகள் கிளர்ந்தெழ அவர்கள் மீது மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. மக்கள் லட்சக்கணக்கில் கொன்றே குவிக்கப்பட்டார்கள். கிறித்தவர்களுக்காக பையா·ப்ரா என்ற தனிநாடு தேவை என்ற கோரிக்கை நைஜீரியாவில் எழுந்தது. அது நசுக்கப்பட்டது.

எண்பதுகளுக்குப்ப்பின்னர் பழைய காயங்களை ஓரளவு மறந்து நைஜீரியா முன்னேற ஆரம்பித்தது. முன்னேற்றமென்றால் சற்றே நகர்வு. பட்டினிச்சாவுகள் இல்லாத ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாக ஆகியது. இந்நிலையில்தான் உலகமெங்கும் பரவிய வகாபியம் நைஜீரியாவில் எழுந்தது. நைஜீரிய இஸ்லாமியர்களில் நடுநிலையாளர்கள் சிலர் தவிர பிறர் கடுமையான அடிப்படைவாதிகளாக ஆனார்கள். நைஜீரிய கிறித்தவர்கள் மீது மீண்டும் காழ்ப்பும் கசப்பும் உருவாக்கப்பட்டது.

அதன் மறுபக்கமாக நைஜீரிய கிறித்தவர்களை அமெரிக்காவும், ஐரோப்பாவும் தூண்டி விட்டன. அவர்கள் தங்கள் பிரிவினைக் கோரிக்கைகளை மீட்டு எடுத்தனர். இந்தன் விளைவே இன்று நிகழும் வன்முறை. இது மேலும் தொடரவே வாய்ப்பு. இங்கே உலகை கூறுபோட்டு வன்முறைக்களமாக ஆக்கியிருக்கும் மேல்நாட்டு ஆதிக்க சக்திகளும் அரேபிய  அடிப்படைவாத சக்திகளும் தங்கள் பிரதிநிதித்துவப்போரை நிகழ்த்துகின்றன. ஆகவே இது எளிதில் முடியாது. ஒன்றுமறியா மக்களின் குருதி ஓடும். அடைந்துவந்த சிறிய முன்னேற்றங்களைக்கூட நைஜீரியா இழக்கும். பெரும் பஞ்சம் நோக்கி நகரும். இதுவே நாம் எதிர்பார்க்கக் கூடியதாகும்.

சில வருடங்களுக்கு முன் ஸீமமெண்டா அடிச்சி என்ற நைஜீரியப் பெண் எழுத்தாளர்  எழுதிய ஒருநாவலை [Half Of A Yellow Sun ] அமெரிக்க இதழ்கள் போற்றிப்புகழ்ந்து துதிபாடின. அந்நாவலை வாசித்தேன். மேலைநாடுகளுக்குரிய தொழில்நுட்பத்தேர்ச்சியுடன் மொழி செம்மைசெய்யப்பட்ட நன்கு தொகுக்கப்பட்ட நாவல் அது. ஆனால் மிகமிக மேலோட்டமானது. நைஜிரிய இஸ்லாமியர்கள் நைஜீரிய கிறித்தவர்களுக்கு பையா·ப்ரா போராட்டத்தின்போது இழைத்த கொடுமைகளை அப்பட்டமாக விவரிக்கும் கதை அது. அந்த விவரிப்பு என்பது இம்மாதிரி நாவல்களை வாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் புதிதல்ல. அதில் மானுட எழுச்சியோ, உணர்வின் நுண் கணங்களோ இல்லை. போலியான உணர்வெழுச்சிகள் மட்டுமே இருந்தன.

அந்நாவல் மேலை ஊடகங்களில் புகழப்பட்டதும் நம்மூர் ஆங்கில நாளிதழ்கள் புகழ்ந்து முழுப்பக்க கட்டுரைகள் போட்டன. உடனே நம் சிற்றிதழ்களிலும் அதேபோல கட்டுரைகள் வந்தன. எஸ்.வி.ராஜதுரை அதை ஒரு கிளாசிக் என்று ஒரு நீளக்கட்டுரை எழுதினார். எஸ்.வி.ராஜதுரைக்கு இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது என்பது என் எண்ணம். அவரை தூண்டிவிடுவதற்கு ஒரேயொரு ஆங்கிலக் கட்டுரையே போதுமானது. அந்நாவலை முன்வைத்துப்பேசும்போது இதேபோல இந்தியாவிலும் ‘தேசிய இன’ போராட்டங்களின் வரலாறு எழுதபப்டவேண்டும் என்று ராஜதுரை அறைகூவுகிறார்!

அந்நாவல் அந்த அளவுக்கு மேலை ஊடகங்களால் தூக்கிப்பிடிக்கப்பட காரணம் வேறு என நான் ஊகித்தேன். அதைப்பற்றி நான் எழுதினேன். கடந்தகால புண்கள் காய்ந்து அமைதியாக வளரமுற்படும் நைஜீரியாவில் வன்முறையை மேலை ஊடகங்கள் தூண்டுகின்றன என்று ஐயப்பட்டேன். அங்கே அவர்கள் ஒரு பிரிவினை வாதத்தை  மீண்டும் ஊதி எழுப்புகிறார்கள் என்றேன். அதற்கு இந்தியாவில் அவர்கள் செய்வதே எனக்கு உதாரணமாக இருந்தது.

மேலைநாடுகளைப் பொறுத்தவரை எப்போதுமே  இதற்கு ஒரு பழகிய வழிமுறை உண்டு. முதலில் பல்கலைக்கழகங்கள் வழியாக ஆய்வேடுகள் உருவாக்கப்படும். அவை தேவையான கருத்தியலை போலி ஆதாரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் சமைக்கும். பின்பு இலக்கியவாதிகள் உருவாக்கபப்டுவார்கள். அவர்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுவார்கள்.

உதாரணமாக , ஸீமமெண்டா என்கோசீ அடிச்சி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்க பல்கலைகக்ழக தயாரிப்பு. அவருக்கும் நைஜீரியாவுக்கும் இடையேயான உறவென்பது மேலோட்டமான ஒன்று. பையா·ப்ரா கலவரம் குறித்த விஷயங்களை மேலைநாட்டு பல்கலைக்கழக ஆய்வேடுகளின் உதவியுடன் சேகரித்தே அவர் நாவல் எழுதியிருக்கிறார். அவர் பிறப்பதற்கு முந்தைய நிகழ்வுகள் அவை.

அதன்பின்னர் இதழியலாளர்கள் திரிபுசெய்திகளை உருவாக்குவார்கள். ஒருகட்டத்தில் மேலைநாடுகள் நினைப்பதை  ஆசிய ஆப்ரிக்க மக்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஒருவரை ஒருவர் கொல்வார்கள். தங்கள் நாட்டின் அரசியலைப்பை சமூகக் கட்டுமானத்தை தாங்களே அழிப்பார்கள்.  தங்கள் தேசத்தின் முன்னேற்றத்தை தாங்களே தடுத்து ஒழிப்பார்கள்.

நான் எழுதிய அக்கட்டுரைக்கு கடுமையான எதிர்வினைகள் பல வந்தன. நான் செயற்கையாக ஊகங்களை உருவாக்குகிறேன் என்று சொன்னார்கள். அவர்களிடம் நான் சொன்னேன், ‘ஸீமமெண்டா அடிச்சிக்கு அவர் தகுதிக்கு மீறிய விருதுகள் வழங்கப்படும் , அவரைப்போல பல எழுத்தாளர்கள் அதேபோல எழுதுவார்கள் . ஒருகட்டத்தில் நைஜீரியாவில் வன்முறை வெடிக்கும், பாருங்கள்’ என்று. அதுவே நடந்துகொண்டிருக்கிறது. எதிர்பார்த்தது நடந்ததில் கடுமையான மனவருத்தம் கொள்ளும் தருணம் இது.

இனி என்ன நிகழும்? இந்த அனலை ஊதி ஊதி பெருக்குவார்கள் அமெரிக்க ஐரோப்பிய ஊடகங்களும் பல்கலைக்கழகங்களும். மறுபக்கம் இஸ்லாமின் சமரசமில்லாத மதவெறி. ஆகவே அழிவு அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் கிழக்கு திமோர் போல ஒரு சுதந்திர கிறித்தவ நாடு நைஜீரியாவில் உருவாகக்கூடும். ஆனால் அதன் அழிவுகள் மிக அதிகமாகவே இருக்கும்.

அந்த வரலாற்றுக்கசப்பை வளர்த்து நம்மை மோதச்செய்ய எவர் முயன்றாலும் அதை மீறி நிற்கும் தேச ஒற்றுமை, சமூக இணக்கம் மூலமே நம் குழந்தைகளுக்கு ஒரு அமைதியான, வளமான தேசத்தை நாம் விட்டுச்செல்ல முடியும்.

இரண்டு, போலிஅறிவுஜீவிகள் போல ஆபத்தான, அழிவுசக்திகள் வேறில்லை. மிக எளிதில் விலைக்கு வாங்கக்கூடியவர்கள் அவர்கள். அகங்காரம் மூலமே அழிவை உருவாக்குபவர்கள். தங்கள் சொற்களால் உருவாகும் எந்த அழிவுக்கும் பொறுப்பேற்க மறுப்பார்கள். அந்த அழிவைப்பற்றி மேலும் விவாதிக்க ஆரம்பிப்பார்கள். சிறு காரணங்களுக்காகவே பிளவை, வன்முறையை, கசப்பை அவர்கள் தூண்டிவிடுவார்கள். மதம் இனம் மொழி எதன் பெயரிலும்.  பிளவுவாதத்தை முற்போக்குக் கருத்தாகக் காட்ட  அவர்களால் முடியும். எந்த நாசகார கருத்தும் முற்போக்கு முகமூடியுடன் மட்டுமே வரும்.

பிளவையும் வெறுப்பையும் உருவாக்கும் எந்த ஒரு அறிவுஜீவியையும் துரோகி என்றும் ஐந்தாம்படை என்றும் புரிந்துகொள்வோம். அவர் எந்த இலட்சியத்தைப் பேசினாலும்சரி எத்தனை முற்போக்காக பேசினாலும் சரி. தன்னை பிறர் பிளவுபடுத்த அனுமதிக்கும் சமூகம் அழியும்.

இனி எதிர்வினைகளை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு - இதை அவரே திரும்ப மீள்வாசிப்பு செய்து எனக்கு புரியும் விதமாக எழுதினால் எதிர்வினை வைக்க எதுவாகயிருக்கும்.இல்லை ஒரு கோனார் நோட்ஸ் கிடைக்கும் வரை பொறுத்திருக்கலாம்.இன்று தான் தெரிந்தது ஏன் சாருவுக்கு மட்டும் நிறைய எதிர்வினைகள் வருகிறது என்று.நான் நிறைய தடவை படித்ததில் புரிந்த ஒரே விஷயம் எந்த நாசகார கருத்தும் இப்படி சிக்கலான மொழியில் வந்து இருக்கும் குழப்பத்தை இன்னும் அதிகரிக்கும்.

தன்னை பிறர் பிளவுபடுத்த அனுமதிக்கும் சமூகம் அழியும்.இது அவர் சொன்னது.முதல் மற்றும் கடைசி பத்தியை தான் படித்தேன். அதிலேயே அவர் சொல்ல வந்த கருத்தின் தோனியை ஊகித்துக்  கொண்டேன். காலத்திற்கேற்ப மாறாத சமூகமும் அழியும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே கிடையாது.

இதை புரிந்து கொண்டு எதிர் வினையாற்றிய யுவகிருஷ்ணா தான் என் பதிவுலக குரு என்பதை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

Saturday, March 20, 2010

மங்கூஸ் பேட்,துரோகி ஹைடன்

ஐ.பி.எல் ஆரம்பித்த உடன் நான் திட்டிய ஒரே ஆள் என்றால் அது மாத்யூ ஹைடன் மட்டும் தான்.முதல் இரண்டு போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை.கில்கிறிஸ்ட்,ஹைடன்,சேவாக்,கெயில் இவர்கள் எல்லாம் அடித்து ஆடினால் எதிர் அணியில் எப்படி பந்து வீசினாலும் தோல்வி தான்.அதற்கு ஒரு சிறிய உதாரணம் தான் யூசுப் பதான்.நிறையவே அந்த அணி அவரை நம்பியிருக்கிறது.அதுதான் இது மாதிரி வீரர்களின் பலமும் பலவீனமும்.

நேற்று எப்படியும் தோற்று விடுவார்கள் என்று நினைத்து கொண்டேன்.ஹைடனை வேண்டிய அளவு திட்டி விட்டேன்.வீட்டிற்கு வந்து பார்த்தால் ஹைடன் இமாலய வெற்றி.நான் போட்டியைப் பார்த்தால் தோற்று விடுவார்கள் என்பதால் நிறைய போட்டி பார்க்கவே மாட்டேன்.அதுவும் நான் யாரையாவது திட்டினால் அவர் தான் அன்று போட்டியின் நாயகனாகி மற்றவர்களிடம் இருந்து எனக்கு திட்டு வாங்கி தருவார்கள்.

என் தம்பி சாட்டில் வந்து "மாட்ச் பாத்தியா.." என்று கேட்டான்.இல்ல என்று பதிலளித்தேன்.ஹைடன் மங்கூஸ் பேட் வைத்து விளையாடி சாவடி அடித்தான் என்றான்.மங்கூஸ் என்றால் அது பிரபலமான பட்டப்பெயர்.என்ன மங்கூஸ் பேட் என்று கேட்டதற்கு கூகுளில் பார் என்று சொல்லி விட்டான்.கூகிள்  மட்டும் இல்லை என்றால்....


கைப்பிடி வழக்கத்தை விட நீளம்(43%).அதற்கு ஏற்றார் போல் பிளேடின் அளவு குறைவு.என்னை கேட்டால் ஹைடன் போல மீன்பாடி(பெரிய பாடி) உள்ளவர்களுக்குத் தான் அது செட்டாகும்.நம்மவர்கள் யாராவது விளையாடினால் அது கைப்பிடியில் பட்டு கேட்சாகும்.இல்லை உடம்பில் காயம் படும்.

ஹைடன் மட்டும் அடிக்காமல் இருந்திருந்தால் நானே திட்டியிருப்பேன்.அந்த மங்கூஸ் மண்டையனுக்கு ஏன் இந்த வேலை என்று.வாழ்க மங்கூஸ்.நல்ல வேளை இதை அவர் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடும் போது உபயோகிக்கவில்லை.உபயோகித்திருந்தால் மனுஷன் இன்னும் ஆடிக்கொண்டிருப்பார்.

ஹைடன் எல்லாம் என்னங்க மங்கூஸ் பேட் உபயோகித்திருக்கிறார்.நான் எல்லாம் சின்ன வயதிலேயே அதில் விளையாடி இருக்கிறேன்.பிளேட் தேய்ந்து அது அப்படி தானிருக்கும்.என்ன ஒன்று அப்போது எங்களுக்கு பெயர் தெரியாத காரணத்தால் ஹைடன் பெயரைத் தட்டிச் சென்று விட்டார்.துரோகி ஹைடன்.எங்க வாழ்க்கையில் என் இப்படி விளையாடுகிறார்.நான் சொன்னதை தான் நேற்று சேவாக் சொல்லியிருப்பார்.அவர் அடித்த அடி யாருக்கும் நினைவில் இருக்காது.

கிரிக் இன்போவில் டோனி மோன்டனா என்ற போதைப் பொருள் கடத்தல்காரன் சாகும் தருவாயில் கூட வெளியே பாய்ந்து ஒரு சின்ன மெஷின் கன்னை வைத்து சுட்டாராம்.அப்போது அவர் சொன்ன பன்ச் தான் இது - "சே ஹலோ டூ மை லிட்டில் பிரெண்ட்..".படத்தில் கூட இந்த பன்ச் பட்டாசு கிளப்பியதாம்.பேசியவர் அல் பசினோ.அது மாதிரி ஹைடனும் சொல்லாமல் செய்திருக்கிறார்.

எங்க பாட்டி கூட மங்கூஸ் பேட் உபயோகித்திருக்கிறார்.போர்வையை வெளுக்க அதை வைத்து அடித்து துவைப்பார்.அதனால் ஹைடனுக்கு முன்னால் அதை உபயோகப்படுத்திய பெருமை நம்ம ஊர் அம்மணிகளுக்கே சேரும்.இதில் அடி வாங்கிய ரங்கமணிகளை நினைத்து பார்த்தேன்.என்னா வில்லத்தனம் என்று ஆதி சொல்வது இங்கு வரை கேட்கிறது.

Friday, March 19, 2010

சிறுகதை எழுதுவது எப்படி

என்னறைக்கு வந்த பஸ்ஸில் திருடியது.மக்கா கடைசி வரைக்கும் வாங்க,கடைசியில் தான் நான் சொல்லப் போவது இருக்கு.அன்று அதில் நான் கலந்து கொள்ளவில்லை வெறும் வேடிக்கை தான் பார்த்தேன்.

Jaganathan K - Sujatha’s tips for new Writers: How to write Fiction?

1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். ‘துருவனும் குகனும்’ என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, ‘போலீஸ் செய்தி‘க்கு அனுப்பாதீர்கள்.

2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி…

4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.

6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

9. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.
*
தோரணத்து மாவிலைகள். சுஜாதா. விசா பப்ளிகேஷன்ஸ்

நன்றி: 10hot (http://10hot.wordpress.com/2009/08/11/sujathas-tips-for-new-writers-how-to-write-fiction/))

Jaganathan K - 1) உங்களைப் படிக்கப்போகும் அந்த முகம் தெரியாத அந்நியர், உங்களைப் படித்ததால் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தப்படாத அளவிற்கு எழுதுங்கள். வாசகரின் நேரத்தை நீங்கள் மதிப்பது மிக முக்கியம்!

2) கதையின் ஒரு பாத்திரத்துடனாவது வாசகர் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்.

3) ஒவ்வொரு கதாபாத்திரமும் எதையாவது ஒன்றை விரும்ப வேண்டும் - குறைந்தபட்சம் ஒரு கோப்பைத் தண்ணீரையாவது!

4) ஒவ்வொரு வாக்கியமும் பின்வரும் இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் - பாத்திரத்தை வெளிப்படுத்துதல், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல்!

5) முடிவிற்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் கதையை ஆரம்பியுங்கள்!

6) குரூர மனப்பான்மை கொண்டவராக இருங்கள். உங்கள் கதாபாத்திரங்கள் எவ்வளவு இனிமையான அப்பாவிகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு வாழ்வில் மிக மோசமான விஷயங்கள் நடைபெறட்டும்!

7) ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!

8) உங்கள் வாசகர்களுக்கு எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள். சஸ்பென்ஸைத் தூக்கிக் குப்பையில் போடவும்! கதையைத் தாங்களே முடிக்குமளவிற்கு வாசகர்களுக்கு என்ன, எங்கே, எப்படி நடந்ததென்று கதை புரிந்திருக்க வேண்டும். கடைசிப் பக்கங்களை கரையான்கள் தின்னட்டும்!

- Kurt Vonnegut
நன்றி: திண்ணை (http://www.thinnai.com/?module=displaystory&story_id=60601277&format=html)

Jaganathan K - அவங்க சொல்லாம விட்ட விதிகள்:
1. டிரான்ஸலேஷனும் ஒரு படைப்பிலக்கியம்தான்.. மூல (பைல்ஸ் இல்ல) ஆசிரியர் பேர்
போடாம எழுதறது கள்ள இலக்கியம்

Jaganathan K - 2. தினமும் 10 தப்படியாவது வீட்டுக்கு வெளியில நடங்க. இல்ல பழைய நண்பருக்கு
செல்பேசுக.. அட்லீஸ்ட் ஒரு ராங் நம்பருக்காவது ​போன்​போட்டு 'அலோவ் சாரு சங்கரான்னு' ​
கேட்டுட்டு டக்னு கட் பண்ணுங்க. ப்ரெஷ்ஷான மனசு எழுதறதுக்கு மிக முக்கியம்.

Jaganathan K - 3. பிளாக் எழுதறது உசிதம். நல்ல ப்ராக்டிஸ் தளம்.
பேப்பர் பேனா கவர் போஸ்ட்பாக்ஸ் இம்சை இல்லை.
முக்கியமா மனைவிக்கு நீங்க இப்படி ஒரு எழுத்தாளரா
பரிணமித்துக் கொண்டு வருவதை ​பொத்திப் பாதுகாக்கலாம்.

3.5. அதிமுக்கியமா ஆபிஸிலியே நீங்க சிறுகதைகளா ​
வெளுத்து வாங்கலாம். (மானேஜரைப் பார்த்துக் கொண்டே
விமர்சித்து எழுதும் பாக்கியம் வேறு தலைமுறை
எழுத்தாளர்களுக்கு இருந்ததில்லை)

sankaranarayanan venkatesan - தல(சுஜாதா) சொல்லியிருக்காரு , சம்பவங்களும் பாத்திரங்களும் நிறைய இருக்கக் கூடாதாம்

இரும்புத்திரை - முதலில் ஒன் லைன் எழுதி பாருங்கள்.அது வித்தியாசமாக இருக்கவே கூடாது.சமீபத்தில் நான் எழுதிய கதைக்கு(அதுக்கு தானே இந்த பில்டப்..சொல்லித் தொலை) ஒன் லைன் அமைத்த போது இப்படித்தான் வந்தது.காதலியிடன் தகாத வார்த்தை சொன்ன காதலன்(ஆரம்பம்) அவளை விட்டுத் தருகிறான்(முடிவு).அவ்வளவு தான் நடுவில் நம் கைங்கரியம் தான்.

மேலே இருக்கும் விதி முறைகளை எதையும் படித்து விட்டு முயற்சிக்க வேண்டாம்.உங்கள் பாணியில் கதை எழுத இருக்கும் வாய்ப்பையும் அது தராது.

விடுபட்டவை - சுஜாதா பாலகுமாரனிடம் சொன்ன சிறுகதை எழுதுவது எப்படி என்பதின் ரகசியம் ரொம்ப சிம்பிள் தான்.முதல் வரியிலே கதையை ஆரம்பித்து விடுங்கள்.

நானே கற்றுக் கொண்டது - சிறுகதையில் தேவையில்லாத விவரணைகள் வேண்டாம்.இன்னும் கேட்டால் விவரணைகள் வேண்டாம்.குறிப்பாக முதல் பத்தியில் வேண்டவே வேண்டாம்.அது நாவலுக்கு உகந்தது.அதனால் பாலகுமாரன் எழுதிய நாவல்கள் அவர் சிறுகதைகளை விட அதிகம் ஈர்த்தது

நன்றி ஜெகநாதன்,சாறு சங்கர்,ராஜூ(அவர் இந்த ரூலை எல்லாம் படித்து விட்டு கதை எழுதியுள்ளார்.)

விவாதம் நாளையும் தொடரும்.

உறை கிழிக்கப்படாத காதல்

சொல்லப்பட்ட,சொல்லப்படாத காதல்கள்
கிழித்தெறிந்த தாள்களின்
கலைந்த வார்த்தைகளை
எல்லா வீட்டு கழிவறைகளும்
சுவைத்திருக்கிறது
இன்றும் உணவாகப் போகிறது
உறை கிழிக்கப்படாத
பழுப்பேறிய காகிதம் ஒன்று
வார்த்தை ஜாலங்கள் புரியாமலே
விவரணைகள் தெரியாமலே
மூழ்கடிக்கப்படலாம்
என் காதலாக இல்லாத பட்சத்தில்.

வீட்டிலிருக்கும் புத்தகங்களை எல்லாம்
துழாவினால் மறுதலிக்கப்பட்ட
காதல்கள் சிக்கலாம்
திரும்ப கொடுக்க நினைத்தாலும்
வார்த்தைகளின் மங்கிய வாசனை
நாசியின் குறுக்கே நடக்கிறது
தற்போதைய காதலின் மணம்
துர்கனவாகத் தெரியலாம்
எங்காவது புத்தகத்தைப்
புரட்டித் தேடும் யாருக்காவது.

Thursday, March 18, 2010

எல்லாமே டபுள் மீனிங் தான்

ஹூசைன் அந்த நிர்வாணப் படத்தை எந்த வருடம் வரைந்திருந்தாலும் அது நிறைய மக்களின் உணர்வுகளை காயப்படுத்தினால் அது தவறு என்று என்னை சொல்ல வைத்தது அவர் மதப்பெண்களுக்கு மட்டும் ஆடை உடுத்தி ஆழகுப் பார்த்தது தான்.அவர் நேர்மையான ஒவியராக இருந்தால் பாரபட்சமில்லாமல் கோடு இழுக்க வேண்டியது தானே(அட வரைவதை சொன்னேன்).அப்படி வரைந்திருந்தால் ஒத்துக் கொள்ளலாம்.அது சரி ஹிந்து கடவுளை வரைந்தால் வழக்கு தான் போடுவார்கள்.வேறு மதத்து பெண்களை வரைந்திருந்தால் வெடிகுண்டு போடுவார்கள் என்பது அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்.(சினிமாகாரர்களின் மீது வெடிகுண்டு வீச்சு எல்லாம் மணிரத்னம் எடுத்த பாம்பே படத்தின் விளைவு என்று சொன்னால் அது நடந்து பதினாறு வருடங்கள் ஆகிறது என்று யாரும் பின்னூட்டதில் சொல்ல வேண்டாம்).எதையும் இழுங்க.என்னமோ செய்ங்க.பெயர் மட்டும் சரஸ்வதி,பார்வதி என்று வைத்து விட்டு பிரச்சனை வந்ததும் எந்த நாட்டுக்காவது போய் குடியுரிமை வாங்கி கொண்டு அங்கேயும் போய் எதையாவது இழுத்துராதீங்க.அப்பால வேற நாட்டுக்கு போக முடியாது.அங்க இருப்பது எல்லாம் கட்டிங்கு மாஸ்டர்கள் தான்.

மருத்துவர் ருத்ரன் வந்து அது 1970லில் நடந்தது வழக்கு போட்டது 1996லில் என்று சொல்கிறார்.(1996லில் அந்த படங்களை ஒரு இந்தி பத்திரிக்கை வெளியிட்டது.அது வரை அது வெளியே தெரியவில்லை.ஆதாரம் 1991ம் ஆண்டு அவருக்கு கிடைத்த நாட்டின் பத்ம விருதுகளில் உயர்ந்த விருதான பத்மவிபூஷன்.இன்னும் தெரியாமல் அவர் பாரத ரத்னா ஆகியிருப்பார்.அவர் எடுத்த படத்தில் வந்த பாடலுக்கு அவர் மதத்தில் எதிர்ப்பு வந்த காரணத்தால் அடுத்த நாளே படம் திரையரங்கை விட்டு எடுக்கப்பட்டது.எடுக்காமல் விட்டிருந்தால் தெரிந்திருக்கும்) ஹிரோஷிமா,நாகசாகி தாக்குதல் கூட தான் நடந்து அறுபது வருடங்களுக்கு மேல் ஆகிறது ஏன் இத்தனை பீலிங் என்று நான் ஜப்பான் மக்களிடம் சொன்னால் நன்றாகவாயிருக்கும்.அப்படி பார்த்தால் 1984லில் பிறந்த நான் எல்லாம் அதற்கு முன்னாடி வந்த எந்த விஷயத்தையும் பேச முடியாது என்று நினைக்கிறேன்.அது மாதிரி யாராவது தெரிந்தப்பின் வழக்கு போட்டுயிருக்கலாம்.நானும் நிர்வாண ஒவியம் வரையலாம் ஏதாவது மதத்தை வம்பு இழுக்கலாம் தான் என்ன சிக்கல் என்றால் எனக்கு குடியுரிமை தர யாரும் தயாராக இல்லை.இதனால் நானும் இந்துத்துவா என்றால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.அவர் வரைவதில் காட்டும் பாரபட்சம் என் எழுத்தில் இருக்காது.ஹூசைனாகயிருந்தால் என்ன நானாகயிருந்தால் என்ன.இந்திய நாட்டை நிர்வாணமாக வரைந்து எதிர்ப்பு வந்தவுடன் அதை எடுத்து விட்டேன் எண்டு பெயருக்கு கண்காட்சியில் இருந்து எடுத்து விட்டு அவர் தளத்தில் ஏற்றினாரே அது மாதிரி கத்தார் நாட்டை வரைந்து விட வேண்டாம்.எந்த நாடாக இருந்தாலும் அதன் மீது பற்றுக் கொண்டவர்கள் கொஞ்சமாவது இருப்பார்கள்.

பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் வேண்டாம் என்று நாம் சொல்லும் போது நம் சம்பந்தப்பட்டவர்களைத் தாக்கியிருக்கிறார்கள் என்பது பதிவுலக அரசியலில் இருக்கும் ஒன்று.நமக்கு வேண்டாதவர்களாயிருந்தால் நாமும் சேர்ந்து ஆதரிப்போம்.சொல்லாமலிருந்தால் அப்படித்தான் அர்த்தம்.அதனால் என் பதிவுகளில் என்னை கேட்டு விட்டு எனக்கு வேண்டாதவர்களை அடிக்கலாம்.கூகிள் மூலம் என் டவுசரை அவிழ்க்க யாராவது முயற்சித்தாலும் அதை இறுக்கிப் பிடித்துக் கொள்ள எனக்கு தெரியும்.கவலைப்படாமல் அடிக்கலாம்.நான் மட்டும் ஏன் தனி வழியில் போக வேண்டும்.

நானும் இனி ஒழுங்கா எழுதுறேன்,ரெண்டு வேளை பல் தேய்க்கிறேன்,மூணு வேளை குளிக்கிறேன்,குளிக்கும் போது ஷோப் போடுறேன் எனக்கு தமிழ்மணப் பரிந்துரை வேண்டும்.என் பதிவை ஏத்துங்க என்று எல்லாம் கேட்க மாட்டேன்.பிடிச்சா போடுங்க.பிடிக்கவில்லை என்றாலும் மைனஸ் போடுங்க.எனக்கு ஏன் நிறைய பின்னூட்டம் வரவில்லை என்று நண்பர் கேட்டார்.சாருவும்,எஸ்.ராமகிருஷ்ணனும் வாங்குவதில்லை என்று சொன்னேன்.சாரு அனுமதிப்பதில்லை என்று சொன்னார்.உசைன் போல்டுடன் ஓடாமல் நான் அவரை விட வேகமாக ஓடுவேன் என்று நான் சொல்வதண்டு என்று சொன்னேன்.அடுத்த சாட்டுக்கு இன்னும் ஆள் வரவில்லை.ஓடிப் போன நண்பர் சாறு பிழியப்பட்ட சங்கர் இல்லை என்பது மட்டும் உண்மை.

சிறுகதை தொகுப்பு சுற்றறிக்கை என்றால் கவிதை தொகுப்பு துண்டு பிரசுரமா தெரிந்தவர்கள் சொல்லவும்.ஆறாயிரம் கொடுத்தால் என் புத்தகம் வெளி வர வாய்ப்புள்ளது என்று கென் சொன்னார்.யாராவது அதை செய்து இந்த ஏழைப் பதிவனை(பரம ஏழையை விட்டு விட்டேனே) எழுத்தாளராக்கி அடுத்த கட்டத்தில் நகர்த்தாமல் தூக்கி வைக்கவும்.எல்லா சுற்றறிக்கையையும்,துண்டு பிரசுரங்களையும் அவரே எடுத்துக் கொள்ளலாம்.இனி நானும் ரைட்டர் இரும்புத்திரை என்ற பெயரில் எழுதப் போகிறேன்.அப்படி வைக்காதே பைட்டர் இரும்புத்திரை என்று வைத்து கொள்ள சொல்லி நிர்பந்தம்.எனக்கு சண்டை பிடிக்காது சொன்னால் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்.நாளை துண்டு பிரசுரம் வெளியாக இருக்கிறது.வெளியூரில் பம்மி விடவும்.

அனானி வந்து திட்டினால் நீ அனானி தானே என்று பதில் கேள்வி வைக்கிறார்கள்.அதற்கு பதில் அந்த ஆப்ஷனையே எடுத்து விடலாம்.இது எப்படி இருக்கிறது என்றால் கூட்டத்தில் அரைகுறையாக ஆடை உடுத்தியிருக்கும் பெண்ணை பார்க்கவே கூடாது என்று கண்ணைப் பொத்துவது போல் உள்ளது.உடனே நான் அனானியா என்று கேட்க வேண்டாம்.சொந்த கோமணத்தோடு இல்ல முகத்தோடு வரும் தைரியம் எனக்கு இருக்கிறது.

பரிசலின் விண்ணைத் தாண்டி வருவாயா விமர்சனம் படித்து விட்டு அந்த படத்தின் மீது இன்னும் கொலைவெறி அதிகமானது.350 கிமீ பயணம் செய்து ஒரு காலத்தில் அவர் மேல் அன்பு செலுத்திய பெண்ணின் வாழ்க்கையில் குண்டு வைக்க போவதை தான் அந்த படம் சொல்லி தந்தால் வெரி ஸாரி.அதிலும் நான் சந்தோஷமாக வாழவில்லை என்று அந்த பெண் சொல்லவில்லையாம்.என்ன வருத்தம் அந்த நண்பருக்கு என்று நினைத்து கொண்டேன்.அந்த பெண்ணின் கணவர் சந்தேகப்படுபவராகயிருந்தால் இனிமேல் அடுத்த கௌதம் மேனன் படம் பார்த்து விட்டு அங்கு செல்லும் போது அந்த பெண் அவர் எதிர்பார்த்ததை சொல்லலாம்.

நான் அந்த பதிவு படித்து விட்டு வருத்தப்பட்டேன்.எனக்கு கல்யாணம் ஆகவில்லையே என்று.ஏன் என்ற கேட்ட நண்பனிடம் எவனாவது என் வீடு தேடி வந்தால் இருக்கும் ஒரு விரலையும் அறுத்து விட்டுத்தான் மறு வேலை என்று சொன்னேன்.

எப்பவுமே இரட்டை அர்த்தம் தானா என்று கேட்டவனிடம்.

உன் வலது கையில் இருக்கும் ஆள் காட்டி விரல் எத்தனை ஒண்ணு தானே இருக்கிறது அதை சொன்னேன் என்றாலும் நம்ப மறுக்கிறான்.ஒ மை ஹூசன் நீங்க ஒரு ஒவியம் வரைந்து காட்டுங்களேன்.அவன் நம்பட்டும்.நிர்வாணமாக வேண்டாம்.வித்தியாசம் தெரியாமல் டவுட் வலுத்து விடும்.

Wednesday, March 17, 2010

நானும் வடை(விடை) பெறப் போகிறேன்

தம்பியிடம் இரண்டு விஷயங்கள் பேசவே கூடாது என்று பகீரத முயற்சி செய்தாலும் பேச்சு சுவாரஸ்யமான கட்டத்திற்கு இடம் மாறும் அதை தான் பேசுகிறோம்.முதலாவது பெண்கள்.இரண்டாவது சினிமா.

இதில் எதைப் பற்றி பேச ஆரம்பித்தாலும் எனக்கு முன்னாடியே தெரியும் என்கிறான்.மலீனா என்று படம் இருப்பது தெரியுமா என்று தெரியாமல் கேட்டு விட்டேன்."ம்ம்..அந்த படத்தின் அன் கட் வெர்ஷனை எங்கள் கல்லூரியிலே போட்டுக் காட்டினார்கள்.." என்று பதில் வருகிறது.

அவனும் நானும் இரு துருவம் தான்.ஏதாவது குடும்ப விஷேசத்தில் பெண்களுக்கு ஆடை தேர்வு செய்ய சொன்னால் நான் எடுக்கும் நேரம் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கும்.ஆனால் அவர்களுக்கு பிடிக்கும்.யாராவது வலிய வந்து எடுத்து கொடுக்க சொன்னால் மறுத்து விடுவேன்.எனக்கு செய்யணும் என்று தோன்றினால் செய்வேன்.இதுவே அவனாகயிருந்தால் பொறுமையாக செய்வான்.சலிப்படைய மாட்டான்.

அடுத்தது யாருக்கு என்ன பொருந்துமோ அதை தான் நான் வாங்குவேன்.அவன் மற்றவர்களின் பார்வையில் அது நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்வான்.உதாரணம் மாமா பெண்ணிற்கு குடை வாங்க வேண்டியதிருந்தது.அவன் போய் பிங்க் கலரில் குடை வாங்கி கொடுத்து விட்டான்.யாராவது இந்த கலரில் வாங்குவார்களா என்று கேட்டு விட்டேன்.ஒரு வாரம் கழித்து உனக்கே தெரியும் என்று சொன்னான்.

அவள் வகுப்பில் எல்லோரும் அந்த குடையைப் பற்றி கேட்டார்களாம்.அவளுக்கும் பிடித்து விட்டதாம்."எப்படி.." என்று என் வியப்பை வெளியே காட்டாமல் கேட்டேன்."சிம்பிள் எல்லா பெண்களுக்கும் பிங்க் கலர் பிடிக்கும் நமக்கு கறுப்பு பிடிப்பது மாதிரி..தவிர நீ ஏற்கனவே சொன்ன காரணமும் உண்டு" என்று சொன்னான்.நான் ரெண்டு விஷயங்களை மறந்திருப்பது தெரிந்தது - 1.அவன் வெப் டிஸைனர்.நான் வேலை செய்வது டேட்டாபேஸ். 2.அடுத்தவர்கள் வைத்திருக்கும் பொருட்களை தான் பெண்கள் விரும்புவார்கள் என்று நான் சொல்லியிருந்தேன்.அதை நானே மறந்து விட்டேன்.அவன் மறக்காமல் இருந்திருக்கிறான்.என்ன இருந்தாலும் என் அனுபவத்தையும் சேர்த்து கொண்டு வளர்ந்தவன் அல்லவா.

இன்னொரு உதாரணம்.ஒரு பெண் அவனிடம் எனக்கு சமைக்க தெரியாது என்று எத்தனை முறை சொன்னாலும் அவன் பதில் இதுதான்."கல்யாணத்திற்கு அப்புறம் கத்துகலாம்..".இதுவே நானாக இருந்தால் அவள் எததனை முறை அப்படி சொன்னாள் என்று எண்ணிக் கொண்டிருப்பேன்.அவள் மூன்றாவது முறை சொல்லியவுடன் எம்.ஜி.ஆர் பாணியில் அவள் மேல் பாய்ந்திருப்பேன்."நல்லா கொட்டிக்க தெரியுதுல..அப்புறம் என்ன சமைக்க தெரியாதா.." என்று ஆரம்பித்து அது சண்டையாக மாறும் வரை திட்டுதான்.அப்புறம் எங்கே நட்பு தொடரும்.நேரே எண்ட் கார்டு தான்.

சின்ன வயதில் என்னால் படிக்க முடியாத காமிக்ஸ் புத்தகத்தை அவன் படித்து விட்டான்.அவனே படித்து விட்டான் நானும் படித்து விட வேண்டும் வீம்பாக எடுத்து படித்தாலும் என்னால் முடியவில்லை.

தியேட்டரில் படம் பார்க்கும் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சரி பாதியில் வந்ததே கிடையாது.ப்ளாக் எழுத ஆரம்பித்தப் பின் மொக்கை படத்திற்கு போவதேயில்லை.நேற்று ஒரு வாரம் கழித்து சாட்டில் வந்தான்.

அவன் - "என்ன பண்றே.."

நான் - "ரோட் படம் பாக்க முயற்சிக்கிறேன்..நீ என்ன படம் பாத்தே.."

அவன் -"எதுவும் நடக்கும்..படம் செம மொக்கை.."

நான் - "டெலிட் பண்ணிராத..நான் வரும் போது பாக்கணும்.."

அவன் - "முதல்ல வேட்டைக்காரனைப் பாத்து முடி..அப்புறம் இதை பாக்கலாம்.."

மனதுக்குள் நினைத்து கொண்டேன் - "என்னைக்கு நான் ப்ளாக் எழுதுறதை நிறுத்துறேனோ..அன்னிக்கி தான் வேட்டைக்காரனைப் பாக்க முடியும் போல..விஜய்க்காக இந்த தியாகத்தைக் கூட செய்ய மாட்டேனா என்ன..சீக்கிரம் வடை வாங்க வேண்டியது தான்.."

Tuesday, March 16, 2010

புலி வால் - என் சுற்றறிக்கையின் முதல் சிறுகதை

"நாம இந்த நிமிஷம் வரைக்கும் காதலிக்கிறோம் அதாவது தெரியுமா.." எனக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்தவளிடம் கேட்டேன்.

"தெரியும்..அதுக்கென்ன இப்போ.." அலட்சியமாக பதில் வந்தது சத்யாவிடமிருந்து.

"நீ இல்லாம ஒரு வாழ்க்கையை என்னால நினைக்க கூட முடியல.." சினிமா பாணியில் இருந்தாலும் அந்த சமயத்தில் அந்த வார்த்தைகள் தான் கிடைத்தது.அதுவும் இன்றைய அசாதாரண சூழ்நிலையில் நிச்சயம் கிண்டல் செய்வாள்.

"டோண்ட் பீ சில்லி..உனக்காக அமெரிக்காவை எல்லாம் விட முடியாது.." அதே பாணியில் பதில் சொன்னாள்.

"பணம் கிடைத்தால் ஆப்பிரிக்கா வைர சுரங்கத்தில் கழுதை சாணி பொறுக்கினால் கூட உனக்கு ஓகே தான்.." கோபத்தில் உதடு துடிப்பது தெரிந்தது.

"மரியாதையா பேசு..முட்டாள் மாதிரி பேசாதே.." பதிலுக்கு சீறினாள்.

"உனக்கென்னடி மரியாத..உனக்கும்,காசு குடுத்தா..! வர்றவளுக்கும் வித்தியாசமே இல்ல.." வார்த்தைகளை அள்ளித் தெளித்து விட்டேன்.

"ச்சீ..உன்னப் போய் இவ்வளவு நாளா நல்லவனா நினைச்சேனே..இனிமே என் முகத்திலேயே முழிக்காத..மீறி வந்த..போலீஸ்ல சொல்லி குடும்பத்தோட ஜெயில்ல அடைச்சுருவேன்.." கத்திக் கொண்டிருந்தாள்.

"போலீஸ்ல சொல்லி தான் பாரேன்..நீ கூட இருக்கும் போது எடுத்த வீடியோ எல்லாம் இருக்கு..அதுவும் அவங்க கையில கிடைக்கும்.." சத்யாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை ரசித்தேன்.

"சார்.." சத்யாவின் அப்பாவுக்கு உச்சரிப்பிலே ஒரு சங்கடம் தெரிந்தது.இவனை போய் சார் என்று சொல்லி விட்டோமே என்று நினைத்திருப்பாரோ.

"சொல்லுங்க..என்ன பிரச்சனை.."

"சத்யா என் பொண்ணு..அமெரிக்காவுல நிச்சயம் பண்ணியிருக்கோம்..ஒரு பையனை காதலிச்சிருப்பாள் போல..சேர்ந்து சுத்தும் போது வீடியோ எடுத்திருக்கான்..போலீஸுக்கு போக பயமாயிருக்கு நீங்க தான் எப்படியாவது அதை அவன்கிட்ட இருந்து வாங்கணும்.."

"இந்த பொண்ணுகளுக்கு மட்டும் அமெரிக்காவுல இருந்து எவனாவது வர்றான் பாரேன்.." ஏதோ அல்லக்கை அடித்த விட்டுக்கு எல்லோரும் சிரித்தார்கள்.அவனைத் தவிர.

"சரி பாக்கலாம்.." அவன் விட்டேத்தியாக பதில் சொன்னான்.

"சார் நீங்க எவ்வளவு கேட்டாலும் தர்றேன்..புலி வாலைப் பிடித்தது மாதிரியிருக்கு.."

"புலி வாலா..என்ன தருவீங்க.." வாய் விட்டு சிரித்தான்.

"என்ன கேட்டாலும்.." சத்யாவின் அப்பா அழாதது மட்டும் தான் பாக்கி.

விளைவு எனக்கு மூக்கு உடைந்திருந்தது.என்னிடமிருந்த அவளுடைய போட்டோவை எல்லாம் பிடுங்கியிருந்தார்கள்.சத்யாவின் அப்பாவை அழைத்தார்கள்.

"வாங்கிட்டீங்களா..எவ்வளவு பணம் வேணும் சார்.." பரபரப்பாய் கேட்டார்.

"பணம் எல்லாம் வேண்டாம்.உங்க பொண்ணு போட்டோவைப் பார்த்தேன்..எனக்கு பிடிச்சிருக்கு..கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம்.உங்களுக்கு ஓகேவா மாமா.." அவன் சொன்ன பதிலில் என்னை முறைத்தார்.

"அவனை விட்டுத் தள்ளுங்க..இனிமே உங்க வழிக்கு வர மாட்டான்..அது ஒரு எலி வால்.." அவரை பேச விடாமல் அவனே சொல்லிக் கொண்டிருந்தான்.

அவருக்கு நிஜப்புலி வாலை மிதித்து விட்ட எஃபேக்ட் கொடுத்தார்.

"வீட்டுக்குப் போங்க மாமா..பேசிட்டு நல்ல முடிவா சொல்லுங்க.." வழியனுப்பி வைத்தான்.என்னையும் வெளியே அனுப்ப சொல்லி சைகை காட்டினான்.

"ல்லாம் உன்னால தாண்டா..என் பொண்ணு வாழ்க்கையே போச்சு.." என் சட்டையைப் பிடித்து அழுதார்.

"இன்னும் எதுவும் அவங்க கையில் சிக்கல..நீங்க பயப்படாதீங்க..அது சிக்கவும் சிக்காது..இருந்தா தானே சிக்கும்.."

"தம்பி எதுவும் சிக்காம பார்த்துக்கோங்க..நான் என்ன வேணுனாலும் உங்களுக்கு செய்றேன்.." மரியாதையின் அளவு மாறியிருந்ததில் எனக்கு ஆச்சர்யமில்லை.

"உங்க பொண்ணு.."

"சரி என் பொண்ணு அவனை கட்டுறதுக்கு உங்களேயே கட்டலாம்.." குரல் உடைந்தது தெரிந்தது.

"நான் இன்னும் முடிக்கல சார்..உங்க பொண்ணு மாதிரியே அவசரப்படுறீங்கன்னு சொல்ல வந்தேன்..நீங்க கவலைப்படாம கல்யாண வேலையைப் பாருங்க..என்னால பிரச்சனை வராது.." என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தேன்.

வன் நின்றுக் கொண்டிருந்தான்.வந்த வேகத்தில் கன்னத்தில் அடித்து விட்டான்.

"முட்டாள்..காரியத்தையே கெடுத்து விட்டாயே..அந்த ஆளே ஒத்துக்கிட்டான்..உனக்கெங்கடா போச்சு புத்தி.." இன்னொரு முறை கை ஓங்கினான்.

"அடி..நல்லா அடி மச்சான்..அவள நான் இப்பக் கூட காதலிக்கிறேன்..அதான் அந்த ஒத்துக்க முடியல.." கண்ணீரால் ஒரு திரை விழுந்தது.

"என்னடா உளர்ற.."

"கோபத்தில் வீடியோ எடுத்திட்டேன் சொன்னது பொய்..இப்ப அவளை கல்யாணம் செஞ்சா கூட வீடியோ எடுத்திருப்பானோன்னு அவளுக்கு ஒரு எண்ணம் இருந்து கிட்டேயிருக்கும். எனக்கும் அன்னைக்கே எடுத்து இருக்கணுன்னு ஒரு எண்ணம் இன்னும் வலிக்கும் மச்சான்..அதான் அவளை விட்டுட்டேன்.." சொல்லிக் கொண்டிருந்த என் கன்னத்தில் அவன் கை அனிச்சையாக தடவியது.

Monday, March 15, 2010

துவையல் - ஓட்டு ஸ்பெஷல்

திரட்டி ஆரம்பித்த காலத்தில் நிறைய பதிவர்கள் கிடையாது.திரட்டியில் பதிவுகளும் நிறைய நேரம் நிற்கும்.பிறகு என்னை மாதிரி தினமும் எழுதி மொக்கை போடும் பதிவர்கள் வந்தப் பிறகு பதிவுகள் நிறைய திரட்டியின் முதல் பக்கத்தில் நிற்க பரிந்துரை வந்தது.அதிலும் சில பிரச்சனைகள்.சில பதிவுகள் ஒரு ஓட்டினால் பரிந்துரைக்கு வராமல் போவதுண்டு.அதற்கும் ஒரு வழி கண்டுப்பிடித்து விட்டேன்.நேற்று ஒரு பதிவு போட்டால் அதில் ஒரு ஓட்டு போட்டு விட்டு அடுத்த நாள் ஓட்டுப் போட முயற்சி செய்தால் அதிலும் ஓட்டு விழும்.இரண்டு ஓட்டு நீங்களே போடலாம்.என்ஜாய் பண்ணுங்க.அடுத்த ஆராய்ச்சி நானே ஏழு ஓட்டுப் போடுவது எப்படி என்று தான்.அதிலும் வெற்றி அடைந்து விட்டால் நான் சொல்லித் தருகிறேன்.பிறகு எல்லோரும் பரிந்துரையில் நின்று நிறைய எழுதி பரிந்துரையில் நின்று கும்மி அடிக்கலாம்.இதை ஏற்கனவே கோல்மால் ஸ்பெஷலில் சொல்லியிருக்கிறேன்.

விஜய் இரசிகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.விஜய் நடித்த சிறந்த ஐம்பது படங்களை ஓட்டுப் போட்டு தேர்வு செய்யவும் என்று மெயில் செய்கிறார்கள்.ஐம்பதாவது படம் இன்னும் வரவில்லை என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும்.தவிர ஐம்பது படத்தில் நடித்தார் என்பது தான் கொஞ்சம் இடிக்கிறது.

சாருவின் பதிவுகள் இப்பொழுது சங்கமத்தில் வருகிறது.தமிழ்மணம் திரட்டியில் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன்.மைனஸ் ஓட்டுகள் குமியும் என்பதை நினைத்து பார்க்கும் போதே கொஞ்சம் சிரிப்பு வந்தது.எனக்கு மைனஸ் குத்திக் கொண்டிருந்த ஒருவரும் அவர் பெயரை சொன்னவுடன் காணாமல் போய் விட்டார்.இனிமே சொல்ல மாட்டேன் வந்து மைனஸ் போடுங்க பாஸ்.

பெண்ணாகரம் தேர்தலில் பா.ம.கவும் காசு கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.சேர்த்து வைச்ச காசை கொஞ்சமாவது கொடுங்கள்.தி.மு.கவும் வில்பூட்டாக நிற்கிறார்கள்.அ.தி.மு.க ஜெயித்தாலும் பரவாயில்லை பா.ம.க ஜெயித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.அப்படியென்றால் அவர்கள் ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுக்க இருக்கிறார்களோ.பா.ம.கவின் அஸ்தியை ஒகேனேகலில் கலக்க வேண்டும் என்று துரைமுருகன் சொல்லியுள்ளார்.அப்படி தான் அடிச்சி ஆடுங்க.தப்பு பெருசா இந்த பேண்ட் பெருசா நான் பார்த்தே ஆகணும்.அஸ்தியை கரைக்க வேண்டுமென்றால் வரும் தேர்தலில் இரண்டு பக்கமும் சேர்க்காமல் இருந்தாலே போதும்.இப்படி அடிக்கடி தேர்தல் நடந்தால் மைனாரிட்டி மெஜாரிட்டி ஆகி விடும் என்று நினைக்கிறேன்.

விஜயகாந்த் நீங்க எந்த தேர்தலில் பணம் தருவீர்கள்.தந்தால் உங்களுக்கும் அடுத்த ஓட்டு அல்லது ஒட்டு ஸ்பெஷலில் இடம் உண்டு.

Sunday, March 14, 2010

எதிர்வினை

நான் எழுதியதைப் படித்து விட்டு மற்றவர்களுக்கு கோபம் வந்தால் அது தான் என்னுடைய எழுத்தின் வெற்றி என்றே நினைக்கிறேன்.இன்னும் சிலரும் நினைக்கலாம்.என்னை கோபப்படுத்தும் அளவிற்கு யாரும் எழுதவில்லை என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு.அது நிச்சயம் பொய் என்று இப்பொழுது தெரிகிறது.என் கோபம் லேசாக நிமிண்டப்பட்டுள்ளது.

செல்வேந்திரனின் புத்தக விமர்சனப் பதிவை படித்தப் பின் எனக்கு தோன்றியது உள்ளாடையை ஈரமாக்கும் இரண்டு வயது குழந்தையை உக்காரும் இடத்தில் கழியால் அடிப்பது போலிருந்தது.இரண்டு வருடம் தினமும் தான் இப்படி கழிக்கிறாய் என்று வாதத்தை வைத்து விட்டால் செய்தது சரி ஆகி விடுமா.பதினெட்டு வருடங்கள் அவர் எழுதி வந்தாலும் அச்சில் தனியொரு புத்தகமாக வெளி வருவது இது தானே முதல் முறை.

பதினெழு கதைகளில் ஆறு கதைகள் தேறும் என்று பார்த்தால் அது தேர்ச்சி பெற என்ன சதவீதம் வேண்டுமோ அந்த அளவுகோலை அது தாண்டுகிறது.

ஜெனீபர் கதை பிடித்திருக்கிறது என்று சொன்ன நீங்கள் அதே மாதிரி ஒரு மெலோ டிராமா வகையான கதையை தான் முந்தைய பதிவில் குசலம் என்று எழுதி இருந்தீர்கள்.போன தலைமுறையும் அடுத்த தலைமுறையும் என்றுமே உறவு கொண்டாடும் என்று ஒரு வரியில் முடிய வேண்டியது ஒரு கதையாக மாறியிருந்தது.தயவு செய்து அதில் வந்த பின்னூட்டங்களை நம்பி விட வேண்டாம்.நம்ப மாட்டீர்கள் என்று தெரியும்.எல்லா கதையுமே நாம் எதிர்பார்ப்பது போல் இருந்தால் தான் நூறு சதவீத வெற்றி கிட்டும் என்றால் அது என்றுமே நடக்காது.

பல காலம் சமைக்கிறோம் ஒரு நட்சத்திர விடுதியில் இருந்து நம் சமையல் திறமையை காட்ட ஒரு வாய்ப்பு வந்தால் மறுப்போமோ.இப்படி ஒரு சின்ன அளவுகோலை நீங்கள் உதாரணமாக காட்டாமல் இசையமைப்பாளர்,தலைமை அதிகாரி,திட்டகுழு தலைவர் என்று என்றுமே நடக்காத ஒன்றை உதாரணமாக காட்டுவது நிச்சயம் உங்கள் வாதத்திறமையை காட்டுகிறது.

நூறு சதவீதம் முழுமையாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.மக்கள் மறந்திருப்பதை லேசாக தொட்டுக் காட்டினால் போதும் அது பெரிய வெற்றியை அடையும் என்பதை சமீபத்தில் வந்த தமிழ்ப்படம் செய்து காட்டியது.இதுவே தொடர்ந்து லொள்ளு சபா ஒளிபரப்பாகி கொண்டிருந்தால் அந்த படமும் இன்னொரு வெள்ளிக்கிழமை படமாக மாறி இருக்கும்.அதை தான் தயாரிப்பாளராக தயாநிதி செய்து காட்டினார்.அதே கதை தான் பரிசலின் புத்தகத்தில் பதிப்பாளருக்கும் வாசகர்களுக்கும் நடந்திருக்கிறது.

புத்தகத்தை வாங்கி படித்தப் பின் பத்திரமாக வைத்திருந்தால் அது அந்த புத்தகத்தின் வெற்றி என்று நான் ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் அது பழைய புத்தகம் விற்கும் கடைக்கே வரக் கூடாது என்றால் அது நடக்கவே நடக்காது.சுஜாதாவின் புத்தகத்தையும்,கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தையும் நான் பழைய காயலான் கடையில் பார்த்திருக்கிறேன்.அதற்காக அந்த புத்தகம் தோல்வி என்று அர்த்தமா.

சினிமாவை விமர்சனம் செய்யும் நீங்கள் என்ன ஒழுங்கா என்று என்னை கேட்டால் நான் எந்த அறிமுக இயக்குனர் படத்தையும் கிழிப்பதில்லை.அது மாதிரி அடுத்த புத்தகம் வெளியீட்டின் போது நீங்கள் இதை செய்து இருந்தால் நானும் என் பங்கிற்கு ஒரு ஜால்ராவை எடுத்துக் கொண்டு வந்திருப்பேன்.நல்லவேளை நெடுநாள் கழித்து தான் இந்த விமர்சனத்தை எழுதி உள்ளீர்கள்.முதலிலேயே எழுதியிருந்தால் எல்லோரும் உங்கள் பார்வையிலேயே படித்திருப்பார்கள்.பழைய புத்தகக் கடைக்கு நிறைய புத்தகம் சேர்ந்திருக்கும்.

இதில் மொத்தமாக எனக்கு பிடித்தது 2008ம் ஆண்டு இறுதியில் அவர் பதிவின் மூலமாகத்தான் உங்களை அறிந்து கொண்டேன்.பாரபட்சமில்லாத உங்களுடைய நேர்மையான விமர்சனம் பிடித்திருக்கிறது.மற்றபடி மஞ்சள் துண்டு மளிகைகடை,சுற்றறிக்கை என்பதில் உடன்பாடு இல்லை.இது முதல் முயற்சி என்பது தான் உண்மை.

அடுத்த எதிர்வினை கூட உங்களுக்கே எழுதலாம்.வேண்டுமானால் கேபிள் சங்கரின் புத்தகத்துக்கு விமர்சனம் எழுதலாம்.

கொஞ்சம் கிரிக்கெட்,கொஞ்சம் சர்ச்சை

ரவீந்திர ஜடேஜா இந்த முறை ஐ.பி.எல் போட்டியில் இருந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.இது இராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவு என்று சொல்வதை விட பலத்த அடி.காரணம் அவர் வேறு அணிகளுக்கு மாற பேரம் பேசினார் என்பது தான் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.தடை அமலுக்கு வந்ததும் கூப்பாடு போடாமல் நேற்று கூப்பாடு போட்ட அந்த அணிக்கு ஒரு மிதி.அவர்கள் குற்றம் சாட்ட்டுவது மும்பை இண்டியன்ஸ் மேல்.அவர்கள் தான் பேரத்தை ஆரம்பித்தார்கள் என்று.அவர்களை ஒன்றும் செய்யவில்லையே.இந்த கேள்விக்கு நானே பதில் சொல்கிறேன்.பணம் படைத்தவனை யாரும் ஒன்றும் சொல்வதில்லை.அவன் பேச்சை கேட்டு ஆடுபவனுக்கு தான் முதல் ஆப்பு அடிக்கப்படும்.இதுக்கு தான் சொல்றது இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படவே கூடாது.மீறி ஆசைப்பட்டால் உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா கதை தான்.

யூசுப் பதான் எட்டு ஓவர்கள் நின்றால் போதும் நாங்கள் ஜெயித்து விடுவோம் என்று ஷேன் வார்ன் சொன்னார்.எனக்கு அதை படித்து விட்டு சிரிப்பு தான் வந்தது.நான் பார்க்கும் போதும் யூசுப் பதான் பதிமூன்று பந்துகளில் பதினெழு ரன்கள்.பார்க்க பிடிக்காமல் இறங்கி வந்து விட்டேன்.நான் வந்தப்பின் ருத்ரதாண்டவம் தான் நடந்திருக்கிறது.அவர் அவுட்டாகி விட நான்கு மேட்ச் காலி.கடைசி வரை யூசுப் நின்றால் தான் இது மாதிரி போட்டிகளில் வெல்ல முடியும் என்று வார்ன் சொல்ல வேண்டும்.

சென்னை சூப்பர்கிங்ஸ் மறுபடியும் ஒரு வடையைக் கோட்டை விட்டு விட்டது.சதீஷ் மும்பை இண்டியன்ஸ் அணியில் விளையாடுகிறார்.நேற்று அவரால் தான் அந்த வெற்றி கிடைத்தது.சென்னை அணியினர் ஸ்ரீகாந்தின் மகனை செலக்ட் செய்தால் இப்படி தான் ஆகும்.அருமையான ஒரு ஆட்டக்காரரை நாம் இழந்து விட்டோம்.உடனே பேரத்தை ஆரம்பித்து சதிஷையும் தடை செய்து விட வேண்டாம்.தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் யூசுப் சரியாக ஆடவில்லை.இந்த முறை அதை நிவர்த்தி செய்வார் என்பது நிச்சயம்.ரோகித் சர்மா அடித்த ஷாட் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது.பத்து ரூபாய் மெட் மேட்ச் ஆடபவன் கூட ஒழுங்காக ஆடுவான் என்பது தான் உண்மை.

மைக்கேல் க்ளார்க் ஆஸ்திரேலிய துணைக் கேப்டன்.நியூசிலாந்து உடனான போட்டியில் ஆளைக் காணவில்லை.என்னாச்சு எதாச்சு என்று விசாரித்து பார்த்தால்.அவருடைய காதல் அம்மணியின் படம் நிர்வாண கோலத்தில் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளதாம்.உடனே கல்யாணத்தை நிறுத்த டவுசரை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.யார் எடுத்தது என்று பிங்கில் பேட்டி தந்துள்ளார்.அவருடைய காதலராம் 2005 வருடம் இருந்த காதலராம்.கேஸ் போடப் போகிறாராம்.நான் சொல்வது ஒரு விஷயம் தான்.அவன் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் இந்த மாதிரி சமயத்தில் கேமராவில் போட்டோ எடுப்பதை தடுக்க வேண்டும்.அவன் இது மாதிரி சமயத்தில் போட்டோ எடுத்தாலே யோக்கியன் கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து.(நெட்டில் போட்டோ கிடைக்காத வருத்தத்தில் இப்படி சொல்கிறான் என்று பின்னூட்டம் வந்தால் கிளார்க் அடுத்த வருடம் உலகப் கோப்பையில் ஆடும் போது அவர் அடிக்கும் பந்து சொன்னவர் வாயிலே வந்து விழும் என்று சாபம் இடுகிறேன்.)

சைமண்ட்ஸ் கூட லாரா பிங்கிலின் முன்னாள் காதலர் தான்.இதில் எழுந்த முட்டல் மோதல் தான் பின்னாள் சைமண்ட்ஸின் ஒழுக்கயின்மைக்கே காரணமாக அமைந்தது.பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தின் போது கிளார்க் தான் கேப்டன்.அது பிடிக்காமல் சைமண்ட்ஸ் எங்கோ சுற்றித் திரிய ஆப்பு அடித்து விட்டார்கள்.நல்ல வேளை சைமண்ட்ஸ் அந்த படத்தை எடுக்கவில்லை.இல்லை படித்துறையில் பாவாடை நாடா திருடிய கேஸும் சேர்ந்து அவர் மேல் சுமத்தியிருப்பார்கள்.

பிரித்தியின் முன்னாள் காதலர் பாம்பே டையிங் ஒனர் தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்து உதை வாங்கினார்.அம்மணியுடன் சுற்றினார் என்று வந்த சந்தேகத்திலேயே யுவராஜ் சிங்கிற்கு கேப்டன் பதவி காலி.பிரித்தி இருக்கும் ஏரியாவில் குடியேறினாராம் யுவராஜ்.இப்படி எல்லாம் செய்வதால் அவர் விளையாடுவதில்லை என்று அண்ணனிடம் இருந்த பதவியைப் பிடிங்கி சங்ககாராவிடம் கொடுத்து விட்டார்கள்.பாஸ் நீங்களும் கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் செய்ய வேண்டாம்.பிறகு மகிளாவிடம் பிடிங்கி கொடுத்து விடுவார்கள்.

Saturday, March 13, 2010

நாய் சேகர் குமுதம்

வெகு ஜன பத்திரிக்கையில் கும்தம் என்றுமே இரண்டாவது இடத்தில் தான் இருந்திருக்கிறது.விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் எப்படி சன்னிலும் கலைஞர் டிவியிலும் உல்டா செய்வார்களோ அப்படி தான் குமுதமும் செய்யும்.ஆனந்த விகடன் செய்வதை எல்லாம் செய்வார்கள்.சில சமயம் அதற்கு மிஞ்சியும் நிற்பார்கள்.உதாரணம் ஒரு நடிகையின் கதை,ஒரு நடிகனின் கதை என்றெல்லாம் தொடர் வரும்.எதிர்ப்பு தாங்காமல் பாதியில் விடுவார்கள்.

சுகபோனந்தா ஆனந்த விகடனில் எழுதும் போது போட்டிக்கு இந்த நித்தியானந்தாவை இறக்கினார்கள்.ஓ பக்கங்கள் ஆனந்த விகடனின் நிறுத்தப்பட்டதும் குமுதம் அதை எடுத்து கொண்டது.

ஞானி வித்தியாசமாக எழுதுவார்,சிந்திப்பார் என்று அவரே தான் சொல்லி கொள்ள வேண்டும்.எத்தனையோ பெண்களின் மானம் வீடியோவில் ஏற்றப்பட்டுயிருக்கிறது.அப்பொதெல்லாம் அவர்களுக்கு கடிதம் எழுதாதவர் ரஞ்சிதாவுக்கு மட்டும் எழுதுவார்.நாடோடி தென்றல் காலத்தில் ரஞ்சிதாவையும் அட்டைப் படத்தில் போட்டவர்கள் தான் இந்த குமுதம்.ஏன் இப்பவும் நான் என் கடமையை தான் செய்தேன் என்று அட்டைப் படத்தில் போட்டு விற்பனை செய்தார்களே.அவர்கள் மேல் எல்லாம் வழக்கு தொடுக்க சொல்லவில்லையே.நக்கீரனாவது தனது தளத்தில் தான் இந்த காட்சிகளைக் கூவி விற்கிறது.குமுதம் எனக்கு மெயில் அனுப்பி வீடியோவைப் பார்க்க சொல்கிறது.எது அதிகப்பட்ச உரிமை மீறல் கீறல் என்று ஞானி முடிவு செய்து கொள்ளுங்கள்.இல்லை நீங்கள் உங்களை யாராவது அப்படி அழைத்து விடுவார்களோ என்று நினைத்து சாருவுக்கு ஒரு பெயர் வைத்தீர்களே.அந்தப் பொருள் உங்கள் மூளையில் அப்பி விட்டது என்று எடுத்து கொள்ளலாம் தானே.

எப்படியும் கல்லா கட்டுவார்கள் என்று பழைய பதிவில் சொல்லியிருந்தேன்.யார் நித்தியானந்தருக்கு எழுதி தந்தார் என்றும் இதில் இருக்கிறது.எல்லோரும் சாருவை அடிக்கிறார்கள்.தப்பில்லை.அதே அளவு குமுதம்,ஆ.வி இரண்டையும் கேட்க வேண்டும்.

இன்று சில மாதங்களுக்கு முன் அரசு பதிலால் கட்டிப் புரண்ட நீங்கள் பத்திரிக்கை விற்க அவரை வைத்தே வியாபாரம் செய்வது உங்களுக்கு வேண்டுமானால் பெரிய புத்திசாலித்தனமாக இருக்கலாம்.ஆனால் இது நாய் சேகர் சொன்னது போல் திரிஷா இல்லை என்றால் திவ்யா கதை தான்.அதுவும் இல்லையென்றால் நயன்தாரா என்று சொல்வீர்கள் நானும் என் காசை இழக்க வேண்டும்.

பேசாமல் ஞானியை வைத்து சாருவையும்,சாருவை வைத்து ஞானியையும் அடித்து கொள்ள செய்யுங்கள்.இரண்டு பத்திரிக்கைகளும் விற்கும்.

குமுதம் நித்தியைப் பார்த்து - "பயபுள்ள எப்படி கோர்த்து விடப் பாக்குது.." அந்த பக்கமாக வரும் சாருவைப் பார்த்து "ஏய் சின்னப்பையா வா வந்து டிச்சு கொடு.."

சாரு - "அதெல்லாம் வேண்டாம்பா.."

இரும்புத்திரை - "யூரின் டாங்க் உடையாம குமுதம் திருந்தாது போல.."

இப்படி ஒரு நாள் நடக்கும்.அன்று நீங்கள் மொத்தமாக புறக்கணிப்படுவீர்கள்.தயவு செய்து அந்த வீடியோ இருக்கிறது,இந்த வீடியோ இருக்கிறது என்று யாருக்கும் மெயில் அனுப்ப வேண்டாம்.தேவையென்றால் அதையும் நானே தேடி எடுத்து கொள்வேன்.தனிமனித உரிமை மீறல் என்று ஞானி சொன்னாரே.இந்த கீறல் எல்லாம் அதில் வராதா.

Friday, March 12, 2010

எனக்கு பிடித்த பெண்கள்

அகல்விளக்கு எனக்கு பிடித்த பெண்கள் தொடர் பதிவு எழுத அழைத்து விட்டு யார் அந்த பெண்கள் யாரு என்று வட்டத்தில் கேட்டிருந்தார்.எப்படியும் சொந்தமில்லாத பத்துப் பெண்கள் நம் வாழ்வில் இல்லாமலா போய் விடுவார்கள்.அடித்து விடலாம் என்று பார்த்தால்

தொடர்பதிவின் நிபந்தனைகள் தடுக்கிறது

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.

வரிசை முக்கியம் இல்லை.

ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

1.இராஜேஸ்வரி

இவங்க தான் எனக்கு படிப்பு சொல்லி குடுத்தாங்க.எனக்கு தான் படிப்பு ஏறல.உடனே சி பிரிவுக்கு மாத்தி விட நான் அழுது அடம் பிடித்து அவங்க வகுப்பில் திரும்ப சேர்ந்தேன்.அதனால் சி பிரிவு ஆசிரியைக்கு என் மேல் கோபம்.ஒரு ஐந்து வயசு பையனுக்கு இவ்வளவு அடமா என்று.என் நேரம் அடுத்த வருசம் அவங்க என் க்ளாஸ் டீச்சரா வந்தாங்க.இராஜேஸ்வரி மிஸ் ரொம்ப தைரியமாய் தலைமை ஆசிரியரை எதிர்த்ததில் இன்னும் பிடித்து போனது.

2.நதியா

இன்னமும் ஏனோ பிடித்திருக்கிறது.பத்ரியின் படத்தின் நீட்சியான எம்.குமரன் படம் ஓடியதே இவருக்காகத் தான் என்றால் அது ஆச்சர்யமேயில்லை.நதியா கம்மல்,வளையல் என்று ஒரு டிரெண்ட் செட்டராக இருந்த பெண்.அந்த படத்தில் அசின் இறந்திருந்தால் கூட நான் வருத்தப் பட்டிருக்க மாட்டேன்.

3.குந்தவை நாச்சியார்

இராஜ ராஜ சோழனுக்காக அண்ணையே கொன்றர் என்ற சர்ச்சைகள் இருந்தாலும் இவரை பிடிக்க காரணம் காதல். பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகன் அது நிச்சயம் வந்தியத்தேவன் தான்.நந்தினி,நண்பனின் தங்கை என்று பலர் வந்தியத்தேவனை விரும்பினாலும் குந்தவையின் காதலில் தான் ஒரு அழுத்தம் தெரிந்தது.

4.ஷோபா டே

அறுவது வயதிலும் இளமையாக எழுதும் எழுத்தாளர்.கங்குலி சட்டை அவிழ்ப்பு சாகசத்தைப் பற்றி இவரிடம் கேட்டப் பொழுது கங்குலிக்கு உடம்பு பத்தாது என்று சாதாரணமாக சொன்ன பெண்மணி.சொந்த வாழ்வின் தோல்விகள் எல்லாம் அவரின் எழுத்துகளுக்கு உரமாக அமைந்தது என்றே நான் நினைக்கிறேன்.

5.ஸ்டெபி க்ராப்

எத்தனை எத்தனை டென்னிஸ் வெற்றிகள்,எத்தனை எத்தனை காதல் தோல்விகள்.இவருடன் யார் மோதினாலும் அவர்கள் தோற்றுப் போக வேண்டும் என்று வேண்டி கொள்வது உண்டு.மார்டினா ஹிங்கிஸ் அதிரடியாக நுழைந்து இவருக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.குதிரை வால் கொண்டையைப் பார்க்கும் போதெல்லாம் ஸ்டெபி க்ராப் ஆடுகளத்தில் ஓடி விளையாடுவது ஞாபகம் வரும்.

6.ஜென்னி

காரல் மார்க்ஸை விட வயது அதிகம்.அந்த காலத்திலேயே ஒரு விண்ணைத் தாண்டி வருவாயா காதல்.இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன் அந்த படம் பிடிக்காமல் போனதற்கு.வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் காதல் எப்படி எல்லாம் ஆட்டிவித்தது என்றும் அதனால் மார்க்ஸின் கனவிற்கு எந்த பங்கமும் வராமல் வறுமையில் வாழ்ந்த இரும்பு பெண்மணி.

7.கோல்டா மேயர்

இஸ்ரேல் நாட்டின் பிரதமர்.மூனிச் ஒலிம்பிக் கொலைகளுக்குப் பிறகு அவர் எடுத்த நடவடிக்கை நிச்சயம் தடாலடி தான்.மூனிச் படத்தில் பிரதமராக நடித்த பெண்ணின் நடிப்பைப் பார்த்து கொஞ்சம் மிரண்டு தான் போனேன்.எப்படி அந்த சமயத்தில் இருந்திருப்பார் என்பது கொஞ்சம் கண் கூடாகவே தெரிந்தது.

8.கர்ணம் மல்லேஸ்வரி

சிட்னி ஒலிம்பிக்கில் கொஞ்சமாக இருந்த மானத்தையும் காற்றில் பறந்து விடாமல் காப்பாற்றியவர்.அவரை அந்த போட்டிக்கு தேர்வு செய்யும் போது தான் எத்தனை விமர்சனங்கள்.வெங்கலப் பதக்கத்தைக் கொண்டு வாயை அடைத்தவர்.

9.மேரி க்யூரி

போலானியம் கண்டுப்பிடித்த பிறகு சொந்த வாழ்வில் வந்த சரிவால் எல்லோராலும் விமர்சிக்கப் பட்டாலும் அடுத்த நோபல் வாங்கி விமர்சனங்களை விமர்சித்தவர்.ரேடியத்தின் கதிர்வீச்சின் பாதிப்புகளால் இறந்து போன,நாம் இழந்த திறமைசாலி

10.ஜெயலலிதா

எந்த அளவுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு பிடிக்கவும் செய்யாது.ஓட்டுக்காக அவர் அடித்த பல்டிகள் அவர் போட்ட சட்டமான ஆடு வெட்ட கூடாது என்று சொல்லி விட்டு பின் மாறியது கொஞ்சம் அதிகமாகவே இடித்தது.தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனால் அது அசட்டுத் தைரியம் என்று நிரூபிக்கும் போது தான் கோபம் வரும்.

நான் அழைக்கும் நபர்கள்

சங்கர்

ஜெகநாதன்

அதி பிரதாபன்

லோகு

Thursday, March 11, 2010

பின்னூட்ட அரசியல்

பொதுவாக நான் பின்னூட்டம் இடுவதை விட நிறைய படிப்பது தான் வழக்கம்.காரணம் எல்லா பதிவுகளும் ரீடடில் தான் படிப்பேன்.வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதை விட நிறைய பதிவுகள் எழுதுவது தான் வழக்கம்.காரணம் நான் ஒரு முக்கா சோம்பேறி. தப்பித் தவறி ஏதாவது பின்னூட்டம் இட்டால் அது டிவிட்டர் வரை கொண்டு செல்லப்பட்டு மிதி விழுகிறது.பின்னூட்டம் அரசியலை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அருமை,சூப்பர்,ஸ்மைலி,மீ த பர்ஸ்டு என்று இருக்கும்.அது வந்து போனதற்கு அடையாளம் என்று தெரிந்து கொண்டேன்.யாராவது பெரிய பதிவர்கள் உங்கள் பதிவை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போது தான் மீ த பர்ஸ்டு அருமை தெரியும்.

பதிவுகளில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தாலும் ஏதாவது எதிர்கருத்து வரும் போது பாய்ந்து பதில் சொல்வது வழக்கம்.மற்றவர்கள் தப்பாக எடுத்து கொண்டால் என்ன செய்வது இருக்கவே இருக்கு நன்றி என்று போட்டு விட்டு அவருக்கு விரிவாக பதில் சொல்லி அடித்து கொள்வது உண்டு.நான் மட்டும் தான் இப்படி இருக்கிறேனோ என்ற சந்தேகம் இல்லை எல்லோருமே இப்படி தான் இருக்கிறார்கள் என்று உற்றுக் கவனித்து தெரிந்து கொண்டேன்.

முதல் ஐந்து இடத்தில் வரும் பின்னூட்டங்கள் தான் ஆதாரமாக இருக்கும் அடுத்து வரும் எல்லா பின்னூட்டங்களுக்கும்.ரீடரில் காலையிலே பதிவு படித்து விட்டு பின்னூட்டம் யோகித்து வைத்து இருப்பேன்.எனக்கு முன் யாராவது சொல்லி இருப்பார்கள்.சோர்வுடன் போடாமலே திரும்பி விடுவது வழக்கம்.

கமெண்ட் மாடரேஷன் வைப்பதில்லை.அதை படித்து ரீலிஸ் பண்ண சோம்பேறித்தனம் தான் காரணம்.அப்படி இருக்கும் போய் என்னுடைய பின்னூட்டம் எங்கே காக்கா தூக்கிப் போய் விட்டதா என்று சண்டை போடுவார்கள்.சமீபத்தில் அப்படி சண்டையின் முடிவில் பார்த்தால் அவர் வேறு பதிவில் போட்டு விட்டு இந்த பதிவில் கேட்டுயிருக்கிறார்.

நல்ல பதிவுகள் என்று நான் நினைத்திருக்கும் பதிவுகள் எல்லாம் காத்தாடும்.தம்பியிடம் குடுத்து படித்து பின்னூட்டம் போடு என்று சொன்னதில் இருந்து அவன் நிறைய படிப்பதேயில்லை போலும்.உடனே அடுத்த பதிவே யாராவது இயக்குனரை பிடித்து வம்புக்கு இழுத்தால் காலர் கிழியும் அளவிற்கு பின்னூட்ட அடிகள் விழும்.

பஸ்ஸில் ஏறியிருக்கும் எல்லோரும் ஓடி வாங்க.பின்னூட்டம் போட ஆள் கம்மியாக இருக்கு.டெம்ப்ளேர் பின்னூட்டம் போடவே மாட்டேன்.வேண்டும் என்றால் சொல் என்று சொல்லியே எனக்கு டெம்ப்ளேட் பின்னூட்டம் மேல் வெறுப்பு வருமாறு செய்த நாடோடி இலக்கியன் சீக்கிரம் பதிவு போட வேண்டும்.நான் போய் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட வேண்டும்.இது தான் என்னுடைய ஆசை.

மீ த பர்ஸ்டு

:-))))))))))))))

:-((((((((((((

அருமை

இது கட் காப்பி அடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கட்டும்.

Wednesday, March 10, 2010

கடவுள் எப்படி உருவானார் (அ) உருவாக்கப்பட்டார்

சமயத்தில் சில கிடுக்குப்பிடி ஆசாமிகளிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கியதுண்டு.இல்லை அவர்கள் என்னிடம் மாட்டி விழியையே பறி கொடுக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.என் பக்கம் தோல்வி வரும் நிலையிருந்தால் நிச்சயம் ஒத்துக் கொள்வேன்.ரொமப நேரம் வாதிடுபவன் முட்டாள் என்று எனக்கு சில சமயம் தெரிந்தாலும் இன்னும் முட்டாளாக வாதிட்டு இருக்கிறேன்.

அப்படி என்னை விழி பிதுங்க வைத்த கேள்விகள்

முருகனுக்கு ரெண்டு மனைவி.அவர்களுக்கு வாரிசுகள் இல்லையா.

புராணங்கள் ,இதிகாசங்களின் படி பார்வதியே எதிர்த்து பேசினாலோ,அல்லது தவறு செய்தாலோ பூலோகத்தில் பிறந்து சாபம் தீர தவம் இருக்கிறார்.சந்தேகம் வந்தால் சீதை தீக்குளிக்கிறார்.அது எல்லாம் சொல்லி தருவது ஆணாதிக்கமா.

இந்த மாதிரி சமயத்தில் சிக்கி விட்டோமே என்று தவித்தாலும் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் பொருட்டு அவர்களிடம் என்றுமே ஒரு நெருக்கம் இருக்கும்.

நித்யானந்த ராஜசேகர் விவகாரம் வந்தப்பின் இதே கேள்விகள் அனல் பறந்தது.நண்பர் சொன்னார் "இணையம்,தொழில் நுட்பம் என்று வளர்ந்தப் பின்னும் இது மாதிரி ஆட்களை கடவுள் என்று சிலர் சொல்கிறார்கள்.நம்பவும் ஆட்கள் இருக்கிறார்கள்.இணையம் இல்லாத காலத்தில் ஆபிரகாம் லிங்கன் இறந்த செய்தி உலகம் முழுக்க தெரிய பல மாதங்கள் ஆனது.அந்த காலத்தில் மூட நம்பிக்கைகளும் கொடி கட்டி பறந்து இருக்கும்.."

"எனக்கு புரியவில்லையே.." என்று சொன்னேன்.

"நாடு பிடிக்க வந்த டச்சு,போர்த்துகீசியர்கள்,ஆங்கிலேயர்கள்,பிரான்ஸ் நாட்டவர்கள் எல்லாம் முதலில் குறி வைத்தது கடலோரம் வாழும் மக்களை தான்..".கோவா,புதுச்சேரி என்று ஆரம்பித்துஇன்னும் சில இடங்களை சொன்னார்.

தலையை நன்றாக ஆட்டி வைத்தேன்.

"அவர்கள் எல்லாம் ஆதிக்கம் செலுத்த முடியாத மக்களாகவும்,நிறைய விஷயத்தில் பின் தங்கியும் இருந்தார்கள்.அவர்களை குறி வைத்து இரும்பால் செய்த அவர்கள் வழிபடும் சிலையை தண்ணீரில் போட்டுக் காட்ட அது மூழ்கி விட்டதாம்.பிளாஸ்டிக்கில் செய்த அவர்கள் கடவுளின் சிலையை தண்ணீரில் போட அது மிதந்ததாம்.பிறகென்ன மதமாற்றம் தான்.." சொல்லும் போதே எனக்கு உணர்ச்சிப் பொங்கியது.

"வாழ்வு நிலையில் முன்னேற மதமாற்றம் தப்பில்லையே.உதாரணம் ஏ.ஆர்.ரஹ்மான்.." என்று நான் ஆரம்பிக்க அவர் மேலும் தொடர்ந்தார்.

"அது தான் விஷயம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சிவன்,முருகன் என்று மனிதர்கள் இருந்திருப்பார்கள்.அவர்களை கடவுள் என்று சிலர் தூக்கி வைத்து ஆடியிருப்பார்கள்.உடனே சிலை வழிபாடு,மந்திரம் என்று ஆரம்பித்து இருப்பார்கள்.."

"எப்படி இவ்வளவு உறுதியாக சொல்ல முடியும்.." விடாமல் நானும் விடாமல் கேட்டேன்.

"துவாரகை என்ற நகரம் குஜராத் கடலோரம் மூழ்கியிருக்கிறதே,அதை ஆண்டவர் கிருஷ்ணர் தானே.அப்படியென்றால் அவரும் மனிதர் தான்.நாம் இப்போழுது அவரை வணங்குகிறோம்.."

"அப்ப இந்திரன்,அக்னி,வாயு,வருணன் எல்லோருமே மனிதர்களா.." என்று கேட்டு விட்டு கிடுக்குப்பிடி போட்டதாக நானே நினைத்து கொண்டேன்.

"நிச்சயம் மனிதர்கள் தான்.நெருப்பு கண்டுப்பிடித்த காலத்தில் அதை அணைந்து விடாமல் பார்த்து கொள்வார்களாம்.அது அணைந்து விட்டால் அடுத்து மின்னல்,காட்டுத்தீ என்று ஏதாவது இயற்கையாக நெருப்பு உருவாகும் வரை காத்திருக்க வேண்டும்.அதனால் நெருப்பு அணைந்து விடாமல் யாராவது காவல் இருப்பார்கள்.ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக பின்னால் அது மாறியிருக்கும்.அந்த நபர் அக்னி என்று அழைக்கப்பட்டிருப்பார்.இதே வழி முறையில் தான் பூசாரி பையன் பூசாரி ஆன கதை எல்லாம் வந்தது.." இப்படி எப்படி பால் போட்டாலும் அடித்தார்.

எனக்கு தலை விடாமல் சுத்திக் கொண்டிருந்தது.அந்த வேகத்தில் வார்த்தைகள் வெளியே வந்து விட்டது."தேவர்கள்,அமிர்தம் என்பது எல்லாம் பொய்யா.."

"நிச்சயம் பொய் தான்.கஞ்சி காய்ச்சி குடித்திருப்பார்கள்.அமிர்தம் என்பது அதன் பெயராக இருக்கும்.எதிர் அணியில் இருந்து எவனாவது கூட்டத்தோடு கூட்டமாக க்லந்து வாங்கி குடித்திருப்பான்.கோபத்தில் கொன்றிருப்பார்கள்.அது ராகு,கேது என்றாகி விட்டது.."

இவ்வளவு நடந்த பிறகும் சனி பகவானை பற்றி கேட்க ஆசை தான்.காதில் வழிந்த இரத்தத்தால் அதை கேட்கவில்லை.

அவர் விடாமல் தொடர்ந்தார்."கிரேக்கப் புராணத்தை எடுத்து கொள்.நம் மாதிரி அக்னி,வருணன்,வாயு என்று ஒவ்வொரு இலாகாவிற்கும் ஆட்கள் உண்டு.கடவுள் எனக்கு தெரிந்து விட்டார் என் குடும்பத்திற்கு மட்டும் காட்சியளிப்பார் என்று டிவியில் சொல்வார்கள்.அதை பற்றி சொல்லட்டுமா.." என்று கேட்க

நான் கை எடுத்து கும்பிட்டப் பிறகே விட்டார்.கடைசியாக என்னை பார்த்து கேட்டார்."இனி கோவிலுக்கு போவ.."

"ஆமாம் போவேன்.சுண்டல்,கேசரி,புளியோதரை என்று தந்தால் போவேன்.." என்று சொல்லும் போதே ஆளை காணவில்லை.ஒரே கோஷ்டியில் உள்ள ஆள் என்று நினைத்து விட்டாரோ என்று அவருக்கு காத்திருந்தால் கையில் கேசரியோடு வருவது தெரிந்தது.

பாய்ஸ் படத்தில் செந்தில் சொல்வது ஞாபகம் வந்தது."இன்பர்மேஷன் இஸ் வெல்த்..".நான் அதை அவரிடமிருந்து கேசரியைப் பிடுங்கத் துரத்திக் கொண்டிருந்தேன்.

லீடர் தெலுங்கு பட விமர்சனம்

இந்த பதிவில் எந்த நேரத்தில் இப்படி சொன்னேனோ தெரியவில்லை.அது தான் நடந்திருக்கிறது.

லீடர் மொக்கையாக இருந்தால் ஜன நாதனை வெளுத்ததைப் போல இவரையும் வெளுக்கலாம்.ஆந்திராவில் ஆட்டோ பஞ்சமாம்.(சுமோ வருமா..)


சாதாரண அரசியல் கதை.வாரிசு உரிமையை நிலை நாட்டும் கதை.ரானா - வெங்கடேஷ்,நாக சைதன்யாவை அடுத்து களமிறங்கிருக்கும் வாரிசு.முதல் பந்தில் சிக்ஸ் அடிக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக ஓடியே மூன்று ரன் எடுத்துள்ளார்.காரணம் அவரை தவிர எல்லோரும் கொஞ்சம் திராபைகளாக தெரிந்தார்கள்.அழகான விக்கெட் கீப்பராக இரண்டாம் பாதியில் வரும் முதல் கதாநாயகி.ரன்னராக முதல் பாதியில் கோலோச்சும் இரண்டாம் நாயகி.சுமன்,கோட்டா சீனிவாசராவ்,சுஹாசினி என்று சீனியர்கள் இருந்தாலும் அடித்து ஆட நாயகனுக்கு மட்டும் தான் வாய்ப்பு.தோனி மாதிரி சச்சினுக்கு வாய்ப்பே கொடுக்காமல் வெளுத்து கட்டுகிறார்.

எப்படியும் நான் வெளுக்கத் தான் போகிறேன்.சின்ன வரியில் முடித்து விடுகிறேன்.சேகர் கம்மூலா நிறைய ஷங்கர் படம் பார்த்திருப்பார் போல.முதல்வன்,சிவாஜி என்று கலந்து கட்டி அடித்து இருந்தாலும் வலுவான் காட்சிகள் இல்லாத காரணத்தால் படம் தள்ளாடுகிறது.

படத்தின் ப்ளஸ்கள்

1.நாயகியை வைத்தே அரசியலில் காய் நகர்த்துவது.பெண்ணால் தான் சிம்மாசனங்கள் ஆட்டம் காண்பது என்பதை அப்படியே திருப்பி இருக்கிறார்கள்.

2.நீலக் கலர் சட்டை கொடுத்து சண்டைக்கும் பாட்டுக்கும் தனியே நேரம் எல்லாம் ஒதுக்கவில்லை.

3.யதார்த்தமான வசனங்கள்.(அவ கையில் நிறைய பூ) இதில் லூ சேர்த்து கிண்டல் அடிக்க முடியவில்லை.

4.சிவாஜியில் சேர்த்த கருப்பு பணத்தை ஏ.வி.எம் நிறுவனத்திடம் இருந்து பிடுங்கி படம் எடுத்தது.

5.சமகால அரசியல் நிகழ்வுகளை கொண்ட கதை.இன்னும் விளக்கமாக முன்பே காட்டியிருந்தால் ஜெகன் மோகன் ரொட்டி ஆட்சியைப் பிடித்து இருக்கலாம்.

6.நாயகி முத்தம் கேட்டும் கொடுக்காமல் இருந்த நாயகன் .

இனி மைனஸ்

1.படத்தின் லேசான திரைக்கதை,பார்த்த படங்களை நினைவு படுத்துவதால்.

2.இசை - அது போன படத்தையே கண் முன் காட்டியதால் (ஹேப்பி டேஸ்)

பாக்கலாம்.பாக்காமலும் இருக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் யாரும் ரீமேக் செய்ய மாட்டார்கள்.நான் இன்னொரு காதல் படத்தை சேகர் கம்மூலாவிடம் கேட்கிறேன் தருவார் என்ற நம்பிக்கையில்.

Tuesday, March 9, 2010

நானும் மனுஷன் தான் - சாமியாரின் கவிதை

பெண் வாசனையில்லாத வீட்டில்
பிறந்தவனுக்கு தெரிந்ததெல்லாம்
சேலையும் தாவணியும் தான்
முப்பத்திரண்டு வருட
பிரம்மச்சர்யம் கலைக்க வந்தவளுக்கு
விதவிதமாக உடுத்தி தெளிந்தேன்
எல்லாம் முடிந்தவுடன்
என் ஆடைகளை அணிந்தாள்
ஆண் வாசனையில்லாத
வீட்டில் பிறந்தவளாம்
கடைசி வரை யாருக்குமே
தெரியாமலே போய் விட்டது
புதிய உடையின் பெயர்.

Monday, March 8, 2010

பிராண்ட் நேம்களின் தாக்கம்

ஒரு முறை கல்லூரி உணவகத்தில் பெப்ஸி குடித்து கொண்டிருந்தோம்.எங்களுக்கு வேண்டாதவன் வந்ததைப் பார்த்து விட்டு பெப்ஸியில் தண்ணீர் ஊற்றினான்.நிறம் மாறி விட்டதால் சமன் செய்ய குடித்துக் கொண்டிருந்ததை அப்படியே துப்பி விட்டான்.வந்தவனும் எடுத்து குடித்து விட்டான்.காரணம் பெப்ஸி என்னும் பிராண்ட் நேம் மற்றும் நண்பர்கள் மீதிருந்த நம்பிக்கை.

இந்த முறையை தான் சினிமாவில் கடைப்பிடிக்கிறார்கள்.எச்சிலை தந்தாலும் பரவாயில்லை.என்னால் சொல்ல முடியாத ஒற்றை எழுத்து கழிவை பொட்டலமாக கட்டி கலர் தூவி ஜிகினா தாள்களில் தருகிறார்கள்.நம்பிக்கையால் நாமும் எடுத்து கொள்கிறோம்.பிறகு சிலாகிக்கிறோம்.அப்படி சொல்லாதவனை விமர்சிக்கிறோம்.

இருபது வருடங்களுக்கு முன் விக்ரமன்,செல்வமணி,உதயகுமார் எல்லாம் பிராண்ட் நேம் தான்.அவர்களும் அதை தான் செய்தார்கள்.காணாமல் போய் விட்டார்கள்.இன்று கௌதம் மேனன் என்ற ஜிகினா வேலை செய்து பிராண்ட் நேமாக மாறியிருக்கிறது.வி.தா.வவில் ஏ.ஆர்.ரகுமான் பாடலகள் எல்லாம் உலகத்தரம் என்று சொல்லும் போது எனக்கே அடக்க மாட்டாமல் சிரிப்பு வருகிறது.இந்தியில் ஏ.ஆர்.ரகுமான் அளவுக்கு இசையில் கலக்கும் எத்தனையோ பேர் உண்டு உண்டு.தெலுங்கில் மிக்கி.ஜெ.மேயர் பாடல்கள் எல்லாம் நாம் கேட்டிருக்க மாட்டோம்.அதுதான் இங்குள்ள பிரச்சனையே.

இரசிப்பதற்கும் திட்டுவதற்கும் நாம் இது மாதிரி பிராண்ட் நேம் பின்னால் தான் அலைகிறோம்.யோகியை காப்பியடித்து எடுத்தார் என்று அமீரை கிழித்து எறிந்த நாம் அதே டூட்ஸியைக் காப்பியடித்து பிப்ரவரி 26ம் தேதி வந்த அழுக்கன் படத்தை விட்டு விட்டோம்.காரணம் நாம் பிரபலத்துக்கு தான் பல்லாக்கு தூக்குவோம்.அழுக்கன் என்ற படம் வந்ததாவது தெரியுமா.

எத்தனையோ வெற்றி படங்கள் கொடுத்த இராம் கோபால் வர்மாவையே அவர் தோல்விகளை தழுவும் போது அடி வெளுக்கிறார்கள்.கிழித்து தோரணம் கட்டுகிறார்கள்.நாம் செய்கிறோமோ என்றால் இல்லை அதோடு மட்டுமில்லாமல் செய்பவனையும் சேர்த்தே தடுக்கிறோம்.

எப்படி இரட்டை வேஷம் போடுவோம் என்பதற்கு உதாரணம் ஆர்யா,பரத் என்று வளர்ந்து வரும் நடிகர்களை சாதாரணமாக அவன்,இவன் என்று பேசும் நாம் நேரில் பார்த்தால் சார்,மோர் என்று கும்பிடு போடுவோம்.இங்கே அப்படியெல்லாம் கிடையாது யாராகயிருந்தாலும் பெயர் சொல்லி தான் அழைக்கிறார்கள்.ஒரே மாதிரி எப்பவும் இருக்கிறார்கள்.

நேரில் ஒரு மாதிரியும் பதிவுலகத்தில் ஒரு மாதிரியும் நடக்கிறோம்.அதற்கு உதாரணம் இட்லி வடையில் பெயரை மறைத்து கொண்டு நித்யானந்தர்,சாரு பற்றி எழுதிய ஏதோ ஒரு பிரபலம் என்று நினைத்து கொண்டிருக்கும் பிராபலம்.ஏன் பெயர் தெரிந்தால் பிராண்ட் நேம் காணாமல் போய்விடுமா என்ன.முகத்தை மறைத்து கொண்டு அனானியாக கருத்து சொல்வதை விட பொத்தி கொண்டு இருக்கலாம்.

மலையாள மேனியாவை தமிழ் சினிமாவில் திணிக்கும் மேனன் ஒரு படம் கூட அங்கு இயக்க மாட்டார்.காரணம் காசு கிடைக்காது.இந்த மாதிரி படங்கள் எல்லாம் அங்கு ஒரே நாளில் வெளுத்து விடுவார்கள்.படம் நன்றாக இல்லை என்றால் முதல் காட்சி பார்த்து விட்டு வருபவர்கள் அடுத்த காட்சிக்கு காத்து இருப்பர்களை கலைத்து விடுவார்கள்.நம் ஆள் தான் நீ சொன்னால் ஆச்சா நானும் பார்த்து விட்டு தான் சொல்வேன் என்று பார்த்து விட்டு ஆமாம் நல்லாயில்லை என்று சொல்வார்கள்.அதனால் தான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் தமிழ் நாட்டிலும்,ஆந்திராவிலும் அதிகம் இருக்கிறார்கள்.கேரளாவில் பிரேம் நசீர் பப்பே வேகவில்லை.அரசியலில் சொல்கிறேன்.

பதிவுலகத்திலும் இது தான் நடக்கிறது.ஒரு வேளை எனக்கும் ஏதாவ்து பிராண்ட் நேமிருந்தால் அதில் தொய்வு வரும் போது நான் பதிவு எழுதவே மாட்டேன்.தொய்வுகள் ஏற்படாமல் இருக்கத்தான் மீள்பதிவுகள் இடுவதில்லை.

இரசிகர் மன்றமே வேண்டாம் என்று சொல்லும் பிரகாஷ்ராஜிற்கு நான் இரசிகன்.வெளிப்படையாக ஒரே மாதிரி இருக்கும் யாருக்கும் நான் இரசிகன் தான்.நான் ஏன் உன்னை காதலித்தேன் என்று நிஜ வாழ்க்கையில் ஒரு பெண்ணிடம் திரும்ப திரும்ப கேட்டால் சைக்கோ என்று சொல்லி விடுவார்கள்.

சொல்ல மறந்து விட்டேன்.எனக்கு பாக்ஸிங் தெரியும் என்று சொன்னவரை பள்ளியில் அவருடன் கூட படித்தவர் துரத்தி துரத்தி அடித்தது ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது.இதை சொல்வதற்கு சினிமாவை பார்த்து கற்பனையில் வாழாதீர்கள்.நம்மிடம் வம்பிழுக்கும் ஒருவனை கூட நம்மால் திருப்பி அடிக்க முடியாத கையாலாகாத சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் இங்கிருக்கும் எல்லோரும்.