Sunday, March 28, 2010

தேங்க்ஸ் மா - அமீரும்,அங்காடித் தெருக்களும் காட்டாத உண்மைகள்

ஸ்லம்டாக் படம் தான்  மும்பையின் கோர முகத்தைக் கிழித்து காட்டியது என்று இதுவரை நினைத்து இருந்தேன்.அது எவ்வளவு பொய் என்பது இந்த படத்தில் தான் தெரிந்தது.உண்மைகளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கொஞ்சம் லேசாக கண் கலங்கி விட்டது.நான் பிராண்ட் நேம் பின்னால் ஓடிக் கொண்டிருப்பவன் என்று இன்னொரு முறை இந்த படம் பார்த்ததும் என் முகத்தில் அறைந்த உண்மை.

சாம்ஸ் பட்டேல் தான் சிறந்த குழந்தை நட்சத்திரமாக இந்த ஆண்டு தேசிய விருதுகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது தான் ஒரே ஒரு ஆறுதல்.தலைப்பைப் படத்தில் காட்டவே ஒரு அதிர வைக்கும் காட்சி.கோளை வடிந்த முகத்துடன் நடித்த அந்த சிறுவனுக்கு இந்த தேசிய விருதெல்லாம் சாதாரணம் என்று தான் தோன்றியது.

நகரத்தில் வாழ திருடுவது ஒன்று தான் அனாதை ஆக்கப்பட்ட குழந்தைகளின் வழி என்பது போல வாழும் சிறுவர்கள் - முனுசுபாலிட்டி,கட்டிங்,சோடா.ஆட்களை எப்படி குறி வைக்கிறார்கள் என்பதை ஒரு விளையாட்டுப் பொருள் வைத்து காட்டுகிறார்கள்.அப்படி திருடி மாட்டிக் கொள்ளும் முனுசுபாலிட்டியை ஒழுக்கம் சொல்லி தரும் விடுதியில் அடைக்கிறார்கள்.வார்டன் தப்பாக நடக்க முயல அதிலிருந்து ஓடி ஒரு நல்லவரால் காப்பாற்றப்பட,இரவே தப்பிக்க முயல்கிறான்.அந்த சமயம் வாசலில் ஒரு குழந்தையை விட்டு விட்டு செல்லும் பெண்ணைப் பார்க்கிறான்.குழந்தையை நாய் உணவாக்க முயல,வேறு வழியில்லாமல் குழந்தையுடன் தப்பிக்கிறான்.

குழந்தையை அம்மாவிடம் சேர்த்து விடும் வேட்கை தான் மிஞ்சி நிற்கிறது.விளைவு நண்பர்கள் குழுவுடன் தேடுதல் வேட்டை தொடங்குகிறது.அந்த குழந்தைக்கு பசியாற்றும் புத்திசாலிதனத்தில் கொஞ்சம் உறைந்து தான் போனேன்.கோவில்,திருநங்கை,குழந்தைதையைத் தொலைத்த ஒரு அம்மா(இதன் நீட்சியாக அண்டி கிறிஸ்ட் என்ற படத்தைப் பார்த்தேன்),கார் டிரைவர்,சமூகத்தில் பெரிய பதவி வகிக்கும் "நல்லவன்",விபச்சார விடுதி,மருத்துவமனை,ஐடி கம்பேனி,அனாதை இல்லம் என்று பயணித்து முடியும் போது அதில் தெரிந்த உண்மைகள் இப்படி எல்லாம் நடக்குமா என்று முன்னரே யோசித்து பார்த்ததையை எல்லாம் பகடி செய்கிறது.

கிரிக்கெட் செய்திகளுக்கு கீழே வரும் செய்தியைப் பார்த்தவுடன் அன்றாடம் இந்த ஐ.பி.எல் எப்படி எல்லாம் என் நேரத்தை உறிஞ்சுகிறது என்பதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.ஐ.பி.எல் என்று சொல்வதை விட கிரிக்கெட் என்ற பதம் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

கடைசியில் சொல்லும் செய்திகள் எல்லாம் உண்மையாக இருக்கவே கூடாது என்று நினைத்து கொண்டேன்.படம் பார்க்கும் இரண்டு மணி நேரத்தில் இந்தியாவில் பதினொரு குழந்தைகள் அனாதை ஆக்கப் படுகிறதாம்.ஒரு நாளில் மட்டும் 240 குழந்தைகள்.நாய்களுக்கும்,குப்பைத் தொட்டிகளுக்கும் உணவாகிறது என்று நினைக்கும் போது இந்த காதல்,கள்ளத் தொடர்பு மீதெல்லாம் எரிச்சல் வருகிறது.ஒரு காண்டம் உபயோகிக்க தெரியாத நாய்களுக்கெல்லாம் என்ன மயித்துக்குடா காதல்.

அந்த அனாதை சிறுவன் பனிரெண்டு ஆண்டுகளாக அம்மா ஒரு நாள் வருவாள் என்ற நம்பிக்கை நாலே நாளில் ஒரு குழந்தையால் உடைத்து போகும் போது ஏற்படும் வலி அம்மா என்று உருகும் நமக்கு  தெரியாது  தான்.

கடைசி காட்சியில் இருந்த அதிர்ச்சி இன்னும் மறையவில்லை.அங்காடித் தெரு பார்த்து உரைந்தவர்கள் எல்லாம் இந்த படத்தைப் பார்த்தால் அது ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றும்.அமீர் இந்த படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் எப்படி குழந்தையை வைத்து படம் எடுப்பது என்று.தயவு செய்து இந்த படத்தை எல்லாம் பார்ப்பதோடு நிறுத்தி கொள்ளலாம்.ரீமேக் செய்ய வேண்டாம்.

அனானி ஜேம்ஸ் - பின்னூட்டம் வரவில்லை என்றால் ஏன் எழுத வேண்டும் என்று கேட்டீர்களே.யாரும் பதியாமல் விட்டதை என்றாவது நான் பதிவேன்.எனக்கு இந்த பின்னூட்டம்,ஓட்டு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.பின்னூட்டம் வரவில்லை என்றாலும் நான் எழுதுவதை நிறுத்த முடியாது.இதை படித்தால் அந்த படத்தைப் பார்க்கவும்.

14 comments:

butterfly Surya said...

என்னுடைய பார்க்க வேண்டிய பட்டியலில் இருக்கிறது.

ஆனால் அங்காடி தெருவை இந்த திரைப்படத்துடன் ஏன் ஒப்பீடு செய்கிறீர்கள் என்று புரியவில்லை. ஒவ்வொரு கதையும் நிகழ்வுகளும் ஒவ்வொரு பதிவே.

ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தது என்று தான் நினைக்க தோன்றுகிறது.

பகிர்விற்கு நன்றி.

இரும்புத்திரை said...

அங்காடித் தெரு அளவிற்கு இது யார் கண்ணிலும் படவில்லையே.இப்படி கொஞ்சம் சீண்டினால் இந்த படத்தில் என்ன தான் இருக்கிறது என்று பார்க்க மாட்டார்களா என்ற ஏக்கம் தான்.தவிர நீங்கள் சொல்வது போல அது வேறு இது வேறு என்பதில் எனக்கு உடன்பாடு தான்.

சங்கர் said...

உங்க அம்மாவுக்கு எதுக்கு தேங்க்ஸ்?
அவுங்க தான் பாக்க சொன்னாங்களா?
எல்லாம் சரி, படத்தோட பேர் என்ன?

இரும்புத்திரை said...

விளங்கிரும்.விடிய விடிய கதை கேட்டு விட்டு ______________________________________.படத்தின் பெயரே தேங்க்ஸ் மா தான்.

மணிஜி said...

//எல்லாம் சரி, படத்தோட பேர் என்ன?/

அதானே !

சரவணகுமரன் said...

முதலில் எந்த மொழி படம், எப்ப வந்த படம் என்று கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, பாஸ்?

கூகிளில் தேடியதில் ஹிந்தி படம் என்று தெரிந்துக்கொண்டேன்.

//அங்காடித் தெரு அளவிற்கு இது யார் கண்ணிலும் படவில்லையே.//

அது ஹிந்தி படம். இது தமிழ் படம். :-)

சரவணகுமரன் said...

பட அறிமுகத்திற்கு நன்றி

இரும்புத்திரை said...

படம் பார்த்த தாக்கத்தில் அடித்ததில் சில் விஷயங்கள் விடுப்பட்டு இருக்கிறது.ஹிந்தி படம்.சென்சார் செய்யப்பட்டது 2009.வெளியானது இந்த வருடம்.படம் பெயர் தேங்க்ஸ் மா.

இரும்புத்திரை said...

அப்புறம் சொல்ல மறந்துட்டேன் சரவணகுமரன்.இந்த படம் பார்க்க சப் டைட்டில் கூட தேவையில்லை என்று தான் நினைக்கிறேன்.சில இடங்கள் தவிர நமக்கு காட்சியிலே புரிய வைக்கிறார்கள்.

மோனி said...

பகிர்ந்துகிட்டதுக்கு
தேங்க்ஸ் பா..

இளந்தமிழன் said...
This comment has been removed by the author.
இளந்தமிழன் said...

அங்காடி தெரு பார்த்தேன்... ரொம்ப நல்லா இருந்தது... இதுவரை யாராலும் சொல்லப்படாத மனிதர்களை பற்றிய படம். நீங்க சொன்ன படம் இன்னும் நான் பார்க்கவில்லை.

இரண்டும் ஒரே மாதிரி படங்கள் என்றால் ஒப்பிடலாம். ஆனால் அப்படி இருக்காது என்று எனக்கு தோன்றுகிறது.

அங்காடி தெரு - விளிம்பு நிலை மனிதர்களை பற்றிய அருமையான படம்.

Unknown said...

யப்பா, படம் நல்லா இருந்தா நல்ல இருக்குன்னு சொல்லுங்க அதுக்கு ஏப்பு இப்படி அடுத்தவங்கள இழுக்கணும், நீங்க பெரிய உலகப்படத்த எல்லாம் பார்த்த பெரிய ஜீவின்னு நினைப்பு. உங்கள மாறி ஆளுகளுக்கு எவண்டா சிக்குவான்னு திரிங்க முதல்ல இரும்புத்திரையை நல்லா கொண்டுவாங்க அப்புறம் அமீரையும்,வசந்தபாலனையும் பாப்போம் தலைவரே!

இரும்புத்திரை said...

சரிங்க ஆண்டாள் மகன்.இப்படி சொல்வது கூட ஒரு பெரிய ஜீவித்தனம் தான்.முதல்ல உங்க வலைப்பூவை நல்லா கொண்டு வாருங்கள் என்று பதிலுக்கு எனக்கு சொல்லத் தெரியாது.