சேகர் - முதல் படத்திலே அறிமுக இயக்குனருக்கான தேசிய விருது.தெலுங்கு சினிமாவின் பாலா(போராடி வெற்றி பெற்றதில்,நடிகர்களை அறிமுகப்படுத்தியதில்) என்று சொல்லலாம்.சசிகுமாருக்கு முன்னோடி என்றும் சொல்லலாம்.படிச்சது மெக்கானிக்கல்.வேலை பார்த்தது போலாரிஸ். சாதித்தது சினிமாவில்.நான் தெலுங்கு சினிமாவில் பிரமித்து பார்த்த படங்கள் - பிரபுதேவா இயக்கிய முதல் தெலுங்கு படம் (உனக்கும் எனக்கும் என்று வைத்து கொள்வோம்..நாக்கு பெயர் தெளிது),செல்வராகவன் இயக்கிய முதல் தெலுங்கு படம் (யாரடி நீ மோகினி..நாக்கு தள்ளுது), பொம்மரில்லு,கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம், இது போன்ற படங்கள் வர காரணமானவர்.
அமெரிக்காவில் மேல்படிப்பு(கணிபொறியியல்) படிக்க சென்றாலும் கூடவே மாஸ்டர் இன் ஃபைன் ஆர்ட்ஸ் பட்டமும் பெற்றார்.நம்மூரில் இந்த படிப்பிற்கு என்ன சொல்லி தருகிறார்கள் என்று அவர்களுக்கே வெளிச்சம்.இது தெலுங்கு கார பசங்களுக்கே உள்ள துணிச்சல்.ஒரே நேரத்தில் இரண்டு பட்டம்,வேலையே பார்க்காமல் துணிந்து அனுபவம் இருப்பதாக சொல்வது - அந்த துணிச்சல் நமக்கு எல்லாம் வரவே வராது.அது மாதிரி ஒரே நேரத்தில் இரட்டை பட்டம் பெற்ற ஒரு நடிகர் கம் அரசியவாதி - சிரஞ்சீவி.சேகரும் சின்ன வயதில் இருந்து சிரஞ்சீவிக்கு பரம ரசிகராம்.
இவர் படத்தில் பார்க்க முடியாத அம்சங்கள் - வாங்க காசுக்கு மேல நடிக்கிறது,வன்முறை,ஆபாசம்.(அப்ப ஜென்மத்துக்கும் இவர் படத்தை விஜய் ரீமேக் பண்ண மாட்டார்)
முதல் படம் டாலர் ட்ரீம்ஸ் - 16 லட்சம் செலவளித்து பர்ஸ்ட் காப்பி முறையில் அவரே தயாரித்து முடித்தார்.வெளியிடுவதில் தான் சிக்கல். வினியோகஸ்தர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவரே படத்தை ரீலிஸ் செய்கிறார்.(இந்த இடத்தில் நினைவு படுத்தி கொள்ளவும் சேது மற்றும் கிருஷ்ணவேணி திரையரங்கை) அது போல ஒரு திரையரங்கை(ஒரு காட்சிக்கு மட்டும்) வாடகைக்கு எடுத்து ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி டிக்கெட் விற்று படம் 28 நாட்கள் ஓடுகிறது. 20த் சென்சுரி பாக்ஸ் இந்த படத்தை பார்த்து படத்தை நாடு முழுவதும் திரும்ப ரீலிஸ் செய்கிறார்கள்.(இப்படி தமிழில் தப்பிய இரண்டு படங்கள் சேது மற்றும் சித்திரம் பேசுதடி).ஐந்து லட்சம் வரை நஷ்டம்.ஒரே ஒரு ஆறுதல் தேசிய விருது மட்டும் தான்.
பிறகு வழக்கம் போல தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கி முட்டி மோதி பார்த்தும் பலன் இல்லை.(பசங்க - ஆனந்த விகடன் - மிஸ்ஸான வாழை பழம்).அது மாதிரி எல்லா இடத்திலும் உதடுப் பிதுக்கல் தான்.அடுத்த முயற்சி தான் என்.ஃப்.டி.சி(நேஷனல் ப்லிம் டெவலப்மென்ட் கவுன்சில்).அவர்கள் பாதி பணம் போட,இவர் பாதி போட உருவான படம் தான் ஆனந்த்(இந்த படத்தை தமிழில் விஸ்வாஸ் சுந்தர் இயக்கி ஒரு வலி ஆக்கினார்.)
நடிகர்கள் - ராஜா (முறையான நடிப்பு பயின்றவர் - அதனால் தான் ஜெகன் மோகினி படத்தில் நடித்தார்),கமலினி முகர்ஜி.மூன்றாவது படம் கோதாவரி - இதிலும் கமலினி முகர்ஜி.மூன்றாவது படம் சில இயக்குனர்களுக்கு காலை வாரும் அதில் இவரும் ஒருவர் - தமிழில் லிங்குசாமி,ஜன நாதன் இதில் ஒப்பிடலாம்.
அடுத்து எடுத்த படம் தான் ஹேப்பி டேஸ்.இந்த படத்தை தமிழில் எடுக்கிறார்கள்.இனிது இனிது என்று.கண்டிப்பாக கொலை செய்வார்கள்.ஒண்ணும் சொல்வதற்கு இல்லை படம் பாருங்கள்.இதில் நடித்தவர்கள் தான் தமன்னா,வருண் சந்தேஷ்.
அடுத்து தயாரித்த படம் - ஆவக்கா பிரியாணி.அவருடைய உதவியாளர் இயக்கியது.காரணமாக அவர் சொல்வது - நான் ஒரு வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து படம் இயக்க மாட்டேன்.பதிலாக என் உதவியாளர்களை ஊக்கப்படுத்தி படம் எடுப்பேன்.அதையும் நானே தயாரிப்பேன்.(கே.எஸ்.ரவிகுமார் உங்களுக்கு காதில் விழுந்ததா - ஆதவன் முடியலைடா சாமி..)
அடுத்து இயக்கும் படம் லீடர்.ராம நாயுடுவின் பேரனும்,வெங்கடேஷின் அண்ணன் பையனான ராணா நடிக்கிறார்.ஏ.வி.எம் தயாரிக்கிறது.டிசம்பரில் வருகிறது.பார்ப்போம்..இது இவருக்கு ஐந்தாவது படம் - இதில் லிங்குசாமியுடன் ஒப்பிட வேண்டாம்.காரணம் அவருக்கு ஐந்தாவது படம் பீமா.
டிஸ்கி :
இனிது இனிது பார்த்தாலும் தயவு செய்து ஹேப்பி டேஸ் பார்க்கவும்.
லீடர் மொக்கையாக இருந்தால் ஜன நாதனை வெளுத்ததைப் போல இவரையும் வெளுக்கலாம்.ஆந்திராவில் ஆட்டோ பஞ்சமாம்.(சுமோ வருமா..)
Tuesday, November 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
//லீடர் மொக்கையாக இருந்தால் ஜன நாதனை வெளுத்ததைப் போல இவரையும் வெளுக்கலாம்.ஆந்திராவில் ஆட்டோ பஞ்சமாம்.(சுமோ வருமா..) //
வெயிட்டிங் பார் ரிலீஸ் தல...
அப்பால பாருங்க நம்ம ஆட்டத்த...
நண்பா எப்படி இப்படி இப்படி வித்யாசமாய் எழுதுகிறாய் என்று தெரியவில்லை ....அந்த இயக்குனர் படம் தெரியும் அவரைப்பற்றி தெரியாது ............ஹாப்பி டே கேள்விப்பட்டுருகிறேன் நண்பா ....உன் அறிவு விசாலமானது
ஆமாம் கதை இருந்தால் விஜய் எப்படி நடிப்பார்
மூன்றாவது படம் கோதாவரி
i watched this movie.. movie was really good . this movie was mentioned in kumuduam "arasu pathilgal" at that time.. bec of this only , i went n enjoyed this movie
//மூன்றாவது படம் சில இயக்குனர்களுக்கு காலை வாரும் அதில் இவரும் ஒருவர் - தமிழில் லிங்குசாமி,ஜன நாதன் இதில் ஒப்பிடலாம்.//
இதை மறக்கும் உத்தேசமே கிடையாதா
பாவம் பேராண்மையை விட்டு விடுங்களேன்
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் சேகர் கம்மூலா.. மிக இயல்பான காட்சிகளோடு படத்தை எடுத்து செல்பவர்.. ஞாயிற்னறு லீடர் ஆடியோ ரிலீஸ் பார்த்தீர்களா..? ஹீ இஸ் சோ ஹம்பிள். அவருடய் அசிஸ்டெண்ட் இயக்கிய இன்னொரு படம் தான் விநாயகுடு, வில்லேஜ் லோ விநாயகுடு..
கேபிள் சங்கர்
பேராண்மையை விட மாட்டீங்களா... ஹாப்பி டேஸ் படத்தின் subtitle எங்களுக்கு மனப்பாடம்...
நல்ல பதிவுங்க..சேகர் தமிழ் படங்களை பார்க்காம இருக்கணுமே..
-Toto
www.pixmonk.com
Post a Comment