Wednesday, March 31, 2010

கலைஞரை நான் வெறுக்கிறேன்

நான் கலைஞரை வெறுக்கிறேன்.நேற்றிலிருந்து தான் வெறுப்பு தொடங்கியது.ஒரே நாளில் அளவில்லாமல் பெருகி விட்டது.காரணம் பெண்ணாகரம் தேர்தலா என்றால் அதுவும் இல்லை.இப்படி எல்லையில்லாமல் வெறுப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.அது விஜய் சொன்ன வார்த்தைகள் தான்.த்ரீ இடியட்ஸ் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது என்று சொல்லி விட்டார்.இதை தடுக்க யாருமே இல்லையா.

இதற்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தமா என்று கேட்காதீர்கள்.இருக்கிறது.ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால் எல்லோருக்கும் ஹிந்தி தெரிந்திருக்கும்.நாற்பது வருடம் கழித்து பூமராங் தாக்க வந்திருக்காது.யாராவது சொல்லுங்களேன்.தலைப்பைத் தவிர அவருக்கு அந்த படத்தில் எதுவும் பொருந்தாது என்று.

விஷப் பரீட்சை செய்யலாம்.விஷம் வைக்கிற பரீட்சை செய்யலாமா.இதை பார்ப்பதை விட அமீர் கான் ஏதாவது நாட்டில் குடியுரிமை வாங்கி கொண்டு போய் விடலாம்.சரி அவருக்கு எந்த கேரக்டர் தான் பொருந்தும் என்று யோசித்ததில் பொம்மன் இரானி,சவுத் இண்டியன் கதாபாத்திரம் என்று வந்தாலும் அவர்களும் நன்றாக நடித்திருந்தார்கள்.அப்பறம் என்ன கதாபாத்திரம் கொடுக்கலாம்.சத்யராஜிடம் சத்யன் கதை சொல்வாரே அந்த குழந்தையே நீங்க தான் சார் என்று அது மாதிரி பிறக்கும் வைரஸின் பேரன் கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கலாம்.குழந்தை மட்டும் தான் சரியாக அவர் அளவிற்கு நடித்திருந்தது.

சுறா விமர்சனம் எழுத வேண்டும் என்று விஜய்யின் அன்பு ரசிகர்கள் என்னை கேட்டார்கள்.நான் இப்போ எல்லாம் உலக சினிமாக்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை என்று சொல்லி விட்டேன்.

இனி மேலாவது ஹிந்தி படிக்காமல் இருக்காதீங்க.படிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை.அப்படி ஏதாவது கொலை முயற்சி நடந்தால் அதற்கு ஆதரவு தெரிவித்து விடாதீர்கள்.அப்புறம் கலைஞரை என்னை மாதிரி அதிகம் பேர் வெறுத்து விடுவார்கள்.இப்படி செய்தால் கூட தி.மு.கவின் ஓட்டு வங்கி குறையும் என்று 2011 முதலவருக்கு தெரிந்திருக்கிறது.

5 comments:

IKrishs said...

சுத்தி வளைத்து மொக்கை போடும் அரவிந்தனை இப்போது முதல் நானும் வெறுக்கிறேன் ..
:)

லோகு said...

இந்தி படிக்காட்டி என்ன? சப்-டைட்டிலோடு படம் பார்த்தா போச்சு..

Vipasana said...

அமீர் கான் அவர்களின் personal mail id ஐ இணையத்தில் தேடி எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்களேன் mr iron wall... நாம் அனைவரும் டாக்டர் விஜய் அவர்களின் அருமை பெருமைகளை அமீருக்கு மெயிலிட்டால் நடக்கப் போகும் அபத்தம் தவிர்க்கப்பட சிறிதேனும் வாய்ப்பிருக்கிறது அல்லவா...(சீரியசாகத் தான் சொல்லுகிறேன் நண்பர்களே...!)

...இடியட்சில் விஜய் ... நினைத்து பார்க்கவே கொடூரமாக இல்லையா... விஜய்யின் ரசிகர்களுக்கோ விஜயக்கோ எனது வார்த்தைகள் ஆத்திரத்தை ஏற்படுத்தினால்அனைவரின் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் பணிவுடன்...

அமீரின் தளத்திற்கு செல்ல விரும்புபவர்களுக்கு...
www.aamirkhan.com

யாரையும் புண்படுத்துவது ஒருபோதும் என் நோக்கமல்ல ; தனது பழைய தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்வது தான் சகோதரர் விஜய்யின் நோக்கமென்றால் நான் அவருக்காக பெருமை படுகிறேன்... லகானுக்கு முன்பாக அமீரும் விஜய் போலத் தான்... யார் கண்டது நாளைக்கு பதிவுலகமே விஜய்யை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினாலும் ஆடும் ...

Unknown said...

ஆமிர்கானுக்குத் தமிழ் தெரியாத வரைக்கும் பிரச்சனை இல்லை.

என்ன ஒரு கஷ்டம்.. இந்திக்காரங்களுக்கு நடுவுல வேலை பாக்குற ஆளுங்க, அந்த இந்திக்காரங்க ஒரு வேளை இந்த புதுப் படத்தைப் பாத்துட்டு செய்யற கிண்டலை சகிச்சிக்கிட்டுப் போவணும்..

(அரவிந்து வருத்தப் படுறதுக்கு இப்ப காரணம் தெரிஞ்சிருச்சி.. :))

Nathanjagk said...

தலைப்புக் காந்தம் நீங்க!
சுறா வந்ததே தெரியாமல் இருந்தேன் (நிஜமா கலீஜ் ஸாரி ரிலீஸ் ஆயிடுச்சாபா?)
இனிமேல்தான் சுனாமியே வரப்​போகுதுன்னு தெரியுது.

நான் நடிச்சா தாங்க மாட்டே.