Thursday, March 4, 2010

சாரு,குமுதம்,ஆனந்த விகடன்,நித்யானந்தன்

கார்ப்பரேட் சாமியார்களை உருவாக்கி விட்டது யார் என்று கொஞ்சம் பின்னால் சென்று (பத்து வருடம்) பார்த்தால் அதில் பெரும்பங்கு வகிப்பது குமுதமும் ஆனந்த விகடனும் தான்.ஆனந்த விகடன் தொடங்கி வைத்தார்கள்.குமுதம் அதை தொடர்ந்தார்கள்.அவர் பெயர் சுகபோனாந்தா.மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று தொடர் எழுதியவர்.அதை வைத்து நன்றாக கல்லா கட்டியவுடன் போட்டிக்கு குமுதம் நித்யானந்தாவை இறக்கினார்கள்.

குமுதத்தின் நடுப்பக்கம் ஈர்த்த அளவிற்கு இந்த தொடர் ஈர்க்கவில்லை.நன்றாக எழுதுகிறார் என்று சொன்னதால் அவர் எழுதியது இல்லை என்று நிரூபிக்க அதை எழுதியது யார் என்று விசாரித்து பார்த்தால் மறைந்த பிரபல பேச்சாளர்,அரசியல்வாதி வலம்புரி ஜான் என்று தெரிந்து கொண்டோம்.சாமியார்களை கொலைவெறியோடு விமர்சனம் செய்ய நண்பர் கூட்டமே இருந்தது.அதிலிருந்து நம்பகத்தன்மை போய் விட்டது.அவர் இறந்தப் பிறகு எழுத்தில் தெரிந்த மாற்றமே ஒரு உதாரணம்.

அடுத்து தெரிந்த ஒருத்தன் ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டு குடும்பத்தோடு நித்யானந்தனின் காலை கழுவி கல்யாணம் செய்து கொள்ள, வந்த கோபத்தில் என்னால் குமுதம் வாங்குவதை நிறுத்த தான் முடிந்தது.

அடுத்து ஆனந்த விகடன் கல்கிக்கு விளம்பரம் தருவார்கள்.பிரச்சனை வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று பொடி எழுத்தில் எங்காவது பொறித்திருப்பார்கள்.அதை எல்லாம் யாருக்கு தேடிப் படிக்க நேரமிருக்கிறது.கல்கியால் தான் நாங்கள் இந்த நிலைக்கு வந்தோம் எண்டு பக்தர்கள் பேட்டியில் நமக்கே மனது சலனப்படும்.

மூன்று வருடங்களுக்கு முன் தம்பி அவசரமாக அழைத்து ஆனந்த விகடன் படிக்க சொன்னான்.அதுவும் கல்கியின் விளம்பரத்தை.காரணம் அதில் பேட்டிக் கொடுத்தவர் எங்களுக்கு தெரிந்தவர்.என்னிடம் வாகனமே கிடையாது.கல்கியால் தான் இந்த நிலைக்கு வந்தோம் என்று சொல்ல கொஞ்சம் ப்ளாஷ்பேக் விரிந்தது.அவர் கடன் தொல்லையால் இரண்டு கார்களை விற்று விட்டு கடைசியாக இருந்த காரையும் விற்கப் போக,அப்பா தான் அவரை விற்க விடாமல் தடுத்தது.அவர் என்னவென்றால் கார் வாங்கியதே கல்கியின் மகிமை என்கிறார்.இன்னொரு முறை எரிச்சல்.ஆனந்த விகடன் காலி.

இப்படி ஏமாற்றுபவர்களுக்கு அருள் புரியும் கல்கி,நித்யா ஏமாற்று அவதாரங்களும் அதற்கு குடைப் பிடித்த பத்திரிக்கைகளையும் என்ன சொல்ல.இன்று குமுதத்தில் நித்யாவின் காம லீலைகள் என்று கல்லா கட்டுகிறார்கள்.நித்யா எப்படி இருந்தாலும் கல்லா கட்டி விடுவார்கள் குமுதம்.

காசு குடுத்து படிப்பதால் குமுதம்,ஆனந்த விகடன் இரண்டு பத்திரிக்கைகளையும் திட்டாமல் விட்டு விடுகிறோம்.

அதனால் நான் சாருவுக்கு குடுக்கும் யோசனைகள்.

குமுதம் போல நீங்களும் பே சைட்டாக மாற்றி விடுங்கள்.காசுக்கு காசு.திட்டும் மிச்சம்.

அடுத்து ஏதாவது சாமியாரை நீங்கள் கொண்டாட வேண்டும்.அவர் எதிலாவது மாட்டிக் கொள்வார்.நானும் அந்த சாமியாரை நாலு சாத்து சாத்துவேன்.கல்வி நிறுவனங்கள் நடத்தி விட்டு ஆண்டவர் என்று டிவியில் டகால்டி அடிப்பவரை நீங்கள் முயற்சி செய்யலாம்.

அடுத்து உங்கள் புதிய தளத்தில் பின்னூட்டப் பெட்டி இருக்கிறது.அதை பணம் செலுத்தி கருத்து சொல்பவர்களுக்கு மட்டும் திறந்து விடலாம்.

வலம்புரி ஜான் கடைசியில் எப்படி உடம்புக்கு முடியாமல் இறந்து போனார்.அப்போழுது இந்த புற்று நோயையே குணப்படுத்தும் ஆ சாமி ஏன் ஒன்றும் செய்யவில்லை.

தப்பு செய்து மாட்டிக் கொண்டவனை கும்பலோடு கும்பலோடு அடித்து விட்டு தப்பித்து கொள்ளும் குமுதம் பத்திரிக்கையைப் போல நீங்களும் காசு வாங்கி கொண்டு வாசகர்களை சேர்த்தால் நாங்களும் உங்களை ஒண்ணும் சொல்ல மாட்டோம்.

இணையமும்,தொலைக்காட்சியும் ஆதிக்கம் செலுத்தாத காலத்தில்,எதிர்வினை செய்ய ஆள் இல்லாத காலத்தில் சாமியாரை வளர்த்து விட்ட பத்திரிக்கைகளை முதலில் அடிப்போம்.சாருவை மட்டும் தான் அடிப்பேன் என்றால் பத்திரிக்கைகள் அடுத்த சாமியாரை உருவாக்கி விடும்.ஒன்றும் தராமல் படிக்கும் சாருவையே இந்த கதிக்கு ஆளாக்கும் நாம் ஏன் காசு வாங்கி கொண்டு நம்மை ஏமாற்றும் பத்திரிக்கைகளை ஒன்றும் செய்வதில்லை.கல் யார் மேல் நிறைய எரிய வேண்டும் இப்போதாவது முடிவு செய்வோம்.

9 comments:

இரும்புத்திரை said...

நக்கீரனுக்கும் ஒரு சாமியார் உண்டு.பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.

வால்பையன் said...

எவ்வளவு நெளிஞ்சாலும் உங்களால, உங்க சாரு பாசத்தை மறைக்க முடியல!

சி.வேல் said...

நக்கீரனுக்கும் ஒரு சாமியார் உண்டு.பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.


ஆட்சி மாறினால்தான்

பொன் மாலை பொழுது said...

சபாஷ் ! சரியான பொட்டி !! வெளுத்து கட்டுங்க !!!

யோ வொய்ஸ் (யோகா) said...

nice ...

இரும்புத்திரை said...

பாசம் என்பதை விட சுய நலம் என்று சொல்லலாம்.அவர் பே சைட் ஆக்கினால் நான் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நான் கோபப்பட்டு அங்கு போவதை நிறுத்தி விடலாம் என்ற நப்பாசை தான் காரணம்.ஒரு நாளைக்கு பதிவு,எதிர்பதிவு,எதிருக்கு எதிர் என்னால முடியல வால்.

சி.வேல் அப்ப அடுத்த வருடம் நடக்கும்.

கக்கு - மாணிக்கம் பாஸ், நீங்க திரியக் கொளுத்திட்டீங்க.நாளைக்கு வெடிக்குதான்னு பார்ப்போம்.

இரும்புத்திரை said...

நன்றி யோகா.ஒருத்தரையும் விடக்கூடாது.

சங்கர் said...

வலையுலகுக்கும் ஒரு சாமியார் உண்டு, அவர் பெயர் அரவிந்தானந்தா,

அடுத்து ஒரு ஆன்மீகத் தொடர் ப்ளீஸ்

Raju said...

வாழ்க வளமுடன்..!

மீ த 9.