Wednesday, September 29, 2010

டோளேண்டா

நீங்க ஏதாவது பதிவில் இருந்து ஒரு பத்தி,அல்லது ஒரு வரி அல்லது ஒரு வார்த்தையை வைத்தே வக்கிரம் என்று முடிவு செய்யலாம்.அதுவே அடுத்தவனும் ஒரு வரியை வைத்து கொண்டு விவாதம் செய்ய முடியுமான்னு  நீங்க கேட்டா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

இப்படி எல்லாம் சொல்றதுக்கு ஆதாரம் இருக்கான்னு கேக்கோணும்.இல்லமலா இப்படி சொல்வாங்கன்னு சொன்னா அடம்பிடிக்கோணும்.மண்டபத்துல எழுதியாவது போடணும்.அப்படி எழுதினா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

மூணு மாசத்து முன்னாடி எனக்கு கொள்கை கிடையாது தீடிர் காற்றழுத்த மாற்றத்தால் நான் மாறினாலோ இல்லை மற்றவர்கள் வேறு காற்றழுத்த மாற்றத்தினால் மாறினால் அப்ப அப்படி சொன்ன இப்ப இப்படி சொல்றன்னு கேட்டா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

உங்களுக்கு வேண்டாதவன் ஏதாவது செஞ்சா கட்டப்பஞ்சாயத்து கூட்டணும்.அதுவே நம்ம ஆதாரம் சிக்கிட்டா வேணும்னா சைபர் கிரைம் போங்க.அங்க செல்லாதுன்னு சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

பழைய வெறுப்புல சான்ஸ் கிடைச்சா கூட்டத்தோட சேர்ந்து வெளுக்கணும் அப்புறம் எவனாவது திருப்பி வெளுத்தா பழைய வெறுப்புன்னு பருப்பு கடைஞ்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

எவனாவது சிக்க மாட்டான்னா காத்து கிடந்து எச்சில் துப்பணும் அதுவே நாம சிக்கிட்டா மறந்து கூட வாயை திறக்கக்கூடாது.அப்படி இருந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

அப்புறம் முக்கியமா நல்லா வெட்கப்படத் தெரியணும்,வேதனை படத் தெரியணும் யாராவது இப்போ வந்து வேதனை படுங்கன்னு சொன்னா நான் அப்படி சொல்லலை என்று சொல்லத் தெரிந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

ஆணாதிக்கத்தை எதிர்க்கிறோம் அப்படின்னு சொல்லணும் யாராவது கவிஜ எழுதுற ஆள் சிக்கினா எப்படி சொத்து வந்தது கிசுகிசு எழுத தெரியோணும் அப்படி தெரிந்தா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

எழுத்திலே ஜாதி துவேஷம் தெரிந்தது அடுத்தவனைப் பாத்து சொல்ல தெரியணும் மத்தவங்க அப்படி சொன்னா இதுல எங்க ஜாதி தெரியுதுன்னு சொல்லணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

இப்படி ஆனதால எனக்கு ஆபத்து ஆபத்துன்னு சொல்லணும்.போட்டோ அனுப்பியிருங்காங்க அதனால எனக்கு ஆபத்துன்னு சொன்னா ஆதாரம் கேட்டு சிரிக்கோணும்.அப்படி சிரிச்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

நல்லா வெட்டி ஒட்டத் தெரியணும்.நாம செய்யலாம்.அடுத்தவன் செஞ்சா வெட்டி ஒட்டினதுன்னு சொல்லோணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

யார் என்ன எழுதினாலும் காத்து கிடந்து மைனஸ் போடணும்.அப்படி அடுத்தவன் போட்டா திட்டோணும்.அப்படி திட்ட தெரிஞ்சா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

போரம்ல நாம யாரைப் பத்து வேணாலும் பேசலாம்.ஐ மீன் ஜார்ஜ் புஷ்,ஒசாமா.ஆனா நம்ம ஆளுங்களை யாராவது பேசிட்டா இப்படி புறம் பேசுறாங்களேன்னு சொல்லோணும்.அப்படி சொன்னா நீங்க தான் அடுத்த டோளேண்டா.

Tuesday, September 28, 2010

புலி வருது

இந்த கதையோட நாயகனே ஒ.மா.ஒ.ச ஒண்டிப்புலி தான்.பெயரைப் பார்த்து அவர் ஒண்டியா புலி பிடிக்க போவாரா என்று கேட்டால் உங்களை பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழியேயில்லை.அது சரி அது என்ன ஒ.மா.ஒ.சன்னு பாத்தா ஒரு மாசத்துக்கு ஒரு சண்டை தான் நம்ம ஒண்டிப்புலி இழுப்பார்.

ஒண்டிப்புலிக்கு முதல் ஜென்மம் எடுத்தவுடனே தெரிஞ்சிப் போச்சி.அவரோட ஏழாவது ஜென்மத்தில் ஏழாவது அறிவை கொண்டு (அதென்ன ஏழாவது அறிவு ஒவ்வொரு ஜென்மத்துக்கும் அறிவு தனித்தானே.எனக்கு இப்படித்தான் சொல்ல வரும்.நோ மோர் கிராஸ் குவெஸ்டீன்ஸ். அப்புறம் எனக்கு கதை கோர்வையா சொல்ல வராது) அவர் பெரிய எளுத்தாளர்,இலக்கியவியாதியா வருவார்னு புரிஞ்சிப் போச்சி.யாருக்கு அவருக்கு தான்.

இலக்கியத்தைப் பற்றி கேளுங்கள்.ஒண்டிப்புலி சொல்வார்.இலக்கியமாக பே.கிறோம்,இலக்கியமாக நடக்கிறோம்,இலக்கியமாக இன்னும் றோம்,ம் என்று தொடர்ந்து கொண்டே போனால் அது ரோம் வரை நீண்டு விடும்.

அவர் கவிதையே கொஞ்சமென்ன நிறைய வித்தியாசமாக இருக்கும்.

குவாட்டர் அடி
குப்புறப் படு
வாந்தி எடு
வாயைத் துடை

இப்படி ஒரே வரியில் எழுத வேண்டியதை நாலு வரியில் எழுதலாம் என்று முதல் ஜென்மத்தில் தெரிந்தோ இல்லை இரண்டாம் ஜென்மத்தில் தெரிந்ததோ அது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத இரகசியம்.

எப்பவுமே இப்படி மொக்கையாகத் தான் எழுதுவாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்றாவது நன்றாக எழுதுவார் என்று இந்த உலகமே வாய் பிளந்து அவர் இருக்கும் திசையில் பார்த்துக் கொண்டு நிற்கிறது.அது மண்டபத்தில் காலாற நடக்கும் போது கிடைக்கும் காவியமா என்றால் அதுவும் பரம இரகசியம்.

தன்னால் மட்டுமே உலக அளவில் யாருமே எழுத முடியாத காவியத்தை எழுதி உலகமே கொண்டாடும் என்று அவர் நம்பிக் கொண்டிருந்த காலக்கட்டம்.அட விடுங்க இப்பவும் அவர் அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்.

அவர் யு.எஸ் போனா ஒபாமா வீட்டுல தான் தங்குவேன்.ஆப்கன் போனா ஒசாமா வீட்டில் தான் தங்குவேன் என்று அடித்து விடுவார்.விசாரித்து பார்த்தால் யு.எஸ்னா அது உளுந்தூர்பேட்டை சந்தாம்.அப்ப ஒபாமா யார்னு ஒரத்தநாடு பாண்டி மாக்கானாம்.இன்னும் ஆப்கன் மேட்டரும் ஒசாமா மேட்டரும் தான் தெரியவில்லை.சக இலக்கியவாதிகள் தமிழ்நாடு முழுவதும் இலக்கில்லாமல் பயணித்தும் கண்டுப்பிடிக்க முடியவில்லையாம்.

யாராவது அவருக்கு முன்னால் புத்தகம் இல்ல துண்டுப் பேப்பர்ல எழுதினாலும் புத்தகம் வாங்கியவர்கள் இந்த விமர்சனத்தை  கேட்டால் தண்ணியில்லாத காலத்தில் துடைத்து வீசும் அளவிற்கு விமர்சனம் செய்வார்.யார்கிட்ட எல்லாம் ஒரத்தநாடு பாண்டி மாக்கான் கிட்டதான்.கேக்கலைன்னா விடவா போறார்னு பாண்டியும் கண்ணத் தொறந்து வச்சிக்கிட்டே தூங்குவாராம்.

இனி அவருக்கு முன்னாடி யாரும் புக் கிக்கு எழுதிடக் கூடாதுன்னு தெளிவா இருக்காராம்.அதுக்கு என்ன பண்ணப் போறார்னு பாத்தா இனி புத்தகம் எழுதப் போவது யார்னு பாத்து அவங்க கிட்ட வம்பு இழுக்க போறாராம்.ஒரே வருஷத்தில் பனிரெண்டுக்கு பேருக்கு மேல புத்தகம் விட்டா வம்பு இழுக்க முடியாதுன்னு சோகத்தில் இருக்கிறாராம் ஒரு மாசத்துக்கு ஒரு சண்டை ஒண்டிப்புலி.பெயரை மாத்தலாமான்னு யோசிக்கிறாராம்.எதுக்கா வம்பிழுக்கத்தான்.

இப்போ அவரை தெரிஞ்சவங்க எல்லாம் வேற வழியால சிரிக்கிறாங்களாம்.எதுக்குன்னா ஒசாமாவோட பாதுகாவலர் எழுதின புத்தகத்தை இவர் விமர்சனம் செய்தால் யாரும் வாங்க மாட்டார்கள் என்று ஒசாமா சொன்னார் என்று சொல்லிக் கொண்டு திரிகிறாராம்.அதே நேரம் ஒபாமா பத்தி வர்ற பதினைஞ்சாம் தேதி ஒரு படம் வருதாம்.அதுக்கும் இவர் தான் விமர்சனம் எழுதணும்னு வெள்ளை மாளிகை அடம் பிடிக்குதாம்.

எங்கப் போறது தெரியாம ஒண்டிப்புலி கூண்டுல மாட்டிக்கிட்டு முழிக்குதாம்.ஆனா விசாரித்து பாத்தா பாஸ்போர்ட் இல்லையாம்.பின்ன இதுக்கு முன்னாடி எப்படி ஒசாமாவையும் ஒபாமாவையும் பாக்க போனீங்கன்னு யாராவது கேட்டா கப்பல் போனதா சொல்லப் போறேன்னு சொல்றாராம்.

நல்லவேளை கண்டம் எல்லாம் பிரிஞ்சிக் கிடக்கு.சேர்ந்து இருக்கா நடந்தே போயிருப்பாரேன்னு பாண்டி மாக்கான் நினைச்சு மயக்கத்தில விழுந்தவர் தான் இன்னும் எந்திரிக்கல.

யாராவது சொல்லுங்களேன்.இந்த இலக்கிய தாகத்தை எப்படி தீர்க்கிறதுன்னு. பாண்டி மாக்கான் பொழச்சுப் போகட்டும்.

Monday, September 27, 2010

ஆதாரம்

1

2

3

4

5

6

7

8

9

10

கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் பி டூ த ஏ டூ த பி டூ த ஏ பாபா

"அமர்..என்னை தெரியுதா.." ஒரு பெண் குரல் கேட்டதும் திரும்பி பார்த்தேன்.அழகாவே இருப்பதாகத் தெரிந்தது.அழகா முக்கியம் அவள் குரல் எனக்கு பிடித்திருந்தது.சற்றே ஆண்மை கலந்த குரல்.அதுவும் ஹஸ்கி வாய்ஸில் பேசியது எனக்கு போதையேற்றியது.

"தெரியல.." என்று சொன்னால் பேச்சு தொடராதோ என நினைப்பு வேறெங்கோ போய் வந்தது.கண் கொஞ்சம் பெரிதாக இருந்தது.இது மாதிரி கண்ணை நான் பார்த்தாக நினைவில்லை.

"என்ன யோசிக்கிற..தெரியலையா.." அவள் சொல்லும் போதே மெட்டி அணிந்திருக்கிறாளா என்று காலை பார்த்தேன்.ஷூ மறைத்திருந்தது.கொஞ்சம் நஞ்சமல்ல ஏமாற்றம்.

"பார்த்தியா.. மறந்துட்ட.." பதில் சொல்லலாம் என்று யோசித்து முடியாமல் அவள் உதடு அசைவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.ஏதாவது துப்பு குடுப்பாளா என்று அவளை இன்னும் நெருக்கினால் பார்க்க துப்பு கிடைக்காது எச்சில் தான் தெறிக்கும் என்பதால் இரண்டடி பின்னால் நகர்ந்தேன்.

"நீ கடைசியா பஸ்ல போகும் பார்த்த பார்வையை நான் இன்னும் மறக்கல.." முதல் துப்பு கிடைத்த சந்தோஷத்தில் பஸ் சம்பவம் எல்லாம் யோசிக்க விழுந்து வாறியது,டிக்கெட் எடுக்காமல் மாட்டி முழித்தது என்று சம்பந்தமேயில்லாமல் ஏதேதோ சம்பவங்கள் காட்சியாய் விரிந்தது.

"இன்னும் ஞாபகம் வரல..என்னை சுத்தமா மறந்துட்ட.." கண்ணில் அலை அடிக்க தொடங்கியது போல் தெரிந்தது.துடைக்க கைக்குட்டை எடுத்து நீட்டி அவள் பார்க்கும் முன் கையை மடக்கி கொண்டேன்.துவைச்சிருந்தால் கொடுத்திருக்கலாம்.

"என்ன பார்த்தா பைத்தியக்காரி மாதிரி இருக்கா.." தலையை ஆட்டினால் கூட சட்டையைப் பிடிக்கும் அபாயம் தெரிந்ததால் தலை மறந்தும் ஆடாமல் பார்த்துக் கொண்டேன்.

"நீ என் வாட்ச் கட்டுறதில்லை..உன் வாட்ச் எப்பவாது உடைஞ்சிருக்கா.." அவள் பேச்சில் சுவாரஸ்யம் இழந்து கொண்டிருந்தேன்.

"எனக்காக விண்ணைத் தாண்டி வருவேன்னு சொன்னது பொய்யா.." கோபத்தில் அவளுக்கு உதடு துடித்தது.எனக்கு நல்ல நாள்ல கூட ரொமண்டிக்கா பேச வராது நான் சொல்லியிருக்க மாட்டேன் என்று உறுதியாக நம்பினேன்.

"அப்போயெல்லாம் கணக்குல செண்டம் வாங்குவ..இப்போ சைபர் தான் வாங்குவ முண்டம்.." கடைசி க்ளூ எனக்காக குடுத்தது போலிருந்தது.

"இனி என் மூஞ்சிலேயே முழிக்காத.." போய் விட்டாள்.ஷிஸ் கான்.

ஏதோ புரிவது போல் தெரிந்தது.விஷயம் தான் முழுமையாக தெரியவில்லை.

கவனத்தை வேறு பக்கம் செலுத்தினேன்.இண்டர்வியூவில் தோற்ற பையனிடம் அவன் நண்பன் சொல்லிக் கொண்டிருந்தான்."இப்போ வந்து எல்லாம் சொல்லு..உள்ள பதில் சொல்லாம கோவில் மாடு மாதிரி தலையாட்டுனா எப்படி வேலை கிடைக்கும்.."

கண்டுப்பிடித்து விட்டேன்.விண்ணைத் தாண்டி வருவாயா ஃப்ரம் மின்சார கனவு.வருசம் 1997.நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன்.மேக்ஸ்ல செண்டம் ஒரு தடவை தான் வாங்கல.ஆற்றாமையில் வாட்ச்சை உடைத்து விட்டேன்.சமாதானப்படுத்த வந்த பெண்ணை திட்டினேன்.பெரிய கண்களாலே ஆறுதல் சொன்னாள்.கடைசி நாள் பஸ்ஸில் வரும் போது அவளை பார்த்துக் கொண்டே வந்தேன்.

"ஜெனிபர்..கிவ் மீ அனதர் சான்ஸ்.." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு "ஜெனிபர்..ஜெனிபர்.." என்று கத்திக் கொண்டே அவளை தேடியலைந்தேன்.

"பாருடா..கடலோரக் கவிதைகள் பார்ட் டூ ஓடுது.." நண்பனை தேற்ற என்னை பகடைகாய்களாக்கி கேலி செய்தவன் மீது பாய்ந்து என் கோபத்தை தீர்த்துக் கொண்டேன்."ஜெனிபர்..ஜெனிபர்.." எண்டு அடிக்கும் போதும் சரி அடி வாங்கும் போது வாய் மட்டும் அவள் பெயரை உச்சரித்து கொண்டிருந்தது.

என்ன முடிவா..சண்டையில் கிழியாத சட்டை,மூத்திர சந்து,ரொம்ப நல்லவன் இப்படி எல்லாம் கற்பனையை அலைய விட வேண்டாம்.

Sunday, September 26, 2010

சீனப்புரட்சி

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாதாம்.ஆனால் யாரும் கடைப்பிடிப்பதில்லை. குழந்தைகளைப் பெற்று கொள்கிறார்கள்.முதல் குழந்தையைத் தவிர பிறக்கும் குழந்தைகளுக்கு பதிவதில்லை.அதனால் கல்வி கிடையாது.வேலை கிடையாது.சம்பாதிக்க வழி. கொஞ்சம் கொஞ்சமாக அரசு இதை புரிந்து கொண்டு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

1989ல் நடந்த மாணவர் புரட்சியில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்று சொல்லப்படுவது - எண்ணிக்கையின்படி. அந்த புரட்சியை நசுக்க டாங்கைக் கொண்டு மாணவர்கள் மீது ஏற்றினார்கள்.இது பற்றி சீனாவில் எந்த இணையதளத்தில் தேடினாலும் கிடைக்காது.

கூகுள் கொண்டு வந்த ஆர்குட்,ப்ளாக் போன்ற சேவையினால் மக்கள் தங்கள் கருத்தை வெளியே சொல்வார்கள் என்று அது தடை செய்யப்பட்டது.

இது ஒரு பெரிய புரட்சி.கோ என்ற தமிழ்ப்படத்திற்கு சீனா செல்ல விசா கேட்டார்களாம்.நாயகன் ஜீவாவுக்கு மட்டும் அனுமதி வழங்கவில்லையாம்.காரணம் பாஸ்போர்ட்டில் அவர் பெயர் அமர் என்று இருந்ததாம்.அது ஒரு முஸ்லீம் பெயராம்.இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் ப்ளாக்கர்கள் பொங்கி எழுந்திருப்பார்கள்.அது சரி சீனாவில் தான் ப்ளாக் கிடையாதே.

தவிர பக்கத்து கிராமத்திற்கு போக வேண்டும் என்றாலும் விசா வேண்டும்.இன்னும் இத்யாதி இத்யாதி அனுமதி வேண்டும்.இதுவல்லவோ புரட்சி.

ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வெல்ல சின்ன வயதிலேயே குழந்தைகளைக் கண்டுப்பிடித்து பெற்றோர்களிடம் இருந்து பிரித்து பயிற்சி செய்ய மட்டும் சொல்லித் தருவார்களாம்.செக்குமாடு சுற்றி வருவது மாதிரி.

புரட்சி கல்யாணம் - இரண்டு விளையாட்டு வீரர்களை (ஆண் - பெண் தான்) திருமணம் செய்ய சொல்வார்களாம்.நீங்கள் திருமணம் செய்தால் உங்களுக்கு பிறக்கும் குழந்தை அதிக திறனுடன் பிறக்கும் என்று காரணம் சொல்வார்களாம்.இப்படி கட்டாயப்படுத்துவது புரட்சி திருமணத்தில் வரும் போல.

வட கொரியா கால்பந்து அணி உலகப்கோப்பையில் தோற்றவுடன் பயிற்சியாளர் சுரங்க வேலைக்கு அனுப்பப்பட்டாராம்.சீனா மாதிரி பிராக்டிஸ் கொடுங்கப்பா.

Saturday, September 25, 2010

காமினியீயீயீயீ (சவால் சிறுகதை)

பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி மைதானத்தில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தோம். எதிரணியினர் இரண்டு கோல் போட்டு விட்டதால் பந்தை அவர்களுக்குள்ளே கடத்தி எங்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்ச தூரத்தில் பெண்கள் ஹாக்கி விளையாடுவதை நிறுத்தி விட்டு ஏதோ சொல்லி சிரித்து கொண்டிருந்தார்கள்.பெட் மேட்ச் முடிந்ததும் காசு எண்ணிக் கொடுக்கும் போது வந்த எரிச்சலில் கோல் கீப்பிங் செய்தவனிடம் போய் எகிறிக் கொண்டிருந்தேன்.

"என்ன _யித்துக்கு விளையாட வந்த..பொண்ணுங்கள வேடிக்கை பார்க்கணும்னா அவளுங்க கூட விளையாட வேண்டியது தானே..ரெண்டு கோல் உன்னால தாண்டா போச்சு.."

"ஏலே என்ன வாய் ரொம்பத்தான் கிழியுது..சிவா சொந்தகாரன்னு பாக்குறேன்..அடிச்சி மூஞ்சத் திருப்பிருவேன்.."

"திருப்பலாம்..பெட் காசைத் தந்துட்டு திருப்பு.." என்று காசு கேட்டு அவன் வாயை அடைத்தேன்.ஹாக்கி விளையாடும் பெண்கள் கூட்டம் எங்களைத் தாண்டி போனதால் இந்த சண்டை நிற்க இன்னொரு காரணமாக இருக்கலாம்.

"என்ன காசு போச்சா..எங்க கூட விளையாடினாலே தோத்துருவீங்க..அது டிஸ்ரிக்ட் சேம்பியன் டீம் அவங்க கூட ஆடினா ஜெயிக்க முடியுமா.." கூட்டத்தில் மறைந்திருந்தவர்களில் ஒருவள் சத்தம் மட்டும் கேட்டது.

"ரொம்ப பேசாதீங்கடி..முடிஞ்சா எங்க கூட விளையாடிட்டு அப்புறம் பேசுங்க.." கோல்கீப்பர் பரந்தாமன் திருவாய் மலர்ந்திருந்தான்.

"எவ்வளவு பெட்.." கோரஸாக சத்தம் வந்தது.

"எவ்ளோ வைக்கலாம்..அம்பது ரூபா" பரந்தாமன் குரல் எனக்கு கிணற்றில் இருந்து ஒலிப்பது போலிருந்தது.

"பரந்தாமா விளையாடாத..என் கிட்ட அம்பது ரூபா தானிருக்கு..அப்புறம் சிக்கன் பக்கோடா சாப்பிட முடியாது.." என்னால் முடிந்த மட்டும் சொல்லிப் பார்த்தேன்.விதி வலியது.

சரி விளையாடலாம் என்று தயாரான போது எனக்கு சாதகமாக அவர்கள் அணியில் பத்து பேர் தானிருந்தார்கள்.இதை வைத்தே குட்டையைக் குழப்ப முடிவு செய்து "அதெல்லாம் சரி வராது.." என்று சொல்லவும் காமினி வரவும் சரியாக இருந்தது.

"சரி காமினி எங்க டீம்..இப்போ விளையாடுவோமோ.." என்று சொல்லி முடிக்கும் அதெல்லாம் முடியாது என்று என் மிச்சமிருக்கும் ரூபாயைக் காப்பாத்துவதிலே நான் குறியாய் இருந்தேன்.காரணம் காமினியை எனக்கு ஏற்கனவே தெரியும்.சிவா இருக்கும் தெருவில் தான் காமினி வீடு.காமினி விளையாடினால் நிச்சயம் நாங்கள் தோற்றுப் போவோம் என்று தெரிந்த காரணத்தால் நான் கூடுதலாக மறுத்தேன்.

"அப்ப தோத்தாங்களின்னு ஒத்துக்கோங்க..விளையாட வேண்டாம்.." அடுத்த கோரஸ்.

காமினி அந்த டீமில் ஆட சிவா கோல் கீப்பராக இருந்தான்.அப்படியும் காமினி ஒரு கோல் அடித்து விட ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் அவர்கள் முண்ணனியில் இருந்தார்கள்.ஆக்ரோசமாக ஆட முடிவு செய்யும் போது மழை லேசாகத் தூற ஆரம்பித்திருந்தது. ஜெயிக்க வேண்டும் என்ற வெறி தான் பிரதானமாக இருந்தது.சாதாரண போட்டிகளில் அனுமதியில்லாத ஸ்கூப் ஸாட்டை அடித்தேன்.பந்தில் இருந்த பிசிறு காமினியின் புருவத்தைக் கிழித்து விட்டது.எல்லார் கவனமும் அங்கே திரும்ப நாங்கள் கோல் அடித்திருந்தோம்.

"ஏய் இது தப்பாட்டம்..இப்படி எல்லாமா ஆடுவீங்க.." கோரஸ் இல்லாமல் தெளிவாக ஒருத்தியின் குரல் கேட்டது.

"அடி எதுவும் படாம இருக்க பல்லாங்குழி தான் ஆடணும்.." பரந்தாமன் கத்தி சொன்னான்.எனக்கும் சிவாவுக்கும் கைகால் உதற ஆரம்பித்தது.சிவாவை நினைத்தால் தான் பாவமாக இருந்தது. எனக்கு பாளையங்கோட்டையில் தங்க நிறைய வீடு இருந்தது.

"டேய் ஆச்சி வீட்டுக்கு போயிரலாம்..கேட்டா நாளைக்கு வர்றோம்னு சொன்னா அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.." அவனுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

கோச் வந்து காமினியைப் பார்த்து விட்டு "யார் செய்தது.." என்று சத்தம் போட ஆரம்பித்தார்.

"இதோ இவன் தான்.." என்று கோரஸ் குரலோடு கைகளும் சேர்ந்திருந்தது.

"யார் நீ..உன்ன பார்த்தேயில்லையே.."

"அமர்..சித்தப்பா பையன்..சென்னையில் ஐ.சி.எப் டீம்ல சப்ஸ்டிடூட்டா இருக்கான்.." என்று சிவா சொல்ல இதை எல்லாமா சொல்வ என்று அவனை முறைத்தேன்.பெண்கள் பக்கமிருந்து சிரிப்பு சத்தம் கேட்டது.

"சிவா..இன்னும் ஒரு வாரத்துக்கு கோச்சிங் வர வேண்டாம்..அதான் உனக்கு பனிஷ்மெண்ட்..தம்பி அமர் ஐ.சி.எப் டீம் தான் உனக்கு லாயக்கு..இங்க விளையாட வராதே.." என்று சொல்லும் போது ஒரு குரலில் நக்கல் தெரிந்தது.

"நீ இல்லாம அவங்க ஜெயிச்சிருவாங்களா..வாடா போகலாம்.." சிவாவை சமாதானப்படுத்தி கொண்டிருந்தேன்.

"டேய் நீ எப்போ ஊருக்கு போவ..இப்படித்தான் டைப்பிங் கிளாஸ்ல எனக்கு வேட்டு வைச்சே..அந்த ஏரியா பக்கமே தலை வைக்க முடியல.." சிவா அலுத்து கொண்டான்.

நன்றாக இருட்டியப்பின் வேர்கடலை வாங்கி சாப்பிட்டு விட்டு நிலவரத்தைத் தெரிந்து கொள்ள வீட்டிற்கு போகாமல் காமினி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த காமினியின் தம்பிக்கு பபிள்கம் வாங்கி தந்து

"என்ன வீட்ல செம திட்டா..இப்போ பரவாயில்லையா..போய் நாங்க வந்திருக்கோம்னு சொல்றியா.."

"அப்பா கிட்ட சொல்லட்டுமா.."

"அப்ப பபிள்கம்மைக் கொடு.." சிவா பிடுங்க போக அவன் உள்ளே போய் காமினியை அழைத்து வருவதாக போய் விட்டான்.

நேரமாகி கொண்டேயிருந்தது.வேர்கடலையும் முடிந்திருந்தது.பொழுது போகாமல் அந்த பேப்பரில் இருந்ததை படிக்க ஆரம்பித்தேன்.

"டேய் அமர்..இருட்டுல படிக்காதே..கண்ணு போயிரும்.." சிவா சொல்ல சொல்ல படித்து கொண்டிருந்தேன்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

"சிவா இப்போ அவங்க அப்பா போனதும் பேண்ட்டேஜ் எல்லாம் கழட்டிட்டு ஜன்னல் வழியா காமினி வரப் போறது நடக்க போவுது பாரேன்.." சொன்னவுடன் முறைக்க ஆரம்பித்தான்.

சிவாவை பொருட்படுத்தாமல் மேலே படிக்க ஆரம்பித்தேன்.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"அடப்பாவி சிவா..இந்த கதையிலையும் நீதான் வில்லனா.." என்று நான் சொல்லவும்

"டேய் சும்மாயிரு செஞ்சது எல்லாம் நீ..அப்புறம் என்ன.."

"நான் சொல்லலை..கதையிலே போட்டு இருக்கு.."

"எங்க காட்டு.." என்று குடுத்ததும் அதை படிக்காமலே கிழித்து எறிந்தான்.

காமினி இன்னும் வராத காரணத்தால் கீழே கிடந்த பேப்பரைத் தேடி எடுத்தேன்.பாதி கிடைக்கவில்லை. கிடைத்தவரை லாபம் என்று படிக்க ஆரம்பித்தேன்.

 “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"பரந்தாமனும் இதில் உடந்தையா..அது என்னடா வைரம்..புதுசாயிருக்கு.."

"வைரம் கேசட்..ஜெய்சங்கர் நடித்தது..அவங்கப்பா போலீஸ்.. ஏண்டா எப்பவும் இப்படித்தான் பேசுவியா.."

"பரந்தாமனைப் போய் அவர்னு மரியாதையா கதையிலே சொல்லியிருக்கான்.." எல்லா பிரச்சனைக்கும் அவன் தான் காரணம் வந்த எரிச்சலில் இனி எடுக்க முடியாத மாதிரி அநத துண்டு காகிதத்தை சாக்கடையில் எறிந்து விட்டேன். 

காமினி ஜன்னல் பக்கம் வர "நாளைக்கு ஹாக்கி டோர்ணமென்ட் இருக்கு..டிக்கெட் இருக்கு வர்றியா.." சிவா பேசிக் கொண்டிருந்தான்.

"சரி சீக்கிரம் போங்க..அப்பா பார்த்தா அடி விழும்.."

ஹாக்கி ஸ்டேடியம் அசுர விளக்கு வெளிச்சத்தில் மினுங்கியது.காமினி வந்ததும் டிக்கெட் கொடுத்து விட்டு வந்து உட்கார்ந்து கொண்டோம். காமினியின் அப்பா பந்தோபஸ்திற்கு வந்திருந்தார்.நானும், சிவாவும் பின் வரிசையில் பதுங்கி கொண்டோம்.

முதல் பாதி முடிந்ததும் பெண்கள் அமரும் இடத்தில் ஏதோ சத்தம் கேட்க அங்கு பார்த்தால் காமினியை அப்பா பார்த்து அடித்து கொண்டிருந்தார்.

"ஏண்டா நாயே..ஹாக்கி விளையாடி இப்போ தான் அடிப்பட்டு ரத்தம் போயிருக்கு..மறுபடியும் இங்க என்ன வேலை..பொண்ணுங்க கூட உட்கார்ந்திருந்தா கண்டுப்பிடிக்க முடியாதா.." தொடந்து அடி விழுந்தது. அவர் அடித்ததைப் பார்த்தால் வேறு ஏதோ காரணமிருப்பதாகவே பட்டது. அடுத்த நாளே காமினி காணாமல் போயிருந்தான். காமேஸ்வரன் காணவில்லை என்று பத்தாவது நாள் காமினியின் படம் பாளையங்கோட்டை தெருக்களில் ஒட்டப்பட்டிருந்தது.

பெண் மாதிரி நடை உடை பாவனை இருந்ததால் காமேஷ்கரனை நண்பர்கள் வட்டாரத்தில் காமினி என்று அழைப்பார்கள்.அது தான் காமினிக்கும் பிடித்திருந்தது.

ஹாக்கி விளையாடி ஏறக்குறைய எல்லோரும் பேங்க் உத்தியோகம் என்று ஆரம்பித்து கொஞ்சம் செட்டிலாகி இருந்தோம்.பேங்களுக்கு இடையில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையோடு சென்னை மெயிலில் திரும்பி கொண்டிருந்தோம்.

ஏதோ ஒரு ஸ்டேஷனில் தபதபவென கூட்டம் ஏறும் சத்தம் கேட்டது.

"மச்சான் அதுங்க..தூங்கிற மாதிரி பாவ்லா பண்ணுங்க.." என்று அனுபஸ்தன் சொல்ல அதே மாதிரி நானும் திரும்பி படுத்துக் கொண்டேன்.

சைட் அப்பரில் படுத்திருந்த காரணத்தால் அவர்கள் என்னை எழுப்ப தொடங்கினார்கள்.எரிச்சலில் காசு எல்லாம் தர முடியாது என்று சொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டு திரும்பினால் அது காமினி.
புருவத்திலிருந்த வெட்டுக்காயம் தான் அடையாளம் காட்டியது.காமினிக்கும் அந்த அதிர்ச்சி இருந்திருக்கும்.

"இந்த கோச்சில் யார் கிட்டேயும் காசு வாங்க வேண்டாம்..அடுத்த கோச் போங்க.." என்று என்னை தவிர்ப்பதிலே காமினி குறியாய் இருக்க

"இந்தாங்க அம்பது ரூபா..வைச்சுக்கோ.." என்று காமினியின் கையில் திணித்தேன்.

மறுக்காமல் வாங்கி கொண்ட காமினியிடன் கூட்டத்திலிருந்த அரவாணி "யார் கிட்டேயும் காசு வாங்க வேண்டாம்னு சொன்ன..அவன் தந்ததை மட்டும் வாங்குற.." என்று கேட்க

"பழைய கணக்கு.." என்று காமினி சொன்னது எனக்கு காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

"பிச்சைக்காரனுக்கு கூட ஒரு ரூபா போட்டா திட்டுவான்..இப்போ அம்பது ரூபா கொடுக்கிறான்.கலரப் பாத்து கொடுத்திட்டானா...என்ன நடக்குதுன்னே புரியல.." என்று சொல்லிக் கொண்டிருந்தவன் பக்கம் திரும்பாமல் வாய் முணுமுணுத்தது.

"அது பழைய பாக்கி.."

Friday, September 24, 2010

இரட்டை கொலை

கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சண்டையில் எனக்கு உதடும்,குணாவுக்கு சட்டையும் கிழிந்திருந்தது. எதிர் கோஷ்டியில் அருணின் மூக்கை உடைத்திருந்தோம்.

"நம்ம ஏரியாவுல அடி வாங்குனது நெனச்சா தான் ரொம்ப வலிக்குதுடா மச்சான்.." என்று சொல்லிக் கொண்டே இரத்தத்தைத் துடைத்தேன்.

"புது சட்ட மச்சான்..இனிமே போடவே முடியாது..அவன எதாவது பண்ணனும்.." என்று குணா வன்மத்தோடு சொன்னான்.

"பொண்ணுங்க முன்னாடி இனிமே உதார் உடவே முடியாதுடா.."

"உதட்டுல இன்னும் இரத்தம் வருதுடா.. அவன பழிவாங்க ஒரு வழி இருக்குடா.." என்று துடைத்து விட்டப்படியே குணா எதோ சொல்லி கொண்டியிருந்தான்.

"எப்படி.."

"இனிமே அவன் ஏரியாவுக்குப் போய் விளையாடுவோம்.." என்று குணா சொல்ல

"இப்பத்தான் வாங்கியிருக்கோம்..ஆனந்த் என்ன இந்த கோலத்துல இருக்கிறத மட்டும் பாத்தான்..நீ,நான்,அவன் எல்லாரையும் அடிப்பான்.."

ஆனந்த் எங்களுக்கு ஆதர்ஷம்.அவன் இல்லாத தைரியத்தில் இந்த சண்டையை எங்களிடம் இழுத்து இருந்தார்கள். அவனுக்கு என்னிடம் ஒரு பாசம் உண்டு.எல்லோருமே அவனை "அண்ணா.." என்று கூப்பிடுவார்கள்.(குணா உட்பட.என்னை தவிர..)

"ஆனந்த் ஒரே ஒருநாள் நம்ம கூட வரட்டும்..யாருமே நம்மள ஒன்னும் கேட்க மாட்டாங்க..இனிமே அவன் ஏரியாவுல தான் விளையாடுறோம்..எப்படியாவது நாளைக்கு மட்டும் அவன கூட்டிட்டு வந்துரு.." என்று குணா சொல்ல.எனக்கும் அது பிடித்திருந்தது.

ஆனந்த் தயவுல ஆங்கே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருந்தோம்.

"அவன வேற மாதிரி அடிக்கணும்..அதுக்கு ஒரு ஐடியா பண்ணியிருக்கேன்..அருணுக்கு ரெண்டு மாமா பொண்ணு. அதுல அக்காக்காரி அவன மதிக்கவே மாட்டா..நம்மளையும் தான்..அருணுக்கு ரெண்டாவது பொண்ணத்தான் ரொம்ப பிடிக்கும்..நீ சீதாவுக்கு கை ஆட்டுவியோ இல்ல கால ஆட்டுவியோ.. என்னோமோ பண்ணு..அதப் பாத்து அவன் சாவனும்.." குணாவின் கண்களில் கோபம் தெரிந்தது.

"நீ பண்ண வேண்டியது தானே.." என்று நான் சொல்லவும்.

"என் உதடா கிழிஞ்சுது..இப்போ சொல்லு..நான் சொல்றப்படி மட்டும் செய்..அது போதும்.." அவன் சொன்னதற்கு தலையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தேன்.

குணா சொல்லிக் கொடுத்த மாதிரியே சீதா வந்தால் கை காட்டுவது,அவளோட கடைக்கு அருகில் நிற்பது(பீல்டிங் செய்ய),இன்னும் இதர வேலைகளையும் செய்தது வந்தேன்.

குணா இன்னும் ஒருப்படி மேலே போய் அவளைப் பார்ப்பதற்கு தான் நான் வருகிறேன் என்று யார் மூலமோ சீதாவிடம் சொல்லியிருக்கிறான்.

அதற்கு பிறகு நான் கை காட்டுகிறேனோ இல்லையோ அவள் வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தையை வைத்து நாங்கள் இருக்கும் இடத்தைப் பார்த்து கையாட்டி கொண்டிருப்பாள்.

அம்மா வரைக்கும் விஷயம் தெரிந்து போனது.

ஒருநாள் காய்கறி வாங்கிய விட்டு வரும் போது பாரம் தாங்காமல் பை அத்து விழ சீதா உதவியிருக்கிறாள்.

"நல்ல பொண்ணு.." என்று சொன்ன அம்மாவைப் பார்த்து கூட இருந்த பெண் சொல்லிய வார்த்தைகள் "இரண்டு பையன் வைச்சுயிருக்கீங்க..அதான் ஓடி ஓடி உதவி செய்யுது.."

வீட்டில் வந்து விசாரித்தப் போதும் எப்படியோ சமாளித்து விட்டேன்.

அருணும் எங்களுடன் பேச ஆரம்பித்தியிருந்தான்.நானும் நடந்ததை மறந்து இருந்தேன்.ரொம்ப நாள் களைத்து குணா இல்லாத நேரம் வந்து என்னிடம் "சீதாவை நான் லவ் பண்றேன் விட்டுரு மச்சான்.." என்று சொன்னவனிடம் ஒன்றுமே சொல்லாமல் வந்து விட்டேன்.

சீதாவை தவிர்க்க தொடங்கினேன்.பீல்டிங் செய்வதை நிறுத்தி விட்டு கீப்பிங் செய்ய ஆரம்பித்தேன்.சீதா வந்து குணாவிடம் அழவே..குணா நியாயம் கேட்டான்.

"அவளுக்கு என்னடா குறைச்சல் அக்கா தங்கச்சியோட பொறந்து இருந்தா தானே உனக்கு ஒரு பொண்ணோட அருமை தெரியும் அவள நடத்துர மாதிரி தான் உங்க அம்மாகிட்டையும் மரியாதை இல்லாம நடப்ப" குணா சொல்லி முடிக்கும் முன் அவன் சட்டையை பிடித்து இருந்தேன்.

"கிடைக்கு ரெண்டு ஆடு கிடைச்சா நரி கூட நாட்டாமை பண்ணும் அது மாதிரி அவ கடையில வாங்கி குடிக்கிற ஓசி டீக்கு என்ன அடமானம் வைக்க பாக்குறியா "

"இப்படி எல்லாம் நடக்கும் எனக்கு முன்னாலே தெரியும் " சட்டையை என் பிடியில் விடுவித்து கொண்டே குணா சொன்னான் .

"என்ன தெரியும் உன் சட்டையை பிடிப்பேன்னா ?"

"இல்ல அவள நீ லவ் பண்றத சொன்னேன் " என்று அவன் சட்டையை திரும்ப பிடிக்க முடியாத தூரத்தில் இருந்து சொன்னான் .

"சீதாவை அருண் கல்யாணம் செய்யட்டும்.." என்று சொல்லியவனைப் பார்த்து குணா சிரித்தான்.

"டேய் அவன் நல்லவன் இல்லடா..நல்லவன் மாதிரி நடிக்கிறான்..அவனுக்காக விட்டு கொடுக்காத..அந்த பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி.."

குணா சொல்வதை காதில் வாங்காமல் அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்.

அருணுடன் போன இடத்தில் ஒரு பிரச்சனை வர,வேறு வழியில்லாமல் ஒளிய வேண்டிய சூழ்நிலை.இந்த சந்தர்ப்பத்தில் ஆனந்திடம் அருண் நெருங்கியிருந்தான். அந்த ஊரையையே காலி செய்திருந்தோம்.

பத்து வருடங்களுக்கு பிறகு அந்த ஊர் வழியாக போகும் போது குணாவை சந்தித்தேன்.

சீதாவை பற்றி மட்டும் விசாரிக்கவில்லை.

"ஆனந்தை கொன்று விட்டார்கள்.." என்று சொல்லி அழுதான்.

"எப்படி மச்சான்.." என்றேன் அதிர்ச்சியுடன்

"கூட இருந்தே காட்டி கொடுத்துட்டாங்க..அவன் சாவுக்கு காரணமான ஒருத்தனையும் விடல..போட்டுத் தள்ளிட்டோம்..நீ இருக்க வேண்டிய இடத்துல இப்போ நான்.." என்று சொன்னவனைக் கட்டிப் பிடித்து அழுதேன்.

"மச்சான் ஒரு விஷயம் சொல்லணும்.." என்று குணா ஆரம்பிக்கவும்

"சீதாவைப் பத்தியா..வேணாம் தெரியாமலே இருக்கட்டும்.." என்று கண்களைத் துடைத்தப்படியே சொன்னேன்.

சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு போனோம்.

"மச்சான் இப்போ வந்துறேன்.." என்று எங்கோ போய் விட்டான்.அப்போது தான் கவனித்தேன். மொபைலை விட்டு விட்டு போயிருந்தான்.

மொபைலில் ஒரு அழைப்பு வரவும் குணாவைத் தேடி கொண்டிருந்தேன். அவன் வரவேயில்லை.கட் செய்ய மொபைலை எடுத்தால் சீதாவின் படம் போட்டு "வைப்" என்று டிஸ்ப்ளேவில் தெரிந்தது.

குணா வருவது போல தெரியவும் ஒன்றுமே தெரியாதது போய் நடந்து கொண்டேன்.

"மச்சான் என்னை மன்னிச்சிரு..இதுலையும் நீ இருக்க வேண்டிய இடத்துல நான் இருக்கேன்..அருண் தாண்டா நம்ம ஆனந்த கொன்னது..சீதா கல்யாணத்து அன்னைக்கு தான் தெரிஞ்சது..புல்லா தண்ணிய ஊத்தி விட்டு தண்ணியிலே முக்கி நாந்தான் அவன கொன்னேன்..சீதாவ ரெண்டு வருசத்து முன்னாடி கல்யாணம் பண்ணிகிட்டேன்..உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல..என்னை மன்னிச்சிரு.." இன்னும் என்னமோ புலம்பி கொண்டே வந்தான்.

"என்ன பார்த்தத சீதா கிட்ட சொல்ல வேண்டாம்..நான் தொலைஞ்சி போனவன்..அப்படியே இருக்கிறேன்.." என்று அவனிடம் அவன் மொபைல் நம்பரைக் கூட வாங்காமல் நடக்கத் தொடங்கினேன் கால்(மனம்) போன போக்கில்.

Thursday, September 23, 2010

கூகுள் பஸ் = மூத்திரசந்து டிவிட்டர் = முட்டுசந்து

யாரு கிட்டயாவது சிக்கிட்டா முதலில் ஐந்து பேர் தான் அடிக்கிறாங்க..அப்புறம் ஒரு நாலைஞ்சு பேர் வந்து லைக்குறாங்க..

லைக்குறாங்களா.. பிரியலையே..

தள்ளி விட்டு விளையாடும் முன்னாடி லைக்குவாங்க..

அப்புறம்..

மூச்சுத்திணற  திணற அடிக்கிறாங்க..

ச்சே..

அப்புறம் ஃபாலோ பண்ணாதவங்க கிட்ட எல்லாம் மச்சி நீ ப்ரீயான்னு கேட்டு அவங்களை வரவழைச்சி வெளுத்து எடுக்கிறாங்க..

ஐயோ பாவம்..அடிச்சிட்டு விட்டுடாங்களா..

விட்டா தான் பரவாயில்லையே..முதல்ல இருந்து அடிக்கிறாங்க..ரெஸ்ட் ரெஸ்ட் எடுத்து அடிக்கிறாங்க..நானும் எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..

அப்புறம் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்களா..

அப்படி சொன்னாலும் பரவாயில்லயே..டேய் இவன் திரும்ப திரும்ப பேசுறாண்டான்னு சொல்லிட்டாங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்..

அப்புறம் எப்படித்தான் தப்பிச்சீங்க..

பஸ் ஓனர் என் மேல பாவப்பட்டு பஸ் கதவை அடிச்சிட்டாரு..

ஒத்தடத்திற்கு பின் அடுத்த நாள்

தல அடி ரொம்ப பலமோ..வாயிலே போட்டாங்க போல..

ஆமா அடி வாங்கும் போது ஒருத்தரும் வராதீங்க..இப்ப வாய் கிழிய பேசுங்க..

அடி கொடுத்தவனுக்கே இவ்ளோ காயம்னா அடி வாங்கியவன் உசுரோட இருப்பானா..

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கிருவாங்களே..

ஒரு புது பஸ்ஸர் வருகிறார்..

அடிக்க ஆள் அனுப்பிடாங்கடா..சங்கத்தைக் கலைங்க..நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்..

சார் இந்த மூத்திர சந்து எங்கே இருக்கு..

தம்பி நான் எல்லாம் எவ்ளோ பெரிய பஸ்ஸர் தெரியுமோ..எந்த பேரை நசுக்கு நசுக்குன்னு நசுக்கி தூக்கி எறிஞ்சிருக்கேன் தெரியுமா..இது ரத்தப் பூமி..

சட்டை எல்லாம் கிழிஞ்சிருக்கு..

சண்டையிலே கிழியாத சட்டை எங்கேயிருக்கு..

புது பஸ்ஸர் போனப்பின்..

டேய் இனி அவங்க எரியாவுல போய் கோட்டைத் தாண்டி வராதேன்னு சொல்லக்கூடாது..தெரியாமல் பார்டரைக் கிராஸ் பண்ணனும்..

பார்டரைக் கிராஸ் செய்யும் போது..

பாஸ் அந்த வழியா போகாதீங்க..இங்க வாங்க..

வெளிச்சம் இல்லையே..தீக்குச்சியைக் கிழிக்கிறார்..

யோவ் எந்திருச்சிருவாங்க..அணைச்சிட்டு என் பின்னால வாயா..

நீ யாரு..

நானும் ஒரு பஸ்ஸர்..பார்டர் தாண்ட வந்தேன்..

நான் அப்படி இல்லடா..

யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை..

பஸ் ஓனர் முழித்து கொண்டு புது பஸ்ஸரைப் பிடித்து கொள்கிறார்.

பாஸ் என்னை விட்டுட்டு போகாதீங்க..

திரும்பவும் மூத்திர சந்தில் விட்டு வெளுக்கிறார்கள்.பஸ் ஓனர் கதவை மூடும் வரை இது நடக்கும்.

Wednesday, September 22, 2010

ஓடுற நரியில ஒரு நரி நொண்டி நரியாம் சஜாங் சஜாங்

சின்ன வயசில எங்க ஆச்சி அடிக்கடி இந்த கதைய சொல்லுவாங்க.வளர வளர அதோட டைமென்ஷன் தான் மாறுது.

ஒரு ஊர்ல ஒரே ஒரு பனையேறி இருந்தாராம்.அவரு தினம் தினம் பனையேற காலங்காத்தாலே யோயிருவாராம்.ஒரு ஒன்பது மணி வாக்குல அவுக வீட்ல இருக்கிற கடைக்குட்டி தூக்கு வாளியில சாப்பாடு எடுத்திட்டு வருவானாம்.இதை ரொம்ப நாளா ஒரு நரிக்கூட்டம் ஒளிஞ்சு கிடந்து பாத்திருக்கு. அவன் தினமும் தூக்கு வாளியக் பனைக்குக் அடியில வைச்சிட்டு விளையாட போயிருவானாம். ஒரு நா அவசரமா முட்டிக்கிட்டு வர, வர்ற வழியில கீழ வைச்சிட்டு ஒதுங்க நரிங்க அதை ஏப்பம் விட்டுப் போட்டு எட குறைஞ்சது தெரியாம இருக்க வாளி முழுக்க இருந்து வைச்சிருச்சாம்.அதை தூக்கிட்டுப் போய் பனைக்குக் கீழ வைச்சிட்டு விளையாட போயிட்டானாம்.

அப்பாரு பசியில பனையில இருந்து இறங்கி அதை திறந்து பார்த்து கிறங்கிப் போயிட்டாராம்.பையனத் தேடிப் போய் தூக்கிப் போட்டு நாலு மிதி மிதிச்சவுடனே தான் கோபம் அடங்கிச்சாம்.பையன் நான் செய்யலன்னு சொல்லியிருக்கான்.ஆனா அப்பாரு நம்பல.

அடுத்த நாளும் சாப்பாடு எடுத்திட்டு வந்த பையனுக்கு பழக்கத்துல அவசரமா வர அப்பாவை நினைச்சிக்கிட்டு வந்ததை எல்லாம் அடக்கிட்டு ஓடி வந்திருக்கான்.பனைக்கு அடியில வைச்சிட்டு அப்பா அவசரம்னு சொல்லிட்டு ஓடிட்டான்.பையன் என்ன பண்றான்னு பாத்துக்கிட்டே இருந்திருக்காரு அப்பாரு. நரிங்க தின்னு ருசி கண்டுப் போய் பனைக்கே வந்திருச்சாம்.வழக்கம் போல வேலை நடந்திருக்கு.அவரும் மேல இருந்து பார்த்துட்டாரு.

அடுத்த நாளு பையன் வெறும் வாளியக் கொண்டு வந்திருக்கான்.திறந்து பாத்துட்டு ஏமாந்து போன நரிங்க அப்படி திகச்சி நிக்க அப்பாரு சொன்னாராம்.விருந்துலா சமச்சி வைச்சிருக்கேன் என்ன அவசரம் இப்ப வாங்கன்னு சொல்லியிருக்காரு.நரிங்களும் மண்டய ஆட்டிக்கிட்டு போக, போற வழியிலே பனங்கறுக்கு மட்டைய நல்லா செதுக்கி இருக்காரு.நரிங்களும் எதுக்குன்னு கேக்க உங்களுக்கு பாயாசம் செய்ய விறகு இல்ல அதான்னு சொல்லியிருக்காரு.

வீட்ல எல்லாருக்கும் இலயப் போட்டு உக்கார சொல்லியிருக்காரு.நரிங்களும் உக்கார கதவப் பூட்டிட்டு வந்து கறுக்கு மட்டையால வெளு வெளு வெளுத்திருக்காரு. கொஞ்சம் சுதாரிச்ச நரி எல்லாம் ஓடி போயிருச்சி.ஒரே ஒரு நொண்டி நரி மட்டும் மாட்ட  அதுவும் தப்பே செய்யாத நரி மட்டும் மாட்ட எல்லா கோபத்தையும் அது மேல காட்டு காட்டுன்னு காட்டியிருக்காரு.பிறகு அந்த பையன் அவங்க அப்பா இல்லாத நேரத்துல திறந்து விட்டுருக்கான்.

அப்புறமும் பழைய ருசியில மயங்கி நரிங்க வரும் போதெல்லாம் ஏலே அந்த கறுக்கு மட்டைய செதுக்குன்னு சொல்லியிருக்காரு.அந்த வார்த்தையிலே எல்லாம் பயந்துருமாம்.

இந்த கத நான் சின்னப் புள்ளையா இருக்கும் போது சொல்லிட்டு இதோட நீதி என்னலேன்னு கேக்க "தப்பு செய்ற நரியாயிருந்தாலும் நொண்டி நரியா மட்டும் இருக்கக்கூடாதுன்னு சொன்னேன்."

பத்து படிக்கும் போது ஒரு சண்டையிலே எங்க எல்லாத்துக்கும் சட்ட கிழிய ஆனந்த் வந்து யாருடா அடிச்சான்னு சொல்லி அந்த கூட்டத்துல புகுந்து அடிச்சி ஒருத்தனுக்கு தக்காளி சாஸை வழிய விட்டுட்டான். அப்பத்தான் தெரிஞ்சது நொண்டி நரிய வெளுத்தா போதும்னு.

காலேஜ் முடிச்சப்பின்ன தான் தெரிஞ்சது.நொண்டி நரிய எல்லாம் அடிக்கக்கூடாது.நல்ல கதியா இருக்கிற நரி காலைத் தான் நொண்டி ஆக்கணும்னு.

இன்னும் வருங்காலத்துல இந்த கத என்ன டைமென்ஷன்ல சொல்லப் போகுதோ தெரியல.

Tuesday, September 21, 2010

செந்தழல் ரவி மற்றும் எல்லா பெண்ணியக்காப்பாளர்களுக்கும்

இந்த பிரச்சனைக் குறித்து செந்தழல் ரவி பொங்கி எழுந்த உடனே இந்த பதிவை எழுத நினைத்தேன். இருந்தும் இரண்டு நாட்கள் போகட்டும்.எதையுமே சொல்லாமல் இருந்தால் அடுத்து எந்த விதமாக அடிப்பார்கள் என்று தெரிந்து கொள்ள நடக்கும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று வால்பையன் பஸ் மூலமாக பதிவுலகத்திற்கே எல்லாம் தெரிந்திருக்கும்.

முதலில் இந்த பிரச்சனை எங்கு ஆரம்பித்தது என்றால் போரமில்.செந்தழல் ரவி மிஷனரி பற்றி ஒரு பதிவு எழுதுகிறார்.அதை போரமில் ஒருவர் சுட்டித் தர.அதை சாந்தி அக்கா செந்தழல் ரவியைப் பார்த்து விஷ நரி என்று சொல்ல முகிலன் தட்டிக் கேட்கிறார்.அதற்கான ஆதாரம்.


சாந்தி அக்கா பொதுவில் எழுதும் போது எவ்வளவு நிதானமா கேள்வி கேட்கிறார்.பாருங்கள் இந்த நிதானத்தைப் போரமில் கையாண்டிருந்தால் ஆண்களுக்காக மட்டும் பொங்கும் முகிலன் ஏன் பொங்க போகிறார்.


செந்தழல் ரவியின் பதிவில் ஒரு மாதிரியும் முகிலன் இல்லாத தமிழ் அமுதம் போரத்தில் ஒரு மாதிரியாகவும் ஒரு கேள்விக்கு பதில் வருகிறது.ஆனால் அங்கு கேள்விக் கேட்க முகிலன் தமிழமுதத்தில் இல்லை.


செந்தழல் ரவி சார் ஜில்பான்ஸ் இப்படி எல்லாம் பேச நான் கூட கொஞ்சம் யோசிப்பேன்.ஆனா நீங்க இப்படி பேச யோசிக்க மாட்டீங்க.கிழ பாடு என்று சொன்னவர் தானே நீங்கள்.உங்களுக்கு வயசே ஆகக்கூடாது.அப்புறம் யாராவது இப்படி திட்டிருவாங்க.இந்த பாணியில் தான் எழுதணும்னு சொல்றீங்களே நீங்க பதிவர் கவிதா மற்றும் கிருபா நந்தினி எதிராக பொங்கும் போது அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்.அதாவது நீங்க மட்டும் பேசலாம்.அப்படித்தானே சார்.வளர்மதிக்கு ஆபாசப் புனைவு எழுத முயன்று ஒரு வருடம் கழித்து மன்னிப்பு கேட்டவர் தானே நீங்கள்.கவிதாவிடம் இரண்டு வருடங்கள் கழித்து ஏதோ கடனுக்கு மன்னிப்பு கேட்க மாதிரி தானே கேட்டீர்கள்.பாஸ் நீங்க,வினவு எல்லாம் பெண்ணியக் காவலர்களாக மாறாதீர்கள்.அதுக்கு ஒரு தகுதி வேணும்.நீங்க தமிழ் நாட்டு பெண்களுக்காக போராடுவது மகிழ்ச்சி தான்.கிருபா நந்தினி என்ன வேறு நாட்டவரா.


அதாவது நீங்கள் மறை கழன்ற என்று திட்டலாம்.அதுக்கு ஆமா என்று சொன்ன முகிலன் குடும்பத்தைப் பற்றி புனைவு எழுதுவீர்கள்.அப்படி இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழிப் போட்ட நீங்கள் உங்களைப் பற்றியே புனைவு எழுதி விட்டு மற்றவர்களிடம் வரலாம்.

உங்களுக்கு ஆதரவு தெரிவித்த உடன் தான் முகிலன் பிரச்சனைப் பெரிதாக கொண்டு வரப்பட்டது. அது நிறைய விஷயத்தில் உங்கள் நாட்டாமை சொம்பு நசுங்கிய போது இந்த விஷயத்தை வைத்து நெளிசலை எடுத்து கொண்டீர்கள்.அப்புறம் நான் இந்த பதிவை எடுக்க மாட்டேன்.அசிங்கமாக திட்டி விட்டு நான் நேர்மையானவன் என்று உங்கள் அளவிற்கு எனக்கு சொல்லத் தெரியாது.


செந்தழல் நர்சிம் விவகாரத்தில் நீங்கள் இரட்டை வேடம் போட்டீர்களாம் இதை தான் என்னால் தாங்கவே முடியவில்லை.இந்த பதிவு பார்த்தாவதி இரட்டை வேடம் போடுபவர் என்று தெரிந்து கொள்ளவும்.


தனக்கு ஒரு பிரச்சனை வரும் போது ஆதரவு தேடலாம்.ஆனால் மூன்று மாதத்தில் இந்த மாற்றம் யாராலும் முடியாத ஒன்று.செந்தழல் ரவி நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாறுவேன் என்று.அதனால் மக்களே ஆறு மாதம் கழித்து யாராவது நட்பு பாராட்ட வந்தால் உங்களுக்கு ஆப்பு வைக்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

கெட்ட எண்ணம் இருப்பவர்கள் தான் பிரச்சனையை நீட்டிக்க விரும்புவார்களாம்.அதை நீட்டிக்க விரும்பாமலே இத்தனை ஆதாரம் இல்லை இதை விட அதிக ஆதாரமிருந்தும் நான் செய்தது ஒருவருக்கு வருத்தம் தருகிறது என்று மன்னிப்பு கேட்டேன்.அதை அப்படியும் முடிக்க விடாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தால் இப்படித்தான் ஆகும்.

யார் பிரச்சனையை இழுத்தார்கள் என்று இதில் பதிவுலகத்திற்கு தெரிந்திருக்க வேண்டும்.தெரியவில்லை இன்று வால்பையன் மூலமாக வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது.வால்பையன் ஒரு ஆணாதிக்கவாதி ஆகி விட்டார்.

அதாவது மதார் என்று பெண் பதிவர் படம் எல்லோருக்கும் அனுப்பிய போது அதற்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் இன்று வரலாம்.

நான் நேர்மையானவன் என்று எல்லாம் எனக்கு வேஷம் போட தெரியாது.அது போரமில் இயல்பாக எல்லோரும் சீண்டியது இப்படி ஆகி விட்டது.இனியும் பிரச்சனையை நீட்டிக்க யார் விரும்பினாலும் வரலாம். வினவு நான் என்றும் நேராக எதிர்ப்பவன்.உங்களுக்கு அப்படி எதிர்க்க திராணியில்லை என்று தெரிந்து விட்டது.அதனால் லீனாவைத் திட்டிய மகளிர் அணிக்கு பின்னால் போய் ஒளிந்து கொள்ளுங்கள்.

முக்கிய குறிப்பு தமிழமுதம் போரம் பார்க்க அதன் உறுப்பினராக இருக்க வேண்டியதில்லை.என் பஸ்ஸைத் திருடி வினவில் எழுதியதால் அதே போல் நானும் பஸ்ஸைத் திருடி விட்டேன்.ஏழர,எட்டரை, பத்தரை இந்த வேலையை எல்லாம் ஒண்ணும்  தெரியாத குழந்தைகளிடம் வைத்து கொள்ளவும்.

கண்ணா K - @ஏழர - அஜீவன் சொன்னதெல்லாம் படிச்சு பார்த்தேன்.. அவர் லீனா ஒரு மோசடி பேர் வழி எனத்தான் சொல்கிறார். நான் அதை பற்றி ஒண்ணுமே குறிப்பிட வில்லையே

//லீனா சென்னை வந்த உடன் இயக்குநர் இமையம் பாரதிராஜாவிடம் போய்ச்சேர்ந்தார் ( பல உதவி இயக்குநர்கள் அவரை இன்று வரை நேரில் கூட பார்க்க முடியாமல் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) அப்புறம் சேரன் … அப்புறம் தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய சீரியல் இயக்குநரான சி. ஜெரால்டுடன் திருமணம். வடபழனியில் பல லட்சம் ரூபாயில் சொந்தமான அப்பார்ட்மெண்ட் வீடு, ஆயிரம் விளக்கில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எடிட் ஷூட் , பணக்காரர்கள் பயன்படுத்தும் காஸ்டிலியான கார் என லீனாவின் வளர்ச்சி சடுதியாக வந்து வாய்த்த ஒன்று………………….//

இந்த வரிகளில் இருக்கும் கிசுகிசுத்தனமான நடத்தைக்கு களங்கம் கற்பிக்கும்தனமான வரிகள் ஏன் என்று கூட நான் கேட்க வரவில்லை. இந்த வரிகளை எழுதிய வினவு ஆணாதிக்கம்னு பேசுவது எனக்கு உடன்பாடாக இல்லை.

கண்டிப்பா இதுக்கும் உங்களுக்கு மாற்று கருத்துதான் இருக்கும்னு நினைக்குறேன் ஏழர :)

எனக்கும் சரியா வாதம் பண்ணத்தெரியாது. அதனால நம்ம விவாதத்தை இதோட முடிச்சுக்கலாம். நானும் உங்களை பஸ்ஸுல பாலோ பண்ணுறதால இன்னொரு சந்தர்ப்பத்தில் என் மாற்றுகருத்தை வைக்க வருகிறேன் :))

ஏழர - இன்னும் சில உண்மைகளை வெளிப்படையா சொல்லப்படவில்லை! தனியா ஒரு வரியை மட்டும் எடுத்துப்போட்டு விவாதிக்கவும் முடியாது.. எப்படியும் நீங்க விரும்புவதுனால நாம முடிச்சிக்குவோம்.. இப்போதைக்கு!!!!

அதாவது வினவை எதிர்ப்பவர்கள் மட்டும் முழுதாக வெட்டாமல் விவாதிக்க வேண்டும்.அவர்கள் ஒரு பத்தியை மட்டும் வெட்டி எடுத்து விவாதிப்பார்கள்.

மன்னிப்பு கேட்டதால் நான் இப்படி கொதிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்ட நான் தயங்க மாட்டேன்.இதில் வந்த பெண் பதிவர்களின் பெயருக்காக வருந்துகிறேன்.மேலும் இதை நீட்டிக்க விரும்பினால் சண்டைக்கு வரலாம்.முக்கியமான ஆதாரம் அதன் தொடர்ச்சியாக வெளி வரலாம்.வெளி வராமலுலம் போகலாம்.அது நிச்சயம் என் கையில் இல்லை.

Monday, September 20, 2010

ஸ்கெட்ச்

பத்து படிக்கும் பொழுது நானும்,வினோத்தும் நெருங்கிய நண்பர்கள். பள்ளியில் இரண்டு மாதம் ஒரு சச்சரவால் அடைக்கப்பட்ட பொழுது சுல்தான் எங்களுடன் சேர்ந்து கொண்டான். வினோத்துக்கு அவனை பிடித்ததால் எனக்கும் பிடித்து தொலைத்தது. அந்த காலகட்டத்தில் சேர்ந்து பார்த்த படம் நட்பு கருமம்! படம் அல்ல அவன்.

சுல்தான் வற்புறுத்தவே அவன் படித்த டியுசனிலே நானும் சேர்ந்தேன் ஆனால் படிக்கவில்லை.அங்கு படித்து வந்த சயீதா மேல் இவனுக்கு காதல் அப்படி சொல்லி கொண்டு திரிந்தான்.அந்த ஏரியா பையனும் அவள் பின்னால் திரிய அவனை நான் மிரட்ட அவன் என்னை மிரட்ட அடித்து மட்டும் கொள்ளவில்லை. அப்பவே நாங்கள் எல்லோரும் வடிவேலு மாதிரி தான். தவிர பெண்களுக்காக சண்டை போடுவது எனக்கு பிடிக்காது.

அவளை மடக்க அவன் என்னிடம் கேட்க நான் சொன்ன ஐடியாப்படி அறிவியல் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கதிலும் தமிழ்,தெலுங்கு,இந்தி,ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று எழுதி உள்ளே வைத்து அவளிடம் கொடுத்து விட்டோம். சும்மாவே அறிவியல் புத்தகம் ஒரு எருமை மாதிரி இருக்கும் இதை வைத்த பிறகு கர்ப்பமான எருமை மாதிரி இருந்தது.அவள் ஒத்து கொண்ட சந்தோஷத்தில் அந்த துண்டு சீட்டுகளை எடுத்து வடபழனி ஆற்காடு ரோட் சிக்னலில் போட்டி போட்டு கொண்டு எறிந்தோம்.

ஒருநாள் வந்து "வா ஒரு இடத்திற்க்கு போவோம்" என்று இடத்தை சொல்லமல் இராயபேட்டைக்கு அழைத்து சென்றான்.பார்த்தால் அந்த பெண் படிக்கும் பள்ளி.அந்த ஏரியா பையன் வந்து எங்களை துரத்தவே

"மச்சான் அவன் ஒருத்தன் தான். நாம இரண்டு பேர். அவனை புரட்டி எடுக்க போறேன்" நான் துடித்துக் கொண்டிருந்தேன்.

"அவசரப்படாதே .." என்று சுல்தான் சொல்லி முடிக்கும் முன்பே எங்களை சுற்றி ஒரு நால்வர் அணி நின்று கொண்டிருந்தது.

அவர்களை சமாளித்து அனுப்பிய பிறகு நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன். வாட்ச்மேன் வந்து எங்களை விசாரிக்க..எங்கள் பதிலில் திருப்தி அடையாமல் ப்ரின்சி கிட்ட சொல்லுவேன் என்று மிரட்ட..சுல்தான் அவனை அடிக்க போக..எப்படியோ சமாளித்து அவனை இழுத்து வந்தேன்.

வரும் வழியில்

"இனிமே இது மாதிரி வேலைக்கு என்னை கூப்பிடாதே..எனக்கு பிடிக்கவில்லை..பிடிக்கவும் பிடிக்காது பெண்களுக்காக காத்து கிடப்பது.." என்று நான் சொல்லவும்

"ஏன் உனக்கு ஆள் இல்லாத பொறாமை..அதான் இப்படி பேசுற.." - இது சுல்தான்

"அன்னைக்கு புக்க மட்டும் மாத்தி கொடுத்து இருந்தா அது யார லவ் பண்ணிருக்கும் தம்பி..இனிமே இது விசயமா எங்கிட்ட வராதே.." என்று சொல்லி கூடவே நாலைந்து கெட்ட வார்த்தைகளை போட்டு அவனுக்கு வாயாலே வயலின் வாசித்து காட்டினேன்.

இரண்டு வாரங்கள் கழித்து வினோத்திடம் பேசி கொண்டிருந்த பொழுது

"மச்சான் புதன் கிழமை ஏண்டா வரல.."

"இல்ல உடம்பு சரியில்ல.." - இது வினோத்

"பொய் சொல்லாத.. உன்னை வடபழனில நான் பாத்தேனே.." என்று சும்மா பிட்ட போட்டு பார்த்தேன்.

"ஸாரிடா..நான் சுல்தான் கூட இராயபேட்டைக்கு அந்த பொண்ண பாக்க போனேன்..அவன் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னான்"

"என்ன அங்க திரும்பவும் எதுவும் சண்டையா.. யார் கிட்டயாவது வம்பு இழுத்து இருப்பானே.."

"நாங்க அங்க போனப்போ போலிஸ் இருந்தாங்க.."

"தெரியும்..அவன் கூட போகாத உனக்கு அடி நிச்சயம் விழும்.. அவன் ஒடிருவான்.." அவன் வாட்ச்மேனிடம் வம்பு இழுத்த கதையை சொன்னேன்.போலிஸ் வந்தததும் இதனால் தான்.

நான் அந்த டியுசனை விட்டு நின்று விட்டேன்.ஒரு மாதம் கழித்து என் வீட்டுக்கு வந்து மச்சான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும் என்று கூட்டி போய் என் காலில் விழுந்து அழ ஆரம்பித்து விட்டான்.உதவி செய்ய சொல்லி ஒரே தொல்லை.

"இப்போ மனி 8.00 அவ டியுசன் இருக்கிறது கே.கே.நகர்ல..நாம விருகம்பாக்கத்துல இருக்கோம்.. நாம போனா கூட அவள பிடிக்க முடியாது.." என்று நான் சொல்லவும்

"உங்க அப்பா வண்டில போவோம்.."

"எனக்கு வண்டி சரியா ஒட்ட வராது..எதுவா இருந்தாலும் நாளைக்கு பாக்கலாம்.."
"ப்ளிஸ்டா.."

"இதுதான் கடைசி.." என்று வண்டி கொடுக்க மறுத்த அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி வண்டியை வாங்கி கொண்டு அவளை பார்க்க போனோம்.

கே.கே.நகர் போய் அங்கு அவளை பிடிக்க முடியாமல்,அவள் இருக்கும் வளசரவாக்கதிற்கு போய் கடிதத்தை வாங்க சொல்லி கெஞ்சி எல்லாம் செய்து விட்டு வீட்டுக்கு வரும் பொழுது மனி 9.30. பயத்தில் வண்டியை நிறுத்த முடியாமல் சுவரில் மோதி கொண்டேன். அப்பா பார்த்து கொண்டிருப்பது தெரியாமல்.

"ஏன் லேட்.." என்ற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் "போலிஸிடம் மாட்டி கொண்டேன்.." என்று பொய் சொன்னேன்.

அப்பா கோபத்தில் பனியனை போட்டு உலுக்க பனியன் கிழிந்தே விட்டது.அவரை சமாளிக்க குட்டி பொய்,குட்டி குட்டி பொய் சொல்லி வாயே வலித்து விட்டது.அதில் இருந்து உண்மையே சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

மூன்று நாட்கள் கழித்த பிறகு

"அவள் பதில் என்ன ?.." என்று நான் கேட்கவும்

"அவளுக்கு தமிழ் தெரியாதுன்னு சொன்னா.." என்று சுல்தான் சொல்லி முடிக்கும் முன் அவன் முதுகில் இரண்டு அறை விழுந்தது.உங்க போதைக்கு நான் ஊறுகாயாடா மயிரு..

சில பல காரணங்களால் அவன் நட்பை நானும் வினோத்தும் உதறி இருந்தோம்.சுல்தான் அந்த பெண்ணை விட்டு விலகி இன்னொரு பெண்ணை பார்ப்பதாக கேள்விப்பட்ட உடன் அவனை அடிக்க முடிவு செய்தோம்.அவனுக்கு ஆதரவாக ஒரு கும்பல் அதற்குள் உருவாகி இருந்தது.அவன் தனியாக மாட்ட காத்து கிடந்தோம்.

சுல்தான் எங்க ஸ்கூல் வாசலில் ஒரு பெண்ணை இடித்து விட(இங்கு சென்சார் செய்யப்பட்டுள்ளது).இது தான் சாக்கு என்று நானும் வினோத்தும் அவனை அடித்தோம் அவன் காதில் அடிப்பதற்கான காரணங்கள் சொல்லப்பட்டது.

மூன்று வருடங்கள் கழித்து சலீம் வீட்டில் சுல்தான் என்னிடம் பேச வந்தான்.அவனை தவிர்த்து விட்டு சலீமிடம் "சுல்தானிடம் உஷாராக இரு.." என்று மட்டும் சொன்னேன்.

உடனே சலீம் புலம்ப ஆரம்பித்து விட்டான்."மச்சான் என் காதல கெடுத்ததே இவன் தான்.அந்த பொண்ணு கிட்ட பேச இவன கூட்டிகிட்டு போனா அங்க வந்து அந்த பொண்ண பார்த்து நீ சலீம தான் காதலிக்கனும் மிரட்டி காரியத்தையே கெடுத்துட்டான். பஞ்சாயத்து பண்ண வந்தவன் அவளை பிக்கப் பண்ணிட்டான்..நான் தப்பு செஞ்சுடேன்.. அவனுக்கு பதிலா உன்னை கூட்டிக்கிட்டு போய் இருக்கனும்.."

"ஏன்டா ஸ்கெட்ச் போடுறது தான் என் வேலையா..இதுக்கு பேரு வேறடா.." மனதுக்குள் புலம்பிக் கொண்டேன்.

Sunday, September 19, 2010

கிழிக்கப்பட்ட டைரியின் பக்கங்கங்களிலிருந்து

முதல் தடவை காலேஜ் போகும் போதுதான் பார்த்தேன்.டிபன் பாக்ஸை ஒரு ஐயர் பொண்ணைப் பிடிக்க சொல்லி விட்டு சிக்கனை வெளுத்து கொண்டிருந்தாள்.அவள் ஆளுமை எனக்கு பிடித்திருந்தது.கூடவே அவளையும்.அவ எனக்கு தான் என்று சொல்லும் அளவிற்கு எனக்கு வெளியுணர்வு கூட வேலை செய்யவில்லை.

எனக்கு அமீபா கூட ஒழுங்காக வரைய தெரியாது.அவளுக்கு இஞ்சினீரிங்க் டிராயிங்க் கூட அமீபா தான்.நான் அவளுடன் பேசிய வார்த்தையே "எனக்கும் வரைந்து தர முடியுமா.." என்று தான்.பின் கேட்காமலே எல்லா முறையும் வரைந்து தந்தது அவளுக்கும் என்னை பிடித்ததை காட்டியது.

அவ ஏரியாவுக்கு வீடு மாறியிருந்தேன்.அவளுக்காக மாறினேன் என்று அவள் நினைத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன்.வீட்டில் பொருள்களை அடுக்காமல் தப்பிக்க அவள் வீட்டுக்கு போனால் அவள் பாட்டிக்கு என்னை பிடிக்கவில்லை.முறைத்து கொண்டேயிருந்த காரணத்தால் அவளுக்கு குடுக்க வைத்திருந்த கேட்பரீஸ் சாக்லேடடி நான் சாப்பிட்டு விட்டு தாளை அங்கிருந்த புத்த்கத்தில் வைத்து விட்டேன்.அது இன்னமும் இருப்பதாக அவள் ஒருமுறை சொன்னதாக ஞாபகம்.

"எங்க அக்கா யாரையாவது அவ பிரெண்டை முன்னாடியே வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காது.." அவள் சொல்லி முடிக்கும் முன் நான் "நான் ஒண்ணும் உன் பாட்டியைக் கல்யாணம் செய்ய போவதில்லையே.." முடித்திருந்தேன்.

கைவளையம் அணிவது எனக்கு பிடிக்கும்.வீட்டில் அப்பாவுக்கு பிடிக்காது.அவ குடுத்த வெள்ளி கைவளையத்தை கல்லூரியில் மட்டும் அணிந்து கொள்வேன்.எனக்காக என் ஸ்டாப்பில் இறங்குவாள்.அங்கிருக்கும் சந்தில் பேசும் போது அப்பா பார்த்து விட்டு திட்டியதாக சொன்னாள்."முன்னாடி என் பின்னாடி வந்த பையனை அடித்து விட்டார் தெரியுமா.நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.." சொல்லும் போது கண் கலங்கியது."எவனாவது இளிச்சவாயன் கிடைச்சா ஏன் உங்க அப்பன் அடிக்க மாட்டான்..கை வச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்.." போபத்தில் உதடு துடிப்பது பார்த்து அவள் அழுதாள்.கொஞ்சம் சந்தோஷம் தான்.எனக்காக ஒரு பொண்ணு அதுவும் எனக்கு பிடிச்ச பொண்ணு அழும் போது எல்லா அப்பாகளையும் திட்டலாம்னு தோணிச்சி.துடைக்க முயற்சித்தேன்.முகத்தைத் திருப்பி கொண்டாள்.தெறித்த கண்ணீரின் சூடு இன்றும் அப்படியே இருக்கிறது.

அழுது கொண்டிருந்தவளை எப்படி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை."எனக்காக அழுத பெண்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது.." மெதுவான குரலில் சொன்னேன்.

அழுகையை நிறுத்தியிருந்தாள்.கொஞ்ச நேரம் கழித்து "இதுக்கு முன்னாடி எத்தனை பேர் அழுதாங்க.." சஜக நிலைக்கு வந்திருந்தாலும் குரலில் தழுதழுப்பு மிச்சமிருந்தது.

"இதென்னடா புது வம்பு வருது.." என்று நினைத்தாலும் சுதாரித்து விட்டேன். "அப்படியெல்லாம் யாருமில்லை..நீ தான் முதல் பொண்ணு.."

"அப்புறம் எப்படி எண்ணிக்கையில் ஒண்ணு கூடும்.." பவுன்சர் கேள்வி முகத்தில் அறைந்தது.

"ஜீரோவுல இருந்தது..இப்போ ஒண்ணு கூடியிருக்கு..அதான் அப்படி சொன்னேன்.."

"நல்லா பொணுங்களைக் கவுக்கற மாதிரி பேசுறடா..உன்னால நிறைய பேர் அழுதுருப்பாங்கடா.." சொல்லிக் கொண்டே கட்டிப் பிடித்தாள்.டாவினால் வந்த கொஞ்ச நஞ்ச கோபமும் அடுத்து வந்த முத்ததில் அடங்கியது.

கல்லூரியில் இரண்டாம் வருட பீஸிற்கு பேங்க் பேங்காக ஏறிக் கொண்டியிருந்தோம்.அலைய வைத்து கொண்டிருந்தார்கள்.போன் செய்து "எங்கப்பா ஒட்டியாணம் வாங்கி தந்திருக்கிறார்..ரொம்ப நல்லாயிருக்கு.." சொல்லும் போதே கோபம் தலைக்கேறியிருந்தது.

"இப்போ அங்க என்ன இருக்குன்னு ஒட்டியாணம்..உங்க அப்பனுக்கு தான் அறிவில்ல..உனக்குமா.."

"இப்போ ஏன் எங்க அப்பாவை திட்டுற.."

"உங்க அப்பனுக்கு எல்லாம் உங்க ஸ்டேட்ல வேலை கிடைக்காதா..இங்க வந்து எங்களுக்கு லோன் கொடுக்காம தாலிய அறுக்கிறான்.."

"எங்க அப்பாவா.."

"அவனை மாதிரியே ஒருத்தன்..எல்லோரும் உங்க அப்பன் மாதிரியே இருக்காங்க.."

இயலாமை அவள் மேல் வெடித்திருந்தது.லோன் கிடைக்கும் வரை அவளிடம் பேசவில்லை.கிடைத்த உடன் கோவிலுக்கு வர சொல்லியிருந்தாள்.ஆளே மாறியிருந்தாள்.நிறைய அழுதிருப்பாள் போல.

"உனக்கு எப்பவும் யார் மேலயாவது கோபப்படலைனா தூக்கம் வராதா..அதுவும் நான்,எங்க அப்பான்னா போதும்.."

"ஒட்டியாணம் நல்லாயிருக்கா.."

"பேச்ச மாத்தாதே.."

"எங்கூட ஓடி வரும் போது அந்த ஒட்டியாணம் எடுத்திட்டு வருவியா.."

"உனக்கு ரொமன்டிக்காவே பேச தெரியாதா..பாக்க தெரியாதா..எப்ப பாத்தாலும் யாரைடயாவது முறைக்கிறது.."

"ஆமா..அது ஒண்ணு தான் குறைச்சல் ரொமாண்டிக் லூக் விட்டா கவுண்டமணி மாதிரியே இருக்கும்.." நினைத்தை வெளியே சொல்லவில்லை.

"எங்க வீட்ல வி.சி.டி ப்ளேயர் வாங்கியிருக்கோம்..வீட்லையும் யாரும் இல்ல..ஒரு முக்கியமான சிடி இருக்கு..நீ வாயேன் சேர்ந்து பாக்கலாம்.."

"நீ எதுக்கோ அடி போடுற..திஸ் இஸ் நாட் ரொமாண்டிக்..நான் வர்றலப்பா இந்த ஆட்டதுக்கு.."

"பார்த்தா ரொமான்ஸ் என்ன எல்லாமே வரும்.."

"என்ன சிடி.."

"அதான் வரலன்னு சொல்லிட்ட..அப்புறம் என்ன.."

"என்ன சிடி.."

"உங்க மாமா,அத்தையோட கல்யாண சிடி.."

(தொடரும்..)

Saturday, September 18, 2010

எலி வால்

"நாம இந்த நிமிஷம் வரைக்கும் காதலிக்கிறோம் அதாவது தெரியுமா.." எனக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்தவளிடம் கேட்டேன்.

"தெரியும்..அதுக்கென்ன இப்போ.." அலட்சியமாக பதில் வந்தது சத்யாவிடமிருந்து.

"நீ இல்லாம ஒரு வாழ்க்கையை என்னால நினைக்க கூட முடியல.." சினிமா பாணியில் இருந்தாலும் அந்த சமயத்தில் அந்த வார்த்தைகள் தான் கிடைத்தது.அதுவும் இன்றைய அசாதாரண சூழ்நிலையில் நிச்சயம் கிண்டல் செய்வாள்.

"டோண்ட் பீ சில்லி..உனக்காக அமெரிக்காவை எல்லாம் விட முடியாது.." அதே பாணியில் பதில் சொன்னாள்.

"பணம் கிடைத்தால் ஆப்பிரிக்கா வைர சுரங்கத்தில் கழுதை சாணி பொறுக்கினால் கூட உனக்கு ஓகே தான்.." கோபத்தில் உதடு துடிப்பது தெரிந்தது.

"மரியாதையா பேசு..முட்டாள் மாதிரி பேசாதே.." பதிலுக்கு சீறினாள்.

"உனக்கென்னடி மரியாத..உனக்கும்,காசு குடுத்தா..! வர்றவளுக்கும் வித்தியாசமே இல்ல.." வார்த்தைகளை அள்ளித் தெளித்து விட்டேன்.

"ச்சீ..உன்னப் போய் இவ்வளவு நாளா நல்லவனா நினைச்சேனே..இனிமே என் முகத்திலேயே முழிக்காத..மீறி வந்த..போலீஸ்ல சொல்லி குடும்பத்தோட ஜெயில்ல அடைச்சுருவேன்.." கத்திக் கொண்டிருந்தாள்.

"போலீஸ்ல சொல்லி தான் பாரேன்..நீ கூட இருக்கும் போது எடுத்த வீடியோ எல்லாம் இருக்கு..அதுவும் அவங்க கையில கிடைக்கும்.." சத்யாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை ரசித்தேன்.

"சார்.." சத்யாவின் அப்பாவுக்கு உச்சரிப்பிலே ஒரு சங்கடம் தெரிந்தது.இவனை போய் சார் என்று சொல்லி விட்டோமே என்று நினைத்திருப்பாரோ.

"சொல்லுங்க..என்ன பிரச்சனை.."

"சத்யா என் பொண்ணு..அமெரிக்காவுல நிச்சயம் பண்ணியிருக்கோம்..ஒரு பையனை காதலிச்சிருப்பாள் போல..சேர்ந்து சுத்தும் போது வீடியோ எடுத்திருக்கான்..போலீஸுக்கு போக பயமாயிருக்கு நீங்க தான் எப்படியாவது அதை அவன்கிட்ட இருந்து வாங்கணும்.."

"இந்த பொண்ணுகளுக்கு மட்டும் அமெரிக்காவுல இருந்து எவனாவது வர்றான் பாரேன்.." ஏதோ அல்லக்கை அடித்த விட்டுக்கு எல்லோரும் சிரித்தார்கள்.அவனைத் தவிர.

"சரி பாக்கலாம்.." அவன் விட்டேத்தியாக பதில் சொன்னான்.

"சார் நீங்க எவ்வளவு கேட்டாலும் தர்றேன்..புலி வாலைப் பிடித்தது மாதிரியிருக்கு.."

"புலி வாலா..என்ன தருவீங்க.." வாய் விட்டு சிரித்தான்.

"என்ன கேட்டாலும்.." சத்யாவின் அப்பா அழாதது மட்டும் தான் பாக்கி.

விளைவு எனக்கு மூக்கு உடைந்திருந்தது.என்னிடமிருந்த அவளுடைய போட்டோவை எல்லாம் பிடுங்கியிருந்தார்கள்.சத்யாவின் அப்பாவை அழைத்தார்கள்.

"வாங்கிட்டீங்களா..எவ்வளவு பணம் வேணும் சார்.." பரபரப்பாய் கேட்டார்.

"பணம் எல்லாம் வேண்டாம்.உங்க பொண்ணு போட்டோவைப் பார்த்தேன்..எனக்கு பிடிச்சிருக்கு..கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம்.உங்களுக்கு ஓகேவா மாமா.." அவன் சொன்ன பதிலில் என்னை முறைத்தார்.

"அவனை விட்டுத் தள்ளுங்க..இனிமே உங்க வழிக்கு வர மாட்டான்..அது ஒரு எலி வால்.." அவரை பேச விடாமல் அவனே சொல்லிக் கொண்டிருந்தான்.

அவருக்கு நிஜப்புலி வாலை மிதித்து விட்ட எஃபேக்ட் கொடுத்தார்.

"வீட்டுக்குப் போங்க மாமா..பேசிட்டு நல்ல முடிவா சொல்லுங்க.." வழியனுப்பி வைத்தான்.என்னையும் வெளியே அனுப்ப சொல்லி சைகை காட்டினான்.

"ல்லாம் உன்னால தாண்டா..என் பொண்ணு வாழ்க்கையே போச்சு.." என் சட்டையைப் பிடித்து அழுதார்.

"இன்னும் எதுவும் அவங்க கையில் சிக்கல..நீங்க பயப்படாதீங்க..அது சிக்கவும் சிக்காது..இருந்தா தானே சிக்கும்.."

"தம்பி எதுவும் சிக்காம பார்த்துக்கோங்க..நான் என்ன வேணுனாலும் உங்களுக்கு செய்றேன்.." மரியாதையின் அளவு மாறியிருந்ததில் எனக்கு ஆச்சர்யமில்லை.

"உங்க பொண்ணு.."

"சரி என் பொண்ணு அவனை கட்டுறதுக்கு உங்களேயே கட்டலாம்.." குரல் உடைந்தது தெரிந்தது.

"நான் இன்னும் முடிக்கல சார்..உங்க பொண்ணு மாதிரியே அவசரப்படுறீங்கன்னு சொல்ல வந்தேன்..நீங்க கவலைப்படாம கல்யாண வேலையைப் பாருங்க..என்னால பிரச்சனை வராது.." என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தேன்.

வன் நின்றுக் கொண்டிருந்தான்.வந்த வேகத்தில் கன்னத்தில் அடித்து விட்டான்.

"முட்டாள்..காரியத்தையே கெடுத்து விட்டாயே..அந்த ஆளே ஒத்துக்கிட்டான்..உனக்கெங்கடா போச்சு புத்தி.." இன்னொரு முறை கை ஓங்கினான்.

"அடி..நல்லா அடி மச்சான்..அவள நான் இப்பக் கூட காதலிக்கிறேன்..அதான் அந்த ஒத்துக்க முடியல.." கண்ணீரால் ஒரு திரை விழுந்தது.

"என்னடா உளர்ற.."

"கோபத்தில் வீடியோ எடுத்திட்டேன் சொன்னது பொய்..இப்ப அவளை கல்யாணம் செஞ்சா கூட வீடியோ எடுத்திருப்பானோன்னு அவளுக்கு ஒரு எண்ணம் இருந்து கிட்டேயிருக்கும். எனக்கும் அன்னைக்கே எடுத்து இருக்கணுன்னு ஒரு எண்ணம் இன்னும் வலிக்கும் மச்சான்..அதான் அவளை விட்டுட்டேன்.." சொல்லிக் கொண்டிருந்த என் கன்னத்தில் அவன் கை அனிச்சையாக தடவியது.

Friday, September 17, 2010

பு..................................................

ஒரு வேலை வெற்றிகரமாக தோல்வியில் முடிந்ததால் அமரும்,நண்பர் ஒருவரும் பப்பில் அமர்ந்திருந்தார்கள்.சுற்றிலும் வியட்நாம் பெண்கள்.கம்யூனிச நாட்டில் பெண்களின் நிலையை நினைத்தால் சரக்கு அடிக்காத அமரும் சரக்கடித்து விடுவான். வீட்டு வேலை செய்யப் போவதாக விசா எடுத்து விட்டு இங்கு வேறு வேலை செய்கிறார்கள்.கூடவே போதை பழக்கமும் உண்டு.

நண்பருக்கு தெரிந்த பப் போல.பெண்கள் நிறைய அவரிடம் சகோதரன்,மகன் என்று உறவு பாராட்டிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல அமர் கோக் அடித்து கொண்டிருக்க யாரோ நண்பருக்கு தெரியாத பெண் போல. அமர் தான் எளிதான டார்கெட் என்று நினைத்து அவனிடம் பேச.கண்களை சந்திக்க முடியாமல் பரிதாபமாக நண்பரை பார்க்க அவளும் விடாமல் எந்த ஊர்.இந்த ஊரை சொல்லுங்கள் என்று நண்பர் சொல்ல சொல்ல அமர் பொய் சொல்ல தெரியாமல் இந்தியா என்று சொல்லி விட இன்னும் கண்களால் முதுகைத் துளைக்க ஆரம்பித்தாள்.

அமர் மனசில ராஜியை நினை ராஜியை நினை என்று நினைத்து கொண்டாலும் ராஜியின் முகம் ஞாபகம் வராத காரணத்தால் வலுக்கட்டாயமாக வேறு வழியேயில்லாமல் வெள்ளைக்காரனுடன் வந்திருந்த பெண்ணை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அந்த பெண் ஜெயபாரதி மாதிரி இருக்கிறாள் என்று நினைத்து கொண்டாலும் இவள் கண் பார்வை இன்னும் துளைக்க ஆரம்பித்தது. முகத்திலிருந்த மேக்கப்பில் அமரின் முகம் தெரிந்து விடும் போல.

இடதுக்கை ஆட்டக்காரர்களுக்கு திணரும் சச்சின் போல அமர் திணறிக் தத்தளித்தான். அமரின் நிலை கொள்ளாத்தவிப்பைப் பார்த்து ஆடைகளை கொஞ்சம் சரி செய்வது போல் ஒரு பவுண்சரை வீச கில்லி விஜய் போல எப்போ உன் கண் மேல நம்பிக்கை இல்லாம உன் டிரஸ்ல கை வைச்சியோ அப்பவே நீ தோத்துட்ட என்று நினைத்து கொண்டு அவளை கண்டுக் கொள்ளாமல் தமிழில் பேச ஆரம்பித்திருந்தார்கள்.

அவள் இன்னும் பக்கத்தில் இருந்தாலும் கண்டுக் கொள்ளாமல் பேசிக் கொண்டாலும் அவளை அனுப்ப வழியே இல்லாமல் நண்பர் அவளிடம் சொன்னார். அவன் ஆளு நீ பக்கத்தில் இருக்கிறதைப் பாத்தா உன்னை வெட்டியே போட்டுருவா என்று சொல்ல அமர் நினைத்து கொண்டாம் அவளை ஏன் வெட்ட போகிறாள்.என்னை வெட்டுவாள்.

அவள் போனதும் வீட்டிற்கு போகலாம் என்று அனத்த ஆரம்பித்த அமரை ஆச்சர்யமாக பார்த்த நண்பருக்கு தெரியாது அமருக்கு ராஜி முகம் ஞாபகத்திற்கு வந்தது.

#புண்ணாக்கு.

இதுக்கு மன்னிப்பு எல்லாம் கேக்க முடியாது.

Thursday, September 16, 2010

செல்வராகவன்,யுவன்சங்கர்ராஜா,நா.முத்துகுமார்,அரவிந்த் கிருஷ்ணா

விழியோரமாய் ஒரு நீர்த்துளி
வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ
உணர்ந்தால் போதும் போதும்

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை

செல்வராகவன்,யுவன் சங்கர் ராஜா,நா.முத்துகுமார்,அரவிந்த் கிருஷ்ணா - இந்த நால்வர் கூட்டணி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலத்தில் அமரும் ராஜியும் உருகி உருகி பினாத்திக் கொண்டிருந்தார்கள்.

புல் பேசும் பூ பேசும்
புரியாமல் தீ பேசும்
தெரியாமல் வாய் பேசும்
தொட்டு தொட்டு விட்டு விட்டு
கட்டிக்கொள்ளும் போதை

நெருப்பு வாயினில்
ஒரமாய் எரியும்

இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்து கொண்டிருக்கும் கூட்டணி போல புதுப்பேட்டை பாடல்களும்,இசையும் முந்தைய படங்களை மிஞ்ச முடியவில்லை.

அந்த சமயத்தில் அமருக்கு நெருப்பு வாய் முழுவதும் எரிந்து தெரிந்தே வாய் பேசி ராஜியின் அப்பாவை அசிங்க அசிங்கமாக திட்டி வைத்தான். கோல்டி ___டுங்களா தமிழ் நாட்டில் வந்து எங்களுக்கு வேலை இல்லாமல் செய்றாங்க என்று அவள் அப்பாவை குறி வைத்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை எல்லாம் சொல்லி முடித்திருந்தான்.அன்றோடு நால்வர் கூட்டணி பிரிவு போல முதலில் ராஜி பிரிய..

தெலுங்கு யாரடி நீ மோகினியில் அரவிந்த் கிருஷ்ணா வெளியேற,யுவன் சங்கர் ராஜாவும்,நா.முத்துகுமாரும் செல்வராகவனின் கதையான யாரடி நீ மோகினி தமிழ் படத்தில் வெளியேறினார்கள்.

அதை தொடர்ந்து அமரின் காதலும் பிரிந்தது.

செல்வராகவன் வைரமுத்து,ஜி.வி.பிரகாஷூடன் சேர,யுவன் யார் யாரிடமோ சேர இன்னும் அந்த பழைய மேஜிக் நடக்கவேயில்லை.

ராஜி யாரையோ கல்யாணம் செய்ய அமருக்கு ராஜியின் கல்யாணம் நடந்து பல மாதங்கள் கழித்தே தெரிந்தது.

செல்வராகவனும்,யுவன் சங்கர் ராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் தோல்வியில் முடிய அமரும் இன்று தனித்தே நிற்கிறான்.

அசிங்கமான வார்த்தைகள் அரங்கேற்றம் நடந்து இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்து விட்டது.அமரின் துக்கத்தை இன்று வெடி வைத்து கொண்டாடுகிறார்கள்.

செப் 15,2006 சாயங்காலாம் ஆறு மணி.அமர் அந்த சமயத்தில் மும்பையில் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் போராடிக் கொண்டிருந்தான்.ராஜியை ஹாங்காங்கிலிருந்து எவனோ ஒருவன் பெண் பார்க்க வந்திருந்தான்.கோழையாக தோற்று போய் கழிவறையில் ராஜி சம்பந்தப்பட்ட எல்லா புகைப்படங்களையும் எரித்து கொண்டிருந்தான். நினைவுகளை மட்டும் இன்னும் எரிக்க முடியவில்லை.நினைவுகள் அமரை எரிக்கிறது.

Wednesday, September 15, 2010

அடுத்த ரவுண்ட் சண்டையும்,மன்னிப்பும்

கேபிள் சங்கர் ஒரு அருமையான படத்தை எடுத்து விட்டு எல்லா வினியோஸ்தர்களுக்கும் போட்டு காட்டுகிறார்.படம் நன்றாக இருந்தாலும் கவர்ச்சியா எதுவும் இல்லாத காரணத்தால் வாங்க மறுக்கிறார்கள். தயாரிப்பாளர் அப்படி ஒரு காட்சியை சேர்க்கச் சொல்லி நிர்பந்தம் செய்கிறார்.ஒரே நாளில் முடிக்கச் சொல்லி உத்தரவு. அவர் படத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள் யாரும் வர முடியாத சூழ்நிலை. உதவிக்குப் பதிவர்கள் செல்கிறார்கள்.

சனிக்கிழமை மாலை

முதலில் லக்கியும், அதிஷாவும்

கேபிள் : லக்கி நீங்க தான் உதவி செய்யனும்.

(காட்சியை விளக்கிய உடன் லக்கியின் முகம் மாறுகிறது)

லக்கி : நான் இருபது நாட்களுக்கு ஒரு முறை தான் சண்டை போடுவேன்.போன மாசக் கோட்டா வினவு கூடச் சண்டை போட்டு முடிஞ்சு போச்சு.அடுத்த கோட்டா வர இன்னும் பத்து நாள் இருக்கு. இப்பத்தான் ஆபாசமா எழுதுறான்னு ஒரே சண்டை.இதுக்கும் உதவினா எனக்கு எதிர்வினை எழுதவே நேரம் பத்தாது.

கேபிள் : அப்ப அதிஷா நீங்க ?

அதிஷா : தோழர் இல்லாத இடத்துல எனக்கு என்ன வேலை.எவனாவது ஏதாவது எழுதினா அலங்கல் மாதிரி புது வார்த்தைகளைப் போட்டுப் பதிவு எழுதுவேன். நிறைய வேலை இருக்கு வரட்டுமா. லாலே லாலலி லாலே.

கேபிள் : அப்ப உதவி ?

லக்கி : இவன் தான் என் புது சிஷ்யன் அரவிந்த்.இவன் ஏதாவது செய்வான்.

அரவிந்தை ஏற இறங்க ஒரு கைப்புள்ளையைப் பார்ப்பதுப் போல் பார்கிறார் கேபிள் .

கேபிள் : சரி பிரபலப் பதிவர் லிஸ்ட எடு.

(அரவிந்த் எழுதி கொடுத்த பிறகு சரிப் பார்க்கப்படுகிறது.)

லிஸ்டில் இருந்து ஒவ்வொரு பெயராக வாசிக்கப்படுகிறது.

அரவிந்த் : பாஸ் வால்பையன் ?

கேபிள் : இப்போ வருவார்.படத்தை அவரிடம் காட்டக் கூடாது.இல்ல நம்ம படத்தப் பார்த்து உலக சினிமா என்று சொல்லி விமர்சனம் எழுதுவார். ஒருத்தன் பாக்க மாட்டான்.

வால்பையன் உள்ளே வரவும் சரக்கும்,ஊறுகாயும் கொடுத்து மட்டை ஆக்கப்படுகிறார்.

அரவிந்த் : நையாண்டி நைனா?

கேபிள் : வேண்டாம் உள்ளவே விடாதே.இந்தக் காட்சிய இப்படி எடுத்தா எப்படி இருக்கும் கேமிராவ நம்மப் பக்கமாத் திருப்பி வைச்சுருவான்.

அரவிந்த் : அப்ப குருஜி ?

கேபிள் : வேண்டவே வேண்டாம்.முத்தக் காட்சியையே நல்லா லைட் போட்டுக் காட்டுறான்.இந்த காட்சிய இருட்டுல எடுக்கலாமா என்று பதிவு போடுவார்.அத ஆதரிச்சோ எதிர்த்தோ பைத்தியக்காரன் பதிவுப் போடுவார்.அது அப்புறம் வளர்மதி வரைக்கும் போகும்.

அரவிந்த் : அப்ப குசும்பன் ?

கேபிள் : அடுத்தவங்களைக் கலாய்ச்சே 300 ஃபாலோயர் வைச்சு இருக்கார்.இப்போ இங்க வந்து ஐடியா எதுவும் கொடுத்து அப்புறம் அது அவர் படமா என் படமானு எனக்கே சந்தேகம் வந்துரும். ஏற்கனவே சேது படத்த நான் எடுக்க உதவினேன்னு பதிவு போட்டாரு.( மோகன் வைத்யாவிற்கு டி.வி.எஸ் 50 ஒட்ட சொல்லி கொடுத்தது நம்ம குசும்பன் தான்)

அரவிந்த் : அப்ப கார்க்கி ?

கேபிள் : கொத்துப் பரோட்டா எழுதும் போதே ஆபாசமா இருக்குனுப் பின்னூட்டம் போடுவார். இந்தக் காட்சியும்,நடிக்கப் போகும் வில்லனைப் பத்தி கேள்விப்பட்டா எல்லோரையும் மொக்கை போட்டேத் தொலைச்சுருவார்.

அரவிந்த் : அப்படி என்ன சீன் ?

கேபிள் : எல்லாம் ரேப் சீன் தான்.

அரவிந்த் : அப்ப நானு?

கேபிள் : நானு அப்படி ஒரு பதிவரா?. நான் கேள்விப்பட்டதே இல்லை.

அரவிந்த் (கோபமாக) : நான் என்னை சொன்னேன். பீ கேர்புல்.

கேபிள் : டேய் காமடி ஃபெல்லோ. உன்ன மைண்ட்ல வைச்சு இருக்கேன். அடுத்தப் படத்தில் யூஸ் பண்றேன்.

அரவிந்த் : முரளிக்கண்ணன்

(முரளிக்கண்ணனுக்குப் போன் போடுகிறார்.)

கேபிள் : (காட்சியை விளக்கி விட்டு) ஏதாவது சொல்லுங்

முரளி : ஐம் எ காம்பிளான் பாய்.

கேபிள் : இதுக்கு சொல்லுங்க.

முரளி : ரொம்ப நன்றி. பதிவுப் போட மேட்டர் இல்லாம இருந்தேன். தமிழ் படத்தில் வந்த ரேப்ப வைச்சு ஒரு பதிவு எழுதி கல்லாக் கட்டிருவேன்.

கேபிள் : நீ வந்த ராசி சரியில்லை வெளியே போய் நில்லு.யாரையும் உள்ளே விடாதே.

நர்சிம் வருகிறார். அவர் மேல் ஒரு தனிப்பட்ட பாசம் அரவிந்த் வைத்து இருப்பதால் அவருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படுகிறது.

கேபிள் : நீங்க இந்த காட்சிக்கு ஏதாவது சொல்லுங்க

நர்சிம் : மாறவர்மன்ல இருந்து ஒரு காட்சி. வில்லன் நாயகியைக் கெடுக்க முயற்சி செய்யும் பொழுது நாயகன் வந்து விடுகிறான்.

கேபிள் : இது தான் மாறவர்மனோட கடைசி எப்பிசோட்னு நினைக்கிறேன். அதுக்கு நான் தான் மாட்டுனேனா ?

நர்சிம் : இது ஒரு மாஸ்டர் பீஸ்.

கேபிள் : நீங்க என்ன ஒரு காமடி பீஸ் மாதிரியே டீல் பண்ணுறீங்க.இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு.

நர்சிம் சோகமாக வெளியே வருகிறார்.

அரவிந்த் : மீ த பர்ஸ்டா ?

நர்சிம் : ஆமா பதிவப் படிச்சுட்டுப் பின்னூட்டம் மட்டும் போடாத.(சிரிக்கிறார்) சும்மா சகா. மீ தெ செகண்டு.

இந்த காட்சிக்கு ஏது லாஜிக்.ஒன்லி மேஜிக்.இசையை முடிவு செய்வோம் என்று அரவிந்தை அழைக்கிறார்.

கேபிள் : இசைன்னா என்ன ?

அரவிந்த் : இசைன்னா இசை.

கேபிள் : இப்பவே கண்ண கட்டுதே. சரி விடு தண்டோரா எங்கே ?

அரவிந்த் : பாஸ் ஒரு சின்னத் தப்பு நடந்து போச்சு. பாலா வீட்டு முன்னால தண்டோரா போட சொன்னத தப்ப எடுத்துகிட்டு நம்ம பதிவர் தண்டோராவ தூக்கி போட்டு கால் உடைஞ்சு போச்சு.

கேபிள் : என்ன பண்ணாலாம் ?

அரவிந்த் : நாடோடி இலக்கியன்.

கேபிள் : இப்ப தான் சங்க கடிக்கிற மாதிரி யோசனை சொல்லி இருக்கே. பாரேன் உனக்கு உள்ளேயும் என்னமோ இருந்திருக்கு.

நாடோடி இலக்கியன் : இதுக்கு சங்கர் கணேஷ் படத்துல ஆடு சண்டை போடும் போது ஒரு இசை வரும்.அத போடுவோமா?

கேபிள் : என்ன வைச்சு காமடி கீமடி பண்ணல தானே ?
நாடோடி இலக்கியன் : சரி இன்னொரு சங்கர் கணேஷ் படத்துல...

கேபிள் : வேண்டாம் வலிக்குது.அழுதுருவேன். எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.ஆணியே இல்ல இசையே வேண்டாம்.

கேபிள் : ஆதிய கூப்பிடு

ஆதியை அழைக்கும் பொழுது அரவிந்த் ரமா அக்காக் கிட்ட உளறி மாட்டி கொள்கிறார்.கேபிளுக்கு போன் வருகிறது.

ஆதி : வீட்ல மாட்டிக்கிட்டேன்.குரல் கேட்கிறது " இதுக்குத் தான் காலையிலே இருந்து ஆங்கிள் பாக்குறேன்னு ஒரு வேலையும் பாக்கலையா ? ஒழுங்கா எல்லா வேலையும் முடிச்சுட்டு போங்க."

கேபிள் : யாரை கூப்பிடலாம்.

அரவிந்த் : ஜாக்கி சேகர்.

ஜாக்கிடம் காட்சியை சொல்லாமலே படம் எடுக்க சொல்லப்படுகிறது.

கேபிள் : வில்லன் ரெடியானு பாரு.

வில்லனை எதிர்பார்த்தால் சாரு வருகிறார் சட்டையை கழற்றி கொண்டே.

கேபிள் : எதுக்கு சட்டைய கழத்துறீங்க ?

சாரு : என் படத்தில் நான் ஆண்களைத் தான் இப்படிக் காட்டுவேன்.

கேபிள் : இது என்னோட படம்.

சாரு : அப்ப சரி.கேமிராவின் முன் என் முகத்தைக் காட்ட நான் சமரசம் செய்து கொள்வேன்.பேசினப்படி காசு கொடுக்கலைன்னா இந்த வார விகடனில் உங்க பேர் வரும்.

கேபிள் : அரவிந்த் நீ வெளியே போ. (நாயகிடம்) அந்த சேலையை கொஞ்சம் விலக்கு.கொஞ்சம் கிழி.

"பெண்ணே ஆடையைக் களையும் முன் சற்றே யோசி.." என்று குரல் வருகிறது.தேடி பார்த்தா நம்ம ஜாக்கி.

கேபிள் : ரேப்ல கிழியாத சேலை எங்கே இருக்கு சொல்லு ஜாக்கி.

ஜாக்கி : ஏற்கனவே என்ன பிட்டு படம் பாக்குறான்னு ஒரே சண்ட.இதையும் நான் செஞ்சா பிட்டுப் படம் எடுத்துட்டான்னு வந்துரும்.நான் வர்றேன்.

ஜாக்கி போனதோடு இல்லாமல் கூடவே அந்த பொண்ணையும் அழைத்துச் செல்கிறார்.

கேபிள் : பேக்கப்.

வெளியே வருகிறார்

அரவிந்த் : யூ த லாஸ்டா ?

ஆதியிடமிருந்து போன் வருகிறது.மணி காலை 6. சண்டே .

ஆதி : என்னை வீட்ல போட்டு கொடுத்ததே அந்த அரவிந்த் தான் அவன விடாதீங்க.

கேபிள் : அவன பிடிங்க.

அரவிந்தை பிடித்து கை,கால் எல்லாம் கட்டி 6.50 புரப்படும் தாதர் செல்லும் வண்டியின் அப்பர் பர்த்தில் போடப்படுகிறார்."ரேனிகுண்டா வந்தப் பிறகுக் கட்டை எடுத்து விடுங்கள்" என்று எச்சரிக்கை வேறு.
ரேனிகுண்டாவில் ஜெகநாதன் வருகிறார்.

அரவிந்த் : அண்ணே கட்ட அவுத்து விடுங்க.இதைச் செஞ்சா நான் உங்க காலடி நாய்.

ஜெகநாதன் : ஐயோ பாவம்னு பின்னூட்டம்,தமிழ்மண ஓட்டுப் போட்டா நீ எனக்குத் தெரியாம இவ்ளோ வேலை செஞ்சு இருக்க.

அரவிந்தின் வாயில் துணியை வைத்து அடைக்கிறார்.கடப்பா வந்தப் பிறகு எடுத்து விடுங்கள் என்ற கட்டளை வேறு.

அரவிந்த் (கண்ணாலே): யூ டூ காலடி...

ஜெகநாதன் : யா மீ டூ...

கடப்பா வந்தா யார் வந்து என்ன செய்யப் போகிறார்கள் என்ற பயத்துடன் பயணம் தொடர்கிறது.

சென்னையில் தயாரிப்புத் தரப்பில் அந்தக் காட்சியை எடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள்.

Tuesday, September 14, 2010

பாஸ் என்ற பாஸ்கரன்

பாஸ் என்ற பாஸ்கரன் படம் பார்த்தேன்.ஹீரோ என்றால் யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். இதையெல்லாம் தாண்டி படத்தில் ஒரு காட்சி.நயன் தாரா ஆர்யாவிடம் பாடன் பாடன் என்று கேட்பார். ஆர்யா அதற்கு பாட்டு பாடுவார்.இந்த காட்சி என் பதிவை அந்த படம் சம்பந்தப்பட்ட யாரோ ஒருவர் படித்திருக்கிறார் என்று சொல்ல மாட்டேன்.யாருடைய கல்லூரி வாழ்விலோ அப்படி நடந்திருக்கலாம்.

இனி கொசுவர்த்தி..

நான் பொதுவா கல்லூரியில் படிக்கும் போது(செமஸ்டர் தேர்வைத் தவிர்த்து) இரண்டு காரியங்கள் மட்டுமே செய்வேன்.வேடிக்கைப் பார்ப்பது மற்றும் தூங்குவது.ஆட் செமஸ்டர்(1,3,5,7) நடக்கும் போது வெளியே இருக்கும் வயல்களில் நாத்து நட்டிருப்பார்கள்.பசுமையாக இருப்பதால் வேடிக்கை பார்பதற்கே நேரம் போதாது.ஈவன் செமஸ்டரில்(2,4,6,8) தூங்கி வழிவேன்.

நாங்கள் கடைசி செமஸ்டர் படிக்கும் சமயம் இன்னொரு நண்பன் விஸ்காம் படித்துக் கொண்டிருந்தான்.ஒரு குறும்படம் எடுக்க ஒரு கதை தேவை என்று சொல்லியிருந்தான்.கதை விவாதம் அனல் பறந்து கொண்டிருந்தது.வழக்கம் போல நான் தூங்கி மகிழ்தேன்.(என்னை எழுப்பாமல் விட்டதற்கு காரணம்இது போல ஒரு கதை கேட்ட நண்பனிடம் கிழக்கே போகும் ரயில் படத்தை உல்டா செய்திருந்தேன்.அன்று எழுந்த கோபம் தான் காரணம்)

கொஞ்ச நேரம் கழித்து என்னை எழுப்பி கதை கேட்டான்.(திருந்தியிருப்பேன் என்று தவறாக நினைத்த விட்டான்).நானாவது.. திருந்துவதாவது.. கதை சொல்ல ஆரம்பித்தேன்.

"மச்சான் நாடகத்திலே மொக்கை மாதிரி டிவிஸ்ட் வைக்கிறான்.நான் சொல்ற கதையிலே அவங்கள மிஞ்சிறேன் பாரு.."

"டேய் ஓவராப் பேசாத..கதைய சொல்லு.."

"பைக்ல புதுப் பொண்டாட்டி கூட வேகமா போறான்.ஒரு திருப்பத்துல எதிரே வண்டி வர்றது தெரியாம மோதி கீழ விழுகிறான்.கோவத்திலே எந்திரிச்சி திட்டப் போறான்..அப்பத்தான் கவனிக்கிறான்.வந்து மோதின பைக்லகையும் ஒரு ஜோடி இருக்கு.அத பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறான்..நாலு பேரும் அதிர்ச்சி அடையிறான்க.." என்று சொன்னேன்.

"குமுதத்தில வர்ற கதை மாதிரியே இருக்கு..கல்யாணத்துக்கு அப்புறம் ஜோடி மாறி போச்சா.." என்று சொன்னவனிடம்

"இல்ல நாறி போச்சு..இங்க தான் நாம கத்துக்கிட்ட எடிட்டிங் திறமைய காட்டுறோம்..ஆண் ரெண்டு பேரையும் க்ளோசா ஒரே ப்ரேம்ல காட்டுறோம்..அடுத்த ஷாட்டுல அந்த பெண் ரெண்டு பேரையும் க்ளோசா ஒரே ப்ரேம்ல காட்டுறோம்..யாருக்கு யார் கூடத் தொடர்பு அப்படி தெரியாம பாக்குறவன் எல்லாம் தலையப் பிச்சிக்கிட்டு சாவான் " என்று சொல்லி முடித்தவுடன்

"போடா ப..அவன காலேஜ்ல இருந்து தூக்குறதுக்கு வழி சொல்றியா.." என்று என்னை திட்டிக் கொண்டியிருந்தான்.

எல்லோரும் சிரித்துக் கொண்டோம்.(நான் சொன்னத்தில் கடைசியில் தலைப்பு மட்டும் தான் மிஞ்சியது. தலைப்பு - கோணங்கள்.)

வினையே இதுக்கு அப்புறம் தான் ஆரம்பித்தது.பாடம் நடத்திய லேடி புரபசருக்கும் எங்களுக்கும் ஆகாது.

"சம்படி இஸ் கிகிளிங்.." என்று அவர் சொல்ல

"லாபிங்னா சிரிக்கிறது கிகிளிங்னா என்னடா மச்சான்.." என்று ஒரு நண்பன் கேட்க

"பல்ல இளிக்கிறது.." என்று இன்னொரு நண்பன் சொல்ல

"அரவிந்த் வாட் இஸ் ஜெ-ப்ரோடோ.."

"என்னடா இது மாதிரி ஒரு புரோட்டோவ நான் கேள்வி பட்டதே இல்லை.." என்று நான் வாய்க்குள்ளே முணுமுணுத்தேன்

"பாடன்.."

"பாடணுமா..எனக்கு பாடத் தெரியாதே.." இப்படி சொன்னது புரபசரின் காதில் விழுந்து தொலைத்தது.

"ஹவ் அடமென்ட் யூ ஆர்.." என்று திட்ட ஆரம்பிக்க

"என்ன அடம் பிடிக்கிரம்மா.." என்று துணைக்கு ஒரு நண்பன் சொல்ல..உடனே எம் மேல் இருந்த கோபத்தை அவன் மேல் காட்ட ஆரம்பித்தார்.

"ஐ வில் ஆஸ்க் சேர்மன் டு கிவ் எ ஷூ.." என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

"மச்சான் நீ செருப்பு போட்டுக்கிட்டு வர்றது பிடிக்காம அவங்க சேர்மன் கிட்ட சொல்லி ஷூ வாங்கி தர்றாங்களாம்.." என்று ஒரு நண்பன் மொழிபெயர்க்க

"செருப்பால அடி வாங்கி தர்றேன்னு சொல்லுதுடா.." - இது நான்

"அந்த அஞ்சு பேரும் வெளிய போங்க.." என்று அவர் தமிழுக்கு தாவியப் பிறகு வெளியே வந்தோம்.

வாசல் பக்கம் தான் பெண்கள் அமர்ந்து இருப்பார்கள்.பக்கத்து வகுப்பு பெண்களையும் கவனிக்கலாம்.என்னுடைய நெருங்கிய நட்பு ஒன்று துண்டுச்சீட்டில் எழுதி அனுப்பியது.

"க்ளாஸ்ல துங்குற..அசைன்மென்ட் குடுத்தா எழுதறது இல்ல..நான் எழுதி குடுத்தாலும் வாங்குறது இல்ல..முழிக்கிற நேரம் எல்லாம் அரட்டை..முதல்ல அந்த பசங்க கூட சேர்றத நிறுத்து.."

"டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்.." என்று கோட்டை எழுத்தில் எழுதி நட்பிடம் திரும்ப அனுப்பினேன்.

Monday, September 13, 2010

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மன்னிப்பு

//எஸ்கீமோக்களிடம் லட்டு விற்க முயற்சித்து கொண்டிருந்தான்.//

எஸ்கீமோக்கள் என்று சொல்லக்கூடாதாம்.அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

//வால்பையன் சொன்னது போல் ஐஸ்கீரிம் விற்றியிருக்கலாம். அதை நாய்க்கு எறிந்து ஒரு தமிழ்ப் பிளாக்கனை அசிங்கப்படுத்துகிறார்கள். வெறுத்து போய் ஆப்பிரிக்காவில் அதே லட்டை விற்க முயற்சித்தேன். பூந்தியாக உதிர்த்து தர வேண்டும் அடம் பிடிக்கிறார்கள். உதிர்ப்பதா தமிழ்ப்பிளாக்கனுக்கு வேலை. தமிழ் சமூகத்தில் ஒரு ப்ளாக்கனுக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா.திரும்பவும் அலாஸ்கா,எஸ்கீமோ,லட்டு. திரும்பவும் வால்பையன் வந்து தமிழ்ப்பிளாக்கனைச் செருப்பால் அடித்தால் திருந்து விடுவான் என்று டிவிட்டீனார்.//

என்றாவது நானும் வால்பையனும் சேர்ந்து சரக்கடிக்கும் போது ஒரு சொட்டு கூடக்குறைய வந்து அதற்கு இந்த பத்தி தான் காரணமாகயிருக்கும் என்றால் வால்பையனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

//பலா பட்டறை வந்து செஷல்ஸ் தீவில் கலஹாரி இலக்கியம் படிக்க வர சொன்னார்.//

என்றாவது அவர் கவிதையை நான் மொக்கை என்று சொல்வதற்கும் இந்த வரிக்கும் சம்பந்தமிருப்பதாக இருந்தால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

//ஒரு போர்டில் எதையோ எழுதி முகிலன் அவர் கடையில் வைத்து விட்டார்.//

நான் எந்திரனைப் புறக்கணித்து அதனால் எந்திரன் ஓடாமல் போனதற்கு இந்த வரி தான் காரணம் என்று முகிலன் நினைத்தால் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

//பஸ்ஸில் அவன் கும்மியடிக்க செஷல்ஸ் தீவிற்கு போகவிருந்த டெல்டா நாதன் அவனுக்கு எதிர்வினை வைக்க பஸ் ஓனர் கடுப்பாகி இருவர் காதையும் பிடித்துக் கிள்ளி நீங்கள் வைத்ததை,எடுத்ததை எழுதியதை,பேசியதை நீங்களே எடுங்கள் என்று சொல்லி ஓடும் பஸ்ஸிலிருந்து இறக்கி விட முதலில் டெல்டா நாதன் கீழே விழ தமிழ்ப்பிளாக்கன் அவருக்கு மேல் விழ அவர் அடிப்பட்டு மயங்கி விட்டார்.தனியே செஷல்ஸ் தீவிற்கு போய் சேர்ந்தான் தமிழ்ப்பிளாக்கன்.//

அதுசரி அவர் பெயரில் ப்ளாக்கர் எண்ணை சேர்த்து கொண்டதற்கு காரணம் கேட்பதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தமிருந்தால் அது சரியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

// சுஜாதா இறந்து மூன்று வருடம் ஆனப்பிறகு அவரை விமர்சிக்கும் அகில உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் ஆண்டியப்பன் யார் தளத்தில் போய் சினிமா விமர்சனம் படிப்பார்.அதனால் தான் இந்த உறுதிமொழி. சுஜாதாவும் மிஞ்சும் விஞ்ஞானச்சிறுகதை அவர் இன்னும் ஆயிரம் வருடத்தில் எழுதி விடுவார் என்பதால் அவரை ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டான்.//

சுஜாதாவிடம் மன்னிப்பு கேட்கிறேன்.அகில உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் ஆண்டியப்பனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.காரணம் எல்லாம் சொல்ல முடியாது.

//தற்போது மல்லையா மொழியில் காவியம் எழுதிக் கொண்டியிருக்கிறான். முகிலனின் பதிவைப் பார்த்ததும் தான் தெரிந்து கொண்டான்//

இதில் மல்லையா என்று வந்ததால் எனக்கு கிங்பிஷர் சரக்கு கிடைக்காமல் போய் விட வாய்ப்பிருப்பதால் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

// அலாஸ்காவிற்கு பயணப்பட்டான். விமானத்தின் பக்கத்து இருக்கையில் அனுஷ்கா.//

என்றாவது நான் உலகப்புகழ் பெற்று பிறகு அனுஷ்காவிற்கு இந்த விஷயம் தெரிந்து என்னிடம் வம்பிழுத்தால் அனுஷ்காவிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

//அனுஷ்கா வரப்போவது ஏற்கனவே தெரிந்திருந்ததால் சிங்கம் சூர்யாவிடம் திருடியிருந்த ஷூவைப் போட்டுக் கொண்டு அவள் கவனம் காலுக்குப் போகாமல் அனுஷ்காவை விட உயரமாக நின்று பேசிக் கொண்டிருந்தான்.//

ரத்தச்சரித்திரம் நான் புறக்கணிக்கப் போவதால் அதற்கு இதை காரணம் காட்டி சூர்யா வம்பிழுத்தால் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

இன்று சல்மான் கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.பணக்காரர்கள் இறந்த காரணத்தால் தாஜ் ஹோட்டம் சம்பவம் பெரிதாக பேசப்பட்டது.ஏழை இறந்திருந்தால் இருக்காது என்று சொல்லியிருக்கிறார்.உண்மை தான் அந்த தாக்குதல் சமயம் சல்மான் கான் சிக்கியிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும்.அதற்காக நான் அவரை சாக சொன்னேன் என்று சொல்லி விட வேண்டாம்.

என்னுடைய கருத்தால் தான் கத்ரீனா கைப் பிரிந்தார் என்று சல்மான் நினைத்தால் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.கத்ரீனாவிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

அவுரங்கசீப் ஹீரோ என்று எப்போழுதோ எழுதியிருந்தேன்.அதனால் கனவில் என்னை எப்படி இப்படி சொல்லலாம் என்று மிரட்டும் அவுரங்கசீப்பிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

//தமிழ்ப்பிளாக்கன் அலாஸ்காவில் எஸ்கீமோக்களிடம் லட்டு விற்க முயற்சித்து கொண்டிருந்தான்.யாரும் சீண்டுவதாக தெரியவில்லை.//

எல்லோரும் தமிழில் தான் ப்ளாக் எழுதுகிறோம்.பத்து வருடங்கள் கழித்து வரும் தமிழ் பதிவர் யாராவது என்னைத்தான் தமிழ்ப்பிளாக்கன் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது.

நான் என்னை மட்டும் தான் தமிழ்ப்பிளாக்கன் என்று சொல்லிக் கொண்டேன்.அதனால் என்னிடம் நானே மன்னிப்பு கேட்குக் கொள்கிறேன்.

இன்னும் யாராவது இருந்தால் சொல்லி விடுங்கள்.மன்னிப்பு கேட்டு விடுகிறேன்.அப்புறம் இரும்புத்திரை கேட்கவில்லை என்று சொல்லக்கூடாது.ஏன்னா நான் மிருதங்கம் கத்துக்கப் போறேன்.

அப்படியும் வருபவர்கள் மிருதங்க வகுப்பு முடியும் வரை இதை பார்த்து ரசிக்கவும்.வகுப்பு முடிஞ்சதும் மிச்சத்தை வைத்து கொள்ளலாம்.

Sunday, September 12, 2010

மிருதங்கம் கத்துக்கப் போறேன்




Saturday, September 11, 2010

நேர்மை

படித்து முடித்த இளம் வக்கீல் அவன்.சீனியர் லாயரிடம் ஒருவரிடம் வேலை செய்கிறான்.அவர் அளவிற்கு சம்பாதிக்க தனியே பிரிந்து வருகிறான்.கோர்ட் செல்ல ஏதுவாக பெரிய ஊரில் அறை எடுக்கிறான்.அந்த ஊரில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் வேடிக்கை பார்க்கிறான்.

கள்ளச்சாராயம்,கட்டப்பஞ்சாயத்து என்று எல்லா வித பிரச்சனைகளும் அந்த ஊரில் இருக்கிறது. வருமானமே இல்லாதவனுக்கு பயமும் இருக்காது.முதலில் கள்ளச்சாராயத்தை எதிர்க்கிறான்.மரண அடி வாங்குகிறான்.மருத்தவமனையில் சாக கிடந்து பிழைத்து வருகிறான். திரும்ப எதிர்க்கிறான். அவன் நேர்மையை பார்த்து ஒரு சிறு கூட்டம் சேர்கிறது. இந்த முறையும் அடி விழுகிறது.நிறைய ஆட்கள் இருந்ததால் அடி பங்கு பிரிந்து விழுந்து சின்ன சின்ன காயங்களோடு போகிறது.மக்கள் மத்தியில் மவுசு ஏறிக் கொண்டே வருகிறது.

திரும்ப திரும்ப முயற்சி செய்து கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறான்.அடுத்து கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க கிளம்பும் போது ஒரு பெருங்கூட்டம் அவன் பின்னால் வருகிறது.எல்லாம் சட்டம் தான் செய்ய வேண்டும் நீங்கள் செய்யக்கூடாது என்று பேசியே அடிதடி இல்லாமல் கட்டப் பஞ்சாயத்து ஒழிக்கப்படுகிறது.

எந்த பிரச்சனை என்றாலும் அவன் இல்லாமல் தீர்வே கிடைக்காது என்று மக்கள் நம்பத் தொடங்கிறார்கள்.கொஞ்ச கொஞ்சமாக அசைக்க முடியாத சக்தியாக மாறியப்பின் மக்கள் கொஞ்சமாக கொடுக்கும் காசை வாங்க ஆரம்பிக்கிறான்.

ஒருமுறை பங்காளிகளுக்குள் பிரச்சனை வருகிறது.இவனைத் தேடி வருகிறார்கள்.

அண்ணனிடம் பத்தாயிரம் தாங்க கோர்ட்க்கு எல்லாம் போக வேண்டாம் நிறைய செலவு ஆகும் பேசித் தீர்த்துகலாம் என்று சொல்கிறான்.

தம்பியிடம் கொஞ்சம் கூடுதலாக கேட்கிறான்.தம்பிக்கு சாதகமாக முடித்து கொடுக்க பணம் கேட்டவுடன் தம்பிக்காரன் - என்ன அண்ணே புதுசா பணம் எல்லாம் வாங்குறீங்க.

தம்பி கோர்ட்டுக்கு போனால் இன்னும் அதிகம் ஆகும்.நானும் கொஞ்சம் சம்பாதிக்க வேண்டாமா என்று சொல்கிறான்.

அடுத்த கட்டப்பஞ்சாயத்து இவன் தலைமையில் நடக்கிறது.ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள் என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவன் தான்யா.

கள்ளச்சாராயம் காய்ச்சும் ஆட்கள் இவனிடம் வந்து கேட்க ஊருக்கு வெளியே காய்ச்சுங்க.பக்கத்து ஊர்ல வித்துருங்க.நம்ம ஊருக்குள்ள கொண்டு வராதீங்க.பாதி பணம் எனக்கு தந்துரணும் என்று சொல்கிறான்.

அவர்களும் சொல்கிறார்கள் என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவன் தான்யா.

இவன் குமாஸ்தாவிடம் சொல்லி சிரிக்கிறான். முதல்ல காசு கேட்டிருந்தா எவனாவது தருவான்னு நினைக்கிற.

குமாஸ்தா மனதுக்குள் நினைத்து கொள்கிறான் இது குரங்கு அப்பம் பங்கு வைச்ச கதை மாதிரி இருக்கு.

Friday, September 10, 2010

வினவு தம்பி டீ இன்னும் வரலை

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயத்தை என்னிடம் பெயர் குறிப்பிடாமல் என்னிடம் சாந்தி அக்கா சொன்னதும் நான் திரும்ப திரும்ப அந்த பெயரை கேட்டேன். அவர் சொல்லவில்லை. உண்மை என்று தெரியாமல் என்னால் பொங்க முடியாது.மதாரிடம் நான் அந்த பெயரை கேட்க ஆர்வமாக இருந்ததாக சொல்லியிருக்கிறார். என் மேல் நம்பிக்கையில்லை என்று அர்த்தத்தில் சொல்லியிருந்தால் ஏன் மற்ற பதிவர்களைப் பற்றி என்னிடம் திட்ட வேண்டும். அதனால் நான் கேட்டேன் இன்று அவர்கள் நாளை நானா என்று.மேலும் அவருடைய எழுத்து எனக்கு பிடிக்கும் என்று சொல்லியிருந்தேன்.அப்படி சொல்லும் போதே வரும் கோபத்தை என்னால் அடக்க முடியவில்லை என்று சொன்னார்.

புனைவு குறித்து - முதலில் போரமில் எல்லோரும் எல்லோரையும் பகடி செய்து கொள்வார்கள். அப்படி எந்த பகடியிலும் நான் கலந்து கொண்டது கிடையாது.அதை வைத்து ஷங்கர் முதலில் பதிவு எழுதினார். நீச்சல் பற்றி இந்த பதிவில் வருகிறது. இந்த பதிவில் ஜான்சி அக்கா யார் என்று அவர் கேட்டிருந்தார்.

http://palaapattarai.blogspot.com/2010/07/011.html

அதில் அவர் முகிலனை எழுத அழைத்திருந்தார். முகிலனும் எழுதினார். அதில் அவர் வழக்கம் போல என்னை கேலி செய்திருந்தார்.போரமில் அவர் சொன்ன என்.சி.சி,துப்பாக்கி சுடும் போட்டி எல்லாம் முகிலன் எழுதியிருந்தார்.

http://pithatralkal.blogspot.com/2010/08/blog-post.html

முகிலன் எழுதியிருந்த காரணத்தால் நான் எழுதினேன்.அதிலும் நான் பயந்து ஓடுவது போல் தான் எழுதியிருந்தேன்.படிப்பவர்களுக்கே தெரியும். அதில் இரண்டு வேறு வேறு ஆட்கள் வருகிறார்கள் என்று.. ஆகஸ்ட் 25ம் தேதி வரை ஜான்சி அக்கா என்று எழுதி விட்டார் என்று சொன்னவர். வினவில் வரும் போது இரண்டு நபர்களுமே நான் தான் என்று சொல்கிறார். எந்தளவிற்கு திரிந்து வந்திருக்கிறது.

http://irumbuthirai.blogspot.com/2010/08/blog-post_02.html

இந்த பதிவை நான் போரமிலும் தந்திருக்கிறேன்.அன்று ஏன் போரமில் கேட்கவில்லை.தனி மெயிலில் என்னிடம் விளக்கம் கேட்டார். நான் சொன்னேன் அப்படி அர்த்தத்தில் எழுதவில்லை. அவர் மெயிலில் இருக்கும் பர்கிவ் எவ்ரிதிங்,பர்கிவ் எவ்ரிபடி என்று அனுப்பினேன். இப்படியே தொடர்ந்தால் பில்டரில் போட்டு விடுவேன். நான் அதற்கும் பதில் சொன்னேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் எதிலும் எழுத மாட்டேன் என்று.எனக்கு தெரியாது வடகரை வேலனுக்கும் மெயில் அனுப்பியிருக்கிறார் என்று.வடகரை வேலனும் போரமில் இருக்கிறார். அந்த பதிவும் போரமில் இருக்கிறது. அதிலேயே கேட்டிருந்தால் நான் விளக்கம் தந்திருக்க மாட்டேனா என்ன. வடகரை வேலன் போரமில் போட்டு தட்டிக் கேட்காமல் இருந்திருந்தால் சொல்லியிருக்கலாமே.

நான் விளையாட்டுக்குத் தான் எழுதினேன் சொன்னப்பின் நடந்தது. திருப்பம் என்று ஒரு கதையை எழுதினால் இது ராஜேஷ்குமாரின் கதை என்று சொல்கிறார்.உடனே போரமில் நான் ஆதாரம் கேட்டேன்.முதல் பிரச்சனை இங்கு எழுந்தது.

http://irumbuthirai.blogspot.com/2010/08/blog-post_06.html அந்த பிரச்சனைக்குரிய பதிவு எழுதி நான்கு நாட்கள் ஆனப்பின் இந்த விவாதம் நடக்கிறது.விவாதம் நடந்தது போரமில்.

அடுத்து சாந்தி அக்கா ஒரு பதிவு எழுதுகிறார். அதில் ஒரு பெண்ணின் படத்தைப் போடுகிறார். நான் போய் ஏன் அந்த பெண் படம் போட வேண்டும். ஒரு பதிவர் பேஸ்புக்கில் அவர் வீட்டில் இருந்து எடுத்த படத்தை போட்டாலே கோபம் வரும் இவருக்கு அவர் ப்ளாக்கில் அதுவும் யார் வேண்டுமானாலும் பார்க்குமிடத்தில் அந்த படத்தை போட்டால் பிரச்சனையாம்.இதை தட்டிக் கேட்டவுடன் தான் பிரச்சனை முற்றியது. பெரிய வாக்குவாதத்தின் முடிவில் நீங்கள் இன்னும் அந்த புனைவை நினைவில் வைத்து கொண்டு தான் இப்படி பேசுகிறீர்கள் என்று நான் சொன்னேன். அதெல்லாம் இல்லை நான் மறந்து விட்டேன்.மன்னித்து விட்டேன் என்று சொன்னார்.அவர் அந்த பேஷ்புக் லிங்க் அனுப்பியது எல்லா ஃபோரம் மெம்பர் மெயில் இருக்கும்.பார்த்துக் கொள்ளலாம்.இப்போதும் சொல்கிறேன் பேஷ்புக் ஸ்கீரின்ஷாட் ஆதாரம் என்னிடம் இருக்கிறது.அதை நானும் நிறைய இடத்திற்கு பரப்ப விரும்பவில்லை.

me: naan enna punaivu eluthinen
jmms: thailand kathal athu ithunu thevai illama
2:03 PM me: ungalukku athula than kopam
jmms: that shows u r a very dangerous person arvind
me: athu mukilan eluthi irunthaar
jmms: may be
me: naan defend panninen
en neenga mukilanai kekkavillai
jmms: kobam vara vendiyathukku varavendama
avar kittayum ketten
thani madal la
do u know that
2:04 PM me: ungalukku athu kopathai erpaduthi iruntha sorry
ippadi thaan annaikkum sonnen
jmms: its ok
me: neenga athai manasula vaichi kittu adichaa
naan enna panna mudiyum
naan sandai pottaalum thappunu solreenga
jmms: did i react to u anywhhere in forum?
me: punaivu eluthinaalum thappunu solreenga
2:05 PM jmms: enakku pidikatti thanimadal la ketpen
me: illaiye
jmms: avlothan
me: naan thappu sollaiye
jmms: i dont take revenge
me: neenga kettathu sarithaan
jmms: thats unhealthy
me: naan annaikke sorry kettenaa illaiyaa
jmms: instead i accept defeat & ignore
that is better for me
me: simple question
jmms: ya u did & the chapter was closd
me: naan annaikku soryy sonnen thaane

இது தான் அந்த சாட் வன்மம் இருப்பது போல் தெரிந்தே நான் இன்னொரு முறை மன்னிப்பு கேட்டு இருக்கிறேன்.மன்னித்து விட்டேன் என்று சொல்லி விட்டு பின்னால் இத்தனை பெரிய நடந்திருக்கிறது. நேற்று மணிஜீ முதல் கமெண்ட் போட்டதும் அது வரை மணிஜீ பற்றி பேசாமல் ஃபோரமில் அப்படி சொன்னார் அதனால் நான் சொல்லியிருப்பேன் என்று  இப்போது சொல்கிறார்.ஏன் இன்று சொல்ல வேண்டும்.அன்றே கேட்ட வேண்டியது தானே. இப்படி தான் என்னையும் சொல்வீர்கள் என்று நான் சொன்னேன்.அது தான் நடந்திருக்கிறது.

அப்போதும் அந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த பழைய விஷயம் உள்ளுக்குள் வந்தது. நான் அவருடைய எழுத்து பிடிக்கும் என்று சொன்னேன். எனக்கு யாரை பிடித்தால் அவருக்கு என்ன பிரச்சனை.இப்படி சொல்லும் எனக்கு உன் மேல் கோபம் வருகிறது என்று சொன்னார். அதைத்தான் சஞ்சய் காந்தியின் பின்னூட்டங்கள் உறுதி செய்கிறது. அரவிந்தைப் பற்றி மதாரிடம் சொன்னேன்.அவர் கேட்கவில்லை.உடனே அவர் பெயரை பொதுவில் சொல்லி விட்டார்.அவர் ஆதரவு தெரிவித்திருந்தால் பொதுவில் பெயர் வந்திருக்காது. இப்போதும் அந்த பதிவர் பெயரை சொல்லவில்லை.மதாரிடம் கேளுங்கள் என்று சொல்கிறார். அந்த பதிவர் பெயரை சொல்லட்டுமே அந்த பழைய வன்மத்தையும் எல்லோரும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அவருக்கு பிடிக்காதவர்களை நமக்கும் பிடிக்கக்கூடாது. அப்படி பிடித்திருந்தால் அது அடிமைத்தனம்.என்ன கொடுமை.

இந்த நேரத்தில் செந்தழல் ரவி மிஷனரி பற்றி ஒரு பதிவு எழுத முகிலன் அதை ஆமோதிக்க அவர் எதிர்க்க முகிலன் மேல் வெறுப்பு வந்து விட்டது.

http://irumbuthirai.blogspot.com/2010/08/blog-post_16.html

இந்த பதிவில் வந்து வெறுப்பே இல்லாத மாதிரி பின்னூட்டம்.இந்த பதிவில் நான் பொதுவாக எழுதியிருந்தேன்.அப்போது கோபம் இல்லை போல.பதிவு எழுதி பதிநாலு நாள் ஆகியிருந்தது.

நடுவில் எந்திரன் பிரச்சனை வந்து திரும்ப நான் முகிலனை கிண்டல் செய்து எழுதிய பதிவில் ஆரம்பித்தது பிரச்சனை.

http://irumbuthirai.blogspot.com/2010/08/blog-post_19.html

இப்போதும் புலவன் புலிகேசி தளத்தில் பார்க்கலாம் பாதி வரை முகிலனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்.பாதிக்கு மேல் என் பெயரும் உள்ளே வர ஆரம்பித்தது.முகிலன் செய்வது மட்டுமா சுயசொறிதல் என்று கேட்டு விட்டேன்.தொடர்ந்து போரமில் நடந்த சண்டையில் வார்த்தைக்கு வார்த்தை என்னை முட்டாள் என்று சொல்லி விட்டு வம்பிழுக்கவே நான் சொன்னேன் யார் புத்திசாலி என்று பழைய சாட்டை எடுத்து பார்க்கவும் என்று சொன்னேன். இப்படி சொன்னதும் என்னுடம் சாட்டுக்கு வந்து எனக்கு எதிர்வினை எழுதி பிரபலப்படுத்துங்களேன் என்று சொன்னார்.போரத்தில் சண்டை நடந்தால் அங்கேயே பதில் சொல்ல வேண்டியது தானே.ஏன் என்னுடன் சாட் செய்ய வேண்டும். நான் ஏதாவது சொன்னால் திரித்து விடத்தான். நான் நல்லவன் இல்லை என்று மதாரிடம் சொன்னவர் தொடர்ந்து என் பதிவுகளிலும், என் பதிவு சம்பந்தமாக போரமிலும் சாட்டிலும் ஏன் என்னுடன் உரையாட வேண்டும். இனி எல்லா பதிவர்களும் கொஞ்சம் உஷாராக இருங்கள். இதை பாலபாரதியின் பஸ்ஸில் அவர் மறுக்க ஆதாரம் கேட்க நான் அந்த சாட்டை விட்டேன்.இப்போது சொல்கிறார் அது கோபத்தில் சொன்னது என்று சொல்கிறார். அது போல வினவில் பதிவு எழுதும் போது பேஸ்புக் விஷயத்தை சொல்லவில்லை.ஒரு பதிவர் வந்து கேள்வி கேட்டதும் சொல்கிறார். இப்போது நான் கேட்கிறேன் அந்த கயவன் பதிவர் யார் இப்போது தான் வினவு தான் இருக்கிறார்களே.சொல்லட்டும் பேசுவோம்.

வினவு நர்சிம் விஷயத்தில் மொத்த பிடிஎப் கொடுத்த புத்திசாலிகள் ஏன் எனக்கும் முகிலனுக்கும் மொத்த லிங்கையும் தரவில்லை. மொத்த லிங்கையும் தந்தால் எல்லோருக்கும் அது பிரச்சனைக்குரியதாக மாறாதே.

மிரட்டல் என்றால் என்ன என் தரப்பை நிரூபிக்க என் சாட்டை வெளியிடுவதா. இல்லை இவர் இந்த ஜாதி நாங்கள் வீட்டிற்கே போவோம் என்று சொன்னதா. லீனா மணிமேகலை விஷயத்தில் தான் நாகரீகமாக நடந்து கொண்டதை எல்லோரும் பார்த்தார்களே. அப்துல்லா விஷயத்தில் எதிர்தரப்பில் இருந்து மாறிய பெண்ணை லூசு என்று திட்டுகிறார்கள்.என்ன நேர்மை.அவர்களுக்கு வேண்டிய பெண்ணாக இருந்தால் போராட்டம்.இல்லை என்றால் லூசு.அடிமைத்தனம் என்று சொல்வது.

வினவு உங்களுடைய நாட்டாமைத்தனம் என்றுமே நடக்காது.ஒரு நாள் உங்கள் எல்லோருக்கும் நேரம் தந்திருந்தேன்.மண்குதிரை என்று என்னை சொல்லி விட்டு தொடர்ந்து என்னை தொடர்வதால் சாட்,ப்ளாக்,பஸ்,டிவிட்டர் எல்லோவற்றிலும் தடை செய்கிறேன்.

பாலபாரதியின் பஸ்ஸில் எல்லாம் விவாதித்தப்பின் இரண்டு வாரங்கள் எடுத்து கொண்டு உட்கார்ந்து ஜோடித்து எழுதினாலும் இது தான் உண்மை.அவர் என்னுடைய சாட்டை அனுப்பியிருந்தால் நன்றாக படித்து பார்க்கவும்.கடவுளாக இருக்கும் நீங்கள் அன்று சொம்புத் தூக்கிகளாக இருந்தீர்கள்.அந்த சாட் இல்லை என்றால் என்னிடம் வரவும் நான் தருகிறேன்.

பழைய பகை தான் உங்கள் மனதில் இருக்கிறது.அவர் என்னை எதிர்வினை எழுத சொல்லும் போதே குழந்தைகளை அடிக்க மாட்டேன் என்று சொன்னேன்.அந்த பதிவரின் பெயரோடு வாருங்கள்.மதார்,லீனா மணிமேகலை என்று கேட்டா அவர்களைப் பற்றி எழுதுனீர்கள்.

இப்போது மதார் புகைப்படம் அனுப்பி கொண்டிருக்கிறாராம் சாந்தி அக்கா.என்னிடம் புகைப்படம் கேட்டார் நான் என்னுடைய சின்ன வயது படத்தை கொடுத்தேன்.இந்த கேடித்தனத்தை எல்லாம் தகர்த்ததால் தான் இவ்வளவு பிரச்சனையும்.

புகைப்படம் அனுப்புவது,அடுத்தவர் படத்தை வெளியிடுவது எல்லாம் சைபர் கிரைமில் வராதா. சொல்லுங்க சாந்தி அக்கா. ஏன் வினவு ஆள் வைத்து வீட்டில் மிரட்டவா.

நான் அகஸ்ட் இரண்டாம் தேதி மற்றும் ஏழாம் தேதி இந்த பிரச்சனைக்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறேன். பர்கிவ் எவ்ரிதிங்க் பர்கிவ் எவ்ரிபடி என்று சொல்லியபடியே மூன்று வருட பகையை மதார் மூலம் தீர்க்க முயன்று அவர் மறுத்ததும் அவர் அடிமை அவருக்கும் மிரட்டல் என்று சொல்வது அருமை. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் நாங்கள் வருவோம் என்று சொல்வது புல்லரிக்கிறது.நீங்கள் வந்தால் தான் பிரச்சனை. அன்று சொன்னதை தான் நான் இன்றும் சொல்கிறேன். அந்த பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மன்னிப்பு கேட்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. நான் எதையும் நேர்மையாக ஒத்துக் கொள்பவன்.

me: naan annaikke sorry kettenaa illaiyaa
jmms: instead i accept defeat & ignore
that is better for me
me: simple question
jmms: ya u did & the chapter was closd
me: naan annaikku soryy sonnen thaane


அந்த மன்னிப்பை என்னால் இன்றும் கேட்க முடியும்.நான் மன்னித்து விட்டேன் என்று சொல்லி அடிக்க மாட்டார் என்று என்ன நிச்சயம். நிச்சயமில்லாவிட்டாலும் நான் கேட்கிறேன்.

இன்னைக்கும் சொல்றேன்.ஸாரி.

மன்னித்து விடுங்கள்.

எனக்கு இப்படி கேட்பதால் எந்த ஈகோவும் இல்லை.ஆனால் தயவு செய்து வினவிற்கு பயந்து விட்டேன் என்று நினைத்து விட வேண்டாம்.இப்போது தான் தெரிந்தது. இவ்வளவு நாளாக ஒரு வினவு என்ற குழந்தையிடம் சண்டைப் போட்டு இருக்கிறேன் என்று.

இன்னொரு சாட்டில் உங்களை என் அக்கா மாதிரி தான் நினைத்திருக்கிறேன் என்று சொன்னேன்.இன்றும் சொல்கிறேன். அப்படி இன்றும் நினைப்பதால் ஒரு வேண்டுகோள்.இனி ஏதாவது போரமில் பிரச்சனை வந்தால் அதை அங்கேயே தீருங்கள்.சாட்டில் பேசி அடுத்த நபர்களிடம் குறை சொல்வதை நிறுத்துங்கள்.

நான் இங்கு இறக்கி வைத்து விட்டேன்.வினவு என் மீதாத உங்கள் வன்மத்தை எவ்வளவு தூரம் எடுத்து செல்கிறீர்கள் என்று பார்ப்போம்.

பைத்தியமான கடவுள்

ரொம்ப பசி.கல்லைத் தின்னாலும் கரையிர வயசு தான்.அதுக்காக கல்லை முழுங்க முடியுமா.எனக்கும் ரத்தம் எல்லார் மாதிரியும் அதே அளவு தான் இருக்குமா.இரத்தம் ஏற்கனவே ரெண்டு தடவை குடுத்தாச்சு.குடுத்த ரத்தமே ஊர மூணு மாசம் ஆகும் சொல்ராங்க.அடுத்த மாசம் விக்க முடியாதா.பசியை அடக்க வழி கேட்டால் ஒரு பைத்தியக்காரன் பீடியை காட்டுறான்.பீடி பொறுக்க போன எல்லாம் என் நேரம்.ஒண்ணும் சரியில்ல.எவனோ ஒட்ட ஒட்ட வலிச்சியிருக்கான்.

இருக்கிற காசுக்கு ஏதாவது படம் பாக்கலாம்னு பாத்தா "இன்னும் மீசயே முளைக்கல அதுகுள்ள என்ன.." இப்படி கேட்டே என் வாய அடைக்கிறாங்க.வேலை கேட்டு போனா ஜாதியை கேக்குறான்.ஏதாவது சுணங்குனா ஜாதியைச் சொல்லி திட்டுவான்.திட்டு வாங்கிட்டு நிக்க நான் சொரணை இல்லாத ஜென்மமா.உடனே கை நீளும்.வீட்ட விட்டு ஓடி வரும் போது வாகனத்தை தான் எடுக்கல எம் பெய்ரையாவது ஞாபகமா கேட்டு இருக்கலாம்.

இப்போ எங்க அப்பாவும்,அம்மாவும் எங்கே தேடி அலையிராங்க தெரியலையே.பதினாறு வயசாக இன்னும் நாலு மாசம் தான் இருக்கு.இத மறக்காம இருக்க காரணம் பதின்னறு வயசுல கல்யாணம் நடக்கும்னு ஒருத்தன் சொன்னான்.அதுகுள்ள வீட்ல சண்டை போட்டுட்டேன்.வீட்டுல பாத்த பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு ஓடியாந்திருந்தா அவளை பாக்காத சோகத்தில் தாடியாவது வளர்ந்து இருக்கும்.வந்து நாலு மாசம் ஆகப் போகுது.மண்ணை சாப்பிடதுக்கு அடிச்சாங்க.இங்க என்னாடான்னா மண்ணுல கூட கலப்படம்.வாயிலே வைக்க முடியல..

இனிமே பொறுக்க முடியாது.வேலைய காட்ட வேண்டியது தான்.வாசம் மூக்கை துளைக்குது.திருட வேண்டியது தான் பாக்கி.ஐயோ அதுக்குள்ள இந்த பையன் வந்துட்டானே.சரி அதுக்கு பின்னாடி ஒளிய வேண்டியது தான்.ஏதோ படம் மாதிரி இருக்குதே.அதுல முன்னாடி இருந்து எதையோ எடுத்து வாயில் போடுறான்.அவங்க அம்மா வந்துட்டாங்க.

"ஏண்டா சாமி கும்பிடாம தின்ன.." என்ன பதிலே சொல்ல முடியாம ஒரு படத்த காட்டுறான்.

"என்ன கிருஷ்ணரா..அவரா சாப்பிட்டார்.." அந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு சந்தோஷம் தாங்கல.என் பேரு கிருஷ்ணன்.

"இல்ல முருகர் சாப்பிட்டாரா.." அம்மா காட்டிய அடுத்த படத்தைப் பார்த்தவுடன் வயித்துல புளி.அதுவும் என்னை மாதிரியே இருக்குது.

"இல்ல ராமரா.." இனி குழப்பம் தாங்க முடியாம அவங்க முன்னால போய் குதிச்சேன்.அவங்க பயந்துட்டாங்க.ராமர் படத்தை ஊத்துப் பாத்தேன்.பக்கத்தில் ஒரே ஒரு மனைவி தான்.சோசியக்காரன் சொன்னது ஞாபகம் வந்தது."எனக்கு ரெண்டு பொண்டாட்டி..".அதுவரைக்கும் அதிர்ச்சியில கத்தாம இருந்தாங்க.

"நான் முருகனா இல்ல கிருஷ்ணனா.." இப்படி கேட்டது தான் தாமதம்.

அம்மாவும் பிள்ளையும் கத்த ஆரம்பிச்சாங்க.."பைத்தியம்..பைத்தியம்.."

கால் போன போக்குல ஓடினேன்.முதல்ல வரப் போறது பழனியா இல்ல துவாரகையா ?

Thursday, September 9, 2010

வினவு நீங்க யாருக்கு அடியாள்

முதன் முதலில் ஜூலை 12ம் தேதி தான் சாந்தி என்ற பதிவர் எனக்கு மதார் மூலம் அறிமுகம்.அதற்கு முன் ப்ரோமில் விவாதிப்பார்கள்.v பார்த்திருக்கிறேன்.எனக்கு பதிவு எழுதவே நேரம் போதாத காரணத்தினால் அதை பார்த்தாலும் ரீட் என்று கொடுத்து படித்தது போல் செய்து விடுவேன். இதற்கு முன் அவர் பதிவை நான் படித்திருக்கிறேன்.அது நர்சிம் தொடர்பாக அவர் எழுதிய பதிவு. அவருக்கு எல்லோருக்கும் அறிவுரை சொல்வது தான் வழக்கம்.அதற்கு நானும் முகிலனும் கேட்காத காரணத்தால் பொய் மேல் பொய் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். அதை எழுதி தந்தது யார் என்று எனக்குத் தெரியும். பொய் எப்படி என்று பார்ப்போம்.

முதலில் வினவு பற்றி அப்போது தப்பாக சொன்னார்களாம்.அதனால் ஒரு பதிவை நர்சிமிற்கு ஆதரவாக எழுதி விட்டாராம்.நல்ல வேளை வினவைப் பற்றி தப்பாக சொன்னது நானும்,முகிலனும் என்று சொல்லவில்லை.அப்படியென்றால் அந்த பதிவு வினவை எதிர்த்து தானே இருக்க வேண்டும்.அது பாதிக்கப்பட்ட பெண் பதிவருக்கு அறிவுடை சொல்லியிருந்தது.வினவு என்று லேபிள் கூட இல்லை.இந்த நேரத்தில் நான் நர்சிமிற்கு ஆதரவாக வினவை மட்டும் வெளுத்து கொண்டு இருக்கிறேன்.எனக்கு வினவைப் பற்றி யாரும் சொல்ல வேண்டாம்.தள்ளி நின்று பார்த்தாலே தெரியும்.பெண்ணியக் காவலர்கள் லீனா மணிமேகலை விஷயத்தில் எப்படி நாகரீகமாக போராடினார்கள்,எழுதினார்கள் என்று உலகிற்கே தெரியும். இன்னைக்கும் சொல்வேன் என்ன என்னைக்கும் சொல்வேன் நர்சிம் விவகாரத்தில் மட்டும் அல்ல என்னை கண்டாலே வினவுக்கு பயம் தான்.அது தான் உண்மை.இந்த விஷயம் இரண்டு வாரங்களுக்கு முன்பே அவர்களுக்குத் தெரியும். ஏன் எழுதவில்லை.மண்டபத்தில் எழுத வேண்டாமா. இதை எழுதியவர் யார் என்று கூர்ந்து கவனித்தாலே தெரியும்.நன்றாக தெரியும்.

அடுத்து நான் தீபாவின் பதிவின் சுட்டியை நான் தந்து கொண்டே இருந்தேன் என்று சொல்கிறார். எனக்கு எவ்வளவு தைரியம் உண்டு என்று எல்லோருக்குமே தெரியும். நான் நேராகவே அடிப்பேன்.எனக்கென்ன அடுத்தவர் முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு பொய் சொல்ல வேண்டிய அவசியமா. என்னிடம் அவர் ஒரு பத்து முறை சாட்டில் பேசியிருப்பார்.நான் அப்படியே வெளியிடுகிறேன்.அதில் யாரை எல்லாம் அவர் திட்டியிருக்கிறார் என்று பார்த்தால் இப்போது வினவிற்கு ஓட்டுப் போட்ட பதிவர்கள் கூட அதில் வருகிறார்கள்.அதில் தீபா சுட்டி இருந்தால் சொல்லவும்.பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா. அவருக்கும் ஒரு பதிவருக்கும் மூன்று வருட பகை. அவரை பற்றி சொன்னால் நான் கேள்வி கேட்பேன்.அவர் கோபத்திற்கு என்னை பயன்படுத்தலாம் என்று முயற்சித்திருப்பார் போல.ஆனால் நடந்த விஷயத்தைக் கிசுகிசு பாணியில் சொன்னால் பொங்க நான் என்ன வினவா.நான் யார் அந்த பெண் என்று தொடர்ந்து கேட்டேன்.கிசுகிசு சொன்னால் நான் கேட்பேன்.கடைசி வரை சொல்லவேயில்லை.ஆதாரம் இல்லாமல் நான் யாருக்கும் சப்போர்ட் செய்ய மாட்டேன். உடனே ஒரு நாள் நடந்த சண்டையில் அவரை எனக்கு பிடிக்கும் என்று சொன்னேன். இப்படி சொல்லும் போதே எனக்கு கோபம் வருகிறது என்று அப்போதே சொன்னார்.எந்த நாள் வேண்டுமானாலும் என் மேல் கோபம் திரும்பலாம் என்று நினைத்து எல்லா சாட்டையும் என்னிடம் இருக்கும் மெயில் அனைத்திலும் சேமித்து வைத்தேன். அப்படி சொன்னால் யாருக்காவது கோபம் வருமா.அதனால் தீபா சுட்டி என்று அடித்து விடுகிறார். இப்போ கூட என்னால் ஓட்டு மொத்த சாட்டையும் வெளியிட முடியும். அதில் அவர் திட்டியிருக்கும் பதிவர்கள் எண்ணிக்கை நிறைய இருக்கிறது.அந்த சாட்டிலே நான் கேட்டேன்.இன்று அவர்கள் நாளை நானா என்று. வினவிற்கு பதிவு எழுதும் போது யாருடனாவது கோர்த்து விடாமல் எழுத முடியாது.அவர்கள் எப்படிப்பட்ட பொய்யர்கள் என்று நான் நிரூபித்து காட்டியிருக்கிறேன். அந்த கோபம் இன்று வெளியே வந்துள்ளது.

நான் எல்லோருக்கும் எதிர்வினை எழுதுவதால் என்னை குப்பை என்று ஒதுக்கு வைத்தாராம்.இது அடுத்த பொய்.எனக்கு எதிர்வினை எழுதி பெரிய ஆள் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் அவர். அதை வினவு இன்று நிறைவேற்றி இருக்கிறார்கள்.அந்த சாட்டை நான் பாலபாரதி பஸ்ஸில் விட்டேன். அவர் ஏன் அந்த பஸ்ஸை எடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

என்னை குப்பை என்று சொல்லும் வினவு,சாந்தி அக்கா எல்லோரும் என்னை பாலோ செய்கிறார்கள் என்று தெரியவில்லை.வினவு கும்பல் என்னை பஸ்ஸிலும்,டிவிட்டரிலும்,ப்ளாக்கிலும் பாலோ செய்கிறார்கள். சாந்தி அக்கா என்னை ப்ளாக்கில் ஃபாலோ செய்கிறார். ஏன் குப்பையை தொடர வேண்டும்.

அதற்கு ஆதாரம் ஸ்கீரின்ஷாட்ஸ்.

மேலும் முப்பதாம் தேதி நான் விட்ட பஸ்ஸில் சாந்தி அக்கா கமெண்ட் உள்ளது.இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் யார் யாரை சீண்டுகிறார்கள்.தொடர்ந்து ஏதாவது இப்படி செய்தால் நான் கோபம் அடைந்து ஏதாவது திட்டுவேன் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்.

இன்னும் என்ன எல்லாம் இருக்கிறது என்று  தொடர்ந்து வரும்.







என்னுடைய ப்ளாக்கில் பாலோயர் எண்ணிக்கை - 226

பஸ் பாலோயர் எண்ணிக்கை - 84

டிவிட்டர் பாலோயர் எண்ணிக்கை - 86

தயவு செய்து வினவுத் தோழர்கள் எல்லாம் ஓடி விடுங்கள்.இல்லை நான் தடை செய்வேன்.நான் ஒண்ணும் என்னை தொடருங்கள் என்று என்றாவது சொல்லியிருக்கிறேனா.இல்லை உங்களை தான் தொடர்ந்து இருக்கிறேனா.

எதற்கு தடை செய்வேன் என்று சொல்கிறேன் என்றால் நீங்கள் பரிபூரண யோக்கியர்கள்.என்னை போன்ற புனைவு எழுதும் துஷ்டன் அருகில் இருக்கலாமா.கொஞ்சம் தள்ளி இருக்கட்டும் என்ற ஆசையில் தான்.

ஸ்டே டியூண்ட்.

மாதவராஜ்,வினவு இவர்களுக்கும் ஜென்மபகை என்று எல்லோருக்கும் தெரியும்.புனைவு விஷயத்தில் எதை எல்லாம் மறைத்தார்கள் என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்.