Monday, February 28, 2011

இந்தியா உலகப்கோப்பை அடிக்குது

சச்சின் ஓபனிங் இறங்காத உலகப் கோப்பை மூன்று.அதுல பங்களாதேஷ், ஜிம்பாபே,இலங்கை(1992) மாதிரியான கத்துக்குட்டிகள் எல்லாம் இந்தியாவை துவைச்சி எடுத்திருக்கு. சச்சின் ஓபனிங் செய்த உலகப்கோபையில் 1996 அரையிறுதி,2003 இறுதி.2011 முதலிடம். சேவக் மாதிரி டம்மி டீம் கூட அடிக்கிற மேட்ச்சை எல்லாம் நான் பாக்கவே மாட்டேன். பயபுள்ள தேவையில்லாம சச்சினை ரன் அவுட் செய்து விட்டது.

கடந்த ஐந்து உலகப் கோப்பையிலும் ஐந்து முறை ஆசிய அணிகள் தான் இறுதிக்கு வந்திருக்கிறது. பாகிஸ்தான் 2,ஸ்ரீலங்கா 2, இந்தியா 1. பாகிஸ்தானும்,இலங்கையும் ஒரு முறை கோப்பையை ஜெயித்திருக்கிறார். அதே போல ஒரு முறை தோல்வி அடைந்தியிருக்கிறார்கள்.ஆதை போல இந்தியா இரண்டாவது முறையாக இந்தியா வரும்.ஏற்கனவே தோற்றுப் போய் போனதால் இந்தியா அதை ஜெயிக்கும்.

1983லில் கிளைவ் லாயிட் தலைமையில் மூன்றாவது முறை ஜெயிக்கவிருந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை அதை செய்ய விடாமல் தடுத்தது இந்திய அணி தான். இந்த முறை ரிக்கி பாண்டிங் அதை செய்ய காத்திருக்கிறார். இந்தியா அதை தடுக்கும்.

முதல் டிவெண்டி டிவெண்டி உலகப்கோப்பையில் பாகிஸ்தானுடன் மேட்ச் டை செய்தோம். இறுதியாட்டம் இந்தியா பாகிஸ்தான் சாம்பியன்.அரையிறுதியில் ஆஸி டவுசரைக் கழற்றி ஓட விட்டோம்.இந்த முறை இங்கிலாந்துடன் டை. ஆஸி இறுதிப் போட்டிக்கு வந்தாலும் திரும்பவும் வேட்டி அவிழ்ப்பு நிகழும் என்று சொன்னால் அது மிகையாகாது. பயிற்சி ஆட்டத்தில் வேற ஜெயித்திருக்கிறோம். சவுத் ஆப்ரிக்கா கூட ஜெயிக்க வாய்ப்பிருப்பு.வெஸ்ட் இண்டீஸ் கூட தான் சொல்ல முடியவில்லை. இந்த மாதிரி பவுலிங் போட்டா நெதர்லாந்து கூட முன்னூறு சேஸ் பண்ணும்.

Sunday, February 27, 2011

காதல் கசக்குதய்யா

இவ தான் நமக்குன்னு முத தடவையா ஒரு பொண்ணைப் பார்த்ததும் எப்படிடா தோணும்னு பசங்க கூட பேசிக்கிட்டு இருந்தோம்.ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொன்னாங்க.பல்ப் எரியும்,பாட்டு கேட்டும்,ஷாக் அடிக்கும்னு சொன்னதை எல்லாம் பாக்கும் போது நான் எங்க போய் சொல்லி அழுறதுன்னு தெரியாம நான் என்ன சொல்லி நக்கல் அடிக்கலாம்னு கண்ணை மூடி யோசிக்கிட்டு இருக்கும் போது தான் எனக்கு ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது. வார்த்தைகள் கேக்குறதுக்கு முன்னாடி பாட்டு நின்னுருச்சி.

"மச்சி எனக்கு பாட்டு கேட்டுச்சி..உங்களுக்கு ஏதாவது பாட்டு கேட்டுச்சா.." என்று பக்கத்தில் இருந்தவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்."இல்லடா..எனக்கு கேக்கலையே.." என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

"பஸ் ஏன் இங்க நிக்குது..இப்போ எங்க பொண்ணு ஏறிச்சி.."

"உனக்கு இதுல நம்பிக்கையே இல்லயே..அப்புறம் எவ ஏறினா என்ன.."

"ஒத்துக்கிறேன்..பாட்டு கேக்கும்,ஷாக் அடிக்கும்..வேறன்னடா பல்ப் எரியும் போதுமா..இப்போ சொல்லு.."

"அவ வேற காலேஜ் பொண்ணு..பஸ் மாறி ஏறிட்டா..இறங்கி போயாச்சி.."

"எனக்கு மட்டும் ஏண்டா மச்சி இப்படியெல்லாம் நடக்குது.." எரிச்சலா சொல்லிட்டு அது என்ன பாட்டுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.லிரிக்சை என்னால கண்டுப்பிடிக்கவே முடியல. அது இன்னும் எரிச்சல் வர காரணமாயிருந்தது.

நான் அதை அப்படியே மறந்துட்டேன். நாம காதலிக்கிற பொண்ணை விட நம்மள காதலிக்கிற பொண்ணு அப்படியெல்லாம் பஞ்ச் விடலாம் தான்.ஆனா இந்த வீணாப் போன மனசு ஏத்துக்க மாட்டேங்குதே. அசைண்மெண்ட் எழுத சோம்பேறித்தனம் பட்டப்போ அவ எழுதி தந்தா.

ஏன் எனக்கு எழுதி தர்றன்னு கேட்டதுக்கு எல்லாம் என் தலையெழுத்துன்னு சலிச்சிக்கிட்ட.அப்போ நீ அழகாயிருக்கேன்னு சொன்னேன்.இன்னொரு அசைன்மெண்ட் பாக்கியிருந்தது நினைவுக்கு வரல.

"இன்னொரு அசைன்மெண்ட் இருக்குல..அதுக்குத்தான் அப்படி சொல்றீயா.."

"உண்மையிலே அழகாயிருக்க.."

"பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதாம்..என்னை விட்டு ஓடிரலாம்னு பாத்த கொன்னே போட்டுருவேன்.."

இப்படி எந்த கவலையில்லாம திரிஞ்ச நேரத்துல தான் ஒருத்தன் ஓடி வந்து "மச்சி உனக்கு வேவ்ஸ் ஒர்க் அவுட் ஆகுதுடா..உனக்கு பாட்டு கேட்டுச்சே..அந்த பொண்ணு நம்ம காலேஜ்ல சேர்ந்திருக்கா.."

"எந்த கிளாஸ்.."

"இ.சி.ஈ.."

அப்புறம் பாத்துக்கலாம்னு வழக்கம் போல கிளாஸ்ல தூங்கிட்டேன். "டேய் எழுந்திரு வேவ்ஸ் நம்ம கிளாஸ்கே வந்தாச்சி.."

"ஏன் அவளுக்கு வேலையே இல்லையா..ஒண்ணு பஸ் மாறி ஏறுறா..இல்ல கிளாஸ் மாறி போறா.." என்று
சலித்துக் கொண்டேன்.

வந்ததும் நான் உங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினீரிங் எடுக்கிறேன்.அந்த லாஸ்ட் பெஞ் பசங்க அப்படியே பர்ஸ்ட் பெஞ்சுல உக்காருங்க.

"டேய் நம்மள தான் சொல்றாங்க.."

"முடியாது.."

"அவுட்.."

வெளியே போகும் போது கேட்டேன். "அந்த பொண்ணு இதானா.."

"ஆமாண்டா.."

"அப்புறம் ஏன் பாட்டு கேக்கல.."

"அது முத தடவை மட்டும் தான் கேக்கும்.."

"நீ வேணா ஒரு ரொமாண்டிக் லுக் விட்டு பாரேன்.."

"எப்படி கவுண்டமணி மாதிரியா.."

அன்னைக்கு ஆரம்பிச்சது.அதுக்கு அப்புறம் எல்லா கிளாஸ்லையும் வெளியே தான்.அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட் ஆகிட்டேன். ஒருநாள் பொறுமையை இழந்து என்னை எல்.கே.ஜி பையன் மாதிரி நடத்தாதீங்கன்னு அவுட் ஸ்டாண்டிங்ல அவுட் டேக் மட்டும் போய் ஸ்டாண்டிங் மட்டும் இருந்தது. கிளாஸ்ல உள்ள நிக்க ஆரம்பிச்சிட்டேன்.

"ஒரு வேளை அந்த பாட்டு காதல் கசக்குதய்யா பாட்டாயிருக்குமோ.." எங்க குரூப் உள்ள நிக்கும் போது ஒருத்தன் கேட்டான்.

"இருக்கும் இருக்கும்.." கோரஸாய் எல்லோரும் சொல்ல

"ஏண்டா வெந்தப்புண்ல விரலை விடுறீங்க..ஏம்பா என்னை பாத்தா இவங்களுக்கு எப்படி தெரியுது.." சொல்லிக்கிட்டே மேல பாத்தேன்.

"என்ன உனக்கும் அவங்களை முன்னாடியே தெரியுமா..உங்க அஞ்சு பேரை மட்டும் இந்த வாட்டு வாட்டுது.."

"முத தடவையா ஒரு நாள் பஸ் மாறி நம்ம பஸ்ல ஏறிச்சே..அப்போ தான் நாங்க பாத்தோம்..வேற எதுவும் எனக்கு தெரியாது.." நல்லபடியா அந்த பாட்டு விஷயத்தை எடிட் பண்ணிட்டு சொன்னேன்.

"ஆமா அப்போ நான் கூட அவங்க பின்னாடியே ஏறினேன்..அப்புறம் இவங்களுக்காக இறங்க வேண்டியதா போச்சி.."

ஒருவேளை இவளை பாத்து பாட்டு கேட்டிருக்குமோன்னு ஒரு சந்தேகம். கேட்டா உதை விழுமே. "என்னை முத தடவை பாக்கும் போது உனக்கு ஏதாவது பாட்டு கேட்டிச்சா.." கேட்டுட்டு அவளையே பாத்தேன்.

"காதல் கசக்குதய்யா பாட்டு கேட்டுச்சி.."

அது எப்படிடா என்னை மட்டும் ஊர்ல ஒருத்தன் விடாம லந்தைக் கொடுக்கிறான்களோன்னு தெரியலைன்னு நினைச்சிக்கிட்டேன்.

பாட்டுக்கான பொண்ணை கண்டுப்பிடிச்சாச்சி.பாட்டு தான் தெரியல. அப்புறம் எல்லாம் இல்லாம போன ஒருநாளில் தம்பி வந்து சொன்னான்."கண்ட நாள் முதலாய்னு ஒரு படம்..உனக்கு ரொம்ப பிடிக்கும்..பாரு"

படம் பார்த்துட்டு வரும் போது தான் அந்த பாட்டு கண்ட நாள் முதலாய் இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா படத்துல லைலா பிரசன்னாவும் மாற்றி மாற்றி அடித்து கொள்வார்கள்.லைலா அப்பா ஒரு பேக்கு. என்னை விட்டுரு பிரசன்னா கெஞ்சுவார். இப்படி எல்லாம் முரணாயிருந்தால காதல் கசக்குதய்யா பாட்டு தான் கேட்டுக்குணும்னு இப்போ நான் நம்புறேன்.

Saturday, February 26, 2011

காதலால் அழிந்த ட்ராய்

நமக்கு இரட்டை இதிகாசங்களாக மகாபாரதம்,ராமாயணம் இருப்பது போல கிரேக்கர்களுக்கு இலியாத் மற்றும் ஒடிசியஸ் இரட்டை இதிகாசங்களாக இருக்கிறது.

ப்ரியமின் தங்கை ஹெசயொனை கிரேக்கர்கள் கடத்தியதில் ஆரம்பிக்கிறது கதை. தங்கையை அனுப்ப சொல்லி ப்ரியம் கேட்டும் அவர்கள் மறுக்கிறார்கள். இது டிரோஜன்களின் முறை.ஹெலனைத் தூக்கி வருகிறான்.கிரேக்கர்கள் ஹெலனைஅனுப்பி விடுமாறு கேட்கிறார்கள். இது பிரியமின் முறை.மறுக்கிறான்.போர் நடக்கிறது.ட்ராய் எரிகிறது.

பாரீஸ் பிறக்கும் போது அவனுக்கு அம்மாவுக்கு கொள்ளிக்கட்டைகள் பறப்பது போல கனவு வருகிறது. மகாபாரதத்தில் துரியோதனன் பிறக்கும் போது சகுனம் சரியிருக்காது. கர்ணனைத் தண்ணீரில் விட்டது போல பாரீஸை கொல்ல சொல்லி பிரியம் ஒருவனிடம் கொடுக்கிறான். கொல்ல மனமில்லாமல் அவன் இதா மலையில் மிருங்கள் சாப்பிடும் என்று நினைத்து பாரீஸை அங்கு போட்டு விடுகிறான். பெண் கரடி அவனுக்கு பால் கொடுத்து காப்பாற்றுகிறது.வீட்டிற்கு தூக்கி வந்து வளர்க்கிறான்.

ப்ரியத்தின் போட்டிகள் வைக்கிறான். பாரீஸ் கலந்து கொண்டு ஜெயிக்கிறான். இவன் யார் கீழ்ஜாதி பையன் என்று இளவரசர்கள் சண்டைக்கு போக ப்ரியத்திற்கு உண்மை தெரிய வருகிறது. பாரீஸ் இளவரசனாகிறான். கர்ணன் அங்க தேசத்து மன்னன் ஆகிறான்.

இப்படி நிறைய ஒற்றுமைகள். சரி கதைக்கு வருவோம். ஹெலனைக் கடத்தியப்பின் கிரேக்கர்கள் படைத் திரட்டுகிறார்கள். அவர்களுக்கு தெரியும். அக்கீலிஸ் மற்றும் ஒடிசியஸ் இருந்தால் தான் ட்ராய் நகரத்தை அழிக்க முடியும் என்று. அக்கீலிஸின் தாய்க்கு தெரியும். அவன் ட்ராய் போனால் திரும்ப மாட்டான் என்று. ஒடிசியஸின் பிரச்சனை வேறு.அவன் ட்ராய் போனால் அவன் இதாகா திரும்பி வர இருபத்தியொரு வருடங்கள் ஆகும். இருவருக்குமே(இருவரின் குடும்பத்துக்குமே) போரில் கலந்து கொள்ள விருப்பமில்லை.

அர்ஜூனன்,கிருஷ்ணன் மாதிரி இரண்டும் கதாபாத்திரங்களும் கோல்மால் செய்வதில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் இல்லை. இருவரும் இல்லாத போரில் என்ன சுவாரஸ்யத்தை கண்டு விட முடியும். ஒடிசியஸ் பைத்தியம் போல நடிக்கிறான்.அவர்கள் வரும் போது ஏரில் கழுதையையும்,காளையையும் பூட்டிக் கொண்டு நிலத்தில் உழுது கொண்டிருக்கிறான்.உப்பை தூவுகிறான். வந்ததில் ஒருவன் ஒடிசியஸின் மகனை ஏரின் முன்னால் போடுகிறான்.இவன் ஏர் ஓட்டுவதை நிறுத்துகிறான். பைத்தியமில்லை என்று ஒடிசியஸைக் கண்டுப்பிடித்தவனுக்கு ட்ராய் போர் நடக்கும் போது ஒரு பெரிய ஆப்பாக வைக்கிறான்.

அக்கீலிஸைத் தேடி வருகிறார்கள்.அவனுடைய அம்மா அந்தப்புரத்தில் மகனை ஒளித்து வைத்து விடுகிறாள். எங்கு தேடியும் அக்கீலிஸ் கிடைக்கவில்லை.அந்தப்புரத்தில் உள்ள பெண்களுக்கு பரிசு கொடுத்து விட்டுப் போகிறோம் என்று சொல்லி அந்தப்புரத்தில் நுழைகிறார்கள். வாள்,வில்,ஈட்டி, திரவியங்கள் என்று பொதுவாக வைத்து எடுத்து கொள்ள சொல்கிறார்கள். அக்கீலிஸ் வாள்,வில், ஈட்டியையும்,பெண்கள் திரவியத்தையும் எடுக்க அக்கீலிஸை ஒரே அமுக்காக அமுக்குகிறார்கள்.
அர்ஜூனன் கொஞ்ச காலம் பேடியாக நடித்தது நினைவுக்கு வரலாம். கிருஷ்ணனுக்கு பாதத்தில் அடிப்பட்டால் தான் சாவு வரும் என்பது போல அக்கீலிஸிற்கு அங்கு அடித்தால் தான் சாவு வரும். துர்வாசருக்கு பாதம் தவிர எல்லா இடத்திலும் பாயாச அபிஷேகம் கிருஷ்ணன் செய்த காரணத்தால் இந்த சாபம்.அக்கீலிஸின் தாய் காலைப் பிடித்து கொண்டு நதியில் அவனை முக்குகிறாள்.கைக்குள் இருக்கும் பாதம் நனையவில்லை. இருவரும்(அ மற்றும் கி) பாதத்தில் அம்பு பாய்ந்து இறக்கிறார்கள்.

திருமணம் ஆன பெண் இரண்டு கதையிலும் கடத்தப்படுகிறாள். கிரேக்க கதையில் விருப்பத்துடன்(கிரேக்கர்கள் பொறுத்தவரை அது கடத்தல் தான்). ட்ராய், இலங்கை இரண்டும் தீப்பிடித்து எரிகிறது. குறிப்பிட மறந்த ராமாயண, இலியாத் ஒற்றுமைகள். ராமாயணத்தையும்,மகாபாரத்தையும் மிக்ஸியில் போட்டு அடிச்ச மாதிரி ஒரு பீலிங்.

பிறப்பில் பாரிஸ் கர்ண,துரியோதன கலவையாக இருந்தால் அக்கீலிஸ் இறப்பில் அர்ஜூன,கிருஷ்ண கலவையாக இருப்பது தான் நகைமுரண். அக்கிலீஸ் இறந்தப்பின் நம்ம கிரேக்க கிருஷ்ணன் ஒடிசியஸ் கடமையை செவ்வனே செய்கிறார். மகாபாரதப் போர் முடிந்தப்பின் துவாரகை எப்படி அடித்துக் கொண்டு அழிந்ததோ அதே போல் இதாகாவிலும் மக்கள்ஸ் அடித்து கொண்டு சாகிறார்கள்.

மாய யதார்த்த புனைவு

சின்ன வயசுல நிறைய தடவை அப்பாகிட்ட அடி வாங்கியிருக்கிறேன். நல்லா விவரம் தெரிஞ்சு அடி வாங்கினதுன்னா காலேஜ் ரெண்டாவது வருஷம் படிக்கும் போதுன்னு நினைக்கிறேன். அதுக்கு காரணம் பாலகுமாரன் என்று இன்னைக்கு நினைக்கும் போது சிரிப்பு வருது. என் வாழ்வின் சிக்கலான கட்டத்தைக் கடந்து கொண்டிருந்தேன்.சரியா சாப்பாடு இல்ல.சரியா தூக்கம் இல்ல.வீட்ல பேசுறது இல்ல.சிரிக்கிறது இல்ல. சரியா சாப்பிடாம இருந்ததால அடிக்கடி வயிற்று வலி வேற. இனி என் குடும்பத்துல எவனும் இன்ஜினியரிங் படிக்கக் கூடாதுன்னு நினைச்சிக்கிட்டேன். அப்போ தான் அந்த பாலகுமாரன் நாவல் படிக்க கிடைச்சுது.கதையில வர்ற கதையின் நாயகியையும் அவள் அக்காவையும் என்னால் ரொம்ப நாளைக்கு மறக்க முடியல. அக்கா வாயிற்று வழியால் துடிச்சி கேன்சர் வந்து செத்து போவா. எனக்கும் அப்படி ஏதாவது இருக்குமோன்னு நேர்ல சொல்ல முடியாம அம்மா நான் செத்துருவேன்னு பயமாயிருக்கு.என்ன நடந்தாலும் என்னை காப்பாத்திருங்கன்னு எங்கையோ ஒரு பப்ளிக் பூத்ல இருந்து போன் பண்ணி சொல்லிட்டேன்.

வீட்டுக்கு போனா வரவேற்க என் குடும்பமே இருக்கு.யாரும் எதுவும் பேசல.அப்பா வந்து பளார்னு ஒரு அறையை விட்டுட்டு ஒண்ணுமே பேசாம போயிட்டார். அடுத்த நாள் எண்டோஸ்கோப்பி.இதுக்கு கேன்சரே பராவயில்லன்னு நினைச்சிக்கிட்டேன். டாக்டர் அப்பா கிட்ட நீங்க வேணா வெளிய இருங்க.நான் உங்க பையன் கிட்ட தனியா பேசணும்னு ஒரே அடம் பிடிச்சார். நான் தான் அவர் இருக்கட்டும் நீங்க கேளுங்க.சிகரெட்,தண்ணி பழக்கம் உண்டான்னு கேட்டார். இல்ல நானும் வேற எதோ கேக்கப் போறீங்கன்னு பயந்துட்டேன்னு சிரிச்சேன். அது ஆரம்ப நிலையில் இருக்கிற அல்சர்னு தெரிஞ்சது.

மியூசிக் அகடமிக்கு எதிர்ல நின்னுக்கிட்டு இருந்தோம்.அப்பா பெதுவா சொன்னார்."நீ மாய யதார்த்த உலகத்துல வாழாத..அது எங்களுக்கு நல்லதில்லை." புரியாத மாதிரி பாத்தேன். "பாலகுமரான் நாவல் எல்லாமே மாய யதார்த்த புனைவு தான்..எல்லோருக்கும் அது யதார்த்தமா தெரியும்.ஆனா அது மாயாஜாலம்..எவனாவது ஒருத்தனுக்கு தான் நடக்கும்..அந்த ஒருத்தன் நீயில்ல.." என்று சொல்லிட்டு புரிஞ்சுதா என்று கேட்டார்.தலையைக் குறுக்கு வெட்டாக வெட்டினேன். "கதையில அக்காவுக்கு கேன்சர்..உனக்கு வந்துருமோன்னு பயப்படுற..தங்கை என்ன பண்ணினா இந்த பாசம்,பந்தம் எல்லாம் தவிர்க்க லீவிங் டூகெதர் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறா. அப்படி வாழ முடிவு எடுத்திட்டு முதல் முதலா தனியறையில் பாக்கும் போது தாயம் விளையாடுறாங்க.. உனக்கு அதுவும் நடக்காது.இதுவும் நடக்காது.இது தான் மாய யதார்த்தம்" சொல்லிட்டு புரியுதான்னு அவர் கேக்கல.நானும் புரிஞ்சதுன்னு சொல்லல.அப்புறம் ரெண்டு பெரும் ஒண்ணுமே பேசிக்கல.அது தான் பாலகுமாரனை கடைசியா படிச்சது.

2004 செல்லமே ரீலிசாகியிருந்த நேரம்.முதல் நாள் முதல் ஷோ. விஷாலும்,ரீமா சென்னும் மும்பை போகும் முன்னாடி செஸ் ஆடுவார்கள். அப்பா சொன்னது காதுல கேட்டுது."இது மாய யதார்த்த புனைவு.. உனக்கெல்லாம் நடக்காது..". நான் பலமா சிரிச்சிட்டேன். எவ்வளவு சீரியஸா பேசுறாங்க இந்த பக்கி மட்டும் பல்லைக் காட்டுதுன்னு ரெண்டு ரோ என்னை திரும்பி பாக்குது. மாய யதார்த்த புனைவின் நீட்சியா தம்பி விஸ்காம் சேர்ந்திருந்தான்.எல்லா திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையில் ஏதாவது ஒரு தியேட்டர் வாசலில் நின்றுக் கொண்டிருப்பான்.

Thursday, February 24, 2011

கண்ணில் தெறிக்கும் வானம்

விடியகாலை ஆறு மணிக்கே மொபைல் அடித்து தள்ளியது.ஆறு முறை எடுக்காமல் அமர்த்தி விட்டேன். இது இடைவெளி குறைகின்ற தருணம் என்ற ரிங்டோனிற்கு ஏற்ப ஒரு வழியாக இடைவெளியை குறைத்து கண்ணைத் திறக்காமலே எடுத்து பேசி விட்டேன்.

"காலங்காத்தாலே எதுக்குடா என் உயிரை வாங்குறீங்க.." கத்தினால் "உன்னை உடனே பாக்கணும் வா.. கோவிலுக்கு வா.." பதிலுக்கு ஒரு கத்தல்.

செமஸ்டர் ரிசல்ட் எதுவும் வந்து விட்டதா அரியர் எதுவும் விழுந்து விட்டதா என்று வயிற்றில் லேசாக புளியைக் கரைத்தது.

யாருக்கும் தெரியாமல் தொண்ணூறுகளின் மிச்சமான டிவிஎஸ் சுசூகியை நகர்த்தினால் "என்ன ஆறு மணிக்கே வண்டி எடுக்கிற..ரிசல்ட் வந்துரிச்சா.." உள்ளே இருந்து குரல் வருகிறது.

"இல்ல பால் வாங்கிட்டு வர்றேன்.." என்று பதிலுக்கு காத்திருக்காமல் வண்டியை எடுத்தால் "அரியர் வைச்சிட்டு ரீ வால்யூவேஷன் காசு வாங்க எங்கிட்ட வராதே.."

"அட ராமா..சும்மாயிருங்க..நேத்து தான் எக்சாம் எழுதியிருக்கிறேன்..அதுக்குள்ள ரிசல்ட் வந்துரப் போகுது.."

அங்கே போய் கோவில் வாசலில் பிங்க் கலர் சுடிதாரில் நிற்கும் பிகரை சைட் அடித்து கொண்டிருந்தால் "கூப்பிட்டது நான்..பாக்குறது அங்கேயா.." குரல் கேட்டது.

"அதெல்லாம் இல்லயே.." மேலும்கீழுமாய் ஒரு மாதிரி தலையை ஆட்டி சைட் அடித்ததை உறுதி படுத்தினேன்.

"சரி இன்னைக்கு என்ன நாள்.."

"சனிக்கிழமை..இது கேக்கத்தான் வர சொன்னியா.."

"வேற ஒரு நாளும் இல்லையா.."

"இல்லையே..என்ன நாள்.."

"என் பிறந்த நாள்..ஒரு கிப்ட் தான் தரல..போன் பண்ணி சொன்னாத்தான் என்ன கேடு.." கோவில் அர்ச்சனையும் மீறி இவ அர்ச்சனை தான் காதில் நிரம்பி வழிந்தது.

"சொல்லவேயில்ல.."

"சரி வர சொன்னா..நேத்து போட்ட ஷாட்ஸ்,சட்டையில பட்டன் இல்ல..குளிக்கல சரி அட்லீஸ்ட் மூஞ்சு கழுவிட்டு வந்தா தான் என்ன.."

"நீ தானே அவசரமா வர சொன்ன.."

"இதெல்லாம் நல்லா சமாளி..பிறந்தநாள்னு சொன்னப்பின்னாடியும் வாயைத் திறந்து பதில் ஹேப்பி பர்த்டேன்னு சொல்ல மாட்டியா..எல்லாம் கேட்டு வாங்கணுமா.."

"பல்லு தேய்க்கலையேன்னு பாத்தேன்.."

"நீ எல்லாம் வேஸ்ட்..என் ஸ்கூல் பிரண்டு பனிரெண்டு மணிக்கு போன் பண்ணி சொன்னான் தெரியுமா.."

"சரி நான் வேஸ்ட் தான் விடு.."

"கோபம் மட்டும் பொத்துக்கிட்டு வந்துரும்..அவன் கிப்ட் எல்லாம் தந்தான் தெரியுமா.."

சும்மாவே நாக்குல சனி புட் போர்ட்ல டிராவல் பண்ணும்.பல்லு வேற தேய்க்கலையா சம்மணம் போட்டு உட்கார

"போய் அவனையே கல்யாணம் பண்ணு..என்னை ஆளை விடு.."

கோபத்துல இந்த பொண்ணுங்களுக்கு எப்படித்தான் இங்கீலிஸ் வருமோ தெரியல.என்ன என்னமோ திட்டிட்டு கடைசியா மூணு வார்த்தை சொன்னா.

"என் மூஞ்சிலே முழிக்காதே.."

"சரி.." என்று சொன்னதும் கோபித்து கொண்டே போனவளிடம் குடுக்க வைத்திருந்த கிப்டை தேடினால் காணவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து இது இடைவெளி குறைகின்ற தருணம் என்று மொலைல் சிணுங்க வண்டியோட்டிக் கொண்டே எடுத்தால் "ஐ ஹேட் யூ.." என்று போனில் கத்துகிறாள்.

Wednesday, February 23, 2011

பிச்சைக்காரப் பாத்திரம்

திடீரென போன் செய்த இப்போ எந்த டெக்னாலஜி வேலை செய்கிறாய் என்று கேட்டான்.

ஏ.எஸ்.பி .நெட் என்று பதில் சொன்னால் போன வாரம் கோல்ட் பியூசன் என்று சொன்னாயே என்று கேட்டான். ஆமா மச்சி அதுக்கு முந்தைய வாரம் ஏ.எஸ்.பி.அதுக்கும் முன்னாடி ஆரக்கிள் என்று சொன்னேன்.

ஏண்டா உன் கரியரை நீ தொலைக்கிற..எதுலையாவது ஒரு டெக்னாலஜில வேலை பாருடா என்று கோபத்தில் திட்டினான்.

மச்சான் நீ எதுல வேலை பாக்குற.

அவன் பதில் சொன்னவுடன் நீ வேலை செய்ற அதே டெக்னாலஜில உனக்கு டேமஜரா நான் வருவேன் மச்சி என்று சொல்ல.

நீ ஒரு பிச்சைக்கார பாத்திரம்டா என்று சொல்லி விட்டான். அவனிடம் சொன்னது மாதிரியே அவன் டெக்னாலஜியில் வேலை பாக்குறேன்.

ராஜா வீட்டின் தங்கத்தட்டாக இருப்பதை விட பிச்சைக்கார பாத்திரமாக இருப்பதில் தான் அதிக சுவாரஸ்யமாகயிருக்கிறது.

பழைய மேலாளர் ஒரு நாள் சொன்னார் - "வி ஆர் ஜாக் ஆப் ஆல் மாஸ்டர் ஆப் நன்" என்று சொன்னதோடு இல்லாமல் "நான் என்னை மாதிரியே உன்னையும் ஆக்கிட்டேன்..". "ஐ மிஸ் யூ.." என்று மெயில் செய்திருந்தார். என்னையும் பிடிக்கும் ஜீவன்கள் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார்கள்.

அவர் அடிக்கடி சொல்லும் வாசகம் நினைவுக்கு வந்தது.

“A human being should be able to change a diaper, plan an invasion, butcher a hog, conn a ship, design a building, write a sonnet, balance accounts, build a wall, set a bone, comfort the dying, take orders, give orders, cooperate, act alone, solve equations, analyze a new problem, pitch manure, program a computer, cook a tasty meal, fight efficiently, die gallantly.”

அதில் fight efficiently இதை மட்டும் மிக சரியாக கடைப்பிடிக்கிறேன் என்று நினைக்கிறேன். வாழ்வோடு போராடுகிறேன்.அவ்வளவு எளிதாக எதையும் என்னை ஜெயிக்க விடுவதில்லை. இதை சொன்னதற்கு முட்டாள் என்று நண்பன் திட்டுகிறான். உன் வேலையை மட்டுமல்ல வாழ்க்கையே தொலைக்காதே.சென்னை வந்துரு.நீ ஏன் சென்னைக்கு வர மறுக்கிறாய் என்று எனக்குத் தெரியும்.மறந்துரு.எங்களோடு இரு என்று அடிக்கடி சொல்பவனை திட்ட தமிழ் அகராதியில் கெட்ட வார்த்தைகளைச் சலித்து கொண்டிருக்கிறேன். வன்முறையாய் அன்பைத் திணிப்பவனைத் திட்டுவதற்கு இன்னும் வார்த்தைகள் கிடைக்கவில்லை.

Thursday, February 10, 2011

ஜெகன் மோகினி

ஜெகன் - அவன் பெயர் மட்டும் அல்ல அவன் தான் ஜெகத்தை ஆள வேண்டும் என்று நினைப்போடு வாழ்பவன். திறமைசாலி ,அழகன் , இன்னும் சொல்ல போனால் என்னுடைய நண்பன்(இதை விட ஒரு தகுதி வேண்டுமா சொல்லுங்கள்).

சிறுவயதில் இருந்தே ஏதாவது ஆராய்ந்து கொண்டே இருப்பான். வெற்றி பெறுகிறதோ இல்லையோ விஞ்ஞானத்தோடு வியாக்கியானம் பேசுபவன்.

பெரும் பணக்காரரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள மேலே கூறிய தகுதிகளே போதுமானதாக இருந்தது. ஆராய்ச்சி வெற்றி பெற்றால் கிடைக்கும் பெரும் ஆதாயத்தை நினைத்தே அவர் இவனுக்கு பெண் கொடுத்து இருந்தார்.சொல்ல மறந்துட்டேன்.அவன் மனைவி பேர் மோகினி.

தொடர்ந்து நடந்த முயற்சியில் அவரது பணம் மட்டும் தான் கரைந்து இருந்தது.அவன் மனம் கரையவில்லை.மனைவியின் வெகுளிதனத்தைப் பயன்படுத்தி பணம் தேவைபடும் அளவு வாங்கி கொள்வான்.அவன் நோக்கம் எல்லா பேர் தெரியாத நோய்களையும் தடுக்கும் மருந்தைக் கண்டுப்பிடிப்பது.குறிப்பாக எய்ட்ஸ்.இதை சொன்னவுடன் தான் அவருக்கு ரொம்ப சந்தோஷம்.(ஒருவேளை அவருக்கு இருக்குமோ..அடப்பாவி இது தான் கேரக்டர் அஸாசினேஷன்..)

இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது.வாய் தகராறு விரைவில் அடித்து கொள்ளும் கட்டத்தை எட்டும் என்று மட்டும் தோன்றியது.

சில வாரங்களுக்குப் பிறகு

ஜெகன் தொலைபேசியில் அழைத்து பதற்றமாக பேசினான்."மச்சான்..சீக்கிரம் லேப்புக்கு வா..ஒரு சிக்கல்.."

போய் பார்த்தால் லேப் முழுவதும் அலங்கோலமாக கிடந்தது.இருவரும் சேர்ந்து சரி பண்ணா ஆரம்பித்தோம்.தூரத்தில் ஒரு மனிதகுரங்கு மயங்கி கிடந்தது.

"ஜெகன் என்ன ஆச்சு.."

"எல்லாம் அந்த குரங்கு பண்ண வேலை..அட்டகாசம் செய்து இப்படி அலங்கோலம் ஆகி விட்டது.."

"உங்க மாமனாருக்கு தெரிஞ்சா என்ன பண்றது.." என்று சொன்ன என்னை அவன் சட்டை செய்யவில்லை.

கொஞ்ச நாள் கழித்து அந்த குரங்கை எடுபிடி வேலைக்கு பழக்கியிருந்தான்.அதுவும் கூடமாட வேலை செய்தது.

"மச்சான் காபி வேணுமா.."

அந்த குரங்கே தயார் செய்து கொண்டு வந்தது.காபி குடித்தால் சக்கரை இல்லை..

"ஜெகன் சக்கரை இல்லை.."

கோபத்தில் அந்த குரங்கை அடிக்க ஆரம்பித்தான்.தடுக்க சென்றவன் அவன் சொன்னதைக் கேட்டு நின்று விட்டேன்.காரணம் அவன் அந்த குரங்கை அடிக்கும் போது அதை அவன் மாமனார் பெயரை சொல்லி சொல்லி அடித்து நொறுக்கி விட்டான்.எனக்கு இருந்த சந்தேகம் வலுத்தது.

"ஜெகன் இது உங்க மாமாவா.."

"ஆமாடா..உனக்கும் உண்மை தெரிந்து விட்டது..உன்னையும் மாத்தி விட வேண்டியது தான்..வேலை செய்ய இன்னும் ஒரு குரங்கு கூடியிரும்.."

"ஜெகன் வேணாண்டா..இது சரியில்ல.." என்று ஓட முயற்சிக்கும் போது பிடித்து விட்டான்.

"மோகினி அந்த ஊசியை எடுத்துட்டு வா.." என்று கத்த ஊசி கொண்டு வந்த மோகினியும் குரங்காக மாறியிருந்தாள்.அவளையும் மாற்றியிருக்கிறான்

ஆனால் அவனிடம் ஊசியை கொடுக்காமல் அவனை அந்த பெண்குரங்கு குத்தி விட்டது.ஜெகன் என் கண் முன்னாலே ஒரு குரங்காக மாறியிருந்தான் இல்லை மாறியிருந்தது.(மட்டமான கிராபிக்ஸ் படம் பார்த்தது போல் ஒரு உணர்வு)

ஒரு மாதம் கழித்து.. வண்டலூர் ஜூவில்..

அந்த ஊழியர் என்னிடம் சொல்லி கொண்டு இருந்தார்."நீங்க போன் பண்ணி சொன்னாதாலே நாங்க எல்லாத்தையும் பிடிச்சி இங்க கொண்டு வந்துட்டோம்..அந்த சின்ன ஆண் குரங்கு எப்போ பார்த்தாலும் எதையாவது நோண்டுது..பெரிய ஆண் குரங்கு கிட்ட ஏதோ கேக்குது..உடனே இரண்டும் சண்டை போடுது..அந்த பெண் குரங்கு யார் பக்கம் போறதுன்னு தெரியாம முழிக்குது.."

"சரி இங்க வந்தப்பிறகும் பணம் கேக்குறத நிறுத்தல போல.." என்று நினைத்து கொண்டு "ஒரு குட்டி குரங்கு வந்தா எல்லாம் சரியாயிடும்.." என்று அவரிடம் சொன்னேன்.

"சார் நீங்ககளே ஒரு பெயர் வைங்க.." அவர் சொல்ல..

"ஜெகன்.." என்று என் வாய் அனிச்சையாக முணுமுணுத்தது.

"ரொம்ப நல்ல பெயர்..இந்த ஜூவையே இது ஆளும் சார்.." என்று சொல்லி கொண்டு நகர்ந்தார்.

ஜெகன் என்னை பார்த்து கொண்டேயிருந்தது. நான் திரும்பி பார்த்தேன்."இது நீ இருக்க வேண்டிய இடம்.." என்று சொல்வது போல் இருந்தது.

Wednesday, February 9, 2011

வாசகர் கடுதாசி - அதி தீவிர இலக்கியவாதி ஆவதற்கான முயற்சி

காலேஜ்ல படிக்கும் போது மாப்பிள்ளை பெஞ்ச்ல இருக்கிறதுல ஒரு சௌகர்யம் இருக்கத்தான் செய்யுது. தூங்கலாம்,சாப்பிடலாம்,பேப்பர் பட்டாசு வெடிக்கலாம்,ராக்கெட் விடலாம் இப்படி பல லாம். தண்ணி தெளிச்சி விட்டிருந்த கோஷ்டியை அடக்குறதுக்காகவே புதுசா ஒருத்தங்க வந்து இருக்கிறதா காலேஜ் முழுக்க ஒரே பேச்சு. எங்களுக்கு அந்த குடுப்பினை இல்ல போலிருக்கேன்னு நினைச்ச உடனே ஜாவா எடுக்கிறதுக்கு அவங்க வந்தாங்க.வந்ததுல இருந்து ஒரே மோதல்.அன்னைக்கு ஆரம்பிச்ச ஜாவா வெறுப்பு இன்னும் விட்ட மாதிரி தெரியல. அந்த செம் முழுக்க நான் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட். வெளியவே நிப்போம்.என்னை எல்லாம் எப்படி புதுசா புதுசா சாத்துறதுன்னு நினைப்போடவே வருவாங்க போல.

அன்னைக்கு அதிசயமா என்னை வெளியே போக சொல்லலை.புதுசா ஏதோ ப்ளான் இருக்குன்னு சுதாரிப்போட நான் தயாராயிருந்தேன்." இன்னைக்கு நம்ம அவுட்ஸ்டாண்டிங் அரவிந்த் கிளாஸ் எடுப்பார்.." இப்படி சொல்லிட்டு ரியாக்சனேயில்லாம என்னை பாக்க.

"நீங்க பாடம் எடுத்து தானே நான் எல்லாம் அவுட்ஸ்டாண்டிங்கா திரியிறேன்..நான் எடுத்தா எல்லோரும் அப்படி ஆயிருவாங்க..உலகத்துலையே பெரிய தப்பு என்னை மாதிரியே மத்தவங்களை மாத்துறது தான்.." அவங்க போட்ட பீமரை அசால்டா தட்டி விட்ட திருப்தி எனக்கு.

"மச்சான் எப்படிடா இப்படி எல்லாம் பேசுற.." இன்னொரு மாப்பிள்ளை

"சும்மாயிருடா..சாமி சாமகொடைக்கு தயாரா நிக்குது..நேத்து உதிரி பூக்கள் படம் பாத்தேன்..விஜயன் பேசுற வசனம் அது.."

ஸ்டேஜ்ல ஏறினாலே எனக்குன்னு இல்ல எங்க பசங்களுக்கே பில்டிங் ஸ்ட்ராங்கு.பேஸ்மெண்ட் வீக்கு கதை தான். ஒரு கிளாஸ் எடுக்க முடியல.நீ எல்லாம் என்னை கேள்வி கேக்குற முதல்வன் அர்ஜூன் ரேஞ்சுக்கு என்னை உசுப்பேத்தி விட்டு பாத்தாங்க.

ஒரு நாள் முதல்வராயிருந்தப் பிறகு பெட்ரோல் ஊத்தி கொளுத்தி ஜட்டியோட நிக்க விடுற சீன் கண்ணு முன்னால வந்து போச்சு. நான் முடியவே முடியாதுன்னு சொல்ல.

"ஸ்டேஜ்ல ஏறினப்பிறகு நீ சொல்றது தான் சரின்னு நினைச்சிக்கோ..கீழே இருக்கிறவன் எல்லோரையும் முட்டாளா நினைச்சுக்கோ..நான் கூட அப்படித்தான் நினைச்சுப்பேன்..குறிப்பா உன்னை முட்டாளா நினைச்சிப்பேன்.."

"முட்டாள் மத்தவனையும் முட்டாளா தான் பாப்பான்..நான் உங்களை இது நாள் வரைக்கும் புத்திசாலியா நினைச்சது தப்பாயிருக்கும் போல.." அடுத்த பீமரை அவுட் ஆப் ஸ்டேடியத்துக்கு தூக்குன திருப்தி எனக்கு.

"மச்சான் இதுவும் உதிரி பூக்கள் வசனமா.."

"டேய் நீயே கொளுத்த பந்தம் கொடுப்ப போல..சும்மாயிருடா.."

"அவுட்.." என்று விரல் கதவு பக்கமாக நீண்டது.அப்பவாவது சும்மா போயிருக்கலாம். அவுட்டுக்கு கையை மேல தூக்கணும்னு சொல்ல அடுத்த செமஸ்டர்லையும் அவுட் ஸ்டேண்டிங்கு ஸ்டூடண்டாவே வாழ்ந்தேன்.

அப்படியே வருஷம் தவ்வி ஓடியது.எத்தனை நாளைக்கு தான் உருண்டோடியதுன்னு எழுத. பழைய அராஜகத்தை எல்லாம் காட்ட வழியில்லாம நானும் அலைய ஆரம்பிச்சேன்.பதிவுலகம் தான் அராஜகம் அக்கப்போருக்கு வழின்னு தெரிய வர இங்கேயும் அவுட் ஸ்டேண்டிங் தொடர்கிறது.

இங்க அந்த லேடி லெக்சுரர் மாதிரி இங்க எழுத்தாள,இலக்கியவியாதிங்க தொல்லை. தெரியுதோ தெரியலையோ அடிச்சி விடுறது. அப்புறம் கேள்வி கேட்டா பின்னூட்டப் பெட்டியை மூடுறது. என்ன சொன்னாலும் நம்ம ஆளுங்க எதிர்வினை வைக்கிறேன்னு நிஜமாவே வினையை வைக்க "என்னை மாதிரி எழுத முடியுமா..இல்ல அவரை மாதிரி எழுத முடியுமான்னு அனானிஸ் வந்து சவுண்ட கொடுக்கும். அவரை மாதிரி நான் ஏன் எழுதணும் அதான் அவர் இருக்காரேன்னு சொல்லிக்கிட்டு விட்டுரணும்.

நாம எதிர்வினை மட்டும் தான் வைக்கணும். அதை அவர் படிக்க மாட்டாரேன்னு நினைச்சி வாசகர் கடிதமா எழுதினோம். ஒரு எழுத்துப்பிழை,கருத்துப்பிழை இல்லாம எழுத முடியல.நீ எல்லாம் பேச வந்துட்டன்னு உள்ள வைச்சி அடிச்சி அனுப்புவாங்க.அப்புறம் போனை போட்டு.

அதனால நான் என்ன சொல்றேன்னா நீங்க எழுதுறது மட்டும் தான் எழுத்து. விமர்சனத்துக்கு எல்லாம் மாறிக்கிட்டேயிருந்தா ஒரு நாளும் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்டா மாற முடியாது.எங்க லெக்சுரர் சொன்னது தான் உங்களைத் தவிர எல்லோரும் முட்டாள் தான். அதனால வாசகர் கடிதம் எல்லாம் உங்களுக்கு நீங்களே எழுதிக்கோங்க.

அப்பரசன் டிப்பரசன் சப்பரசன் ஒன் டே தே வில் ஸ்ட்ரைக்.

Tuesday, February 8, 2011

கனவு தொழிற்சாலை

"ஆனந்தா..இந்த உதவிகள் போதுமா..தேவை எதுவும் இருந்தால் கேள்..செய்ய காத்திருக்கிறேன்.."

"வேண்டாம் இளவரசே..தற்போது எதுவும் தேவையில்லை.."

"இளவரசர் என்பதேல்லாம் அரண்மனையில்..இங்கு அதுவும் உன் வீட்டில் நான் உன் நண்பன்.."

"சரி இளவரசே.."

"மறுபடியும் இளவரசா.."

இளவரசர் கையோடு கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரிக்க முயல..

"என்ன ஓலை..நல்ல செய்தி எதுவும் உண்டா இளவரசே.."

"நான் திருமணம் செய்ய போகும் பெண்ணின் படம் இருக்கிறது..அவள் அங்கத நாட்டின் இளவரசி குந்தவை.."

"பயிற்சி செய்து கை அழுக்காக இருக்கிறது..அங்கே வையுங்கள் பார்க்கிறேன்.."

"ஆனந்தா மறக்காமல் பார்..அவளை பற்றி உன் வாயால் கேட்க வேண்டும் போல உள்ளது.."

நான் இளவரசரை துரத்துவதிலே குறியாக இருந்தேன்.என் காதலி சேடிப்பெண் வரும் நேரம்.இளவரசரை அனுப்பி விட்டு அவளுக்காக காத்திருந்தேன்.அரை நாள் ஊடலையும் அரை நிமிடத்தில் கரைத்து விடுவதில் நிபுணி.வரும் போதே கொஞ்சம் பதற்றமாக இருந்தாள்.

"என்ன இவ்வளவு நேரம்.." ஆரம்பமே கோபம் தான்.

"நாம் இந்த ஊரை விட்டே சென்று விடலாம்..எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.."

"பிச்சி மாதிரி பேசாதே..நாம் எதுக்கு ஓட வேண்டும்..அதுவும் ஊரை விட்டு.."

"எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.."

"அதனால் என்ன நான் உன் வீட்டில் பேசுகிறேன் நாச்சியார்.."

"நான் யார் என்று தெரிந்தால் இப்படி பேச மாட்டீர்கள்.."

நான் அவளுடைய பதற்றதை ரசித்து கொண்டிருந்தேன்.மேல் மூச்சு வாங்கும் போது அவள் அழகாக தெரிந்தாள் அல்லது தெரிந்தது.

"நீங்கள் யார் இளவரசி..சொல்லுங்கள்.."

"நேரம் காலம் தெரியாமல் விளையாடாதீர்கள்..கந்தர்வ மணமாவது புரிந்து கொள்வோம்..புரிந்து கொள்ளுங்கள்.."

"மனங்கள் கலந்த பின் என்ன கந்தர்வ மணம் வேண்டி கிடக்கிறது..இனி ஏகாந்த வாழ்வு தான்.." என் கை அவள் மார்புக் கச்சையின் மூடிச்சில் இருந்தது.

"தற்போது இது வேண்டாம்.." அவள் குரல் எனக்கு தூரத்தில் ஒலிப்பது போல் இருந்தது.அவள் மூச்சின் வெப்பத்தால் எனக்கு வேர்வை வழிந்தது.

மார்புக்கச்சை முழுதாக என் கையில் வரவும் குடிலின் முன் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.வந்தது இளவரசர்.நாங்கள் இருந்த கோலமோ அலங்கோலம்.

"குந்தவை..என்ன செய்கிறாய் இங்கு..துரோகி ஓலையைப் பார்க்க கொடுத்தால் அவளையே முழுதாக ரசிக்கிறாயா.."

"இளவரசே இது நாச்சியார்.."

"ஆம் குந்தவை நாச்சியார்..அங்கத நாட்டின் இளவரசி.." என்று இளவரசர் பேசுவது எனக்கு உறுமுவது போல் இருந்தது.

"இளவரசே..நான் சொல்வதை தயவு செய்து.."

"நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் தொரோகி..என் முகத்தில் இனி இருவரும் விழிக்க வேண்டாம்.." என்று தெற்கு நோக்கி ஓட ஆரம்பித்தார் இளவரசர்.

"இளவரசே..அங்கு போகாதீர்கள்..அங்கு பள்ளம் இருக்கிறது.." என்று சொல்லிக் கொண்டே அவரை நோக்கி ஓடவும்..அவர் பள்ளத்தில் விழவும் சரியாக இருந்தது.

பின்னால் வந்த காவலாளிகள் நிலைமையை ஒருவாராக ஊகித்து மன்னரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் சாராம்சம் இதுதான் - "நான் இளவரசி குந்தவை நாச்சியாரை கெடுக்க முயன்றதாகவும்..தடுக்க வந்த இளவரசரை பள்ளத்தில் தள்ளி கொலை செய்த்தாகவும்..அதனால் எனக்கு தண்டனை சிரச்சேதம்.."

சாட்சி - குந்தவை நாச்சியார்.

எனக்கு தண்டனை தர கத்தியோடு கொலையாளிகள் வர..அலறி கொண்டே விழித்து விட்டேன்.தலையைத் தொட்டு பார்த்து கொண்டேன்.பயங்கர காய்ச்சல்.வாந்தி வருவது போல் உணர்வு.ஆனால் வரவில்லை.இதுவரை எடுத்த மாதிரி நினைவும் இல்லை.

ஆபிஸ் மீட்டிங்க்.போய் தான் தீர வேண்டும்.அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதபடி மனமும்,உடலும் சோர்ந்து கிடந்தது.

பக்கத்தில் இருந்த அந்த பெண் பேசுவது எங்கோ தூரத்தில் கேட்பது மாதிரி இருந்தது.

அவளை பார்க்க முயற்சி செய்தேன்.முடியவில்லை.கிளிவேஜ் வழியாக வெள்ளையாக ஏதோ தெரிந்தது.

"குந்தவை..ஆடையை சரியாக அணிந்து கொள்.." என்று உளரத் தொடங்கினேன்.

"ஐம் வீணா..ஹூ இஸ் குந்தவை..அரவிந்த் ஆர் யூ ஒ.கே.." என்னை தொட்டு பார்த்து விட்டு அதிர்ந்து போனாள்.

ஆபிஸ் காரில் ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு போனார்கள்.

அங்கு இருந்து நடக்க முயற்சித்தேன்.

"அரவிந்த்..எப்படிடா இருக்க.." என்று ஒரு குரல் கேட்டது.

"நீங்க..யாலு.." குரல் கம்ம தொடங்கியது.

"நான் வினோத்..பத்து வருசம் முன்னாடி ரெண்டு பேரும் ஒண்ணா பத்தாவது படிச்சோமே..நீ கூட பிட் கொடுத்தியே.."

"வினோத்..வீடு தெரியும் இல்ல வா பேசலாம்..உடம்புக்கு முடியவில்லை.." சொல்லி விட்டு அவனை விட்டு விலகி நடந்தேன்.

அவன் ஏமாற்றமாக எதையும் கவனிக்காமல் நடப்பது தெரிந்தது.அவனை நோக்கி ஒரு லாரி..

"இளவரசே..போக வேண்டாம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.." மயங்கி விழுந்து விட்டேன்.