Friday, July 31, 2009

பிட்டு படம் எடுப்பது எப்படி ?

அதிஷா சொல்லி தருவார் என்று ரொம்ப நாள் நானும் காத்து கிடந்தேன்.அவர் சொல்லி தருவது மாதிரியே தெரியவில்லை. நானே முயற்சி செய்து கற்று கொண்டேன். எனக்கு ஒரு விஷயம் தெரிந்து கொண்டால் நான் அதை ஊருக்கே கத்து கொடுப்பேன். இந்த விசயத்தில் நான் இன்னும் கத்துக்குட்டி தான் (எப்பவும் பத்து பாயிண்ட் எழுதுவேன் இதுல ஐந்தே ஐந்து பாயிண்ட் தான்).

உங்களிடம் வி.சி.டி கட்டரோ, டி.வி.டி ரிப்பரோ இருந்தால் உங்களுக்கு பிடித்த தமிழ் படத்தில் இருந்து பிடித்த காட்சியை வெட்டி எடுத்து கொள்ளலாம். அல்லது பிடிக்காத காட்சியை வெட்டி எரிந்து விடலாம்.(விஜய் டி.வியில் பார்ப்பது போல குட்டி படம் பார்க்கலாம்) வேறு படத்தில் இருந்து காட்சியை எடுத்து இன்னொரு படத்துடன் சேர்த்து நல்ல பொழுதுபோக்கான படத்தை பார்க்கலாம்.

you tube போன்ற இணையதளங்களில் இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ்,தெலுங்கு பட நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளை (பால கிருஷ்ணா நடித்தது ) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

நண்பர்கள் யாராவது அவர்கள் வீட்டில் உங்களுக்கு பிடித்த காட்சிகளை வைத்து இருந்தால் அவர்களிடம் பெண் டிரைவில் கேட்டு வங்கி கொள்ளலாம்.

புளு டூத், இன்ப்ரா ரெட் போன்ற தொழில்நுட்பங்களை உபயோகித்து உங்கள் கைபேசியிலே பெற்று கொள்ளலாம் (வேறு மாதிரியான படம் இருந்தால் காவல்துறை உடனே கைது செய்கிறார்கள் அவர்களும் தொழில்நுட்பங்களை உபயோகித்து வருகிறார்கள். அந்த மாதிரி படங்களை தவிர்ப்பது நல்லது)

உங்கள் அலுவலகத்தில் சில இணையதளங்கள் தடை செய்யப்பட்டு இருக்கும். அது மாதிரி பட்சத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் காட்சிகளை மெயிலில் அனுப்ப சொல்லி பெற்று கொள்ளலாம்.

டிஸ்கி : (இது தான் நிறைய)

இப்படிதான் தலைப்பு வைத்து குமுதம்,ஆனந்த விகடன் நம் ஏ எல்லோரையும் மாற்றி வருகிறது. அவர்களிடம் கேட்டால் மக்களுக்கு பிடித்ததை தான் எழுதுகிறோம் என்று சொல்வார்கள்.மக்களுக்கு பிடித்தது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டால் பதில் வராது.

பிட் என்றால் துண்டு என்று அர்த்தம் வருகிறது. நல்ல காட்சிகளும் ஒரு முழு படத்தில் ஒரு துண்டு தான்.

எதையாவது எதிர்பார்த்து ஏமாந்து இருந்தால் நான் பொறுப்பல்ல (டாக்டர் பிரகாஷ் பக்கத்தில் அமர எனக்கு தைரியம் பத்தாது)

புலிய பார்த்து பூனை சூடு போட்டுகிச்சாம் புலி - அதிஷா அப்ப பூனை - நான் இல்லை சொன்னா நம்பவா போறீங்க

அடிச்சு விளையாடுங்க

ஏன் திவ்யா எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது!

தயவு செய்து சொல்லுங்கள் எனக்கு மட்டும் தான் இப்படியா இல்ல உங்களுக்குமா ?

1. எனக்கு இந்தி தெரியாது அப்படி கால்ல விழுந்து கதறினாலும் இந்திலே பேசி பேசி சாக அடிக்கறது. இன்னைக்கு சொல்றேன் கேட்டுகோங்க எனக்கு தெரிஞ்ச இந்தி "ஏக் காவ் மே ஏக் கிசான் ரஹதாத்தா இல்ல ரகுதாத்தா" (இந்தி தெரியாதுன்னு நினைச்சி என்னை இந்தியில் யாரும் கெட்ட வார்த்தையில் திட்டி விட வேண்டாம். ஊர்ல ரயில் ஏறும் போதே இந்தியில் உள்ள கெட்ட வார்த்தைகளை கத்து கிட்டு தான் வந்து இருக்கேன் டேய் நீ மகாராஷ்ரா டாக்சின்னா நான் தமிழ்நாடு ஆட்டோடா)

2. நான் எப்போ எந்த பெண்ணையாவது துரத்தி போய் சைட் அடிச்சாலும் அந்த பொண்ணு நல்லாவே இருக்காது. நான் பார்க்க முடியாம போற பொண்ணு மட்டும் ரொம்ப நல்லா இருக்கு.(அவளை பார்ப்பதற்குள் என் வீடோ,அலுவலகமோ,ஆணியோ குறுக்கே வந்து தொலைத்து விடுகிறது)

3. நான் பதிவு எழுதும் பொழுதோ இல்லை படிக்கும் பொழுதோ மட்டுமே ஆணி புடுங்க கூப்பிட்டு தொலைக்கிறார்கள். சும்மா காத்து வாங்கி கிட்டு இருப்பேன் ஆணி இருந்தாலும் கூப்பிட மாட்டார்கள்.

4.ரயில் ஏற போனா நான் ஸ்டேஷன் உள்ளே வரும் பொழுது வண்டி காலியா காத்து வாங்கிட்டு போகுது. சரி வந்துரும்ன்னு பார்த்தா கூட்டம் சேர்ற வரைக்கும் வராது. அதுக்குள்ள எதிர் திசைல நாலு வண்டி கடந்து போகுது. காலையிலே தான் இப்படினா சாயந்திரமும் இப்படி தான் நடக்குது.

5.நான் சைட் அடிக்கிற பொண்ணுங்களுக்கு மட்டும் உடனே கல்யாணம் நிச்சயம் ஆகி விடுகிறது.(இதுக்கு பயந்தே இப்போ ஒரு பெண்ணையும் சைட் அடிக்கிறது இல்ல)

6.ஏதாவது பாவப்பட்ட ஜீவன் (என்கிட்டே பேசுனா) திடீர்ன்னு நம்மகிட்ட பேசும் ஆனா அன்னைக்கு தான் ஆணி நிறைய இருக்கும்.பேச மாட்டேன். அதுக்கு அப்புறம் பார்த்தாலும் பாக்காத மாதிரியே போகும்.(இந்த பொண்ணு கூட திரும்பவும் முதல்ல இருந்தா அதுக்குதான் வேற பொண்ண கூட பேச முயற்சி பண்ணுவேனே என்று நானும் பேச மாட்டேன் (serious but not sincere))

7.கைகுடுக்கும் போது அழுத்தி பிடித்து ஆளுமையை காட்டுவார்கள். மெதுவாக பிடித்து அன்பானவர்கள் என்று சக மனிதர்களிடம் காட்டலாமே.( அதுக்குத்தான் நான் யார பார்த்தாலும் நம் வழக்கப்படி கும்பிடு போடுவேன் அப்பவும் விடாமல் கையை பிடித்து அழுத்துவார்கள்)

8. பஸ்ல போகலாம்ன்னு பார்த்தா நான் ஏற வேண்டிய பஸ் மட்டும் வராது. சரி நடந்து போகலாம் முடிவு செய்து நடந்தா சரியா இரண்டு ஸ்டாப்பிங் நடுவிலே இருக்கும் போது மூணு பஸ் தொடர்ந்து வரும்.

9. புதுசு புதுசா ஆணிய உருவாக்கி என் தலையிலே கட்டுறாங்க. யோசித்து ஆணிய புடுங்கறது முன்னாடி உயிர் போய் உயிர் வருது(பதிவு எழுத கூட நான் ரொம்ப யோசித்தது கிடையாது). நானும் பார்க்குறேன் நீங்க என்னைக்காவது இந்த வார்த்தைகளை சொல்லுவிங்கன்னு. அது இதுதான் "நீ ஆணியே புடுங்க வேண்டாம்" .

10. நான் நிறைய காசோட போய் எதாவது சாப்பிட கேட்டால் "நீங்க கேட்டது இல்லைன்னு சொல்லி அந்த சர்வருக்கு பிடிச்சத என் தலையில் கட்டுறது" .நான் டீ குடிக்க மட்டும் காசு வைச்சு இருக்கிறபோ "அது இருக்கு இது இருக்கு இப்படி சொல்லியே என்னை வெறுப்பு ஏத்துறது"

டிஸ்கி :

எப்படி தான் மொக்கை போட்டாலும் பின்னுட்டமும், பாலோயரும் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்தான்
(என்ன கொடுமை பிரபு இது)

Thursday, July 30, 2009

பெண்கள் v/s ஆண்கள்

பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள்

1.பெண்களிடம் பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் நிச்சயம் விஜய்,அஜித்,சூர்யா,மாதவன் என்று கல்யாணம் ஆன நபர்களின் பேரே வரும்.ஒரு குரூப்புக்கே (நான்கு முதல் ஐந்து வரை) ஒரே ஒரு ஹீரோவின் பேர் தான் இருக்கும்.இதுவே ஆண்களிடம் கேட்டால் லேட்டஸ்ட் நாயகியின் பேரை மந்திரமாக உச்சரிப்பார்கள் (அவர்களுக்கு கல்யாணம் ஆகும் வரை தான் அதுக்கு அப்புறம் அது போன மாசம் கதைதான்)

2.பெண்கள் பெரும்பாலும் ஒத்த ரசனை உள்ளவர்களிடம் நட்பாக இருப்பார்கள்.( ஒரே சென்ட் உபயோகிப்பார்கள்,ஒரே மாதிரி சாப்பாடு ஆர்டர் செய்வார்கள்)ஆண்கள் மாறுப்பட்ட ரசனை உள்ளவர்களிடம் நட்பாக இருப்பார்கள்.(அப்பதான் விவாதம் என்று வந்தால் டவுசர மாத்தி மாத்தி கிழிக்க முடியும்.)

3.பெண்களுக்கு அனுபவசாலிகளை ரொம்ப பிடிக்கும்( அது தெரிந்து தான் எனக்கு ஏற்கனவே லவ் பெயிலியர் இந்த பிட்ட பசங்க ஆயுதமா போடுறாங்க)ஆண்களுக்கு அனுபவசாலிகளை கண்டாலே பிடிக்காது காரணம் அட்வைஸ்.( அனுபவத்தில் தெரிந்து கொள்ள ஆசை படுவார்கள் நெருப்பு சுடும் என்பதை கையை விட்டு தான் தெரிந்து கொள்வார்கள்.)

4.பெண்களுக்கும் சண்டை வரும் பொழுது ரகசியங்கள் வெளியே வந்தே ஊரே சிரிக்கும். (உதாரணம் குடுத்தா எனக்கு வர்ற ஒன்னு இரண்டு பின்னுட்டங்களில் என் காதில் ரத்தம் வரும்)ஆண்கள் சண்டை போடும் பொழுது சேர்ந்து செய்த "மிக பெரிய தவறை" மட்டும் சாமர்த்தியமாக மறைத்து விட்டு சண்டை போடுவார்கள் (இதுக்கும் உதாரணம் கிடையாது காரணம் இருபாலரும் சமம். மேலே கொடுத்தால் இங்கேயும் வரும்)

5.பெண்கள் பெரும்பாலும் மிக சரியாக யோசித்து தவறாக முடிவு எடுப்பார்கள்.செயல்படுத்தும் பொழுது சரியாக நடக்கும் (girl's thing என்று பந்தா செய்வார்கள்)ஆண்கள் யோசிக்கவே மாட்டார்கள் எண்பது சதவீதம் சரியாக இருக்கும் ஆனால் நடக்காது. இருபது சதவீதம் தவறாக இருக்கும் உடனே நடந்து விடும்.

6.பெண்கள் அவர்களது கருத்துக்கு உடன் படும் ஆண்களை ரொம்ப பிடிக்கும்
(எப்பவும்மே இப்படிதானா).ஆண்களுக்கு எதிர் கருத்து சொல்லும் பெண்களை ரொம்ப பிடிக்கும்.(காதலிக்கும் பொழுது மட்டும் )

7.ஒரு விசயத்தில் பெண்கள் என்னுடைய பாட்டி காலத்தில் இருந்தே மாறவில்லை.(1970 ஆம் ஆண்டு இருந்த பெண் சுதந்திரத்திற்கும் இப்பொழுது இருக்கும் பெண் சுதந்திரத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு இன்னும் வரும் ஆண்டுகளில் இதுவும் மாறும் அப்பொழுதும் எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றே சொல்வார்கள்)ஆண்கள் எப்பொழுதுமே பெண்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.புரிந்து கொள்ளவே முடியாது.
மாறி கொண்டே இருக்கிறார்கள் இந்த விசயத்தில்.ஆண்களை வளர்ப்பதே பெண்கள் தான்.

8.பெண்கள் ஆண்கள் கண்டுப்பிடிப்பதை எடுத்து கொள்வார்கள்.
(ஹைஹீல்ஸ் ஆண்களுக்காக கண்டுப்பிடித்தது)ஆண்கள் வேறு எதாவது செய்ய போய் விடுவார்கள்.
(அப்பத்தானே தங்கமணி கிட்ட நல்ல பேர் வாங்க முடியும்)

டிஸ்கி :

1.நான் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பவன் தலைப்பை பார்த்தாலே தெரியும் .

2.பெரும்பாலும் பாதி தேர்விலே நான் தூங்கி விடும் பழக்கம் உண்டு அது போல நினைத்து கடைசி சில பாயிண்ட்களை யாரவது பின்னுட்டத்தில் எழுதி விடுங்கள்.

Wednesday, July 29, 2009

மாஜி தோழி(காதலி)க்கு ஒரு கடிதம் + கவிதை


அன்புள்ள தோழி(காதலி)க்கு,


ரொம்ப நாள் கழித்து கடிதம் மற்றும் கவிதை எழுதும் காரணம் புரியாமல் நீ யோசிக்கலாம். காரணங்கள் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.(கவிதையை படித்து விட்டு காரணங்களுக்கு போகலாம்)


ஒரு மழைநாளில்
என் வீட்டிலிருந்து உன் வீட்டுக்கு
நாம் கடந்த,நடந்த தூரம்
மூன்று மைல்களாக இருந்தது.
இன்று நினைக்கையில்
அது கடக்க முடியாத யுகங்கள்
மறக்க முடியாத கணங்கள்
கண்ணீர் துளிர்க்கும் தருணங்கள்.
இப்படி செல்வதில் ஒரு வசதி என்றாய்
எப்படி என்றவனைப் பார்த்து
மழை காலடித் தடங்களை
அழித்து விடும் என்றாய்
அன்று முதல்
காயாத சிமென்ட் தளங்களில்
காலடித் தடத்தை பதித்து வருகிறேன்
வீட்டுக்காரன் திட்டுவதை கூட கண்டு கொள்ளாமல்
மேடும்,பள்ளமுமாய் இருந்த சாலையைப் பார்த்து
இப்படித்தான் இருக்குமா என்றேன்
நம் வாழ்வா என்று கேட்ட உன்னிடம்
உன் உடல்.. சொல்லி முடிப்பதற்குள்
சீ என்று விலகினாய்!
நல்ல வனப்பான பெண்ணையோ
குண்டும்,குழியுமாக இருக்கும் சாலையையோ
கடக்க நேர்ந்தால்
நீ கடக்கிறாய் என் நினைவுகளில்
வீட்டிற்கு முப்பது அடி தூரத்திலே
நிறுத்தி விட்டாய் அன்று
தெரியாமல் போய் விட்டது
முடிவிலும் சில அடிகளை உன்னோடு
கடக்க முடியாது என்று .

1.நான் கவிதை எழுதி கொடுத்த பிறகு தான் மூன்று பெண்கள் என்னோடு பேசுவதை நிறுத்தி விட்டார்கள் . யாராவது உன்னிடம் பிரிந்ததற்கு காரணம் கேட்டால் இந்த கவிதை காட்டு.

2.இன்னொரு பெண்ணிடம் பேச முயற்சித்து கொண்டு இருக்கிறேன். நாளைக்கு அவளுக்கும் கவிதை கொடுக்க நேர்ந்தால் இதையே கொடுத்து விடுவேன் (நேரம் மிச்சம் )

3. +1 படிக்கும் பொழுது (நான் தேறவே மாட்டேன் என்று ஊர் உலகமே சொன்ன காலம் அது) கவிதை எழுதினேன் என்று வீட்டில் திட்டினார்கள். இப்போ யார் திட்ட போறாங்க (இந்த மொக்கையை படிப்பவர்களை தவிர)


டிஸ்கி - இது புனைவு என்று சொன்னால் நம்பவா போறீங்க

Monday, July 27, 2009

சசிகுமாரின் அடுத்த படத்தின் ஹீரோ சாரு நிவேதிதாவா ?

சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயா (சசியின் தங்கை) தான் நாயகி. கதைக்களம் சென்னை. விக்ரம் இந்த படத்தைத் தயாரிக்கிறார்.படத்தில் சசிகுமாரும் நடிக்கவில்லை.விக்ரமும் நடிக்கவில்லை.கதையின் நாயகனைத் தேடி கொண்டு இருக்கிறார் சசி. நாயகனுக்கு வயது 54. ராம்கோபால் வர்மாவின் நிஷாப்த் படம் போல 54 வயது இளைஞனுக்கும் 18 வயது பெண்ணுக்கும் உள்ள உறவை மையமாக கொண்ட கதைக்கருவாக இருந்தால் சாருவிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. இது போல முயற்சியை சசிகுமாரை போன்ற சில இயக்குனர்களால் மற்றுமே செய்ய முடியும்.

காரணங்கள் பின்வருமாறு

1. சாருவிற்கு 56 வயதுக்காரர் சசிகுமார் சொன்னதை விட இரண்டு வயது அதிகமானவர் என்று யாரவது சொன்னால் தயவு செய்து முரளியை நினைத்து கொள்ளவும் ( 35 வயதிலும் அவர் கல்லூரிக்கு சென்றவர்.)

2. சினிவாவில் நடிக்க ஆர்வமுள்ளவர். நாடகத்தில் நடித்த அனுபவம் உள்ளவர்.

3.இது ஒரு உறவுச்சிக்கல் கதையாக இருந்தால் மிகவும் பொருத்தமானவர். உறவு சிக்கல் கதைகளை நிறைய எழுதியவர். உதாரணம் குட்டிக்கதைகள் - 108 என்று எழுதி பல சர்ச்சைகள் கிளம்பி பிறகு புத்தகமாக வந்தது .(பத்து புத்தகங்களில் ஒன்றை சசிகுமார் வெளியிட்டார். )

4.கமலின் நடிப்பை கிழித்து தோரணம் கட்டும் சாரு அவரு கதையின் நாயகனாக வாய்ப்பு கிடைத்தால் எவ்வாறு நடிப்பை வெளிப்படுத்துவார் என்று பார்க்க வேண்டும்.

5.அவருடைய நடிப்பை விமர்சிக்க ப்ளோக்கர் உலகமே இரண்டு அணியாக திரண்டு நிற்கும். (யப்பா சண்டைய பார்த்து ரொம்ப நாளான மாதிரி இருக்குது).

6.சாருவிற்கு நிஜத்தில் பந்தபாசமே கிடையாது என்று சொல்வார். அவர் படத்திலாவது மிகவும் சோகக்காட்சியில் நடித்து பந்தபாசத்தில் கிடந்து புரள வேண்டும் .

7.அவர் நடித்த படத்தை அவர் எப்படி விமர்சனம் செய்வார்,படத்தின் இசையைப் பற்றி என்ன எழுதுவார் என்று தெரிந்து கொள்ள ஆசை.

8.அப்படி அவர் நடிக்க போய் விட்டால் கொஞ்ச நாளைக்கு எதுவும் எழுத மாட்டார்.எனக்கும் ஆணி புடுங்க நெறைய நேரம் கிடைக்கும் (எல்லாம் சுயநலம் தான் அப்படியே நல்லா எழுதுற எல்லோரும் கொஞ்ச நாள் எழுதுறத நிறுத்தி விடுங்கள்.(அப்படிவது நாங்க எழுதுற மொக்கைகளை யாராவது படிச்சு பின்னுட்டம் போடுறாங்களான்னு பார்ப்போம்)).

நான் சொன்ன இந்த தலைப்பு உண்மை ஆனால் நாந்தான் முதல்ல சொன்னேன் என்று சுயதம்பட்டம் அடித்து கொள்வேன். அதுவே பொய் என்றால் வதந்தி கிளப்புன முத ஆளா நான் இருந்துட்டு போறேன்.

Friday, July 24, 2009

பெண்களும் நான் ரசித்த சினிமாக்களும்

பின்னாடி இருந்து ஒரு பெண்ணை பார்த்து பரவசப்பட்டு அந்த பெண்ணை ஓவர்டேக்செய்து ஏமாந்து நிற்போமே அது போல டிரைலர் பார்த்து ஒரு மொக்க படத்த பார்த்து விட்டு வருவோமே (உதா சேவல்,சின்னா (கூச்சமே படாம ஜூராசிக் பார்க் படத்துல வர்ற காட்சிய சுட்ட ஒரே ஜீவன் சுந்தர்.சி) .

நம்ம பின்னாடி ஒரு பொண்ணு நடந்து வரும் சட்டுன்னு திரும்பி பார்க்க முடியாது.தப்பா நினைச்சுட்டா (நல்ல பிகரான்னு கண்டு பிடிப்பது ரொம்ப சுலபம் எதிர்ல வர்றவன் கண்ணைப் பார்த்தால் தெரிஞ்சிட போகுது). மொழியே தெரியாமல் படம் பார்த்து ரசிப்பது இதில் சேரும் - தில் சாத்தா ஹை இந்தி படம் .

ஊர்ல இருக்கிறவன் ஒருத்தனுக்கு கூட அந்த அட்டு பிகர பிடிக்காது ஆனா நமக்கு பிடிக்கும் அப்படி பிடித்த மொக்க படம் - புதிய கீதை (விஜய் ரசிகர்கள் கூட காறி துப்பிய படம்).

ரொம்ப நாளாக கேள்விப்பட்ட அழகான பொண்ணு தீடிர்ன்னு வீட்டுக்கு வந்து "நாங்க பக்கத்துக்கு வீட்டுக்கு வந்து இருக்கோம் கொஞ்சம் சுத்தியல் வேணும்.."அப்படி சொன்ன உடனே ஆணி ,சுத்தியல் ,நாற்காலி ,நீங்க உட்பட அவங்க வீட்டுல பொய் இருப்போமே - ரொம்ப நாள் பார்க்க ஆசைப்பட்டு பிறகு ஏதோ ஒரு லக்குல பார்த்த படம் மரோசரித்ரா .

சின்ன வயதில் மூக்கு சிந்திகிட்டு திரியும் பெண்களை பார்த்தாலே கோபம் வரும் நமக்கு ஒரு வயது வந்த உடன் இந்த அழுக்குஉருட்டி உள்ளே ஒரு அழகியா ? என்று ஆச்சர்ய படுவோம் - மொக்க அடிதடி படமா கொடுத்த தெலுங்கு சினிமா திசை மாறி பொம்மரில்லு, ஹாப்பி டேஸ், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் என்று படம் வரும் பொழுது ஆச்சரியமாக இருக்கும் .

சின்ன வயசுல அந்த பெண்ணை விழுந்து விழுந்து சைட் அடித்து இருப்போம் அவளுக்கு திருமணம் ஆன கொஞ்ச நாட்களுக்கு பிறகு இதை போய்யா ரசித்தோம் என்று நமக்கு நேம் குட்டி கொள்வோமே - காதல் கொண்டேன் ,துள்ளுவதோ இளமை,அந்தமான் காதலி,திரிசூலம் போன்ற படங்கள் இந்த வரிசையில் வரும் .

நண்பர்கள் சிலாகித்து சொல்வார்கள் அந்த பொண்ண மாதிரி அழகி கிடையாது .தொண்டையிலே சாப்பாடு போவது வெளியே இருந்து பார்ப்பவனுக்கு தெரியும் .ஆனா பொய் பார்த்தா சொன்னவன் மேலே கொலைவெறியே வரும் - அப்படி அவர்கள் சொல்லி கொலைவெறி வந்தது மாசிலாமணி,காதலில் விழுந்தேன் ,தெனாவட்டு போண்டா சன் டிவி யின் விளம்பரங்களைத் தாங்கி வரும் படங்கள்.

தீடிர்ன்னு ஏரியாக்குள்ள ஒரு புது பொண்ணு வந்த உடன் பரபரப்பு கிளம்புமே இத்தனை நாளாக எங்கு தான் இருந்துதோ என்று விசாரித்து தள்ளுவோமே -வந்து பத்தே நாட்களில் திரையரங்கை விட்டு தூக்கிய பிறகு ரசிக்கப்படுவது தெரிந்து வந்த படம் சேது.

+1 படிக்கும் பொழுது ஒரு கல்லூரி பெண்ணின் நட்பை முறித்து கொள்ளாவிட்டால் பரிட்சையில் காட்ட மாட்டேன் என்று மிரட்டியே அந்த நட்பை உடைத்த ஒரு +2 படித்த நெருங்கிய கிராதகன். அவனுக்கு தெரியாமல் பேசுவது அல்லது பேச முயற்சிப்பது - நெருக்கமான காதல் காட்சிகள் வந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் ரிமோட்டை தேடுவது போல பாவ்லா காட்டுவது (குருதிப்புனல்) கண் தொலைக்காட்சியிலே இருக்கும், கை தேடும் .

உறவினர் வீட்டுக்கு வந்து இருக்கும் பெண்ணோடு தொடக்கத்தில் எரிச்சலோடு பழகி பிறகு அவள் அல்லது நாம் ஊருக்கு போகும் நாள் வரும் பொழுது பதற்றத்தோடு பேச வேண்டியதை சீக்கிரம் சொல்ல வேண்டும் என்று ஒன்றுமே சொல்லாமல் திரும்பி வரும் வழியில் அவளை மறக்கும் விதமாக அடுத்த பெண்ணைப் பார்ப்போமே - வேறு வழி இல்லாமல் மொக்க படத்தையும் பார்த்து வெளியே வந்த உடன் அடுத்த படத்தைப் நோக்கி செல்வது( காதல் வைரஸ் பார்த்து நொந்த பிறகு மௌனம் பேசியதே படத்தை பார்த்தது போல)

Saturday, July 18, 2009

லக்கியை அழைத்தீர்களா?

இது ஒரு தொடர் பதிவு. இதை தொடர்ந்து எழுத நான் எனது குரு லக்கி மற்றும் பதிவுலகில் என்னுடைய ஆதர்ஷமான அதிஷா,நர்சிம் அழைக்க எனக்கு ஆசை. லக்கியின் நெருங்கிய நண்பரான அதிஷா தொடர்பதிவு எழுத அவரை அழைத்த பொழுது "சாருவை அழைத்தீர்களா" என்று பதிவு போட்டு அதை நையாண்டி செய்தார். இப்பொழுது அதிஷா இந்த தலைப்பைக் கொண்டு எனக்கு டேக்கா கொடுக்க கூடாது என்று நான் முந்தி கொண்டேன் (இப்படி தலைப்பு வைத்தாலாவது பின்னுட்டம் கிடைக்குமா என்று பார்ப்போம் என்பதும் ஒரு காரணம்).

எப்பூடி?. இந்த பதிவை எழுத இன்னொரு காரணம், ஆப்பு(ஐயா நான் ஒன்னும் பிரபலம் இல்லை) என்பவர் எனக்கு பின்னுட்டம் போட்டுள்ளார். சார் என்னை நீங்கள் அடித்தால் உங்களுக்கு ஒரு வெங்கல கிண்ணி கூட கிடைக்காது.கிடையாது .

தொடர் பதிவின் தலைப்பு "கடைசியாக அழுத ஆறு திரைப்படங்கள்" (ஆறு தான் என்னுடைய ராசியான எண் .) நல்ல வேளை 100 என்னுடைய ராசியான நம்பராக இல்லாமல் போனது. (உண்மைத்தமிழனக்கு போட்டியாக இருந்திருக்கும்.)

1. 7ஜி ரெய்ன்போ காலணி

எப்பொழுதும் என் கருத்தும் என் அப்பாவின் கருத்தே ஒத்துப் போகாது.கடந்த புதன் மற்றும் வெள்ளி அன்று கூட பெரிய வாக்குவாதம். இந்த படத்தில் ரவிகிருஷ்ணாவிற்கு வேளை கிடைத்த பிறகு விஜயன் நடிப்பு மற்றும் ரவியின் அழுகையோடு நானும் அழுது கொண்டு இருந்தேன். எந்த சென்டிமெண்ட் காட்சியிலும் சிருத்து கொண்டே படம் பார்க்கும் .அப்பா - மகன் காட்சிகளின் பொழுது மட்டும் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன் இன்று வரை. அது உன்மைதானா என்று சோதித்து பார்க்க இன்னொரு கல்லூரி நண்பர்களுடம் தேவியில் படம் பார்க்க சென்று இருந்த பொழுது அதே காட்சியில் அழுது கொண்டிருந்தேன். நண்பர்கள் பார்த்தால் கேலி செய்வார்கள் என்று பயந்து கண்ணைத் துடைக்க திரும்பிய பொழுது எல்லோரும் யாருக்கும் தெரியாமல் கண்ணைத் துடைத்தார்கள். அப்போழுது தெரிந்தது பிள்ளைகள் யாருமே அப்பா பேச்சைக் கேட்பதில்லை ஆனால் பாசத்தை வெளிக்காட்ட தெரியாமல் அலையும் பாவப்பட்ட ஜீவன் கள் என்று.

2. அறிந்தும் அறியாமலும்

வீட்டில் சாப்பிட சொல்லியும் கேட்காமல் நண்பனின் இல்லதிற்க்கு சாப்பிட சென்ற தம்பி அங்கு ஏதோ காரணதினால் சாப்பிட முடியாமல் போக அந்த கோபத்தில் இருவருக்கும் கைக்கலப்பு ஆகி விட்டது. அம்மா அவனை அடித்து விட போகிறேன் என்ற பதற்றத்தில் என்னைப் பிடித்து கொள்ள அவன் அந்த சைக்கில் டயர் கேப்பில் என்னை இரண்டு அடி அடித்து விட்டான். அந்த கோபத்தில் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் கீழே கிடந்த ஸ்டெம்பை எடுத்து அடித்து விட்டேன். அப்பொழுது என்னை அவன் பார்த்த பார்வையை இன்று வரை நேரில் யார் கண்ணிலும் பார்த்தது கிடையாது. ஒரு படத்தை தவிர (சுவாதி தான் காட்டி கொடுத்தது என்று தெரிந்ததும் ஜெய் அசைவில்லாமல் இமை கொட்டாமல் பார்ப்பது). அன்று தான் என் அப்பா அழுது நான் பார்த்தேன்.சண்டையில் வீடு முழுக்க சாதமும், சாம்பாரும் கொட்டி கிடந்தது. அடுத்த நாள் அவன் இங்கு இருக்க பிடிக்காமல் திருநெல்வேலி போய் விட்டான். பத்து நாட்கள் கழித்து நான் அங்கு சென்ற உடன் அவனிடம் கேட்ட முதல் வாக்கியம் "படத்துக்கு போலாமா?" சென்ற படம் அறிந்தும் அறியாமலும். தம்பியிடம் பாசத்தை கொட்டும் ஆர்யாவின் கதாபாத்திரத்தில் அழுது கொண்டே நான் என்னை பார்த்தேன். படம் முடிந்து வெளியே வந்த பிறகு என் தங்கச்சங்கிலியை அவன் கழுத்தில் போட்டேன். காரணம் அந்த சண்டையில் அவன் செயின் என்னால் அறுந்து அவன் வெறும் கழுத்தோடு இருந்தான்.

3. உள்ளம் கேட்குமே

இந்த படத்தை பார்க்க நானும் என் தம்பியும் 2004லாம் வருடத்தில் இருந்து அலைந்து கொண்டு இருந்தோம்.ஒரு வழியாக 2005 லில் வெளி வந்த பொழுது நான் கல்லூரி முடித்து இருந்தேன். நங்கநல்லூர் வேலனில் நான் + இன்னும் ஆறு பேர் மட்டும் அந்த படத்தை பார்த்தோம்(தம்பி ஊரில் இருந்தான்). ஷாம் க்டைசி நாளில் பேசிய பிறகு வரும் ஒ மனமே மனமே பாடலில் நான் அழுது கொண்டு இருந்தேன். காரணம் கல்லூரியில் நான் இழந்த சில நட்புகள் மற்றும் சில "நட்பூக்களை" நினைத்து . அந்த படம் குறுந்தகடில் கிடைத்த பிறகு சுமார் ஒரு மாத காலம் தினமும் அந்த படத்தைப் பார்ப்பேன்.

4.தவமாய் தவமிருந்து

அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் என் பால்ய காலம் ஞாபகத்திற்கு வரும். கோவில் திருவிழா, உறவினர் வீடுகளைப் பார்க்க கழுத்து அளவு தண்ணீரில் என்னை தலையில் சுமந்து கொண்டு திரிந்த என் அப்பாவின் பாசம்,நேசம் எல்லாம் ஞாபகம் அழ தேவை இல்லாத இடத்தில் கூட அழுது கொண்டு இருந்தேன். படம் பார்த்து விட்டு திருவான்மியூரில் இருந்து வேளச்சேரிக்கு நடந்து வந்தேன். படத்தின் தாக்கம் என்று யாரும் நினைக்க வேண்டாம் கையில் 50 பைசா மட்டுமே இருந்தது.

5. வெயில்

மகன் இறந்த பிறகு அவனை புரிந்து கொள்ளும் ஒரு தகப்பனின் கதை.இதிலும் பல இடத்தில் கண்கள் கலங்கி கொண்டே இருந்தது .
பெரிதாக அழவில்லை. அன்று நிறைய நண்பர்கள் சேர்ந்து அலுவலகத்தில் பார்த்ததால் வெளிச்சத்தில் அழ வெட்கமாக இருந்தது.


6.நாடோடிகள்

படம் என்னை அவ்வளவாக கவரவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் கண் கலங்கியது . அது விஜயின் அப்பா நம்ம குடும்பத்துக்கே கால்ல தான் ஏதோ பிரச்சனை என்று சொல்லும் இடம் அருமை. விஜயின் காதலியை பார்க்க போகும் காலையில் மகனும் சாயங்காலத்தில் அப்பாவும் காலை ஆட்டிக் கொண்டு இருப்பார்கள்.

இந்த பதிவு பிடித்து இருந்தால் யார் வேண்டுமானாலும் தொடர்ப்பதிவாக எழுதலாம்.

காரணம் ஒரு தொடர்பதிவு எழுத யாரும் என்னை அழைக்காததால் என்னால் எழுத முடியாத ஆதங்கம் தான் .

விஜய் சினிமா - அரசியல்

டி.ராஜேந்தர் ( அடடா பெயர்ல விஜய என்பததை விட்டு விட்டேனே) அவர் உதித்த பொன்வாக்கு தான் ஞாபகம் வருகிறது.

" நான் கொஞ்ச நாள் சினிமா சினிமா என்று பிஸியாக இருந்து கேப் விட்டதால் விஜயகாந்த் அரசியலில் முன்னேறி விட்டார்..."

அப்பொழுது அவர் நான்கு வருடமாக எடுத்து கொண்டு இருந்த காவியம் - வீராச்சாமி.

இந்த வார்த்தைகளை கொஞ்சம் மாற்றி போட்டு இருந்தால் அது விஜக்கு பொருந்தும்.

விஜயின் முதல் வெற்றி படம் - பூவே உனக்காக (1996) இந்த பதிமூன்று வருடத்தில் ரஜினி நடித்த படங்கள் ஆறு.

அப்பொழுது கமலும் மருதநாயகம், ஹே ராம், எடுக்கிறேன் என்று ஒரு மூன்று வருடம் வீணடித்து இருந்தார்.

2001 பிறகு கமல் நடித்த படங்கள் ஒன்பது.அதிலும் தசவாதாரம்,வேட்டையாடு விளையாடு மற்றும் விருமாண்டி எடுக்க மொத்தம் அவர்க்கு நான்கு வருடங்கள் தேவைப்பட்டது.

இதில் கமலும்,ரஜினியும் எடுத்த கேப்பினால் விஜய் சரசர என முன்னெறி இருந்தார். ரஜினியை போல "நடித்து நடித்து" முண்ணனி நடிகராக மாறி இருந்தார்.

அந்த் காலக்கட்டத்தில் அஜித்,பிரசாந்த்(இப்போ இவரை நினைத்தால்...) தவிர இளம் ஹீரோக்கள் இல்லாததும் ஒரு காரணம்.

ரஜினி படம் வெளியாகும் பொழுது விஜயின் அடுத்த படம் நிச்சயம் மண்ணை கவ்வி திரையரங்கை விட்டு வெளி ஏறி இருக்கும்.

விஜயின் முதல் வெற்றி 1996 லில் வந்த்தால் அதற்கு அப்புறம் வந்த ரஜினி படங்களை கணக்கில் எடுத்து கொள்வோம்.

வருடம் ரஜினி விஜய்

1997 அருணாச்சலம் (வெற்றி) வசந்த வாசல்,மாண்புமிகு மணவன்(தோல்வி)

1999 படையப்பா(வெற்றி) மின்சாரக்கண்ணா (தோல்வி)

2002 பாபா (தோல்வி) யூத் (தோல்வி)

2005 சந்தரமுகி (வெற்றி) சச்சின் (தோல்வி)

2007 சிவாஜி (வெற்றி) அழகியத் தமிழ்மகன் (தோல்வி)

2008 குசேலன் (தோல்வி) வில்லு (படுதோல்வி)

2009 சுல்தான் (?) ??????????

2010 எந்திரன் (?) ??????????

அப்படி ரஜினி தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து இருந்தால் விஜயின் நிலைமை ??????????

அப்ப் அரசியல்

அங்க யாரும் ரஜினி,கமல் மாதிரி கேப் விட மாட்டார்கள்.

அரசியலை பொருத்த வரை விஜய் ஒரு நாளைய தீர்ப்பு படத்தின் அறிமுகம் தான் என்றுமே.

இருக்கிரதை விட்டு விட்டு பறப்பதற்க்கு ஆசைப்பட்டால் உள்ளதும் போச்சடா நொள்ள கண்ணா என்று அலைய வேண்டியது தான்.
விஜயின் கேப்பை யாராவது நிரப்பி விடுவார்கள்.

நாளைய தீர்ப்பின் தோல்வியை சரி செய்ய செந்தூர பாண்டி படத்தில் நடித்து விஜயகாந்த் உதவினார்.

அரசியலில் தோல்வி அடைந்தால் நிச்சயம் விஜயகாந்த் உதவி செய்ய மாட்டார்.

கட்சி ஆரம்பிபதற்கு முன்பே விஜயை கண்டு விஜயகாந்துக்கு பயம் என்று விஜயின் நெருங்கிய வட்டாரம் சொல்லி உள்ளது.

விஜய் தந்தை உண்ணாவிரதத்தில் பிரியாணி பற்றி பேசிய அறிவுஜீவி கட்சி ஆரம்பித்தால் கொள்கைகள் எப்படி இருக்கும் என்பதைஇந்த தமிழ்நாடே யோசித்து பார்க்கட்டும் (விஜயும் சேர்ந்து யோசிப்பார்) ।ஆழம் தெரியாமல் காலை விட இது சினிமா அல்ல। விட்டு விட்டு வந்து போய் இருக்க அரசியல்வாதிகள் எல்லாம் ரஜினி மற்றும் கமல் அல்ல.

Friday, July 17, 2009

தமிழ் சினிமாவின் அதிமேதாவிகள்

முதல் மேதாவி எல்லாம் நம்ம சேரன் தான்।

மாயக்கண்ணாடி என்ற அற்புதமான காவியத்தைக் கொடுத்த திருவாளர் ஐயா தான்.(எவ்வளவு கேவலமான படத்தையும் மூன்று மணியில் பார்த்து விடும் என்னால் உங்கள் படத்தைப் பார்க்க ஏழு நாட்கள் எடுத்துக் கொண்டேன்.) படம் ஒடவில்லை என்றதும் தமிழ் மக்களுக்கு ரசனையே இல்லை என்று சொன்ன மேதாவி நீங்கள் மட்டும் தான்.

உங்களின் மற்ற படத்தை ஏற்று கொண்டதும் அதே ரசனை உள்ள மக்கள் தான்.

ஒரு வருடம் கழித்து மற்றோரு பேட்டியில் "இத்தனை நாள் வெளியே இருந்து கவனித்தேன் மற்ற இயக்குனர்களின் சூட்ச்மம் புரிந்தது..." என்று சொன்ன நீங்கள் செய்த காரியம் .( கொரியன் படமான க்ளாஸிக் என்ற உலக திரைப்படத்தை உருவி பொக்கிஷம் என்று எடுத்து எங்களுக்கு படம் காட்ட போவது மற்றும் பட்டை நாமம் சாத்தப் போவது நிச்சயம்)

மலையாளத்தில் வந்து வெற்றி பெற்ற ஸ்படிகம் (மோகன்லால் நடித்தது ) விஜய் டி.வியில் யுத்தம் என்ற பெயரில் வெளியான படம்.
அதை வீராப்பு என்று சுந்தர்.சி எடுத்து கல்லா கட்டிய படம்.

அதை பொல மலையாளத்தில் வந்த இன்னொரு படம் தான் ஹிட்லர் (மம்புட்டி நடித்தது விஜய் டி.வியில் அதே பெயரிலில் மொழி மாற்றம் செய்த படம். அதை மிலிட்டரி என்று சத்யராஜ் நடித்து கொடுமை படுத்தினார்.

அதை விட புத்திசாலி ஜீவன் ஒன்று உண்டு என்றால் அது சொம்பு (வெரி ஸாரி சிம்பு) அவர் நடித்த படம் தம் (இடியட் என்ற தெலுங்கு படத்தை ரீமெக் செய்தது தான் இந்த தம்). அதை திரும்பவும் தெலுங்கில் டப் செய்து விட்டார்கள்.

அதே கதை ஜெமினி படத்திலும் நடந்தது இந்த பட ரீமெக்கில் வெங்கடேஷ் நடித்து தோல்வி அடைந்த பிறகு திரும்பவும் விக்ரம் நடித்ததை தெலுங்கில் டப் செய்து விட்டார்கள்.

இதை எல்லாவற்றையும் விட கொடுமை விஷ்னுவர்தன் செய்தது தான்.

பிதாமகன் படத்தையே உருவி அவ்ர் பட்டியல் என்று எடுத்து விட்டார்.

கதைக்களம் தான் வேறு

விக்ரம் அதிகமாக பேச மாட்டார். பரத் ஊமை.

சூர்யா கொல்லப்பட்டவுடன் விக்ரம் பழி வாங்குவார். இதில் ஆர்யா கொல்லப்பட்டவுடன் பரத் பழி வாங்குவார்.

பெயரில் கூட என்ன ஒற்றுமை சூர்யா - ஆர்யா.

இதையும் விடவும் கொடுமையான கதை கௌதம் மெனன் செய்தது மற்றும் ரசிகர்களுக்கு செய்ய இருப்பது.

வாரணம் ஆயிரம் - கௌதம் மேனனின் அப்பாவின் கதையை சொன்ன படம் . அதில் வந்தது எல்லாம் கௌதம் மேனனின் வாழ்வில் நடந்தது தான்.

வாரணம் ஆயிரம் படத்தில் காதல் தோல்வியில் இருந்து கௌதம் (சூர்யா) மீண்டு வந்த பிறகு இராணுவத்தில் சேருவார் .

ஆனால் உண்மையில் அவர் சேர்ந்தது ராஜீவ் மேனனின் உதவியாளராக - இந்த கதை தான் விண்ணைத் தாண்டி வருவாயா .

கதையில் த்ரிஷா சிம்புவின் தங்கையின் தோழி . வாரணம் ஆயிரம் படத்தில் திவ்யா சூர்யாவின் தங்கையின் தோழி .

ஆக மொத்தம் இரண்டு கதையும் ஒன்று தான் . இரண்டையும் குப்பையில் தான் போட வேண்டும் (பாடல்களை நான் சொல்லவில்லை).

தமிழ் ரசிகர்களைப் போல முட்டாள்கள் இருக்கும் வரை இந்த முட்டாள்கள் எடுத்த கதையையே எடுப்பார்கள் .

ஆஸ்கர் கிடைக்க என்ன செய்ய வேண்டும்

இதுவரை ஆஸ்கர் ஒரே ஒரு தமிழனுக்கு மட்டுமே சாத்தியம் ஆகி உள்ளது. அது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் இந்திய மொழியில் முயன்று இருந்தால் ஒரே ஒரு பிரிவில் மட்டுமே அவர் போட்டி போட்டு இருப்பார். நிச்சயம் வென்று இருக்க மாட்டார். அவர் நேரடி ஆங்கில படத்தில் வேலை பார்த்ததால் அவருக்கு ஒன்றுக்கு இரண்டாக ஆஸ்கர் சாத்தியப்பட்டது.

ஆக மொத்தம் நேரடி ஆங்கில படத்தில் வேலை பார்த்தால் மட்டுமே ஆஸ்கர் ஒரு இந்தியனுக்கு கிடைக்கும்.

அப்பொழுது ஒரு தமிழனுக்கு (குறிப்பாக ஒரு நடிகருக்கு அல்லது இயக்குனருக்கு) ஆஸ்கர் கிடைக்க என்ன செய்ய வேண்டும்.

முதலில் தமிழில் வெற்றி பெரும் படத்தைத் தெலுங்கு மொழியில் டப் அல்லது ரீமெக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் இந்தி திரையுலகம்
அந்த படத்தை திரும்பிப் பார்க்கும்.

அப்படி தெலுங்கு மொழியில் வெற்றி பெரும் படத்தைத் தான் இந்தியில் ரீமெக் செய்வார்கள். ஆனால் பெரும்பாலான தமிழ் படங்கள் தெலுங்கு மொழியில் வெளியான உடன் மண்ணைக் கவ்வி விடும்.

அதற்கு சில உதாரணங்கள் (டப் செய்து மண்ணைக் கவ்வியவை)
சுப்ரமணியபுரம், அயன்,

(ரீமெக் செய்து மண்ணைக் கவ்வியவை)

ஆட்டோக்கிராப் (தெலுங்கு மொழியில் தோல்வி அடைந்த உடன் இந்தி ரீமெக் நிறுத்தப்பட்டது),ஜெமினி, காக்க காக்க, துள்ளுவதோ இளமை,காதல் கொண்டேன், திருடா திருடி, சித்திரம் பேசுதடி மற்றும் பல.

தெலுங்கிலும் வெற்றி பெற்று இந்தியில் மண்ணைக் கவ்வியவை - அந்நியன், தசாவதாரம் (மூன்று மொழியிலும் ஒரே நடிகர்)

ரீமெக் செய்து வெற்றி பெற்றது - கஜினி (அமீர் கான் ), சேது (ராஜசேகர் மற்றும் சல்மான் கான்)

இந்தியில் போய் தோல்வி அடைந்த படம் - மின்னலே (சயிஃப் அலி கான் அப்பாஸ் கேரக்டரில் நடித்தார் இன்று அவர் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ + கரீனா கபூரின் காதலன்)

தமிழிலில் தோல்வி அடைந்து தெலுங்கு மற்றும் இந்தியில் வெற்றி பெற்ற படம்
சார்லி சாப்ளின் (நோ என்டரி), கபடி கபடி, பம்மல்.கே.சம்பந்தம் (காம்பக் இஸ்க்)

முதலில் தெலுங்கு படத்தில் வெற்றி பெற வேண்டும்(இந்தியில் நுழைய) அல்லது நேரடி இந்தி படத்தில் நடிக்க வேண்டும்.

தெலுங்கு மொழி எப்படி இந்தியில் அளவுக்கோலோ அது போல ஆங்கில படத்தில் நடிக்க இந்தியில் பெரும் வெற்றி தான் அளவுக்கோல்.

இப்பொழுது அமீர் கான் ரஹ்மானுக்கு வாங்கி தந்த இயக்குனர் டேனி போயல் நேரடி ஆங்கில படத்தில் நடிக்க உள்ளார்.( ஆஸ்கரைக் குறி வைத்து தான்)

அப்ப நம் தமிழ் நடிகனுக்கு வாய்ப்பு இருக்குமா ?

நிச்சயம் சூர்யாவிற்கு இருக்கிறது (ராம் கோபால் வர்மாவின் அடுத்த இந்தி படத்தின் ஹீரோ வேறு யார் சூர்யா தான் அவரை வாழ்த்துவோம்.)

Thursday, July 16, 2009

காட்ஃபாதர் படத்தை உருவிய கோடம்பாக்கம்

நாயகன் படம் (கமல் நடித்தது) டைம்ஸ் நாளிதழளால் சிறந்த நூறு படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாம் ஆங்கில படங்களை விட முப்பது வருடம் பின் தங்கி உள்ளோம் என்பதற்க்கு மிகச் சிறந்த உதாரணம் காட்ஃபாதர் படத்தில் இருந்து கோடம்பாக்கம் உருவிய காட்சிகளே பேசும் .

ரவிவர்மன் ஒரு படத்தை ஒளிப்பதிவு செய்து விட்டு தனக்குத்தனே மிக பெருமை அடைந்து கொண்டார். 1976லில் வெளியகிய ஒரு ஆங்கில படத்தை பார்த்து அவர் மிரண்டு விட்டார்.காரணம் அவர் ஒளிப்பதிவை விட அந்த படத்தில் மிக பிரமாதமாக இருந்ததாம்.

அப்போ கதை அதுவும் தான்.

இன்னும் அப்பாவை கொன்றவனைப் பழி வாங்கும் கதையை நாம் எடுத்து கொண்டு இருக்கிறோம்। ஒரு நடிகர் தன் அப்பா கொல்லப் படும் போதெல்லாம் தலையில் தண்ணீர் தெளித்து கொண்டு வில்லனைப் பழிக்குப்பழி வாங்குவார்। ஆனால் நிஜத்தில் அவர் அப்பா கொல்லப்பட்ட பொழுது அமைதியாக இருந்தார்।

அப்போ படம் பர்க்கும் நாம் எல்லாம் கேனையர்கள்.

அமீர் கானிடம் ஆஸ்கர் நமக்கு கிடைக்காதா ? என்று கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் " அவர்கள் எடுத்த படத்தையே நாம் திரும்ப எடுத்து அவர்களிடம் காட்டினால் நமக்கு ஆஸ்கர் எப்படி கிடைக்கும்..."

ஆஸ்கர் மட்டும் அல்ல நமக்கு மரியாதை கூடக் கிடைக்காது.

அமீர் கான் சொன்ன வார்த்தைகள் நூறு சதவீதம் பொருந்த கூடிய படம் தான் காட்ஃபாதர்.

மனிரத்னத்தின் கூர்மையான புத்திசாலித்தனத்தை நாம் எல்லாம் மெச்ச வேண்டும் .

காட்ஃபாதர் 1 மற்றும் 2ம் பாகத்தில் இருந்து உருவிய காட்சிகளைக் கொண்டு நாயகன் திரைப்படத்தை எடுத்தார்.

கமலின் சின்ன வயது கொலை மற்றும் அவரது அப்பாவின் மரணம், குடும்பத்தின் மீது தாக்குதல் (மகன் காட்ஃபாதர் ஆன பிறகு தாக்குதல் நடக்கும்) எல்லாம் 2ம் பாகத்தில் இருந்து சுடப்பட்டது.

சரண்யா இறந்த பிறகு ஒட்டுமொத்தமாக எதிரிகளை கொல்வது, மூத்த மகன் இறப்பது முதல் பாகத்தில் இருந்து சுடப்பட்டது.

ஒட்டுமொத்தமாக எதிரிகளை கொல்லும் காட்சி 2006லில் வெளி வந்த புதுப்பேட்டை மற்றும் தலைநகரம் படத்தில் இடம் பெற்று இருக்கும்.

மருத்துவமனையில் இருந்து அப்பாவை வேறு இடத்திற்கு மாற்றும் காட்சி அக்னி நட்சத்திரம் படத்தில் இடம் பெற்ற க்ளைமாக்ஸ் காட்சியாகும்.

தங்கையை அடித்த வீட்டுக்காரனை அண்ணன் துரத்தி துரத்தி அடிக்கும் காட்சி அண்ணாமலையில் வைத்தார்கள். தங்கையை திரும்ப அடித்த தேடிச் செல்லும் காட்சியும் இடம் பெறும்.

அமரன் படத்தில் பர்ஸ்ட் எய்ட் பெட்டியில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து இரண்டு பேரை கொல்வார். இதுவும் காட்ஃபாதர் படத்தில் இருந்து எடுத்தது .

நான் தமிழ் சினிமாவேப் பார்க்க மாட்டேன் ஆங்கிலப்படம் மற்றுமே பார்ப்பேன் என்று சொன்ன நண்பனிடம் சண்டைப் போட்டு இருக்கிறேன்.

காட்ஃபாதர் மற்றும் சைக்கோ (பாலு மகேந்திரா இயக்கிய மூடுபனி படம் இந்த படத்தின் அப்பட்டமான திருப்பி போடப்பட்ட தீந்து போன தோசை) பார்த்த பிறகு அவன் கருத்தை ஒப்புக்கொண்டேன்.

இப்பொழுது எல்லாம் நான் செய்வது தமிழ் படம் மட்டும் தான் பார்க்கிறேன் (எப்படி பார்த்தாலும் உலக சினிமா தமிழில் வந்து விடும் பைசைக்கிள் தீவ்ஸ் பொல்லாதவனாக மாறியது போல)

நாம் இதை எல்லாம் கேட்டால் இது ஈ அடிச்சான் காப்பி இல்லை இன்ஸ்பிரேஷன் என்று சொல்வார்கள் இந்த டகால்டிகள்.

நாடோடிகள் என் ஒரப்பார்வையில்

இருபது வருடங்களுக்கு முன் என்னுடைய சித்தி ஒரு டி.ராஜேந்தரின் தீவிர ரசிகை. அப்பொழுது வந்து வெற்றிகரமாக ஓடி தொலைத்த படம் என் தங்கை கல்யாணி. ஆறு மாதத்திற்கு முன்னால் வரை இப்படி ஒரு படம் இருப்பதே தெரியாமல் சந்தோசமாக இருந்த நான், அன்று ஒரு நண்பர் அறைக்கு சென்றதால் என்னுடைய மகிழ்ச்சி காணாமல் போக போவது தெரியாமல் அந்த படத்தை பார்த்து தொலைத்து விட்டேன். காரணம் என் சித்தி சிலாகித்து சொன்ன படம் அல்லவா.

படம் முடிந்த பிறகு ஒற்றை தலைவலியும் சித்தியின் மீது கொலைவெறியும் மாறி மாறி வந்து போனது .

இப்படி ஒரு நிலைமை நாடோடிகள் படத்தை பார்த்த பிறகு என் குழந்தைகோ அல்லது என் தம்பி குழந்தைகோ வரக் கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

காரணம் நான் இன்று நாடோடிகள் படத்தை நான் சிலாகித்து சொன்னால் இருபது வருடங்களுக்கு பிறகு எங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயம் என் மீது
கொலைவெறியோடு அலைவார்கள்.

அபத்தங்களின் உச்சம் தான் நாடோடிகள்.

இதை சொல்வதற்கு ஒரே ஒரு காரணம் படத்தின் முடிவு தான்.

தங்களை ஏமாற்றிய அந்த காதலர்களை தூக்கி வந்து அடித்து துன்புறுத்திய பிறகு டீக்கடையில் இன்னொரு காதலுக்கு நாங்களும் வருகிறோம் என்று சொல்வார்கள் .

அப்படி அந்த காதலிலும் ஏதாவது இழந்து அந்த காதலர்களும் பிரிந்து அவர்களையும் அடித்து விட்டு இன்னொரு டீக்கடையில் இன்னொரு காதலுக்கு நாங்களும் வருகிறோம் என்று சொல்வார்களா ?

கஞ்சா கருப்பு கேட்பது போல அவர்களுக்காக ஏப்பொழுது வாழ்வார்கள் ?

இன்னொரு காரணம் விஜய் காலில் அடிப்பட்டு கிடக்கும் பொழுது அவரை காப்பாற்ற முயர்சி செய்யாமல் வண்டியில் ஏறும் அந்த சுயநல நண்பனுக்கு இப்படி ஒரு உதவி செய்து அன்பான பாட்டியை இழக்க வேண்டுமா?

இனி படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள்

1। முதல் கடத்தலின் பொழுது சிறு காயம் கூட இல்லாமல் காதலர்களை அழைத்து வரும் சசிகுமார் & கோ இரண்டாவது கடத்தலின் பொழுது அடித்தே இழுத்து வருவது ( சுவராக இருக்கும் ஆஸ்பெடாஸ் கூரையை நண்பனை கொண்டே உடைப்பது இரண்டாவது சம்போ பாட்டில் முதல் தடவை வரும் அளவிற்கு உயிர் இல்லை)

2. கோபம் வந்தவுடன் பரணி அந்த வண்டி ஒடும் பொழுது பின்னால் அந்த பெண்ணை சென்று அடித்து விட்டு வருவது .

3. காது கேட்காமல் வரும் பரணி பார்க்கும் காட்சியில் திரையில் சத்தம் இல்லாமல் இருப்பது கேமரா பரணியை பார்க்கும் காட்சியில்
பலத்த சத்தம் கேட்பது.

4. "நீ வலிச்சாலும் வலிக்காத மாதிரியே இருப்ப..." என்று பரணி சொல்வது படத்தின் முதலில் இருந்தே வரும் வசனம்.
(உ.தா "நீ பார்த்தாலும் பார்க்காத மாதிரியே இருப்ப..." என்று சசியின் தங்கை விஜக்கு முத்தம் குடுத்த பிறகு பரணி சொல்வது)

படத்தொகுப்பாளர் மிகவும் வேலை செய்து இருக்கிறார் । சசி லாரி மீது ஆடும் பொழுது சட்டை விதவிதமாக வேர்வையில் நனைந்து இருப்பது (ரிகர்சல் அதிகமோ?) சசி அடுத்த தடவை ஆடும் பொழுது தயவு செய்து சட்டையை கழற்றி விட்டு ஆடுங்கள் அல்லது ஆடாதீர்கள்.