Monday, March 22, 2010

கற்றது தமிழ் ராம் ஒரு எதிர்வினை லட்டு சாப்பிடுகிறீர்களா

கற்றது தமிழ் ராம் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு.முதல் காரணம் பாலுமகேந்திராவின் சிஷ்யன் என்பதாலும், அவர் இயக்கும் படத்திற்கு பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்ய ஆசைப்பட்டதும் அடுத்த காரணமாக இருக்கலாம்.எங்கு போனாலும் பைக்கில் பயணித்தது அவரை இன்னும் எனக்கு நெருக்கமாக உணர வைத்தது.மொத்தமாக கற்றது தமிழ் பிடிக்கவில்லை என்றாலும் படத்தில் வந்த சில காட்சிகள் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அவர் மீது மதிப்பு குறைந்த இரண்டு சம்பவங்களில் முதலாவது ஒரு கிசுகிசுவால் உருவானது.

பைக் இயக்குனர் இயக்கும் மைதானம் படத்தின் கதை தமிழ் கற்ற இயக்குனரின் உதவியாளரின் கதை என்றும் தமிழ் கற்ற இயக்குனர் ராம் தான் அவருக்கு படிக்க கொடுத்தாகவும் அதை பைக் இயக்குனர் எடுத்து  கொண்டதாகவும் முதல் கிசுகிசுவில் எழுதப்பட்டது.அந்த கதையின் பெயர் ஆண் கோழியின் கானகம்.அஞ்சாநெஞ்சன் இருக்கும் ஊரின் பிண்ணனியில் நடக்கும் கதை என்றும் வழக்கைத் தவிர்க்க  அந்த உதவியாளருக்கு  பெரும் பணம் பேரம் பேசப்பட்டதாகவும் உதவியாளர் கதை என்ற இடத்தில் அவர் பெயர் வர வேண்டும் என நிர்பந்திக்கிறார் என்றும்  இரண்டாவது கிசுகிசுவில் முடிந்தது.கிசுகிசு படிக்கும் போது அதில் ஐம்பது சதவீதம் தான் உண்மை இருக்கும் என்பதால் தமிழ் கற்றவர் அப்படி செய்து இருக்க மாட்டார் என்று நினைத்துக் கொண்டேன்.

இரண்டாவது சம்பவம் தான் எனக்கு அதிகம் அதிர்ச்சியை அள்ளித் தெளித்தது. அது முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம் என்ற பேட்டி அல்லது உரையாடல்.படித்து முடித்ததும் நான் என்ன நினைத்தேனோ அது முதல் பின்னூட்டமாக வந்திருந்தது.அதுவே கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.மஞ்சூர் ராசாவின் பின்னூட்டம் என் கருத்தை சரியாக பிரதிபலித்த காரணத்தால் (காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது. என்று அதே முத்துக்குமரன் எழுதிய வாசகங்கள் தான் நினைவுக்கு வந்தது.. இந்தப் பதிவைப் படித்து முடித்த போது.!) எதிர்வினை எழுத வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லவே இல்லை ஒரே ஒரு பின்னூட்டத்தைப் பார்க்கும் வரை.அது என்னவென்றால் ராம் போன்றவர்கள் முன் வந்து இளைஞர்களை வழி நடத்த வேண்டுமாம்.என்ன கொடுமைடா சாமி.

என்னை  பொறுத்த வரை பேச்சாளனையும்,எழுத்தாளனையும் நான் முழுதாக நம்பியதேயில்லை.எழுத்து மற்றும் பேச்சாற்றலை வைத்து ஒருவரின் குணாதியங்களை எடைப் போட்டால் அது மாதிரி முட்டாள்த்தனம் வேறு எதுவுமில்லை.

அந்தக்  கட்டுரையின் அடிநாதமாக  கருதுவது மாணவர்களின் பார்வையும் புரிதலும் தான்.அதை  தங்களுக்கு சாதமாக மாற்றுவதே இரத்தம் சூடாகும் வரை பேசும் திறமையுள்ள பேச்சாளர்கள் தான். அந்த திறமையுள்ளவர்களில் வைகோ,திருமாவளவன்,சீமான்,நெடுமாறன் இப்படி எல்லோருக்குமே அந்த  பட்டியலில் நிரந்தர இடம் கொடுத்து வைத்துள்ளேன்.இந்திய அரசு அனுமதிக்கட்டும் பதினைந்து லட்சம் பேர் போருக்கு செல்லத் தயார் என்று சீமான் வாயால் வெடித்தது எனக்கு கொஞ்சம் கூட புல்லரிக்கவில்லை.வாயால் வெடிப்பவர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு அவர் முன்னேறியிருந்தார். அவர் எவ்வளவு நேரம் முத்துகுமாரின் ஊர்வலத்தில் பங்கேற்றார் என்பது அவருக்கே வெளிச்சம்.இன்று ஈழத் தமிழர்கள் நம்பும் இவரும் விஜய்யும் சேர்ந்து படம் செய்யப் போகிறார்களாம்.இதற்குத் தானே ஆசைப்பட்டீர்கள் சீமான்.தலைப்பு  கோபம்.இதை விட தார்மீக  கோபம் என்று வைத்து கொள்ளுங்கள்.இன்னும் நன்றாகயிருக்கும்.

முத்துக்குமாரின் புரட்சியை முடக்குவதில் ஒன்று சேர்ந்தவர்கள் தேர்தல் சமயத்தில்  கூட்டணியில் தனித்தனியாக நின்றார்கள்.சேறை லேசாக பூசிக் கொண்டதோடு இல்லாமல் ஆடு திருடிய களவாணிகளாக அடித்து  கொண்டார்கள்.நீங்கள் அந்த சமயத்தில் சொல்லியிருக்கலாமே ராம்,ஏன் சொல்லவில்லை.ஆனந்த விகடன் எழுதாமல் போய் விடும் என்பதாலா.ஆனந்த விகடனை நிச்சயம் பதிவுலகம் ஜெயித்து  காட்டும்.பதிவுலகத்தில் அன்றே பதிவு செய்திருந்தால் காட்டுத்தீ மாதிரி பரவியிருக்கும்.அன்று இருந்த நிலைமை அப்படி.நிச்சயம் அதை நீங்கள் செய்யாமல் விட்டது உங்கள் மீதிருந்த மதிப்பில் ஒரு படி இறங்கி விட்டது.

நீங்கள் இன்று இந்த உண்மையை உடைத்தது எதற்காக ஒரு யுகம் எழுந்தது.அதை  சொன்னால் இன்று நான் துரோகியாக்கப்படுவேன்.நானும் காலம் கடந்து இரண்டு வருடங்கள் கழித்து பதிவு செய்கிறேன்.எனக்கு வந்த ஒரே ஒரு எண்ணம் உங்களை வெற்றி இயக்குனராக ஆக்கியிருக்க வேண்டும்.அப்படி செய்திருந்தால் இரண்டு சாத்தியங்கள் இருந்திருக்கும்.இந்த உண்மை சீக்கிரமே வந்திருக்கும்.அல்லது இன்னும் புதைந்தேயிருக்கும். காலை வெட்டி எடுத்தப்பின் மருந்து தந்தது போலிருந்தது.பரவாயில்லை புண் பரவாமல் நிறுத்தப்படும் என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.மாணவர்களுக்கு வழி நடத்த யாரும் தேவையில்லை. வழிகாட்ட ஆளிருந்தால் போதும். அது உங்களால் முடியுமா என்று நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள் ராம்.நீங்கள் செய்ய வேண்டியது செய்ய முடிந்தது எல்லாம் ஒன்று தான்.துடிப்புமிக்கவர்களுக்கு நல்ல சினிமா எடுக்க கற்றுத் தாருங்கள்.பிறகு எல்லாம் அவர்களே பார்த்து  கொள்வார்கள்.

18 comments:

நீ தொடு வானம் said...

கண்ணா அடுத்த லட்டு சாப்பிடலையா

ராம்ஜி_யாஹூ said...

I too had regard to Ram just because he is a disciple of Baalu mahendra.

இரும்புத்திரை said...

கணேஷ் அது என் லட்டு தான் எனக்கு மட்டும் தான்.

நன்றி ராம்ஜி.யாஹூ

Romeoboy said...

இத மாதிரியே நீ எதிர்வினை எழுதிட்டு இருந்தா உனக்கு எதிரிங்க அதிகமாகிட்டே போவாங்க... தத்துவம் நம்பர் 1234567- சுவாமி சாருஆனந்தா :))))

இராகவன் நைஜிரியா said...

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்.

விஷயம் பற்றி ஒன்றுமே தெரியாததால்.

பாலாஜி சங்கர் said...

உங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன்

ProfWolfMan said...

//நீங்கள் செய்ய வேண்டியது செய்ய முடிந்தது எல்லாம் ஒன்று தான்.துடிப்புமிக்கவர்களுக்கு நல்ல சினிமா எடுக்க கற்றுத் தாருங்கள்.எல்லாம் அவர்களே பார்த்து கொள்வார்கள்.//
பிரமாதம்!!!

அமைதி அப்பா said...

என்னை பொறுத்த வரை பேச்சாளனையும்,எழுத்தாளனையும் நான் முழுதாக நம்பியதேயில்லை.எழுத்து மற்றும் பேச்சாற்றலை வைத்து ஒருவரின் குணாதியங்களை எடைப் போட்டால் அது மாதிரி முட்டாள்த்தனம் வேறு எதுவுமில்லை.//

நச்சுன்னு இருக்கு...!

ஆதிசங்கரன் said...

எல்லோரிடமும் குறை கண்டு பிடிப்பவனே,மிக மோசமான மன நோயாளி.உங்களுக்கு அந்த தகுதி இருப்பது உறுதியாகிறது.இப்போதாவது இதை பதிவு செய்து தமிழ் நாட்டின் மிக மோசமான தலைவர்களின் பகையை சம்பாதித்தாலும் பரவாயில்லை என்று பேசும் தோழர் ராமிற்கு ஆதரவு தராவிட்டாலும் இது போன்ற லூசுத்தனமான எழுத்துக்களை எழுதாதீர்கள்.

இரும்புத்திரை said...

சரிங்க athi..இதை படிச்சிட்டு நீங்கள் மன நோயாளியாக ஆக வேண்டாம்.கருத்திற்கு நன்றி.காலத்தினால் என்று தொடங்கும் திருக்குறளினால் வந்த விளைவு இது.நான் நினைத்த மாதிரியே நீங்கள் மறைந்து வந்து இருக்கிறீர்கள்.

Thennavan said...

//தமிழ் நாட்டின் மிக மோசமான தலைவர்களின் பகையை சம்பாதித்தாலும் பரவாயில்லை என்று பேசும் தோழர் ராமிற்கு ஆதரவு தராவிட்டாலும் இது போன்ற லூசுத்தனமான எழுத்துக்களை எழுதாதீர்கள்.//
ATHI கருத்துடன் ஒத்து போகிறேன்

இரும்புத்திரை said...

தவிக்கும் போது தான் தண்ணி கொடுக்கணும்.செத்தப் பின் எனக்கு பால் தேவையில்லை.அதை மே மாதமே சொல்லியிருந்தால்...................நீங்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள் தென்னவன்.

ராஜ நடராஜன் said...

கால தாமதமான உண்மைகளுக்கு காரணம் என்ன எனப்தை இயக்குநர் ராமின் பதிவை வெளியிட்ட இனியொரு தளத்தில் சில நண்பர்கள் முன் வைத்துள்ளார்கள்.நானும் ராமின் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன்.

மேலும் ராமின் கருத்துக்களுக்கு அவர் குறிப்பிட்ட தலைகளும் தங்கள் கருத்தை வெளியிடுவது உண்மைகளை நடுநிலையில் யோசிக்க பயன்படும்.

எந்த கோணத்தில் அலசினாலும் வரலாற்றுப்பிழையின் காரணங்களுக்கு தமிழகம் காரணமாகிவிட்டதை மீண்டும் பதிவு செய்கிறேன்.

காட்சி said...
This comment has been removed by the author.
காட்சி said...

வணக்கம் தோழர்களே.

1.நீங்கள் என் உதவியாளரிடமும், இயக்குநர் வெற்றிமாறனிடமும் கேட்க வேண்டிய கிசுகிசுவிற்கான பதிலை என்னிடம் கேட்கிறீர்கள்.

2.இறுதி யுத்தம் நடந்த கணத்தில் என் சாட்சியத்தைப் பதிவு செய்து குழப்பத்தைக் கூட்ட வேண்டாம் என்பதே அப்போது எழுதாத காரணம்.யாராலாவது எவ்வித உதவியாது கிடைக்காத என ஈழம் தவித்திருந்த போது குழப்பத்தை ஏற்படுத்துதல் என்பது முட்டாள்தனம் என நான் நினைத்தேன்.

3. இறுதி யுத்தத்திற்குப் பின் எனக்கு ஏற்பட்ட மனப்பிறழ்வு, குழப்பங்கள், அப்போது தமிழ் இனம் இருந்த உணர்ச்சிவசப்பட்ட மனநிலை, ஆகியவை எழுதவிடாமல் தடுத்தன.

4.சமீபத்தில் மீனகம்.com ல் திரு.இராவணண், தோழர்.வன்னியரசு அவர்களின் கட்டுரைகளைப் படித்த பின் எனக்குத் தெரிந்த விடயங்களை
பதிவு செய்வதை இப்போது விட்டாமல் பதிய இயலாமலெயே போய் விடும் என்று தோன்ற பதிவு செய்தேன்.

5.வரலாற்றில் பதிவு செய்வது என்பது யாரையும் குற்றம் சாட்டவோ, அவர்களின் இத்தனை வருட காலத்து அர்ப்பணிப்புகளை கேள்விக்குள்ளாக்கவோ இல்லை. வரலாற்றில் பதிவு செய்வது என்பது நீதி வழங்குவதற்காய் இல்லை. என் சாட்சியம் மட்டும்மே வரலாறாய் ஆக முடியாது. என் கட்டுரையின் முதல் பாராவைப் படிக்கவும் -
"முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்."


6. யாரையும் வழிமுறைப்படுத்தும் அளவிற்கோ, வழி நடத்திற்கும் அளவிற்கோ பக்குவமும்,ஞானமும்
பொறுமையும் தலைமைப் பண்பும் அற்றவன் நான். பெரும் சுயநலவாதி.

8.முத்துக்குமரன் வரலாறு இவற்றின் முன்னால் நான் ஒரு தமிழன். திரைப்பட இயக்கம் என்பது என் தொழில். நீங்கள் என்னை இயக்குநராய்ப் பார்ப்பது என்பது உங்களுடைய பார்வை. என் தொழிலை நான் செய்வது என்பது என் அகப் பொருளாதார வாழ்க்கைக்கு முக்யம்.நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.உங்க வேலையை பாருங்க இதெல்லாம் எதுக்கு எழுதறீங்கன்னு நான் கேக்கவோ சொல்லவோ மாட்டேன். உங்களின் சமூக உணர்வே உங்களை எழுத வைக்கிறது.

9.நான் வெறும் ஒரு தமிழன்.என் பெயர் ராம்.என்னை ஒரு இயக்குநர் என்று பார்க்காதீர்கள். நானெ அவ்விருக்கையைப் பொருட்படுத்தாமால் உங்களிடம் உரையாடும் போது நீங்கள் ஏன் அதை நினைவில் கொள்கிறீர்கள். சைக்கிளுக்குப் பஞ்சர் போடுவதைப் போல் ஒரு தொழில் திரைப்பட இயக்கம். அவ்வளவே.

அப்புறம் இவ்வுண்மைகளை அப்போதே தெரிந்திருந்தால் நீங்கள் அல்லது நம் இனம் என்ன செய்திருப்பீர்கள் எனச் சொல்லுங்கள்?
இவ்வுண்மைகளை விட பேர் உண்மைகளும் வலிகளும் நம் முகத்தில் அறைந்த அக்காலத்தில் நாம் என்ன செய்தோம்? அல்லது செய்ய முடிந்தது. ஏன் உங்கள் யரையும் நாங்கள் புழல் சிறையில் இருந்த தருணங்களில் சந்திக்க வில்லை? அல்லது தஞ்சாவூர் விமானப்படைத்தள முற்றுகையில் அல்லது வடபழனி போராட்டத்தில் அல்லது எதாவது ஒரு போராட்டத்தில் ஒருவேளை சந்தித்து இருந்தால் நேரில் நிறைய பேசி இருக்கலாம்?

நன்றி

ராம்

மதார் said...

@ காட்சி
////நான் வெறும் ஒரு தமிழன்.என் பெயர் ராம்.என்னை ஒரு இயக்குநர் என்று பார்க்காதீர்கள். நானெ அவ்விருக்கையைப் பொருட்படுத்தாமால் உங்களிடம் உரையாடும் போது நீங்கள் ஏன் அதை நினைவில் கொள்கிறீர்கள்.//

நீங்கள் இயக்குனர் என்ற போர்வையில் வராமல் எங்களைப் போல் சாதாரண மனிதராய் வெறும் ராம் என்ற பெயரிலோ அல்லது வேறு புனைப்பெயரிலோ வந்திருக்கலாமே . அப்படி நீங்கள் இயக்குனர் என்ற அடையாளம் தேவையில்லை என்று விரும்பி இருந்தால் ஏன் உங்கள் பக்கத்தில்

//About Me

காட்சி
chennai, tamil nadu, India
வணக்கம். நான் ராம். கற்றது தமிழ் இயக்குநர். //


என்று போடவேண்டியதின் அவசியம் என்னவோ ?


உங்கள் ப்ளாக் 2010 இல் இருந்தே எழுதப் பட்டுள்ளன அப்படி இருக்கும்போது உங்களுக்கு அதற்குள் எப்படி 90 பாலோயர் வந்தனர் . இவை இயக்குனர் என்ற போர்வையில்தானே ?



வரும் 27 .3 .2010 இல் நடக்கும் சென்னை பதிவர் சந்திப்பில் நீங்கள் சிறப்பு விருந்தினர் இது எந்த போர்வையில் ? பதிவர் அல்லது கற்றது தமிழ் இயக்குனர் அல்லது கற்றது தமிழ் இயக்குனர் ராம் பதிவர் .?

http://cablesankar.blogspot.com/2010/03/270310.html

Unknown said...

//அப்புறம் இவ்வுண்மைகளை அப்போதே தெரிந்திருந்தால் நீங்கள் அல்லது நம் இனம் என்ன செய்திருப்பீர்கள் எனச் சொல்லுங்கள்?
இவ்வுண்மைகளை விட பேர் உண்மைகளும் வலிகளும் நம் முகத்தில் அறைந்த அக்காலத்தில் நாம் என்ன செய்தோம்? அல்லது செய்ய முடிந்தது. ஏன் உங்கள் யரையும் நாங்கள் புழல் சிறையில் இருந்த தருணங்களில் சந்திக்க வில்லை? அல்லது தஞ்சாவூர் விமானப்படைத்தள முற்றுகையில் அல்லது வடபழனி போராட்டத்தில் அல்லது எதாவது ஒரு போராட்டத்தில் ஒருவேளை சந்தித்து இருந்தால் நேரில் நிறைய பேசி இருக்கலாம்?//

இதுதான் உண்மை, ராம் காலம் கடந்து பதிவு செய்திருந்தாலும் அன்றைய போராட்டத்தில் அவர் தன் பங்கை ஆற்றியிருந்தார், ஒரு எளிய தமிழனாக அவர் செய்ய முடிந்ததை செய்திருக்கிறார்.

இரும்புத்திரை உங்கள் விமர்சனங்களை இப்போதைய பிரச்சினைகளின் மேல் கவனம் செலுத்துங்கள், வரவேற்கிறோம்.

மின்சாரம் இன்றி புழுக்கத்தில் சாகிறோம் அதனைப்பற்றி இப்போதே ஒரு பதிவை எழுதினால் நன்றாக இருக்கும்.



அப்புறம் மதார் இங்கு ஒரு நல்ல படம், மற்றும் வெளிப்டையான கருத்து சொல்லவே பயப்படும் இக்காலத்தில், தன் மனதின் கோபத்தை திரைப்படமாக வெளிபடுத்திய கலைஞன் ராம். இயக்குனர் என்பது அடையாளம் அல்ல தொழில்,

விமர்சனங்களை வைக்கும் முன் பரிசீலனை செய்யுங்கள்.

மதார் said...

@K.R.B, Ram yaro vena irukattum , ennudaya pathil avarudaiya kelvike. Katchiyin comment padichu parunga . Ennai en iyakunaraga pakureenganu ketute en avarudaiya ella pathivilum iyakunar ram enru podanum? Verum ram enru thanai adayalap paduthirukalame?