Wednesday, March 24, 2010

ரோட் இந்தி படமும்,திருப்பாச்சி டெம்பிளேட் சட்டைகளும்

படம் மாதிரியே கதையும் மிகவும் சிறியது தான்.அப்பாவின் எண்ணெய் வியாபாரத்தில் சிக்காமல் தப்பிக்கும் வாய்ப்பாக ஒரு பழைய டிரக் கிடைக்கிறது.அதை அருங்காட்சியத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பை ஏற்க முன் வருகிறார் அபய் தியோல்.பாலைவனம் வழியாக பயணம் தொடர்கிறது.சக பயணிகளாக ஒரு சிறுவன்,ஒரு வயதானவர்,ஒரு பெண் மூவரும் வந்து சேர தண்ணீரைத் தேடி பயணம் ஊர்கிறது.

வழியில் வரும் இன்னல்களை எல்லாம் சினிமா புரோஜக்டர் மூலமாகவும்,கடைசி சிக்கலை தந்தையின் ஆயுதத்தாலும் தப்பிக்கிறார்கள்.பயணத்தில் அபய் தியோல் என்ன தெரிந்து கொண்டார் என்பதை வெள்ளித்திரையில் காண்க.

பாலைவனத்தில் செல்லும் தண்ணீர் இல்லாமல் நாக்கு வறண்டு கொண்டே போவதை ஒளிப்பதிவாலும்,படத்தொகுப்புமே செய்து காட்டி விடுகிறது.நான் படம் பார்க்கும் அடிக்கடி தண்ணீர் குடித்து நாவறட்சியைப் போக்கி கொண்டேயிருந்தேன்.படம் மிக மெதுவாக போனதால் அடிக்கடி கண்ணயர்ந்து விட்டேன்.கண் விழிக்கும் போதெல்லாம் அவர்கள் பயணித்தப்படியே இருந்ததால் நானும் எந்த கட்டத்திலும் படத்தோடு இணைந்து கொள்ள முடிந்தது.இதை இவர்கள் குறும்படமாக எடுத்திருக்கலாம்.அபய் தியோலின் முந்தைய படத்தின் எதிர்பார்ப்புகளால் இது கொஞ்சம் ஏமாற்றம் தான்.ஆனால் இந்த படம் சொல்ல வருவது..

(தூள்,திருப்பாச்சி படத்தில் ஆரம்பித்த டெம்பிளேட் கதையான  ஊரில் இருந்து வந்து சென்னை ரவுடிகளை ஒழித்து கட்டும் நாயகன் அதுவும் கிருஸ்மஸிற்கு வந்தால் புத்தாண்டிற்கு முன்னால் எல்லோரையும் சம்காரம் செய்து விட்டு அடுத்த தீபாவளிக்கு அடுத்த படத்திற்கும் இதே கதையை சிபாரிசு செய்வார்கள்.

ஜீவா தான் பதில் சொல்ல வேண்டும்.கச்சேரி ஆரம்பம் படத்திற்கும் தெனாவட்டு படத்திற்கும் உள்ள வித்தியாசங்களை அவர் தான் சொல்ல வேண்டும்.

இதே மாதிரியான படத்தில் விஜய்யின் பையனோ,ஜீவாவின் பையனோ நடிக்கும் போது போய் பார்க்காமல் இருக்க என் பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.)

இப்படி எல்லோ நடிகர்களும் ஒரே கதையில் நடிக்கும் படத்தை பார்ப்பதை விட அபய் தியோல் போன்றவர்கள் செய்யும் அபத்தங்களை ரசிக்கலாம்.

3 comments:

சங்கர் said...

வாழ்த்துகள் அரவிந்த், கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்லவே இல்ல,

இரும்புத்திரை said...

ஆமா சங்கர்..நீங்க எங்கே ரெண்டு நாளா ஆளை காணோம்..அங்கே எதையாது(கல்யாணம்) பண்றது அடுத்தவன் மேல பழியைப் போடுறது

Prathap Kumar S. said...

ஓய் லக்கி லக்கி ஓய் படத்தைபோல எதிர்பார்த்து படத்தை கண்டதால் ஏமாற்றம். இருந்தாலும் படத்தில் கரு அழகு... அதுமாதிரி நீங்க சொன்னமாதிரி நம்மூர் அப்பத்தங்களை விட ரோட் போன்ற அபத்தங்கள் வித்தியாசம்...பார்க்கலாம்.