Saturday, October 31, 2009

சசிகுமார்,சின்னமணி,சினிமா

சசிகுமார் நாடோடிகள் படத்தின் தெலுங்கு பதிப்பான சம்போ சிவ சம்போவில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கிறார் என்று இயக்குனர் சமுத்திரகனி ஒரு பேட்டியில் சொன்னார்.நான் கூட அது சின்னமணி வேடமாக இருக்குமோ என்று சந்தேப்பட்டு விட்டேன்.(தீபாவளிக்கு பாலிமர் டிவியில் ரவி தேஜாவும் சசிகுமாரும் பேட்டி கொடுத்தார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார்.மிஸ் பண்ணி விட்டேன்)

பிரம்மானந்தம் இருப்பதால் அவர் தான் நிச்சயம் சின்னமணியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.ரோஜா தான் இதில் மாஜி எம்.பி.இப்படியாவது அவர் எம்பி எம்பி குதித்து எம்.பி ஆனா தான் உண்டு.

ரவிதேஜா,பிரியாமணி இப்படி பெயரை பார்த்தவுடன் எனக்கு டரியல் ஆகி விட்டது.இருந்தாலும் அந்த படம் பார்க்க ஆசை.காரணம் நரேஷ்(நம்ம குறும்பு ஹீரோ) இவ்வளவு உயரமா இருந்துக்கிட்டு ஒருத்தன் குரங்கு சேட்டை பண்ணும் போது நம்மை அறியாமல் மனதில் ஒட்டி கொள்கிறான்.

அவர் நம்ம பரணி நடிச்ச வேடத்துல நடிக்கிறார்.அப்ப தான் குரங்கி சேட்டைக்கு உத்திரவாதம் உண்டு.காது கேட்காத மாதிரி அவர் எப்படி நடிப்பார் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது.

இருந்தாலும் ரவிதேஜாவை நினைச்சா தான் அடிவயிறு கலங்குது.ஆட்டோக்ராப் தெலுங்கு ரீமேக் ரவிதேஜா தான் பண்ணினார்.அவர் நடித்த ஒவ்வொரு பூக்களிலுமே பாட்டு பாத்தேன்..அவர் முகத்தில் வெளிப்படுத்திய ரசங்களைப் பாத்துட்டு நான் பட்ட பாடு..ஒரு பாட்டுக்கே இப்படினா இன்னொரு பாட்டு "நினைவுகள் நெஞ்சினில்.." அதுவும் பார்ல தண்ணியடிக்கிற எப்படி இருந்திருக்கும் - அதை நீங்களே கற்பனை செஞ்சு பாருங்க..

கத்தால கண்ணால பாட்டு இந்த படத்தில் இருப்பதாக ஒரு வதந்தி.

அதுவாவது பரவாயில்ல ரவிதேஜா நேரடி தமிழ் படத்துல நடிக்க போறாராம்.அதுவும் சமுத்திரகனி இயக்கத்தில்.அது காமடியா இருந்தா பரவாயில்ல..இல்ல படம் பாக்குறவங்க நிலைமை சிரிப்பா சிரிக்கும்.

கன்னடத்தில் நாடோடிகள் படத்தில் புனித் ராஜ்குமார் நடிக்க போறாராம் - சமுத்திரகனி அவரையும் தமிழுக்கு கூட்டிட்டு வராதீங்க.இங்க இருக்கிறவங்க தொல்லையே தாங்க முடியல.

சசிகுமார் மேட்டருக்கு வருவோம் - என்னுடைய கணிப்பு சரியா இருந்தா அவர் இந்த வேடம் தான் செய்வார்.நாடோடிகள் படத்தில் சசிகுமாருக்கு கோவிலுக்கு திருமணம் செய்து வைக்க போகும் போது ஒருத்தர் பைக்கில் வழி காட்டுவார்.

அப்ப ரவிதேஜாவுக்கு வழி காட்டுவது சசிகுமாரா ??

ஏற்கனவே நான் கிளப்பி விட்ட வதந்தி சசிகுமாரின் அடுத்த படத்தின் ஹீரோ சாரு நிவேதிதாவா ? பொய்யாகி விட்டது.இதுவும் அது மாதிரி ஆனால் யாரும் சண்டைக்கு வர வேண்டாம்..

டிஸ்கி :

தமிழ் ஹீரோவ வம்பு இழுத்தா என்னை எல்லோரும் சேர்ந்து அடிக்கிறாங்க.அதான் பார் ய சேஞ்ச் ரவிதேஜா..அவருக்கு தமிழே சரியா பேச வரல..அதனால அவரு ரசிகர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்று நம்பி இதை எழுதினேன்.அவரு தமிழில் நடித்து பிரபலம் ஆகுறதுக்கு முன்னாடி நக்கல் அடிச்சா தான் உண்டு.விசிலடிச்சான் குஞ்சுகள் அவருக்கும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும்.அது அப்படியே முதல்வர் வரைக்கும் போகும்.

அவருகாண்டி பிரபலகாரு ஆயிட்டாருலு எமி நிலமைலு பெத்த சிக்கலு..

காலையில் சாப்பிட்டது பொங்கலு..
இதுக்கு வருமா செங்கலு..

Friday, October 30, 2009

தமிழ் மொழி செய்யும் சித்து விளையாட்டு - ரணம்

ரணம் - இந்த வார்த்தை தரும் அர்த்தம் தான் எத்தனை,எத்தனை,இதோடு சில எழுத்துகளை கோர்த்தால் வேறு ஒரு அர்த்தம்.அப்படி முதலில் வரும் ரணம் தான் மரணம்.

மரணம் - மறக்காத ரணம் அல்லது மறந்து போன ரணம்.அது இயல்பாக நடந்து இருந்தால் நாம் மறந்து இருப்போம்.அப்படி இல்லாமல் இருந்தால் அது என்றுமே மறக்க முடியாமல் இருக்கும்.

இப்படி இன்னும் சில வார்த்தைகள் காரணம்,தோரணம்,சூரணம்,சாதாரணம் இதிலும் சில கதைகள் ஒளிந்து கிடக்கும்.

பார்த்திபன் கிறுக்கள்களில் இருந்து ஒரு கிறுக்கல்

காதல் சாதாரணம்..
காதல் சதாரணம்..

இப்படி இரண்டே வரியில் அவர் காதலை சொல்லியிருப்பார்.விரிவாக வேண்டுமென்றால் நேற்று வெண்ணிற இரவுகள் கார்த்திக் எழுதிய கவிதையை படிக்கலாம்.

பார்த்திபனின் கிறுக்கல்களில் மூன்றாவது வரியாக நான் இப்படி எழுதினேன்.

காதலே சரணம்..

எப்படி என்று கேட்ட ஒருவ_க்கு நான் சொன்ன பதில் "சில பேருக்கு முதல் காதல் பல்ப் வாங்கியிருக்கும்..சோகத்தைப் பங்கு போட யாராவது வந்தா மனசு ஐ'ம் இன் லவ் என்று குதிக்கும்.."

கிடைத்த பட்டம் - கிறுக்கா..சரி இதுக்கெல்லாம் மனம் தளருவோமா என்ன முன்னாடி ஒரு ஞான என்று போட்டு ஞானகிறுக்கன் ஆகி விட வேண்டியது தான்.

பலியாடுகளுக்கு எல்லா ரணங்களும் சாதாரணம் தான்.

எல்லா ரணங்களையும் விட மரணம் தான் அதிகம் என்னிடம் விளையாடி இருக்கிறது.

ஏழு வயது வீட்டில் கீழே கிடந்த மாத்திரையை எடுத்து தெரியாமல் வாயில் போட்டு விட்டேன்.கொஞ்ச நேரத்தில் தலை சுத்த ஆரம்பித்து விட்டது. வீட்டில் சொல்ல பயம்.கமுக்கமாக இருந்து விட்டேன்.கொஞ்சம் உஷாரா மாத்திரையை முழுங்காமல் துப்பி விட்டேன்.

ஒன்பது வயதில் குளத்தில் குளிக்க போனோம்.அம்மாவும் மாமாவும் நடந்து வர,சொல்ல சொல்ல கேட்காமல் நான் குளத்தில் குதித்து அவர்களுக்கு முன்னால் ஆர்வத்தில் சேற்றில் மாட்டி மூழ்கும் நேரத்தில் என் மாமாவால் மீட்கப் ப்ட்டேன்.முதலும் கடைசியுமாக மாமா என்னை அடித்து விட்டார்.அதை விட அம்மா பேசாமல் இருந்தது தான் வலித்தது.

பதினாலு வயதில் முதல் முறையாக பெண்ணின் மீது ஈர்ப்பு.இதுல என்ன கொடுமை என்று பார்த்தால் அவள் எனக்கு ரெண்டு வருடம் சீனியர். கவிதையாக சிரிப்பாள்,கவிதையாக பேசுவாள் அப்ப எனக்கு அப்படிதான் தெரிந்தது.அவளுடைய நிறுத்ததில் ஏறும் ஒருவனை நண்பனாக்கி கொண்டேன்.அவனுடைய அக்காவும்,இவளும் தோழிகள்.நான் அப்போ தி.நகர் இராமகிருஷ்ணா மிஷன் மெயின் (பனகல் பார்க் எதிரில்) இருக்கும் பள்ளியில் படித்தேன் என்று சொல்லலாம்.அவள் பர்கிட் ரோட் சாரதா வித்யாலயா.எங்கள் பள்ளி விடும் முன் அவர்களுக்கு பள்ளி முடிந்து விடும். பாதுகாப்பு என்ற நினைப்பு.கடைசி ப்ரீயட் ஆசிரியர் பெரும்பாலும் வர மாட்டார்.உடனே சுவர் ஏறி குதித்து விடுவோம்.12 சி பஸ் அவள் பள்ளி வழியாக வந்து உஸ்மான் ரோடில் வந்து துரைசாமி சப்வேயில் நுழையும்.அவளுக்காக நான் அங்கு நிற்பேன்.கூட துணைக்கு ஒருத்தன்.

இப்படி ஒருமுறை சுவர் ஏறி குதித்து விட்டு நிமிர்ந்தால் எங்கள் பள்ளியின் ஆசிரியர் அங்கு நிற்கிறார்.ஒன்றும் சொல்லாமல் உள்ளே போங்க என்று துரத்தி விட்டார்.இப்படி என்ன செய்தாலும் பேச மட்டும் பயம்.

பஸ் படிக்கட்டில் நிற்காமல் சாலிகிராமத்தில் இருந்து பனகல் பார்க் வரை அவளை பார்த்து கொண்டே வருவேன்.அன்று அதிகபடியான கூட்டம்.அவளை பார்க்க விடாமல் மறைத்து விட்டார்கள்.அவளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பனகல் பார்க்கின் முந்தைய நிறுத்ததில் இறங்கி முன் படிக்கட்டில் தொங்க ஆரம்பித்தேன்.இரண்டு நிறுத்ததிற்கும் இடையில் முக்கால் கிலோ மீட்டர் இருக்கும்.பாதி வழியில் கை வழுக்கி விட்டது.சாவு நிச்சயம் ஆகி விட்டது என்று நினைத்து கொண்டேன்.

கீழே பார்த்தால் விழுந்து விடுவேன் என்று பயம் வேறு.கண்ணை இறுக்கமாக மூடி கொண்டேன்.பயத்தில் அன்று உள்ளங்கையில் வேர்த்தது.இன்னைக்கு என் கதை முடிந்து விட்டது..டேய் பாடு பசங்களா என்னை பிடிங்க என்று கத்த நினைத்தாலும் வாயில் வார்த்தை வரவில்லை.சென் டர் போர்ட் (கால் வைக்காமல் இரண்டு படிக்கட்டுகளுக்கும் நடுவில் அடிப்பது) அடித்து அனுபவமே இல்லாததால் ஒரு கட்டத்தில் கை வழுக்கி விட்டது.கண்ணை திறந்து அது பனகல் பார்க்கின் வளைவு.வெளியே குதித்து விட்டேன்.சிறுகீறல் கூட இல்லாமல் தப்பி விட்டேன்.நம்பவே முடியவில்லை.அதற்குள் பின்னாடி வந்து பைக்காரன் என் சட்டையைப் பிடித்து "ஏண்டா ஸ்கூல் படிக்கிற பையனா நீ.." என்று ஏதோ கத்திக் கொண்டு இருந்தான்.பசங்க அதற்குள் பஸ்சில் இருந்து இறங்கி என்னை நோக்கி ஓடி வர..அவன் என்னை விட்டு விட்டான்.

என்னால் ஏத்து கொள்ளவே முடியவில்லை.ஒரு பெண்ணால் எனக்கு இப்படியா..அவளை தவிர்க்க ஆரம்பித்தேன்.என்னால் நம்ப முடியாத ஆச்சர்யம் அவள் 12 சி பஸ்சில் போகாமல் எனக்காக 12 பி பஸ்சில் வர ஆரம்பித்தாள்.அவளை நான் தவிர்த்தாலும் அவள் விடவில்லை.ஏதாவது சொல்லி வம்புக்கு இழுப்பாள்.தன் வினை தன்னை சுடும் என்று நினைத்து கொண்டேன்.அவளிடம் சொல்லாமல் சென்னை - 600028 இந்த முகவரிக்கு வந்து விட்டோம்.

பத்து வருடங்கள் கழித்து என் நம்பரைக் கண்டுப்பிடித்து பழைய நண்பன் பேசினான்.அவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதாம்.அவ புருஷன் வங்கி மேலாளர் என்றும் ஒரு பையன் இருப்பதாகவும் சொன்னான்.பையன் பெயரை சொல்ல வரும் போது.."மச்சான் வேல இருக்கு..அப்புறம் பண்ணு.." என்று அவன் பதிலுக்கு எதிர்பாராமல் வைத்து விட்டேன்.பிறகு இருவரும் இன்று வரை பேசவில்லை.பின்ன என்ன என் பெயராக இருந்தாலும் ரணம் இல்லாவிட்டாலும் ரணம்.

பதினெட்டு வயதில் ஒரு விபத்து.நடந்து வந்த என் மேல் ஒரு பைக்காரன் மோதி விட்டான்.ஒரு பெரிய பள்ளத்தில் விழகிருந்த என்னை ஒருவர் பிடித்து விட்டார்.அவர் கேட்ட முதல் கேள்வி..

"என்ன குடித்தாயா.."

"அந்த பழக்கம் கிடையாது.."

"வீடு வரைக்கும் வரட்டுமா.."

"போயிருவேன்னு நினைக்கிறேன்.."

வீட்டிற்கு வந்து சொன்னால் அது யார் உன்னை தூக்கியது என்ற கேள்வி வந்தது.

"இப்போதான் முதல் தடவையா பாக்குறேன்.."

"கடவுளாக இருக்குமோ.."

"விடுமுறைக்கு வந்தவராக இருக்கும்.." இப்படி சொல்ல நினைத்தேன்.முடியவில்லை காரணம் தாங்க முடியாத ரணம்.

டாக்டரிடம் போனால் வலியை மறக்க அவர் ஒரு கொடூரமான கதை சொன்னார்.வலியில் கத்தி விட்டேன்.."உங்க வேலைய மட்டும் பாருங்க.." காரணம் இது காட்ட முடிந்த ரணம்.

டிஸ்கி :

மும்பை வந்த பிறகு மரணபயம் தான் இருக்கிறது.விளைவு எல்லோரையும் பார்க்கும் போது சந்தேகம் தான் முதலில் வருகிறது.நான் இந்த ஊருக்கு லாயக்கு இல்லை என்று என் அத்தான் முத்திரை குத்தி விட்டார்.

Thursday, October 29, 2009

இந்த கதைய சினிமாவாக எடுக்க முடியுமா

"அங்கன பாரு..உம் புள்ள தெருவுல கிடந்து உருள்றான்.." என்று மயினிகிட்ட எங்க அம்மா சொல்ல தார்சாவில்(திண்ணை) கொஞ்சமா மடங்கி கிடந்த நான் நிமிந்து உக்காந்தேன்.

"ம்..ம்..வம்பிழுக்க ஒருத்தன் வாட்டமா மாட்டுனான் டோய்.." இப்படி நினச்சது தான் தாமசம் காத்து கூட கொஞ்சம் வெரசா வீசுற மாதிரி தோணிச்சி..

எல்லாத்துக்கும் முன்னாடி அவன் அடிக்கற கூத்த பாக்கலாம்னு ஓடினா அவன் சுத்தி ஈசல் மாத்ரி ஒரு கூட்டம் அப்பி கிடக்கு.

"ஏல எந்திரி மூதி..இப்ப என்ன எளவுக்கு இப்படி இழுவுற..ஏதாவது புள்ளயோட அப்பன் பாத்தா பொண்ணு குடுக்க மாட்டான்.." மயினி கத்தினாள்.

"க்கும்..எனக்கே வழிய கணோம்..இந்த காப்புடி உலக்குக்கு அதுகுள்ள கண்ணாலமா.." அதிசயமா நான் வாய பொளக்க

"தம்பி..அவன நாலு சாத்து சாத்து..அப்பதான் சொல்றத கேப்பான்..கேடு கெட்டவன் என்னைய பதங்குலைக்கவே வந்து புறந்து இருக்கு இந்த சனியன்..இவனோட இளசு எல்லாம் எப்படி கட்டயிருக்கு..அந்தாளு வரட்டும்..இன்னைக்கு இவனுக்கு சாமக்கொட குடுக்கணும்..அப்போ தான் சரியா வருவான்.." மதினி கிடந்து குதிக்க,இடுப்புல இருந்த புள்ள கத்த..

"ஏல என்ன வேணும்..வாயத் தொற..முத்து எதுவும் வாய்குள்ள இருக்கா.." சமரசம் பண்ணி அவன தூக்க நான் குனியவும்

"டூப்பாக்கி..அந்த கருப்பு டூப்பாக்கி வேணும்.."

"இதுக்குதான் இந்த அழிச்சாட்டியமா..மூதி முழுக போச்சாம்..மூனு குளமும் பாழா போச்சாம்..எந்திரி நான் வாங்கி தாரேன்.." இப்படி சொன்னதுதான் தாமசம் பயபுள்ள ஒரு சிரிப்பு சிரிச்சு பாருங்க..அப்படியே வாயில ஒரு எத்து விடலாம்னு தோணிச்சி

"தம்பி இவன் கேட்டத வாங்கி கொடுதுரு என்ன நல்லப் புள்ளையா சித்தப்பன் கூட போ.." மயினி நழுவ பாக்க

"என்ன குசும்பா..இங்க சித்தப்பனே தோட்டா வாங்க வக்கில்லாம திரியிறான்..இவருக்கு துப்பாக்கி வேணுமாயில்ல துப்பாக்கி.." காச வாங்க கைய நீட்டினேன்.

"கள எடுத்த காசு..இவன் இருக்கானே..மிச்சம் கிச்சம் இருந்தா கொண்டு வாங்க பிள்ளைகளா.." இப்படி மூணு முழத்துக்கு நீட்டிட்டு(பேசிட்டு) முப்பது காச குடுத்தாக.

"தம்பி..வா..போவோம்.." கூட எந்தம்பியையும் கூட்டி கிட்டு அங்க போற வழியில..

"என்னல படிக்கிற.."

"ஏழாப்பூ.."

"என்ன பூ..வாழப்பூவா.." - இது என் தம்பி..

"ஏழாப்பூ..நீங்க மெட் ராஸுல என்ன படிச்சீங்க.."

நானே ராஜா நானே மந்திரி விஜயகாந்த் பாணியில விரல விட்டு எண்ணி ஒரு வழியா கணக்கு பண்ணி..

"நான் பதினாறாப்பூ..இவன் பதிமூனாப்பு.." இப்படி சொன்னா அவனுக்கு புரிஞ்சுரும் சொன்னா..

"ஆச்சி சொன்னாக..நீங்க ஏதோ காலேசி படிச்சி முடிச்சிடீங்கன்னு..நீங்க இன்னும் பூவுல தான் நிக்கிரீகளா.." அவன் லந்து குடுத்தா நான் விடுவேனா

"இன்னொரு பூ இருக்கு..அத சொல்லட்டுமா.." என்று கெட்ட வார்த்தைய உதுக்க முயற்சி பண்ண அதுகுள்ள துப்பாக்கி விக்கிறவன் கிட்ட வந்து நின்னோம்.

"டூப்பாக்கி..என்ன வெல.."

"தம்பி அது டூப்பாக்கி இல்ல துப்பாக்கி.." கடக்காரன் சொல்லிட்டு பெரிசா விட்டு(பகடி) அடிச்ச மாதிரி சிரிக்க..

"வேற கடயப் பாப்போம்..இங்கன எதுவும் சரியில்ல.." - இது அவனுக்கு கிடச்ச பதில் விட்டு

"டூப்பாக்கியா தம்பி..பதினாறு ரூபா..வேணா ஒரு ரூபா குறைக்கலாம்.." பதறிகிட்டு பதில் சொல்ல

"மிச்ச காசுக்கு ஐஸ் வாங்கி திங்கலாம்.." தம்பி எடுத்து விட

"நமக்கு கப் ஐஸ்..காசு குறைவா இருக்கிறதால இந்த பக்கிக்கு பால் ஐஸ்.." சொல்லி முடிக்கல அண்ணன் மவன் மூஞ்சி செத்து போச்சு

"சரி பக்கி சாவாத..ஐஸ் அஞ்சு ரூபா தான்..உனக்கும் கப் ஐஸ் தான்.." தம்பி சொல்லவும் அவனுக்கு சிரிப்பாணி பொத்துகிட்டு வந்துச்சு.

"ஐஸ் வேணும்னா துப்பாக்கிய குடு.." என்று வாங்கி ஒரு பெரிய கல்லா போட்டு சூடவும் அந்த துப்பாக்கி உடஞ்சு போச்சு.

ஐஸ் திங்குற அவசரத்துல அந்த பக்கி இந்த துப்பாக்கி உடஞ்சத பாக்கல.

வீட்டுக்கு வந்து துப்பாக்கிய குடுத்தா..அது இருந்த கோலத்த பாத்துட்டு நடு வீட்டுல கிடந்து புரள ஆரம்சிட்டான்.

"என்ன இவனோட ரோதனையா போச்சு..இப்ப என்ன ஆச்சி.." அம்மாவும்,மயினியும் ஓடி வர..

"எம் மவனுகளும் இருக்கானுக..என்னைகாவது ஏதாவது வேணும்னு இப்படி அழிச்சாட்டியம் பண்ணியிருக்காங்களா.." நேர காலம் தெரியாமல் ஐயா புகழை எடுத்து விட..

"அன்னிக்கே வாங்கி குடுத்திருக்காம்..கழுத வயசாகுது டூப்பாக்கிய உடச்சுட்டான்.." பக்கி புரண்டுகிட்டே குரல் குடுக்க

"உம் புராணம் பாடலாம்னு பாத்தா..எந்தான் இப்படி இருக்கியோ..என்னக்கு தான் திருந்துவியோ.." அம்மா புலம்ப பாக்க

"ஏய் சித்தப்பாவ அப்படில்லாம் சொல்லாத.." மயினி மட்டும் தான் எங்கட்சி

அப்பவே எனக்கு ஒரு பழக்கம் இருந்துச்சு..எல்லா பக்கியும் தின்ன பெறவு அதுங்கள பாக்க வைச்சு திங்குறது..அதுதான் என்னைய அன்னக்கு காப்பாத்துச்சு..திங்காம் வைச்சுருந்த கப் ஐசை அந்த பக்கி வாயில போட குடுத்துட்டேன்.

"ஏல ரொம்ப குணட்டாத..நீ மாட்டுவல அப்ப இருக்குல உனக்கு சாமக் கொட..கொட குடுத்து உரிச்சி உப்பு கண்டம் போடாம விட மாட்டேன்.." இப்படி மனசுக்குள்ள கருவிகிட்டு உக்காந்து கிடந்தேன்.முத தடவயா ஒரு பக்கி என்னைய பாக்க வைச்சு திங்குது.

மத்தியான கொட தொடங்குச்சு..அம்மாவும் என்னைய கூட்டிக்கிட்டு சாமியாடி பெரியப்பாவ பாக்க போனாவ.அவரு ஒரு ஒய்ஞ்சு போன குறிசொல்லி. அம்மா கால்ல விழுந்துட்டு என்னையும் விழ சொல்ல..சொன்னது எனக்கு கேக்காத மாதிரி நான் பராக்கு பாத்தேன்.

"அங்க என்ன வாய் பாக்குற..கால்ல விழு.." அம்மா வைய

"விடு தாயி..மவனே அடுத்து என்ன பண்றதா உத்தேசம்.." பெரியப்பா ஆரம்பிக்க

"பாளையங்கோட்டைக்கு போய் உள்ளம் கேட்குமே படம் பாக்கலாம்னு இருக்கேன்.."

"அப்ப வேல பாக்க உத்தேசம் இல்ல.."

இதுக்கு மேல தாங்காதுனு தோண படக்குனு கால்ல விழுந்துட்டேன்.

பூச முடிஞ்சதும்..குறிசொல்லி எல்லாம் ஆடுவாங்கா..நேத்தைக்கு பாப்பம்மாவா இருந்த சித்தியெல்லாம் இன்னைக்கு சாமி.

கூட்டம் அலைமோதுச்சு.மத்தியானம் நடக்கும் கொடய பாக்கவே உக்கிரமாக இருந்துச்சு.நானு,அம்மா,தம்பி எல்லாம் கோவிலுக்குள்ள மாட்டிகிடோம்.குறிசொல்லி எல்லாம் எனக்கு பக்கத்தில ஆடுனாங்க..அப்புறமா நிதானமா வெளிய போயி அவங்க மாதிரி ஆடி காட்டி விட்டு(சோக்கு) அடிக்கலாமுன்னு யோசிச்சுக்கிட்டு நின்னேன்.

கூட்டம் நெருக்க நெருக்க வழியில்லாம குறிசொல்லி முன்னாடி போயிட்டோம்.அங்க போன ஏதாவது கேக்கனும் நினப்பு எல்லாருக்கும்.

முதல்ல எங்க மதினி - "அவருக்கு எப்ப வேல கிடைக்கும்.."

குறிசொல்லி - "அடுத்த வருசம் கிடைக்கும்.."

இன்னொரு மதினி - அவியகளுக்கு பத்து வருசமா பிள்ளயில்ல.."எனக்கு எப்ப குழந்த கிடைக்கும்.."

குறிசொல்லி - "அடுத்த வருஷம்.."

எங்க அம்மாவும் சும்மா இருக்காம "மவனுக்கு எப்ப வேல கிடைக்கும்.."

"இதுக்கும் பதில் அடுத்த வருசம் தான்.." நான் மனசுகுள்ள இளிச்சு வைச்சேன்.

"சரியா ஒம்போது மாசம் கழிச்சி கிடைக்கும்.." - இப்படி பதில் வந்ததும் எம் மூஞ்சி செத்து போச்சி..

என்னைய சமாதானப்படுத்த அம்மா.."இது புதுசா ஆடுற சாமி..நாம அந்த சித்தி சாமிகிட்ட கேப்போம்.."

அங்க போக முடியல..அதுக்குள்ள சாமியெல்லாம் குளத்துல ஆட போயிட்டாங்க..

அது ஒரு பெரிய குளம்.வெயில் காலத்துல வத்தி கிடக்கும்.அதுல கால வைக்கவே முடியாது நம்மால..அம்புட்டு சூடு..குளத்த சுத்தி கூட்டம்.வேடிக்க பாக்க அவ்வளவு சனம்.ஊரே அங்கன கிடக்கும் போது விடல பசங்க எல்லாம் ஊருக்குள்ள இருப்பானுங்க..அவங்க சைட்ட பாக்க..

அதுவரைக்கும் மத்தியான கொட மேல ஆர்வம் காட்டாத நானும் எங்க அம்மாவ கூட்டிகிட்டு அங்க ஓடினேன்.

பெரியப்பா பையன் வந்து "எங்க போற..ஒருத்தி நல்லாயிருக்கா வாடே பாக்கலாம்.." சொல்ல.. அவனுக்கும் பதில் சொல்லாம ஓடி வழியில எங்க அண்ணன் அவரோட பழைய காதலியே தேட..அதுல கூட ஆர்வம் இல்லாம நடுகுளத்துல நான் பாய

உள்ளூர்காரன் வந்து தடுக்க..கோபத்தில் நான் அவன் மேல பாய..நான் அம்புட்டு கோவப்பட்டது அன்னிக்கு தான்.ஒரு வழியா எல்லாத்தையும் தாண்டி அந்த பழைய குறிசொல்லி கிட்ட போய் கேட்டா

"பையன் மாசாமாசம் ரெண்டாயிரம் ரூபா அனுப்புவான்.."

இதுக்கு அந்த புது சாமியே பரவாயில்லன்னு அம்மாகிட்ட புலம்பி தள்ளினேன்.நான் குறிகேட்க ஓடுன கத தான் சிரிப்பா சிரிச்சது எம் மாமாவால.

இன்போசிஸிசு,டி.சி.எஸ்சு,கேரிடாருன்னு பெரிய பெரிய கம்பெனி எல்லாம் கடைசி கட்டத்துல ஊத்த வேற வழியேயில்லாம நான் மும்பை வந்துட்டேன். எங்க அண்ணன் வேல பாத்த கம்பெனில சேந்தேன்.

ஒரு கணக்குக்கு ஒன்பது மாசத்துக்கு 270 நாள்னு வைச்சுபோம்.நான் 269ம் நாள்ல வேலக்கு சேர போனா..மனசுகுள்ள ரொம்ப சந்தோஷம் குறிசொல்லி வாக்க உடச்சுட்டோம்னு.ஆனா என்ன நடந்தது தெரியுமா.."நீங்க ரெண்டு நாள் கழிச்சி வாங்கன்னு.." ஒரு புள்ள என் வயித்துல டீசல ஊத்திரிச்சி.

ஆக வேலைக்கு போனது ஒன்பது மாசம் முடிஞ்ச பெறவு தான்..ஆமா நீங்க சந்தேகப்பட்டது சரிதான் வீட்டுக்கு சில மாசம் ரெண்டாயிரம் தான் அனுப்ப முடிஞ்சது.

எங்க அண்ணனுக்கு வேல கிடச்சுது..இன்னொரு அண்ணனுக்கு குழந்த பொறந்தது.

அதுல இருந்து நான் அந்த ஊர்பக்கமே போறதுயில்ல..அடுத்த வருசம் என் தம்பி போனான்.ஆனா நான் குறி கேக்க வேணாம்னு சொல்லிப்புட்டேன்.இப்படி இப்படி வருஷாவருஷம் மத்தியான கொடய பாக்குற ஆளுங்க குறைஞ்சுகிட்டே வராங்க..

உங்களுக்கு குறி கேக்க ஆசையா இருந்தா என்னைய தொடர்பு கொள்ளுங்க..

டிஸ்கி :

பொதுவாக எனக்கு ராசிபலனில் எல்லாம் நம்பிக்கை கிடையாது.நான் ரிஷப ராசியாக இருந்தாலும்,எதிர்பாராமல் தினமலரில் ராசிபலன் பார்க்க நேர்ந்தால் நன்றாக இருந்தால் அதை எடுத்து கொள்வது வழக்கம்.ஏடாகூடமாக இருந்தால் எந்த ராசிக்கு நல்லதாக இருக்கிறதோ உடனே அந்த ராசிக்கு மெல்ல மாறி(மொள்ளமாறி..) விடுவது உண்டு.பெரும்பாலும் பார்க்காமல் தவிர்ப்பேன்.தவிர்க்க முடியாத பட்சத்தில் அடுத்து வரும் அறுபது நாட்களுக்கு முன்னரே பார்த்து விடுவேன்.

இப்படி நடப்பதையெல்லாம் காமெடியாக எடுத்து கொள்ளும் எனக்கு இப்படி ஒரு உண்மை சம்பவம் நடந்தது அதிர்ச்சி தான்.

2005ம் வருடம் - பொறியியல் படித்து விட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் பொறித்து தருவதைத் தின்று விட்டு பொறிந்து கொண்டு அலைந்த நேரம்..கானல் நீராக தெரிந்த நாட்கள்..

எங்கள் குலதெய்வத்திற்கு கோவில் கொடை நடந்தது.நானும் படித்து விட்டு ஒரு மாதமே முடிந்துயிருந்ததால் கெத்தாக ஊர் போய் செர்ந்தேன்.இப்படி ஒரு கோவில் கொடை எந்த ஊரிலும் நடப்பதாக எனக்கு தெரியவில்லை.மூன்று வருடங்கள் தொடர்ந்து வருடாவருடம் நடக்கும்.அல்லது மூன்று வருடங்களுக்கு நடக்காது.

அந்த வருடம் நடந்த கூத்து தான் மேலே கதையாக வட்டார மொழியில் உள்ளது.

கடந்த சில வருடங்களாக படித்தவர்கள் கூட்டம் அதிகமானதால் மத்தியானம் நடக்கும் கொடையில் கூட்டம் கணிசமாக குறைந்து விட்டது.

இந்த கதையை சினிமாவா எல்லாம் எடுக்க வேண்டாம் அட்லீஸ்ட் நாடகம்..நோ பேட் வோர்ட்ஸ்..

இந்த கதை லவ்டேல் மேடிக்காக..

Wednesday, October 28, 2009

தாஜ்மகாலும் முண்ணனியில் பெட்டிகோட் ஆட்சியும்

தாஜ்மகாலும் பிண்ணனியில் பெட்டிகோட் ஆட்சியும்
படிக்க


ஜஹானாரா பேகம் இவர் தான் மும்தாஜ் இறந்த உடன் அவர் இடத்தை நிரப்பியவர்.மும்தாஜ்-ஷாஜகானின் மகள்.மும்தாஜ் இறந்த சமயம் அவர் வைத்திருந்த பணம் ஒரு கோடி.அதில் பாதி இவருக்கு கிடைத்தது.அவருடைய அதிகாரம் எப்படி இருந்தது என்றால் பெண்களுக்கு தனி அரண்மனை கிடையாது அதை உடைத்தவர் இவர் தான்.

இவருக்கு பிறகு பிறந்த தாராவின் மீது பாசம் அதிகம்.1644ல் தீ விபத்தில் சிக்கி பெரும் போராட்டத்திற்கு பிறகு பிழைத்தவர்.தாரா ஆட்சிக்கு வர உழைத்தவர்.அந்த ஒரு காரணத்தினாலே அவுரங்கசீப்பின் கோபத்திற்கு ஆளானவர்.தாராவை ஆதரிக்க அவருக்கு தாரா குடுத்த வாக்குறுதி தான் காரணம்.

அக்பர் காலத்தில் முகலாய இளவரசிகள் திருமணம் செய்ய கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.மகள் வயிற்று வாரிசுகள் சண்டை இறங்காமல் இருக்க கண்டுப் பிடித்த வழி தான் அது.அதை தாரா ஆட்சிக்கு வந்தால் நீக்கி விடுகிறேன் என்று வாக்கு கொடுக்க, இவரும் ஆதரவு கொடுக்க,ஆவுரங்கசீப் கோபம் கொள்ள.....

ஷாஜகானுக்கு உடம்பு சரியில்லாமல் போக,அதை காரணம் காட்டி வாரிசுகள் சண்டையில் இறங்க,தாராவை வென்று கொன்று விட்டு ஆட்சிக்கு வருகிறார் ஆவுரங்கசீப்.அப்பாவை ஒரு அறையில் தள்ளி பூட்டி விட்டு அரியணையில் அமர்கிறார்.கூடவே ஒரு பெட்டிகோட்டும் வருகிறது.அது தாராவின் தங்கையும்,அவுரங்கசீப்பிற்கு முன்னால் பிறந்த அக்காவும் ஆன ரோஷானாரா பானு.அக்காகளுக்கு என்றுமே அடுத்து பிறக்கும் தம்பியின் மீது பாசம் அதிகம்.அதற்கு உதாரணம்..

ஜஹானாரா பேகம் - தாரா.

ரோஷானாரா பேகம் - அவுரங்கசீப்.

தம்பிக்காக கொலை செய்ய கூட செய்ய தயங்காத அக்காமார்கள்.தமிழகத்தில் கூட அந்த சர்ச்சை உண்டு.இராஜ ராஜ சோழனின் மீது உள்ள பாசத்தால் குந்தவையே ஆதித்த கரிகாலனுக்கு எதிராக சதி செய்தார் என்ற வதந்தி உண்டு.ஆதித்த கரிகாலன் இறக்கும் போது அந்த அறையில் வந்தியத்தேவனும் உண்டு.இவர் தான் குந்தவையின் கணவர்.(ஐயா சாமிகளா அது வதந்தி தான் இதுக்கு என்னை வெளுக்க வர வேண்டாம்.இப்படி எதையாவது கிளப்பி விட்டால் அந்த சந்தேகம் தீரும் என்ற ஆசை தான்..தோசை தான்..)

தாராவும்,ஷாஜகானும் அவுரங்கசீப்பிற்கு கடிதம் அனுப்பி வரவழைத்து தீர்த்து கட்ட முடிவு செய்ய,ஜஹானாரா பேகமும் உடன் இருக்க குறுக்கு வழியில் ரோஷானாரா பேகம் ஒரு கடிதம் அனுப்பி அவுரங்கசீப் தலை நகரத்திற்கு வராமல் பார்த்து கொண்டார்.அந்த பாசம் தான் ஆட்சிக்கு வந்ததும் வெளிப்பட்டது.

தாராவின் தலையை வெட்டி பார்சலில் அனுப்ப உதவியதே அருமை அக்கா ரோஷானாரா தான்.அக்பர் ஒரு சட்டம் கொண்டு வந்தால் தாரா வேண்டுமானால் அதை நீக்க நினைப்பார்.அவுரங்கசீப் அக்பருக்கு நாலுப்படி முன்னால் தான் நிற்பார்.முகலாய இளவரசிகள் திருமணம் செய்யாமல் இருக்க போட்ட சட்டத்தை இவர் எப்படி நீக்குவார்.

பல காதலர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.ஒரு காதலனுடன் ரோஷானாரா கையும் களவுமாக பிடிப்பட்டவுடன் இருவரும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்கள்.

திரும்பவும் ஜஹானாரா ஹாரத்தின் தலைவியாக வருகிறார்.ஷாஜகான் இறந்தவுடன் அவுரங்கசீப் இந்த பதவியைத் தருகிறார்.அப்பாவுடன் இவரும் எட்டு ஆண்டுகள் அவருக்கு துணையாக வீட்டு சிறையில் இருக்கிறார்.

ஷாஜகான் ஆசைப்பட்டு கேட்டது அவருக்காக ஒரு கருப்பு தாஜ்மகால் கட்ட வேண்டும் என்பதே.அதை மகன் அவுரங்கசீப் மறுத்து விடுகிறார்.அதற்கு சொன்ன காரணம் அது ஒரு தண்டசெலவு.மும்தாஜ் கல்லறைக்கு பக்கத்தில் அவரை புதைத்து விடுகிறார் அவுரங்கசீப்.

ஷாஜகானுக்கும் அவருடைய மகள் ஜஹானாராவிற்கும் காதல் இருந்ததாக ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.ஜஹானாரா தீக்காயம் பட்டு இருந்த போது அவருக்கு மருத்துவம் செய்ததே ஒரு ஆங்கில மருத்துவர் என்று பீலா விட்ட வரலாற்று நிபுணரும் உண்டு.அதை இல்லை என்று நிரூப்பித்தவரும் ஒரு ஐரோப்பிய ஆசிரியர் தான்.இந்த காதலை எந்த அளவிற்கு நம்புவது என்று எனக்கு தெரியவில்லை.யாமம் நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

ஆவுரங்கசீப் ஆட்சியில்,அக்பர் ஆட்சியிலும் தொடக்கத்தில் பெட்டிகோட் ஆதிக்கம் இருந்தாலும் அவர்கள் அதை உடைத்து விட்டார்கள்.சொந்த மகனையும்,அப்பாவையும் சிறையில் தள்ளிய பெருமை இவருக்கு தான் உண்டு.அந்த அளவிற்கு இவர் கண்டிப்பானவர்.

குடிப்பழக்கம் கிடையாது.ஒரு பெண்ணிற்காக அதுவும் அவள் காதலொடு கேட்டதற்காக இவர் உதடு வரை கொண்டு சென்றுள்ளார்.ஆனால் அந்த பெண் தட்டி விட,குறுகிய காலத்தில் அந்த பெண் இறந்து விட துக்கத்தில் காட்டில் வேட்டையாட சென்றாராம்.(நாம என்ன செய்வோம் இந்த நேரத்தில் குடிக்க கற்று கொள்வோம்.) காட்டில் மிருகங்கள் கணிசமாக குறைந்த பின் தான் இவர் துக்கம் தீர்ந்ததாம்.

இறக்கும் போது கூட அந்த செலவிற்கும் அவர் குல்லா தைத்து விற்று காசு சம்பாதித்து கொடுத்தாராம்.இவர் இருக்கும் வரை ஸ்ராங்காக இருந்த பேஸ்மென்ட் அவர் இறந்த பின் வீக் என்ட் தோறும் வீக்காக மாறியது.

டிஸ்கி :

தாஜ்மகால் ஷாஜகானுக்கும் கட்டியிருந்தால் எப்படியிருக்கும்...அப்படி அவுரங்கசீப் கட்டியிருந்தால் காதலிகளுக்கு வெள்ளை தாஜ்மகால் பரிசாக கிடைப்பது போல தந்தைகளுக்கும் ஏதாவது தாஜ்மகால் பரிசாக கிடைத்து இருக்கும்.

ஒத்து வந்தா பங்கு உடைசல குடுத்தா சங்கு

"என்ன இந்த முறையும் ஆள் தப்பிச்சிட்டானா..என்ன மயி.. புடுங்குறீங்க..குமார் அவனை கூப்பிடுங்க..அவன் தான் இந்த வேலைக்கு சரியான ஆள்.." என்று காட்டுக் கூச்சல் போட்டார் கவுதம்.

அரை மணி நேரம் கழித்து குமார் வர..எல்லோரையும் அனுப்பி விட்டு இருவர் மட்டும் தனியாக..

"குமார் உன்னை பத்தி சொன்னாங்க..நீ தான் இந்த காரியத்தை செய்யனும்..எங்களால அவனை நெருங்க கூட முடியவில்லை.."

"ம்..பண்றேன்..ஆனா நான் கேட்பதை உடனே செஞ்சு தரணும்..கேள்வி கேட்க கூடாது.."

"என்ன படிச்சியிருக்க.."

"பி.எஸ்.சி மேக்ஸ் பாதியிலே விட்டுட்டேன்..திரும்பவும் சொல்றேன் எனக்கு கேள்விகள் பிடிக்காது.."

"சரி கேக்கலை..இவன தான் நீ முடிக்கனும்..போட்டோஸ் அண்ட் டிடேயில்ஸ்.." என்று குமாரிடம் ஒரு கவரை குடுத்தார் கவுதம்.

"எத்தனை தடவை முயற்சி பண்ணீங்க அவனை கொல்ல.." கவரை பிரிக்காமலே கேட்டான் குமார்.

"நிறைய தடவை இருக்கும்..ஒரு தடவை அவனுக்கு பலத்த அடி தலையில..அதுல இருந்து ரொம்ப உஷாரா இருக்கான்.."

"அப்ப அவனை கொல்ல ஆறு மாசம் ஆகும்.."

"என்ன ஆறு மாசமா.."

"சரி வேண்டாம்..கவரப் பிடிங்க..ஆள விடுங்க..புதுசுனா உடனே முடிக்கலாம்..அவன் பழசு.." என்று எழுந்தவனை தோளைப் பிடித்து அமர்த்தினார் கௌதம்.

"ஏன் இவ்ளோ கோபம்..சயின்ஸ் படிச்சுருந்தா உனக்கு இதெல்லாம் புரியும்.."

"எது சயின்ஸ்.."

"இரத்தம்,அதில் வரும் அழுத்தம்.."

"ரத்தத்தின் அளவு,அதில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை,அழுத்ததின் அளவு இப்படி எல்லாமே கணக்கு தான்..வாழ்க்கையே ஒரு கணக்கு தான்.."

"எப்படி சொல்றே.." என்று சிரித்தவரைப் பார்த்து

"அது தெரிஞ்சா தான் நீங்களே அவனை போட்டு இருப்பீங்களே..பை தி பை..உங்க சிரிப்பு இன்னும் நல்லாயிருந்திருக்கும் ஒரு பல்லைப் புடுங்காமல் விட்டுடிருந்தால்.." சொல்லிவிட்டு எழுந்து சென்ற குமாரை வெறித்து பார்த்தாஎ கௌதம்.

************
மூன்று மாதங்கள் கழித்து குமார் போனில்..

"ஜேம்ஸ் அவன் காரை சர்வீஸுக்கு விட்டு இருக்கான்..அதுல டைம் பாம் வைங்க கௌதம்.."

"நீ செய்வன்னு பாத்தா எங்களை செய்ய சொல்ற..என்ன இதெல்லாம் குமார்.."

"சொன்னதை மட்டும் செஞ்சா போதும்.." என்று போனை வைத்து விட்டான்.

காரில் குண்டு வெடித்து டிரைவர் மரணம் என்று செய்திதாள்களில் வந்தது தான் மிச்சம்.

"குமார் நீ என்ன நினைச்சி இருக்க உம் மனசுல..முடியலைன்னா சொல்லு..நாங்க பார்த்துக்குவோம்.."

"ஜேம்ஸை நாம நேர்ல சந்திக்கப் போறோம்..அப்பாயிண்மெண்ட் பிக்ஸ் பண்ணுங்க..துப்பாக்கி கூட வேண்டாம்.."

"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சியிருக்கு.."

"ப்ளீஸ் சொன்னதை மட்டும் செய்ங்க.."

ஜேம்ஸை அவன் வீட்டில் பார்த்து துக்கம் விசாரித்து விட்டு வந்தார்கள் குமாரும்,கௌதமும்.

"நாளைக்கு ஆயுத பூஜை..ஆயுதத்தை எல்லாம் ரெடி பண்ணுங்க..அவன் நாளைகழிச்சி அவனுக்கு கடைசி நாள்.."

"நடந்தா சரி..".

**************

ஆயுத பூஜைக்கு மறு நாள் வெளியே வந்த ஜேம்ஸ் கொல்லப்பட்ட செய்தி கேட்டு ஊரே கொந்தளித்தது.

குமார் வீட்டில்..

"எப்படி முடிச்ச.." என்ற கௌதமை பார்த்து

"அவன் கேஸ் ஹிஸ்டரிய படிச்சேன்..அவனுக்கு எழுத படிக்க தெரியாதுன்னு அதுல இருந்தது..ஆனா அவன் வீட்டுக்கு தினமும் எல்லா பேப்பரும் போகுது..இங்கே தான் என் சந்தேகம் வந்தது.."

"ம்..அப்புறம்.."

"அந்த பேப்பர் கடையிலே விசாரித்தேன்..அவனுக்கு தலையில அடி பட்ட கொஞ்ச நாள் கழிச்சி தான் பேப்பர் வாங்க தொடங்கியிருக்காங்க.."

"கணக்கு..கணக்கு தான்.."

"பழைய பேப்பர்காரனை அனுப்பி அவங்க வீட்டு சமையல்காரனை சரிகட்டி பழைய பேப்பர்,காலண்டர் எல்லாம் எடுத்திட்டு வந்தேன்.."

"இதெல்லாம் சொல்லவேயில்ல.."

"நீங்க டிசம்பர் 25ம் தேதி அவனுக்கு குறி வைச்சு இருக்கீங்க..அவன் காலண்டர்ல 24ம் தேதில சிகப்பு வட்டம் இருக்கு..இப்படி நீங்க தாக்குதல் நடத்துன எல்லா நாளுக்கும் முன்னாடி உள்ள நாள் குறிக்கப்பட்டிருக்கு.."

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.."

"24ம் தேதி பேப்பர்ல ஒரு பக்கம் மட்டும் வெட்டி எடுத்து இருந்தாங்க..அது என்ன நியூஸ்னு பாக்க 23,24,25 உள்ள பழைய பேப்பரை எடுத்து பார்த்தேன்..25ம் தேதி ஒரு பக்கத்துல அவன் மேல நீங்க நடத்த திட்டம் போட்டிருந்த விஷயம் இருந்தது..அவனுக்கு எல்லாமே ஒரு நாளைக்கு முன்னாடியே தெரியுது.."

"அப்ப நீ நடத்த சொன்ன கார் பாம்.."

"அவனுக்கு விஷயம் தெரியுதான்னு கன்பார்ம் பண்ணினேன்.."

"அவன் வீட்டுக்குப் போனது.."

"காலண்டரைப் பாக்க.."

"ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் ஏண் கொலை பண்ண திட்டம் போட்ட.."

"ஆயுத பூஜை அன்னைக்கு தான் பேப்பர் வராது இல்ல..அதான் அடுத்த நாள்.."

"சரியான் ஆள்டா நீ.." என்று சொல்லி கட்டிக் கொண்ட கௌதமை பார்த்து..

"கடைசியில உன் புத்தியை காட்டிட்ட இல்ல பாடு.._த்த சாவுடா.." என்று குமார் துப்பாக்கியை எடுத்தான்.

"என்ன பண்ற.."

"சாகும் போது ஜேம்ஸ் சொன்னான்..நீ என்ன கொல்ல திட்டம் போட்டு இருக்கன்னு..அவன் கையில் அப்ப பேப்பர் இருந்ததுடா..அவன் பேப்பர் வாங்க தான் வெளியே வந்தான்.."

"டூமீல்..டப்.." என்று சத்தம் கேட்டு வந்த கௌதமின் ஆட்கள் குமாரை துரத்த தொடங்கினார்கள்.

ஓடும் போது தூரத்தில் எக்மோர் ஸ்டேஷனில் 2164 வண்டி மும்பைக்கு புறப்பட தொடங்க..குமாருக்கு ஜேம்ஸ் சாகும் போது சொன்ன 2163 எண் ஞாபகம் வந்தது.

"இன்னும் நாலு அடிதான்..கம்பியை பிடித்து விட்டால் தப்பி விடலாம்.." என்று நினைத்து கொண்டே கம்பியைப் பிடிக்க தாவிய குமாருக்கு முதல் முறையாக கணக்கு தப்பாக,கை ஸ்லிப்பாக..அலற கூட நேரம் இல்லாமல் தண்டவாளத்திற்கு உள்ளே போய் விட்டான்.

*********

அடுத்த நாள் செய்திதாளின் முதல் பக்கத்தில்..

பிரபல தாதா ஜேம்ஸ் காலை 9 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.

விசாரிக்க சென்ற உளவுத்துறை போலீஸ் அதிகாரி கௌதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டு விட்டு தப்பிக்க முயன்ற குமார் என்ற பட்டதாரி வாலிபர் இரயில் அடிப்பட்டு சாவு.

***********

டிஸ்கி :

1.அடிக்கொய்யால நீ எந்த ரகத்துல வருவன்னு எனக்கு தெரியல என்று ஒரு நண்பர் இந்த கதையைப் படித்து விட்டு சொன்னார்.

2.இரயிலைப் பிடிக்கும் குமாருக்கு "குருவி..குருவி.." அப்படி பிண்ணனி இசை போட்டு கொண்டே படிக்கவும்.

பின் குறிப்பு : இது ஒரு க்ரைம் கதை.என்னுடைய முதல் முயற்சி.கொஞ்ச நாட்களாக தலை மறைவாக இருக்கும் பதிவர் டக்ளஸ் என்ற ராஜூ என்ற ரைஸ் பிளேட் ரெட்டிகாரு அவர்களுக்காக இந்த கதை .

Tuesday, October 27, 2009

தாஜ்மகாலும் பிண்ணனியில் பெட்டிகோட் ஆட்சியும்

பெட்டிகோட் ஆட்சி - இந்த வார்த்தைகளுக்காகவே ஷாஜகானோடு முடித்து கொள்ளாமல் நான் அக்பரில் இருந்து ஆரம்பிக்கிறேன்.காரணம் பெட்டிகோட் ஆட்சி பாரம்பரியமாக இருந்து அக்பரிடம் தொடங்குகிறது. வரலாறு ரொம்ப முக்கியம்.இதில் நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் நண்பன் என்று கூட பார்க்க வேண்டாம்.அடி வெளுக்கலாம்.

அக்பர் ஆட்சியில் இருந்தே பெட்டிகோட் ஆட்சி தலை காட்டி இருக்கிறது.அக்பர் என்றுமே அதிர்ஷ்டம் துணை நின்று இருக்கிறது.அதற்கு மூன்று சம்பவங்களை உதாரணம் பார்க்கலாம்.

1. அக்பர் வயிற்றில் இருக்கும் சமயம் ஹிமாயூன் மனைவியோடு பாலைவனத்தில் அலைந்து திரிந்தாராம்.சாப்பிடக் கூட வழியில்லாமல் ஒட்டகங்களைக் கூட விட்டு வைக்காமல் சமைத்து சாப்பிட்டார்களாம்.அக்பரின் அம்மா அந்த சமயத்தில் மாதுளை பழம் கேட்க,பாலைவனத்தில் யாரும் எதிர்பாராமல் ஒரு வியாபாரி மாதுளை கொண்டு வந்தாராம்.

2.சண்டையில் தம்பியிடம் ஹிமாயூன் தோற்று ஓட,அக்பர் கைக்குழந்தை.அவரை விட்டு விட்டு ஓட சித்தப்பா அக்பரை எதுவும் செய்யாமல் எடுத்து வளர்த்தாராம்.

3.ஷெர்ஷா அக்பருக்காகவே எல்லாம் செய்து விட்டு இறந்து போகிறார்.அவர் இருந்திருந்தால் அக்பர் ஆட்சி சந்தேகம் தான்.ஷெர்ஷா இறந்தவுடன் நடந்த குழப்பத்தில் கிடைத்த கேப்பில் கிடா வெட்ட ஹெமூ கிளம்ப,உக்கிரமான சண்டையில் யாரோ விட்ட அம்பு ஹெமூவின் கண்ணில் பாய சண்டை முடியில் அவர் கிடாவாகி விட்டார்.கண்ணில் அம்பு பாயாமல் இருந்திருந்தால்.......இதன் நீட்சியாக ஒரு புனைவு எழுதலாம்.

அக்பரின் ஆட்சியின் பெட்டிகோட் - மதாம் அங்கா.அக்பரை எடுத்து வளர்த்தவள்.அந்த உரிமையில் அவளும் அவளுடைய பிள்ளையும் போட்ட ஆட்டத்தின் முடிவில் அவளின் பிள்ளை ஆதம் கான் அக்பரால் கொல்லப்பட அவளும் கொஞ்ச நாட்களில் உயிர் துறக்கிறாள்.இதோடு முதல் பெட்டிகோட் முடிவடைகிறது.

அக்பர் இறந்த உடன் ஜகாங்கீர் ஆட்சிக்கு வர,1607ம் ஆண்டு பெங்கால் கவர்னராக இருந்த ஷெர் ஆப்கன் என்ற தளபதி ஏதோ சண்டையில் கொல்லப்பட(நூர்ஜகானை அடைய தான் ஜகாங்கீர் கொன்று விட்டார் என்ற வதந்தியும் உண்டு.) நூர்ஜகான் டெல்லிக்கு வர,1611 ஆண்டு இருவருக்கும் திருமணம் நடக்க அடுத்து வந்த பதினாறு ஆண்டுகள் இவரது பிடி இரும்பு பிடியாக இறுக..

அதுவும் தப்பாமல் இருக்க அண்ணன் அசப் கான் மகளை குர்ரமிற்கு கட்டி குடுக்க,அண்ணன் குர்ரம் பக்கம் சாய வேறு வழியில்லாமல் தன் மகளை ஜகாங்கீரின் கடைசி மகன் ஷாரியாருக்கு கட்டி வைக்க..எத்தனை எத்தனை ராஜ தந்திரங்கள்.அத்தனையும் அண்ணனிடமும் அண்ணன் மகள் மும்தாஜிடமும் வீணாய் போனதே.

இப்படி நினைத்தையெல்லாம் சாதிக்க அவருக்கு ஒபியம் தான் உதவியது.புலி வேட்டைக்கு சென்றால் எத்தனை புலிகளோ அத்தனை குண்டுகள் தான் எடுத்து செல்வாராம்.அத்தர் வாசனை திரவியம் கண்டுப் பிடித்ததும் இவர் தான்.

அடுத்து வருவது தான் இந்த பதிவின் நாயகன் ஷாஜகான்.

1607ம் ஆண்டு நிச்சயதார்த்தம்,1612ல் திருமணம் - இப்படி காதல் பொங்கி வழிந்தது இருவரிடமும் அதுதான் ஷாஜகான்-மும்தாஜ் ஜோடி.இருவருக்கும் சமவயது.1631ம் ஆண்டு அவர் பதினாலாவது பிரசவத்தின் போது இறக்க (இதற்கு காரணம் போர்முனையில் கூட ஷாஜகானுடன் பயணம் + தொடர் பிரசவம்) ஷாஜகான் அவர் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற துடிக்கிறார்.நூர்ஜகான் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் ஷாஜகானை அன்பால் கட்டியவர்.எப்படியென்றால் மும்தாஜ் இறந்தவுடம் அந்த சோகத்தில் உடனே ஷாஜகான் தலை நரைத்து விட்டது.அப்போழுது இருவருக்கும் வயது நாற்பது கூட ஆகவில்லை.

அவர் வைத்த கோரிக்கைகள்.

1.எனக்கு நீங்கள் ஒரு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.(அது தான் தாஜ் மகால்)

2.வருடம் தவறாமல் நீங்கள் தாஜ்மகாலிற்கு என் நினைவு நாள் அன்று வர வேண்டும்.

3.இன்னொரு கல்யாணம் செய்ய வேண்டும்,குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்.

4.நம் குழந்தைகள் சண்டை போடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இதில் 1 மற்றும் 3 மட்டும் தான் நடந்தது.

மும்தாஜ் இறந்தவுடன் ஆதிக்கம் செலுத்திய அடுத்த பெண் யார் - அது அடுத்த பதிவில்..

டிஸ்கி :

இப்போது தாஜ் மகால் இருக்கும் இடம் ஒரு சிவன் கோவில்.அந்த இடத்தை ஒரு இந்து மன்னரிடன் இருந்து வாங்க அப்பவே சில பல கோடிகள் (நாலு) குடுத்தாராம்.மகால் என்று முடியும் எந்த கட்டிடமோ,நினைவு சின்னமோ இந்தியாவை தவிர வேறு எங்கும் கிடையாது.இன்று போனாலும் சிவனின் சில குறியீடுகள் உண்டாம்.இன்னும் நிறைய மன்னர்கள் ஆலயத்தில் தான் புதைக்கப் பட்டியிருக்கிறார்கள்.வைரம்,தங்கம் என்று சுவரில் பதித்து இருந்தார்களாம்.அதை ஆங்கிலேயர்கள் லேயர் லேயராக சுரண்டி விட்டார்கள்.(கரண்டி வைத்து).

கமல் இப்படி செய்தாரா - என்ன கொடுமை இது

சமீபத்தில் நக்கீரன்(வேற வழியில்லாமல்) படித்து தொலைத்ததால் வந்த வினை இது.அதில் குணா என்பவர் இப்படி பேட்டி குடுத்து இருக்கிறார்.என்னுடைய அப்பாவும்,கமலுடைய அப்பாவும் நண்பர்கள்.1955ம் வருடம் கமல் இரண்டாவது அல்லது மூன்றாவது படித்து வந்தார்.அவர் வயது சிறுவர்கள் வெளியே விளையாடும் போது இவர் மட்டும் புத்தகம் படிப்பாராம்.அதுவும் செக்ஸ் புத்தகம்.என்னுடைய அப்பா கமலுடைய அப்பாவிடம் புகார் கூறியும் அவர் கண்டுக் கொள்ளவில்லை.அதற்கு கமல் அப்பா சொன்ன பதில் - "இந்த வயதில் அவன் இந்த புத்தகம் மற்ற சிறுவர்களிடம் இருந்து வேறுபட்டு நிற்கிறான்.வேண்டாம் என்று சொன்னால் மறைத்து வைத்து படிப்பான்..அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை.."

இப்படி இருக்கிறது குணாவின் பேட்டி...

இதில் என்ன தப்பு இருக்கிறது என்றால்

1.கமல் பிறந்த வருடம் 1954.

2.1955ல் அவருக்கு வயது ஒன்று.ஒரு வயதில் எந்த குழந்தையாலும் வாசிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.

3.இரண்டாவது அல்லது மூன்றாவது படித்தால் அந்த சிறுவனுக்கு வயது ஏழு அல்லது எட்டு வயதாக இருக்கும்.

4.அப்படி ஒரு வயதிலே அவர் செக்ஸ் புத்தகம் படித்தார் என்றால் உண்மையிலே உலக அதிசயம் தான்.

இப்படி யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே எடுத்து விட கூடாது.அதுவும் பத்திரிக்கையில் வேலை செய்பவர்கள் குறைந்த பட்சம் சரி பார்த்து விட்டு போடவும்.நீங்களே தப்பு தப்பாக எழுதி விட்டு வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் போட வேண்டாம்.

தன்னை விட வயது மூத்தப் பெண்ணை விரும்பும் ஒருவன் குடுக்கும் முதல் உதாரணம்.சச்சின் அல்லது காந்திஜி.அவர்கள் சாதித்ததை எல்லாம் விட்டு விடுவார்கள்.

இனிமேல் செக்ஸ் புக் படிப்பவர்களும் உதாரணம் குடுக்க இதை காட்டுவார்கள்.என்னை கேட்டால் அதில் ஒன்றுமேயில்லை.(நான்சென்ஸ் என்று திட்ட எல்லாம் வேண்டாம்.. கேள்வி ஞானம் தான்..)

அதனால் எதை எழுதினாலும் ஆராய்ந்து விட்டு எழுதவும்.

இப்படி எழுதும் நீ என்ன ஒழுங்கா என்று என் மேல் பாய வேண்டாம்.தப்பு - அது எழுத்துப் பிழையோ அல்லது கருத்துப் பிழையோ நீங்கள் எனக்கு சொல்லலாம்.நட்பு கெட்டு விடும் என்று எல்லாம் யோசிக்க வேண்டாம்.அது வேற..இது வேற...அடித்து கும்முங்க..

டிஸ்கி :

தம்பி வலைப்பூ ஆரம்பித்து விட்டான்.என்னை விட நகைச்சுவையாக பேசுபவன்.அவன் எழுத தொடங்கினால் நான் நிறுத்தி விட வேண்டும் என்று நினைப்பேன்.அவனுக்கு மிகவும் பிடித்த பதிவர்கள் நர்சிம் மற்றும் குருஜி.சின்ன வயதில் அவன் தளபதி படத்திற்கு போட்ட ரீமிக்ஸ் கேட்டு அதிர்ந்தவர்கள் அதிகம்.அதை இங்கே சொல்ல முடியாத காரணத்தால் சொல்லவில்லை.அது அறியாத வயசு.புரியாத மனசு.

வாழ்த்துகள் தம்பி..இன்னும் போஸ்ட் போடவில்லை என்று நினைக்கிறேன்.மடிப்பாக்கம் என்று அவன் வலைப்பூவின் பெயரில் இருக்கிறது..

Monday, October 26, 2009

துவையல் - விளையாட்டு ஸ்பெஷல்

செஸ் விளையாடக் கற்று கொண்டவுடன் நான் நேராக என் திறமையைக் காட்ட களம் இறங்கியது மா நில அளவிலான போட்டியில்.முதல் போட்டியே ஒரு பாகாசுரனுடன்.(என் கோட்டையை எடுத்து விட்டான்).நான் செய்யும் மூவ்களை(வலி நிவாரண மருந்து அல்ல..காய் நகர்த்தல்) எழுத தாள் கொடுத்தார்கள்.எனக்கு அது எழுத தெரியாமல் அவனை பார்த்து காப்பியடித்தேன்.அவன் சிரித்து விட்டான்.போட்டியின் நடுவில் கேஸலிங்க்(யானை மற்றும் ராஜாவை இடம் மாற்றுவது) என்ற மூவ் செய்தான்.ஏண்டா தப்பா ஆடுற என்று அவன் கையைப் பிடித்து ஒரே கலாட்டா.நடுவர் தம்பி இப்படியே அடுத்த தடவை பண்ணினா நீ வெளியே கிடப்ப.. என்று சொன்னார்.உடனே நான் சொன்னேன்."இன்னும் இரண்டு மூவ் தான்..அவனே என்னை வெளியே அனுப்பி விடுவான்..அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்.." .இதை கேட்டு அவர் சிரித்து விட்டார்.அந்த பையன் வெளியே வந்து அவனுடைய அப்பாவிடம் என்னை காட்டி காட்டி சிரித்து கொண்டியிருந்தான்.ஆறாவது போட்டி முடிவில் அவனை விட பகாசுரன் வந்து அவன் கோட்டியை எடுத்து விட்டான்.நமக்கு வழக்கம் போல தோல்வி தான்.வெளியே வந்து பார்த்தால் அவனுடைய அப்பா அவனை திட்டி தீர்த்து விட்டார்.அவன் நிலைமை எனக்கு சிரிப்பு மூட்டாமல் பரிதாபமாக இருந்தது.முடிவு எனக்கு தான் கடைசி இடம்.நான் கூட இரண்டு வெற்றி பெற்று இருந்தேன்.அதில் ஒரு ஆட்டத்தில் எதிராளி வரவில்லை.

அந்த நடுவர் வந்து தனியாக என்னிடம் கேட்டார்.."உனக்கு வருத்தமேயில்லையா.."."இதில் என்ன வருத்தம்..என்னை விட திறமைசாலிகளிடம் தானே தோற்று போனேன்..".எல்லோரும் விளையாட அப்பா,அம்மா,செஸ் போர்ட்,சாப்பாடு என்று வருவார்கள்.நான் எப்பவும் தனியாகவே போவேன்.செஸ் போர்ட் கூட எடுக்க மாட்டேன்.கை வீசிக் கொண்டு போவேன்.யோசித்து பார்த்தால் நான் தேர்வுக்கு கூட பேனா,பென்சில்,ஸ்கெட்ச் என்று எதுவும் எடுத்து போனதில்லை.அது கூட ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு பெண் தான் எனக்கு எல்லாம் எடுத்து வருவார்.அதுவும் புதிதாக.வழக்கம் போல அந்த நட்பிலும் தோல்வி.(நட்பு தான் வேற எதுவும் இல்லை..என் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்க வேண்டாம்..)

எந்த ஆட்டத்தையும் யாரும் சொல்லி குடுக்காமல் நானே கற்று கொள்வேன்.நான் ஆசையாக கேட்டு கற்று கொண்ட ஒரே விளையாட்டு செஸ்(எழுத்துப் பிழை இல்லை) தான்.அதிலும் பிரன்ச் செஸ்(கிஸ் இல்லை) என்று முறையுண்டு.வித்தியாசமாக இருக்கும்.எப்படி என்றால் யானை மந்திரி கட்டத்திற்கு வந்தால் மந்திரி ஆகிவிடும்.குதிரை கட்டத்தில் (குதிரைக்கு நேராக இருக்கும் எட்டு கட்டத்தில் மட்டும்) யானை வந்தால் குதிரை ஆகிவிடும்.அது போலவே மந்திரியும்,குதிரையும் வேறு கட்டதிற்கு சென்றால் அது மாதிரி மாறி விடும்.பிரன்ச் என்றாலே வித்தியாசம் தான் அது கிஸ்ஸாக இருந்தாலும் சரி செஸ்ஸாக இருந்தாலும் சரி.

நெப்போலியன் ஒரு தீவில் கைதியாக அடைக்கப்பட்ட பிறகு அவருக்கு விளையாட செஸ் அட்டையும்,காய்களும் ஒரு நண்பர் பரிசளித்தார்.அந்த காய்களை அடியில் திருப்பினால் அவர் தப்பிக்க ஒரு திட்டம் வைக்கப்பட்டது.நெப்போலியன் கடைசி வரை திருப்பவில்லை.தப்பிக்கவும் இல்லை.அந்த திட்டம் இருந்தது என்று பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தான் கண்டுப்பிடித்தார்கள்.(சில ஆண்டுகளுக்கு முன்பாக).இதில் இருந்து நமக்கு வேண்டாம் எனக்கு கிடைத்த பாடம் - எந்த நேரத்திலும் தளர்ந்து விட வேண்டாம்.எந்த கஷ்டத்திலும் வெளியே வர ஒரு வழி நிச்சயமாக இருக்கும். நாம் தான் ஆராய்ந்து கண்டுப்பிடிக்க வேண்டும்.

வாசிம் அக்ரமின் மனைவி ஹியுமா இறந்த செய்தியைப் பார்த்து மனசு மிகவும் வலித்தது.எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர்.அது போல ஒரு வேகப் பந்து வீச்சாளரை நம்மால் உருவாக்க முடியாதது நமக்கு அசிங்கமே.நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டும் அவர் தன் திறமையை நிரூப்பித்தார்.இந்த இக்கட்டான நிலைமையிலும் இருந்து அவர் வெளியே வர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

நேற்று மதியம் மேட்ச் பார்த்து கொண்டியிருக்கும் போது சச்சின் அவுட்டான உடன் நான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நண்பர் சிரித்து விட்டார்.அந்த வார்த்தைகள் .."இப்படியா அடிக்கிறது..நேரா அடிச்சி இருந்தா ஃபோர் தான்..நானே அடிச்சியிருப்பேன்.." .அதோடு நிறுத்தி இருக்கலாம்.என் வாய் தான் சும்மா இருக்க விடாதே..ஹர்பஜனையும்,பிரவீன் குமாரையும் தாறுமாறாக கலாய்த்தேன்.எப்படி என்றால் நடந்து முடிந்த சாலஞ்சர் போட்டியில் ஹர்பஜன் ஒண்டவுன் இறங்கினார்.பிரவீன் தான் உ.பி தொடக்க ஆட்டக்காரர் அவங்க அணி நிலைமை எப்படி இருக்கும் பாருங்க என்றும் சொன்னேன்.இன்னும் கொஞ்சம் அவர்களைப் பற்றி வாயால் வாசித்தேன்.(கெட்ட வார்த்தைகள் கிடையாது..).பார்த்தால் அவர்கள் இருவரும் நேற்று அடித்து வெளுத்தார்கள்.(ஒப்பனிங்கு நல்லாயிருந்தது ஆனா பினிஷிங்கு..) .இன்னும் கொஞ்சம் திட்டி இருக்கலாம்.ஜெயித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இதில் இருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் - இனிமே என்னை நானே திட்டிக் கொள்ளப் போகிறேன்.(அப்படியாவது நல்லா எழுதலாம்னு ஒரு நல்ல எண்ணம் தான்)

சச்சின் நேற்று ஆப் ஸ்டம்பிற்கு வெளியே போட்ட அல்வாவை எடுத்து ரிக்கி பாண்டிங் கையில் கொடுத்தார்.அதே வாட்சனின் பந்துகளை பஜ்ஜியும் பிரவீனும் அடித்து காயப் போட்டார்கள்.சச்சினிடம் ஒருநாள் பயிற்சி எடுக்க ஏலம் விட்ட தொகை பனிரெண்டு லட்சம்.போய் காசை கரியாக்காமல் பஜ்ஜியிடம் சொஜ்ஜி போட கற்று கொள்ளுங்கள்.எங்கிட்ட வாங்க நான் ரன் எடுக்காமல் அதே சமயம் அவுட் ஆகாமல் மொக்கை(எது எடுத்தாலும் மொக்கை தானா என்று டென்ஷன் ஆக வேண்டாம்.நமக்கு எது வருதோ அதை தான் செய்ய முடியும்.) போடுறது பற்றி சொல்லித் தருகிறேன்.

இந்த வார வம்பு..

வேற யாரு சச்சின் தான்.இப்படி வம்பு இழுத்தால் தான் அடுத்த போட்டியில் அடிப்பார்.

இடது கை வேகப் பந்து வீச்சாளர்களைக் கண்டாலே சச்சின் குலை நடுக்குவது வாடிக்கை.அதற்கு சமீபத்திய உதாரணம்.பாகிஸ்தானின் முகமது அமீர்.பதினெட்டு வயது கூட ஆகவில்லை.சொல்லி கில்லி மாதிரி சச்சின் விக்கெட்டை எடுத்தார்.இடது கை பந்து வீச்சாளர்கள் போடும் இன்சுவிங்கர் சச்சினுக்கு அவுட் சுவிங்கராக வருகிறது.உடனே அதை தேவை இல்லாமல் தோட்டு கீப்பர் அல்லது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டுவார்.இன்னும் நிறைய கொடுக்க முடியும்.இன்றும் அவர் ஆட முடியாமல் தவிக்கும் ஒரு பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்.(இதற்கும் என்னை வெளுக்க வர வேண்டாம்..அடிக்கடி வெளுத்தால் என் சட்டையில் சாயம் போகிறது..)

Saturday, October 24, 2009

குடிப்பவர்களுக்கு பத்து யோசனை

டிஸ்கி : நான் குடிப்பவர்களுக்கு எதிரி அல்ல.தண்ணி(குழாயில் இல்லை..) அடித்தப் பிறகு இந்த பதிவை படிக்க வேண்டாம்.

1.குடிக்கும் முன் தொலைக்க வேண்டிய முதல் பொருள் பைக் அல்லது கார் சாவி.குடித்தப் பிறகு அவசியம் இருந்தாலும் வண்டியை எடுக்க வேண்டாம். நன்றாக உடம்பை வைத்து இருந்தால் தான் நிறைய நாள் தண்ணி(குழாயிலாவது) அடிக்க முடியும்.

2.குடித்தப் பிறகு யாரிடமாவது பேச சொல்லும் அதனால் குடிப்பதற்கு முன் மொபைலில் உள்ள காசை பேசி தீர்த்து விட வேண்டும்.சோட்டா ரீசார்ஜ் செய்து அந்த காசையும் அழித்து விட வேண்டும்.யாராவது அழைத்தால் அது அவர்களுடைய விதி.(நாம போய் ஆடு திருட கூடாது..ஆடே வந்து தலையை குடுத்தால் வேறென்ன பிரியாணி தான்.)

3. வீட்டிற்கு வாங்கி வாங்கி அடிப்பது சாலச் சிறந்தது.காசும் மிச்சம்.வம்பும் மிச்சம்.ஊறுகாயும் மிச்சம்.

4. வீட்டில் லோயர் ஹேண்டாக இருக்கும் ரங்கமணிகளை உடன் அழைத்து செல்வதை உடனே நிறுத்தவும்.வாங்கி கொடுத்து வாங்கியும் கட்ட வேண்டாம்.

5.நம்மை அறவே கண்டு கொள்ளாத நண்பன்(வேறு வார்த்தை இருந்தால் சொல்லவும்)எதிர்பாராமல் வந்து நமக்கு பார்ட்டி கொடுத்தால் உடனே சுதாரித்து விட வேண்டும்.(சோளியன் குடுமி சும்மா ஆடாது).அவுரங்கசீப்பும் அவருடைய கடைசி தம்பியும் முராத்தும் ஒருவரை ஒருவர் கொல்ல திட்டம் வைத்து இருந்தார்கள்.அண்ணன் செலவு செய்யாதவர்.தம்பி ஊதாரி.அண்ணன் குடிக்க மாட்டார்.தம்பி அதில் குளிப்பார்.அவுரங்கசீப் அவருக்கு நன்றாக ஊத்தி விட்டு பிறகு தீர்த்து விட்டார்.தீர்க்காமல் இருந்திருந்தால் அடுத்த நாள் தம்பி இவருடைய கதையை முடித்து இருப்பார்.

6.குடித்தால் தான் தைரியம் வரும்,நினைப்பதைப் பேசலாம் என்று நினைத்தால் உடனே பேசாமல் காலை வரை தள்ளி போடலாம்.மறந்து விடாமல் இருக்க எழுதி வைத்து கொள்ளலாம்.காலையில் அதை ஒருமுறை படித்து பார்த்து விட்டு பேசலாம் இல்லை எழுதியதைப் படிக்குமாறு குடுக்கலாம்.

7.குடிக்கும் போது நம்மிடம் எதுவும் சொல்லாமல் உடன் இருக்கும் நண்பர்களிடம் குறை சொல்லும் நல்ல உள்ளங்களை உடனே கட்டாங்கி செய்து விடலாம்.

8.தண்ணியடித்து கொண்டியிருக்கும் சமயத்தில் யாராவது உங்களுக்கு நல்லது சொல்வார்கள் அதில் பத்து சதவீதமாவது கேட்டு நடப்பது நல்லது.

9.தண்ணியடித்து விட்டு யாரையும் திட்ட வேண்டாம்.திட்டிய உடன் திட்டியவர்களுக்கு நன்றாக தூக்கம் வருகிறது.(குறிப்பாக குறட்டையோடு), வாங்கியவர்களுக்கு தூக்கத்தில் ஒரு கால் போய் துக்கம் தான் எஞ்சி மிஞ்சி நிற்கிறது.

10.சந்தோஷமாக இருக்கும் போது நிறைய குடிக்கவும்,சோககமாக இருக்கும் போது குறைவாக குடிக்கவும்.நாம் இதை மாத்தி செய்கிறோம்.குடிப்பதற்கு காரணத்தை ரெடியாக வைத்து கொள்ளவும்.அவன் என்னை அப்படி சொல்லி விட்டான்,இப்படி சொல்லி விட்டான் என்று சொல்லி யாரும் குழாயில் கூட தண்ணியடிக்க வேண்டாம்.சம்பந்தப் பட்டவர்களிடம் பேசி தெரிந்து கொள்ளலாம்.மூன்றாவது நபர் சொல்லுவதை அப்படியே எடுத்து கொள்ள வேண்டாம்.நீங்களும் எந்த கருத்தையும் சொல்லி விட வேண்டாம்.நீங்கள் சொன்னது மட்டும் பெரிதாக்கபடும்.

பின் டிஸ்கி : இது எல்லாம் கற்பனையே என்று சொன்னால் அது மிகையாகாது.

Friday, October 23, 2009

பேராண்மை,கமல்,குலால்,சாரு,ஆஸ்கர்

நான் இந்திய சினிமாவை பற்றி பேசும் போது அடிக்கடி உச்சரிக்கும் வாக்கியம்."நாம் முப்பது வருடங்கள் பின் தங்கி இருக்கிறோம் ஆங்கிலம் அல்லது கொரியன் ரஷ்யன் அல்லது வேறு எந்த மொழி(இந்திய மொழிகள் தவிர்த்து) சினிமாவுடம் ஓப்பிடும் போது அது கதையாக இருந்தாலும் சரி தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி) இன்று அந்த வார்த்தைகள் பொய்யாகி இருக்கிறது.அது முப்பது வருடம் அல்ல இன்னும் ஏழு வருடங்கள் அதிகம் என்று உணர்த்தியிருக்கிறார் ஜனநாதன்.காரணம் பேராண்மை படம் 1972லில் வெளி வந்த ஒரு ரஷ்ய படத்தின் தழுவல்(உருவல் என்று சொன்னால் மிகச் சரியாக பொருந்தும்).

இதே ஜனநாதன் சஞ்சய் லீலா பன்சாலி சாவாரியா(சாவுரியா இல்ல) படம் எடுத்தவுடன் இயற்கை படத்தை உருவி விட்டார் என்று தைய தக்கா என்று குதித்தார்.அது போல அந்த ரஷ்ய இயக்குனர் குதிக்க மாட்டார் என்பது நிச்சயம்.அவருக்கு இதையெல்லாம் பார்த்தால் தானே தெரியும்.நான் அடிக்கடி சொல்லும் இன்னொரு வாக்கியம் "பணம் சேர சேர மூளையும் குறுக்கு வழியிலே போகும் என்று.." அதுவும் உறுதியாகி இருக்கிறது.நாம் என்ன எடுத்தாலும் பார்ப்பார்கள் என்று யாரும் நினைத்து எந்த படைப்பையும் உருவாக்கி விட வேண்டாம்.அது நிச்சயம் பல்ப் வாங்கி பிரகாசமாக எரியும்.ஆனால் இயற்கை படமே ரஷ்ய(ரூஷ்ய) நாவலான வைட் நைட்ஸ் என்பதின் தழுவலே.(இந்த நாவலை பற்றி இன்னும் ஆழமாக விவாதிக்க என் உயிர் நண்பன் வெண்ணிற இரவுகள் என்ற பெயரில் பதிவு எழுதி வரும் கார்த்திக்கிடம் பேசலாம்)

இயற்கை படத்தை கூட நான் தழுவல் என்று ஓத்துக் கொள்வேன்.ஆனால் பேராண்மை(இதற்கு எனக்கு அர்த்தம் தெரியுமா என்று ஒரு அருமை நண்பர் கேட்கிறார்) படத்தை உருவல் என்று தான் சொல்ல முடியும்.அந்த ரஷ்ய படத்தில் வருவதைப் போல 5:16 என்ற ரேஷியோவில் எதிரிகளை அழிக்கிறார்கள்.(இந்த எண்ணிக்கையை கூடவா மாத்தக் கூடாது)

நான் இந்த சண்டையை ஒரு பதிவோடு நிறுத்தி விடலாம் என்று தான் நினைத்தேன்.ஆனால் நேற்று ஒருவர் வந்து பேராண்மை பதிவு என்று நினைத்து கொண்டு ஆதவன் பதிவில் "கமல் என்ன பெரிய ஆளா.." என்று பின்னூட்டம் போடுகிறார்.எனக்கு பதிலுக்கு பின்னூட்டம் போட முடியாத காரணத்தினால் இங்கே அதற்கு பதில் சொல்கிறேன்.ஆமாம் பெரிய ஆள் தான்.உன்னை போல் ஒருவன் படத்தில் திரைக்கதை என்பதில் கமல் பெயருடன் நீரஜ் பாண்டே என்று வரும்.என் தம்பி சிரித்து விட்டு சொன்னான் கமல் பெயர் எப்படி அதில் வரலாம் என்று.இதுவே மற்றவர்களாக இருந்தால் அவர்கள் பெயர் மட்டும் தான் வரும்.உதாரணம் வேண்டாம் என்று நினைக்கிறேன்.கமல் மிக பெரிய வெற்றி படத்தில் அந்த இயக்குனர் பாதியில் படத்தை விட்டு விட்டு சென்று விட்டார்.கமல் தான் பாதி படத்தை இயக்கினார்.இயக்கம் என்பதில் கமல் தன் பெயரை போடவில்லை.(இதற்கு உதாரணம் தருகிறேன்..மன்மதன் படத்தை உண்மையில் இயக்கியது யார்..).இந்த பேராண்மை சண்டைக்கு கமலை இழுக்க வேண்டாம்.

நான் தப்பாக எழுதி விட்டேன் என்று முதல் பாயிண்டை மட்டும் காப்பி செய்து ஆர்கூட்டில் பேஸ்ட் செய்து விவாதிக்கிறார்கள்.சரி அதுவும் தவறு இல்லை என்று விளக்கத்தோடு சொல்லி விட்டேன்.மத்த கேள்விகளுக்கு பதில் என்ன..நான் படமே பார்க்காமல் விமர்சனம் எழுதியிருக்கிறேன் என்று சொல்வது போல் உள்ளது.சாருவின் குலால் விமர்சனத்தில் ஒரு சின்ன தவறு இருக்கிறது.உடனே அவர் படம் பார்க்கவில்லை என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அந்த சாட்டிலைட் விவாதம்.இந்த கட்,காப்பி,பேஸ்ட் முறையால் நானும் ஒரு ரவுடியாக உருவாகி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

ஜன நாதன் நல்ல திறமையான இயக்குனர்.கதை கிடைக்காமல் படத்தை உருவுவதை விட்டு விட்டு நல்ல கதாசிரியர்களிடம் இருந்து கதையை வாங்கி படம் எடுக்கலாம்.கூட்டு முயற்சிக்கு ஒரு உதாரணம் குலால்.அந்த படத்தின் நாயகன் ராஜ் சிங்க் சௌத்ரி தான் திரைக்கதை.கே.கே.மேனனின் அண்ணனாக(மன நிலை பாதிக்கப்பட்ட) நடித்த பியூஸ் மிஸ்ரா தான் இசை.நாங்கு பாடல்கள் பாடியுள்ளார்.

இங்கு கதைகள் கொட்டி கிடக்கிறது.எடுக்க தான் ஆள் இல்லை.திறமையான பதிவர்கள்(நான் இல்லை) இருக்கிறார்கள் அவர்களிடம் கேட்டால் கதை என்ன இன்னும் நிறைய திறமைகளைக் காட்டுவார்கள்.இன்று பத்திரிக்கை வரை வந்து விட்ட பதிவர்கள் நாளை சினிமாவிலும் சாதிப்பார்கள்.

ஆஸ்கர் விருதை என்றாவது தட்டி விடுவோம் என்று கனவு காணுபவர்களுக்கு அமீர்கான் சொன்னதை ஒரு முறை நினைத்து பார்க்கவும். "அவர்கள் எடுத்த படத்தையே திரும்ப எடுத்து விருதிற்கு பரிந்துரை செய்தால் எப்படி விருது கிடைக்கும்.."

டிஸ்கி :

பொன்வண்ணனைக் கொன்று விட்டு எதிகளை அழிக்கும் போது இறந்து விட்டார் என்று அவர் மனைவியிடம் விருதை கொடுப்பது மாதிரி படம் எடுத்து இருந்தால் ஒருவேளை நான் இத்தனை கேள்விகள் கேட்டு இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.ஜாதிபேதம் இல்லை என்று யார் கூறினாலும் இப்படி படம் எடுத்து இருக்கிறது என்று ஞாபகப்"படுத்துகிறார்கள்".வனத்தை காப்போம் என்று சொல்லிவிட்டு இந்த படம் எடுக்க காட்டையே அழித்து இருக்கிறார்கள்.

மதிமாறனின் பேராண்மை விமர்சனம் படிக்கவும்.

மக்கள் தொலைகாட்சியில் வெளியான அந்த ரஷ்யப் படத்தை பார்த்து இருந்தால் காசும் மிச்சம் சண்டையும் மிச்சம்.

Thursday, October 22, 2009

குலால்,கமீனே,சாரு - 2

கமீனே - அரத பழசான அண்ணன் தம்பி கதை.ஷாகித் கபூர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.சார்லி,குட்டூ இருவரும் அண்ணன் தம்பிகள்.அப்பா இறந்த பிறகு பிரிந்து விடுகிறார்கள்.சார்லி குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவன்.குட்டூ நேர் வழியில் செல்பவன்.(என்ன இப்பவே கண்ணைக் கட்டுதா).வித்தியாசம் ஏதாவது இருக்க வேண்டுமே.சார்லி "ச" வை "ப" என்று உச்சரிப்பான்.குட்டூ திக்கி திக்கி பேசுவான்.இது மட்டும் தான் வித்தியாசம் என்று நினைத்தால் அப்படி இல்லை திரைக்கதை முழுவதுமே வித்தியாசம் தான்.

சார்லி குறுக்கு வழியில் கவனம் சிதறாமல் குதிரை போல ஓடுபவன்.(குதிரை பந்தயத்தில் விளையாடி பணத்தைத் தொலைக்கிறான்).ஜாக்கியைப் பிடித்து இப்படி ஆனதிற்கு காரணமாணவனைத் செல்கிறான்.அவன் பேர் பிரான்பிப்(சார்லி மொழியில்) பிரான்சிஸ்.அங்கு நடக்கும் சண்டையில் தப்பி வரும் போது ஒரு வண்டியில் தப்பிக்கிறார்கள் சார்லியும் அவன் நண்பனும்.

செக் போஸ்ட்டில் தான் தெரிகிறது அவர்கள் அடித்தது காவலர்களை கடத்தியது அவர்களுடைய வண்டியை,அதில் இருக்கும் போதை பொருளை.வீட்டிற்கு போனால் எமன் காத்து இருக்கிறான் பிரியங்காவின் அண்ணன் உருவில். .

இதற்கிடையில் கர்ப்பமான காதலியை திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம்.காரணம் அவளுடைய அண்ணன் ஒரு ரவுடி கம் அரசியல்வாதி.அவனது ஆட்கள் அவர்களைப் பிடித்து விட அங்கு நடக்கும் சண்டையில் பிரியங்காவால் காப்பாற்றப்பட்டு குட்டூ தப்பிக்கிறான்.
வரும் வழியில் இருவருக்கும் சண்டை வர "நீ சொல்வது எல்லாம் பொய்.." என்று குட்டூ திட்ட அவள் போய் விடுகிறாள். அவளுடைய அண்ணனின் ஆட்கள் சார்லியின் இடத்தை சொல்ல அவர்கள் சார்லியின் இடத்திற்கு செல்கிறார்கள்.

போதைப் பொருளை இழந்த அதிகாரி குட்டூவைப் பிடித்து விசாரிக்க..விசாரணையில் அவன் திக்க..பிறகு பாட சொல்ல அவன் திக்காமல் பாடுகிறான்.(வாசுவின் செந்தமிழ் பாட்டு படம் பார்த்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்).விசாரணையில் அவனுக்கு ஒரு சகோதரன் இருப்பது தெரிய வர..ரவுடி அண்ணன் தொல்லையால்(உயிர் நண்பன் வேறு காலி) சார்லியிடம் இருந்து போன் வர 1+1 = 2.

இருவரையும் பண்டமாற்று முறையில் அதிகாரியில் ரவுடியும் மாற்றிக் கொள்கிறார்கள்.குட்டூ அண்ணனிடம் பேரம் பேச..அதிகாரியை சுட்டு விட்டு சார்லி போதைப் பொருள் கூட்டத்தின் தலைவனிடம் பேரம் பேச..

இருவரும் போதைப் பொருளை எடுக்க வர..நடக்கும் சண்டை ப்ளஸ் வாக்குவாதத்தில் சார்லி விட்டு கொடுக்கிறான். சார்லியைப் பார்த்து அப்பாவின் மரணத்திற்கு நீ காரணமில்லை என்று குட்டூ சொல்கிறான்.சின்ன ப்ளாஸ்பேக்.அப்பாவை விடுவிக்க சார்லி சூதாடுகிறான்.(சின்ன வயதில் எப்படி இருக்கிறோமோ அப்படிதான் கடைசி வரை இருக்கிறோம்).பணம் கொண்டு வருவதற்குள் அப்பா தற்கொலை செய்து கொள்கிறார்.மகன்கள் பிரிகிறார்கள்.

குட்டூ வரும் வழியில் காவலர்களிடம் மாட்ட,அவர்கள் எல்லோரையும் பிடிக்க திட்டம் தீட்ட,சார்லி போதை பொருள் கும்பலுடன் அங்கு வர,தம்பியைக் கொன்ற கும்பலைத் தேடி சார்லியின் முதலாளிகள் வர,காவல்துறை சுற்றி வளைக்க,(இந்த இடத்தில் வாமனன் படம் ஞாபகம் வந்தது..அய்யோ அம்மா கொடுமைடா சாமி) சார்லி குட்டூவைக் காப்பாற்ற போதைப் பொருளை வைத்து மிரட்ட,பிறகு இறந்த நண்பனைப் பார்த்து அதை தீயில் கொட்டி விட பிறகு நடக்கும் சண்டை ரணகளம்.

சார்லிக்கும் அடிபட ஆனால் உயிர் பிழைத்து சூதாட்டம் ஆடுகிறான்.போபியாவை சாரி சோபியாவை கரம் பிடிக்கிறான்.உபயம் நடக்கும் சண்டையில் இரண்டு வைரம் சார்லிக்கு கிடைக்கிறது.குட்டூவிற்கு இரட்டை குழந்தைகள்.(சரித்திரம் திரும்புகிறது)

படம் பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

டிஸ்கி :

படத்தை விளம்பரம் செய்ய எப்.எம்மில் பேட்டி கொடுக்க சென்ற ஷாகித்திடம் ஏடாகூடமாக கேள்வி கேட்க அங்கு ஒரு சண்டை.

கேள்வி : பிரியங்கா சோப்ரா எப்படி ?

ஷாகித் : நன்றாக நடித்தார்.பாதி படம் முடிந்தப் பிறகு தான் அவர் வந்தார்.

கேள்வி : (சென்ஸார் செய்யப்படுகிறது..தனி மெயிலில் சொல்கிறேன்)

ஷாகித் எழுந்து வந்து விட்டார்.பேட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.பிறகு மன்னிப்பு கேட்ட பிறகு ஏனோ தானோ என்று தொடர்ந்தது.

படத்தின் திரைக்கதை நாலு பேர் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.(ஒருத்தர் எழுதினால் தான் அது பழைய படம் மாதிரி தான் இருக்கும்) படத்தின் இயக்குனர் தான் இசை.அற்புதம்.

இங்க பேரரசுவே எல்லாம் பண்ணுவார்.இப்போ இசையும் அவருதானாம்.பின்ன படம் எப்படி இருக்கும்.

சிபாரிசு :

இந்த படத்தை அஜித் அல்லது சூர்யா செய்யலாம்

Wednesday, October 21, 2009

குலால்,கமீனே,சாரு

பேராண்மை விமர்சனத்தைப் படித்து "அது ஒரு அரைவேக்காடுத்தனமான விமர்சனம்..இனிமே விமர்சனமே எழுதாதீங்க.." என்று ஒரு நண்பர் அன்பாக பின்னூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தியிருந்தார் .அவர் திரு.திரு.அரைவேக்காடு மாதிரி படம் எடுத்தால் விமர்சனமும் அது மாதிரி தான் இருக்கும்.அதனால் ஒரு மாற்றத்திற்கு இரண்டு இந்தி படங்கள் விமர்சனத்திற்கு எடுக்கப்படுகிறது.இது மாதிரி தமிழில் படம் எடுத்தால் அரைவேக்காடு விமர்சங்கள் குறையும்.

தமிழ் படம் பார்த்தால் யாருக்கும் சிபாரிசு செய்ய மாட்டேன்.ஆனால் குலால் மற்றும் கமீனே படத்தை நிறைய பேரிடம் பார்க்க சொன்னேன்.எனக்கு ரொம்ப பிடித்த படங்கள் வரிசையில் இந்த இரண்டு படங்களும் சேர்ந்து விட்டது.அட சாரு கூட இந்த படங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்.அதனால் தான் இந்த படங்களை நான் தூக்கி பிடிக்கிறேன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.இந்த படங்களைப் பற்றி எனக்கு சொன்னது என் மேனேஜர்.அவருக்கு அவர் தந்தை.வயது எழுபது.வயதானவர்கள் தான் இளமையாக உணர்கிறார்கள் என்பதற்கு இந்த படம் சாட்சி.

இனி குலால் - இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு குறு நில மன்னர்களிடம் பேசி அவர்களின் அரண்மனைகளையும்,சொத்துகளையும் எடுத்து கொள்கிறது.அது பிடிக்காமல் இராஜ்புத்(ட்) இனத்தினர்கள் புரட்சி செய்து தனி நாடு வாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.அந்த புரட்சியின் சேனாதிபதி கே.கே.மேனன்.அரசியலில் நுழைய பீகாரிலும்,ராஜஸ்தானிலும் கல்லூரி தேர்தல் தான் முதல் கட்டம்.முப்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் கூட இதற்காக கல்லூரியில் படிப்பார்கள்(சட்டக் கல்லூரி).

அப்படி நாடு இழந்த ஒரு ராஜாவின் மகன் தான் ரன்ஸா.அவன் தங்கியிருக்கும் வீட்டில் வந்து தங்குகிறான் தீலிப்(கதையின் நாயகன்).ரன்ஸாவின் அப்பாவுடைய சின்ன வீட்டிற்கு பிறந்தவர்கள் தான் கரணும்,கிரணும்.

தீலிப் விடுதிக்கு செல்ல அவனை நிர்வாணப்படுத்தி ஒரு அறைக்குள் அடைக்கிறார்கள்.அங்கே பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியையும் அதே கோலத்தில் இருக்கிறார்.இருவருக்கு இடையில் ஒரு நட்பு துளிர்க்கிறது.

தட்டி கேட்க செல்லும் ரன்ஸாவும்,உடன் செல்லும் தீலிப்பும் கழிவறையில் முக்கி எடுக்கப்படுகிறார்கள்.இதை எல்லாம் செய்பவன் ஜடுவால்.கரணின் கையாள்.திரும்ப அவனை தாக்கும் முயற்சியில் ரன்ஸா வெற்றி பெற ஜடுவாலின் நண்பர்கள் துரத்த இருவரும் ஒரு திரையரங்கில் ஒளிந்து கொள்கிறார்கள்.தீலிப் பயப்பட ரன்ஸா சொல்கிறான்."ஹீரோயினை பார்..".ஆனால் சுற்றி வளைக்கப்படுகிறார்கள்.கே.கே.மேனன் வர காப்பாற்றப் படுகிறார்கள்.

கே.கே.மேனனின் அண்ணனாக ஒரு பாத்திரம்.துணைக்கு ஒரு திரு நங்கையாக ஒரு சின்ன பாத்திரம்.உடல் மொழியால் அசத்துகிறார்கள்.கே.கே.மேனனை பகடி செய்கிறார்கள்.

ரன்ஸா தேர்தலில் கே.கே.மேனனால் நிறுத்தப்படுகிறான்.எதிர்த்து கிரண் நிற்கிறாள்.ஒரு பாட்டு வருகிறது.(இந்த இடத்தில் வேறு வழியே இல்லாமல் பேராண்மை படத்தின் பாடல் ஒப்பிடப்படுகிறது.தோழியைக் கொன்றவர்களை பழி வாங்க ஜெயம் ரவியும் மூன்று பெண்களும் புறப்படுகிறார்கள்.அந்த பாட்டு கேட்டு நான் நொந்து நூலாகி விட்டேன்.காதில் பூவும்(நமக்கும் உண்டு),கண்மையும் தடவி கொண்டால் பயந்து விடுவார்களா என்ன.)

ஆனால் அதே சமயம் குலால் படத்தில் அந்த அர்த்தம் புரியாத பாடல் எனக்கு மிகவும் பிடித்தியிருந்தது.உடம்பும்,மனதும் சேர்ந்து புல்லரித்தது.அந்த வரிகள் இங்கே..காட்சி அமைப்பும் அருமை.மிரட்டியிருக்கிறார்கள்.

(உ-ம்) நீந்தே(ங்) பி அப் ஸோனே கயீ(ங்)

ராத்தோ(ங்) கோ பி பர்வா நஹி.

ரன்ஸா கரணால் கடத்தப்பட்டு மிரட்டியும் கேட்காததால் கொல்லப்படுகிறான்.அந்த அதிர்ச்சியில் ராஜாவும் உயிரை விடுகிறார்.ராஜாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட விடாமல் கரணை தடுத்து விடுகிறார்கள்.

தீலிப் தேர்தலில் நிற்கிறான்.கோல்மால் செய்து தேர்தலில் ஜெயிக்க வைக்க படுகிறான்.(கிரணின் 600 ஓட்டு 500 ஓட்டாகவும்,தீலிப்பின் 400 ஓட்டு 500 ஓட்டாகவும் எண்ணப்படுகிறது.)

வெற்றிக்கு கொடுக்கப்படும் பார்ட்டியில் கரண் சொல்லி கொடுத்தது மாதிரி கிரண் அவனை நெருங்கி அவனை வலையில் சிக்க வைக்கிறாள். நெருங்கிய பழக்கம் கர்ப்பத்தில் முடிகிறது.கிரண் "என்னை போல இன்னொரு குழந்தை வரவே கூடாது.." என்று சொல்லி விடுகிறாள்.அவனை பிரிகிறாள்.அந்த சோகத்தில் அவன் பதவியை ராஜினாமா செய்கிறான்.அந்த பதவிக்கு கிரண் வருகிறாள்.எதுவும் தப்பாக நடந்து விடக் கூடாது என்று கே.கே.மேனனை நெருங்குகிறாள்.

இது தெரிந்தவுடன் தீலிப் கே.கே.மேனனை கொல்கிறான்.கிரணை கொல்ல புறப்படுகிறான்.அவள் உண்மையை சொல்கிறாள்.பதவிக்காக செய்தேன் என்று.அவளை கொல்ல முயற்சிக்கும் போது கொல்லப்படுகிறான்.

கரண் சேனாதிபதி ஆகிறான்.ரஜபுத் புரட்சியாளர்களுக்கு வீரஉரை நிகழ்த்துகிறான்.கிரண் முகத்தில் குங்குமம்(இது என்ன பொடி என்று தெரியவில்லை உடனே நான் தப்பாக விமர்சனம் செய்து விட்டேன் என்று சாம்ராட் பாய்ந்து வர வேண்டாம்) பூசிக் கொண்டு உரையை கேட்கிறாள்.

டிஸ்கி :

பேராண்மை விமர்சனம் படித்து விட்டு எழுதிய பின்னூட்டங்களைப் பார்க்கவும்.குறிப்பாக (ஒன்பது மட்டும் பதினொன்று)

ஐயா சாம்ராட் எனக்கு அறிவு கம்மி தான்.நான் ஏவுகணை என்று தமிழில் எழுதியதால் என்னை வெளுக்க வந்து விட்டீர்கள்.இந்த படத்திற்கு விமர்சனம் எழுதிய எல்லோரும் ராக்கெட் என்று தான் எழுதியிருக்கிறார்கள்.ராக்கெட் என்றால் தமிழில் ஏவுகணை என்று தான் அர்த்தம்.(என் உங்களுக்கு அர்த்தம் சொல்கிறேன் என்றால் நீங்க ஆங்கிலத்தில் பிளாக் எழுதும் அறிவுஜீவி).சாட்டிலைட் என்று படம் பார்த்த எனக்கு தெரியாதா.சாட்டிலைட் என்ன நீங்க தூக்கி மாட்ட உங்க வீட்டில் இருக்கும் குண்டு பல்ப்பா?.அதை எடுத்து செல்ல ராக்கெட் இப்படி எழுதுனா எனக்கு புரியாது ஏவுகணை தேவை.உங்க அறிவுஜீவி தனத்தை என்னை போல முட்டாளிடம் காட்ட வேண்டாம்.இப்படி எழுதியதற்கும் புல்லரிக்குமே

இதில் பார்த்து சாட்டிலைட் எப்படி மேலே போனது என்று தெரிந்து கொள்ளலாம்.மேலே கொண்டு செல்ல ஏவுகணை தேவை.எதையும் முழுதாக தெரிந்து கொண்டு குதிக்கலாம் என்ன சரியா

கமீனே அடுத்த பதிவில்..

Tuesday, October 20, 2009

துவையல் - ஊமைகுத்து ஸ்பெஷல்

முதல் தடவை மும்பை வந்த பின் ஆறு மாதம் கழித்து தான் சென்னைக்கு திரும்பினேன்.கொஞ்ச நேரம் நான் இருந்த சந்தோஷத்தில் எனக்கு தமிழே புரியவில்லை.வெளியே வந்த உடன் ஒரு ஆட்டோகாரர் வந்து "எங்கே.." என்று கேட்டார்.

நானும் அந்த நேரத்தில் எனக்கு தெரிந்த ஒரே ஒரு இந்தி வார்த்தையை சொல்லி விட்டேன்."கியா.."

ஒரு இளிச்சவாயன் சிக்கி விட்டான் என்று அவரும் விடாமல் "வேர்.." என்று சொல்ல

"அண்டர்வேர்.." என்று மனதுக்குள் நினத்து கோண்டு "மடிப்பாக்கம்.." என்று சொன்னேன்.

"400 ரூபிஸ்.."

சரிவராது என்று தலையாட்டினேன்.அவரும் எவ்வளவு என்று என்னை சொல்ல சொன்னார்.

"பதினைஞ்சு..வருமா.." என்று சரளமாக சொல்ல..

"காலையிலே வந்துட்டாங்க.."

"இஸ்கியா.." என்று அவரை பார்த்து சொன்னேன்.(இப்படிதான் சூடு போட்டு விட்டு கவுண்டமணி செந்திலிடம் கேட்பார்.அதற்கு அர்த்தம் வலிக்குதா..)

கவுண்டமணி என்னை அந்த அளவிற்கு பாதித்து இருக்கிறார்.இன்னுமொரு சம்பவம்..

பேராண்மை பாக்க தியேட்டரில் நின்று கொண்டு இருந்தோம்.எனக்கு முன்னால் இரண்டு பேர் நின்று கொண்டு இருந்தார்கள்.முதல் ஆள் டிக்கெட்டும் பாக்கியும் வாங்கிய உடன் இரண்டாவது ஆளும் பணம் கொடுத்து விட்டார்.முதல் ஆள் நூரு ரூபாய் கம்மியாக இருக்கு என்று சண்டை போட ஆரம்பித்தார்.சரி பார்த்து பணம் வாங்கி விட்டு சென்றார்.

இரண்டாவது ஆளிடம் அவர் திரும்ப பணம் கேட்க..நான் கொடுத்து விட்டேன் என்று மறுபடியும் ஒரு சண்டை.

உடனே நான் பின்னாடி இருந்து "உங்க சண்டையில நான் குடுத்த ஐ நூரு ரூபாய மறந்துராதீங்க.." என்று சொன்னவுடன் டிக்கெட் கொடுப்பவர் சிரித்து விட்டார்.

*****************

ஊருக்கு போய் விட்டு வந்த பிறகு ஒரே வெறுமையாக இருக்கிறது.பக்கத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பில் அம்மா பேச சொல்லியும் எதுவும் பேசவில்லை.இன்னும் ஒரு வாரம் இதே நிலைமை தான்.எழுதுவதை கூட நிறுத்தி விடலாம் என்ற அளவிற்கு வெறுமை.முந்தா நாள் இதே நேரம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று யோகித்து பார்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஊரில் இருக்கும் போது இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கு,மூனு தான் இருக்கு இப்படி எண்ணி எண்ணியே நேரம் முடிந்து விடுகிறது.கடைசி நாள் சரியான தூக்கம்.அதிலும் இன்னும் நாலு மணி நேரம் தான் இருக்கு என்ற எண்ணம் வந்து என் மேல் ஊமை குத்துகளாக விழுந்தது.

*****************

நண்பனிடம் பேசும் போது வேட்டைகாரன் பாடல் "நான் அடிச்சா தாங்க மாட்ட..நாலு மாசம் தூங்க மாட்ட.." பற்றி பேச்சு வந்தது.அதற்கு நண்பர் சொன்ன பதில் சென்ஸார் காரணமாக சொல்லப்படவில்லை.

அப்படி சொன்னதை தெரிந்து கொள்ள ஆசைபடுபவர்களுக்கு மெயிலில் சொல்கிறேன்.

அவன் சொன்னதை விஜய் கேட்டால் நாலு மாசம் தூங்க மாட்டார்.

*****************

பேராண்மை பார்த்து விட்டு பொறியல் ஆகி இருந்ததால் ஆதவன் பார்க்கவில்லை.ஆதவன் பார்த்து இருந்தால் அந்த படம் என்ன கதி ஆகியிருக்கும் என்பது ரவிகுமாருக்கே வெளிச்சம்.இந்த நேரத்தில் தான் ரவிகுமாரின் பேட்டி ஞாபகம் வந்தது.அவர் சொன்னது.

"படம் நல்லாயில்லை என்று சொல்ல உரிமை இருக்கிறது..ஆனால் பார்க்க வேண்டாம் என்று சொல்ல உரிமையில்லை.."

அவருக்கே தெரிந்து இருக்கிறது படம் எப்படி இருக்கும் என்று.

ஆக மொத்தம் ஒன்று மட்டும் உறுதி.

ஒருத்தருக்கும் படம் செலக்ட் பண்ண தெரியாது என்று.சூர்யா நல்ல படங்கள் செய்ய காரணம் அவரை தேர்வு செய்யும் இயக்குனர்களே.

விஜய் சந்தோஷமாக இருப்பார்.பின்னே இருக்காதா என்ன..அவருக்கு பிறகு ரவிகுமாருடன் மொக்கை படம் குடுத்தது சூர்யா தான்.உதய நிதியுடன் மொக்கை குடுத்ததும் அதே சூர்யா தான்.விஜய்,விக்ரம்,அஜித்,விஷால் வரிசையில் இவரும் சேர்ந்து விட்டார் என்று ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

வேட்டைகாரன் வெளியாகவில்லை அது மட்டும் தான் என் வருத்தம்.திருப்பாச்சி படமும் வேட்டைகாரன் படமும் சேம்மாமே.

(என்னது ஷேம் ஷேம் பப்பி ஷேம்மா..)

*****************

கார்த்திக் என் தம்பி.அவனுக்கு ஒரு விபத்து.பலத்த காயம்.அவன் நலம் பெற பிராத்திக்கிறேன்.அவனுக்கு அட்வைஸ் சொல்ல எனக்கு தகுதியில்லை.அவனுக்கு ஒரு வேண்டுகோள்.

உறுப்புகளும்,உறவுகளும் இருக்கும் போது அதன் அருமை நமக்கு புரிவதேயில்லை.

"தண்ணியடிச்சா வண்டி ஓட்டாதே..வண்டி ஓட்டுனா தண்ணியடிக்காதே.

*****************

Sunday, October 18, 2009

ஜெகன் மோகினி

ஜெகன் - அவன் பெயர் மட்டும் அல்ல அவன் தான் ஜெகத்தை ஆள வேண்டும் என்று நினைப்போடு வாழ்பவன். திறமைசாலி ,அழகன் ,  இன்னும் சொல்ல போனால் என்னுடைய நண்பன்(இதை விட ஒரு தகுதி வேண்டுமா சொல்லுங்கள்).

சிறுவயதில் இருந்தே ஏதாவது ஆராய்ந்து கொண்டே இருப்பான். வெற்றி பெறுகிறதோ இல்லையோ விஞ்ஞானத்தோடு வியாக்கியானம் பேசுபவன்.

பெரும் பணக்காரரின் மகளைத் திருமணம் செய்து கொள்ள மேலே கூறிய தகுதிகளே போதுமானதாக இருந்தது. ஆராய்ச்சி வெற்றி பெற்றால் கிடைக்கும் பெரும் ஆதாயத்தை நினைத்தே அவர் இவனுக்கு பெண் கொடுத்து இருந்தார்.சொல்ல மறந்துட்டேன்.அவன் மனைவி பேர் மோகினி.

தொடர்ந்து நடந்த முயற்சியில் அவரது பணம் மட்டும் தான் கரைந்து இருந்தது.அவன் மனம் கரையவில்லை.மனைவியின் வெகுளிதனத்தைப் பயன்படுத்தி பணம் தேவைபடும் அளவு வாங்கி கொள்வான்.அவன் நோக்கம் எல்லா பேர் தெரியாத நோய்களையும் தடுக்கும் மருந்தைக் கண்டுப்பிடிப்பது.குறிப்பாக எய்ட்ஸ்.இதை சொன்னவுடன் தான் அவருக்கு ரொம்ப சந்தோஷம்.(ஒருவேளை அவருக்கு இருக்குமோ..அடப்பாவி இது தான் கேரக்டர் அஸாசினேஷன்..)

இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது.வாய் தகராறு விரைவில் அடித்து கொள்ளும் கட்டத்தை எட்டும் என்று மட்டும் தோன்றியது.

சில வாரங்களுக்குப் பிறகு

ஜெகன் தொலைபேசியில் அழைத்து பதற்றமாக பேசினான்."மச்சான்..சீக்கிரம் லேப்புக்கு வா..ஒரு சிக்கல்.."

போய் பார்த்தால் லேப் முழுவதும் அலங்கோலமாக கிடந்தது.இருவரும் சேர்ந்து சரி பண்ணா ஆரம்பித்தோம்.தூரத்தில் ஒரு மனிதகுரங்கு மயங்கி கிடந்தது.

"ஜெகன் என்ன ஆச்சு.."

"எல்லாம் அந்த குரங்கு பண்ண வேலை..அட்டகாசம் செய்து இப்படி அலங்கோலம் ஆகி விட்டது.."

"உங்க மாமனாருக்கு தெரிஞ்சா என்ன பண்றது.." என்று சொன்ன என்னை அவன் சட்டை செய்யவில்லை.

கொஞ்ச நாள் கழித்து அந்த குரங்கை எடுபிடி வேலைக்கு பழக்கியிருந்தான்.அதுவும் கூடமாட வேலை செய்தது.

"மச்சான் காபி வேணுமா.."

அந்த குரங்கே தயார் செய்து கொண்டு வந்தது.காபி குடித்தால் சக்கரை இல்லை..

"ஜெகன் சக்கரை இல்லை.."

கோபத்தில் அந்த குரங்கை அடிக்க ஆரம்பித்தான்.தடுக்க சென்றவன் அவன் சொன்னதைக் கேட்டு நின்று விட்டேன்.காரணம் அவன் அந்த குரங்கை அடிக்கும் போது அதை அவன் மாமனார் பெயரை சொல்லி சொல்லி அடித்து நொறுக்கி விட்டான்.எனக்கு இருந்த சந்தேகம் வலுத்தது.

"ஜெகன் இது உங்க மாமாவா.."

"ஆமாடா..உனக்கும் உண்மை தெரிந்து விட்டது..உன்னையும் மாத்தி விட வேண்டியது தான்..வேலை செய்ய இன்னும் ஒரு குரங்கு கூடியிரும்.."

"ஜெகன் வேணாண்டா..இது சரியில்ல.." என்று ஓட முயற்சிக்கும் போது பிடித்து விட்டான்.

"மோகினி அந்த ஊசியை எடுத்துட்டு வா.." என்று கத்த ஊசி கொண்டு வந்த மோகினியும் குரங்காக மாறியிருந்தாள்.அவளையும் மாற்றியிருக்கிறான்

ஆனால் அவனிடம் ஊசியை கொடுக்காமல் அவனை அந்த பெண்குரங்கு குத்தி விட்டது.ஜெகன் என் கண் முன்னாலே ஒரு குரங்காக மாறியிருந்தான் இல்லை மாறியிருந்தது.(மட்டமான கிராபிக்ஸ் படம் பார்த்தது போல் ஒரு உணர்வு)

ஒரு மாதம் கழித்து.. வண்டலூர் ஜூவில்..

அந்த ஊழியர் என்னிடம் சொல்லி கொண்டு இருந்தார்."நீங்க போன் பண்ணி சொன்னாதாலே நாங்க எல்லாத்தையும் பிடிச்சி இங்க கொண்டு வந்துட்டோம்..அந்த சின்ன ஆண் குரங்கு எப்போ பார்த்தாலும் எதையாவது நோண்டுது..பெரிய ஆண் குரங்கு கிட்ட ஏதோ கேக்குது..உடனே இரண்டும் சண்டை போடுது..அந்த பெண் குரங்கு யார் பக்கம் போறதுன்னு தெரியாம முழிக்குது.."

"சரி இங்க வந்தப்பிறகும் பணம் கேக்குறத நிறுத்தல போல.." என்று நினைத்து கொண்டு "ஒரு குட்டி குரங்கு வந்தா எல்லாம் சரியாயிடும்.." என்று அவரிடம் சொன்னேன்.

"சார் நீங்ககளே ஒரு பெயர் வைங்க.." அவர் சொல்ல..

"ஜெகன்.." என்று என் வாய் அனிச்சையாக முணுமுணுத்தது.

"ரொம்ப நல்ல பெயர்..இந்த ஜூவையே இது ஆளும் சார்.." என்று சொல்லி கொண்டு நகர்ந்தார்.

ஜெகன் என்னை பார்த்து கொண்டேயிருந்தது. நான் திரும்பி பார்த்தேன்."இது நீ இருக்க வேண்டிய இடம்.." என்று சொல்வது போல் இருந்தது.

டிஸ்கி :

நாலு மாதங்களுக்கு முன்னால் எழுதியது..இப்போ கோல் அடிக்கிறேன்.கிடைச்ச கேப் எல்லாத்துலையும் கோல் அடிக்கணும்.அது தான் என் ஆசை.பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ள்து.

Saturday, October 17, 2009

ஆதவன் - திரை விமர்சனம்

நாயகன் ஆரம்ப காட்சியில் மாறுவேடத்தில்(மீசை,மரு வைத்தாலே மாறுவேடம் தான்) அந்த ஊருக்கு வருகிறார்.ஒரு வீட்டில் இருக்கும் அம்மா அவருக்கு அடைகலம் தருகிறார்.இவரும் அங்கே நல்ல பிள்ளையாக இருந்து கொண்டு அவர் வந்த நோக்கத்திற்காக பாடுபடுகிறார்.நம்மையும் படுத்துகிறார்.

நாயகியிடம் ஆரம்பத்தில் மோதல்.அவர் செய்யும் அவமானங்களைப் பொறுத்துக் கொள்கிறார்.அதை பல காலமாக பார்க்கும் ரசிகர்களைக் கொல்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் ஆங்கிலம் பேச அதை பார்த்து நாயகி மயங்கி விடுகிறார்.கூடவே நாமும்.பிறகு ஹீரோ மறுக்க மறுக்க அவர் மேல் காதல்.(எழுதும் போதே கை தானாக புல்லரிக்கிறது).பிறகு ஒரு டூயட்.பிறகு நாயகி ஆபத்தில் சிக்கி கொள்ளும் சமயம் ஹீரோ அடி வெளுக்கிறார்.நாயகியின் அப்பா அவமானப் படுத்தும் போது கூட ஒன்றும் பேசாமல் இருக்கிறார்.(இயக்குனர் வசனம் கொடுக்கவில்லையாம்.)

ஒரு கட்டத்தில் இவர் யார் என்று வில்லனுக்குத் தெரிந்து விட நாயகனை அடித்து விடுகிறார்.மயக்கத்தில் கிடக்கும் நாயகன் எழுந்து (டாக்டர் வேண்டாம்,போகாதீங்க என்று தடுத்தும் நர்ஸைத் தள்ளி விட்டு பர்ஸை எடுத்து கொண்டு ஓடுகிறார்.எவன் பில் கட்டுறது..இயக்குனர் வேண்டாம் என்று சொன்னால் தான் நிற்பார்) வில்லனை நாறு நாறாகக் கிழிக்கிறார்.

படத்தில் கவுண்டமணியின் காமெடி சரவேடி..(யோவ் இந்த படத்துல வடிவேல் காமெடி என்று யாரும் சண்டைக்கு வர வேண்டாம்..) இது சூரியன் பட விமர்சனம்.

கவுண்டமணி சொன்னது மாதிரி அரசியல்ல இது எல்லாம் சகஜம்.

இந்த கொசுத் தொல்லை தாங்க முடியாமல் யாரும் மருந்து அடிக்க வர வேண்டாம்.

இப்படி அரதப்பழசான படத்தின் சாயலைக் கொண்டு தான் புதிய படங்கள் வருகிறது.நாமும் போய் ஏமாந்து விட்டு வருகிறோம்.

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

டிஸ்கி :

கேபிள் சங்கர் அண்ணனலே ஆதவன் விமர்சனம் எழுத முடியலையாம்.போன் பண்ணி ஆதவன் விமர்சனம் எழுத சொன்னாரு.அதான் நானே எழுதிட்டேன்..

வாங்க எல்லோரும் பூ மிதிக்க போவோம்.

இஞ்சாயி..இஞ்சாயி..

ஸ்டார்ட் த ம்யூசிக்..

ஏய் காந்த கண்ணழகி இங்க பூசு..லெப்ட் இப்போ ரைட்.. பேக்ல பூசு..

ஏய் ஸ்டாப் த ம்யூசிக்..

பின்னூட்டம் போட ஆள் வந்துட்டாங்க..நீங்க போகலாம்..

Friday, October 16, 2009

பேராண்மை - திரை விமர்சனம்

எனக்கு இயக்குனர் ஜனநாதன் மீது ஒரு பெரிய மரியாதையே உண்டு.அவர் படங்கள் எல்லாம் தீபாவளியை ஒட்டியே வெளியாகும்.இயற்கை படம் பார்த்த நாளில் இருந்து நண்பர்கள் அனைவரும் அவர் படம் பார்க்க விரும்புவோம்.அதே ஆசையில் இன்று பேராண்மை பார்க்க முடிவு செய்தேன்.முதல் பத்து நிமிடம் போதும் பார்வையாளனைக் கட்டி போட ஆனால் கடைசி வரை அவரால் அதை செய்யவே முடியவில்லை.அந்த அளவிற்கு திரைக்கதையில் தொய்வு.நான் லாஜிக்கே பார்க்க கூடாது என்று நினைக்கும் விஜய் படங்களையே விட்டு வைக்காத நான் எனக்கு பிடித்த இயக்குனரை விட்டு வைப்பேனா.இனி ஒரே வெளுப்பு தான்.

1.ஸார் நீங்க என்ன சொல்ல வர்றீங்க அந்த ஏவுகணையை ஏவினால் பசுமை புரட்சியில் எப்படி மாற்றம் வரும்.நிலாவில் விவசாயம் செய்ய முடிவு செய்து இப்படி ஒரு முடிவை சொன்னீர்களா.தமிழ்நாட்டின் விவசாய நிலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?

2.எருமைக்கு பிரசவம் பார்ப்பது இவ்வளவு எளிதா..நீங்கள் பிரசவம் செய்ய வேண்டாம் நேரிலாவது பார்த்தது உண்டா..(நான் பார்த்து இருக்கிறேன்..சிக்கலான பிரசவம் ஒரு நாளுக்கும் மேல் நீடிக்கும்..)ஹீரோ கை விட்டால் உடனே வந்து விடுமா..கோமணம் கட்டி நடித்தால் அவர் என்ன கமலா..)

3.படம் ஆரம்பித்தப் பிறகு வசனங்களில் தான் எத்தனை சென்ஸார்..ஸார் நான் பாம்பு பார்த்ததேயில்லை..ஏன் இந்த ஆபாசம் ஜனநாதன்..(இயற்கை படத்தில் தொப்புளைக் கூட காட்டாமல் இருந்த காரணத்தினால் தான் அந்த படம் எனக்கு ஒரு ஈர்ப்பையே உண்டாக்கி இருந்தது..)

4.இந்த படத்திற்கு வடிவேல் தேவையா..அவர் என்ன சாதித்து விட்டார்..உங்களின் முதல் இரண்டு படத்தில் பெரிய காமடியனே கிடையாதே..பி மற்றும் சி செண்டரில் ஓட அவர் தேவை என்றால் உங்களுக்கு கதை மீது நம்பிக்கை இல்லையா..

5.ஜெயம் ரவிக்கு எல்லா நவீன ஆயுதங்களையும் இயக்க தெரிகிறதே எப்படி..பொன்வண்ணன் இப்படி சொல்கிறார்..நான் யாருக்கும் ரிவால்வார் கூட குடுத்தது கிடையாது.. உனக்கு தான் தந்து இருக்கிறேன்..ஜெயம் ரவி அவர்களைப் பார்க்க கூட இல்லை..அவர்கள் இந்த காரியதிற்கு தான் வந்து இருப்பார்கள் என்று எப்படி கண்டுப்பிடித்தார்..(படம் பார்க்கும் போது இப்படி சந்தேகம் கேட்ட ரசிகருக்கு அவர் நண்பன் சொன்னது..இயக்குனர் சொல்லியிருப்பார் என்று..)

6.பொன்வண்ணன் விருது வாங்கி கொள்கிறார்..அந்த பெண்கள் கூட உண்மையை சொல்லவில்லையா..(என்ன கொடுமை அரவிந்த் இது..)

7.இது ஆதி காலப் படங்களை எனக்கு நினைவுப் படுத்தியது.தாயம் ஒண்ணு(அர்ஜூன் மற்றும் ஐந்து பெண்கள்) போய் எதிரி முகாம்களை அழிப்பார்கள்.அவரை காதலிக்கும் பல்லவி இறந்து விடுவார்.இங்கு ரவியைக் காதலிக்கும் சரண்யா இறந்து போகிறார்.திரும்பி பார்க்கும் போதே தெரிந்து விடுகிறது அவர் கதை முடிந்து விடும் என்று.

8.ஆயுதங்கள் இல்லாமல் இருக்கும் ஜெயம் ரவி மற்றும் அந்த மூன்று பெண்களைப் பார்த்து மெஷின் கன் வைத்து இருக்கும் வில்லன் ஆட்கள் பயந்து ஓடுகிறார்கள்..

9.துப்பாக்கி சண்டை போடுவது வீடியோ கேம் விளையாடுவதைப் போல் உள்ளது..

10.கமல் நடித்த விக்ரம் படத்தில் வரும் ஏவுகணை,கேப்டன் மகள் படத்தில் வருவது போல் பிரதமரைக் கொல்ல பயன்படுத்தும் ராக்கெட் இப்படி 1980களில் வந்த படங்களின் சாயல் எதற்கு..

11.குறிப்பாக அந்த ஐந்து பெண்களைத் தேர்வு செய்யப்பட்ட காரணத்தை ஊர்வசி கேட்டால் அவர்கள் தான் பயிற்சிக்கு ஒத்துயுழைக்க மறுத்தார்கள் என்று ஒரு காரணம் சொன்னதைக் கேட்டு நான் சிரித்து விட்டேன்.அந்த காட்சிக்கு முன் தனியாக அந்த பெண்கள் மட்டும் கடுமையாக பயிற்சி எடுப்பது போல் ஒரு காட்சி வரும்..என்ன எடிட்டர் இதெல்லாம்..

12.துரத்தி அடிக்கப்பட்டப் பழங்குடியினர் என்ன ஆனார்கள்..(கையால் நடந்து சண்டை போடும் ஜெயம் ரவியின் அண்ணனின் சண்டை அருமை..ரன் படத்தில் வருவதை விட அருமையாக இருந்தது.)

இப்படி இன்னும் பல ஓட்டைகள்..என்னால் சொல்ல முடியவில்லை.(இதுக்கே என் கோமணம் கிழிவது நிச்சயம்..)

மொத்தமாக் வைத்து பார்த்தால் பேராண்மை படம் - காயடிக்கப்பட்ட ஒரு பெரிய காட்டு யானை.(கதை இல்லாமல் வீணாக செலவளித்த ஐங்கரனின் பணம்)

டிஸ்கி :

பேராண்மை - ஆண்மை குறைவு.. காட்டில் சிட்டுக் குருவி லேகியம் கிடைக்குமா..

இதெல்லாம் பத்தாது என்று டயர் பஞ்சர்..தள்ளிக் கொண்டு கடையைத் தேடி அலைந்து அதற்கும் ஒரு தனி செலவு..

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை..யாராவது மேப் தர முடியுமா..ஜெயம் ரவி இப்படிதான் மேப் பார்த்து விட்டு சாதித்தார்.

ஆக மொத்தம் ஐங்கரனுக்கு நேரம் சரியில்லை.இன்னும் ஒரு பதிவு இருக்கிறது..பாய்ந்து வரும் இரண்டு நாட்களில்..பதிவு எழுத ஆரம்பித்த உடன் அதை எழுத இருந்தேன்.

பிற்சேர்க்கை

நான் முதல் நாள் பார்க்கும் படம் எல்லாம் எப்படி மொக்கையாகவே இருக்கிறது என்றே புரியவில்லை.ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது..என் தம்பி தப்பி விட்டான்..(கந்தசாமி பார்த்ததில் இருந்து படத்திற்கு போவது இல்லையாம்).After Effects and Side Effects.

என்ன நடந்தாலும் நான் போவேன்.பார்ப்பேன்..கிழித்து தோரணம் கட்டுவேன்.

சந்தோஷம்

வில்லனுக்கு பிராட் பிட் சாயல்.

சந்தேகம்

வசுந்தராவிற்கும்,இயக்குனருக்கும் சண்டையா ? ஒரு பாடலில் அவர் இல்லை.யாரோ ஒரு துணை நடிகை திரும்பி கொண்டு ஆடுகிறார் .

அதிசயம்

ஜெயம் ரவி இங்கிலீஸ் பேசாமல் இருந்து இருந்தால் அது தான் அதிசயம்.

இன்னொரு டிஸ்கி :

நான் உலகத்தரம் என்று வாயால் வெடிப்போம்.ஆனால் உள்ளூர் தரத்தைக் கூட தாண்ட மாட்டோம்.

Thursday, October 15, 2009

இரயில் பயணங்களில்

 விமானத்தில் பயணிக்காமல் மும்பையில் இருந்து சென்னைக்கு வருவதற்கு காரணம் வித்தியாசமான குணாதிசயங்கள் உள்ள மனிதர்களை வேடிக்கை பார்ப்பதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைகிறது.நான் இதுவரை பார்க்காமல் இருக்கும் முகங்களில் சிலதை பார்க்கலாம்.அதில் சில முகங்கள் கவிதை வாசிக்கிறது, ஒவியமாக தெரிகிறது, நதியாக பாய்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது, இன்னும் நான் ரசிக்காத சில கலைகளை எனக்கு அறிமுகம் செய்கிறது. நவரசங்கள் தெரிகிறது.அதில் சில ரசங்கள்.ஒரே ஒரு இசம்.

நகைச்சுவை - திருமங்கைகள் காசு கேட்கும் போது பொதுவாக பெண்களையும்,வயதானவர்களையும் தவிர்த்து விடுவார்கள்.வாலிபவர்கள் தான் அவர்கள் குறி.ஒருமுறை அப்படி வந்த ஒரு திருமங்கை யாரும் பணம் தராத காரணத்தால் குடும்பத்தோடு வந்திருந்த ஒரு ஆணிடம் பணம் கேட்டார்.அவர் மறுக்க, திருமங்கை அவர் மனைவியிடம் "அக்கா குடுக்க சொல்லுங்கள்.." என்று சொல்ல பிறகு அவர் பணத்தைக் கொடுத்தார்.அதோடு வாயை வைத்து கொண்டு சும்மா இருந்திருக்கலாம். "என்ன அக்காவா..சொல்லவேயில்ல.." சொல்லி முடிக்கும் முன் அவர் முகவாயில் ஒரு குத்து விழுந்தது.(அந்த சமயம் ஆதி-தாமிரா எழுதிய தங்கமணி பதிவுகள் ஞாபகத்திற்கு வந்தது.)இது தான் வாயை குடுத்து வாங்கி கட்டுறதா..

கோபம் - இரண்டு வருடம் முன் பொங்கலுக்கு விடுமுறை கிடைக்காத காரணத்தால் குடியரசு தினத்தில் கிளம்பினேன்.டிக்கெட் வேறு கன்பார்ம் ஆகாமல் வெயிடிங் லிஸ்டில்(விண்டோ லெப்ட் என்றும் சொல்லலாம்) இருந்தது.போக வேண்டிய கட்டாயம்.ஸ்லிப்பர் க்ளாஸில் ஏறினால் அங்கு ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.ஒரே ஒரு இரவு தானே சமாளித்து விடலாம் என்று ஒரு குருட்டு நம்பிக்கை.என்னை போல ஒருவனாக சிலர் இருந்தனர்.ஒரு குரூப் சேர்ந்து விட்டோம்.இரவு வந்தவுடன் கீழே படுக்கலாம் என்று சொன்னான்.முதலில் நீ போ என்று ஒரு இடத்தை காட்டினான்.நான் போகாமல் இருக்க அவன் போய் பேப்பர் விரித்து படுத்து விட்டான்.அங்கு இருந்த ஐம்பது வயது பெண்மணி படுக்க விடாமல் பிரச்சனை செய்ய அவன் எழுந்து வந்து விட்டான்.காரணம் கேட்டால் அவர்கள் மீது கை வைத்து விட்டான் என்று ஏதோ சொல்ல அவன் பாய்ந்து விட்டான்."உங்க வயது என்ன..கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள்.." என்று கத்த அந்த பெண்மணி அமைதியாக இருந்து விட்டார்.இதற்கும் இருவரும் ஒரே ஜாதி,ஒரே மதம்,ஒரே மொழி.(அவர்கள் பேசும் போது தெரிந்தது,திருப்பதி போகிறார்கள்).நான் ஒரு அம்மாவின் பக்கத்தில் இருந்தேன்.இரவு வந்ததும் காவலர்கள் வந்து எங்களைத் துரத்த உடனே அந்த அம்மா "என் பிள்ளை தான்..விடுங்கள் என்று சொல்லி விட்டார்.காவலர்களும் விட்டு விட்டார்கள்.இதில் இருந்த அதிசயம் என்ன என்று பார்த்தால் அவர்கள் ஒரு முஸ்லீம்,தாய்மொழி தெலுங்கு.அடுத்த நாள் அந்த பையனைத் துரத்திய பெண்மனி செய்த காரியம் இன்னும் மோசம்.விடைத்தாள்களை அவர் திருத்தி கொண்டும்,பேசிக் கொன்றும் இருந்தார்.கூடவே அந்த பெண்மணியின் புத்திர சிகாமணியும் திருத்தியது.

சோகம் - டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் போகும் போது நல்ல நல்ல பெண்களாக வருவார்கள்.ஊர் சேரும் மன நிலையில் பார்க்கத் தோன்றாது.அதுவே டிக்கெட் கிடைத்து இருந்தால் நான் இருக்கும் கம்பார்ட்மென்டில் எல்லோருமே திருப்பதி வரை போகும் ஆண்களாக இருப்பார்கள்.

பார்க்கும் போது தான்
ஜோடிகளின் நெருக்கம் இன்னும் அதிகரித்து
அடர்த்தியாகத் தெரிகிறது
அவர்களைக் கடக்கும் சமயம் தெரிகிறது
நான் தனியாக பயணிப்பது.

டிஸ்கி :

தமிழ்நாட்டின் எல்லையைத் தொடும் வரை அமைதியாக இருக்கும் நான் தொட்டப் பிறகு அடிக்கடி மணி பார்க்கிறேன்.எதிர்படும் இரயில் நிலையங்களின் பெயர்களை வாசிக்கிறேன்.இன்னும் இன்னும் என்ன என்னமோ செய்கிறேன்.

இங்கு இருந்து திரும்ப போகும் நிலைமை தலைகீழ் இருப்பதிலே தமிழ்நாட்டின் எல்லையை தான் விரைவில் கடக்கிறேன்.

ஒரேயொரு பிறந்தநாள் கொண்டாட்டம்

ஒரே ஒரு முறை தான் நான் என் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறேன்.அதுவும் "மற்றவர்களுக்காக".ஏன் கொண்டாடுவதில்லை என்று யாராவது கேட்டால் என் பிறந்தநாளை தமிழ் நாடே கொண்டாடும் என்று கர்வமாக சொல்வதுண்டு.இன்னொரு காரணம் அது விடுமுறை நாளில் வருமென்பதால் பள்ளியில் படிக்கும் போது மிட்டாய் கூட குடுத்ததில்லை.தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு சென்றால் அவர்கள் மறந்து இருப்பார்கள். பெரிய நடிகர்களின் படங்கள் பார்த்து விட்டு விவாதிக்கும் போது எனக்கு வாழ்த்துகள் சொல்ல கூட யாருக்கும் நினைவு இருக்காது.செலவு மிச்சம் என்று நினைத்து கொள்வேன்.பள்ளியில் படிக்கும் போது ஒரு தடவை கொண்டாடியது கிடையாது.

கல்லூரியில் சேர்ந்த மூன்றே மாதத்தில் இரண்டு பெண்களிடன் ரொம்ப நெருங்கிய நட்பு(நட்பு மட்டும் தான் நட்பு மட்டும் தான்) உண்டு.இந்த நட்பு தொடங்க முக்கிய காரணம் அவர்கள் எனக்கு அசைன்மெண்ட் எழுதி தந்தது தான்.என் நேரம் நான் பழகிய இருவரும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே எதிரிகள்(விளங்கிரும்).முதல் செமஸ்டர் ஆரம்பித்த மூன்று மாதங்களுக்குள் தேர்வு வந்து விட்டதால்,அசைன்மெண்ட் எழுத தேவை இல்லாமல் போய் விட்டது.இப்படி எந்த தேவையும் இல்லாத்தால் அவள் என்ன சொன்னாலும் கேட்பதேயில்லை.அடிக்கடி சண்டை.செமஸ்டர் எப்படி எழுதினாய் என்று கூட இருவரும் கேட்கவில்லை.செமஸ்டர் முடிந்து பத்து நாட்களில் புது வருடம்.அவள் வாழ்த்து சொல்வாள் என்று நானும்,நான் வாழ்த்து சொல்வேன் என்று நானும் கடைசி வரை சொல்லவேயில்லை.இருவருக்கும் ஈகோ கொளுந்து விட்டு எரிந்தது.இறண்டு நாள் களித்து நீ ஏன் வாழ்த்து சொல்லவில்லை,இப்போ சொல்லு என்று சண்டை போட்டாள்.அப்பவும் நான் சொல்லவில்லை.

இரண்டாவது செமஸ்டர் திரும்பவும் அசைன்மெண்ட் எழுத வேண்டிய கட்டாயம்.திரும்பவும் ஈகோ.நான் எழுதி தர கேட்பேன் என்று அவளும், கேட்காமல் எழுதி தந்தால் என்ன குறைந்து விடுவாளா என்று நானும் இருந்து விட்டோம்.நானே எழுதி அதிகம் திட்டு வாங்கி,என்ஜினீரிங் டிராயிங் வரைய முடியாமல் அடுத்தவன் வரைந்ததை திருடி அவன் பெயரை அழித்து விட்டு என் பெயரைப் போட்டு விட்டு அதிலும் திட்டு வாங்கி(நான் எது குடுத்தாலும் எப்படிதான் தவறு கண்டுப்பிடிப்பார்களோ அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்) திரும்ப வேறு பையனுடையதைத் திருடி திரும்ப திட்டு வாங்கி பிறகு இதுவே தொடர்கதையாகி விட்டது.(கடைசியில் அந்த பாடத்தில் நான் 77 மார்க் வாங்கியதும் அதிர்ச்சியில் அந்த ஆசிரியைக்கு பேச்சு வரவில்லை)

இந்த திட்டுகளைத் தாங்க முடியாமல் அவளுடன் சண்டையை முடித்து கொள்ளலாம் என்று அந்த வருடம் பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்தேன்.அவளுக்குகாக ஒரு சாக்லேட் தனியாக வைத்து இருந்தேன்.அவள் சொல்ல வருவாள் சாக்லேட் குடுத்து சண்டையை முடித்து விடலாம் என்று நான் பிளான் போட்டு இருந்தேன்.(ஓப்பனிங்க் எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா..).நான் சாக்லேட் குடுக்க வரும் போது சொல்லலாம் என்பது அவளுடைய திட்டம்.கடைசியில் அவளுக்கு சாக்லேட் குடுப்பது மாதிரி போய் அவள் தோழிக்கு குடுத்து விட்டு வந்தேன்.(பிடுங்கி தின்று இருப்பாள்..அது வேற விஷயம்..)

அவளுக்காக ஒரு கவிதை மாதிரி

நீ - திமிர்
நான் -
புதிர்
நாம் - திமிரு(று)ம் புதிர்.

அவளுடைய எதிரி என்னுடைய இன்னொரு தோழி எனக்கு கார்டும்,ஒரு பரிசும் குடுத்தாள்.பின்னர் யார் மீது இருந்த கோபத்தில் அவள் குடுத்த கார்டை எறித்து விட்டேன்.பரிசு அந்த சமயத்தில் கிடைக்காத காரணத்தால் தப்பி விட்டது.(இந்த பதிவு எழுதும் போது அது என் முன்னால் மேஜையில் இருக்கிறது).பின்னர் அவளிடம் போய் நீ குடுத்த கார்டை நான் எறித்து விட்டேன்.எனக்கு இன்னொரு கார்டு கொடு.நான் பத்திரமாக வைத்து கொள்வேன் என்று கேட்டேன்.அடுத்த பிறந்த நாளுக்கு என்று சொன்னாள்.

அப்படி ஒரு நாள் இதுவரை வரவில்லை.நானும் கொண்டாடவில்லை.அவளும் தரவில்லை.

அவள் அந்த வெள்ளி கிழமை குடுத்த பரிசு பொருளில் இப்படி இருக்கிறது.

The Candles,
the Cake,
the friends,
the wishes,
the hopes,
the splendour,
the moments,
the celebrations,
the gifts, May all of
them tell you one
and the same thing
"You are special"

பசங்களுக்கு ஒரு பார்ட்டி குடுக்க முடிவு செய்து அடையார் போய் சாப்பிட்டு விட்டு வரும் போது பார்க்காமல் சாலையை கடக்க, நடக்க இருந்த விபத்தில் இருந்து ஜஸ்ட் மிஸ்.ஒரு சிறுகீறல் கூட இல்லாமல் தப்பி விட்டேன்.நடந்து இருந்தால் நிச்சயம் உயிர் போய் இருக்கும்.ஒன்னும் ஆகவில்லை.   

Because Iam special for somebody.(always)

டிஸ்கி :

கடைசியாக ஒரு பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்து சட்டை எடுக்கலாம் என்று கிளம்பிய போது சரக்கடிக்க காசு கேட்ட நண்பனுக்கு அந்த காசைக் குடுத்து விட்டு அறையில் தூங்கி விட்டேன்.

Wednesday, October 14, 2009

கமலின் கலாசாரப் பேட்டி

கமல் பேட்டி எனக்கு புரியவில்லை என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு இந்த பேட்டியைப் பார்க்கும் வரை.இந்த நையாண்டியும் நக்கலும் கமல் என்ற படைப்பாளிக்கே உரியது.பார்த்து விட்டு ரொம்ப நேரம் சிரித்தேன்.கமலுக்கு எடுத்த பொன்விழா ஆண்டில் எல்லோரும் அவரைப் புகழ்ந்து தள்ளியதால் அவரது சுயத்தை மறந்து விடுவாரோ என்ற சந்தேகம் இருந்தது.

இதை பார்த்தப் பிறகு இல்லை.

இந்த இயல்பான கோபத்திற்காகவே நான் கமலுக்கு என்றும் இரசிகனாகவே இருப்பேன்.

அவர் சும்மா என்று படத்திற்கு பெயர் வைத்தாலும் பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது.அது தலைமுறை தாண்டியும் தொடரும்.

Tuesday, October 13, 2009

இடியாப்பச் சிக்கல்,சுப்ரமணியபுரம்

சுப்ரமணியபுரம் படத்தை எல்லோரும் ஆகா,ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார்கள்.நான் பெரிதும் மதிக்கும் சாரு கூட அந்த படத்தைத் துரோகங்களின் காவியம் என்று புகழ்ந்தார்.அவரை கவர்ந்த படங்களில் ஒன்றாக புதுப்பேட்டை படமும் உண்டு என்று சொன்னார்.அந்த படம் பார்த்தப் பிறகு எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் பெரிய விவாதமே நடந்தது.கஞ்சா கருப்பு தான் துரோகி என்று சொன்னார்கள்.நான் அந்த பெண் சுவாதி தான் துரோகி என்று சொன்னேன்.அது குடும்பத்திற்காக அவள் செய்த தியாகம் என்று சொன்னார்கள்.நான் கஞ்சா கருப்பு செய்தது துரோகம் இல்லை.அவன் பணத்திற்காக அலையும் ஒருவன்,பணம் குடுத்தால் எதுவும் செய்வான் என்று ஒரு காட்சியில் தெரிந்தது.அதுவே முடிவில் நடந்ததால் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.தொடர்ந்து அந்த பெண்ணைக் குறை சொன்னதால் ஆணியவாதி என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

கல்லூரியில் படிக்கும் உருகி உருக்கி காதலித்து விட்டு அமெரிக்கா சென்று சாலையில் நின்று படம் எடுத்து கொண்டு ஆர்குட்டில் படத்தைப் போடும் பெண்ணை விமர்சிக்கும் நான் ஆணியவாதி தான்.அவளை அசிங்கமாகத் என்னிடம் திட்டி விட்டு அவளுடன் சாட் செய்பவர்களை என்ன பெயர் சொல்லி அழைக்க.சொல்லுங்கள் அப்படியே கூப்பிடுகிறேன்.நான் சொல்வது இதுதான் அவளைத் திட்டினால் அவளுடன் பேசாதே..பேசினால் திட்டாதே..இப்படி நான் ஏதாவது சொன்னால் நான் பிழைக்கத் தெரியாதவன்.என் வீட்டிலும் அதுதான் சொல்கிறார்கள்.

கஞ்சா கருப்பின் துரோகம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.காரணம் அதை விட சில நண்பர்களின் துரோகம் வித்தியாசமாக இருக்கிறது."நான் எப்போதும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.." - இப்படி ஒரு நாள் குடிக்கும் போது உளறிய நண்பர்கள் என்னிடமே கற்றுக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் வேலை தேடிய அனுபவம் உண்டு.போட்டிக்கு வந்து விடக்கூடாதாம்.

நான் அறிமுகப்படுத்தி வைத்த நண்பர்கள் என்னை விட்டு விட்டு அவர்கள் நெருங்கி பழகினால் பொறாமை வருவதில்லை.மாறாக அவர்கள் அறிமுகப்படுத்தும் நண்பர்களிடம் அவர்களுக்கு மனஸ்தாபம் வந்தால் நானும் பேசக் கூடாதாம்.அவர்கள் திரும்ப பேசினால் நானும் பேச வேண்டுமாம். நான் பேசாமல் இருப்பவர்களிடன் என் நண்பர்கள் நெருங்கி பழகினால் கூட எனக்கு கோபம் வராது.அவனிடம் பேசாதே..இவனிடம் பேசாதே.. இப்படி சொல்லும் நண்பனிடம் கோவப்பட்டால் நான் பிழைக்கத் தெரியாதவன் தான்.

கடைசி வருடம் புராஜக்ட் செய்யும் போது நாம் ஒன்றாக செய்கிறோம் என்று சொல்லி விட்டு கடைசி நேரத்தில் ஜகா வாங்கிய நண்பனிடம் கூட எனக்கு கோபம் வரவில்லை.காரணம் கல்லூரியில் போராட்டம் பண்ணியப் பிறகு என்னை தனியாக அழைத்து விட்டு விடு..அவர்களுடன் சேராதே.. பின்னாளில் உன்னை கழற்றி விடுவார்கள் என்று என்னை எச்சரித்த ஆசிரியையின் வார்த்தைகள் உண்மையானது தான் அதிக வருத்தத்தை தந்தது.

என்னிடம் ஒன்று சொல்லி விட்டு மற்றவர்களிடம் வேறு மாதிரி சொல்லும் நண்பர்களைப் பார்க்கும் சற்று ஆயாசமாக இருக்கிறது.

இதே நண்பர்களுடன் இன்றும் சிரித்து பேசுகிறேன்.காரணம் நான் கூட யாருக்காவது துரோகம் செய்து இருக்கலாம்.செய்ய நினைக்கலாம்.

நான் இன்று இப்படி குறை சொல்லும் நண்பர்கள் பதிவு எழுதினால் நான் அவர்களின் துரோகிகளின் பட்டியலில் முதலிடத்தில் வரலாம்.காரணம் இடியாப்பத்தின் இரு நுனிகளைப் பிடித்து கொண்டு நிற்கிறோம் இருவரும்.

வெள்ளை காகிதத்தில் இருக்கும்
கரும்புள்ளியைப் போல
தனித்து தெரிகிறது
அவன் செய்த ஒரேவொரு துரோகம்.
அதை மறக்க நினைத்தால்
இன்னும் விகாரமாக தெரிகிறது
அடித்து திருத்தி எழுதப்பட்ட
வினாத்தாள் போல.

வசீகரிக்கும் குரல்கள்

சில நேரங்களில்,சில மனிதர்களின் குரல் மட்டும் என்னை வசீகரிக்கும்.அப்படி ஈர்க்கும் அந்த சமயங்களில் நான் அவர்களின் இரசிகனாகவே மாறி இருக்கிறேன்.அப்படி வசீகரித்த சில குரல்கள் எந்த காலத்திலும் அடிமனதில் தங்கி விடுகிறது.என் பெரியப்பா ஒரு பிரபல வக்கீல்.அவர் வாதாடும் போது குரல் கம்பீரமாக ஒலிக்கும் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.எனக்கு அப்படி கேட்க ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அப்பாவுக்கும் ஒரு தனி குரல்.ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர்.ஒரு நாள் ஒரு பாடலை அவர் பாடி கேட்ட சமயம் என்னிடம் தான் ஒரு திறமையும் இல்லை என்று நினைத்து வருந்தினேன்(இப்பவும் அப்படித்தான்).எந்த விஷயம் பேசினாலும் அவர் கருத்துக்கு எதிர் கருத்து தான் நான் வைப்பேன்.அவர் குரலைக் கேட்பதற்காக இருக்கும் என்று நினைக்கிறேன்.நாங்கள் மடிப்பாக்கத்தில் இருக்கும் போது எங்கள் கடை அண்ணா சாலையில் இருந்தது.கல்லூரி சேர்ந்தப் பிறகு மணிக்கணக்காக (அ)வறுப்பது வழக்கம்.போன் எந்த நேரமும் பிஸியாக பசியாக இருக்கும்.அப்பா வரும் போது குரலைக் கேட்டு வைத்து விடுவேன்.எதிர்முனையில் இருந்து வைக்காதே என்று கெஞ்சினாலும் கேட்பதில்லை.சில சமயம் அப்பா குரல் கேட்டு வெளியே வந்து பார்த்தால் தம்பி நின்று கொண்டுயிருப்பான்.இல்லை போனை வைத்து விட்டு எங்காவது பம்மி விடுவேன்.வருவது யார் என்று பார்த்தால் பெரும்பாலான தம்பியாகத் தான் இருக்கும்.அப்படியொரு அவனுக்கு அப்பா மாதிரியே அச்சு அசல் குரல்.யாராவது உறவினர்கள் என்னிடம் நீ பேசும் போது உன் அப்பா குரல் மாதிரி இருக்கிறது என்றால் சிரித்து விடுவேன்.பாசத்தில் சொல்கிறார்கள் என்று நினைத்து கொள்வேன்.(இப்போழுது கூட தண்டோரா அண்ணன் நான் நையாண்டியில் ஜொலிப்பதாக சொல்கிறார்.அது அவருடைய பாசம்.நான் பதிவுலகத்தில் ஒரு முக்கியப்புள்ளி என்று கார்த்திக் சொல்கிறான் அது அவனுடைய பாசம்).

தம்பி அதிகமாக பேசவே மாட்டான்.ஒரு வார்த்தையில் முடித்து விடுவான்.தேவையான சமயம் பேசும் போது ஒரு எதிரில் இருப்பவருக்கு ஒரு அணுகுண்டு வெடித்தது போல் இருக்கும்.நானும் இதை கற்க முயற்சி செய்கிறேன்.அது போல இருக்க முடியவில்லை.இவன் வரும் போது அப்பா என்று நினைத்து அவள் மறுக்க மறுக்க போனை வைத்து விட்டு திரும்ப பேச முடியாமல்....................

சினிமாவில் என்று பார்த்தால் சின்ன வயதில் இருந்தே கமல்,ரஜினி படத்திற்கு மட்டும் அதிகமாக போவோம்.பாட்டி வீட்டிற்கு போக முடிவு செய்து பஸ் ஏறும் சமயம் போஸ்டரைப் பார்த்து விட்டு படம் பார்க்க அம்மாவிடம் அடம் பிடித்த நாட்கள் அதிகம்.ரஜினி ரசிகனாகவே வளர்ந்த நான் தேவர் மகன் படம் பார்த்தப் பிறகு கமல் மேல் ஒரு மரியாதையே உருவாகி இருந்தது.காரணம் அந்த குரல் தான்.ரஜினி படத்தையே ஒரு முறைக்கு மேல் பார்க்காத நான் தேவர் மகன் படத்திற்கு அடுத்த நாளும் போய் திட்டு வாங்கி இருக்கிறேன்.கமல் படத்தில் நான் தேவர் மகன் படத்தை ரீமேக் செய்யவே ஆசைப்படுவேன் என்று சேரன் சொன்னார்.(என்ன கொடுமை சேரன் இது..மனசாட்சி இல்லாமல் இப்படி பேசக் கூடாது..ரம்யா தான் கேட்டார் அதுக்காக இப்படியா..)

இன்று எனக்கு விக்ரமை மிகவும் பிடிக்கிறது.காரணம் குருதிப்புனல் படத்தில் ஒலித்த விக்ரமின் குரல்.கமலை விட கம்பீரமாக தெரிந்தது.பிரபுதேவா,அப்பாஸ் என்று பலருக்கு குரல் குடுத்து இருக்கிறார்.(காதலன்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்).குருதிபுனல் படத்தில் இரவல் குரல் குடுத்தப் பிறகு நிச்சயம் இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தி இருப்பார்.

பதிவர்களில் அவரை போட்டோவில் பார்த்து இருக்கிறேன்.குரல் இப்படிதான் இருக்கும் என்று நான் நினைத்து இருந்தது போல் இல்லை.அவ்வளவு கம்பீரமான குரல்.இன்னும் காதில் ஒலிக்கிறது அவருடைய குரல்.

என்னுடைய மேலதிகாரி கௌஷிக்.அவருக்கும் அது போல ஒரு வித்தியாசமான குரல்.என் மேல் எப்பவும் ஒரு வருத்தம் உண்டு.அவர் சொல்வதை நான் கேட்பதேயில்லை என்று.ஒரு பழமொழி உண்டு.ஜாக் ஆப் ஆல் மாஸ்டர் ஆப் நன்.அதுதான் அவர்.அது போல நானும் மாறக் கூடாது என்று சொல்லும் அவர் என் வாழ்க்கைப் புத்தகத்தின் சிறப்புரை.

கடைசியாக கௌதம் மேனன்.என்ன ஒரு குரல்.கம்பீரம்.ஒரு உதாரணம் போதும்.வாரணம் ஆயிரம் பாடல் கேஸட் ரீலிஸ் செய்த சமயம் அவர் தான் தொகுப்பாளர்."உறுதிமொழி படம் உங்களுக்காக நான் பார்த்து இருக்கிறேன்.முதல் பாடலை நீங்க தான் ரீலிஸ் செய்யனும்..வாங்க சிவக்குமார் சார்.." என்று முதல் பாடலை வெளியிடும் போது சிவகுமாரை அழைத்த விதத்தை இன்னும் மறக்கவில்லை.டேனியல் பாலாஜியின் குரல் வேட்டையாடு விளையாடு படத்தில் கமலை விட கம்பீரமாக இருக்கும்.காரணம் கௌதம் மேனன் என்று நினைக்கிறேன்.வாரணம் ஆயிரம் படம் தான் எனக்கு பிடிக்கவில்லை.மின்னலே தவிர எந்த படமும் என்னை ஈர்க்கவில்லை.

பெண்களில் எனக்கு பிடித்த குரல் நாலு வருடம் போனில் பேசி பேசியே என்னை கொன்று போட்ட அந்த குரல் தான்.அதை நினைக்கும் போதெல்லாம் வெள்ளிவிழா படத்தில் இருந்து "காதோடு தான் நான் பேசுவேன்.." என்ற பாடல் ஒலிக்கிறது.ஹஸ்கி வாய்ஸ் இன்று நினைத்தாலும் உடம்பே ஒரு கணம் சிலிர்க்கிறது.என்றும் என்னால் மறக்க முடியாத ஒரு குரல்.

Monday, October 12, 2009

சிங்கம்,புலி,விலைக்கு இடம்

காட்டிற்கு சிங்கம் ராஜா என்றாலும் புலி மீது தான் ஒரு ஈர்ப்பு இன்றும் வருகிறது.சிங்கத்தைக் காட்டின் ராஜா என்று சொல்கிறோம்.காரனம் அந்த கர்ஜனையின் ஒலி ஏற்படுத்தும் கிலி.முதலில் சிங்கம் தான் நமது தேசிய விலங்காக இருந்தது.ஆனால் பின்னர் புலியை தேசிய விலங்காக அறிவித்தார்கள்.சிறுத்தை வேட்டையாடும் விலங்கைக் கூட விடாமல் பிடுங்கி தின்னும் பழக்கம் சிங்கத்திடம் உண்டு.

தவிர்க்க முடியாத நேரத்தில் சிங்கமும்,புலியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் புலி தான் ஜெயிக்கும்.அரிதாக நடக்கும் இந்த மோதலில் சிங்கம் இறந்து போகவும் வாய்ப்புகள் அதிகம்.

மேலே சொன்ன இந்த உதாரணம் காட்டிற்கு மட்டும் பொருந்தாது.இலங்கையிலும் இதுதான் நடந்து முடிந்தது.ஆனால் சிங்கத்தின் பக்கம் தான் நின்று கொண்டு புலியைக் கொன்றோம்.

எதிரிகள் தந்திரமாக நடந்து போரில் தந்த தோல்வியைக் கூட நேர்மையாக ஏற்றுக் கொள்ளும் தைரியம் உண்டு.ஏழு நாடுகளின் உதவி மற்றும் முயற்சி தான் இந்த தோல்விக்கு உண்மையான காரணம் என்று சொன்னார்கள்.

என்னால் இதற்கு மேல் சொல்ல முடியவில்லை.மும்பையில் விசாரிக்கிறார்கள் இலங்கையில் நிலத்தில் முதலீடு செய்தால் இலாபம் கிடைக்குமா என்று.நிலத்தை வாங்க இனி போட்டி நடக்கும்.புலி என்று சொல்லியே கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கையை விட கம்மியாகவே இருக்கும் அவர்கள் வாழ்ந்து மடிந்த இடம்.

நமக்கு தேவை பணம் தான்.அது எந்த ரூபத்தில் வந்தால் என்ன அரூபத்தில் வந்தால் என்ன.இன்று அங்கு பார்வையிட சென்ற குழுவின் திடீர் பயணத்திற்கும் இது காரணமாக இருக்குமா.

நீங்கள் வாங்கும் நிலத்தில் விளையும் உணவில் கூட உப்பு வேண்டாம்.அவர்கள் விட்ட கண்ணீர் அதில் கரிக்கும்

கடல் பொங்காதா ? அந்த கண்ணீர் துளி தேசம் தண்ணீரில் மூழ்காதா ?

பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...

ஈரோடு கதிரின் கவிதையில் இருந்து ஒரு சில வரிகள்.

என்னால் இதற்கு மேல் எழுத முடியவில்லை.என் அருமை நண்பன் கார்த்திக் - வெண்ணிற இரவுகள் என்ற பெயரில் எழுதி வருகிறார்.அவர் எழுதிய புனைவுகள் உங்களுக்காக

வலி உள்ளவன் தான் படைப்பாளி என்று சொல்லும் மதுரை படைப்பாளியின் கதை உங்களுக்காக.

இன்னும் இந்த படைப்பாளி நிறைய எழுதட்டும்.வாழ்த்துகள் தோழா..

இந்த கதையில் வக்கிரம் இருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம்.அது வலி தான்.


சிங்கம் புலி


கடைசி தமிழன் உயிரோடு இருக்கிறான் ..!

Sunday, October 11, 2009

துவையல் - அரசியல் ஸ்பெஷல்

ஜ்வோவ்ராம்சுந்தர் மீதான தாக்குதலைப் படித்து விட்டு அதிர்ந்து போய் இருக்கிறேன்.அடுத்தவர்களை நன்றாக விமர்சித்து விட்டு தன் மீதான விமர்சனத்தைத் தாங்க முடியாதவர்கள் தான் அடிதடியில் இறங்குவார்கள் என்று இது நாள் வரை நினைத்திருந்தேன்.இன்று அது உறுதியாக இருக்கிறது. அப்படி தன் மீதான விமர்சனத்தைத் தாங்க முடியாதவர்கள் அடுத்தவர்களை விமர்சிப்பதை நிறுத்தி விடுங்கள்.யார் மீதும் யாரும் விமர்சனம் வைக்க மாட்டார்கள்.

விரைவில் அவர் உடல் நலம் பெற பிராத்திக்கிறேன்.

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்

சில பதிவுகள் நன்றாக இருந்தாலும் மகுடம் ஏற விடாமல் தடுக்க மைனஸ் ஓட்டுப் போடப்படுகிறது.ஓட்டுப் போடுவர்களின் பெயர்களைக் காட்டலாமே.எனக்கும் பார்க்க ஆசையாக இருக்கிறது..இதில் கூட அரசியல் செய்யும் பெயர்களையாவது தெரிந்து கொண்டு ஒரு பாராட்டு விழா நடத்த ஏதுவாக இருக்கும்.(இன்னைக்கு மைனஸ் ஓட்டு நிச்சயம்)

ஒபாமாவுக்கு ஆஸ்கர் இல்ல இல்ல அமைதிக்காக நோபல் பரிசு வழங்கி இருக்கிறார்கள்.இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை வாபஸ் பெறுவேன் என்று சொன்னதற்கே இந்த பரிசா.இதுக்கு அவருடைய பெரிய நொண்ணன் புஷ் அவர்களுக்கு இந்த விருதை வழங்கி இருக்கலாம்.என்ன கொடுமை கந்தசாமி இது..

இந்த ஒரு விஷயத்தை வலியுருத்தி நான் கந்தசாமி கோவிலில் சீட்டு கட்டப் போகிறேன்..

ஒபாமா முதல் நூறு நாட்கள் என்ற கேலிச்சித்திரம் அங்கு உள்ள பத்திரிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.ஒருவரும் போராட்டம் நடத்தவில்லை. கொடும்பாவி கொளுத்தவில்லை.பஸ்ஸை எரிக்கவில்லை.என்ன கொடுமை அமெரிக்கா இது..இப்படி ஒரு கலாச்சாரம் இல்லாத நாட்டில் நான் வர விரும்பவில்லை..

எனக்கு ஓட்டு போடுங்கள்,எனக்கு ஓட்டு போடுங்கள் என்று மகாராஷ்ட் ராவில் நடக்கும் தேர்தலுக்காக மத்தியை ஆளும் கூட்டணியும்,ஆளாதக் காரணத்தினால் அழும் கூட்டணியும் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஏதோ யாசிக்கிறார்கள்.நான் வாக்காளர் அடையாளச் சீட்டுக் கேட்டு விண்ணப்பித்த போது கொடுத்து விடுங்கள்,கொடுத்து விடுங்கள் என்று சொல்லாமல் எங்கே போய் தொலைந்தீர்கள்.எனக்கு வாக்காள அட்டை தருவதற்கு என்னுடைய ரேஷன் கார்டைக் கேட்டாலும் பரவாயில்லை.பக்கத்து வீட்டுகாரனின் ரேஷன் கார்டைக் கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது. என்ன கொடுமை பிரதீபா பாட்டில் மேடம் இது..நீங்கள் ஏதாவது செய்யணும்..எனக்கு அடையாள அட்டை கிடைக்க அங்கு எந்த கோவிலில் சீட்டுக் கட்ட வேண்டும்..தெரிந்தவர்கள் சொல்லலாம்..

ஞானி நீங்க ரொம்ப லேட்டாக உன்னைப் போல் ஒருவனை விமர்சித்து உள்ளீர்கள்.அதில் தமிழ் நாட்டிற்குப் பொருந்தக் கூடிய பஸ் எரிப்பு சம்பவம் , இன்னும் சில கலவரங்களைஸ் செய்தவர்களை தீவிரவாதிகளுக்கு பதில் சேர்த்து இருக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.அதெல்லாம் முடிந்தால் தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாமே.இங்கு லேசுபாசாக பிபாஷா பாசுவைப் பற்றி எழுதினாலே கோமணம் கிழிந்து விடுகிறது.என்ன கொடுமை ஞானி சார் இது..நீங்கள் எடுக்கும் படங்களில் இப்படி செய்வீர்களா சொல்லுங்கள் ப்ளீஸ்.

இந்த வார வம்பு..

ரஜினிகாந்தும்,கருத்து கந்தசாமி விவேக்கும்..

முதலில் ரஜினிகாந்த் - சார் நீங்க பேச மாட்டேன்,பேச மாட்டேன் என்று சொல்லியே பத்து நிமிடம் பேசியுள்ளீர்கள்.நிறையப் பிரச்சனைகள் இருக்கிறது நாட்டில் அதை விட்டு விட்டு முதல்வரை நடவடிக்கை எடுக்க இதற்கெல்லாமா அழைப்பது.சிவாஜி படத்தில் அங்கவை,சங்கவை என்று நடித்தப் போது கண்டனம் தெரிவிக்கவில்லையே..ஆபாஷமாக நடிகர் நடிகைகள் பேசியதற்கு ஒரு கண்டனமும் இல்லையே..ரொம்ப ஸாரி நீங்கள் இயக்குனர் எழுதித் தருவதைப் பேசுவதாக நினைவு..(ஞாபகம் வந்து விட்டது..குசேலன் படத்தில் சொன்னீர்கள்..)

மிஸ்டர் குவேக்..சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கு என்று பேசியது யார்..துள்ளல் படத்தில் ஆபாஷமாக நடித்தது யார்.உங்கள் படத்தில் பெண்களை எப்படி நடிக்க வைக்கிறீர்கள்.புவனேஷ்வரிக்கு ஒரு கண்டனம் கூட இல்லையே..(சரி தெரிவித்தால் இன்னும் நிறைய பேர்களுக்கு கோமணம் கிழிந்து இருக்கும்..)

ஆரம்பக்காலத்தில் என்னை பற்றி நன்றாக எழுதுங்கள் என்று எல்லா நடிகர்களும் சொல்வதாக நினைவு..இன்மேல் வளர்ந்தப் பிறகு அவர்கள் தயவு எதற்கு..அதை விட அவர்களின் அம்மா,அக்கா,மனைவி படத்தைத் தந்தால் மிஸ்டர் விவேக் வேறு மாதிரியாக ஆபாசமாக மாற்றி தருவார்.

அந்த நேரத்திலும் நிதானம் இழக்காமல் பேசிய நடிகர் தாமுவிற்குப் பூங்கொத்துகளுடன் என் கைகுலுக்கள்கலும்..

டிஸ்கி :

என்னுடைய ஐ.பி முகவரிக்கு ஆட்டோ,தண்ணீர் லாரி எதுவும் அனுப்ப வேண்டாம்.நான் இருப்பது இந்தியாவில்..ஆனால் இனிமேல் பதிவு அமெரிக்காவில் இருக்கும் நண்பன் மூலம் போடலாம் என்று இருக்கிறேன்.

Friday, October 9, 2009

கவுண்டமணி,செந்தில்,ஆங்கில டீச்சர் பார்பரா

கவுண்டமணி ஸ்போகன் இங்கிலீஸ் சென்டரில் ஆங்கிலம் கத்துத் தருகிறார்.இந்த வேலையையும் கெடுக்க செந்தில் அங்கு வந்து சேர்கிறார்.

கவுண்டமணி - "மும்பை மாநகரத்துல ராமசந்திரா யுனிவர்சிடில வேலை பார்த்த எனக்கு இன்னைக்கு கிரகம் சரியில்ல..உங்களுக்கு எல்லாம் பாடம் எடுக்க வேண்டிய நிலைமை.."

செந்தில் - (முணங்குகிறார்) "ஏன் நீங்க பத்தாவது பெயில் ஆனது நாஸருக்கு தெரிஞ்சு போச்சா ?"

கவுண்டமணி - "டேய் டிக்ஸ்னரி தலையா..நீ மைண்ட் வாய்ஸ்ல பேசினாலும் எனக்கு கேட்கும்..அங்க வந்தேன் உன் பல்ல எல்லாம் ஒண்ணு விடாம புடுங்கிப் போடுவேன்.."

செந்தில் - "சார்..பாடத்துக்கு போங்க..இப்படி பேசியே க்ளாஸ் எடுக்காம சமாளிக்காதீங்க..எங்க பாவம் எல்லாம் உங்கள சும்மா விடாது.."

கவுண்டமணி - "ஆமா..இவரு பத்தினி தெய்வம்..பாவம் சும்மா விடாம சொறிஞ்சு விடுமா..நேத்து எடுத்த பாடத்துல இருந்து ஏதாவது சொல்லுடா தயிர்சட்டி தலையா.."

செந்தில் - "ஐ கேன் வாக் இங்கிலீஸ்,லாப் இங்கிலீஸ்,டாக் இங்கிலீஸ்.."

கவுண்டமணி - "டேய் மண்டையா நிறுத்து.. லாப் இதுக்கு அர்த்தம் சொல்லு.."

செந்தில் - "இது கூட தெரியல..நீங்க எங்களுக்கு வாத்தியார்..வெளியே சொல்லாதீங்க..வேற வழியா சிரிப்பாங்க.. லாப்னா கொட்டாவி விடுறது.."

கவுண்டமணி - "அப்படியே ஒன்னு விட்டேன் உன் உடம்புல இருக்கிற கெட்ட ஆவி தனியா பிரிஞ்சி வந்துரும்..வேற வழியா சிரிச்சா அதுக்குப் பேர் வாயுத்தொல்லைடா சிலிண்டர் தலையா..அடிக்கடி உன் இடத்துல இருந்து சிரிப்பு சத்தம் கேட்குது..அது இது தானா.."

செந்தில் - "அந்த நிகழ்ச்சி பேரு அது இது எது..நான் கூட பார்ட்டிசிபேட் பண்ணியிருக்கேன்.."

கவுண்டமணி - "என்ன எதை விட்டுட்டேனா..அப்படியே ஒரு ஏத்து விட்டேன் தலை தனியா ஓடிப் போயிரும்.."

புதிதாக ஆங்கில டீச்சர் வருகிறார்.

கவுண்டமணி - "இவங்க ஆண்டிபட்டியில மீன் வித்துக்கிட்டு இருந்தாங்க..ஸாரி ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடில படிச்சவங்க..சரி ஒவ்வொருத்தரா அறிமுகம் பண்ணிக்கோங்க..டேய் பன்னி முதல்ல நீ ஆரம்பி.."

செந்தில் - "மிஸ்டர் மிஸ் வாட் இட் இஸ் யுவர் நேம்.."

கவுண்டமணி - "டேய் அண்டா வாயா..உன்ன அறிமுகப்படுத்த சொன்னா நீ என்னடான்னா கேள்வி கேக்குற..அதுவும் எப்படி மிஸ்டர்..மிஸ்..தப்பு தப்பா இங்கிலீஸ்.." போய் நாலு அப்பு அப்புகிறார்.

செந்தில் - "சார் நான்சென்ஸ் மாதிரி பேசாதீங்க.."

கவுண்டமணி - "யாரு நான் நான்சென்ஸ்..உன் இங்கிலீஸ் எப்படி இருக்கும் சொல்றேன் அதுக்கு ஒரு சின்ன ப்ளாஷ்பேக்.."

செந்தில் உடனே கீழே பார்க்கிறார்.

கவுண்டமணி - "ப்ளாஷ்பேக்ன்ன மேல பாக்கனும்டா கபோர்ட் வாயா..பேக்ல இருக்கிறப் பிளாஸ்க பாக்காதே..ஆறு மாசம் முன்னாடி உன்னை மிஸ்டர்ன்னு சொன்னவனைக் அர்த்தம் தெரியாம கடிச்சு வைச்சுட்ட..இன்னும் அவன் கோமாவுல சாக கிடக்குறான்..கொஞ்சம் உஷாரா இருங்க இல்ல ப்ளாஸ்க இந்த நாய் கவ்விக்கிட்டுப் போயிரும்.."

ஆங்கில டீச்சர் - "எம் பேரு பார்பரா.."

செந்தில் - "அப்ப உங்க அப்பா ஹார்பரா.."

கவுண்டமணி - "சும்மா இருடா டோமரு.."

ஆங்கில டீச்சர் - "உங்க கூட பேசி எனக்கு தலை வலிக்குது..சீக்கிரம் உங்க பேர சொல்லுங்க.."

செந்தில் - "ஐம் மெடிசன்.."

கவுண்டமணி - "அவங்களுக்கு தலைவலினா உன் செல்லப் பேரு எடிசனை மெடிசன்னு மாத்தி சொல்லாதடா அயர்ன் பாக்ஸ் மண்டையா..அவரு எவ்ளோ பெரிய ஆளு என்ன எல்லாம் கண்டுப் பிடிச்சி இருக்காரு..நல்லவேளை இந்த அசிங்கம் நடக்கும் தெரிஞ்சு தான் அவர் முன்னாலே போய் சேர்ந்துட்டார்.."

ஆங்கில டீச்சர் - "என்ன மெடிசனா.."

கவுண்டமணி - "ஆமா அவன் மருந்து தான் ஆனா காலாவதி ஆன மருந்து..(செந்திலிடம்)உன்ன பார்த்த உடனே மயங்க இவரு நாட்டாமை தம்பி பாரு.."

ஆங்கில டீச்சர் - "நாட்டாமை தம்பி..யூ மீன் பசுபதி.."

கவுண்டமணி - "இவன் நாட்டாமை இல்ல காட்டாமை..அவனை அடிக்கத் துரத்தினா தலைய அந்த முண்டா பனியனுக்குள்ள போயிரும்..கால் அந்த கொட்டாப்பட்டிகுள்ள போயிரும்..உருண்டு உருண்டு தப்பிச்சுருவான்.."

செந்தில் இந்த குற்றசாற்றுகளைக் கேட்டு கதறிக் கதறி அழுகிறார்.

பார்பரா - "டோன்ட் வொரி..ஐ வில் டீச் யூ.."

கவுண்டமணி - "அய்யோ அவனுக்குத் தமிழே சரியா வராது..டேய் கோண வாயா..புஷ்பம் சொல்லு.."

செந்தில் - "புஇபம்.."

கவுண்டமணி - "இந்த வருஷம் தீபாவளிக்கு டென் தவுசண்ட் வாலா கொளுத்தி உன் வாயிலப் போடுறேன்..அப்பத்தான் வாய் லேசா சேதாரம் ஆகி நீ ஒழுங்கா உச்சரிப்ப.."

பார்பரா - "சும்மா சும்மா திட்டாதீங்க.."

கவுண்டமணி - "சரி இன்னொரு டெஸ்ட்..மேடம் சொல்லு.."

செந்தில் - "மேம்.."

கவுண்டமணி - "பாருங்க ஒரு எழுத்த விட்டுட்டான்..உன் நாக்குல வசம்பத் தான் தடவனும்.."

பார்பரா - "இதுல இருந்தே தெரியுது நீங்க பத்தாவது பெயில்னு..இந்த லட்சணத்துல நீங்க பாடம் எடுத்தா எப்படி இருக்கும்.."

செந்தில் - "கோண வாயன் கொட்டாவி விட்ட மாதிரி இருக்கும்.." சொல்லி விட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

கவுண்டமணி - "தோசக்கல் தலையா..கோண வாயன் கொட்டாவி விட்டு பார்த்து இருக்கியா..எவனாவது சொன்னா அத உடனே பிடிச்சிகிறது..நான் கோண வாயன் கொட்டாவி விட்டு பார்த்ததே இல்ல..இங்க வா உன் வாய் ஷேப்ப கொஞ்சம் மாத்துறேன்.."

செந்தில் - "பழமொழி சொன்னா அனுபவக்கனும்..ஆராயக் கூடாது.."

கவுண்டமணி - "இப்போ உன்ன பிரிச்சு ஆராயப் போறேன்..அப்புறம் நீ அனுபவி.."

மணி அடிக்கும் கம்பியை எடுத்து கொண்டு செந்திலைத் துரத்துகிறார்.குறி பார்த்து வீசும் போது செந்தில் குனிந்து விட கோச்சிங் செண்டர் ஓனர் மீது விழுந்து விடுகிறது.கவுண்டமணிக்கு வேலை போய் விடுகிறது.

பார்பரா - "எடிசன்..உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே..ஐ வில் மேரி யூ.."

கவுண்டமணி - "யாரு இந்த மொள்ளமாரியையா..நீ மேரி..சரிதான் முதல்ல அடிப்பட்டவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்திட்டுப் போங்க.."

செந்தில் - (பாடுகிறார்) "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..நடுவில மானே,தேனே அப்படி ஏதாவது நீயே போட்டுக்கோ.."

கவுண்டமணி - "அந்தப் பாட்ட நீ பாடாத..பன்னிங்க காதலைப் பன்னி மேய்கிறவனால மட்டும் தான் உணர முடியும்.."

செந்தில் - "அப்ப உங்களுக்கு கட்டாயம் புரியும்.."

கவுண்டமணி - "ஒருநாள் இல்ல ஒரு நாள் உனக்கு என் கையால தாண்டா சாவு..நீ நல்லாவே இருக்க மாட்ட.."

மறுநாள் பார்பராவைத் திருமணம் செய்து கவுண்டமணியிடம் ஆசீர்வாதம் வாங்க வருகிறார்.

கவுண்டமணி - "டேய் புண்ணாக்கு அது பார்பரா இல்ல..எனக்கு பணம் தர வேண்டிய வடக்குபட்டி ராமசாமி பேத்தி பாப்பம்மா.. நாந்தான் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணி வைச்சேன்.."

செந்தில் - "குடுத்தக் கடனை வசூல் பண்ணத் தெரியல..ஒரு இடத்துலையும் வேலையில நிலைக்கிறது கிடையாது..உங்களுக்கு எல்லாம் எப்போ தான் கல்யாணம் ஆகுமோ..அதுக்குள்ள கருமாதி வந்துரும் போல இருக்கே.."

கவுண்டமணி - "உனக்கு கருமாதி பண்ணிட்டு தான் எனக்கு மறுவேலை.."

கவுண்டமணி துரத்த செந்தில் மரத்தில் ஏறி கொள்கிறார்.

கவுண்டமணி - "இனி நீ அங்கேயே தான் இருக்கனும்..முதல் ராத்திரியும் கிடையாது..முதல் பகலும் கிடையாது..இந்த பன்னிக்கு முதல்ல மரபணு சோதனை செஞ்சா நமக்கு ஒரு நோபெல் பரிசு கிடக்கும்..பன்னியால மரத்துல ஏற முடியுமா.."

செந்தில் - "யோவ் வாத்தி ஒண்ணும் பண்ண முடியாது.."

கவுண்டமணி - "டேய் பன்னி உன் உடம்பு இளைச்சா தானா வருவ..அப்போ இருக்குடி உனக்கு.."

***************

ரெண்டு வருடம் கழித்தும் கவுண்டமணி செந்திலைப் பிடிப்பதற்கு அதே இடத்தில் இருக்கிறார்.உடம்பு இளைத்து பதினாறு வயதினிலே கால கவுண்டமணி போல இருக்கிறார்.செந்தில் முன்னை விட நன்றாகத் திரண்டுக் கொழுத்து இருக்கிறார்.

"யோவ் வாத்தி ஒண்ணும் பண்ண முடியாது.." - குரல் வேறு மாதிரி இருக்கிறது.

திரும்பி பார்த்தால் செந்திலின் ரெண்டு வயது மகன் இதை சொல்லி விட்டு கவுண்டமணியைப் பார்த்து கை கொட்டி சிரிக்கிறான்.

கவுண்டமணி - "எப்போ கீழே வந்தான்..அந்த குழந்தை எப்படி வந்தது..இந்த பதிவு எழுதியவனை முதல்ல வெளுக்கனும்.. எப்படியாவது அவனை காப்பாத்தி எல்லா தடவையும் எனக்கே ஆப்பு வைக்கிறான்.."

***************