Monday, March 8, 2010

துவையல் - அவார்ட் ஸ்பெஷல்

டிவிட்டர்,பேஸ்புக் இப்படி சில இடத்தில் இரும்புத்திரைக்கு சுட்டி கொடுத்து பெருமை அடைய செய்தாலும் அதில் உள்குத்து இருப்பது போலவே தெரிகிறது.காரணம் பேஸ்புக் என்ன சுட்டி கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம் என்று இருக்கிறது.அதில் விஜய்க்கு இங்கே வைத்த வெடிகள் எல்லாம் இன்னொரு முறை பற்ற வைத்திருக்கிறார்கள்.அதனால் ஆட்டோ அனுப்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று மட்டும் புரிகிறது.அவர்களுக்கு தேரை இழுத்து தெருவில் விட்டிங் அவார்ட்.

விண்ணைத் தாண்டி வருவாயா,குட்டி,கந்தக்கோட்டை,வேலு பிரபாகரனின் காதல் கதை இந்த படத்தை பார்த்து நொந்து நூலான எனக்கும்,என் பதிவுகளில் வரும் கதை எல்லாம் உங்கள் உண்மை கதையா என்று கேட்டு பீதியைக் கிளப்பும் அன்பு நெஞ்சங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் அவார்ட் - ஐயோ பாவம் அவார்ட்.விளக்கம் கொடுத்து விடுகிறேன்.அந்த கதைகளில் வரும் நபர்களும்,சம்பவங்களும் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட அக்மார்க் புனைவுகள் தான்.இதை சொல்வதற்கு காரணம் ஆசிரமம் ஆரம்பிக்க இருப்பதால் மிஸ்டர் க்ளீனாக பிரகடனப்படுத்தி கொள்கிறேன்.

ஆசிரமம் என்றவுடன் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் தெரிவிப்பது போல் இந்த நபர்களை சிஷ்யர்களாக சேர்த்து கொள்ளுங்கள் என்று ஒரே வேண்டுகோளாகவே வருகிறது.சாமி நீங்க சன் டிவியில் படம் பார்க்க நான் தான் கிடைத்தேனா.இந்த மாதிரி ஆட்களுக்கு அக்கப்போர் அவார்ட் தர வேண்டுமா என்று பரிசீலனை செய்து கொண்டியிருக்கிறோம்.

அடுத்து கைப்புள்ள அவார்ட்.யாருக்கு கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.ஆனால் நீங்கள் நினைப்பது போல் அவர்களுக்கு இல்லை.பொது மக்களுக்கு தான் அது போகிறது.எவனையாவது தூக்கி வைத்து கொண்டு ஆடுவது அப்புறம் தூக்கிப் போட்டு மிதிப்பது.தூக்கில் போட வேண்டும்,தூக்குச்சட்டியில் போட வேண்டும் என்று ஏதாவது சொல்வது.அந்த ஆளுங்களுக்கு நரம்பையெல்லாம் வேண்டும் என்று சொன்னால் முதல்ல அந்த மாதிரி இடத்துக்கு போறவன் கால் நரம்பை அறுக்கணும்.அப்போ தான் எவனும் போக மாட்டான்.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்துக்கு கூட இந்த விளம்பரம் கிடையாது என்று நினைக்கிறேன்.ஆனால் இந்த வீடியோவுக்கு குடுத்த முக்கியத்துவம் அளவேயில்லை.விஜய் டிவியின் டி.ஆர்.பி அடி வாங்கியிருக்கும்.அதனால் சன் டிவிக்கு அளவுக்கு மீறினால் அவார்ட்.இந்த மாதிரி செய்வது எதிரிகள் இல்லாமல் காற்றில் வாள் சுழற்றுவது போலாகும்.என்றாவது நமக்கே திரும்ப வரலாம்.

கௌதம் மேனன் ஆங்கில படங்கள் தான் சுடுவார் என்று நினைத்து கொண்டிருந்தேன்.அப்படியில்லை தமிழ் படத்தையும் சுடுவார் என்று வாரணம் ஆயிரம்(தவமாய் தவமிருந்து) படத்திற்குப் பிறகு நிரூபித்துயுள்ளார்.வி.தா.வ படத்தில் அவர் ஜீவா நடித்த முதல் படம் ஆசை ஆசையாய்(அக்கா காதலித்து ஓடிப்போனதால் சத்தியம் வாங்கிய அப்பா),வல்லவன் (வயது பிரச்சனை),மின்னலே (மெக்கானிக்கல்,கிருஷ்துவப் பெண்,நிறுத்தப்பட்ட கல்யாணம்),ஒரே மாதிரி பாடல்கள்(வே.வி,வா.ஆ),ஹீரோயின் பேசும் காதல் வசனங்கள்,சேலை கட்டும் பாங்கு(கா.கா,ப.மு) என்று கலந்து கட்டி உருவியிருக்கிறார்.இன்னும் இருக்கு.என்னால் தான் சொல்ல முடியல.இந்த லட்சணத்தில் இவர் சசிக்குமாரையும், அமீரையும், லிங்குசாமியையும், விஜயையும் குறை சொல்கிறார்.அவருக்கு குடுக்கப்படும் அவார்ட் - பழைய சொம்பு.(அதுவும் நசுங்கி போனது).இதுல வேற இந்த படம் பிடிக்காதவர்கள் யூத் இல்லையாம்.அதை எடுத்த கௌதம் மேனனே ஒரு பழைய டெலிபோன் பூத் என்று ஞாபகப்படுத்துகிறேன்.

4 comments:

நீ தொடு வானம் said...

வட போச்சே அவார்ட் இல்லையாa

பெசொவி said...

//அந்த மாதிரி இடத்துக்கு போறவன் கால் நரம்பை அறுக்கணும்.அப்போ தான் எவனும் போக மாட்டான்.//

"நச்!"

karthi said...

hello boss..

A New visitor to ur blog.
a differnet review on VTV .
i also hate this VTV and this GVM.
Please see my review on varanam ayiiram ..

http://skpnathan.blogspot.com/2008/11/thought-process.html

லோகு said...

வி.தா.வ விஷயத்துல இன்னும் நிறைய படத்த விட்டுட்டீங்க..

ஹீரோ டைரக்டர் (கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்), கேரள ஹீரோயின் (M.குமரன்), ஹீரோ சண்டை போடராரு (நிறைய தமிழ் படங்கள்), ஹீரோவும், ஹீரோயினும் லவ் பண்றாங்க (நிறைய தமிழ் படங்கள்), படம் தொடங்கறதுக்கு முன்னாடி சென்சார் சர்டிபிகேட் காட்டறாங்க (கிட்டத்தட்ட எல்லா தமிழ்படமும்)..

என்னங்க தலைவா இது.. :(