Wednesday, September 30, 2009

துவையல் - உள்குத்து ஸ்பெஷல்

கமலுடன் விவாதம் ஒரே நேரத்தில் விஜய் தொலைக்காட்சியிலும்,கலைஞர் தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பானது.விஜய் தொலைக்காட்சியில் கமலுடன் மக்கள் விவாதம் செய்தார்கள்.கலைஞர் தொலைக்காட்சியில் அமீர்,சேரன்,மிஸ்கின், லிங்குசாமி விவாதம் செய்தார்கள்.

அமீர் இந்துத்துவா சந்தேகத்தைக் கேட்டார்.கமல் சொன்ன பதில் எனக்கு பிடித்தது.அங்கெ நஸ்ருதீன் ஷா செய்ததால் இந்த கேள்வி வரவில்லை என்று சொன்னார்.எனக்கு ஐந்தில் பதில் மிகவும் பிடித்திருந்தது.காரணம் வெளிப்படையான பேச்சு.

ஜால்ரா சத்தம் அதிகமாக கேட்டதால் விவாதம் சுவாரஸ்யம் இல்லாமல் போனது.சேரன் சத்தம் அதிகமாக கேட்டது.அமீர் கொஞ்சம் தான் பேசினார்.மிஸ்கின் வழக்கம் போல அறிவுஜீவி தனத்தைக் காட்டினார்.(எ வெட்நெஸ்டேவும், இதுவும் வேறு வேறு படமாம்).முடியல ஏன் எப்படி..லிங்குசாமி லாஜிக் பற்றி பேசினார்.(முதல் படத்தைத் தவிர எந்த படத்திலும் லாஜிக் இல்லை.அது வேற விஷயம்)

அந்த நால்வருக்கு பதில் இந்த நால்வரை நான் சிபாரிசு செய்கிறேன்.சாரு,ஞானி என்ற எழுத்தாளர்களும்,பதிவர்கள் சுகுணா திவாகர் மற்றும் தண்டோரா.பார்வையாளர்களாக உன்னை போல் ஒருவனுக்கு விமர்சனம் எழுதிய எல்லா பதிவர்களும் உண்டு. இது விஜய் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் சங்கமம்.

*************************

நான்,நையாண்டி நைனா,ராஜு பேசிக் கொன்றிந்தப் போது காமன் மேன் பற்றிப் பேச்சு வந்தது.
நான் சொன்னேன் - "காமன் டாய்லெட்ட யூஸ் பண்றவன் காமன்மேனா"

ராஜூ - "காம வயப்படுறவன் காமன்மேனா"

நையாண்டி நைனா - "இனிமேல் நான் சும்மா இருந்தா நல்லா இருக்காது..கமா போட்டு எழுதுறவன் காமன்மேனா"

பிறகு நண்பருடன் பேசிக் கொண்டியிருந்தேன்.அவர் சொன்னது.

"நியாமான விஷயத்திற்கு கோபம் வந்தால் அவன் காமன்மேன்.அதோடு நான் நிறுத்தி இருக்கலாம்.வாய் சும்மா இருக்காதே.

"எதற்கெடுத்தாலும் கோபம் வந்தால் அவன்.."

நண்பர் - "காமடி பீஸு.."

போனவாரம் ஒரு மணிநேர அட்வைஸ் - "அதிகம் கோவப்படாதே..என்ன கொடுமை சார் இது.."

*************************

ஒரே விதமான கருத்து.ஒரு கருத்தை சொன்னால் எனக்கு கோவம் வருகிறது. இன்னொரு கதையைப் படித்தால் அமைதியாக இருக்கிறேன்.

நீதி ஒன்று தான் : உன் கையை மீறி காரியம் நடக்கும் போது அமைதியாக இரு..

ஆங்கிலப் பழமொழி : சொன்னவர் நிச்சயம் ஒரு பிரபலம் தான்.(ஆனால் முட்டாள் என்னைப் பொறுத்தவரை)

கற்பழிக்கப்படும் பெண்ணுக்கு இந்த பழமொழி - "உன்னை கெடுப்பவனை விடாமல் தாக்கு..(பற்களால் கடி,நகத்தால் கீறு),முடியவில்லை என்றால் அவனுடன் சேர்ந்து அனுபவி.

மேலை நாட்டில் சொல்லும் பழமொழி எல்லாம் நமக்கு ஒத்து வராது.இது செல்வேந்திரன் மேற்கோள் காட்டி சொன்ன 100:1 கதை போல இருந்தது.

அந்த அறிஞன் அவன் மனைவிக்கும் சேர்த்து இதை சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன்.

இப்படி எனக்கு சரியாக தெரியும் கருத்து பிறருக்குத் தவறாகவே தெரிகிறது.மேலை நாடுகளில் சொல்லும் பழமொழிகள் நமக்கு ஒத்துக் கொள்வதில்லை.

நமக்கு ஒத்து வரும் ஜென் கதை..

கழுகு தன (மைனர்)குஞ்சுக்கு இரைத் தேட சொல்லித் தருகிறது.சிறிது பயிற்சி அளித்தப் பிறகு குஞ்சு தனியாக இரைப் பிடிக்க செல்கிறது.முதலில் வாத்துக் குஞ்சைப் பிடித்து வருகிறது.

கழுகு - இதைப் பிடிக்கும் போது என்ன நடந்தது..

குஞ்சு - வாத்து கடுமையாக சண்டைப் போட்டது.ஆனால் காரியம் கையை மீறிப் போனப் போது திட்டாமல் வேலையைப் பார்த்தது.

கழுகு - சரி இதைப் பிடித்த இடத்தில் விட்டு விட்டு வேறு இரைப் பிடித்து வா.

கழுகுக்குஞ்சு இந்த முறை கோழிக்குஞ்சைப் பிடித்து வருகிறது.

கழுகு - இதைப் பிடிக்கும் போது என்ன நடந்தது..

குஞ்சு - காரியம் கையை மீறிப் போனப் பிறகும் அந்த கோழி எனக்கு சாபம் கொடுத்தது..

கழுகு - இதை நீ சாப்பிடலாம்..

*************************

உன்னைப் போல் ஒருவனில் ஐ.ஐ.டி ட்ராப் அவுட்டாக நடித்த ஆனந்துக்கு வாழ்த்துகள்.லயலோ கல்லூரியில் எனக்கு சீனியர்.உன்னைப் போல் ஒருவனின் ஒலிப்பதிவு ஆனந்த் தான்.லண்டனில் சவுண்ட் எஞ்சினீரிங் படித்தவர்.அதைப் பற்றி பாடம் எடுத்தவர். கம்ப்யூட்டர் ஹாக்கராக படத்தில் நடித்தார்.

வாழ்த்துகள் ஆனந்த்.

நான் என் வாழ்கையில் செய்த தவறு லயலோவில் இருந்து வெளியேறியது தான்.
எனக்கு அதிலும் பெருமை தான்.லயலோ ட்ராப் அவுட் எண்டு பெருமையாக சொல்லிக் கொள்வேன்.பாதியில் கல்லூரியில் இருந்து விலகுபவர்கள் ஐ.டி கார்டைக் கொடுத்து விட வேண்டும்.பணம் கட்ட வேண்டும். நான் என் கேடித்தனத்தால் இது எதுவுமே செய்யாமல் என் சான்றிதழ்களை வாங்கினேன்.

நானும் ஒரு லயலோ மாணவன்,ஒரு கேடி என்பதில் பெருமை அடைகிறேன்.

*************************

ஒரு அறிய கண்டுப்பிடிப்பு

பிராபலம் என்ற வார்த்தையின் காலை உடைத்தால் பிரபலம் என்று வருகிறது.

பிரபலம் என்ற வார்த்தையை விட பிராபலம் என்ற வார்த்தை மிகவும் பிடித்துள்ளது.காரணம் முதல் இரண்டு எழுத்து என்று சொல்ல நான் என்ன சாருவா ? கடைசி மூன்று எழுத்து பிடித்துள்ளது - "பலம்"
யாரையாவது பிரபலம் என்று சொல்லும் போது பிராபலம் என்றே விழுகிறது.

அசதியாக இருக்கும் நேரத்தில் காது சரியாக வேலை செய்யவில்லை.அந்த நேரத்தில் இப்படி ஒரு வார்த்தை கேட்டால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

பட்டர்ப்ளை ப்ளூ ப்ளேம் ரொம்ப நல்லா இருக்கும் வேறு மாதிரி விழுந்து தொலைகிறது.இதற்கு காரணம் வயதா இல்லை வேறு எதுவும் உண்டா..

*************************

Tuesday, September 29, 2009

வெள்ளச்சி - திருநெல்வேலி சம்பவம்

கிராமங்களில் பெயர் வைப்பதற்கு மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அப்படிதான் இவளுக்கும் பெயர் வைத்தார்கள்.அந்த குடும்பத்திலே மிகவும் வெள்ளையாகப் பிறந்ததால் இந்த பெயர்.நான் பழகியதில் ரொம்ப தைரியமான பெண் என்று தான் நான்கு வருடங்களுக்கு முன் வரை நினைத்து வந்தேன்.

பதினாலு வருடங்களுக்கு முன்..

ஊரில் சின்னப் பசங்களுக்குள் எந்த சண்டை(சண்டை மட்டுமே) நடந்தாலும் குற்றப்பத்திரிகையில் என் பெயர் முதலாவதாக இருக்கும்.சாட்சியங்களோடு அந்த இடத்தில் இல்லை என்று நிரூபித்தால் மட்டுமே அடுத்த பையன் மீது விசாரணை நகரும்.அப்படி ஊருக்குள் நல்லப் பெயர் எடுத்தவன்.அப்படி இருக்கும் என்னோடு விளையாட பசங்களே யோசிப்பார்கள்.இதில் கண்ணன் என்ற உறவினன் தான் எனக்கு எல்லாமே.அவனும் சேர்ந்தால் விளையாட்டுக்களம் ரணகளம் ஆகும்.
அப்போ ஊரில் பேமஸான விளையாட்டு கிரிக்கெட்டுக்கு முன்னோடி குச்சிக்கம்பு.(சென்னை மொழியில் கில்லிதாண்டா)

நாங்கள் இரண்டு பெரும் சேர்ந்து ஒரே அணியில் ஆடினால் பெரியப் பசங்களே அலறுவார்கள்.(அப்படியொரு சர்ப்ரைஸ் காம்போ).அப்புறம் பெண்கள் கேட்கவே வேண்டாம் நாங்கள் இறங்கினால் ஆட்டத்தில் இருந்து விலகுவார்கள்.அதிலும் ஒரு விதிவிலக்கு தான் வெள்ளச்சி எங்களுடன் மோத விரும்புவாள்.

அப்படி ஒருநாள் எங்களை விளையாட்டுக்கு யாரும் சேர்க்காதக் கோவத்தில் ஆட்டத்தைக் கலைத்து விட்டு சோகமாக நாங்கள் இருவரும் உக்கார்ந்து இருந்தோம்.

கோவத்தில் ஒருவன் - "டேய் இருங்கடா உங்க மாமா கிட்ட சொல்றேன்.."

கண்ணன் - "ஆமா நீ சொல்லி அஞ்சாறு ம....ச்சி"(அப்போ அந்த வார்த்தையைக் கூட கெட்ட வார்த்தையாக நினைத்தேன்..சென்னை வந்த ஒரே மாதத்தில் அதெல்லாம் ஒரு கெட்ட வார்த்தையே இல்லை என்று ஆகி விட்டது.ராகத்தோடு ரைமிங்காக பேசுவேன்)

மாமா என்றாலே எனக்கு பயம்.இந்த பசங்களுடன் சேர்ந்து விளையாடுவதைப் பார்த்தால் எனக்கு அடி விழும்.பயத்தில் நான்.

"கண்ணா..உன்ன விட்டுருவாரு எனக்கு அடி விழும்..ரொம்ப பயமாயிருக்கு.."

அந்த சமயம் வெள்ளச்சி வந்து சேர்ந்தாள்..

"என்ன நீங்க ரெண்டு பெரும் இங்க உக்கார்ந்து இருக்கீங்க.."

"விளையாட யாருமேயில்லை.." - இது நான்

"சரி நான் வர்றேன்..விளையாடுவோமா.."

"வெள்ளச்சி விளையாடுறதிலப் பிரச்சனை இல்ல..நீ மட்டும் தான் இருக்க..நாங்க இரண்டு பேர்.." - நான் அவளைத் துரத்துவதிலே குறியாக இருந்தேன்.

"இரண்டு ஆட்டமும் நானே ஆடுறேன்.."

"வேண்டாம் வெள்ளச்சி..இன்னொரு நாள் விளையாடலாம்.."

கண்ணன் காதில் கிசுகிசுத்தான் - "கோழியே வந்து என்னை சாப்பிடுன்னு கத்துது..நீ கெடுத்துருவப் போல.."

"சரி எவ்வளவு பாயிண்ட்.." - நான் வெள்ளச்சியிடம் கேட்டேன்.

"ஐந்நூறு.."

டாஸ் போடுவதற்குக் கண்ணன் கல்லைத் தேடிக் கொண்டியிருந்தான்.(அந்த கல் ஒரு பக்கம் வெள்ளையாக இருக்கும்..இன்னொரு பக்கம் வேறு நிறத்தில் இருக்கும்)

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க முதல்ல விளையாடுங்க.." என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து கொண்டேயிருந்தாள் வெள்ளச்சி

பொதுவாக பெண்கள் தான் முதலில் விளையாடுவார்கள்.அவர்கள் தோற்பது போல் இருந்தால் அசந்து இருக்கும் சமயம் வீட்டைப் பார்த்து ஓடி விடுவார்கள்.துரத்திப் பிடித்து தலையில் கொட்டி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம்.(அது ஒரு தனி வழக்காக உருவாக்கப்படும்)

குச்சிக்கம்பு நேர்த்தியாக விளையாடுபவர்கள் தோற்றவர்களை முடிவில் அலைக்கழிப்பார்கள்.அது பாவம் பார்த்து விட்டால் தான் உண்டு.ஆட்டம் அரைமணி நேரத்தில் முடிந்து விடும்.அலைக்கழிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும்.

அவளை நினைத்தால் பாவமாக இருந்தது.

கண்ணன் அவள் மேல் நம்பிக்கை இல்லாமல் அவள் புத்தகப்பையை வாங்கிக் கொண்டான்.

முதலில் நான் இறங்கினேன்.முதல் முறையாக டக் அவுட்.அதிர்ச்சி.கண்ணன் அடுத்து விளையாடினான்.பேரதிர்ச்சி.அவனும் டக் அவுட்.

அவளை ரொம்ப அலட்சியமாக எதிர்கொண்டது தான் காரணம்.(அக்தர் அறிமுகப் போட்டியில் டிராவிடையும்,சச்சினையும் அடுத்தடுத்த பந்தில் போல்டாக்கினார்.)இன்னொரு காரணம் அவளுக்கு எதிராக நாங்கள் விளையாடியது அதுதான் முதல் முறை.

கண்ணன் - "டேய் என்ன அவகிட்ட வம்பு இழுத்திருவோமா..ஆட்டையக் கலச்சுருவோம்.."
"இரு பாக்கலாம்" - அவளையும் டக் அவுட் செய்து விடலாம் என்று நினைத்தேன்.இந்தியாவுக்கு எதிராக மட்டும் நன்றாக விளையாடும் வீரர்களைப் போல அவள் வெளுத்துக் கொண்டியிருந்தாள்.

"இன்னைக்கு நம்ம மானம் போகப் போவது உறுதி.."

அடுத்தப் பத்து நிமிடத்தில் அவள் நானூறு எடுத்து இருந்தாள்.இன்னும் நூறு தான்.அப்போது தான் அவள் விளையாடும் முறையை கவனித்தேன்.கம்பைத் தரையில் தேய்த்துக் கொண்டேயிருந்தாள்.லகான் படத்தில் வரும் பவுலரைப் போலக் குச்சியைக் கொஞ்சம் உயரமாக வீசினேன்.அவள் கம்பை அடித்தப் பிறகு குச்சி கீழே விழுந்ததால் அவள் அவுட்.இரண்டாவது நபருக்கு அவள் விளையாடினாள்.இந்த முறையும் அதே பாணியில் அவுட் செய்தேன்.

கண்ணன் அவள் பையைப் பத்திரமாக எடுத்து வைத்து கொண்டான்.நான் இறங்கி ஐநூறு பாயிண்ட் எடுத்து விட்டேன்.

கண்ணன் பையை என்னிடம் கொடுத்து விட்டு அவளை அலைக்கழிக்க ஆரம்பித்தான்.அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வந்தது.இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படியும் அழுது விடுவாள் போல இருந்தது.(இதற்கும் ஒரு வழக்கு வருமே என்று பயம் வேறு..)

"கண்ணா அவள விடு வீட்டுக்குப் போகலாம்..இந்தா எடுத்துக்கோ.." என்று பையை அவளிடம் கொடுத்தேன்.

"நீ அலைக்கலையா.." என்றவளிடம் "ரொம்ப நல்லா விளையாடின..அதுக்கு நான் தரும் மரியாதை" என்று சொன்னேன்.

அடுத்த இரண்டு வருடத்தில் நான் சென்னைக்கு வந்து விட்டேன்.சில வருடங்கள் கழித்து ஊருக்கு போனப் போது தாவணி எல்லாம் அணிந்து ஆளே மாறியிருந்தாள்.

அவள் வீட்டிற்கு போனேன்.பணியாரம் கொடுத்தாள்.சாப்பிடத் தொடங்கியவுடன் "இது கூட சரியா சாப்பிடத் தெரியல.." என்று கறுப்பாக இருந்ததை எல்லாம் எடுத்து விட்டு சாப்பிடத் தந்தாள்.

இரண்டு வருடம் கழித்து அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று கேள்விப்பட்டேன்.காதல் தோல்வியாம்.அந்த பையன் இருக்கிறதிலே கேனை மாதிரி இருப்பான்.

அவள் இறந்தப் பிறகு ஒரு முறை ஊருக்குப் போனேன்.வீட்டை விட்டு வெளியே போகவில்லை.அவள் பேயாக அலைகிறாள் என்று வதந்தி வேறு.

மும்பை வந்த பிறகு ஒரு ஊர்காரனைப் பார்த்தேன்.அவள் சாவோடுப் போராடியக் கணங்களை விவரித்தான்.அன்று விளையாடிய ஆட்டம் ஞாபகத்திற்கு வந்தது.

அன்று எனக்கு இருந்த கருணை கூட அந்த முட்டாள் கடவுளுக்கு இல்லை.

பின்குறிப்பு :

கண்ணன் குடும்பத் தகராறில் எனக்கு எதிரியாக மாறி இருந்தான்.அவன் அப்பா ஒரு பேராசை பிடித்தவன்.அவன் யாருக்கோ வைத்த மின்சாரத்தில் கண்ணன் மாட்டிக் கொண்டு இறந்து விட்டான்.

சந்தேகம் :

ரொம்ப தைரியசாலி பெண்கள் எப்படி மிகச் சரியாக கொஞ்சம் கூடத் தப்பாமல் சாக்கடையில் விழுகிறார்கள்.நான் இன்று தைரியசாலி என்று நினைக்கும் ஒரு பெண் நயன்தாரா.சாக்கடை பிரபுதேவா இல்லை.

Monday, September 28, 2009

சென்னை பதிவர் சந்திப்பில் வடிவேலு

வடிவேலு உளவுபடையின் செய்திகளை எடுத்து சரி பார்க்கிறார்.மும்பையில் இருந்து (இரும்புத்)திரை மறைவில் அமர்ந்து ஒரு பதிவர் வடிவேலுவை நக்கல் செய்யத் திட்டம் போட்டுள்ளதாக ஒரு செய்தி இருக்கிறது.என்ன பதிவு மும்பையில் இருந்து வந்தாலும் எதிர்ப்பதிவு போடுவேன் என்று சபதம் எடுக்கிறார்.நானும் ஒரு ரவுடி தான் இல்ல இல்ல பதிவர் தான் என்று மாறுவேடம் போட்டுக் கொண்டு சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.

முதலில் சுண்டல் விற்பவராக வருகிறார்.மேக மூட்டமாக இருந்ததால் பதிவர்கள் கலைந்து பதுங்கி இருக்கிறார்கள். நரசிம் செல்போனில் மதுரை தமிழில்(சென்னை தமிழுக்கு மாறாமல் இருந்தாலே உலக அதிசயம்) பேசிக் கொண்டு இருக்கிறார்.வடிவேலுக்கு மதுரை பாசம் பீறிட்டு அடித்ததால் நர்சிம்மை நெருங்குகிறார்.

வடிவேல் - அண்ணா நீங்க மதுரையா ?

நர்சிம் - ?? (முதல் ?க்கு யார் என்றும் இரண்டாவதற்கு எதற்கு நான் மதுரை தான்.நீங்க என்று அர்த்தம்)

வடிவேல் - நான் ஒரு யூத்து..

நர்சிம் - பாக்க டெலிபோன் பூத்த மாதிரி இருந்துக்கிட்டு நக்கலப் பாரு..(பதிவர்கள் இருக்கும் பக்கம் திரும்பி) யூத்தாமா ?

வடிவேல் - ஹலோ என்ன போட்டுக் குடுக்கிறீங்களா ?.நீங்க மதுரை வேற சொல்லிடீங்க..இந்தாங்க ரெண்டு பொட்டலம்..(சுண்டல் பையனைப் பார்த்து) எங்க ஊரு குடுக்கட்டுமா..

சுண்டல் பையன் - ரெண்டுதானே குடுங்க..

நர்சிம் - இல்ல வேண்டாம்..நான் நண்பர்களோடு வந்து இருக்கேன்..எனக்கு வேண்டாம்..

வடிவேல் - உங்க நண்பர்களையும் கூப்பிடுங்க..நீங்க இப்போ சாப்பிடலைனா நாளைப் பின்ன உங்க வீட்டுக்கு வர மாட்டேன்..

நர்சிம் - சரி சாப்பிடலைனா விட மாட்டீங்க..(வி........சில் அடிக்கிறார்(கொஞ்சம் நீண்ட))

எல்லா பதிவர்களும் காந்தி சிலைக்குப் பின்னால் இருந்து ஓடி வந்து சுண்டலைக் காலி செய்கிறார்கள்.

சுண்டல் பையன் : ரெண்டு பொட்டலம் கொடுக்க சொன்னா கூடையோட சுண்டலத் தூக்கிக் கொடுத்திடியடா பாவி.. என்று வடிவேலுவை துரத்தி செல்கிறார்..

தப்பித்து அடுத்த மாறுவேடத்தில் வருகிறார் வடிவேல்.

சங்கி மங்கி கெட்டப்பில் வருகிறார் வடிவேல்.இந்த முறை நேராக கேபிள் சங்கரிடன் போகிறார்.தயாரிப்புத் தரப்பில் இருந்து கோவமாக இருப்பதால்(பின்ன என்ன ஆறுமுகம் படத்தை கேபிள் அண்ணன் விமர்சனம் செய்யாததால்,கேபிள் சங்கர் பார்க்கவில்லை என்று ஒருவரும் பார்க்கவில்லை) யார் வந்து பேசினாலும் பத்து முறை யோசித்தே பதில் தருகிறார்.

வடிவேலு - நீங்க ஒரு பிரபலம்..

கேபிள் - ஆமா நான் ஒரு பலாப்பழம் தான்.பார்க்க முள் இருக்கிற மாதிரி இருந்தாலும்,உள்ள இனிப்பேன்..

வடிவேலு - ஹலோ என்ன வைச்சு காமடி கீமடி பண்ணலையே..நான் என்ன கேக்குறேன் நீங்க என்ன சொல்றீங்க..

கேபிள் - ஹலோ உங்கள திரையில பார்த்த உடனே எனக்கு சிரிப்பு வருதுன்னு சொன்னா அது நல்லாவயிருக்கும்..இப்படி உசுப்பேத்தி விட்டு உடம்ப ரணகளம் ஆக்கி விட்டுறாதீங்க..

வடிவேலு - எப்படி கண்டுப்பிடிச்சீங்க..

கேபிள் - உங்க கொண்டைய வைச்சுதான்..

வடிவேலு - வேற ஏதாவது இருக்கா..

கேபிள் - நீங்க பதிவர் ஆனா ஒரு சிரிப்பு பதிவர்..

வடிவேலு - நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்..சிரிப்புப் பதிவரா ?
(போன் போடுகிறார்) ஹலோ செண்பகக்குமாரா? உங்க ஆறுமுகம் படத்துக்கு விமர்சனம் எழுதாம லந்து குடுக்கிறாரு..என்ன பண்ணலாம்னு யோசிங்க..

கேபிள் - (போனைப் போட்டு) ஹலோ விஜய்யா பேசுறது..உங்க எதிரி மங்கி சங்கி வந்து தொல்லை கொடுக்கிறாரு..அவர எப்படியாவது பிடிச்சிட்டுப் போங்க..வேட்டைகாரனுக்கு நல்லா விமர்சனம் எழுதுறேன்..மனதுக்குள்..(எல்லாம் என் நேரம்)

வடிவேலு - நான் அவர் அண்ணன் சங்கி மங்கி.. என்று சொல்லி விட்டு ஓடி விடுகிறார்..

வீட்டிற்கு வந்தவுடன் வடிவேலு - சினிமாவுல கூட அடிச்சிட்டு ரொம்ப நல்லவன்னு சொல்வாங்க..இங்க அது கூட சொல்லல..இவனுகளுக்கு விஜயகாந்தே பரவாயில்ல..ஒரு அறிவிக்கை ரெடி பண்ணு..நாமளும் சிரிப்பு ரவுடின்னு நிருபிப்போம்.

கேபிள் சங்கருக்கு ஒரு போன் வருகிறது.எடுத்து பேசினால் நையாண்டி நைனா..

கேபிள் - தம்பி நல்லா எழுதுற..ஆனா உன் எதிர்க்கவித ஒண்ணுமே புரியல..

நைனா - அண்ணா அது யூத்துக்கு தான் புரியும்..

கேபிள் - எனக்கு புரிஞ்சது..நான் சொன்னது மத்தவங்களுக்கு புரியலன்னு..

நைனா - அது யூத்து மாதிரி இருக்கிறவங்களுக்கும் புரியும்..

கேபிள் சங்கர் அண்ணன் மும்பை புறப்படுகிறார். குஜராத்துக்கும் போக முடிவு செய்கிறார்.

Saturday, September 26, 2009

காதல் சுவாரஸ்யங்கள்

காதலின் சுவாரஸ்யமான பரிமாணங்களைப் நான்கு கட்டங்களாகப் பார்க்கலாம்.காதல் கட்டங்களைக் கட்டம் கட்டி நகர்த்துவோம்.

1.முதல் கட்டம் (லவ் - LOVE)

L - LOOK

O - OBSERVE

V - VERIFY

E - ENJOY

இதில் எல்லாமே இருந்தது.பார்த்து,கவனித்து அநியாயத்துக்கு ஆராய்ந்து எல்லாம் முடிந்த பிறகு தான் கடைசி கட்டத்திற்கு வருவார்கள்.பேஸ்மென்ட் ரொம்ப ஸ்ட்ராங்.அக்கா பெண்ணையோ அல்லது ஏதாவது உறவு பெண்ணையோ(வேற வழி) காதலித்து கொண்டு திரிவார்கள்.பேசுவதற்குள் நாக்கு வறண்டு ஓட்டிக் கொள்ளும்.சக்சஸ் ரேட் ஜாஸ்தி(கல்யாணத்தில் முடிய).

இரண்டாவது கட்டம் (லோ -LOE )

பரவலாக நிறைய பேர் படிக்க ஆரம்பித்தவுடன் ஆராய்வது எல்லாம் நின்றுப் போனது.காதலுக்காக லோ லோ என்று அலைந்தார்கள்.ஜாதி மாறி,மதம் மாறி திருமணம் நடந்தது.பிடித்தப் பெண்ணைக் கவனித்து கட்டம் கட்டி கல்யாணம் செய்தார்கள்.சக்சஸ் எல்லாம் இருந்தது.ஆனால் என்ன ஒரு பிரச்சனை அதிர்ஷ்டமும் வேணும்.(அருவா,வேல் கம்பு இன்னும் இத்யாதி ஆயுதங்களில் இருந்து தப்பிக்க).தப்பித்தவர்கள் ஆதர்ஷமாக வாழ்ந்தார்கள்.

மூன்றாவது கட்டம் (லே - LE)

சிக்கல்களின் தொடக்கமே இந்த மாதிரி காதல்களில் தான் ஆரம்பிக்கிறது. கவனிப்பும் கிடையாது.ஆராய்வது கிடையாது.கண்டதும் காதல்.பண்ணும் போது நல்லாத்தான் இருக்கு.ஆனா கல்யாணம் அல்லது சேர்ந்து வாழும் போது தான் பிளஸ் எல்லாம் மைனசாக மாறுகிறது. இருவருடைய ஆக்கமும் தெரிய வந்து வீக்கமாக மாறுகிறது.

நாலாவது கட்டம் ( ஈ - E)

ரொம்ப வேகம்.டூ மினிட்ஸ் நூடில்ஸ் மாதிரி சீக்கிரம் தயாராகி விடும்.(கடைசி கட்டம்).ஈ மாதிரி பாக்கிற எல்லா எடத்துலயும் மனசு உக்காரும்.சாக்கடை அடைக்கும்.சரி செய்ய வந்தா காரணம் தெரியும்.சிக்கினவனுக்கு பிரச்சனை.சிக்காதவனுக்கு எண்ணிக்கை.

டிஸ்கி :

யாருக்கு எது வேணுமோ அந்த கட்டத்துல விளையாடுங்க

சினிமா தாக்கங்கள்

குமரனுக்கு வயது ஓட்டுப் போடும் வயது வந்து ஆறு மாதம் முடிந்திருந்தது.எல்லா தேர்வுக்கும் விடுதியில் அறை எடுப்பது வழக்கம்.வீட்டில் மூன்றாம் செமஸ்டர் தேர்வுக்காக அதே விடுதியில் அறை எடுத்துக் கொள்ள முடிவு செய்தார்கள்.முதல் மூன்று நாட்கள் ஒழுங்காகக் கடந்தது.சாப்பிடச் செல்லும் சமயம் இருவர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது."நூறு ரூபாய் தான்..அந்த பெருக்கிறப் பொண்ணு வந்துரும்..".கேட்டதில் இருந்து மனம் குரங்காய் ஆடியது.கிளை விட்டுத் தாவியது.

மறுநாள் அந்தப் பெண் அறைக்கு வந்ததும் கை அனிச்சையாய் சட்டைப் பையைத் தடவியது.நூறு ரூபாய் இருந்தது.இருந்தாலும் ஒரு பயம்.அவளைப் பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டான்(கஷ்டப்பட்டு).அடுத்து அவள் வரும் நாட்களில் எல்லை மீற வாய்ப்பு இருந்ததால் அவள் வரும் நேரத்தில் தூங்குவான்..குளிப்பான்..சாப்பிடப் போவான்..பெருக்காமல் அறை முழுவதும் குப்பை..
அப்பா வந்தார்.அறை முழுக்க தூசி.."என்ன அவ வர்றதே இல்லையா.." என்று கோபத்தில் கத்தினார்.

"ம்..ம்..இல்ல.." "அவ வந்தா மனசு முழுக்க தூசி..அழுக்கு.." என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

அவள் வந்து போனப் பிறகு குரங்கு மனம் மரம் ஏறியது குமரனுக்கு.சொல்லாமல் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தான்..

வீட்டில் "என்னடா இந்தியா விளையாடினா இருப்பு கொள்ளாதே..வந்துருவியே..என்னமோ பண்ணித் தொலை.." என்று திட்டு.

பொழுது போகாமல் சேனல் மாற்றி தெலுங்கு படம் பார்த்தால் வேலைக்காரியிடம் வம்பு பண்ணி துடைப்பத்தால் ஒரு சிறுவன் அடி வாங்கி கொண்டு இருந்தான்.

"அடிக்குத் திட்டு பரவாயில்ல.." என்று நினைத்து கொண்டவன் தூங்கிப் போனான்.கனவில் துடைப்பம்..அழுக்கு..தூசி..

மறுவருடம் திருப்பதி போய் விட்டு வரும் வழியில் ஒரு பெண்.தெலுங்கு மொழி பேசிக் கொண்டு இருந்தாள்.குமரனைப் பார்த்து சைகை செய்தாள்.நிச்சயம் நமக்கு இல்லை இந்த கையாட்டல் என்று நினைத்துக் கொண்டான் குமரன்.திரும்பவும் கையாட்ட மனசு கொஞ்சம் சலனப்பட்டது
குமரனுக்கு..சேலை விலகி லேசான நியான் வெளிச்சத்தில் சலனப்படுத்தியது.உறங்க நினைத்தாலும் மனம் வரவில்லை.

"இக்கட ரா தொகுனேன கொடுக்கு.." என்று அழைத்தாள் ஒரு நிறுத்தத்தில்.

போக நினைத்தாலும் பயம் காரணமாக அவளைப் பார்க்காமல் படுத்துக் கொண்டான் குமரன்.நல்ல தூக்கம்.கனவில் அவளா..சரியாகத் தெரியவில்லை..தமிழக எல்லையில் முழிப்பு வந்து அவளைத் தேடினால் அவள் இறங்கியிருந்தாள்.

கிடைத்தச் சந்தர்ப்பத்தை விட்டு விட்டோமே என்று விதியை நொந்துக் கொண்டு தூக்கம் வராமல் தவித்தான்.வீட்டிற்கு வரும் போது மணி 12.

வந்ததும் திரும்ப ஒரு படம்..கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள்..கமலை வழிய வைத்து வலிய வரவழைத்து அடி வாங்கி தந்தாள் ஒரு பெண்..பூஜையறை படத்தில் தெரிந்த பாலாஜிக்கு நன்றி சொல்லிக் கொண்டான்.(விளையாடுவதே அவன் தான் என்று புரியாமல்)

வேலைக்கு சேர்ந்தப் பிறகு தண்ணியடிக்க போகலாம் என்று ஒரு இடத்திற்கு முதல் தடவையாக நண்பர்களுடன் போனான். அது வேறு மாதிரியான இடம்.சுற்றிலும் பெண்கள்.யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை. ஒரு பெண் ரொம்ப பிடித்திருந்தது.பாலாஜி என்று பெயர் காட்டி அலைபேசி அழைத்தது..எதோ புரிந்தது போல் இருந்தது..இதையே காட்டி வெளியே வந்தான்.அடுத்த ஐந்து நிமிடத்தில் பரபரப்பு."அந்த" பெண்கள் சந்தில் நுழைந்து சடுதியில் மறைந்தார்கள்.நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள்.

ஒரு நண்பன் கோவமாக கத்தினான்.."நீ இருந்திருந்தா இப்படி எல்லாம் நடக்குமா.."

குமரன் அமைதியாக சொன்னான். "நான் இருந்தால் நான் மட்டும் மாட்டி இருப்பேன்.."

இன்னொரு நண்பன் "அப்போ நாங்க மாட்டுனா பரவாயில்லையா.."

குமரன் "நுங்கு தின்னவன் மாட்ட மாட்டான்.ஆனா நொண்டி தின்னவன்..இதெல்லாம் உனக்குப் புரியாது.." சொல்லி விட்டு தொலைக்காட்சியைப் போட்டால் "சித்திரம் பேசுதடி படம்.."

நரேனை அடித்து இழுத்து வந்தார்கள் ஜட்டியோடு.பாவனாவைக் காட்ட, கரண்ட் போனது.குமரனுக்குப் பிடித்தப் பெண்ணும் ஒரு மல்லு தான்..

****************

சில வருடங்கள் கழித்து..

தியேட்டரில் விஜய் படம்..

விஜய் பீர் பாட்டிலை எடுத்து வில்லனின் தலையில் உடைப்பதைப் பார்த்த விசிலடிச்சான் குஞ்சு ஒன்னு "இது மாதிரி தாண்டா நானும் எவன் தலையிலையாவது உடைக்கணும்.."

குமரன் மனதுக்குள் நினைத்து கொண்டான்."நெஜத்துல நீ அடித்தான் வாங்குவ..எல்லாம் சினிமாவோட தாக்கம் தான்.."

****************

டிஸ்கி : என்ன போடட்டும்..

****************

Friday, September 25, 2009

கவுண்டமணி,செந்தில்,உ.போ.ஓ

கவுண்டமணி ப்ளாக்கர் பிரவேஷம் தோல்வியில் முடிந்ததால் செந்திலை உள்ளே விடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கிறார்.

கவுண்டமணி காலையில் எழுந்து மொட்டை மாடியில் நின்று குளிக்கும் பக்கத்து வீட்டு பெண்ணை சைட் அடிக்கிறார்."ஆத்தாடி பாவாட காத்தாட.. குளிக்குது ரோசா நாத்து.." என்று பாடி சிக்னல் கொடுக்கிறார்.

ஒரு அல்லக்கை குறுக்கே வந்து "அண்ணே உங்களப் பாக்க ஒரு புரோடியுஸர் வந்து இருக்காரு.."

கவுண்டமணி - "சும்மா இருக்கும் போது ஒரு நாய் வராது..எப்பவாது தான் இப்படி சான்ஸ் கிடைக்கும்..அத கெடுக்கிறதுக்குனே வந்துருவாங்களே..போ வர்றேன்.."

கவுண்டமணி அந்த பெண்ணிடம் சொல்கிறார்.."ஹேஹேய் நாளைக்குப் பார்ப்போம்.."

அங்கு ஹாலில் முதுகு காட்டி அமர்ந்து இருப்பவரைப் பார்த்து கவுண்டமணி கை எடுத்துக் கும்பிட்டு கொண்டே சொல்கிறார்.."வணக்கம் முதலாளி.."

அவரை பார்க்க வேகமாக வரும் கவுண்டமணியின் காலில் ஒரு நாடா தட்டுப்படுகிறது.."இதை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கே.." என்று யோசிக்கும் போது அந்த ஆள் திரும்புகிறார்.அது செந்தில்.

கவுண்டமணி - "அட இவனப் பார்த்தா கை எடுத்து கும்பிட்டோம்..முதல்ல கைய கருக்கிறனும்,முதலாளின்னு கூப்பிட்ட வாயை அவிச்சறனும்..நீ எதுக்குடா இங்க வந்தே..எம் ப்ளாக்க நாசமாக்கின நாய் நீ..அதுவும் பொய் சொல்லிட்டு வந்து இருக்க..ஓடிப் போயிரு.."

செந்தில் - "அண்ணே எதுக்கு இப்போ இவ்ளோ கோவம்..ரொம்ப பிஸி போல.."

கவுண்டமணி - "படுவா நக்கல் பண்ணாத..வாயிலே அடிப்பேன்..ஆமா வேட்டைகாரன் படத்துல ஹீரோ நாந்தான்..ரொம்ப பிஸி..ரெண்டு பேரும் சும்மாதானே இருக்கோம்..அப்புறம் என்ன நக்கல்.."

கவுண்டமணியின் மனைவி வந்து "என்னங்க..அரிசி இல்ல வாங்கிட்டு வாங்க.."

செந்தில் - "நான் வேணா வாங்கிட்டு வரட்டுமா.."

கவுண்டமணி - "படத்துல நீ ஏமாத்தலாம்..இது நிஜம்..இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வைச்சுக்காத.."

செந்தில் - "உ.போ.ஒ படம் பாத்திங்களா..கமல் கேரக்டர் நீங்க பண்ணியிருந்தா நல்லாயிருந்திருக்கும் அண்ணே.."

கவுண்டமணி - "யாரு நானு..படம் எடுக்கிறவனுக்கு தெரியாதா..யார் நடிக்கனும் நடிக்க கூடாதுன்னு..இப்படி மோகன்லால் கேரக்டர்ல நீ நடின்னு நான் திரும்ப சொல்லனுமா.."

செந்தில் - "நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குப் புரியல.."

கவுண்டமணி - "நீ எதுக்கோ அடிப் போடுறது எனக்கு தெரியுது..வேணாம் மண்டையா..இது நல்லது இல்ல சொல்லிட்டேன்.."

செந்தில் - "இந்துத்துவா தூக்கலா இருக்காம் படத்துல..நீங்க உங்க பங்குக்கு ஏதாவது சொல்லுங்க.."

கவுண்டமணி - "நான் என்ன சொன்னாலும் நீ அதுக்கு ஆப்போஸிட் பார்ட்டிகிட்ட மாட்டி விட ப்ளான் பண்ணுவ.."

செந்தில் - "பார்ப்பனீசம் பத்தி ஏதாவது சொல்லுங்க அண்ணே.."

கவுண்டமணி - "டேய் மண்டையா..உனக்கு என்ன வேணும்..சொன்னாத் தான் விடுவியா..வேறும் வயித்தல நாலு டம்ளர் ரசம் குடி..உனக்கே புரியும்.."

செந்தில் - "ஐய்யோ குடல் வெந்துரும்..நான் மாட்டேன்..வேற வழி இருந்தா சொல்லுங்க.."

கவுண்டமணி - "அப்போ விஷத்தக் குடிடா டங்குவார் தலையா.."

செந்தில் - "கட்டுடைப்புனா என்ன.."

கவுண்டமணி - "கரும்பு கட்ட உடச்சு ஒரு கரும்ப எடுப்பாங்க..அதுதான் கட்டுடைப்பு.."

செந்தில் - "பின் நவீனத்துவம்மா என்ன சொல்லுங்க பாப்போம்.."

கவுண்டமணி - "உன்னப் பின்னாடி நவீனமா மிதிப்பேன்..அதுதான் நீ கேட்டது.."

செந்தில் - "கட்டவிழ்ப்புனா என்ன.."

கவுண்டமணி - "நேரம் வரும் போது உனக்கே தெரிய வரும்..இதோட நிறுத்திக்கோ.."(மனசுக்குள்) "அந்த பொண்ணு குளிச்சியிருக்கும்.."

செந்தில் - "அண்ணே எதிர்கருத்து சொன்னா தான் விவாதம் சூடு பிடிக்கும்.."

கவுண்டமணி - "ஓடிப் போயிரு..நான் விவாதம் பண்ணுவேன்..ஆனா உன் கூட மட்டும் கிடையாது..இதெல்லாம் நீ படம் பார்த்து தோணிச்சா இல்ல யார் கிட்டயாவது கேட்டுப் போட்டு வந்து லந்து கொடுக்கிறீயா.."

செந்தில் - "அந்த நாய் என்ன முறைக்குதுண்ணே.."

கவுண்டமணி - "பின்ன முறைக்காம என்ன பண்ணும்..அது லஞ்ச்சுக்கு போட்டியா ஒருத்தன் வந்துடான்னு நினைக்குது.."

செந்தில் - "போன தடவை வந்தப்போ நாய் இல்லையே.."

கவுண்டமணி - "உன்ன மாதிரி பன்னிகளைப் பிடிக்க தான் வாங்கினேன்.."

செந்தில் - "யார் கிட்ட இருந்து வாங்கினீங்க.."

கவுண்டமணி - "ஜப்பான் நடிகை ஜில் ஜில் ஜிகா கிட்ட இருந்து வாங்கினேன்.."

செந்தில் - (காதுக்குள்) "................................."

கவுண்டமணி - "யாரப் பாத்து இந்த கேள்வியக் கேப்ப..பன்னாட..பரதேசி.."

செந்தில் - "நாய்க்கு என்ன சாப்பாடு வைப்பீங்கன்னு கேட்டது தப்பா.."

கவுண்டமணி - "டேய் மாத்தி பேசாத..உன்னப் பத்தி எல்லார்க்கும் தெரியும்..நீ என்ன கேட்டு இருப்பேன்னும் தெரியும்.."

செந்தில் - "அண்ணே..நீங்க தெலுங்கு உன்னைப் போல் ஒருவன் படத்திலையாவது கமல் கேரக்டர் பண்ணியிருக்கலாம்.."

கவுண்டமணி - "மறுபடியும் முதல்ல இருந்தா..ராஜா நீ கட்டவிழ்ப்பு பத்தி கேட்ட மாதிரி ஞாபகம்..இரு உனக்கு காட்டுறேன்.."

நாயை அவுத்து விடுகிறார்..அது செந்திலைக் கடிக்காமல் செந்திலுடன் ஓடிப் போகிறது..

கவுண்டமணி கோபம் தாங்க முடியாமல் செந்திலை அடிக்க ஓடுகிறார்.நாய் கவுண்டமணியைக் கடித்து செந்திலைக் காப்பாற்றுகிறது..

முப்பது நாட்களுக்கு விரதம் இருக்க வேண்டும் என டாக்டர் சொல்லி அனுப்புகிறார்..அதை எப்படியோ தெரிந்து கொண்ட குளியல் பெண் "முத்துக் குளிக்க வாரீகளா.." என்று பாடி கவுண்டமணியை வெறுப்பேத்துகிறார்

Thursday, September 24, 2009

உன்னைப் போல் ஒரு வாழைப்பழம் - வெளிக்குத்து

வாழைப் பழம் சாப்பிடுவது எனக்கு பிடித்தமான ஒன்று.இன்று என்னுடைய (மன நல) மருத்துவர் பழம் சாப்பிடக் கூடாது(குறிப்பாக வாழைப்பழம்) என்று என்னைத் தடுத்து(தடை செய்து) விட்டார்.வெளியே போகும் போது யாராவது வாழைப்பழத்தை ரசித்து சாப்பிடுவதைப் பார்த்தால் கோபம் வந்து தொலைக்கிறது.மீறி புகழ்ந்து பேசினால் அவன் தொலைந்தான்.அப்படி என்ன இருக்கிறது இந்த வாழைப்பழத்தில்.ஆனாலும் புது வாழைப்பழம் வரும் போதெல்லாம் முதல் ஆளாக சென்று பழத்தை சாப்பிட்டு விட்டு விமர்சனம் செய்கிறேன்.முடிந்தால் அடுத்தவன் சாப்பிடாமல் தட்டி விடுகிறேன்.

வாழைப்பழம் சாப்பிடும் போதெல்லாம் எனக்கு வரும் சந்தேகம்..

அது பச்சை வாழைப்பழமாக இருந்தால் - அது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமானதா..

அது மஞ்சள் வாழைப்பழமாக இருந்தால் - அது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமானதா..

இந்த தொல்லை எல்லாம் வேண்டாம் என்று கண்ணை மூடிக் கொண்டு உரித்து சாப்பிடலாம் என்று பார்த்தால் சித்ரவதைக் கூடத்தில் நிர்வாணமாக நிற்பது போல் இருக்கிறது.

அடி கருத்து இருக்கும் பழத்தைப் பார்த்தால் அன்று இரவு கருப்பாக பயங்கரக் கனவு வருகிறது பயத்தில் விழித்தால் பயங்கரக் கருப்பாகத் தெரிகிறது.

வளைந்து இருக்கும் பழத்தைப் பார்த்தால் கண் அடிக்கடி "கீழே" பார்க்கிறது.தரையைப் பாருடா என்று மனது கட்டளையிடுகிறது.

இரட்டை வாழைப்பழத்தை பார்த்தால் சின்ன வயதில் அது போன்ற பழத்தைப் பிடுங்கிய பாட்டி நினைவுக்கு வருகிறாள் இடுங்கிய கண்களோடு.

லேசாக நசுங்கியப் பழத்தைப் பார்த்தால் கூட்டத்தில் அத்துமீறிய ஒருத்தனை மிதித்த ஞாபகம் வருகிறது.அசூகையில் உண்ண முடியவில்லை.

பிய்த்து தந்தால் கோவம் வருகிறது..

பஞ்சாமிர்தமாக தந்தால் அது தயாரிக்கும் முறை ஞாபகத்தில் வருகிறது..

பழச்சாறாக அருந்தலாம் என்று நினைத்தால் சுத்தம் தடுக்கிறது..எனக்கும் தயாரிக்க முடியவில்லை..முடிந்தால் அந்த ருசி வருவதில்லை..

சிப்ஸ் சாப்பிடலாம் என்றால் எண்ணை வாடை அடிக்கிறது...

மனம் செவ்வாழை பழத்தையும் மஞ்சள் வாழைப் பழத்தையும் ஒப்பிடுகிறது..அந்த சுவை இதில் இல்லை என்று விவாதம் நடத்துகிறேன்.அப்போ அதையே சாப்பிட வேண்டியது தானே என்று யாராவது மடக்கினால் அது பழசு..இது புதுசு.. என்று சப்பைக் கட்டு கட்டுகிறேன்.

பழத்தில் தான் எத்தனை வகை..நாட்டுப் பழம்,செவ்வாழை,கற்பூரவள்ளி,கசலி,கோழிக்கூடு,பச்சைப் பழம்..

இந்த விவாதம் வாழைப்பழத்திற்கு மட்டும் தான் நடத்துகிறேன்..மற்ற பழங்களுக்கு வாயை மூடிக் கொண்டு சப்புக் கொட்டி சாப்பிடுகிறேன்.யாருக்கும் தெரியாமல் ஏப்பமும் விடுகிறேன்..

ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டும் நானும் சாப்பிட்டு விட்டேன்..அது ஜாதியில் ஆரம்பித்து ரசம்(வாழைப்பழ ரசம்) செய்து இசத்தில் முடிக்கிறேன்..அதோடு முடிக்காமல் வாழைப்பழ உற்பத்தியில் ஈடுப்பட்ட விவசாயிகளைத் திட்டுகிறேன்..குறிப்பாக யூரியா தெளித்தவனைத் துவைத்து எடுக்கிறேன்..ஆனால் விவசாயி விளைச்சலை விற்று விட்டு அடுத்த விளைச்சலுக்கான விவாதத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

அது வரைக்கும் எனக்கு பொழுது போக வேண்டுமே - சக நண்பர்களிடம்(வாழைப்பழத்தை ஆதரிப்பவர்களை) வம்புக்கு இழுத்து வருகிறேன்.

அந்த விவசாயி எப்போ அடுத்த வாழைப்பழத்தைப் பயிரிடுவார்..அறுவடை செய்வார் என்று காத்து கிடந்து சாப்பிட்டு விட்டு அதை நொட்டை சொல்ல தயாராக வேண்டும்.

டிஸ்கி :

இப்படிக்கு வாழைப்பழத்தை வெறுப்பவன் ஆனால் நன்றாக அமுக்குபவன்.

இது புரிந்தவர்களுக்கு வெளிக்குத்து..புரியாதவர்களுக்கு உள்குத்து..

நீதி :

பழத்தைச் சாப்பிட்டு விட்டு தோலைக் குப்பைத் தொட்டியில் போடவும்..கண்ட இடத்தில் போட்டால் வழுக்கி விழ வாய்ப்பு அதிகம்..பத்தாம் நம்பர் செருப்பாக இருந்தாலும் வழுக்கும்..

நன்றி :

நையாண்டி நைனா(இந்த வாழைப்பழக் கருவை எடுத்து தந்தவர்)

வெளிநாட்டு கலாச்சாரம்

அவர்களுக்கு எது ஒத்து வருகிறதோ ஆனால் நமக்கு எது ஒத்து வராதோ அதை நாம் உடனே எடுத்துக் கொள்வோம்..சரி நமக்கு ஒத்து வராத அங்கு நடைமுறையில் இருக்கும் சில சம்பிராதாயங்களைப் பார்ப்போம்..

போலி மரியாதை

செப்டம்பர் 9/11 தாக்குதலில் அமெரிக்கர்களின் தொடர்பு என்று படம் எடுத்தால் கூட ஒன்னும் சொல்ல மாட்டார்கள்.அதுவே இங்கே எடுத்தால் எப்படி இருக்கும்.(உயிரோடு இருக்க முடியுமா).ஒரு அனா காசு அளவிற்குக் கூட மதிப்பு இல்லாத இரண்டு படத்தில் நடித்த நடிகனை நாம் சார் என்று மரியாதை குடுக்கிறோம்.அங்கே ஜனாதிபதியை மிஸ்டர்... என்று தான் அழைக்கிறார்கள்.இங்கே அப்படி அழைத்தால் ஒன்னு விட்ட பொண்டாட்டியோட தம்பியோட வைப்பாட்டியோட அல்லக்கைகள் வந்து துள்ளும். நாமதான் சும்மா இருக்கிற சப்பப் பிகரையும் ஏத்தி விட்டு ஆட விடுறோம்..இங்க சும்மா இருக்கும் சங்கை எடுத்து நாம்தான் ஊதிக் கெடுக்கிறோம்.நடிகனை அரசியலுக்கு வா என்று அழைப்பது..அவன் வந்தாலே ஒரு கூட்டம் கூடி கோஷம் போடுவது..அவனை ஒரு பிரபலம் ஆக்குவது..இது நடிகன் முதல் போலி சாமியார் வரை எல்லோருக்கும் பொருந்தும்..குரங்கு வித்தைக் காட்டினால் அதை வேடிக்கை பார்க்கவும் ஒரு கூட்டம் வரும்..அப்போ அந்த குரங்கு ஒரு பிரபலமா..சினிமாவும் ஒரு தொழிலாகத் தான் அங்கே பார்க்கிறார்கள்.

கட்சி

அங்கே இரண்டே கட்சிகள் தான்.இங்கே ஜாதிக்கு ஒரு கட்சி..மதத்திற்கு ஒரு கட்சி..ஜா.மு.க (ஜாங்கிரி.முன்னேற்ற கழகம்) என்று கட்சி இருந்தாலும் ஆச்சர்யம் கிடையாது.தேர்தலுக்கு முன் கல்யாணம்.தேர்தலின் போது தேனிலவு..முடிந்தப் பிறகு விவாகரத்து(மக்களுக்கு அல்வா)..தேர்தல் நடக்கும் சமயம் இரண்டு கட்சி தலைவர்களும் அனல் பறக்க விவாதம் செய்வார்கள்.இங்கே தேர்தல் முடிந்த பிறகு தான் கூப்பாடு ஆரம்பிக்கும்.நாங்க தோற்க காரணம் வாக்குப் பெட்டியில் உள்ள கோளாறு தான்..வாக்குச் சீட்டு முறை தான் வேண்டும்..இப்படி கத்த காரணம் வெளினாடுகளில் பத்து ஆண்டுகள் சர்வாதிகாரம் செய்து 600 கோடிகள் சுருட்டி விட்டு ஓடுவார்களாம்.இங்கு அது ஆறு மாத வசூல்.வருடத்திற்கு 1200 கோடிகள்.ஐந்து வருடத்தில் 6000 கோடி..பிறகு அடுத்த தேர்தல்.சுருட்டுவதில் பத்து சர்வாதிகாரிகளுக்கு சமம்..ஆனால் எடுத்து கொண்ட காலம் ஐந்து தான்.பின்ன ஏன் கருப்புப் பணம் சேராது..

கருத்து சுதந்திரம்

அங்கு நிறைய இருக்கிறது..எப்படி என்றால் பொய் சொன்னார் என்று பில் கிளிண்டனையே சந்திக்கு இழுத்தவர்கள்.வன்முறை படங்கள் அல்லது வயது வந்தவர்களின் படமாக இருந்தால் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.இங்கு லொள்ளு சபா எடுத்தால் கூட விளக்கம் கொடுக்க வேண்டும்..கேட்பவர் வருங்கால லண்டன் மேயரின் தந்தை.(பின்ன எத்தனை நாள் தான் அமெரிக்க ஜனாதிபதி என்று சொல்வது).குழந்தைகள் படம் என்று சொல்லி மியாவ் மியாவ் பூனை..மிசையில்லா பூனை என்று கந்தல்சாமி படத்தை எடுத்தவர் அரிய விளக்கம் கொடுப்பார்.ஆனால் பசங்க படம் குழந்தைகள் படம் இல்லையாம்.உங்களுக்கு வாய் இருக்குன்னு என்ன வேணாலும் சொல்லக் கூடாது.(பிறகு என் கை இப்படி எல்லாம் டைப் அடிக்கும்)

அதிகார துஷ்பிரயோகம்

முன்னாள் ஜனாதிபதி புஷ் ஆட்சியில் இருக்கும் போது நடந்தது.அவர் மகள் போதையில் வண்டி ஓட்டியதற்கு தண்டனை பெற்றார்.இங்கு வேலையை ஒழுங்காக செய்த காவல்துறை அதிகாரியை மடக்கி கைதியை விடுவித்து செல்கிறார்.செய்தது யார் ஆட்சியில் இருப்பவருடைய உறவினர் வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலையாள்.அந்த அதிகாரத்தில் அதிகாரிக்கு ஒரு அறை வேறு விழுந்ததாம்.தீவிரவாதிகளுக்கு எல்லாமே கிடைக்கும் இப்படி இருந்தால் எல்லையில் காவல் இருப்பவனுக்கு கொஞ்சம் சம்பளம்..தீவிரவாதிக்கு சிவப்பு கம்பளம்.(ஜம்முவில் ஒரு தீவிரவாதி அந்த மானிலத்தில் சர்வீஸ் எக்ஸாமை எழுதி தேர்ச்சி அடைந்து விட்டார்.என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்(யோசனை செய்து வருகிறார்களாம் ஏன்னா அங்கு சட்டம் வேறு காஷ்மீர் நமக்கு வேண்டாம் என்று சொன்னப் போது பாய்ந்து விட்டார்கள்.பாப்பான் என்று அர்ச்சனை வேறு)..அந்த தேர்வுக்கு அனுமதிக்க கூடாது என்ற அறிவு கூட இல்லை.இதுவே ஒரு தவறு செய்யாத சாமானியனுக்கு நடந்து இருந்தால் விசாரனையே கிடையாது.(இரண்டு வாலிபர்கள் செய்த தவறு(காவல்துறை மேலதிகாரர்களின் பிள்ளைகள் - கர் நாடகாவைச் சேர்ந்தவர்கள்) ஒரு அப்பாவி தமிழனைப் பாதித்தது.ஆறு மாதம் சிறையில் இருந்த பிறகு விடுவிக்கப்பட்டார்.குற்றம் - சிவாஜியைப் பற்றி தாறுமாறாக ஆர்குட்டில் எழுதியது.ஏஎம் - பிஎம் இந்த வித்தியாசத்தால் இவரைப் பிடித்து விட்டார்கள்.அது ஏர்டெல் செய்த தவறு.வாழ்க மக்களாட்சி..வளர்க மறுமலர்ச்சி..

Wednesday, September 23, 2009

(பத்தாம் (நம்பர்),(எழுத்து))

முதலில் பழமாகயிருந்து(1-a-apple)
விளையாட்டுப் பொருளாய் மாறுகிறேன் அடுத்ததில் (2-b-ball)
மூன்று முறை அழகாக சோம்பல் முறித்து (3-c-cat)
நான்காவதில் இறக்கிறேன். (4-d-dead)
ஐந்தாம் ஜென்மத்தில் இடத்தை உருவத்தால்
நிரப்புகிறேன் (5-e-elephant)
ஆறில் தந்தையாக மாறுகிறேன் (6-f-father)
பதினொரு முத்தங்களுடன் அடுத்த
காதலைத் தேடுகிறேன்(11-k-kiss,12-l-love)
அடுத்த நொடி அம்மா வருகிறாள் (13-m-mother)
உறங்கும் பத்தொன்பது வயது மகனை எழுப்ப (19-s-son)
பத்து வயதில் பார்த்த பிம்பம் துள்ளி வருகிறது.. (10-j-jumb)

ஒரெழுத்து இல்லாததால் (நீ)
கிடைக்கும் இரண்டெழுத்தின் சுகத்தால் (மது,மாது,சூது)
மறக்கடிக்கப்படுகிறது
மூன்றெழுத்து மிச்சங்கள் (பரிவு,பாசம்,நட்பு,உறவு)
நான்கெழுத்தாலும் முடியவில்லை (முயற்சி,மரணம்,தற்கொலை)
ஐந்தெழுத்தில் இணைகிறேன் (கல்யாணம்,குடும்பம்)
மறுபடியும் ஒரெழுத்து .. (நீ)

டிஸ்கி : இது கவிதையா.......

உ.போ.ஒ கமலும்,பிற்சேர்க்கையும்

படம் வெட்னஸ்டே போல இல்லை,கமல் நஸ்ருதீன் ஷா போல நடிக்கவில்லை.இன்னும் பல இல்லைகள்.நான் அதிகம் வெறுப்பதே இந்த கம்பரிஷன்னை தான்.நம் வீட்டு பிள்ளையும்,பக்கத்து வீட்டு பிள்ளையும் ஒன்றா..வெட்னஸ்டே படம் நன்றாக இருப்பது போல் தெரிந்தால்,கமல் இதை கெடுத்து இருப்பார் உங்களுக்கு முன்னரே தெரியும் என்றால் ஏன் ஸார் இந்த படத்தைப் பார்கனும்..ஹிந்தி தரத்திற்கு அவ்வளவு முடியும் என்றால் கமல் தரத்திற்கு இதுதான் முடியும்.

கமல் ஒரு காமன் இல்லை தான் நான் ஒத்துக் கொள்கிறென்.யெஸ் ஹி இஸ் நாட் அ ஆர்டினரி காமன் மேன்,ரிச் டிபரண்ட் மேன்..அதுதான் வசனத்திலே வருகிறதே எந்த சுப்பனோ குப்பனோ இதை செய்ய முடியுமா என்று..

"என்னைப் பொறுத்த மட்டும்" பணக்காரனால்(வசதி படத்தவன் கமல் போல தேவையான பொருட்களை வாங்கும் அளவிற்கு) தான் புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எளிதாக எடுத்து செல்ல முடியும்.அதற்கு ஒரு உதாரணம் போதும்.அவர் சே.அவர் வந்து சேர்ந்தப் பிறகு தான் கியூபப் புரட்சி வெற்றி பெற்றது அதுக்கு முன்னாடி வரைக்கும் பிடல் கேஸ்ற்றோவின் போராட்டங்கள் தோல்வியைத் தான் தழுவியது.

சே என்ன ஏழையா.மருத்துவம் படிக்கும் அளவிற்கு வசதி உள்ளவர்.இன்னும் நாம் ஷங்கர் போன்றவர்களின் தாக்கத்தில் இருந்து வெளியே வரவில்லை.ஏழையாக அல்லது கொஞ்சம் வசதி உள்ளவன்(சிவாஜி விதிவிலக்கு) அவனுக்கு ஒரு பாதிப்பு ஏற்படும் போது பொங்கி எழுந்து(சிவாஜியும் விதிவிலக்கல்ல) நம்ப முடியாத சாகசங்களை செய்கிறான்.மாட்டி கொண்டால் கண்ணீர் வழிந்து காய்ந்து போன தடத்தில் ஈ மொய்க்கும் அளவிற்கு ஒரு பாடாதி ப்ளாஷ்பேக்.ஏதாவது செய்யனும் என்று வேண்டுகோள்.சேரிப் பக்கம் ஒரு கருத்து கேட்பு.மக்கள் புரட்சி..சட்டி பானை உருட்டல்..இத்யாதி இத்யாதி..இந்த வகையறா படங்களை முறியடித்த கமல் ஒரு காமன் மேன் இல்லை தான்.

இது எதுவுமே இந்தப் படத்தில் இல்லை.மேலே சொன்னவற்றை செய்பவன் தான் காமன் மேன் என்ற புனிதப் பிம்பம் உருவாக்கப் பட்டுள்ளது(ஜெண்டில்மேன் தொடங்கி நொந்தசாமி(அட இதுவே ஷங்கர் படத்தின் கட்டிப்பிடி தான் ஸாரி த்ழுவல்) வரை).அது உன்னைப் போல் ஒருவனின் உடைக்கப்பட்டுள்ளது.படத்தில் கமலுக்கும்,அவர் குடும்பத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லை.யாரோ ஒரு சகபயணியின் சாவைத் தட்டி கேட்டு விட்டு மாட்டாமல் போகும் கமல் ஒரு காமன் மேன் இல்லை தான்.(காமன் மேன் எல்லாம் கடைசியில் தங்கள் தரப்பை நீதிமன்றத்தில் சொல்வார்கள்..இதில் அப்படி இல்லையே)

குறைந்தப் பட்ச தண்டனையை அனுபவிப்பார்களே அது கூட கமலுக்கு கிடைக்கவில்லை என்ன கொடுமை..காமன் மேனாக இருந்தால் இப்படி இருந்திருக்குமே..

"மும்பை தாக்குதலைப் பற்றி தமிழகத்தில் கவலை இல்லை என்று ஒரு வசனம்" இரா.முருகன் இந்த ஒரு வசனதிற்காவே நான் கை தட்டுவேன்.ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்து பயனம் செய்யும் எனக்கு தெரியும்.உன்னை போல் ஒருவன் அளவிற்கு மும்பை தாக்குதலைப் பற்றி பதிவுலகத்தில் விவாதம் நடந்ததா?

"அதான் ரெண்டு இருக்கே.." இந்த வசனத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை..இது வசனம் எழுதியவருக்கு உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் ஒன்றை ஒருவன் கொன்று விடுகிறான் என்று வைத்து கொள்வோம்..அதான் மிச்சம் ரெண்டு இருக்கே என்று
சந்தோஷமாக இருப்பீர்களா..

கமல் உங்களுக்கு இது தேவை தான் பாபர் மசூதி இடித்தப் போது எதிர்ப்பு தெரிவித்த முதல் நடிகன் கமல் தான்.அப்ப நீங்க என்ன த்துவா..என்ன இசம் இல்ல என்ன ரசம்(பாதரசமா..)

டிஸ்கி :

கடைக்கு போகும் கமல் ஏன் மட்டன் வாங்காமல் காய்கறி வாங்கினார்..(அவரு சைவ முஸ்லீம்..இந்துவாக இருந்தால் அன்னைக்கு விரதம்) - இது எல்லாம் ஒரு கேள்வி..

தேவர் மகனில் அவர் எப்படி நடிக்கலாம்..(அவர் என்ன அந்த ஜாதியா..இளையராஜாவின் ஜாதியைக் குறிப்பிட்டு கமல் அந்த படத்திற்கு வேலை வாங்கினார் இன்று மனுஷ்யபுத்திரனிடம்(இங்கு மதம் வருகிறது) வேலை வாங்கினார் அவருக்கு உள்ளது ஒரு குயபுத்தி என்று எழுதியவரே உங்க காலை இருந்த இடத்தில் இருந்து நீட்டுங்கள் நான் இங்கே இருந்தே கும்பிடுறேன்)

பதிவாக இருந்தாலும் சரி..படமாக இருந்தாலும் சரி உங்களுக்கு பிடிக்காதக் கருத்தைப் பிடித்து தொங்கினால் யாரும் விளக்கம் கொடுக்க முடியாது.(அது திருப்தி தராது)

இனி ஒரு நடிகனையும் விட வேண்டாம் கமல் இந்த நடிகரைப் போல படத்தின் ஆரம்ப காட்சியில் விபூதியையும்,அடுத்தப் படத்தில் குங்குமத்தையும் பூசிக் கொண்டு எமாற்றினாரா இல்லை கட்சி ஆரம்பிக்க முடிவு செய்ததும் முருகன் கோவிலுக்கு சென்றாரா இப்படியும் கேள்வி வரும்.

நாஸர் தான் கமல் ரோலே செய்ய வேண்டும் என்றால் ஆர்யா எப்படி அகோரியாக நடிக்கலாம்..ஷாம் எப்படி அந்தோணியாக நடிக்கலாம்..என்ன கொடுமை சார் இது..நடிகனாக பாருங்கள்..மதங்களும்,ஜாதியும் எங்கே வருகிறது

"படைப்பை மக்களிடம் வைத்த பிறகு அது படைப்பாளிகளுக்கு சொந்தமில்லை..வெற்றியோ தோல்வியோ அங்கே நின்றால் அடுத்த வேலை செய்ய முடியாது" - இதை சொன்னவரும் கமல் தான்.

வாங்க நாம அடிச்சிக்கிட்டு தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவோம்.கமல் வேறு படம் எடுக்கும் வரை நமக்கும் பொழுது போக வேண்டுமே..

(இதுவும் ஒரு பதிவு தான்..பதிவை மட்டும் விமர்சனம் செய்யுங்கள்..)

இந்த களேபரத்தில் நான் நாடோடி இலக்கியனின் வேட்டைகாரன் பதிவை ரசித்தேன்..

இது தான் அடுத்த சண்டைக்கு நான் எடுத்து தரும் டாபிக் - வேட்டைகாரன்.

Tuesday, September 22, 2009

அமெரிக்கப் பூனைகளுக்குப் பரிசோதனை எலிகளா நாம்

முதலில் அமெரிக்க முட்டாள்கள் நம்மை ஏமாற்றும் வழிகளைப் பார்ப்போம்..

ஆயுதங்கள்

வருடம்தோறும் நடக்கும் ஆயுத விற்பனையில் அமெரிக்கப் பூனைகளின் பங்கு 68.4 சதவீதம்.அவர்கள் எலிப்பொறியில் எப்படி நம்மை சிக்க வைக்கிறார்கள் என்றால்

1. நாமே ஓடி வந்து காலி எலிப்பொறியில் அமர்வது.(ஆந்திர முதல்வர் காணாமல் போன சமயம் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அமெரிக்கர்களிடம் உதவி கேட்கிறோம். அவர்கள் தொழில் நுட்பத்தை நாடுகிறோம்.இங்கே தான் சனியனத் தூக்கி பனியன்ல போட்டுக் கொள்கிறோம்.நம்மால் அது போல் தொழில் நுட்பங்களை உருவாக்க முடியாதா?.முடியும் ஆனால் முடியாது..சந்திராயன் எப்படி காணாமல் போனது என்று கூட கண்டுப் பிடிக்க தெரியாத நாம்,காணாமல் போன ஆந்திர முதல்வரை கண்டுப்பிடிக்க ஒரு நாள் எடுத்து கொள்ளும் நாம் செய்ய முடிந்தது எல்லாம் அடுத்தவனைக் குறைக் கூறுவது தான்.(அட நானும் அதை தான் செய்கிறேன் பின்ன நான் மட்டும் என்ன விதிவிலக்கா)

2.நாம் வலியப் போய் உதவி கேட்கும் போது அவர்களுக்கு தெரிகிறது..அடித்து விட ஆரம்பிக்கிறார்கள்..பாகிஸ்தான் அனுஆயுதங்களைக் கொண்டு இந்தியாவைக் குறி வைக்கிறது - அமெரிக்க சாட்டிலைட் படம் வெளியாகிறது..உடனே ஆயுதங்கள் இரண்டு பக்கமும் விற்கப் படுகிறது.பிறகென்ன இரண்டு பூனை,ஒரு சிரங்கு வந்த குரங்கு,அப்பம் கதை தான்.

இப்படி நாம் ஆயுதங்கள் வாங்க செலவளிக்கும் காசை வைத்து உருப்படியாக கல்வி,மருத்துவம் என்று செலவளிக்கலாம்.தீவிரவாதிகளை(முஸ்ஸிமாக இருந்தாலென்ன இந்துவாக இருந்தாலென்ன) உருவாக்குவதே அமெரிக்கன் தான்.(அட அவன் மதம் வேற - இது தான் பின் நவீனத்துவமா சொல்லவே இல்ல)

உணவு

இதில் அவன் பரிதோதனை செய்ய வேண்டும்..சாப்பிடுவதற்கு பேசும் எலிகள் வேண்டும்.முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் விளையாடி வந்த நாதாறிகள்(மன்னிக்கவும் கோபம் படும் போது என்னை கட்டுப்படுத்த முடியவில்லை) இந்தியா பக்கம் பார்வைகளைத் துருப்பி இருக்கிறார்கள்.இனி வரும் ஆண்டுகளில் தக்காளி துள்ளும்.நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது.அப்படி தவளையின் ஜீனை எடுத்து தக்காளியில் சேர்த்தால் அப்படி நடக்கும் எது எல்லாம் அங்கே தெரிந்தால் செய்தவன் காலி இங்கே செய்தால் அவனுக்கு அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர் என்று பெயர்.வேம்பு,மஞ்சள் என்னமோ அவர்கள் கண்டுப்பிடித்தது மாதிரி பேடண்ட் வாங்குகிறார்கள்.இதெல்லாம் தெரிந்து கொள்ள நமக்கு நேரம் ஏது வாங்க கமல்னு ஒருத்தர் சிக்கி இருக்காரு அவர வெளுப்போம்.

மருந்து

அங்கு தடை செய்யப்பட்ட மருந்து இங்கு விற்பனையில் உள்ளது.சாப்பிடும் முன் தடை செய்யப்பட்டதா என்று இணையத்தில் பார்த்து கொள்ளவும்

குப்பை,கழிவுகள்

தூத்துக்குடியில் நாம் கழிவுகளைக் கொட்ட அனுமதி செய்கிறோம்.மற்ற நாடுகளின் அந்த கப்பல் துறைமுகத்தில் வரவே தடை.நமக்கு வடை.

மடிக்கணினி

பத்தாயிரம் ரூபாய் உள்ள மடிக்கணினியை நம் நாட்டின் வருங்காலத் தூண்களுக்கு தர பெறும் முயற்சி செய்தார்கள்.விலை குறைந்தப் பொருட்களால் வரும் கேடுகளைத் தெரிந்து கொள்ள இப்படி ஒரு முடிவாம்.சில எதிர்ப்புகளால் அது நிறுத்தி வைக்கப்பட்டது.

டிஸ்கி கொஞ்சம் பெருசு

நான் ஆட்சிக்கு வந்தால் தான் லஞ்சகங்களை ஒழிக்க வழி சொல்வேன் என்று சொல்ல விஜயகாந்தா ?

என்னுடைய வழிகள்

ஐ.ஐ.டி யில் படிப்பவர்கள் இந்தியாவில் ஐந்து வருடம் வேலை செய்ய வேண்டும் என்று சொல்ல சட்டம் வேண்டும்.(அங்கு இயங்கும் இந்திய மூளைகளுக்கு தான் மதிப்பும் அதிகம் விலையும் குறைவு)

அமெரிக்கன் நாடு நல்லா இருக்கும் வெளியே ரவுடித்தனம் செய்வான்.நாம வெளியிலே வாயையும் சூவையும் பொத்திக்கிட்டு நாட்டுகுள்ள ரவுடித்தனம் செய்வோம்.

வாழ்க இந்திய ஜன நாயகம்..72 லட்சம் கோடி கருப்பு பணம் ஒரு கோடி கோடியாக(ஸாரி நூறு லட்சம் கோடியாக) மாற வாழ்த்துக்கள்.

இப்படிக்கு ஒரு தெருக் கோடியில் நிற்கும் நூறு கோடி இந்தியரில் ஒருவன்.

ஒரு குறும்(பு)பட முயற்சி

நான் பொதுவா கல்லூரியில் படிக்கும் போது(செமஸ்டர் தேர்வைத் தவிர்த்து) இரண்டு காரியங்கள் மட்டுமே செய்வேன்.வேடிக்கைப் பார்ப்பது மற்றும் தூங்குவது.ஆட் செமஸ்டர்(1,3,5,7) நடக்கும் போது வெளியே இருக்கும் வயல்களில் நாத்து நட்டிருப்பார்கள்.பசுமையாக இருப்பதால் வேடிக்கை பார்பதற்கே நேரம் போதாது.ஈவன் செமஸ்டரில்(2,4,6,8) தூங்கி வழிவேன்.

நாங்கள் கடைசி செமஸ்டர் படிக்கும் சமயம் இன்னொரு நண்பன் விஸ்காம் படித்துக் கொண்டிருந்தான்.ஒரு குறும்படம் எடுக்க ஒரு கதை தேவை என்று சொல்லியிருந்தான்.கதை விவாதம் அனல் பறந்து கொண்டிருந்தது.வழக்கம் போல நான் தூங்கி மகிழ்தேன்.(என்னை எழுப்பாமல் விட்டதற்கு காரணம்இது போல ஒரு கதை கேட்ட நண்பனிடம் கிழக்கே போகும் ரயில் படத்தை உல்டா செய்திருந்தேன்.அன்று எழுந்த கோபம் தான் காரணம்)

கொஞ்ச நேரம் கழித்து என்னை எழுப்பி கதை கேட்டான்.(திருந்தியிருப்பேன் என்று தவறாக நினைத்த விட்டான்).நானாவது.. திருந்துவதாவது.. கதை சொல்ல ஆரம்பித்தேன்.

"மச்சான் நாடகத்திலே மொக்கை மாதிரி டிவிஸ்ட் வைக்கிறான்.நான் சொல்ற கதையிலே அவங்கள மிஞ்சிறேன் பாரு.."

"டேய் ஓவராப் பேசாத..கதைய சொல்லு.."

"பைக்ல புதுப் பொண்டாட்டி கூட வேகமா போறான்.ஒரு திருப்பத்துல எதிரே வண்டி வர்றது தெரியாம மோதி கீழ விழுகிறான்.கோவத்திலே எந்திரிச்சி திட்டப் போறான்..அப்பத்தான் கவனிக்கிறான்.வந்து மோதின பைக்லகையும் ஒரு ஜோடி இருக்கு.அத பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறான்..நாலு பேரும் அதிர்ச்சி அடையிறான்க.." என்று சொன்னேன்.

"குமுதத்தில வர்ற கதை மாதிரியே இருக்கு..கல்யாணத்துக்கு அப்புறம் ஜோடி மாறி போச்சா.." என்று சொன்னவனிடம்

"இல்ல நாறி போச்சு..இங்க தான் நாம கத்துக்கிட்ட எடிட்டிங் திறமைய காட்டுறோம்..ஆண் ரெண்டு பேரையும் க்ளோசா ஒரே ப்ரேம்ல காட்டுறோம்..அடுத்த ஷாட்டுல அந்த பெண் ரெண்டு பேரையும் க்ளோசா ஒரே ப்ரேம்ல காட்டுறோம்..யாருக்கு யார் கூடத் தொடர்பு அப்படி தெரியாம பாக்குறவன் எல்லாம் தலையப் பிச்சிக்கிட்டு சாவான் " என்று சொல்லி முடித்தவுடன்

"போடா ப..அவன காலேஜ்ல இருந்து தூக்குறதுக்கு வழி சொல்றியா.." என்று என்னை திட்டிக் கொண்டியிருந்தான்.

எல்லோரும் சிரித்துக் கொண்டோம்.(நான் சொன்னத்தில் கடைசியில் தலைப்பு மட்டும் தான் மிஞ்சியது. தலைப்பு - கோணங்கள்.)

வினையே இதுக்கு அப்புறம் தான் ஆரம்பித்தது.பாடம் நடத்திய லேடி புரபசருக்கும் எங்களுக்கும் ஆகாது.

"சம்படி இஸ் கிகிளிங்.." என்று அவர் சொல்ல

"லாபிங்னா சிரிக்கிறது கிகிளிங்னா என்னடா மச்சான்.." என்று ஒரு நண்பன் கேட்க

"பல்ல இளிக்கிறது.." என்று இன்னொரு நண்பன் சொல்ல

"அரவிந்த் வாட் இஸ் ஜெ-ப்ரோடோ.."

"என்னடா இது மாதிரி ஒரு புரோட்டோவ நான் கேள்வி பட்டதே இல்லை.." என்று நான் வாய்க்குள்ளே முணுமுணுத்தேன்

"பாடன்.."

"பாடணுமா..எனக்கு பாடத் தெரியாதே.." இப்படி சொன்னது புரபசரின் காதில் விழுந்து தொலைத்தது.

"ஹவ் அடமென்ட் யூ ஆர்.." என்று திட்ட ஆரம்பிக்க

"என்ன அடம் பிடிக்கிரம்மா.." என்று துணைக்கு ஒரு நண்பன் சொல்ல..உடனே எம் மேல் இருந்த கோபத்தை அவன் மேல் காட்ட ஆரம்பித்தார்.

"ஐ வில் ஆஸ்க் சேர்மன் டு கிவ் எ ஷூ.." என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

"மச்சான் நீ செருப்பு போட்டுக்கிட்டு வர்றது பிடிக்காம அவங்க சேர்மன் கிட்ட சொல்லி ஷூ வாங்கி தர்றாங்களாம்.." என்று ஒரு நண்பன் மொழிபெயர்க்க

"செருப்பால அடி வாங்கி தர்றேன்னு சொல்லுதுடா.." - இது நான்

"அந்த அஞ்சு பேரும் வெளிய போங்க.." என்று அவர் தமிழுக்கு தாவியப் பிறகு வெளியே வந்தோம்.

வாசல் பக்கம் தான் பெண்கள் அமர்ந்து இருப்பார்கள்.பக்கத்து வகுப்பு பெண்களையும் கவனிக்கலாம்.என்னுடைய நெருங்கிய நட்பு ஒன்று துண்டுச்சீட்டில் எழுதி அனுப்பியது.

"க்ளாஸ்ல துங்குற..அசைன்மென்ட் குடுத்தா எழுதறது இல்ல..நான் எழுதி குடுத்தாலும் வாங்குறது இல்ல..முழிக்கிற நேரம் எல்லாம் அரட்டை..முதல்ல அந்த பசங்க கூட சேர்றத நிறுத்து.."

"டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்.." என்று கோட்டை எழுத்தில் எழுதி நட்பிடம் திரும்ப அனுப்பினேன்.

டிஸ்கி :

என் தம்பி படித்ததும் விஸ்காம் தான்.என்னிடம் எதுவும் கேட்டதில்லை.

Monday, September 21, 2009

காலச்(சுழற்சி)சக்கரம்,புண்ணியம்

சுவைப்பதில் தொடங்கி
சுகிப்பது வரை
எல்லாம் அவசரம் தான்.
திருப்தி அடையாமல்
கள்ளச்சந்தையில் புழங்கும்
இயந்திரங்களுடன் தொடர்பு
"ஆண்டு அனுபவித்து விட்டேன்"
சொல்லி மரிக்கும் போது
வயது முப்பது
வருடம் 3010
சந்ததியைப் பெருக்க
பால்ய விவாகம்
பிளாக் எழுதும் புரட்சிக்கவி
பாரதிக்கும் வயது முப்பது.
அவனைக் கொல்ல
யானையும் இல்லை
இறைப்பதற்கு
அரிசியும் இல்லை
இருந்தாலும் அதை உண்பதற்கும்
அவன் கொஞ்சுவதற்கும்
குருவிகள் இல்லை
இணையத்திலும்..

செய்யும் பாவங்களைத்
தொலைத்து புண்ணியத்தைச்
சேர்க்க சனிக்கிழமை தோறும்
திருப்பதி பயணம்
முதல் வகுப்பு தரிசனம்
ஜருகண்டி இல்லை
என்றோ வரும் பக்தனுக்கு
பத்து மணிநேர காத்திருப்பு
ஜருகண்டி,ஜருகண்டி என்று
கடமையை செய்யும் ஊழியனுக்கு
சேர்க்கிறது சாமான்யன்கள் விடும்
சாபமும்,பாவமும்

துவையல் - சிரிப்பு + சீரியஸ் ஸ்பெஷல்

உன்னைப் போல் ஒருவன் படத்தில் கமலை விட மோகன்லால் நன்றாக நடிக்க வாய்ப்பு அமைந்து விட்டது.கமலே இந்த வேடத்தையும் செய்து இருக்கலாம்.(என்ன அது போல நடந்திருந்தால் அது ஒரு கைதியின் டைரி போல இருக்கும்).மும்பை அல்லது ஹைதிராபாத்தில் நடப்பது போல கதை இருந்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும்.(காரணம் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழுக்கு புதிது).இப்படி ஒரு மாற்றத்தை வைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மேலும் ஒரு காரணம்..

கமல் சிகப்பு ரோஜாக்களில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிறகு பெண்களை குறி வைத்து கொல்லும் ஒரு சைக்கோ பிடிக்கப்பட்டான்.

வேலையற்ற இளைஞனாக கமல் நடித்த படம் சத்யா. பிறகு நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் போனது.

தேவர் மகன் என்ற படம் வெளியான உடன் தென்மாவட்டங்களில் சாதி கலவரங்கள் நடந்தது.

நிதி நிறுவனங்கள் ஏமாற்றுவதாய் மகாநதியில் நடித்தார். நிதி நிறுவனங்கள் ஏமாற்றியது.

ஹேராம் படத்திற்கு பிறகு கோத்ரா கலவரம் நிகழ்த்தப்பட்டது. அன்பே சிவம் படத்தில் சுனாமி பற்றி பேசினார்.சுனாமி வந்தது.

வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு சைக்கோ தொடர் கொலையாளிகளை நொய்டாவில் பிடித்தார்கள்.

தசாவதாரத்தில் உலகத்தையே அழிக்கும் ஒரு கிருமி இருப்பது போல கதை நடக்கும், பிறகு பன்றிக்காய்ச்சல் வந்து பயமுறுத்தியது.

இந்தப் படம் வெளியான இப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்வோம்.

***************

ஒரு நண்பருடன் சாட் செய்யும் போது கேட்டார்."பதிவு எழுத ஆரம்பித்த பிறகு கடைப்பிடிக்கும் கொள்கைகள் எதாவது இருக்கா.."

ஆமா இருக்கு என்று சொல்ல ஆரம்பித்தேன்.(அடைப்புக்குறியில் இருப்பது அவருடைய நக்கல்கள்)

அ) மீள்பதிவு போட மாட்டேன்.(அப்போ பிரபல பதிவர் ஆக முடியாதே என்று சொன்னார்).மீள்பதிவு(மீள்பதிப்பு) ஆரம்பித்து வைத்தது வாரமலர் என்றுதான் நினைக்கிறேன். அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது மற்றும் தொடர்கதைகள் நிறைய தடவை பல முறை மீள்பதிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆ) அனானியாகப் பின்னூட்டம் போட மாட்டேன்.(முதல்ல பின்னூட்டம் போடு..அப்புறம் அனானியப் பத்தி யோசிக்கலாம்..)

இ)அனானிகள் எம் பதிவுலப் பின்னூட்டம் போட முடியாது.(அவங்க பின்னி எடுப்பாங்கன்னு பயம்)

ஈ) எதிர்பதிவு போட மாட்டேன்.(யாரு நீயி..அவனா நீயி..சரி நெக்ஸ்டு..)

உ) நான் கடைய அடைக்கப் போறேன் ஒருதடவை சொன்னா சொன்னதுதான் திரும்ப வரமாட்டேன்.(சரி நீ இத எப்போ சொல்ல போற..சரி பதிவுலகத்துல உன் வெற்றியா எதை நினைப்ப)

ஊ) நீங்க தான் என்னுடைய ஆதர்ஷம்..உங்களைப் பாத்துதான் நான் எழுத வந்தேன் அப்படின்னு யாராவது சொன்னா அது தான் என்னுடைய வெற்றி.(அப்போ அது வரைக்கும் அடங்க மாட்ட..நான் வேணா சொல்லட்டுமா..)

சரி இன்னைக்கு நான்தான் கிடைச்சேனா..(ஆமா உன்ன எவ்வளவு நக்கல் பண்ணினாலும் உனக்கு கோவம் வரவே இல்ல..நீ ரொம்ப நல்லவன்..)

நான் கோவப்பட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் அப்படி சொல்லலாம்னு நினைச்சேன்..சரி அதுக்கும் ஏதாவது சொல்வார் என்று பயந்து "இன்னைக்கு நான் தான் மாட்டிகிட்டேனா..வேற யாரும் இல்லையா.."கொஞ்சம் வேலை இருக்கு அப்படி சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.

**************

இந்த வார சர்ச்சை..

என்னது உன்னைப்போல் ஒருவன் படத்துல வர்றது அல்கொய்தா,ஹமாஸ்,ஹிஸ்புல்லா தீவிரவாதிகளா..அவங்க எப்போ இந்தியாவுக்கு வந்தாங்க..அவங்க எங்கையோ இருந்தாலும் வம்பு இழுக்காம விட மாட்டீங்களா இரா.முருகன்..

அப்போ இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ரொம்ப நல்லவங்களா(வம்பு இழுத்தாலும் எல்லை தாண்டித்தான் வம்பு இழுப்பேன்)

**************

நண்பர்களுக்கு ரம்ஜான் தின நல்வாழ்த்துகள்

**************

Saturday, September 19, 2009

இரண்டாம் கட்டத் தலைவர்கள்

இந்தப் பதிவில் முதலில் சினிமா மற்றும் அரசியலில் இருந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை மட்டுமே குறிப்பிட நினைத்தேன்.சரியாக எழுதி இருப்பதாக நான் நினைத்தாலும் சில கருத்துகள் வேறு கோணத்தில் பார்க்கும் போது வேறுவிதமாக தெரிகிறது.அதனால் சினிமாவும் அரசியலும் தவிர்க்கப்படுகிறது.

எந்த துறையாக இருந்தாலும் சாதிக்காத வரை இரண்டாம் கட்டத் தலைவர்கள் வெளியே தெரிவதேயில்லை.அவர்கள் வெளியே தெரிய வரும் போது அதிரடி நடவடிக்கைகளுக்குப் பஞ்சமே இருக்காது.சந்தர்ப்பத்தை உருவாக்க மாட்டார்கள்.கிடைக்கும் சந்தர்ப்பத்தை விடவும் மாட்டார்கள்.

ஷெர்ஷா தொடங்கி இன ஒழிப்பில் ஈடுப்பட்ட ராஜபக்சே வரை நிறைய பேர்
இரண்டாம் கட்டத் தலைவர்கள் தான்.ஷெர்ஷா ஒரு தலைவர் தான் அதிரடிகளுக்குப் பஞ்சமே இல்லை.கடைசியாக சொன்ன ராஜபக்சே ஒரு தறுதல(இதுக்கு இலங்கையில் இருந்து ஐ.பி. அட்ரசுக்கு ஆட்டோ வருமா). ஷெர்ஷாவை பற்றி தெரிந்துக் கொள்ள
இங்கே போகலாம்.சந்திரிகா காலத்தில் அடக்கி வாசித்த,வசித்த ராஜபக்சே பிறகு சந்திரிகாவின் குடியுரிமையைப் பறிக்கப் பார்த்தது தனிக்கதை.(சந்திரிகா அப்பா காலத்தில் இருந்தே ராஜபக்சேவின் அப்பா இரண்டாம் நிலையில் தான் இருந்தார்).

கங்குலி கேப்டனாக இருக்கும் சமயம் ஒரு வலைபயிற்சியின் போது தான் தோனி கண்டுப்பிடிக்கப் பட்டார்.பிறகு தோனி கேப்டனாகப் பிறகு கங்குலி கட்டம் கட்டப்பட்டது எல்லோரும் அறிந்ததே.
போன வருடம் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன் யுவராஜும்,தோனியும் ஒரு விவாதப் போட்டியில் கலந்து கொண்டார்கள்.யுவராஜ் சொன்னது - "தோனி கிராமத்தில் இருந்து வந்தவர்.எனக்கு கேப்டனாக ஆசை உண்டு..".தோனி அந்த நிகழ்ச்சியில் சிரித்துக் கொண்டேயிருந்தார்.நாலாவது ஒருநாள் போட்டியின் யுவராஜ் ஒரு கேட்சைத் தவற விட்டவுடன் சிரித்துப்படியே இருக்கும் தோனி முதல்முறையாக கோபப்பட்டார்.திரும்ப திரும்ப அதை ஒளிப்பரப்பினார்கள்.இந்த வருடம் யுவராஜ் சொன்னது "தோனி கேப்டன் பதவியில் பொறுப்பாக செயல் படுகிறார்.." இந்த வருடமும் இந்திய அணி இலங்கைக்கு சென்றது.

தெரியாத நபர்களிடம் பொறுப்பை ஒப்படிக்கும் போது தான் திறமைகள் வெளியே வரும் அதற்கு மேலாண்மை துறையில் இருந்து இரண்டு உதாரணகள்.

பற்பசை நிறுவனத்தின் விற்பனையில் சரிவு ஏற்படுகிறது.விற்பனையைக் கூட்ட எல்லோரும் விவாதிக்கிறார்கள்.கடைசியில் ஒரு கடைநிலை ஊழியரின் யோசனை தான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அவர் சொன்ன யோசனை "பற்பசையின் வாயை அகலப்படுத்துங்கள்..சீக்கிரமே தீர்ந்து விடும்..விற்பனையும் அதிகரிக்கும்.."

இது ஜப்பானில் நடந்தது.சோப் தயாரித்து அட்டைப் பெட்டியில் அடுக்குவது வரை செய்வது எல்லாமே இயந்திரம் மூலம் தான்.இயந்திரம் சில காலி அட்டை பெட்டிகளும் விற்பனைக்கு அனுப்பி விடுகிறது.சிலர் வழக்குத் தொடர. அதை தவிர்க்க இன்னொரு இயந்திரம் தாயரிக்க முடிவு செய்கிறார்கள்.அந்த செலவை தடுத்ததும் ஒரு கடைநிலை ஊழியர் தான்.அவரின் யோசனை."கடைசி கட்டப் பரிசோதனையில் ஒரு காத்தாடி வைப்போம்.காலி அட்டைப் பெட்டி தானாகவே கீழே விழுந்து விடும்.

அமெரிக்கர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலம்.விண்வெளிக்கு போகும் அமெரிக்க வீரர்கள் குறிப்பெடுக்க பேனாவை எடுக்கிறார்கள்.அது எழுதவில்லை.இருபத்து வருடம் போராடி விண்வெளியில் எழுதும் பேனாவைக் கண்டுப்பிடிக்கிறார்கள். ஆனால் ரஷ்யர்களோ பேனா எழுதவில்லை என்றவுடன் பென்சிலை எடுத்து எழுதுகிறார்கள்.இப்படி வித்தியாசமாக யோசிப்பவர்களே பிற்காலத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக உருவாகிறார்கள்.

கீழ் டிஸ்கி : இந்த முறை டிஸ்கி முதல் பத்தியில்

Friday, September 18, 2009

உன்னைப் போல் ஒருவன்

தாணு - கந்தசாமி முதல் வாரத்தில் 37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது..

உ.போ.ஒ - நான் இழந்த இருநூறு ரூபாய் திரும்ப கிடைக்குமா ?

விஜய் - எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்.கலைஞர் இளைஞர் போல உழைக்கிறார்.மரியாதை நிமித்தமாக ராகுலை சந்தித்தேன்.

உ.போ.ஒ - இப்படி சொல்லி ரசிகன ஏமாத்"தல"..கல்யாண மண்டபம் தப்பிரும்.வேட்டைகாரனுக்கு எதிர்ப்பு இருக்காது..ஒரே கல்லுல மூணு மாங்கா..ஒரு தேங்கா..

விக்ரம் - இனி வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிப்பேன்..

உ.போ.ஒ - அந்த வருசத்தில ஆயிரம் நாள் இருக்குமா?

சுசி கணேசன் - கந்தசாமிக்கு ஒரு ஓட்டெடுப்பு நடத்துவோம்.நான் தோற்றால் இயக்குவதை நிறுத்தி விடுகிறேன்..

உ.போ.ஒ - தபால் ஓட்டு உண்டா..

தங்கபாலு - நதி இணைப்பு விஷயத்தில் ராகுல் சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து.

உ.போ.ஒ - இது உங்க தனிப்பட்ட கருத்தா இல்ல "தண்ணி"ப்பட்ட கருத்தா?

கே.எஸ்.ரவிகுமார் - ஆதவன் படத்தில் சூர்யா பத்து வயது பையனாக நடிக்கிறார்.

உ.போ.ஒ - ஆமா கேக்குறவன் கேனையனா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டுதுன்னு சொல்வீங்களே..

சேரன் - யோகி படத்தில் எந்த கதாநாயகனும் செய்ய முடியாததை அமீர் செய்திருக்கிறார்.

உ.போ.ஒ - உங்களால கூட முடியாதா..என்ன கொடும சேரன் இது..

எஸ்.வி.சேகர் - விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி இன்னும் தெளிவாக பேசவில்லை; இப்போது, அவர் கூறியிருக்கும் விஷயங்கள், நிச்சயமாக அவருடைய சினிமா வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

உ.போ.ஒ - இப்படி என்னைக்காவது நீங்க சட்டசபையிலே தெளிவா பேசியிருக்கீங்களா..கவலைப்படாதீங்க அவர் அரசியலில் உங்களுக்குப் போட்டியா வர மாட்டாரு..விஜயின் சினிமா எதிர்காலம் பாதிப்பதற்கு எதிர்காலத்தில் உங்க பையனும் ஒரு காரணமாக இருப்பாரா..

சேரன் - பாரதிராஜா சமீப காலமாக எந்த பொது மேடை மற்றும் திரையுலக நிகழ்ச்சி மேடைகளிலும் ஏறாமல் மௌனம் காத்து வருகிறார். அவருக்கு ஏன் இந்த கோபம்? அவர் திரையுலகில் சாதிக்க வில்லையா? பிறகு ஏன் இந்த கோபம்?

உ.போ.ஒ - நீங்க மேடையிலே இருக்கும் போது அவர் எப்படி ஏறுவார்.கீழே இருக்கும் போதே தேர இழுக்குறீங்க..மேல வந்தா தெருவுல விட்டுற மாட்டீங்க ..

சஞ்சய் மஞ்சுரேக்கர் - கடந்த ஆண்டு சச்சின் டெண்டுல்கர் திணறியபோது 'ஓய்வறையில் ஒரு யானை' என்று விமர்சித்தேன்.வைத்த விமர்சனத்தை பின் வாங்கப்போவதில்லை

உ.போ.ஒ - அப்ப நீங்க "மை(நி)தானத்தில் ஒரு ஆட்டுப் புழுக்கையா"

ஜெஃப் தாம்சன் - பாண்டிங் சிறந்த கேப்டன் இல்லை..

உ.போ.ஒ - அரிய கண்டுப்பிடிப்பு..நோபல் பரிசு நிச்சயமா கிடைக்கும்..அப்பவே கில்கிரிஸ்ட்கு குடுக்க வேண்டியது தானே

டிஸ்கி :

அரவிந்த் - உன்னைப் போல ஒருவன் யார் நடிச்சது..(சாரி கஜினி சூர்யாவுக்கு என்னமோ ஒரு வியாதி உண்டே..அதுவும் மறந்து போச்சே..)

உ.போ.ஒ - பின்ன இப்படி எல்லாம் பதிவு போட்டா அடிக்காம என்ன பண்ணுவாங்க

Thursday, September 17, 2009

ரெட்டை அர்த்தம்

சின்ன வயதில் இருந்தே படம் வரைவது(வரைய தெரியாது),அசைன்மெண்ட் எழுதுவது இதெல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காது.இந்த ஒரு காரணத்தினாலே நான் ஒரு அவுட்ஸ்டாண்டிங்க் ஸ்டுடண்ட்(பள்ளியில் ஆரம்பித்து கல்லூரி வரை).பள்ளி நடத்தி கொண்டிருந்த ஒரு முட்டாள்(ஸாரி எங்க சேர்மன அப்படித்தான் கூப்பிடுவோம்) ஆரம்பித்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன்(எல்லாம் என் நேரம்).நான் பள்ளியிலே இருந்தப்போ கூட இத்தன அசைன்மெண்ட் எழுதவில்லை.

ஒரு கட்டத்துல பொறுக்க முடியாமல்(அது சரியில்ல இது சரியில்ல இப்படி சொல்லியே நான் எழுதிய தாளை எல்லாம் கிழித்து விடுவார்கள்) பொங்காமல் எழுந்து ஒரு வழி கண்டுப் பிடித்தேன்.அதுவரை எதிரியாகவே நினைத்த பெண்களிடம் நட்பு கொள்ள முடிவு செய்தேன்.நல்ல படம் வரையும் பெண்ணாகப் பார்த்து "நீங்க ரொம்ப நல்லா வரையிறீங்க.." அப்படி ஆரம்பித்து மொக்கையை முடிக்கும் போது "எனக்கும் வரைந்து தர முடியுமா.." என்று கேட்டேன்.

அடுத்த நாள் வரைந்து தந்தவளிடம்(பேப்பர் உபயம் கூட அவளே).தொடக்கப்புள்ளி மட்டும் தான் நான் வைப்பேன்.பசங்க என்னைப் பார்த்து இதை தொடர ஆரம்பித்து விட்டார்கள்.வரைய ஒருத்தி.இப்ப எழுத ஒரு ஆள் தேவை.பிறகு அதற்கும் ஒரு பெண்ணைப் பிடித்தாகி விட்டது. இங்கே தான் எனக்கு சனி பிடிக்க ஆரம்பித்தது.(மத்திய சனி வேறு நடந்து கொண்டிருந்தது).இந்த காலக்கட்டத்தில் தான் இந்த இரண்டு பேரும் சேர்ந்து டெலிபோனில் கேடித்தனங்கள் சொல்லிக் கொடுத்து ஒரு அப்பாவியை அ"ட"ப்பாவியாக மாற்றினார்கள்.

அந்த இரண்டு பெண்களும் ஒரே பள்ளியில் படித்தவர்களாம்.முகம் குடுத்து பேசாத எதிரிகளாம்.இது எனக்கு எப்படி தெரியும்.தெரிந்தவுடம் கவலைப்படவில்லை.சரி இனி குழப்பத்தை தவிர்க்க..

முதல் பெண் பெயர் - எக்ஸ்

இரண்டாவது பெண் பெயர் - வொய்

இந்த கதையை சொன்னது - இசட் என்ற பெண்ணிடம்

வொய்யிடம் பழகுவது எக்ஸிற்கு பிடிக்கவில்லை.தனியாக இருக்கும் போது என்னிடம் பேச வந்தாள்.எல்லாம் சொல்லி முடித்தவுடன் கடைசியாக சொன்னது..

எக்ஸ் - "அ.... நான் ரொம்ப பொஸசிவ்.."

அந்த சமயத்தில் நான் ஆங்கிலத்தில் ஒரு அரகுறை..(16 வயதினிலே ரஜினிகாந்த் போல நானாகவே மொழி பெயர்த்து அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று நினைத்து கொண்டேன்.இப்போ எப்படி என்றால் நான் வேலைகாரன் ரஜினி மாதிரி ஐ கேன் வாக் இங்கீஸ்,ஐ கேன் டாக் இங்கீஸ்,ஐ கேன் லாவ் இங்கீஸ்.பொஸசிவாக இருந்தாலே பிரச்சனை தான்)

நான் சொன்னேன்."நல்ல டாக்டரா பாக்க வேண்டியது தானே.."நல்லவேளை அவள் காதில் விழவில்லை.திரும்ப சொல்ல தைரியமில்லை.அவளுக்கு கராத்தே தெரியும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

இப்படி வொய் மேல் இருந்த வெறுப்பு என் பக்கம் திரும்பியது.சின்ன சின்ன சண்டைகள் ஒரு பெரிய சண்டைக்கு பிறகு முடிந்து போனது.

கையெழுத்தை வைத்து கண்டுப்பிடிக்க தொடங்கி விட்டார்கள்.(ஒரு சமயம் டபிள்யூ என்ற மூன்று நண்பர்களுக்கு அசைன்மெண்ட் எழுதி தர எல்லோரும் மாட்டி கொண்டோம்).கண்கொத்தி பாம்பாக பார்க்க ஆரம்பித்தார்கள்.வொய்யும் எழுதி தர முடியாத நிலை.

ரொம்ப நாட்களுக்கு அந்த கொடுமை தாங்காமல் இந்த தடவை நிஜமாக பொங்கி எழுந்தேன்.பசங்க யாரும் எழுதக் கூடாது என்று முடிவு செய்தோம்.சில கருணாக்கள் எங்கள் கூட்டத்திலும் உண்டு.எழுதி நல்லப் பெயரும்,மார்க்கும் வாங்கி கொண்டார்கள்.நாங்கள் ஒரு பதிமூன்று பேர் மட்டும் எழுதுவதை நிறுத்தி விட்டோம்.

சரி கதைக்கு வருவோம்...

அவள் சண்டையிட்டு பிரிந்த அன்று தான் டிக்ஸ்னரியைத் தேடி கொண்டிருந்தேன்.

"அம்மா..அம்மா இங்க இருந்த டிக்ஸ்னரியப் பாத்தியா.."

"நீயே ஒரு அகராதி பிடிச்சப் பய..உனக்கு எதுக்கு இப்போ டிக்ஸ்னரி.." - அம்மா

நானே கண்டுப்பிடித்து பொசஸிவ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன்.
(மருதமலை வடிவேல் ஞாபகத்திற்கு வந்தார்.அவர் கேன்ஸரை டிரான்ஸர் என்று சொல்லுவார்.)

இசட் - "ம்.. ம்..நானும் பொஸசிவ்.."

"என்ன நக்கலா..ஒடிப் போயிரு.." என்று கோபத்தில் கத்தி விட்டேன்.

நாற்பது வருடங்கள் கழித்து..

"அமர் என்ன ஏதையோ ஒளிச்சி வைச்சி பாக்குற..காட்டு பாக்கலாம்.." என்று பேரனிடம் கேட்டேன்.

"இல்ல அந்த பொண்ணு 'ஜி' ஒரு லெட்டர் கொடுத்தா..அதான் படிச்சிகிட்டு இருக்கேன்.."

"என்ன அமர் லெட்டர் இங்கிலீஸ்ல இருக்கு.."

"ஆமா..அவ பி.ஏ இங்கிலீஸ் லிட்டிரெச்சர் படிக்கிறா.."

"சரி இத வைச்சுகோ..உனக்கு தேவைப்படும்.." என்று டிக்ஸ்னரியைக் கொடுத்து விட்டு வந்தேன்.

டிஸ்கி : பொண்ணுங்க மட்டும் எப்படி எல்லா மொழியையும் உடனே கத்துகிடுறாங்க..
(பின்ன கொஞ்ச நேரம் கூட வாய் பேசாம எப்படி இருக்க முடியும்..)

Wednesday, September 16, 2009

சரக்கு மீதமில்லை(நையாண்டி நைனா)

உனக்கு வேண்டுமானால்
வேறும் சரக்காயிருக்கலாம்
எனக்கு அது
போதையாயிற்றே

வாட்டர் குடிக்க அடம்
மீசை வைத்த குழந்தைக்கு
குவாட்டரில் ஆனந்தம்

டாஸ்மாக்கில் திருடிய டம்ளர்
இன்னும் உன்னிடம்
உள்ளதா?
புது நண்பனுக்கு
அதே சைஸில் ஒன்று
திருடியிருக்கிறேன்

கலக்குவதும்,அடிப்பதும்
பின் கலக்கி
எடுப்பதும்
போதைதானே

போதையில்
அடிக்கடி ஒரு
பதில் சொல்படுகிறது.
நல்ல சரக்கா இல்ல டூ....

சியர்ஸ் என்று
பரஸ்பரம் சொல்லிக் கொண்டோம்
சியர்ஸ் என்று
நீ பொய் சொன்னாய்
சரக்கை அடித்து விட்டு
சியர்ஸ் என்று
நான் உண்மை சொன்னேன்
இன்னும் அடிக்காமலே

ஒரிஜினல் சரக்கு இங்கே

ஆண்ணியம் - ஈயம்+பித்தளை

ஆண்ணியம் பேசும் கூட்டத்தை சிங்கம் வழி நடத்தும் செம்மறி ஆட்டு கூட்டத்துடன் ஒப்பிடலாம்.பெண்ணியம் பேசும் கூட்டத்தை செம்மறி ஆடு வழி நடத்தும் சிங்கக் கூட்டத்துடன் ஒப்பிடலாம்.இறுதியில் வெல்ல போவது யார் என்று பார்த்தால் சிங்கத்தைத் தலைவனாக கொண்ட அந்த ஆட்டுக் கூட்டம் தான் வெற்றி பெறும்.

எப்படி என்று பார்ப்போம்..

முதலில் வரதட்சணை - வரதட்சணை என்பது பெண் தீர்மானிக்கும் விசயம் அல்ல என்றாலும் அதனால் தான் ஆண் ஆதிக்கம் வளருகிறது.திருமணமும் வரதட்சணையும் குடும்பம் சம்பந்தம் பட்டது என்றாலும் பெண்ணியம் பேசுபவர்கள் எல்லோரும் வரதட்சணை கொடுப்பதில்லை என்று முடிவு செய்யுங்கள்.அதனால் என்ன பிரச்சனை வந்தாலும் அது ஒரு ஆயுதமாக ஆண்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.

என் கல்லூரி காலத்தில் வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று சொன்ன பெண் தான் அதிக வரதட்சணை கொடுத்தது.பேசும் போது என்ன வேண்டுமானாலும் பேசுவது,பிறகு சமரசம் செய்து கொள்வது.அமெரிக்கா என்றவுடம் அந்த புரட்சி பெண் மாறி விட்டாள்.

பெண்கள் அவர்களை விட அதிகம் படித்த மற்றும் சம்பாதிக்கும் ஆணைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்.அவர்களை விட குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் ஆணைத் திருமணம் செய்தது கொள்ளுங்கள் அப்படி செய்தால் விரைவில் கட்டுக்குள் வந்து விடும். அப்படி செய்தால் கணவனிடம் ஏதாவது சொன்னால் "என்னை விட அதிகம் சம்பாதிக்கும் திமிரில் பேசுகிறாயா.." என்று கணவன் சொல்வான் என்று விதண்டாவாதம் செய்யக் கூடாது.

மேலே சொன்னது விதண்டாவாதம் என்று சொன்னால் "ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி விட்டு பஸ்சில் தனிசீட்டு வேண்டும்" என்று கேட்பதும் விதண்டாவாதம் தான். இப்படி சொல்வது வாதம் என்றால் மேலே இருப்பதும் வாதம் தான்.

கல்யாணம் முடிந்த பிறகு ஏன் வரதட்சணை புகாரில் மற்றவர்களை உள்ளே தள்ள வேண்டும்.கல்யாணப் பேச்சு எடுக்கும் போதே வரதட்சணை கேட்டார்கள் என்று புகார் செய்ய வேண்டியது தானே.அப்படி ஒரு பத்து பேர் செய்யுங்கள்.கொடுக்க மாட்டேன் என்று சொல்லுங்கள்.எல்லாம் சரி ஆகி விடும்.

வரதட்சணை வாங்க மாட்டேன் என்று யாராவது சொன்னால் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று ஏன் ஊர் பக்கம் ஒருவரும் பெண் கொடுக்க மாட்டார்கள்.வாங்குனாலும் பிரச்சனை.வாங்காவிட்டாலும் பிரச்சனை.இரண்டு பக்கமும் அடி,இடி எல்லாம் விழுகிறது.

பெண் குற்றம் சாட்டினால் உடனே வேட்டிய வரிஞ்சு கட்டிக்கிட்டு விசாரிக்காம அந்த ஆண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.இந்த மாதிரி பிரச்சனையில் அதிகம் அப்பாவி ஆண்களே பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் தவறு செய்யும் பக்கம் தப்பி விடுகிறது.

மும்பையில் ஒரே இருக்கையில் தான் ஆணும்,பெண்ணும் பயணம் செய்கிறார்கள் என்ன பிரச்சனை வருகிறது.இதுவரை ஒன்றும் இல்லை.இதுவே ரயிலில் மகளிர் பெட்டியை எடுத்து கொண்டால் ஒரு பெண்ணை ஏற விடாமல் நான்கு பெண்கள் அந்த பெண் கீழே விழுந்து இறந்து விடுகிறாள்.நல்ல ஒற்றுமை பெண்களிடம்.

பெண்களிடம் வம்பு செய்வது சில படிக்காதவர்களும்,சில படித்த முட்டாள்களும் தான்.அதற்கு ஒரு உதாரணம்.

ஒருவன் பேருந்தில் பயணம் செய்யும் போது பக்கத்து இருக்கையில் இருக்கும் ஒரு பெண்ணிடம் வம்பு செய்கிறானாம்.அந்த பெண் ஒரு ஊமை.எதிர்ப்பு தெரிவிக்காததால் மடிந்து விட்டது என்று ஊர் பொய் சேரும் வரை தொல்லை கொடுத்து கொண்டேயிருந்தானாம்.மேலும் எட்டு வயது குழந்தைகள் முதல் எதிர்ப்பு தெரிவிக்காத எல்லாரிடமும் இது போல நடப்பானாம்.இது இணையத்தில் இருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஒரு ஆண்.தற்சமயம் அந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி நடந்து கொள்ளும் நபர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று விவாதியுங்கள்.மும்பையில் இருக்கும் பெண்களுக்கு இப்படி நடக்க முயற்சிக்கும் நபர்களைக் கையாளத் தெரிகிறது.தமிழ்நாட்டில் அது தெரியவில்லை.

ஆணுக்கு வேலை இல்லை,அந்த பெண் சம்பாதிக்கிறாள் என்றால் அந்த ஆணுக்கு ஊர் உலகம் என்ன பெயர் சூட்டும்.பெண் வீட்டில் இருந்தால் அந்த பெயர் வருமா?.

"நான் வீட்டுல இருந்து குழந்தைய பார்த்துகிறேன் நீ வேலைக்கு போ இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் " என்று ஒரு விவாதத்தில் சொன்ன நேர்ந்த போது இந்த கருத்து விதண்டாவாதமாக திரிக்கப்பட்டது.பரிபூரண சுதந்திர நாடான பிரான்சில் இந்த வழக்கம் உண்டு.

பெண் சுதந்திரம் பெரிதாக இல்லாத காலக்கட்டத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய படங்கள் - அவள் ஒரு தொடர்கதை,அவர்கள்,அவள் அப்படித்தான்.இந்த படங்களின் வெற்றிக்கு காரணம் ஆண்கள் தான் நிச்சயம் பெண்கள் கிடையாது.

சதி எதிர்ப்பு,பால்ய விவாக எதிர்ப்பு,பெண் கல்வி இப்படி எல்லா புரட்சிகளுக்கும் காரணம் ஆண்கள் தான்.

சிங்கக் கூட்டத்தை வழி நடத்தும் அந்த ஆடு - பெண் பிள்ளைகளின் அப்பாவி அப்பா.

ஆட்டுக் கூட்டத்தை வழி நடத்தும் அந்த சிங்கம் யார் தெரியுமா - அம்மா தான்.ஆண்கள் வளருவதே பெண்களிடம் தான் முதலில் ஆண் - பெண் பேதங்களை விதைப்பதே பெண்கள் தான்.முதல்ல இந்த இடத்துல ஆரம்பிக்கும் கோட்டை நேராக வரையுங்கள்.கடைசி வரை நேராகத் தான் இருக்கும்.

டிஸ்கி :

நான் இங்கே பேயா கத்துறேன்.எங்க வீட்டில் என் சித்தி பெண்ணுக்கு வரதட்சணை எவ்வளவு கொடுக்கலாம் என்று விவாதம் செய்கிறார்கள்.என்ன கொடும சார்..

இதை எழுத வேண்டாம் என்று நினைத்தேன்.வேறு வழியில்லை.தைரியமாக புரட்சிக்கருத்துகள் சொல்லும் ஒரு பெண்ணை வெளிநாட்டில் திருமணம் ஆனா ஒருவன் ஏமாற்றி விட்டான்.

Tuesday, September 15, 2009

ஈரம் படம் கிளப்பிய சில நினைவலைகள்

சில படங்களைப் பார்க்கும் போது சில நினைவுகளைக் கிளறி விடும்.அப்படி ஒரு படம் தான் ஈரம்.சின்ன வயதில் இருந்து எனக்கு ஒரு பழக்கம் உண்டு.கிராமத்தில் இருக்கும் சமயம் கற்றுக் கொண்டது.அது அழகாக இருந்தாலும் சரி,அளவாக இருந்தாலும் சரி தூரத்தில் இருந்தே கணிப்பது தான் வழக்கம்.

அக்கணிப்பு ஏறக்குறைய சரியாகவே இருக்கும்.(கண் அளக்காததையா கை அளந்து விடப் போகிரது என்று என் ஆச்சி சொல்வார்கள்).சின்ன வயதில் ஏதாவது பயணத்தின் போது ஒரு வினாடி நேரமே பார்க்கும் முகங்கள் கூட இன்று வரை என் ஞாபகத்தில் உண்டு.ஆனால் ஒரு பெண்ணின் முகம் மட்டும் என்னை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.இதற்கும் அந்த பெண் என்னோடு நாலு வருடம் என்னுடன் படித்தவள்.அவளைப் பார்த்ததில் இருந்து கணிப்பு தவறாகவே இருந்தது.

அதனால் வந்த பலன் - சில சமயம் பின்னால் இருந்து ஒரு பெண்ணைப் பார்த்து விட்டு துரத்தி போய் ஏமாந்து நிற்பது வழக்கமாகி விட்டது.ஈரம் படத்தில் வரும் சிந்து மேனனைப் பார்த்த உடன் அந்த பெண்ணின் முகம் ஒளிந்திருந்த நினைவடுக்களில் இருந்து கிடைத்து விட்டது.இனிமேல் கணிப்பு வேலை நிச்சயம் செய்யும்.அனாவசிய துரத்தல்கள் இருக்காது.ஏமாற்றமும் இருக்காது.

ஈரம் பார்க்கும் போது வந்த இன்னொரு ஞாபகம் - மழைக்காலத்தில் ஒரு பெண்ணோடு நனைந்து கொண்டே அவள் வீடு வரை போனது.அவள் என் தோழி மட்டும்.(இப்படி தான் நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன்.என்னைக்கும் பேச்ச மாத்த மாட்டேன்.ஆனா யாருமே நம்பல என் நண்பர்கள் உட்பட)

நான் ரசித்த இன்னொரு காட்சி.

ஆதி வீட்டிற்கு வரும் சிந்து அவருக்கு ஆம்லேட் போட்டு தருவார்.பிறகு கையை முகர்ந்து பார்த்து கொண்டேயிருப்பார்.ஒரு நாள் நாங்களும் முட்டை சாப்பிட்டு கொண்டிருந்தோம்."இதெல்லாம் எப்படி சாப்பிடுறீங்க.." என்று முகம் சுளித்தாள்.அதிலிருந்து நிறுத்தி விட்டேன்.சாப்பிடுவதை அல்ல அவளுடன் பழகுவதை.அங்கே புள்ளியாக ஆரம்பித்த விரிசல் பிறகு எப்படி ஆனது என்றால் "அவளுக்கு என்னை பிடிக்காது.எனக்கு அவளை கொஞ்சம் கூட பிடிக்காது".சில விஷயங்களில் சமரசம் கிடையாது.

பதினாறு வருடங்களுக்கு முன் படித்த ஒரு நாவல் நினைவுக்கு வந்தது.

கணவனுக்கு மனைவி மேல் சந்தேகம்.காரணம் படிக்கும் காலத்தில் அவளுக்கு ஒரு காதலன் உண்டு.அவளுடன் சண்டை போடுகிறான்.அவள் ஊருக்கு புறப்படுகிறாள்.வழியிலேயே அவளை சமாதானப் படுத்தி இறக்கி ஒரு காட்டில் வைத்து அவளை கொலை செய்து புதைது விடுகிறான்.கடிதம் எழுதி வைத்து விட்டு அவள் ஓடி விட்டதாக நாடகமாடுகிறான்.

சந்தேகம் பழைய காதலனிடம் திரும்புகிறது.அவன் ஒரு டிடக்டீவ்.துப்பறியத் தொடங்கி விடுகிறான்.கொலைகாரன் மனைவியின் தங்கையை மணந்து கொல்கிறான்.அவளுக்கும் ஒரு காதலன் உண்டு.அது ஒரு சொல்லப்படாத காதல்.

அவள் வீட்டிற்கு வந்து கண்டுப்பிடித்து விடுகிறாள்.அக்கா ஓடிப் போகவில்லை,காணாமல் போயிருக்கிறாள் என்று.அக்காவின் டிடக்டீவ் காதலனும் தங்கையுடம் சேர்ந்து தேடத் தொடங்குகிறான்.

தங்கையின் காதலன் வேலை காரணமாக கென்னை வருகிறான்.எதிர்பாராத விதமாக இருவரும் சந்தித்து கொள்கிறார்கள்.அதை கணவனும் பார்த்து விடுகிறான்.

அவளை கொலை செய்ய முடிவு செய்கிறான்.இந்த பெண்ணின் காதலனும்,அக்காவின் டிடக்டீவ் காதலனும் அவளை கடைகி நேரத்தில் மீட்டு விடுகிறார்கள்.

சுபம்.

இந்த கதையில் வரும் நபர்களில் இரண்டு பெயர் தான் ஞாபகத்தில் இருக்கிறது.

தங்கையின் பெயர் - லதா.

அக்காவின் காதலன் பெயர் - ஆனந்த்.

இப்படி எல்லாம் படங்கள் வந்து பழைய நினைவுகளைத் தட்டினால் நிச்சயம் அது வெற்றி தான்.

தழுவலோ இல்லை உள்வாங்குதலோ ஆனால் கொஞ்சம் வித்தியாசப்படுத்தி எடுத்தாலும் படம் வெற்றி தான்.கேள்விகளும்,கேலிகளும் குறைவாகவே இருக்கும்.

சேரனும் வலைப்பூ எழுதுபவர்களை "தாந்தோன்றிகள்" என்று சொல்ல மாட்டார்.

இப்படி எந்த படம் எடுத்தாலும் ஏற்கனவே படித்தது,பார்த்தது,கேட்டது என்று விமர்சனம் வரும்.தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை எல்லா கதைகளும் எடுத்தாகி விட்டது என்று சொல்வார்கள்.திரைக்கதையில் மாற்றம் செய்து விளையாடினால் ஒரு சொல்லப்படாத கோணத்தில் புது கதை ஒன்று கிடைக்கும்.அது ப்ளாகர் உலகத்தாலும் சிலாகிக்கப்படும்.

அது மாதிரி வேறு கோணத்தில் வந்த படங்கள் - நாடோடிகள்,யாவரும் நலம்.

இந்த வரிசையில் ஈரம் படமும் சேர்ந்து இருக்கிறது.

Monday, September 14, 2009

அழகு + காதல் + பணம் = கடவுள்.

இந்த தொடர்பதிவை எழுத அழைத்த நண்பர் நையாண்டி நைனாவிற்கு என் நன்றிகள்.

முதலில் இந்த கேள்விகளுக்கு பதில் தருவது ப்ளாக்கர் இரும்புத்திரை அரவிந்த்.

அழகு :

காதல் தானே தேடி வரும்.பணம் முயற்சி செய்தால் ஓடி வரும்.விருப்பம் இருந்தால் கடவுள் என்பவரைத் தேடலாம்.

காதல் :

அழகைப் பார்த்தே வருவது.பணம் இருந்தால் இன்னும் வசதி,கடைசி வரை இருக்கும்.கை கூடாத நேரத்தில் கடவுளைத் திட்டலாம்.

பணம் :

அழகைப் புத்தகம் போல புரட்டலாம்.அடுத்தவன் மனைவியையும் காதலிக்கலாம்.கடவுளைக் காண முன்னுரிமை உண்டு.

கடவுள் :

நம் வீட்டு படங்களில் அழகாக இருப்பவர்.காதல் அனுபவம் இருக்கும் என்றே நினைகிறேன்.பணம் என்ற கோட்டால் மக்களைப் பிரிப்பவர்.

இனிமேல் பதில் சொல்ல இருப்பது வாசகன் அரவிந்த்..

அழகு :

சொற்பக் காலமே நீடிக்கும் அற்பம்.

காதல் :

கருமாந்திரம்,குடிக்க உதவும் ஒரு கா"ரணம்",தொட்டுக் கொள்ள இருக்கும் கருவாடை விட மவுசு குறைவாக இருக்கும் ஒரு உணர்வு.

பணம் :

அழகு,பந்தம்,பாசம்,உறவு,நட்பு,காதல்,தோல்வி,வெற்றி,வேஷம் என்று பாரபட்சமில்லாமல் அளவிடும் தராசு.பிச்சைப்பாத்திரத்தில் விழும் காசு எழுப்பும் கன நேர அதிர்வு.

கடவுள் :

காணாமல் போனவர்கள் என்று அறிவிக்கப்பட வேண்டிய முதல் நபர்.

உலகம் முழுவதும் ஒரு சர்வே நடத்தப்படுகிறது.நடத்தியது ஐக்கிய நாடுகள்.

கேள்வி - "நீங்கல் தயவு செய்து உங்கள் நேர்மையான கருத்தை சொல்லுங்கள்.மற்ற நாடுகளில் நிலவி வரும் உணவு பற்றாகுறையைப் போக்க தீர்வு என்ன ?"

சர்வே படுதொல்வி அடைகிறது.ஏன் என்றால்

ஆப்பிரிக்காவில் உணவு என்றால் தெரியவில்லை.

இந்தியாவில் நேர்மை என்றால் தெரியவில்லை.

ஐரோப்பாவில் பற்றாகுறை என்றால் தெரியவில்லை.

கீனாவில் கருத்து என்றால் தெரியவில்லை.

மத்திய கிழக்கில் தீர்வு என்றால் தெரியவில்லை.

தென் அமெரிக்காவில் தயவு செய்து என்றால் தெரியவில்லை.

அமெரிக்காவில் மற்றா நாடுகள் என்றால் தெரியவில்லை.

அது மாதிரி தான் எனக்கும்.

அழகை அலட்சியம் செய்யத் தெரியவில்லை.காதலில் ஜெயிக்க தெரியவில்லை.பணத்தை சம்பாதிக்க தெரியவில்லை.கடவுளைக் கண்டுப்பிடிக்க தெரியவில்லை.

கடவுளே என்னை ஏன் அழகாக படைச்ச,பணத்தோடு படைச்ச,காதலோடு படைச்ச இப்படி கத்தி அவங்க வீட்டு நிலைக்கண்ணாடிய உடைக்க நான் கூப்பிடும் ஐவர்.

லோகு.

துபாய் ராஜா.

க.பாலாஜி.

ஈரோடு கதிர்.

ஜெகநாதன்.

அசத்திய அறிமுக இயக்குனர்கள்

அறிமுக இயகுனர்களால் மட்டுமே சினிமா அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு போக முடியும் என்பது என்னுடைய கருத்து.பாரதிராஜாவின் வருகைக்கு பிறகே தமிழ் சினிமாவில் ஒரு புது இரத்தம் பாய்ச்சப்பட்டது.அதனால் அவரில் இருந்து ஆரம்பிப்போம்.

16 வயதினிலே : பாரதிராஜா

மயில் என்றுதான் படத்திற்கு முதலில் பேர் வைக்கப்பட்டது.இளையராஜா - பாரதிராஜா சேர்ந்து கலக்கிய படம்.முதலில் இந்த படத்தில் பணி புரிய இளையராஜா மறுத்துள்ளார்(ஈகோ - அவர் வாழ்க்கைச் சுவடை படித்து தெரிந்து கொள்ளலாம்.இதுவே ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவில் நுழைய காரணமாக இருந்தது).இந்த படம் கூட ஆங்கில படத்தின் தாக்கம் என்று சொல்கிறார்கள்.(மறுபடியும் இளையராஜா வாழ்க்கை சுவடு).கமல்,ரஜினி இருவருக்கும் இது ஒரு மைல்கல்.

கோகிலா(கன்னடம்) - பாலு மகேந்திரா

கலைஞனுக்கு மொழி தடையில்லை என்று நிருபித்த படம்.கமல்,ஷோபா,மைக் மோகன்(அங்கே அவர் கோகிலா மோகன்) என்று எல்லோரும் நடித்த படம். கமலின் மிக சிறந்த நடிப்பு என்றால் இந்த படத்தை தான் சொல்வார்கள்.( மதன் சொன்னது - இந்த படத்தைப் பார்த்த பிறகு கமலின் நடிப்பை பற்றிய விமர்சனங்களை நான் மாற்றி கொண்டேன்).கமல் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்.

முள்ளும் மலரும் - மகேந்திரன்

பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு.ரஜினி,ஷோபா,சரத்பாபு என்று மும்முனை பாசப் போராட்டங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய படம். "இன்ஜீனியர் சார் உங்கள இப்பவும் எனக்கு பிடிக்கல.." என்று இறுதிகாட்சியில் ரஜினி வசனம் பேசிய போது சரத்பாபு கோவப்பட்டு எங்கோ போய் விட்டாராம்.அந்த அளவிற்கு ஒரு அழுத்தமான படம்.(கல்யாணத்தை விட அண்ணனே முக்கியம் என்று ஷோபா ஒட்டி வரும் காட்சி ஒன்றே போதுமே)

பன்னீர் புஷ்பங்கள் - வாசு - பாரதி

வாசு - சந்தானபாரதி இணைந்து இயக்கிய படம்.படிக்கும் காலத்தில் வரும் காதலை பற்றிய கதை.இதன் தொடர்ச்சி என்று துள்ளுவதோ இளமை படத்தை எடுத்து கொள்ளலாம்.

புதிய பாதை - பார்த்திபன் .

கமலுக்கு எழுதிய கதை.பிறகு பார்த்திபன் நடித்து விட்டார்.வித்தியாசமான திரைக்கதை.

புது வசந்தம் - விக்ரமன்

அந்த காலக்கட்டத்தில் ஆண் - பெண் நட்பை சொல்லிய படம்.வெற்றியைத் தேடி கால் தேய நடக்கும் ஒவ்வொரு இளைஞனின் போராட்டத்தையும்,ஏக்கத்தையும் இந்த படத்தில் பார்க்கலாம்.

கமலஹாசன்

கமல் தான் அந்த படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம்,தயாரிப்பு எல்லாம்.அந்த இயக்குனரோடு சண்டை.பாதி படத்தை கமல் தான் இயக்கினார்.பேர் போடவில்லை(மன்மதன் சிம்பு இதை கொஞ்சம் யோசிங்க..)

ஜென்டில்மேன் - ஷங்கர்

அழகிய குயிலே என்று படம் எடுக்க அலைந்தவரை கோடம்பாக்கம் மாற்றியதற்கு உதாரணம் தான் இந்த படம். அவரால் கடைசி வரை அந்த படம் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.

பாரதி கண்ணம்மா - சேரன்

சேரனின் வருகையை பறைசாற்றிய படம்.பெரிய வீட்டில் இழவு விழுந்திரிச்சி படுக்கையில் கிடக்கும் பாட்டி என்று எல்லோரும் நினைப்பார்கள்.ஆனால் மீனா இறந்தியிருப்பார்.பிறகு பார்த்திபனும் சிதையில் விழுந்து விடுவார்.(ஆண் முதல்முதலாக உடன்கட்டை ஏறுவார்).

சேது - பாலா

கமல் நடிக்க வேண்டிய படம் இது என்று கதை சொல்லும் போது விக்ரமிடம் சொல்லியுள்ளார் பாலா.யாராவது ஒருவர்(நாயகன் அல்லது நாயகி) இறப்பது என்ற முடிவை ஆரம்பித்து வைத்த படம். பாலு மகேந்திராவின் பள்ளியின் வெற்றியை சொன்ன முதல் படம்.

இன்னும் வந்த சில வித்தியாசமான படங்கள்.

கண்ணெதிரே தோன்றினாள் - இரவிச்சந்திரன்

காதலை விட நட்பை பெரிது என்று சொன்ன படம்.

விரும்புகிறேன் - சுசிகணேசன்

காதலின் அழுத்தத்தை சொன்ன படம்.

மின்னலே - கௌதம் மேனன்

இன்று பார்த்தாலும் சலிக்காத படம்.

இந்தப் படத்தை பற்றி எல்லாம் சொல்லவே தேவையில்லை.

சுப்ரமணியபுரம் - சசிகுமார்.

வெண்ணிலா கபடிக்குழு - சுசீந்திரன்

பசங்க - பாண்டியராஜ்.

யாராவது விடுபட்டு இருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லவும்.

Saturday, September 12, 2009

பிரபலங்கள் சொன்னது,மனதில் நினைத்ததும்

விஜய் : அரசியல் என்பது ஒரு பெரிய கடல்.நீச்சல் பயிற்சி எடுத்தப் பிறகே வருவேன்..

(நீச்சல் பயிற்சி எடுக்கும் போது ஏதாவது வலையில சிக்கி மூங்காம இருக்கணும்)

அஜித் : அசல் படத்தைப் பற்றி நான் பேச மாட்டேன்..

(படம் வந்த பிறகு யார் கேட்க போறா..கும்மி அடிக்கவே நேரம் போதாது..)

சிம்பு : நான் இயகுன முதல் படம் மன்மதன்..

(நாம என்ன சொன்னாலும் இந்த விகடன் மாதிரி கேனையனுங்க கேக்குறாங்க..அந்த பய ஏ.ஜே.முருகன் எங்கே இருக்கானோ..)

எஸ்.ஜே.சூர்யா : தமிழ்,இந்தி,தெலுங்கு இந்த மூணு மொழியிலயும் நான் பெரிய ஹீரோவா வரணும்..

(நல்ல வேலை இதை சொல்லும் போது நான் சிரிக்கல)

பிரமிட் சாய்மீரா : கமல் எங்களுக்கு தர வேண்டிய 10 கோடிய திருப்பி தரனும்..

(அடுத்த நோட்டீஸ் ரெடி பண்ணுங்க..எந்திரன் வரும் போது ரஜினிக்கு அனுப்பனும்)

ஒ.பன்னீர் செல்வம் : தி.மு.க கட்சியில் இருந்து யாரும் என்னை கூப்பிடவில்லை..

(நானும் கூப்பிடுவாங்கன்னு பாக்குறேன்.. ஒருத்தரும் கண்டுக்கவே இல்லை..)

பா.ம.க : நாங்கள் இன்ன்னும் அ.தி.மு.க கூட்டணியில் தான் இருக்கிறோம்...

(இப்படி சொல்லிதான் அவங்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டியிருக்கு..எப்படி) இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்..)

இராமதாஸ் : ஓட்டுப் போட்ட பிறகு எந்த கட்சிக்கு போட்டாங்கன்னு தெரிய ரசீது கொடுக்கணும்..

(அந்த ரசீதப் பார்த்துதான் ஓட்டுப் போடாதவங்க வீட்ல உள்ள சட்டி போட்டி எல்லாம் குருவ விட்டு தூக்க சொல்லணும்)

ராகுல் காந்தி : மாநிலத்தில் உள்ள நதிகளை தான் இணைக்க முடியும்..இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க முடியாது..

(நாம தமிழ்நாட்டுக்கு வெளியில தானே இருக்கோம்)

வை.கோ : ராகுல் காந்தி சொன்னது அசட்டுத்தனமான கருத்து..

(ராகுல் புண்ணியத்துல ரொம்ப நாள் கழிச்சி டிவில வந்தாச்சு..)

சுப்ரமணியசாமி : விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்கள்..

(எனக்கு தரல..அதான் இப்படி..)

ப.சிதம்பரம் : பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்புகிறார்கள்..

(அடிக்கடி அனுப்பாதீங்க.. எங்களால பிடிக்க முடியாது..அப்புறம் எனக்கு பதவி போயிரும்..)

ஜெயம் ராஜா : இதுவரைக்கும் நான் ஹீரோ பில்டப் கொடுத்தது இல்ல..ஆனா அது தில்லாலங்கடி படத்துல இருக்கு..

(தெலுங்கு படம் கிக்ல கூட ஹீரோ பத்தின பில்டப் உண்டு..)

விஜயகாந்த் : விஜய் என் தம்பி மாதிரி..அரசியலுக்கு வரலாம்..

(விஜய் கூட ஒரு கல்யாண மண்டபம் வச்சு இருக்காரு..)

Friday, September 11, 2009

வாசி..சுவாசி..நேசி..

சின்ன வயதிலே இருந்து புத்தகம் வாசிப்பது என்றாலே ஒரு அலாதி பிரியம் தான்.என்னிடம் உள்ள ஒரு பழக்கம் எட்டு மணிக்கு பள்ளிக்கு போக வேண்டும் என்றால் நான் அரை மணி நேரம் முன்னாடி தான் எழுந்திருப்பேன்.என் அம்மா எழுப்பினால் கூட "ஒரு அஞ்சு நிமிசம்மா.." சொல்லியே நேரத்தை கடத்துவேன். +2 படிக்கும் பொது இதையே செய்தேன்.எனக்கு பொது தேர்வு நடந்த சமயத்தில் எல்லோரும் விழித்திருப்பார்கள்.நான் மட்டும் தூங்கி மகிழ்வேன். அது இன்றும் தொடர்கிறது.தொட்டில் பழக்கம் என்றாகிவிட்டது.ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அலாரம் வைத்து வைத்து விழிப்பேன்(7.30௦ - 8.௦௦00) . இதுதான் அந்த ஐந்து நிமிட சொர்க்கமா இல்லை சுகமா..ஆனால் வெள்ளிகிழமை மட்டும் நான் தான் முதலில் விழிப்பேன் - சேவலையும் எழுப்புவேன்.காரணம் சிறுவர்மலர்.

வேகமாக வாசிக்க கற்றுக் கொண்டதே சிறுவர்மலர் இணைப்பை வைத்து தான்.ஆறு வயதில் தொடங்கிய வாசிப்பு இன்று நிறைய புதிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

அப்படி வந்த சில மாற்றங்கள்..

ஆறு வயது முதல் ஒன்பது வயது வரை - சிறுவர்மலர்,கோகுலம்,ராணி காமிக்ஸ்,வாண்டு மாமா,அம்புலிமாமா.

ஒன்பது வயது முதல் பதினெட்டு வரை - நாவல்கள்(கழிசடை முதல் நல்ல நாவல்கள் வரை),குமுதம்,ஆனந்த விகடன்,_____ (ஒரே ஒரு புத்தகம் - அதிலும் ஒரே ஒரு கதை தான்)

பதினெட்டு முதல் இருபத்தி நாலு வரை - எல்லாம் வெறுத்து போய் எது கிடைத்தாலும் படிக்கிறது.(கடலை மடிச்சு தரும் தாளை கூட விடுவது கிடையாது)

கடந்த வருடத்தில் இருந்து - பாக்குற எல்லா வலைப்பூகளையும் ஒன்னு விடாமல் மேய்வது.

புத்தகம் படிக்க மட்டும் நான் ரிஸ்க் எடுக்க தயங்கியதே இல்லை.ராணி காமிக்ஸ் வாங்க பள்ளிக் காவலாளிக்கு லஞ்சம் கொடுத்து(அந்த பணத்துல நாலு புத்தகம் வாங்கலாம்).விடுதியில் தங்கி இருந்த காலத்தில் பொறுமை இல்லாமல் பள்ளிக்கே எடுத்து சென்று படித்திருக்கிறேன்.புத்தகம் இரவல் தரும் எல்லாருமே நண்பர்கள் தான்.ஒன்பது வயதில் நான் படிக்காத அம்புலிமாமாவை இரவல் கேட்ட போது ஒரு அத்தை "இதெல்லாம் படிச்சா நீ கேட்டுப் போயிருவ.." இப்படி சொல்லி தரவேயில்லை. (இதெல்லாம் சும்மா நான் பாலகுமாரன் நாவல்கள் படிக்க தொடங்கியிருந்த காலமது.அது படிச்சே கேட்டு போகல..அம்புலிமாமா படிச்சா கேட்டுப் போயிருவேன்)

காயலான் கடையிலே தவமிருந்து அங்கு இருக்கும் நாவல்களை எல்லாம் வாங்கி வருவேன்.பாலகுமாரன்,சுபா (முதல் கதை ஒரு ஆபத்தான கதை அண்ணனும் தங்கையும் காதலிக்கும் கதை),ராஜேஷ்குமார்,பிரபாகர் - இப்படி ஒரு நாவல்கள் விடாமல் விடாமல் படித்து இருக்கிறேன்.

சாப்பிடும் நேரத்தில் கூட புத்தகம் படித்தால் தான் சாப்பாடு இறங்கும் என்ற நிலை இன்று வரை தொடர்கிறது."ஒருநாள் வரட்டிய வைக்க போறேன்..அதையும் நீ சாப்பிடத்தான் போற..முதல்ல தட்டப் பாத்து சாப்பிடு.." என்று அம்மா மிரட்டி பார்த்தும் மாறவேயில்லை இந்த பழக்கம். யார் மிரட்டினாலும் மாறவே மாறாது.

குமுதம்,ஆனந்த விகடன் வாங்கும் போது கடையை நான் போய் திறந்த காலம் எல்லாம் உண்டு.ஒருநாள் முன்னாள் வருகிறது என்று கேள்விப்பட்டு இரவு பத்து மணிக்கு மேல் அந்த புத்தக கடையில் காத்திருந்து வாங்கிப் படிக்கும் அளவுக்கு ஒரு வெறியன்.

ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு _____ புத்தகம் படித்து இருக்கிறேன்.(அதுவும் நாலே நாலு பக்கம் தான்).அதற்குள் பிடுங்கி விட்டார்கள்.என்னோவோ இன்று வரை வருத்தமே இல்லை. காரணம் சின்ன வயதில் படித்த பாலகுமாரன் நாவல்கள் இதை விட சுவாரஸ்மாக இருந்ததே.

சுஜாதா,மதன் தான் காலத்திற்கு ஏற்ப மாறி இருந்தார்கள்.
இன்று வரை எனக்கு வரலாற்றின் மீது தான் ஆர்வம் அதிகம். (அக்கீலிஸ் பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்).காரணம் மதனின் வந்தார்கள் வென்றார்கள்,கி.மு - கி.பி (சுஜாதா சொன்னது இது மாதிரி ஆசிரியர் இருந்து இருந்தால் நானும் அந்த பாடத்தில் நிறைய மதிப்பேன் பெற்று இருப்பேன்)

இவற்றை எல்லாவற்றையும் விட ப்ளாக் தான் எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது.எவ்வளவு கோணங்கள்..நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.வலைப்பூவில் படிக்க ஆரம்பித்தப் பிறகு படிக்காத நிறைய புத்தகங்களைப் பற்றிய அறிமுகம்,முகம் தெரியாத நண்பர்கள்,அவர்களுடைய கருத்துகள் - இதை தான் நான் விரும்பியது..என்றும் விரும்புவது..

Thursday, September 10, 2009

மிஸ்கின் மீது வழக்கு போடப் போகிறேன்

கல்லூரி படிக்கும் பொழுது சும்மா டைம்பாஸ் செய்ய சில(பல) சமயம் திரைக்கதைகளை யோசிப்பது உண்டு.விவாதிப்பதும் உண்டு.அண்ணன் ஒரு உதவி இயக்குனராக இருப்பதால் சமீபகாலமாக கொலைவெறியோடு யோசித்து வருகிறேன்.அப்படி யோசித்த(விவாதித்த) கதைகளும் இப்போது சினிமாவாக வந்து இருக்கிறது.நண்பர்கள் ஒரே மாதிரி யோசிப்பது போல சில முகம் தெரியாத இரண்டு நபர்களும் ஒரே சாயலில் உண்டு.

அப்படி வந்த படங்கள் சில..

கண்ட நாள் முதல்....

நாயகனுக்கும் நாயகிக்கும் ஒத்தே கருத்தே கிடையாது.சண்டை போடுவது தான் அவர்களுக்கு வேலை.கடைசியில் காதலில் விழுவார்கள்.மூன்றாவதாக ஒரு நண்பன் உண்டு. இதில் வரும் சில சம்பவங்கள் நிஜத்தில் நண்பர்கள் சிலருக்கு நடந்து இருக்கிறது.அப்படி சண்டை போடும் போது பேசிய வசனங்கள் கூட பேசி இருக்கிறோம். ராமதாஸ் வசனம் கல்லூரி வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது.

அஞ்சாதே....

இரண்டு நண்பர்கள் கதை.இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு வழியில் போவார்கள்.ஒரு கட்டத்தில் பாதை மாறி இரண்டு துருவாங்களாக மாறி விடுவார்கள்.இந்த படத்துக்கு ஒரு விருது கூட குடுக்காமல் இருந்தது எனக்கு ரொம்ப வருத்தம்.நான் ரசித்த இரண்டு காட்சிகள். அஜ்மலின் அம்மா நரேனுக்கு சாபம் கொடுப்பார்."உங்க அப்பாவுக்கு நெஞ்சு வலி வரும் என்று.." ஆனால் லிவிங்க்ஸ்டன் நெஞ்சு வலியில் துடிப்பார்.இறுதி காட்சியில் நரேன் அஜ்மலை சுடுவார்.ஆனால் ஆரம்பத்தில் அஜ்மல் நரேனிடம் இப்படி சொல்வார்."நானே உன்னை நடுரோட்டுல நாய சுடுற மாதிரி சுடுவேண்டா.."இப்படி சொன்னது எல்லாமே எதிராகத்தான் நடக்கும்.

மகதீரா...

விரல் பட்டவுடன் உடம்புக்குள் மின்சாரம் பாய வேண்டும்.அப்படி ஒரு பெண்ணை ஒரே ஒரு ஸ்பரிசத்திற்கு பிறகு தேடி அலைகிறான்.அவள் அருகிலே இருக்கிறாள்.கதை விவாதத்தில் ஒரு கைகலப்பு வந்ததால் அப்படியே நிறுத்தப்பட்டது.விரல் பட்டவுடன் மின்சாரம் பாயணும் அதுக்கு நீ கரண்ட் கம்பியத்தான் பிடிக்கணும் - இப்படி ஒருவன் சொல்ல இன்னொரு நண்பன் மறுக்க சிறு கைகலப்பு ஏற்பட்டது.கதையும் அதோடு நிறுத்தப்பட்டது.

சேரனின் சுயசரிதையில் கூட இப்படி ஒரு இடம் வருகிறது.அவர் எழுதிய கதையும் அப்பொழுது வந்த வெற்றி அடைந்த படத்தின் கதையும் ஒரே மாதிரி இருந்ததாம்.அந்தப் படம் விக்ரமன் இயக்கிய புது வசந்தம்.

இப்பொழுது நாலாவதாக ஒரு திரைகதை எழுதியிருக்கிறேன்.யார் படத்தில் வருகிறது என்று பார்ப்போம்.

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்க வேண்டாம்.தலைப்புக்கும் டிஸ்கிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.

டிஸ்கி :

இப்படி நினைக்கும் அல்லது விவாதிக்கும் கதைகள் படமாக வெளி வரும் போது தாங்க முடியாமல் தான் வழக்கு போடுகிறார்களோ..உதாரணம் தசாவதாரம் ஒரு உதவி இயக்குனரின் கதை என்று வழக்கு போடப்பட்டது.சிவாஜியும் இந்த சர்ச்சையில் சிக்கியது.

இந்த தலைப்பை பார்த்தவுடன் ஒரு நெருங்கிய நண்பர் சொன்னது.."நீங்க ரெண்டு பேரும் ஒரே படத்தோட டிவிடி பார்த்து இருப்பீங்க.. நியாயமா பார்த்தா இதுக்கே அந்த வெளிநாட்டுக்காரன் உன் மேல வழக்கு போடணும்.." (ஏம்பா உனக்கு இந்த கொலைவெறி)

Wednesday, September 9, 2009

மயக்கும் சுயநலம் மழுங்கும் புத்தி

இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தான் தென் மேற்கு பருவ மழை பெய்யும் என்ற செய்தியைப் பார்த்தப் பிறகு மனதே சரியில்லை.

மழை வரவில்லை என்றால் என்ன நமக்கு தான் அண்டை மாநிலத்தில் இருந்து கொஞ்சம் தருவார்களே என்று அரைகுறையாக வரும் கனவில் கூட நினைத்து விட வேண்டாம்.

கேரளாவை நாம் கடவுளின் தேசம் என்று கொண்டாடி மகிழ்கிறோம்.அப்ப தமிழ் நாடு நிச்சயமாக சாத்தான்களின் தேசம் தான்.

கொச்சையாக சொன்னால் "நமக்கு அடுத்தவன் பொண்டாட்டி தான் அழகாக தெரிவாள்..நம்ம பொண்டாட்டிய பராமரிக்கவும் தெரியாது..அழகாக மாற்றவும் தெரியாது.."

கூவம் - ஆறுபது வருடங்களுக்கு முன் இது ஒரு ஆறு.பாண்டி வரை நீளும்.அதையே சாக்கடையாக மாற்றிய பெருமை நமக்கு மட்டும் தான் உண்டு.இப்படி ஒரு அடையாளச் சின்னம் எந்த நகரத்திலும் கிடையாது.

திருநெல்வேலியின் அடையாளமான தாமிரபரணியும் மாசுப்பட்டுள்ளது என்று என் அம்மா சொன்ன போது விரைவில் இதுவும் ஒரு சாக்கடையாக மாறி விடுமோ என்ற அச்சம் வருகிறது.

தண்ணீர் தேவை அதிகரிக்கும் போது பருவ மழை பொய்த்தால் இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவதை விட மாசுப்படுத்துவது தான் அதிகம்.சோளக்காட்டில் நுழைந்த யானை சாப்பிடுவதை விட சேதப்படுத்துவது தான் அதிகம்.அது தான் நடக்கும்.குடிக்கும் தண்ணீருக்காக தான் மூன்றாம் உலகப்போர் நடக்கும்.

இருக்கும் மரத்தை எல்லாம் வெட்டிக் கொண்டே வந்தால் பருவ மழை வராது என்று தெரிந்தும் நாம் அதை செய்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

மரம் நடுங்கள் என்று கரடியாக கமல் ஒரு படத்தில் கத்தினார்.அந்த படம் (படு)தோல்வியைத் தழுவியது.படம் - உன்னால் முடியும் தம்பி.

சுவிஸ் நாட்டில் சீரான தட்பவெட்ப நிலை வேண்டும் என்பதற்காக அதற்கு நேர் எதிரே இருக்கும் தமிழ் நாட்டில் ஒரு செடியை நடுகிறார்கள்.அவன் குளுகுளுவென இருப்பான்.முட்டாள்களான நாம் தான் வெட்பத்தில் பொசுங்கி சாக வேண்டும்.

அமெரிக்க கழிவுகளை ஏற்றி வரும் கப்பலை ஐரோப்பாவின் துரைமுகங்களில் கூட அனுமதிக்க மாட்டார்கள்.ஆனால் தூத்துக்குடியில் அந்த கழிவுகளை இறக்கி விட்டு செல்கிறார்கள்.நிலத்தடி நீர் பாதிக்கும் என்ற அறிவு கூட நமக்கு இல்லாமல் போய் விட்டது.படிக்க படிக்க நமது அறிவும் மழுங்கி வருகிறது (சுயநலம் அதிகரித்ததால்).

ஆதி காலத்தில் மனிதனுக்கு ஆயுள் நாற்பது வயதிற்கு அருகில் வந்தாலே அது ஒரு உலக அதிசயம்.அப்படி ஒரு கற்காலத்திற்கு நாம் நம் சந்ததியர்களை வழி நடத்தி செல்கிறோம்.இனி ஒரு மூன்னூறு வருடம் கழித்து மனிதனின் சராசரி வயதே நாற்பதை விட குறைவாகவே இருக்கும்.இப்படி மக்கி போகாத பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து நாம் கற்காலத்திற்கு நம் சந்ததியர்களை வழிநடத்தி செல்கிறோம்.

வெளி நாடுகளில் ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரக்கன்றுகளை நடுவார்கள்.நாம் பத்து மரத்தை வெட்டுகிறோம் ஒரு கன்றாவது நடலாமே.

மரம் நடுங்கள் என்று ஜக்கி வாசுதேவ் சொன்னால் தான் நட வேண்டுமா ? .நம் வளங்கள் அழிந்து விடாமல் இருக்க நாமும் நம்மால் முடிந்த முயற்சிகள் செய்வோமே.வருடத்திற்கு இரண்டு மரமாவது நடலாமே.

சமீபத்தில் கேட்ட பாடல்

"நெல்லாடிய நிலமெங்கே..
சொல்லாடிய அவையெங்கே.."

இது தான் நிதர்சனம்..தமிழ் நாட்டின் அவலம்..

இது சோழ நாட்டை வைத்து எழுதப்பட்ட பாடல்.இது தமிழகம் எங்கும் நடக்கும் முன் நாம் நம்மால் முடிந்த மரங்களை நட வேண்டும்.

பாடலைக் கேட்டு விட்டு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது என்று நிறைய பேர் சொன்னார்கள்.உங்கள் மனமும் சிலிர்த்திருந்தால் ஒரு மரத்தையாவது நடுங்கள்.செய்த நாசங்கள் போதும்.

மரம் இருந்தால் தான் பறவைகளும் இருக்கும்.குஜராத் பூகம்பம் வருவதற்கு முன் அங்கு இருந்த காக்கைகள் எல்லாம் கூட்டம் கூட்டமாக பறந்து போனதாம்.இயற்கை சீற்றங்களை நாம் அறிவதற்கு முன் பறவைகள் தெரிந்து கொள்ளும்.தென்மதுரை நகரத்தைக் கடல் சூரையாடிய போது உயிர் சேதம் இல்லாமல் தப்பியதற்கு நிச்சயம் பறவைகளும் ஒரு காரணமாக இருந்து இருக்கும்.இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தவர்கள் நாம்.ஆனால் இன்று ஏரிகளில் வீட்டை கட்டிக் கொள்கிறோம்.சென்னைக்கு வரவே வராது என்று நினைத்த பூகம்பத்தை வரவழைத்து கொள்கிறோம்.
(தமிழகத்தை மூன்று சுனாமிகள் விழுங்கியது ஆதாரபூர்வமான உண்மை. முதல் கடல் கோளால் பஃறுளியாறும், குமரிக் கோடும் காணாமல் போயின. பஃறுளியாற்றின் கரையில்தான் தென்மதுரை இருந்தது. பாண்டியன் தலைநகரம். புறநானூறு இந்த சமயத்தில் ஆண்ட பாண்டிய அரசன் நெடியோன் என்கிறது. நிலந்தரு திருவிற்பாண்டியன் என்கிறது தொல்காப்பியம். கடல் கொண்ட பிறகு இந்த அரசன் வடக்கே சென்று கவாடபுரத்தை தலைநகராகக் கொண்டான். இரண்டாவது கடல் கோளால் கவாடபுரம் கடலில் அமிழ்ந்தது. மணவூர் என்பது பாண்டியன் தலைநகராக இருந்தது. மூன்றாவது முறைக் கடல் கோளால் ஏற்பட்ட பிறகு, மணவூரும் குமரியாறும் மறைந்தன. மதுரை பிறகுதான் பாண்டியன் தலைநகரமாயிற்று.)

கடவுளின் தேசம் செழிப்பாக இருப்பதற்கு காரணம் மரங்கள் தான்.நாமும் கடவுளின் தேசத்திற்கு அருகில் இருக்கிறோம் என்று சொல்லி மகிழ்வதை விட நாமும் அது போன்ற தேசத்தில் தான் இருக்கிறோம் என்று சொல்வது சாத்தியம் தான் மரங்களை நட்டால்.

நான் பள்ளியில் படிக்கும் போது "ரெயின் க்ளாப்" என்று ஒரு முறை உண்டு.முதலில் இரண்டு கையில் இருக்கும் ஆட்காட்டி விரல்களை மட்டும் தட்டுவோம்.மழை ஆரம்பிப்பது போல இருக்கும்.சிறிது இடைவெளி விட்டு தட்டும் விரல்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கும்.மழை சத்தமும் வலுக்கும்.முடிவில் மழை விடாமல் பெய்வது போல இருக்கும்.இது கூட்டு முயற்சிக்கு ஒரு உதாரணம்.

இந்தப்பதிவு மரம் நடுவதற்கு மட்டும் அல்ல..அழிவில் இருந்து தப்பி வாழ்வதற்கும் தான்.

ஒரு அழகான கோலமே ஒரு புள்ளியில் தான் தொடங்குகிறது.மரங்களை நடுவோம் அழியாத கோலங்களைப் படைப்போம்.

டிஸ்கி :

"தென் மேற்கு பருவக் காற்று தேனி பக்கம் வீசும் போது சாறல் முத்துச் சாறல்" - கருத்தம்மா படத்தில் வரும் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனசே குளிரும்.பிற்காலத்தில் இது ஒரு உவமையாக மாறி விடக் கூடாது.

உவமைக்கு ஒரு உதாரணம்..ராஜபார்வை படத்தில் குருடன் கமல் பாடுகிறார்."அந்தி மழை பொழிகிறதே ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதே.." கண்ணில்லாத குருடன் கூட மழையை வைத்து தான் பாடுகிறான்.நாம் கண்ணிருந்தும் குருடர்களாக இருக்கிறோம்.நமக்கு மழை வந்தாலும் வராவிட்டாலும் அது ஒரு செய்தி மட்டும் தான்.மழையை உணரும் குருடனே அதை கொண்டாடும் போது நாம் மழை வருவதற்கு முயற்சியாவது செய்ய வேண்டும்.அதற்கு மரங்களை நடுவோம்.

Tuesday, September 8, 2009

கமல் - நீங்களே தவறான உதாரணம் ஆகலாமா

முதலில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பொன்விழா கொண்டாடுவதற்கு வாழ்த்துகள்.சின்ன வயது முதல் நான் உங்கள் ரசிகன் என்று சொன்னால் அது பொய். ஆனாலும் உங்கள் படத்தை முதல் நாள் பார்க்கும் ஒரு பார்வையாளன்.(சந்திரமுகி படத்திற்கு போகாமல் மும்பை எக்ஸ்பிரஸ் படம் பார்த்தோம்).அந்த உரிமையில் ஒரே ஒரு கேள்வியும் சில துணை கேள்வியும்..

முதல் கேள்வி - ஒரு நடிகன் ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு படம் நடிக்கிறான்..சில காலம் நடிக்காமல் இருந்து விட்டு பத்து வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்கிறான்..நடிக்காமல் இருந்த பத்து வருடங்கள் கணக்கில் சேருமா?

எதற்கு இப்படி கேட்கிறேன் என்றால் நாளைக்கே விரலை மட்டும் அசைக்கும் ஒரு நடிகன் வெள்ளி விழா கொண்டாடுவான் கேட்டால் நான் பிறந்த உடனே நடிக்க ஆரம்பித்து விட்டேன் என்று அடித்து விடுவான்.ஒத்துக் கொள்ள முடியாது என்றால் அவருக்கு ஒரு நியாயம் எனாகு ஒரு நியாயமா என்று உங்களை கை காட்டுவான்.இப்படி நீங்கள் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகலாமா.(நான் கர்ப்பத்தில் இருந்தே நடிக்க ஆரம்பித்தவன் என்று கூட சொல்லுவான்)

அந்த நடிகனுடைய அப்பா ஒரு படி மேலே போய் இந்த வயதில் கமல் நடிக்கிறார்,ரஜினி நடிக்கிறார்..நான் அவர்களை விட சின்னபையன் நான் நடிக்க கூடாதா என்று கேட்பார்.இது எங்களுக்கு தேவையா?

சில துணைக்கேள்விகள்..

திருமணங்கள் தோற்று போகும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் இதே கருத்தை சொல்வீர்களா..(இதை நான் கேட்டு இருக்க மாட்டேன்). எதற்கு கேட்கிறேன் என்றால் உங்களைப் பற்றி பேசும் போது கௌதமியின் மகள் அப்பா என்றே குறிப்பிட்டார்.நடிக்கும் போது தெளிவாக பேசும் நீங்கள் பேட்டியின் போது என் இப்படி பேச வேண்டும்.. "“திருமணங்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றன” என்று சொன்னதால் தான் கேட்டேன்."என் திருமணம் தோல்வி அடைந்து விட்டது" என்று சொல்லி இருந்தால் கேட்டு இருக்க மாட்டேன்.அதில் வந்த குழப்பம் தான் இந்த கேள்வி.(இதுவரைக்கும் ஒரு பேட்டி கூட யாருக்கும் புரிந்தது கிடையாது)

"என் காலத்திற்குள் சினிமாவை வேறு வழியில் கொண்டு செல்வேன் என்று சொல்லும் நீங்கள் ஏன் இப்போது அறிமுக இயக்குனர்களின் படத்தில் நடிப்பது இல்லை ?" (உன்னைப் போல ஒருவன் இதில் வராது. ஏன் என்றால் இது ஒரு ரீமேக்)

ஒரு சின்ன வருத்தம்

வீட்டில் பேசும் ஒரு சாதாரண ரசிகன் நடிகர்களை(கமல் உட்பட) எல்லா நடிகர்களையும் அவன்,இவன் என்றே பேசுகிறான்..வெளியே பேசும் போது (பேட்டியின் போது) கமல் சார் என்று அழைக்கிறான்.அப்படி ஒரு சராசரி ரசிகனாக உங்கள் அண்ணனையும்(சந்திரஹாசன்) நடத்த வேண்டுமா.விஜய் டிவியில் "கமல் சார்" என்று குறிப்பிடுகிறார்.இந்த போலி மரியாதை எல்லாம் தேவையா ?.

ஒரு பேட்டியில் ஒரு நிருபர் ஏடாகூடமாக கேட்க "ஏன் சார் என்னையே பாக்குறீங்க..
எனக்கு மட்டும் என்ன இரண்டா இருக்கு.." அப்படி கேட்ட கமலை தான் விரும்புகிறேன். விரும்புகிறோம்.

நீங்கள் ஒரு வட்டத்திற்குள் நிற்காதீர்கள். போலி மரியாதை எல்லாம் உங்களுக்கு வேண்டாம்..நீங்கள் உங்கள் ரசிகர்களுக்கு செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறது.
(நல்ல படங்களை சொன்னேன்).

இப்போ முளைத்த காளான் கூட அரசியலில் இறங்க ஆசைப்படும் போது அதில் இருந்து விலகி இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

Monday, September 7, 2009

சினிமாத்தனமான திருப்பம்

கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சண்டையில் எனக்கு உதடும்,குணாவுக்கு சட்டையும் கிழிந்திருந்தது. எதிர் கோஷ்டியில் அருணின் மூக்கை உடைத்திருந்தோம்.

"நம்ம ஏரியாவுல அடி வாங்குனது நெனச்சா தான் ரொம்ப வலிக்குதுடா மச்சான்.." என்று சொல்லிக் கொண்டே இரத்தத்தைத் துடைத்தேன்.

"புது சட்ட மச்சான்..இனிமே போடவே முடியாது..அவன எதாவது பண்ணனும்.." என்று குணா வன்மத்தோடு சொன்னான்.

"பொண்ணுங்க முன்னாடி இனிமே உதார் உடவே முடியாதுடா.."

"உதட்டுல இன்னும் இரத்தம் வருதுடா.. அவன பழிவாங்க ஒரு வழி இருக்குடா.." என்று துடைத்து விட்டப்படியே குணா எதோ சொல்லி கொண்டியிருந்தான்.

"எப்படி.."

"இனிமே அவன் ஏரியாவுக்குப் போய் விளையாடுவோம்.." என்று குணா சொல்ல

"இப்பத்தான் வாங்கியிருக்கோம்..ஆனந்த் என்ன இந்த கோலத்துல இருக்கிறத மட்டும் பாத்தான்..நீ,நான்,அவன் எல்லாரையும் அடிப்பான்.."

ஆனந்த் எங்களுக்கு ஆதர்ஷம்.அவன் இல்லாத தைரியத்தில் இந்த சண்டையை எங்களிடம் இழுத்து இருந்தார்கள். அவனுக்கு என்னிடம் ஒரு பாசம் உண்டு.எல்லோருமே அவனை "அண்ணா.." என்று கூப்பிடுவார்கள்.(குணா உட்பட.என்னை தவிர..)

"ஆனந்த் ஒரே ஒருநாள் நம்ம கூட வரட்டும்..யாருமே நம்மள ஒன்னும் கேட்க மாட்டாங்க..இனிமே அவன் ஏரியாவுல தான் விளையாடுறோம்..எப்படியாவது நாளைக்கு மட்டும் அவன கூட்டிட்டு வந்துரு.." என்று குணா சொல்ல.எனக்கும் அது பிடித்திருந்தது.

ஆனந்த் தயவுல ஆங்கே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருந்தோம்.

"அவன வேற மாதிரி அடிக்கணும்..அதுக்கு ஒரு ஐடியா பண்ணியிருக்கேன்..அருணுக்கு ரெண்டு மாமா பொண்ணு. அதுல அக்காக்காரி அவன மதிக்கவே மாட்டா..நம்மளையும் தான்..அருணுக்கு ரெண்டாவது பொண்ணத்தான் ரொம்ப பிடிக்கும்..நீ சீதாவுக்கு கை ஆட்டுவியோ இல்ல கால ஆட்டுவியோ.. என்னோமோ பண்ணு..அதப் பாத்து அவன் சாவனும்.." குணாவின் கண்களில் கோபம் தெரிந்தது.

"நீ பண்ண வேண்டியது தானே.." என்று நான் சொல்லவும்.

"என் உதடா கிழிஞ்சுது..இப்போ சொல்லு..நான் சொல்றப்படி மட்டும் செய்..அது போதும்.." அவன் சொன்னதற்கு தலையை மட்டும் ஆட்டி கொண்டிருந்தேன்.

குணா சொல்லிக் கொடுத்த மாதிரியே சீதா வந்தால் கை காட்டுவது,அவளோட கடைக்கு அருகில் நிற்பது(பீல்டிங் செய்ய),இன்னும் இதர வேலைகளையும் செய்தது வந்தேன்.

குணா இன்னும் ஒருப்படி மேலே போய் அவளைப் பார்ப்பதற்கு தான் நான் வருகிறேன் என்று யார் மூலமோ சீதாவிடம் சொல்லியிருக்கிறான்.

அதற்கு பிறகு நான் கை காட்டுகிறேனோ இல்லையோ அவள் வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தையை வைத்து நாங்கள் இருக்கும் இடத்தைப் பார்த்து கையாட்டி கொண்டிருப்பாள்.

அம்மா வரைக்கும் விஷயம் தெரிந்து போனது.

ஒருநாள் காய்கறி வாங்கிய விட்டு வரும் போது பாரம் தாங்காமல் பை அத்து விழ சீதா உதவியிருக்கிறாள்.

"நல்ல பொண்ணு.." என்று சொன்ன அம்மாவைப் பார்த்து கூட இருந்த பெண் சொல்லிய வார்த்தைகள் "இரண்டு பையன் வைச்சுயிருக்கீங்க..அதான் ஓடி ஓடி உதவி செய்யுது.."

வீட்டில் வந்து விசாரித்தப் போதும் எப்படியோ சமாளித்து விட்டேன்.

அருணும் எங்களுடன் பேச ஆரம்பித்தியிருந்தான்.நானும் நடந்ததை மறந்து இருந்தேன்.ரொம்ப நாள் களைத்து குணா இல்லாத நேரம் வந்து என்னிடம் "சீதாவை நான் லவ் பண்றேன் விட்டுரு மச்சான்.." என்று சொன்னவனிடம் ஒன்றுமே சொல்லாமல் வந்து விட்டேன்.

சீதாவை தவிர்க்க தொடங்கினேன்.பீல்டிங் செய்வதை நிறுத்தி விட்டு கீப்பிங் செய்ய ஆரம்பித்தேன்.சீதா வந்து குணாவிடம் அழவே..குணா நியாயம் கேட்டான்.

"அவளுக்கு என்னடா குறைச்சல் அக்கா தங்கச்சியோட பொறந்து இருந்தா தானே உனக்கு ஒரு பொண்ணோட அருமை தெரியும் அவள நடத்துர மாதிரி தான் உங்க அம்மாகிட்டையும் மரியாதை இல்லாம நடப்ப" குணா சொல்லி முடிக்கும் முன் அவன் சட்டையை பிடித்து இருந்தேன்.

"கிடைக்கு ரெண்டு ஆடு கிடைச்சா நரி கூட நாட்டாமை பண்ணும் அது மாதிரி அவ கடையில வாங்கி குடிக்கிற ஓசி டீக்கு என்ன அடமானம் வைக்க பாக்குறியா "

"இப்படி எல்லாம் நடக்கும் எனக்கு முன்னாலே தெரியும் " சட்டையை என் பிடியில் விடுவித்து கொண்டே குணா சொன்னான் .

"என்ன தெரியும் உன் சட்டையை பிடிப்பேன்னா ?"

"இல்ல அவள நீ லவ் பண்றத சொன்னேன் " என்று அவன் சட்டையை திரும்ப பிடிக்க முடியாத தூரத்தில் இருந்து சொன்னான் .

"சீதாவை அருண் கல்யாணம் செய்யட்டும்.." என்று சொல்லியவனைப் பார்த்து குணா சிரித்தான்.

"டேய் அவன் நல்லவன் இல்லடா..நல்லவன் மாதிரி நடிக்கிறான்..அவனுக்காக விட்டு கொடுக்காத..அந்த பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி.."

குணா சொல்வதை காதில் வாங்காமல் அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்.

அருணுடன் போன இடத்தில் ஒரு பிரச்சனை வர,வேறு வழியில்லாமல் ஒளிய வேண்டிய சூழ்நிலை.இந்த சந்தர்ப்பத்தில் ஆனந்திடம் அருண் நெருங்கியிருந்தான். அந்த ஊரையையே காலி செய்திருந்தோம்.

பத்து வருடங்களுக்கு பிறகு அந்த ஊர் வழியாக போகும் போது குணாவை சந்தித்தேன்.

சீதாவை பற்றி மட்டும் விசாரிக்கவில்லை.

"ஆனந்தை கொன்று விட்டார்கள்.." என்று சொல்லி அழுதான்.

"எப்படி மச்சான்.." என்றேன் அதிர்ச்சியுடன்

"கூட இருந்தே காட்டி கொடுத்துட்டாங்க..அவன் சாவுக்கு காரணமான ஒருத்தனையும் விடல..போட்டுத் தள்ளிட்டோம்..நீ இருக்க வேண்டிய இடத்துல இப்போ நான்.." என்று சொன்னவனைக் கட்டிப் பிடித்து அழுதேன்.

"மச்சான் ஒரு விஷயம் சொல்லணும்.." என்று குணா ஆரம்பிக்கவும்

"சீதாவைப் பத்தியா..வேணாம் தெரியாமலே இருக்கட்டும்.." என்று கண்களைத் துடைத்தப்படியே சொன்னேன்.

சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு போனோம்.

"மச்சான் இப்போ வந்துறேன்.." என்று எங்கோ போய் விட்டான்.அப்போது தான் கவனித்தேன். மொபைலை விட்டு விட்டு போயிருந்தான்.

மொபைலில் ஒரு அழைப்பு வரவும் குணாவைத் தேடி கொண்டிருந்தேன். அவன் வரவேயில்லை.கட் செய்ய மொபைலை எடுத்தால் சீதாவின் படம் போட்டு "வைப்" என்று டிஸ்ப்ளேவில் தெரிந்தது.

குணா வருவது போல தெரியவும் ஒன்றுமே தெரியாதது போய் நடந்து கொண்டேன்.

"மச்சான் என்னை மன்னிச்சிரு..இதுலையும் நீ இருக்க வேண்டிய இடத்துல நான் இருக்கேன்..அருண் தாண்டா நம்ம ஆனந்த கொன்னது..சீதா கல்யாணத்து அன்னைக்கு தான் தெரிஞ்சது..புல்லா தண்ணிய ஊத்தி விட்டு தண்ணியிலே முக்கி நாந்தான் அவன கொன்னேன்..சீதாவ ரெண்டு வருசத்து முன்னாடி கல்யாணம் பண்ணிகிட்டேன்..உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல..என்னை மன்னிச்சிரு.." இன்னும் என்னமோ புலம்பி கொண்டே வந்தான்.

"என்ன பார்த்தத சீதா கிட்ட சொல்ல வேண்டாம்..நான் தொலைஞ்சி போனவன்..அப்படியே இருக்கிறேன்.." என்று அவனிடம் அவன் மொபைல் நம்பரைக் கூட வாங்காமல் நடக்கத் தொடங்கினேன் கால்(மனம்) போன போக்கில்.

துவையல் - பதிவர்கள் ஸ்பெஷல்

கேபிள் சங்கர் அண்ணனும்,ஜாக்கி சேகரும் அலெக்ஸா ராங்கில் முன்னேறி கொண்டு இருக்கிறார்கள்.விரைவில் முதல் ஒரு லட்சத்திற்குள் வர வாழ்த்துகள்.இது என்னுடைய புது பிராஜக்ட் seo (search engine optimisation) செய்யும் பொது பார்த்தது.

வால்பையன் ஒரு வாரமா கவிதை(ஒரிஜினல் சரக்கு) எழுதி கொண்டிருந்தார்.நாம ரெண்டு பேரும் சாட் செய்ய ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது.இரும்புத்திரையும் ,சாட்டிங்கும் தான் காரணம் என்று சொன்னார்.இப்போ ஒரு வாரமா சாட் பண்ணல.அவரும் இரும்புத்திரை பக்கம் ஆளக் காணோம்.அதான் வால்பையன் நல்லா புல்லா பதிவர் சந்திப்பு,எதிர் கவிதை என்று கலக்குகிறார். யாருக்காவது திரும்ப ஒரிஜினல் சரக்கு வேணுமா சொல்லுங்க..(திரும்ப சாட் பண்றேன்..)

நாடோடி இலக்கியனும்,கதிரும் "அன்பாக" சொன்னார்கள்."மொக்கைய நிறுத்தி விட்டு ஒழுங்கா எழுதுங்க.." நானும் முயற்சி செய்து பார்த்தேன்.. ம்ஹூம் நிறுத்த முடியல.. கூடிய விரைவில் நிறுத்தி விடுவேன் என்று நினைக்கிறேன்..(இன்னுமா இந்த ஊர் என்ன நம்பிகிட்டு இருக்கு..).கதிர் அண்ணன் எனக்கு விருது கொடுத்தார் (உனக்கு கூடவா என்று யாரும் சிரிக்க வேண்டாம்).அதுல பிரச்சனை இல்ல ஆனா இருக்கு.. பத்து நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கொடுக்கலாம் யாரையாவது விட்டு விடுவோமா என்று பயமாக இருக்கிறது.

என்’ணங்கள் பதிவுவைப் படித்த பிறகு நர்சிமிடம் கேட்டேன்."சேரன் எம் பதிவப் படிக்கிறாரா.."(அதாவது க்ளாஸிக் என்ற படத்தின் காப்பி என்று ப்ளாகில் எழுதியவர்கள் சேரன் "தான்தோன்றிகள்" என்று சொன்னாராம்.நான் படம் வருவதற்கு ஒரு மாதம் முன்பே அப்படி எழுதி விட்டேன்.).அதற்கு நர்சிம் "ஆமா சேரன் உங்க ப்ளாக்க படிப்பாரு" என்று சொன்னார்.அதோடு விட்டு விடாமல் சிரித்தார்..(இதுல ஏதாவது உள்குத்து இருக்கா..)

பரிசல் வாரம் ஒரு பதிவரை அறிமுகம் செய்கிறார்.அவர் பதிவில் இருந்து நிறைய பதிவர்களின் பதிவு மற்றும் அறிமுகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள் தல..இந்த வாரம் பாஸ்டன் ஸ்ரீராம்..

இந்த வாரம் இரண்டு ஆச்சரியங்கள்..சிறந்த சிறுகதை,கட்டுரைகளை எழுத நினைத்த காலடி ஜெகநாதனை பதியுலகம் மொக்கை மன்னனாக மாற்றியுள்ளது. இந்த சிறுகதையைப் பாருங்கள். தலைமுறையாய் தொடரும் கனவு. நூறு ஆண்டுகள் இடைவெளியில் ஒரு அருமையான கதை.நான் ஒன்பது ஆண்டு இடைவெளியில் நடக்கும் ஒரு கதையை முடிக்க முடியாமல் நான்கு மாதம் மற்றும் பத்து நாள் முக்கி கொண்டுயிருக்கிறேன்.

அடுத்த ஆச்சரியம் தண்டோரா. 32 கேள்விபதில் தொடர்களை எழுதி சிரிக்க வைத்தவர்.சமீப காலமாக கவிதைகள் எழுதி குவிக்கிறார்.அண்ணனுக்குள்ள இருந்த இலக்கியவாதிய யாரோ உசுப்பி விட்டு இருக்காங்க.

பக்கடா,குட்டிமணி இல்லாம எப்படி பதிவு முடியும்.இந்த பதிவை எழுதியவர் டக்ளஸ் என்ற ராஜு. மெயிலில் அனுப்பியவர் நையாண்டி நைனா. ஸாரி.. ரெண்டு பேரும் ஒன்னுதானே.. எழுதி மெயிலில் அனுப்பியவர் நையாண்டி நைனா என்ற டக்ளஸ் என்ற ராஜு.

இந்த வார வம்பு - விகடன்.

க.சீ.சிவக்குமார் குமாரசம்பவம் என்ற தொடர்கதையை அருமையாக எழுதி வந்தார்.எனக்கு முடிவு அவசரமாக முடித்தது போல் தோன்றுகிறது.வம்பு இனிமே தான் வருது..(அடுத்த வாரத்துல இருந்து விகடன் வாங்க வேண்டாம்..). இனிமே பதிவர்கள் எழுதினால் மட்டும் வாங்கப்படும்.