Thursday, March 25, 2010

நாளைய இயக்குனர்

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் குறும்படங்கள் எல்லாம் என் கல்லூரி காலத்தை நினைவு ஊட்டுகிறது.

கூகுள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சில சமயம் நான் மூச்சுத் திணறி இறந்திருப்பேன்.எந்த இடத்தில் திருடிய கோடிங்கை எல்லாம் உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரிந்திருந்தால் அவன் பிழைக்க முடியும்.லாஜிக் தெரிந்தால் எந்த மொழியிலும் எழுதலாம்.கண்டபடி திருடக் கூடாது.அப்போதெல்லாம் கூகிளை உபயோகிக்கத் தெரியவில்லை.போலீஸ் குறும்படங்கள் தான் போன ஞாயிறு அன்று கருப்பொருள்.ரொம்ப திராபையான டிவிஸ்ட் கொண்ட இரண்டாவது திரைப்படம்.முதல் காட்சியிலேயே ஊகித்திருந்தேன்.கடைசி காட்சியில் நான் நினைத்தது தான்  வந்தது.முடியும் போது போக்கிரி வாய்ஸ் ஓவர் வேறு.முடியலடா சாமி.அந்த இயக்குனருக்கும் ரெபரன்ஸ் எடுக்க தெரியவில்லை.போகப் போக தெரியும்.

எப்பவும் லேப் நடக்கும் போது நான் அவுட் ஸ்டாண்டிங் மாணவன் தான்.வெளியிலேயே நிற்பேன்.சில துரோகிகள் உண்டு.காலில் விழுந்து உள்ளே சென்று விடுவார்கள்.அந்த அளவிற்கு உருக்கமாக நடிப்பார்கள்.அந்த அளவிற்கு நாளைய இயக்குனர் எடுக்கும் குறும்படத்தில் நடிக்க மறுக்கிறார்கள்.உதாரணம் சுஜாதாவின் சைன்ஸ் ஃபிக்ச்ஷன் கதை.

செய்முறை தேர்வு நடக்கும் போதெல்லாம் பிட் அடிக்க முடியாமல் ஃபார் லூப்பை இறுதி வரியாக அடித்தது உண்டு.அது மாதிரி எடிட்டிங் தெரியும் என்பதற்காக இப்படியெல்லாம் வெட்டி ஒட்டி பார்வையாளனின்  உயிரை வாங்கக் கூடாது.

லேப்பில் வெளியே நின்றவன் எல்லாம் இன்னைக்கு பொட்டி  தட்டுறான். உள்ளே இருந்த திறமைசாலி கேஷியர் வேலை பாக்குறான்.அது மாதிரி தான் குறும்படங்களை வைத்து முடிவுக்கு வர முடியாது.அமீர் சொன்னது தான் சசிகுமார் இயக்குனர் ஆவான் என்று நான் நினைக்கவில்லை.

எக்ஸிட் கமெண்ட் அடிக்க தெரியாமல் திட்டு வாங்கிய காலம் எல்லாம் உண்டு.சொல்லித் தந்த அந்த மகாமேதைக்கு அது மட்டும் தான் தெரியும் என்பது பின்னால் தான் தெரிந்தது.நடுவர்கள் என்று வரும் மொக்கைகள் எல்லாம் அது தப்பு இது தப்பு என்று சொல்லும் போது தான் சிரிப்பு வருகிறது.

சி பிரோகிராம் எழுதும் போது ஹெட்டர் தவிர எதுவும் தெரியாது.அதை மட்டும் எழுதி விட்டு காலரை தூக்கிக் கொண்ட காலமெல்லாம் உண்டு.மொக்கை படங்களுக்கு பாராட்டு கிடைக்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தேன் என்று சொல்கிறார்கள் சிரிப்பு வந்து விடுகிறது என்னையும் அறியாமல்.சிங்கப்பூரில் கல்லூரியில் படிக்கும் போது புதிதாக ஒரு கணினி மொழி கண்டுப்பிடிப்பார்களாம்.ஏன் கூகிளே கடைசி வருட பிராஜக்ட் தான்.நமக்கு சொல்லி தரும் லட்சணத்தில் இருப்பதையே ஒழுங்காக படிக்க மாட்டோம்.அதே மாதிரி தான் இருக்கிறது.போலீஸ் என்று சொன்னால் விரைப்பாக நடப்பது,வந்த தமிழ்ப்படங்களில் இருந்து திருடுவது எல்லாம் காட்டுகிறது முன்னேர் சென்ற வழியில் தான் பின்னேர் செல்லும் என்று.புதிதாக ஒரு கதை சொல்லியையும் நம்மால் உருவாக்க முடியாது.அடுத்தவன் கண்டுப்பிடித்ததை திறமையாக நாம் உருவாக்குவோம்.

11 comments:

இரும்புத்திரை said...

உபயோகமாகவும்,சுவாரஸ்யமாகவும் உருப்படியாகவும்,குறைவாகவும் படிக்க - கென்,ஜெகநாதன்,லக்கி,அதிஷா,மாதவராஜ்,காமராஜ்,நர்சிம்,கேபிள் சங்கர்,தண்டோரா இங்கே எல்லாம் போகவும்.நான் ஒரு உபயோகமில்லாமல்,சுவாரஸ்மில்லாமல்,உருப்படியில்லாமல்,நிறைய எழுதும் ஒரு ஒலைப்பாய்.அதில் எதையும் அடிக்க வேண்டாம்.லொட லொடவென்று சத்தம் கேட்கும்.

Radhakrishnan said...

உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்வதால் மட்டுமே உயர்ந்துவிட இயலாது ;) பதிவுக்கு பின்னூட்டம் போடலாம்னு வந்தே நீங்க இப்படி ஒரு பின்னூட்டம் போட்டு வைச்சிருக்கீங்க. ஹூம்.

புதுசா நான் ஒரு கதை வைச்சிருக்கேன், நான் இயக்குநர் ஆகிட முடியுமா என்ன?

இரும்புத்திரை said...

கொஞ்சம் கோபம் மிச்சமிருந்தது.எதுவாகயிருந்தாலும் வெளியே காட்டி விடுவேன்.நிறைய தடவை அது தான் என் மைனஸ்.

Radhakrishnan said...

அப்படியும் சொல்ல முடியாது, மனதில் இருந்ததை வெளிப்படுத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட வேண்டும். :)

மணிஜி said...

வன்மையாக கண்டிக்கிறேன். ராம் பெயரை விட்டதற்கும், என் பெயர் மணிஜீ என்று சொல்லாததற்கும்..டா..டடட..டாஆ

இரும்புத்திரை said...

ஸாரி மணிஜீ அண்ணா.ராம் என்னை அந்த அளவிற்கு ஈர்க்கவில்லை.

இராகவன் நைஜிரியா said...

// அதில் எதையும் அடிக்க வேண்டாம்.லொட லொடவென்று சத்தம் கேட்கும். //

இப்படியெல்லாம் சொன்னா விட்டுவிடுவோமா என்ன...

அந்த சத்தம் எந்த மியூசிக்கல் இன்ஸ்ட்ரூமெண்டிலேயும் வராதே... அப்ப இங்க முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே என்று இருக்கின்றோம்...

அதை போய் இப்படி கேவலப் படுத்திட்டீங்களே...

அவ்....அவ்....

இராகவன் நைஜிரியா said...

// இரும்புத்திரை said...
கொஞ்சம் கோபம் மிச்சமிருந்தது. //

கொஞ்சுவதற்கு கோபம் தேவையில்லீங்க...

Unknown said...

நல்லாருக்குப்பு.. சி கோடிங்கையும் நாளைய இயக்குநரையும் கம்பேர் செஞ்சது..

வெற்றி said...

comparison ரசிக்கும்படி இருந்தது..

All about ORKUT said...

லேப்பில் வெளியே நின்றவன் எல்லாம் இன்னைக்கு பொட்டி தட்டுறான். உள்ளே இருந்த திறமைசாலி கேஷியர் வேலை பாக்குறான்.அது மாதிரி தான் குறும்படங்களை வைத்து முடிவுக்கு வர முடியாது.அமீர் சொன்னது தான் சசிகுமார் இயக்குனர் ஆவான் என்று நான் நினைக்கவில்லை.


ரொம்ப அருமையா சொன்னீங்க... ;)