Monday, March 22, 2010

துவையல் - கிரிக்கெட் ஸ்பெஷல்

எப்பவுமே மேட்ச் பார்க்க மாட்டேன்.மங்கூஸ் பேட்டைப் பார்க்கும் ஆசையில் போய் பார்த்து அப்புறம் நொந்து விட்டேன்.சென்னை - 600028 அணி மாதிரி விளையாடடி பஞ்சாப் அணியிடம் முதல் முறையாக தோல்வியைத் தழுவியிருக்கிறது சென்னை அணி.பெரிய ஸ்கோரை எல்லாம் சேஸ் செய்ய முடிந்த சென்னையால் இப்படி சின்ன ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் தோற்பதற்கு காரணம் வெளிநாட்டு வீரர்களை முரளி விஜய்,பத்ரிநாத் போன்ற மொக்கைகளுக்குப் பின் இறக்கி விடுவது தான்.டெக்கான் சார்ஜர்ஸின் பலமே இது தான் - கில்கிரிஸ்ட்,கிப்ஸ்,சைமண்ட்ஸ்.  அதை மாதிரி தான் டெல்லியும் - வார்னர்,தில்ஷான்,டிவில்லியர்ஸ்.தவறு செய்வது சென்னையும் நான் இருக்கும் மும்பை அணியும் தான்.மங்கூஸ் எங்கே அதை வைத்து விளையாட வேண்டுமோ அங்கே விளையாடவில்லை.எங்கே விளையாட கூடாதோ அங்கே விளையாடுவது.ஜெயித்திருந்தால் கதையே வேறு.மாற்றி சொல்லியிருப்பேன்.கடவுள் கூட அழகானப் பெண்களுக்கு காது கொடுப்பதால் தான் கடவுள் நம்பிக்கை எனக்கெல்லாம் குறைந்து கொண்டே வருகிறது.

சென்னைக்கு திரிஷா தான் பிராண்ட் அம்பாஸிடரா.என்ன கொடுமைடா ஸ்ரீகாந்த் இது.முதல் போட்டியில் தோற்ற சமயம் பெங்களூர் அணியை உற்சாகப்படுத்த கத்ரீனா கைப் வந்திருந்தார்.போட்டி காலி.உடனே ஆளையே மாற்றி விட்டார்கள்.அது தீபிகா படுகோன்.மூன்று போட்டிகளும் வெற்றி.கத்ரீனாவுக்கும் தீபிகாவுக்கும் ஆகாது.காரணம் எனக்கு தெரியாது.நான் ரொம்ப நல்லவன்.வீரர்களை சரக்கிலேயே குளிப்பாட்டி எடுக்கிறார்கள்.அதே மாதிரி நன்றாக சாமி கும்பிடும் பெண்ணை அழைத்து வரவும்.முடியவில்லை என்றால் சும்மா வரவும்.

ரெய்னா ஒரு போட்டியில் ஜெயித்த உடன் பிளெமிங் கேப்டன் பதவிக்கு ரெய்னா தகுதியானவர் என்று பேட்டி தந்துள்ளார்.உடனே தோனிக்கும்,ரெய்னாவுக்கும் ஓப்பீடுகள் ஆரம்பித்து விட்டாகி விட்டது.இப்படி உசுப்பேத்தி விட்டே யுவராஜ் டவுசரைக் கிழித்தார்கள்.சேவக் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.அடுத்தது ரெய்னா தான்.தோனி மாதிரி ஒரு வில்லனையும் பார்க்க முடியாது.நல்லவனையும் பார்க்க முடியாது.எல்லா விஷயத்திலும் பத்து கங்குலிக்கு சமம்.இந்த போட்டியில் யார் கேப்டனாக இருந்தாலும் பெரிய மாற்றமிருக்காது.

சினிமாவில் தான் காப்பி அடிக்கிறோம் என்றால் இங்கேயுமா.வார்னே தொடங்கி வைத்தார்.அடிக்கடி முதல் ஒவரே யூசுப் பதான் தான் வீசுவார்.டெல்லி அணியில் அமித் மிஸ்ரா வீசினார்.கேப்டன் நம்ம தினேஷ் கார்த்திக்.முதல் ஒவரில் விக்கெட்.பிறகு வந்தது எல்லாம் எம்டன்கள்.விடாமல் சாத்தினார்கள்.கில்கிறிஸ்ட் சொன்னது தான்.எல்லா வீரர்களுக்கும் நாங்கள் திட்டம் வைத்திருக்கிறோம் என்று சொன்னார்.அவங்க பிளான் பண்ணாமல் எதையும் செய்வதில்லை.ஆஸ்திரேலியா இரண்டு அருமையான கேப்டங்களை இழந்து விட்டது.இவர்களை ஓப்பிடும் போது பாண்டிங் ஒரு திராபை தான்.

அடுத்து ரெண்டு அணி ஏலம் விட்டு விட்டார்கள்.அந்த அணிகள் புனே மற்றும் கொச்சின்.இவ்வளவு காசா என்று ஒரு நிமிஷம் கண்கள் இருட்டி விட்டது.புனே அணியில் விளையாட தான் கிராக்கி இருக்கும் என்று நினைக்கிறேன்.இந்திய அணியின் ஸ்பான்சரே புனே அணியை ஏலம் எடுத்த சகாரா தான்.இந்த முறை தோனி அறுபது கோடிக்கு போனாலும் ஆச்சர்யமில்லை.

அடுத்த முறை தொன்னூறு லீக் போட்டிகள் ப்ளஸ் நான்கு போட்டிகள் .எப்படி லலித் மோடி நடத்துகிறார் என்று பார்க்க வேண்டும்.நிச்சயம் ஐ.சி.சியுடன் மோதும் நாள் தூரத்தில் இல்லை.இல்லை அது நாற்பத்தைந்து லீக் போட்டிகளாக குறையலாம்.பொறுத்திருந்து பார்ப்போம்.இன்றும் லலித் மோடி மீது போதைப் பொருள் வைத்திருந்தார் என்று இங்கிலாந்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.அதை சமாளிக்கும் லலித் மோடிக்கு ஐ.சி.சி எம்மாத்திரம் தான்.

5 comments:

இராகவன் நைஜிரியா said...

என்னமோ போங்க... எல்லா வியாபரமும் கோடிகளில் தான்...

லட்சத்தை பார்ப்பதே எதோ கனவா இருக்கு நமக்கு..

இராகவன் நைஜிரியா said...

விளையாட்டு இப்போ சிலரின் பணம் பண்ணும் விளையாட்டாப் போச்சுங்க..

இராகவன் நைஜிரியா said...

// வீரர்களை சரக்கிலேயே குளிப்பாட்டி எடுக்கிறார்கள். //

அதான் மறுநாள் சில பேர் டல் அடிக்கின்றார்களா?

Unknown said...

யோவ் அரவிந்து உம்ம கொலைவெறியோட சென்னை ரசிகர்கள் தேடிக்கிட்டிருக்கிறதா செய்தி வருதுய்யா.. சூதானமா இருந்துக்கப்பு..

பாலா said...

//சினிமாவில் தான் காப்பி அடிக்கிறோம் என்றால் இங்கேயுமா.வார்னே தொடங்கி வைத்தார்.அடிக்கடி முதல் ஒவரே யூசுப் பதான் தான் வீசுவார்.//

ஒரு பிளான் ஒர்கவுட் ஆனால் அதை பின் பற்றுவதில் என்ன தவறு? அப்படி பார்த்தால் வார்னேயும் தான் காப்பி அடித்துள்ளார். முதல் ஓவரை ஸ்பின்னர் வீசுவது இது முதல் முறை அல்ல. 1992 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து காப்டன் மார்டின் குரோவ் முதல் ஓவரை தீபக் படேல் என்று ஸ்பின்னரை கொண்டுதான் வீச செய்தார். இது மிகுந்த பலன் அளித்தது. பிறகு அதனை தொடர்ந்து பயன் படுத்த ஆரம்பித்தார்.