Monday, January 18, 2010

துவையல் - கோல்மால் ஸ்பெஷல்

தமிலீஷ்,தமிழ்மணம்,சங்கமம் எல்லாவற்றிலும் கள்ள ஓட்டு குத்த முயற்சி செய்தேன்.பக்காவாக எல்லா திரட்டியிலும் விழுந்தது.காரணம் கோல்மால் செய்வது எனக்கு புதிது அல்ல.பழகிய ஒன்று தான்.என்னால் தமிழ்மணத்தில் நாலு ஒட்டுக் குத்தி பரிந்துரையில் நிற்க முடியும்.ஆனால் செய்யவில்லை.இருபது ஓட்டுக் குத்தி மகுடத்திலும் ஏற முடியும்.செய்யப் பிடிக்கவில்லை.தமிழ் மணம் இந்த ஓட்டு முறைகளை நிறுத்தி விட்டு சுழற்சி முறையில் எல்லோருடைய பதிவுகளையும் கொண்டு வரலாம்.நிறைய புதியவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளலாம்.நான் ஏதோ சும்மா சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.சங்கமம்(tamil.blogkut.com) போய் நிறைய ஓட்டு வாங்கிய பதிவுகளைப் பார்க்கலாம்.முதல் ஆறு பதிவும் என்னுடையது தான்.கள்ள ஓட்டே போட முடியாது என்று நினைத்த சங்கமத்திலே இந்த கோல்மால் சாத்தியம் என்றால் தமிழ்மணம்,தமிலீஷ் எல்லாம் என்ன கதியாகும் என்று யோசித்து கொள்ளலாம்.இனி புதியவர்களும் அவர்களே நாலு ஓட்டுக் குத்திக் கொண்டால் பரிந்துரையில் நிற்கும்.எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ரூபாய் ரெண்டாயிரத்தை எனக்கு அனுப்பி வைக்கவும்.குஜராத் பதிவர் என்றால் நாலாயிரம்.பிம்பிளிக்கி பிலாப்பி அதாங்க பத்தாயிரம் ஆவதற்குள் அணுக வேண்டிய முகவரி - 13ம் நம்பர் வீடு, வியட்நாம் காலனி,அண்ணா நகர் முதல் தெரு,சென்னை - 600028.

குமுதம்,ஆனந்த விகடன் இணையதளத்தில் படிக்க காசு தர வேண்டுமாம்.பகீரத முயற்சிக்குப் பிறகு குமுதம் கோடிங்கை உடைத்து விட்டேன். ஒசியில் தான் படிக்கிறேன்.ஆனந்த விகடனை முயற்சிக்க வேண்டும்.பிஹெச்பியை விட ஏ.எஸ்.பி உடைக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.அடுத்த கட்டமாக ஆராய்ச்சி அதை நோக்கித் திருப்பி அதை நன்றாக செய்யப் போகிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் - நிச்சயம் எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் பெயர் இதனால் கெட்டுப் போய் விட்டது.விமர்சனம் செய்த கார்க்கியை விஜய் ரசிகன் என்று கேலி செய்வதைப் பார்த்தால் கொஞ்சம் என்ன நிறையவே பரிதாபமாக இருக்கிறது.அமீர்,செல்வராகவன் எல்லாம் தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துகிறேன் என்று உலக சினிமாவை கோல்மால் செய்வதை விட விஜய் செய்யும் ஒரே பாணியிலான படங்கள் எவ்வளவோ மேல்.இதற்கு வேட்டைக்காரன் எவ்வளவோ மேல் என்று சொன்னவனை பார்த்து புன்னகைத்தேன்.காரணம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எல்லாமே கோமாளித்தனங்கள் தான்.அதில் லேட்டஸ்டாக ஒன்று - அழகாக இருக்கும் ஆன்ட்ரியாவை ஏன் இராணுவத்தினர் ஒன்றுமே செய்யவில்லை இந்த கேள்வி என்னிடம் நண்பன் கேட்ட போது மையமாக சொல்லி வைத்தேன் - இன்னும் இரண்டு வருடங்கள் செலவு செய்து இருந்தால் அந்த காட்சி இருந்திருக்கும் என்று.இதை ஆஸ்காருக்கு நாமினேட் செய்து கிடைக்காமல் போனவுடன் அது அமெரிக்கன் விருது என்று யாரும் புலம்ப வேண்டாம். ரீமா நன்றாக நடித்திருக்கிறார் என்று எல்லோரும் சொல்லும் போது எனக்கு மட்டும் சிரிப்பு வந்தது."நன்றாக" நடித்திருக்கிறார் என்னும் வாக்கியம் பின் நவீனத்துவத்தில் வருமா.

தமிழ்படத்தில் வரும் பெயர்கள் கூட ஒரு குறியீடுகள் தான் போல.சிவாவின் நண்பர்களாக வரும் பாஸ்கர்,வெண்ணிற ஆடை மூர்த்தி,மனோ பாலாவின் பெயர்கள் வரிசையாக இல்லாமல் சித்தார்த்,பரத்,நகுல்.என்ன கோல்மால்டா இது என்று நினைக்கும் போதே அடுத்த ஷாக் குத்துவிளக்கு குத்துவிளக்கு என்ற பாடலில் ஆடுவது கஸ்தூரி.அறிமுகமாகும் போது கவர்ச்சியாக நடித்து இருந்தால் இன்று இப்படி நிலைமை மாறியிருக்குமா என்ற கேள்வி எழுந்தது.காரணம் மிஸ் மெட்ராஸ்,ரோஸரி பள்ளியின் முதல் மாணவி.இது தான் விதியின் கோல்மால் போல.வாரமலர் அந்துமணி கூட மதித்து பாராட்டும் நடிகை.

கோவா - நிச்சயமாக பல்ப் வாங்கும் என்று தெரிகிறது.காரணம் மூன்று முதலாவது போட்டியில் இருக்கும் தமிழ்படம்.ஏ செண்டர் ரசிகர்களுக்கான படம் போலத் தெரிகிறது.பி,சியில் எடுபடுமா என்று தெரியவில்லை.பாட்டு பல்லிளித்து விட்டது.தமிழ் சினிமாவின் ராசி பெரும்பாலும் மூன்றாவது படத்தில் தான் வெற்றி இயக்குனர்கள் பல்ப் வாங்குவார்கள்.இதெல்லாம் எனக்கு தோன்றிய கோல்மால்கள்.இது எதுவும் நடக்கவில்லை என்றால் ஆட்டோ அனுப்ப வேண்டாம்.நடந்தது என்றாலும் ஆட்டோ வேண்டாம்.

வலைச்சரம் ஒரு வாரம் நன்றாக இருந்தது.சரியாக செய்தேனா என்று யோசித்து பார்த்தேன்.அதிலும் கோல்மால் செய்து இருக்கிறேன்.அதிரடி வியாழனில் கடைசி அறிமுகம் - எரிமலைக்கு டார்ச் அடித்து விட்டேன்.நல்ல வேளை யாரும் கவனிக்கவில்லை.கவனித்தாலும் பிறந்த நாள் காரணமாக ரெண்டு மிதி மிதிக்கவில்லை.

தமிழ்மணம் விருதுகளுக்கு நானும் பரிந்துரை செய்தேன்.என்ன செய்தேன் என்று தான் ஞாபகம் இல்லை.சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறேன்.சரியாக செய்து விட்டாலும் என்று சொல்பவர்களுக்கு சரி விடுங்க.ஜெயித்தது எல்லாம் நம்ம நண்பர்கள் விட்டுக் கொடுத்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

என்னால் திரட்டியோ,இணையத்தளமோ உருவாக்க முடியாமல் இருக்கலாம்.ஆனால் புரிந்து கொண்டு கோல்மால் செய்ய முடியும்.இப்படி சொல்ல காரணம் போன பதிவில் உனக்கு படமெடுக்க தெரியுமா என்று கேட்டார்கள் அப்படியும் இந்த பதிவில் இணையத்தளம் அல்லது திரட்டு உருவாக்க முடியுமா என்று யாரவது கேட்டால் என் பதில் முடி...

ஆயிரத்தில் ஒருவன் பதிவு எழுதியதால் இரண்டு ஃபாலோயர்கள் காணவில்லை.இரண்டு பேர் புதிதாக சேர்ந்து இருக்கிறார்கள்.இதை பார்க்கும் போது சின்ன வயதில் பாடிய பாடல் ஞாபகம் வந்தது - "வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும் டும்..".என்ன கோல்மால் செய்தால் யாரும் போகாமல் இருப்பார்கள்.அல்லது இன்னும் 848 ஐடி உருவாக்கி தமிழில் முதன் முதலில் ஆயிரம் ஃபாலோயர்கள் கொண்ட அபூர்வ சிகாமணி ஆகலாம் என்று ஒரு எண்ணம் வந்தது.அது எடுக்கும் நேரத்தை நினைத்து நினைத்து பார்த்தேன்.நெருங்கி அருகில் வராமல் போய் விட்டேன் வேறு வேலையைப் பார்க்க.இதற்கும் யாராவது போய் விடக் கூடாது என்று வேண்டியும் வேண்டாமலும் எனது உரையை அடித்து முடித்து கொள்கிறேன்.

8 comments:

கோவி.கண்ணன் said...

//இனி புதியவர்களும் அவர்களே நாலு ஓட்டுக் குத்திக் கொண்டால் பரிந்துரையில் நிற்கும்.எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ரூபாய் ரெண்டாயிரத்தை எனக்கு அனுப்பி வைக்கவும்.//
கூகுள் ஆட்சில் பணம் பண்ணுவதைவிட இது இலகுவாக இருக்கிறதே !
:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தமிலிஷ்ல நான் உங்களுக்குப் போடுவதையும் நீங்களே போட்டுக் கொள்ளும் கள்ள ஓட்டுன்னு நினைச்சுடப் போறாங்க :)

நானும் கோபத்துல ஃபாலோயரா இருக்கறதை ஸ்டாப் பண்ணிடலாம்னு நினைச்சேன் - அப்புறம்தான் தெரிஞ்சுது நான் உங்களை ஃபாலோவே பண்ணலைன்னு :)

Raju said...

யோவ் சாஃப்ட்வேரு...!

ஆனா, அதிரடி வியாழனில் அவரு இன்னும் பதிவர்தான் நீங்க செஞ்ச நுண்ணரசியலுக்கு Hats ஆப்பு மாமேய்...!

அத்திரி said...

//பகீரத முயற்சிக்குப் பிறகு குமுதம் கோடிங்கை உடைத்து விட்டேன்.//

எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுப்பா .......மும்பைக்கு அல்வா பார்சல் அனுப்புறேன்

Chitra said...

நான், எனது சட்ட பூர்வமான ஓட்டு போட்டு விட்டேன். இப்போதான் "வாஸ்து" படி, வலைபதிவில் தேறுமான்னு பாக்கிறேன். அது சரிபட்டு வரவில்லை என்றால், உங்கள் அதிரடி நடவடிக்கை தான். எதுக்கும் ரெண்டாயிரம் எடுத்து வைக்கிறேன். :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்கிட்டீங்க

Cable சங்கர் said...

பாலோயர்களை எல்லாம் கூட பாலோ பண்றியா..?

Unknown said...

அப்போ நீங்க சாப்ட்வர் புலியா...,