Tuesday, May 31, 2011

ஆணியே பிடுங்க வேண்டாம் ஜெயமோகன்

ஜெயமோகருக்கு இந்த உலகத்தில் தெரியாதது எதுவுமேயில்லை. கேள்வி கேட்டதற்கு பின்னூட்டப் பெட்டியை அடைத்து விட்டு வேர்ட்பிரஸில் இடத்தை அடைக்கிறது என்று பிளாக்கர் உலகத்துக்கே கண்டுப் பிடித்து சொன்னவர் ஜெயமோகன் மட்டும் தான்.

தலித் வந்ததால் கொல்கத்தா சேரி ஆகி விட்டதாம். நைஜீரியப் படுகொலைக்கு படுக்காலித்தனமாக படி மொக்கையான காரணம் சொல்பவருக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம். திருநெல்வேலி,சேலம் மக்கள் மும்பை போனதால் தான் தாராவி ஆசியாவின் மிகப் பெரிய சேரி ஆக்கி விட்டது என்று மும்பை போய் வந்தால் மணிக்கு ஒரு கோடி வார்த்தைகளை அடித்து வினாடியில் ஒரு கட்டுரை தயார் செய்து விடுமளவிற்கு வல்லமை படைத்த ஒரே ஆள் இவராகத்தானிருக்கும்.யாராவது இறந்து விட்டால் போதும் இறந்து போனவரே சொர்க்கத்தில் இருந்தாலும் அந்த சுகம் தெரியாது. நரகத்திற்கு போனால் எண்ணெய் கொப்பரையில் வறுத்தாலும் வலி தெரியாது. அவர்கள் கூட இதைப் பற்றி சிந்திக்கும் அளவிற்கு எழுதும் ஒரே இலக்கிலாவாதி மற்றும் இலக்கியவாதி இவர் தான்.

சினிமாவில் திரைக்கதை எழுத இவரை விட்டால் ஆளே கிடையாது. திரைக்கதைக்கு ஒரே உதாரணம் சிந்து சமவெளி தான். மகாபாரதத்தையே தளபதிக்குள் அடக்கிய மணிரத்னத்திற்கே பொன்னியின் செல்வனை அடக்க முடியவில்லை. அந்த நேரத்தில் சுஜாதா இலக்கியவாதியே இல்லை என்று ஜெயமோகன் எழுத, அவரையே இதற்கு திரைக்கதை எழுத சொல்லியிருக்கிறார்.

ஒரு பக்க கதைக்கே சினாப்சிஸ் எழுத சொன்னால் ஜெமோ அதற்கு இருபது பக்கம் ஆக்குவார். பொன்னியின் செல்வனுக்கு எழுத சொன்னால் எப்படி இருக்கும். திரைக்கதை எழுதியப்பின் மணிரத்னத்தை பார்க்க சென்ற ஜெயமோகன் மணி மாடியில் இருக்கிறார் என்று தெரிந்ததும் கதை சொல்லும் அவசரத்தில் திரைக்கதை எழுதிய ஒரு லட்சம் பக்கத்தை அடுக்கி அதன் மேலே நிற்க ராவணன் உயரத்திற்கு வளர்ந்த அனுமனின் வால் போல திரைக்கதை கட்டுக்கள் அவரை பால்கனிக்கே கொண்டு போய் விட்டதாம்.

மணி ஆச்சர்யத்தில் ஜெமோ எப்படி இது சாத்தியம் என்று கேட்க ஒரு லட்சம் பக்கத்தை காட்ட நடிக்கும் எல்லா நடிகர்களுக்கும் திரைக்கதையை கொடுக்க போகிறோமோ என்று பார்வையாலே கேட்க.

உங்களுக்கு தான் மணி.அதுவும் இடைவேளை வரை தான் என்று ஜெமோ சொல்ல.

ஏற்கனவே ராவணன் படத்தால் நொந்து போயிருந்த மணி "ஆணியே பிடுங்க வேண்டாம் ஜெயமோகன்.." என்று காட்டுக்கத்தல் போட அன்றே படம் டிராப்பாகி விட்டதாம்.

இப்படி ஆணியே பிடுங்க வேண்டாம் ஜெயமோகன் என்று தமிழகத்தில் எல்லாரும் கத்தித் தொலைத்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.