Wednesday, March 10, 2010

கடவுள் எப்படி உருவானார் (அ) உருவாக்கப்பட்டார்

சமயத்தில் சில கிடுக்குப்பிடி ஆசாமிகளிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கியதுண்டு.இல்லை அவர்கள் என்னிடம் மாட்டி விழியையே பறி கொடுக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.என் பக்கம் தோல்வி வரும் நிலையிருந்தால் நிச்சயம் ஒத்துக் கொள்வேன்.ரொமப நேரம் வாதிடுபவன் முட்டாள் என்று எனக்கு சில சமயம் தெரிந்தாலும் இன்னும் முட்டாளாக வாதிட்டு இருக்கிறேன்.

அப்படி என்னை விழி பிதுங்க வைத்த கேள்விகள்

முருகனுக்கு ரெண்டு மனைவி.அவர்களுக்கு வாரிசுகள் இல்லையா.

புராணங்கள் ,இதிகாசங்களின் படி பார்வதியே எதிர்த்து பேசினாலோ,அல்லது தவறு செய்தாலோ பூலோகத்தில் பிறந்து சாபம் தீர தவம் இருக்கிறார்.சந்தேகம் வந்தால் சீதை தீக்குளிக்கிறார்.அது எல்லாம் சொல்லி தருவது ஆணாதிக்கமா.

இந்த மாதிரி சமயத்தில் சிக்கி விட்டோமே என்று தவித்தாலும் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் பொருட்டு அவர்களிடம் என்றுமே ஒரு நெருக்கம் இருக்கும்.

நித்யானந்த ராஜசேகர் விவகாரம் வந்தப்பின் இதே கேள்விகள் அனல் பறந்தது.நண்பர் சொன்னார் "இணையம்,தொழில் நுட்பம் என்று வளர்ந்தப் பின்னும் இது மாதிரி ஆட்களை கடவுள் என்று சிலர் சொல்கிறார்கள்.நம்பவும் ஆட்கள் இருக்கிறார்கள்.இணையம் இல்லாத காலத்தில் ஆபிரகாம் லிங்கன் இறந்த செய்தி உலகம் முழுக்க தெரிய பல மாதங்கள் ஆனது.அந்த காலத்தில் மூட நம்பிக்கைகளும் கொடி கட்டி பறந்து இருக்கும்.."

"எனக்கு புரியவில்லையே.." என்று சொன்னேன்.

"நாடு பிடிக்க வந்த டச்சு,போர்த்துகீசியர்கள்,ஆங்கிலேயர்கள்,பிரான்ஸ் நாட்டவர்கள் எல்லாம் முதலில் குறி வைத்தது கடலோரம் வாழும் மக்களை தான்..".கோவா,புதுச்சேரி என்று ஆரம்பித்துஇன்னும் சில இடங்களை சொன்னார்.

தலையை நன்றாக ஆட்டி வைத்தேன்.

"அவர்கள் எல்லாம் ஆதிக்கம் செலுத்த முடியாத மக்களாகவும்,நிறைய விஷயத்தில் பின் தங்கியும் இருந்தார்கள்.அவர்களை குறி வைத்து இரும்பால் செய்த அவர்கள் வழிபடும் சிலையை தண்ணீரில் போட்டுக் காட்ட அது மூழ்கி விட்டதாம்.பிளாஸ்டிக்கில் செய்த அவர்கள் கடவுளின் சிலையை தண்ணீரில் போட அது மிதந்ததாம்.பிறகென்ன மதமாற்றம் தான்.." சொல்லும் போதே எனக்கு உணர்ச்சிப் பொங்கியது.

"வாழ்வு நிலையில் முன்னேற மதமாற்றம் தப்பில்லையே.உதாரணம் ஏ.ஆர்.ரஹ்மான்.." என்று நான் ஆரம்பிக்க அவர் மேலும் தொடர்ந்தார்.

"அது தான் விஷயம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சிவன்,முருகன் என்று மனிதர்கள் இருந்திருப்பார்கள்.அவர்களை கடவுள் என்று சிலர் தூக்கி வைத்து ஆடியிருப்பார்கள்.உடனே சிலை வழிபாடு,மந்திரம் என்று ஆரம்பித்து இருப்பார்கள்.."

"எப்படி இவ்வளவு உறுதியாக சொல்ல முடியும்.." விடாமல் நானும் விடாமல் கேட்டேன்.

"துவாரகை என்ற நகரம் குஜராத் கடலோரம் மூழ்கியிருக்கிறதே,அதை ஆண்டவர் கிருஷ்ணர் தானே.அப்படியென்றால் அவரும் மனிதர் தான்.நாம் இப்போழுது அவரை வணங்குகிறோம்.."

"அப்ப இந்திரன்,அக்னி,வாயு,வருணன் எல்லோருமே மனிதர்களா.." என்று கேட்டு விட்டு கிடுக்குப்பிடி போட்டதாக நானே நினைத்து கொண்டேன்.

"நிச்சயம் மனிதர்கள் தான்.நெருப்பு கண்டுப்பிடித்த காலத்தில் அதை அணைந்து விடாமல் பார்த்து கொள்வார்களாம்.அது அணைந்து விட்டால் அடுத்து மின்னல்,காட்டுத்தீ என்று ஏதாவது இயற்கையாக நெருப்பு உருவாகும் வரை காத்திருக்க வேண்டும்.அதனால் நெருப்பு அணைந்து விடாமல் யாராவது காவல் இருப்பார்கள்.ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக பின்னால் அது மாறியிருக்கும்.அந்த நபர் அக்னி என்று அழைக்கப்பட்டிருப்பார்.இதே வழி முறையில் தான் பூசாரி பையன் பூசாரி ஆன கதை எல்லாம் வந்தது.." இப்படி எப்படி பால் போட்டாலும் அடித்தார்.

எனக்கு தலை விடாமல் சுத்திக் கொண்டிருந்தது.அந்த வேகத்தில் வார்த்தைகள் வெளியே வந்து விட்டது."தேவர்கள்,அமிர்தம் என்பது எல்லாம் பொய்யா.."

"நிச்சயம் பொய் தான்.கஞ்சி காய்ச்சி குடித்திருப்பார்கள்.அமிர்தம் என்பது அதன் பெயராக இருக்கும்.எதிர் அணியில் இருந்து எவனாவது கூட்டத்தோடு கூட்டமாக க்லந்து வாங்கி குடித்திருப்பான்.கோபத்தில் கொன்றிருப்பார்கள்.அது ராகு,கேது என்றாகி விட்டது.."

இவ்வளவு நடந்த பிறகும் சனி பகவானை பற்றி கேட்க ஆசை தான்.காதில் வழிந்த இரத்தத்தால் அதை கேட்கவில்லை.

அவர் விடாமல் தொடர்ந்தார்."கிரேக்கப் புராணத்தை எடுத்து கொள்.நம் மாதிரி அக்னி,வருணன்,வாயு என்று ஒவ்வொரு இலாகாவிற்கும் ஆட்கள் உண்டு.கடவுள் எனக்கு தெரிந்து விட்டார் என் குடும்பத்திற்கு மட்டும் காட்சியளிப்பார் என்று டிவியில் சொல்வார்கள்.அதை பற்றி சொல்லட்டுமா.." என்று கேட்க

நான் கை எடுத்து கும்பிட்டப் பிறகே விட்டார்.கடைசியாக என்னை பார்த்து கேட்டார்."இனி கோவிலுக்கு போவ.."

"ஆமாம் போவேன்.சுண்டல்,கேசரி,புளியோதரை என்று தந்தால் போவேன்.." என்று சொல்லும் போதே ஆளை காணவில்லை.ஒரே கோஷ்டியில் உள்ள ஆள் என்று நினைத்து விட்டாரோ என்று அவருக்கு காத்திருந்தால் கையில் கேசரியோடு வருவது தெரிந்தது.

பாய்ஸ் படத்தில் செந்தில் சொல்வது ஞாபகம் வந்தது."இன்பர்மேஷன் இஸ் வெல்த்..".நான் அதை அவரிடமிருந்து கேசரியைப் பிடுங்கத் துரத்திக் கொண்டிருந்தேன்.

12 comments:

வால்பையன் said...

அருமையான பகிர்வு நண்பரே!

மிக்க நன்றி!

சரவணகுமரன் said...

உங்க நண்பர்கிட்ட பேசுனா, செம ஜாலியா இருக்கும் போல!

சூப்பர் :-)

மணிஜி said...

என்னது ? எம்.ஜி.ஆர். செத்து போயிட்டாரா?

Raju said...

பாஸ்,இனிமேல் CHATல பேசுறத பதிவா போடப் போறீங்கன்னா சொல்லீட்டு போடுங்க..!

பிளீஸ்.

இரும்புத்திரை said...

ஆமா காந்திக்கு பிறகு.எங்க ஒண்ணு விட்ட பாட்டிக்கு முன்னாடி

இரும்புத்திரை said...

சாட்ல கேசரி வாங்கி தந்த ஒரே ஆளு நீங்க தான்னு நினைக்கிறேன்.

வால்பையன் - அட்டெண்டன்ஸ் போட்டாச்சு.

சரவணகுமரன் பேசிட்டா போச்சு.

மெளனம் said...

when human being become creationist he creates god.

சங்கர் said...

இந்தக் கதை எப்போ நடந்துது? இதெல்லாம் பஸ்சுல போடுங்கப்பா, நாலு பேரு சேர்ந்தாத் தான் சவுண்ட் ஜாஸ்தியா வரும்

அகல்விளக்கு said...

கலக்கல் பதிவு தல...

///"ஆமாம் போவேன்.சுண்டல்,கேசரி,புளியோதரை என்று தந்தால் போவேன்.."//

நானும் அதுக்குத்தான் போவேன்...
:)

Ganesh said...

Naanum idhai accept panren. i have argued with many people that muruga is a king who ruled the area around palani and his flag had rooster as a symbol. :)

மோனி said...

ரை.. ரை....
வண்டி கெளம்பிடுச்சு..
தொடருங்கள் அரவிந்த் ...

Timothy_tni said...

//Naanum idhai accept panren. i have argued with many people that muruga is a king who ruled the area around palani and his flag had rooster as a symbol. :)//


Is there any answer bro.Ganesh