Friday, December 11, 2009

திரும்பி வராத(வரவும் கூடாத) இரவு

மகேஷின் பெற்றோர்கள் முதல் முறையாக நண்பனின் வீட்டில் தங்க அனுமதி தந்திருந்தார்கள்.சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை.இறுதியாண்டு பொறியியல் இன்னும் சரியாக நூறு நாட்கள் கடந்தால் பதவியுயர்வு மாண்வனில் இருந்து வெட்டி ஆபிஸராக.நண்பனின் அப்பாவும் அம்மாவும் ஊருக்கு போனதால் படித்து அடித்து கிழித்தக் களைப்பை எல்லாம் போக்க முடிவு செய்திருந்த நாள்.

மகேஷ் முதல் வருடம் ரூட் விட்டு கொண்டியிருந்தவளை இன்னொருவன் நாலாம் வருடத்தில் முயற்சி செய்து கொண்டிருந்தான்.விளங்குன மாதிரி என்று நினைத்தாலும் ஒண்ணும் சொல்லவில்லை.யாம் பெற்ற துன்பம் இந்த வையகமே பெறுக - இந்த கோட்பாடு தான் மகேஷை பொறுத்த வரை.

சரியாக பத்து மணிக்குள் மூவர் அணி,அடுத்து ஒரு நால்வர் அணி என்று ஒரு பட்டாளமே வந்து சேர பதிமூன்று பேர் திரண்டு விட்டோம்.இந்த எண்ணிக்கை ராசியில்லாத ஒன்று என்று அன்று தெரியவில்லை.

சரக்கும் உற்சாகமும் கரைப் புரண்டோடியது.மகேஷும் கூட பழைய ரூட்டில் புது பஸ் விட பார்க்கும் நண்பனும் மட்டும் சரக்கடிக்கவில்லை.காரணம் அவளுக்கு அது பிடிக்காதாம்.(இது பாதுகாப்புக்கு பின்ன எல்லா கதையிலும் இது கற்பனை என்று டிக்கியில் ஸாரி டிஸ்கியில் போட்டால் நல்லாவா இருக்கு மக்கா.நீங்களே சொல்லுங்க..)

சரக்கு போனதில் கவிதையும்,ஆங்கிலமும் நாக்கில் நர்த்தனம் ஆடியது.விதி அதை எல்லாம் காதில் வாங்க வேண்டும் அன்று எழுதி இருப்பது யாருக்கும் தெரியவில்லை குறிப்பாக மகேஷுக்கு.

"மச்சி..நாம எல்லாம் பிரியவே கூடாது..ஸ்ரைக் பண்ண வராத பசங்க கூட எல்லாம் சேரவே கூடாதுடா மச்சி..அந்த பசங்க தாண்டா காரணம் இண்டர்னல் மார்க் குறைய.." அப்படி சொல்லி விட்டு ஒருத்தன் உறங்கி விட்டான்.

உறங்கியவனைப் பார்த்தவுடன் போதையில் நட்சத்திரம் மூளையில் பறக்க தலைகீழாய் தூக்கி விட..குடித்தது எல்லாம் வெளியே வந்து விட அவன் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான்.

பாத்ரூம் சென்று விட்டு ஒவ்வொருத்தராக வர..விடிய விடிய நட்சத்திரம் பார்க்க கதை.காதல் கொண்டேன் மாதிரி மாதிரி கவிதைகள் வாசித்தார்கள் தீடிர் கவிகள்.

நிலா
வருமா வீதி உலா

"அடுத்து என்ன மச்சி.."

"இப்போ கிடைக்குமா பலா.."

"ஜூனியர் பேரு கலா.."

"டேய் பன்னாட பரதேசி பசங்களா..இது கவிதையா..டி.ஆர் டீ ஆத்துன மாதிரி இருக்கு..போய் படுங்கடா" இப்படி பக்கத்து வீட்டுக்காரர் கத்தும் வரை தொடர்ந்தது.

இப்படி இப்படி விடிய கூத்தடிச்சி விட்டு கலைந்து சென்றார்கள்.

அடுத்து வந்த மூன்று நாட்கள் வீட்டுக்கு சொந்தகாரன் மட்டும் வரவில்லை.

"மகேஷ்..நீ போய் பாருடா.."

"ஏன் அவங்க அப்பா என்னைய திட்டவா.."

நான்காம் நாள் வந்து சேர்ந்தான்.

"மச்சி மூணு நாளா ஏண்டா வரல.."

"ஏதோ ஒரு நாதாரி வீட்ல வாந்தி எடுத்துட்டான்..கழுவவே மூணு நாள் ஆச்சிதுடா.."

"மூடிய எதுவும் மோந்து பாத்து மயக்கம் போட்டு விழுந்துட்டியா.."

"என்ன நக்கலா..இன்னும் வீட்ல அந்த வாசனை இருக்கு.."

"அடுத்து உங்க அப்பா எப்போ ஊருக்கு போவார்.."

"நானும் அவங்க கூடவே போவேன்.."

வேலை கிடைக்காமல் ஆளுக்கு ஒரு பக்கம் போனாலும் இன்னும் எப்ப பாத்துக்கிட்டாலும் வாந்தி எடுத்தவன் யாரு அதுல தான் வந்து நிக்கும்.

அப்போ தான் மகேஷ் அந்த ஐடியாவை குடுத்தான்."மச்சான் திரும்ப அதே வீட்ல சரக்கடிப்போம்..யாரு வாந்தி எடுத்தாங்கன்னு கண்டுப்பிடிச்சிரலாம்."

ஆனா இதுவரைக்கும் வீடு தான் அமையல..

டிஸ்கி :

யார் வீடாவது இருந்தா சொல்லுங்க.இதுக்கு முடிவு கட்டி விடலாம்.ஆமா சொல்ல மறந்துட்டேன்.இது கற்பனை தான்.

பதிவை படிக்காமல் கூட்டத்தை கலைக்கும் பின்னூட்டம் போடுவபர்கள் கனவில் மண்ணின் மைந்தி "நமீதா" வர மாட்டார்.

இப்படி சரக்கு அப்படின்னு பதிவு எழுதிட்டு போனா நேத்து ஒருத்தன் புல்லா சரக்கடிச்சிட்டு என் மேல அபிஷேகம் பண்ணிட்டான்.அப்புறம் என்ன ஆச்சா.அவனை அடிக்க நான் என்ன வேட்டைக்காரன் விஜய்யா.அவன் தெளிவா இறங்கி போயிட்டான்.

அவனை இன்னொரு தடவை பாத்தா கேக்கணும் - "அது எப்படி அவ்வளவு கூட்டத்தில் எப்படி என் மேல மட்டும் அபிஷேகம் செஞ்சன்னு.

இதை எப்படி இந்தியில கேக்க - தெரிஞ்சவங்க சொல்லுங்க..

இதை உரையாடல் கவிதை போட்டிக்கு அனுப்பின இனி குடிக்கவே கூடாது கவிதைக்கு பரிசாக நினைத்து கொள்ள வேண்டியது தான்.இந்த கவிதையையும் அவனுக்கு சமர்ப்பணம் பண்றேன்.

நான் எனக்கு சென்னையில் வேலை கிடைக்கணும் அப்படி எழுதினா மட்டும் ஒரு மண்ணும் நடக்காது.அப்படி நடக்கட்டும் அடுத்து வர்ற பதிவுல ஆயிரம் முறை சென்னையில் வேலை கிடைக்கணும் என்று எழுதி போடுறேன்.

3 comments:

அகல்விளக்கு said...

//இந்த கவிதையையும் அவனுக்கு சமர்ப்பணம் பண்றேன்//

அட இது வேறயா...

Unknown said...

// அவனை இன்னொரு தடவை பாத்தா கேக்கணும் - "அது எப்படி அவ்வளவு கூட்டத்தில் எப்படி என் மேல மட்டும் அபிஷேகம் செஞ்சன்னு.//

பாவம் அவனுக்கும் வீடு கிடைக்கல போல...

துபாய் ராஜா said...

சீக்கிரம் சென்னையில் வேலை கிடைக்க எல்லாம்வல்ல இறைவன் அருள்வானாக.