Sunday, December 20, 2009

மேதை ராமராஜன் - எதிவினைக்கு எகிறும் வினை

ராமராஜன் படங்களை எனக்கு பிடிக்காது என்று நான் போன பதிவில் சொல்லவேயில்லை.நான் சிரித்த காரணம் - அவர் "தொடர்ந்து" இருபத்தியாறு வெற்றிப் படங்கள் கொடுத்தேன் என்று சொன்னதற்கு தான்.இப்பவும் இந்த வார்த்தைகளைத் தட்டச்சு செய்யும் போது சிரிக்கிறேன்.அவர் நடித்த நாற்பத்தி மூன்று படங்களில் இருபத்தியாறு ஹிட் கொடுத்து இருக்கலாம்.ஆனால் தொடர்ந்து அவர் கொடுத்திருக்க முடியாது.உதாரணம் - என்னை விட்டுப் போகாதே,மில் தொழிலாளி,அன்புக்கட்டளை,தேடி வந்த ராசா இதெல்லாம் ஹிட்டா.அப்படி இது எல்லாம் வெற்றிப் படங்கள் என்றால் அஜித் நடித்த ஆழ்வார்,ஜி,ஜனா(இனிமே விஜய் பத்தி எழுதல.அசல் வருதாமே அவரை பத்தி எழுதுறேன். போன்ற படங்களும் அந்த வரிசையில் சேர்க்கலாம். சும்மா பகடி செய்தாலே எனக்கு விஜய்யை பிடிக்காது என்று தம்பி ராஜூ சொல்லி விட்டார்.) தொடர்ந்து என்ற வார்த்தையில் ராமராஜன் கொடுத்த அழுத்தம் தான் சிரிக்க காரணம். இதை நேற்று சொல்லாமல் விட்டது தான் நான் செய்த தவறு. காரணம் விஜய் மற்றும் சன் பிக்சர்ஸை தான் கேலி செய்கிறேன் என்று விட்டு விட்டேன்.உடனே தம்பி சரியாக வடையை கேட்ச் செய்து விட்டார்.

விஜய் எப்படி ரஜினி வழியை முயற்சி செய்கிறாரோ அதே போல ராமராஜனும் எம்.ஜி.ஆர் வழியை முயற்சி செய்தார். காணாமல் போனார். எம்.ஜி.ஆர் கூட "தொடர்ந்து" இருபத்தியாறு வெற்றி படங்கள் கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம் தான்.ஜாக்கி சான் உலகம் அறிந்த அவரும் "தொடர்ந்து" இந்த இருபத்தியாறு பட வெற்றிகளைத் தாண்டினாரா என்பது பெரிய கேள்விக்குறியே.

நான் நேற்று ராமராஜனை பகடி செய்யவில்லை.அவர் ஒரே மாதிரி நடித்து காணாமல் போய் விட்டார் என்ற ஆதங்கமே அது. பாடல்களும், தொய்வில்லாத திரைக்கதை அமைப்பும் தான் அவர் படத்தை தூக்கி நிறுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை.அதே பாணி தான் அவருக்கு பின்னால் குழியும் வெட்டியது.

நான் பகடி செய்தால் எப்படி செய்வேன் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இதோ.

ராமராஜனுக்கு தாய்குலங்கள் மற்றும் தங்கைகளிடன் தான் அமோக ஆதரவு.அவர் வளர்ந்து வந்த காலத்தில் கல்யாணம் ஆகாத பெண்கள் தென் மாவட்டங்களில் பீடி சுற்றும் தொழிலில் தான் அதிகம் ஈடுப்பட்டார்கள்.ராமராஜனை ஒரு அண்ணனாக தான் பார்ப்பார்கள். அப்போதும் கிராமத்து இளந்தாரிகள் அதிகம் ரஜினி ரசிகர்களாகத் தான் இருந்தார்கள். காரணம் ராமராஜன் திரையில் காட்டிய புனிதப் பிம்பம். எம்.ஜி.ஆர் பாணியில் குடிக்க மாட்டார்,புகைக்க மாட்டார்,பெண்களை ஆண்களுக்கு சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வார். கேலி செய்யும் பெண்களுக்கு அவர் பதிலடி கொடுக்கும் விதத்தில் தெரியும். குடித்து விட்டு வரும் இளந்தார்களிடம் எனக்கு ராமராஜன் மாதிரி ஒரு பிள்ளை இல்லையே என்று சொல்லி வாங்கி கட்டியவர்கள் தான் அதிகம்.

ராமராஜன் படங்கள் ஆபத்தில்லாதவை என்று சொல்வதை விட ஆபத்து கண்ணுக்கு தெரியாதவை.எப்படி என்றால் வில்லன் பெண் பித்து பிடித்து அலைவான்.வில்லன் கற்பழிக்க முயற்சி செய்யும் பெண் சுமாராக இருந்தால் அவள் தங்கை.சூப்பராக இருந்தால் நாயகி. நாயகனுக்கு உதவும் நல்லவன் முதலில் ராமராஜனோடு மோதுவான்.பிறகு உதவுவான்.ஆனால் அவனுக்கு குடிப் பழக்கம் உண்டு. இப்படி அவர் மட்டும் உத்தமராய் இருப்பாராம்.சுற்றி இருப்பவர்கள் மட்டும் அயோக்கியர்களாம். திஸ் அப்ரோச் இஸ் நோன் அஸ் காரக்டர் அஸாசினேஷன்.(கோபப்படும் போது மட்டும் தான் ஆங்கிலம் வருது.)

தம்பி சொல்லியிருக்கிறார். அந்த அபிமானம் அவரை எம்.பி யாக்கியது என்று.அந்த அபிமானம் குறைந்த காரணத்தால் தான் அடுத்த தேர்தலில் அவர் செருப்பை வீசினார்கள். மக்கள் நாயகன் என்று கட் அவுட் இருந்தது - பத்து ஆண்டுகளுக்கு முன் இப்போது அந்த இடத்தில் ஒரு கம்பி தான் இருக்கிறது.(உதாரணம் சாத்தான் குளம் பக்கத்தில் இருக்கும் இட்டமொழி என்ற ஊரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்தது - வெறும் கம்பி தான் மிச்சம்.).அவர் தொடர்ந்து வெற்றிப் படங்கள் குடுத்திருந்தால் செருப்பு வருமா சொல்லுங்கள் தம்பி.

டவுசர்,கலர் சட்டை என்று போடாமல் விட்டு விட்டேன்.இன்றும் பளபள சட்டைப் போட்டால் "என்ன ராமராஜன் டிரஸ்ஸா.." என்று கேட்பார்கள். அது ஒன்று தான் இன்றும் அவரின் வெற்றியை நினைவுப்படுத்துகிறது.

அண்ணன் துபாய் ராஜா சொல்லியிருந்தார் - எந்த நாயகனும் டவுசர் அணிந்து நடிக்கவில்லை. சிவாஜி நடித்து இருக்கிறார் ஞானஒளி. ரஜினி - அதிசியப் பிறவி.ராமராஜன் அந்த படத்திலாவது மாடு பிடிக்க டவுசர் போடுவார்.சரி ஒத்துக் கொள்கிறேன்.பட்டங்கள் பறக்கட்டும் படத்தில் மாடு கிடையாது.நகரத்தில் நடக்கும் கதை. அதிலும் டவுசரில் வருவார்.

என் குரு நாதர் போல் பரபரப்பு கூட்டுவதற்காக எழுதியிருக்கிறேன் என்று சொன்னார். பரபரப்பாக எழுத விஷயங்கள் நிறைய இருக்கும் போது இதை வைத்து பரபரப்பு கூட்ட எந்த அவசியமும் இல்லை.

இளையராஜா கிராமத்தில் காலுன்ற ராமராஜன் படங்கள் பெரிதும் உதவியது என்று சொன்னார். இதுக்கு சிரிக்காமல் எதுக்கும் சிரிக்க முடியாது. அன்னக்கிளி,பதினாறு வயதினிலே படங்களின் பாடல்கள் கிராமப்புறங்களில் பட்டையைக் கிளப்பிய போது ராமராஜன் மதுரை மேலூரில் டவுசர் பையான இருந்திருப்பார். முடியலப்"பா".

அடுத்து கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு அடித்தளம் ராமராஜன் படங்கள் தான் காரணமாம். அப்போ இந்த படங்கள் வைதேகி காத்திருந்தாள் (மேண்டில் காமெடி),உதய கீதம் (முதலில் இருவரும் சேர்ந்த படம்),கீதாஞ்சலி (குதிரை ஓட்டுபவர்களாக வருவார்கள்) இந்த படங்கள் எல்லாம் வரும் போது ராமராஜன் பட்டங்கள் பறக்கட்டும் படத்தில் டவுசரில் நடித்திருப்பார்.இல்லை சொங்கி மாப்பிள்ளை ரவுடிகளிடம் மாட்டிக் கொண்டு விழிப்பவராக நடித்திருப்பார்.(படம் சூரக்கோட்டை சிங்கக்குட்டி பிரபு நடித்தது)

"மறைமுகமாக ராமராஜன் படங்கள் பெரும்பாலும் நிலபிரபுத்துவ அதிகாரத்தைக் காட்டின.." - இந்த மாதிரியான பித்தளை வரிகளை உதித்தது தம்பி "டக்"-"அவுட்" ராஜூ. அதற்கு குழலி பின்னூட்டத்தில் பதில் சொல்லி இருக்கிறார். சுகுணாவின் பதிவை படிக்கவும். இல்லை வைர வரிகள் உதிர்க்க தம்பி இந்த வயதிலாவது பாலகுமாரனின் பழைய நாவல்களைப் படிக்கலாம்.

ராமராஜனுக்கு ஜாதி ரீதியாக சப்போர்ட் இல்லையாம். என்ன கொடுமை. அவர் படத்தில் நடிக்கும் போது இருந்தது. அவர் மாதிரி புனித பிம்பம் காட்டாமல் பீடிப் பிடித்து கொண்டு,சரக்கடித்தது போல் நடித்த சரத்குமாருக்கு மாறியது.(படங்கள் - ஆதித்யன்,ஊர் காவவன்.)

ரஜினி படங்கள் வெளியிட தயங்குவாரா - டீ.ஆர் படங்களும்,ரஜினி படங்களும் நிறைய முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.எதிவினை எழுதும் போது சரியான புள்ளி விவரங்களுடன் எழுதவும்.அதற்கு பேராண்மை மாதிரியான திருடியப் படங்களைப் பார்த்த உடன் மறந்து விடவும். (ஜன நாதனுக்கு பிடித்த நடிகரும் ராமராஜன் தான்)

டிஸ்கி :

மேதை படம் வெளியாகும் போது நேற்று ராமராஜனுக்கு குடுத்த ஆதரவை நீங்கள் கண்டிப்பாக குடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விஜய் படம் பார்க்க செலவளித்த காசை அந்த படத்திற்கும் செலவளியுங்கள். மதுர தம்பி அந்த படத்தை தொலைக்காட்சியில் வரும் வரை காத்திருக்காமல் தியேட்டரில் கண்டுக் களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.தயவு செய்து மேதை படத்தை வெற்றி பெற செய்யுங்கள்.

15 comments:

அத்திரி said...

//என் குரு நாதர் போல் பரபரப்பு கூட்டுவதற்காக எழுதியிருக்கிறேன் //

யாருப்பா அந்த புண்ணியவான்?

Prathap Kumar S. said...

அதானே இதுவும் கரீட்டுதான்... நடத்துங்கப்பு..நடத்துங்க... ஆமா மேதை யாரு நடிச்சப்படம்..

லோகு said...

போன பதிவை காட்டிலும், இதில் குரோதம் அதிகமாக இருக்கிறது. இந்த போக்கு கண்டிப்பாக ஆரோக்யமானது அல்ல..

//ராமராஜன் படங்கள் ஆபத்தில்லாதவை என்று சொல்வதை விட ஆபத்து கண்ணுக்கு தெரியாதவை.எப்படி என்றால் வில்லன் பெண் பித்து பிடித்து அலைவான்.வில்லன் கற்பழிக்க முயற்சி செய்யும் பெண் சுமாராக இருந்தால் அவள் தங்கை.சூப்பராக இருந்தால் நாயகி.//
இது சிவாஜி தொடங்கி கமல் உள்பட பரத் வரைக்கும் எல்லாரோட படத்துலயும் தான் நடக்குது.. இதுல ராமராஜன் கிட்ட என்ன குறை கண்டீங்க..

//தொடர்ந்து என்ற வார்த்தையில் ராமராஜன் கொடுத்த அழுத்தம் தான் சிரிக்க காரணம். //
குமுதத்துல படிச்சதா எழுதி இருந்தீங்க.. அதுல அழுத்தம் எப்படி தெரிஞ்சது..



// அவர் மட்டும் உத்தமராய் இருப்பாராம்.சுற்றி இருப்பவர்கள் மட்டும் அயோக்கியர்களாம்.//
இந்த வரி உங்களுக்கும் பொருந்தும்னு நெனைக்கறேன்.. I am Sorry to say this.. (எனக்கு அவ்வளவு தான் இங்கிலீஷ் தெரியும்) வர வர உங்கள் எழுத்து நடை நீங்க உங்களைஅப்படித்தான் நெனச்சுட்டு இருக்கறதா காட்டுது..


//அபிமானம் குறைந்த காரணத்தால் தான் அடுத்த தேர்தலில் அவர் செருப்பை வீசினார்கள்//

அரசியல் வேறு, சினிமா வேறு.. சிவாஜி கூடத்தான் அரசியலில் ஜொலிக்கவில்லை.. அதனால் அவரை நல்ல நடிகர் இல்லையென்று சொல்லிடுவீங்களா..


//வர் தொடர்ந்து வெற்றிப் படங்கள் குடுத்திருந்தால் செருப்பு வருமா சொல்லுங்கள் தம்பி//

இவர் என்ன சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரே இறுதிக்காலத்தை சிறையிலும், வறுமையிலும் கழித்தார்.. அதனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு சுத்தமாக இல்லை என்றுசொல்லிவிடலாமா..


இளையராஜாவும், கவுண்டமணியும் ராமராஜன் படங்களால் புகழடையாமல் இருந்திருக்கலாம்.. ஆனால், கரகாட்டக்கரனையும், எங்க ஊரு பாட்டுக்கரனையும் இளையராஜா ஹிட்சில் இருந்து ஒதுக்கி விட முடியுமா..

இப்போ கட்டவுட் இல்ல, கிண்டல் பண்றாங்க அப்படிங்கறதுக்காக அவர் நடிச்சது எல்லாம், ஜெயிச்சது எல்லாம் காணாம போயிடுமா அண்ணா.. ஏற்ற தாழ்வு எல்லா கலைஞனுக்கும் வரும். வரிக்கு வரி ரஜினி, ரஜினின்னு சொல்றீங்களே அவருக்கு கூட வரலாம்..

நீங்க ராமராஜனை விட நம்ம ராஜுவை எதிர்க்கிறதுக்கு இந்த பதிவை எழுதியதாகவே தோன்றுகிறது.
எல்லோரிடம் குறைகளும் உண்டு, நிறைகளும் உண்டு.. அது ராமராஜனாகட்டும், ரஜினி ஆகட்டும்.. ஒவ்வொருத்தரின் குறைகளை பத்தியும் எழுதி கொண்டு இருந்தால், தினம் 4 பதிவு போடலாம்.. குறைகளை மறந்து, நிறைகளை தூக்கி பார்ப்பதே, நன்மை பயக்கும். அது சக நண்பராகட்டும், சினிமா நடிகராகட்டும்..



"கேடும் பெருக்கும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கனி."
- திருவள்ளுவர்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அத்திரி said...
//என் குரு நாதர் போல் பரபரப்பு கூட்டுவதற்காக எழுதியிருக்கிறேன் //

யாருப்பா அந்த புண்ணியவான்?//



அத்தரி - அதிரி புதிரி ‍

Azhagan said...

I think some of the readers got it wrong. Many actors/producers/directors gained popularity with the help of Maestro's music. I dont want to list the names, we all know the facts. To say the maestro gained fame through people like Ramarajan is real funny.Can't believe these people!.
\\இளையராஜாவும், கவுண்டமணியும் ராமராஜன் படங்களால் புகழடையாமல் இருந்திருக்கலாம்.. ஆனால், கரகாட்டக்கரனையும், எங்க ஊரு பாட்டுக்கரனையும் இளையராஜா ஹிட்சில் இருந்து ஒதுக்கி விட முடியுமா..//
Karagattakaran and other films would have been a hit even if they were without Ramarajan, If you can't see that, its a hopeless case.

நாடோடி இலக்கியன் said...

//ராமராஜன் படங்களை எனக்கு பிடிக்காது என்று நான் போன பதிவில் சொல்லவேயில்லை//

விஷயம் இத்டோடு முடிந்துவிட்டது. இதற்கு ராமராஜன் ஃபீல்டு அவுட்டாகிய பிறகு தூசு தட்டி 95ல் வெளிவந்த ’தேடி வந்த ராசா’ படத்தையெல்லாம் உதாரணமாக்க தேவையில்லை.

ஒருவன் தன்னை குடிப்பழக்கம் இல்லாதவனாகக் காட்டிக்கொள்வதில் என்ன ஆபத்து இருக்கிறது.(அவரது தனிப்பட்ட வாழ்க்கையை இழுக்காதீர்கள்).மேலும் ராமராஜன் படங்கள் ஆபத்திலாதவை என்று சொன்னது வன்முறை காட்சிகள் பெரிதாய் இருக்காது. சண்டைக்காட்சிகளில் அதிகபட்சமாக உதடு கிழிந்து ரத்தம் வருவதோடு இருக்கும்.

சூப்பர் ஃபிகர்,சுமார் ஃபிகர் சமாச்சாரமெல்லாம் அனைத்து இந்திய மொழி படங்களுக்குமே பொருந்தும் நண்பரே.

//அதிகம் ரஜினி ரசிகர்களாகத் தான் இருந்தார்கள். காரணம் ராமராஜன் திரையில் காட்டிய புனிதப் பிம்பம். எம்.ஜி.ஆர் பாணியில் குடிக்க மாட்டார்,புகைக்க மாட்டார், பெண்களை ஆண்களுக்கு சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வார்.//

”சொல்லாமல் சொன்ன விஷயத்தை ரஜினி பல படங்களில் பஞ்ச் டயலாக்காகவே(பஞ்ச் டயலாக் சமீபத்திய சமாச்சாரம் என்பீர்களானால்,வசனம் என்று கொள்ளவும்) சொல்லியிருக்கார். ரஜினியோட மாஸ் வேற, இதனாலதான் ராமராஜனுக்கு ரசிகரா இல்லாமல் ரஜினியை ரசித்தார்கள் என்பதெல்லாம் படிக்கும்போது நீங்கள் சொல்வதுபோல் சிரிப்பு சிரிப்பாக.. இப்படியான வார்த்தை கண்டிப்பாக கோபத்தைக் கிளரும்,அதனால் வேண்டாம்.


//அவர் மாதிரி புனித பிம்பம் காட்டாமல் பீடிப் பிடித்து கொண்டு,சரக்கடித்தது போல் நடித்த சரத்குமாருக்கு மாறியது.//

நல்ல ஆராய்ந்திருக்கீங்க யாருக்குமே தோணாத கோணத்தில்.

வெரி சாரி அரவிந்த்,சும்மா பரபரப்புக்காக எழுதுவதை விட்டு விட்டு வேறுமாதிரி எழுதுங்க, உங்களின் திறமையை தேவையில்லாத இடுகைகளாக்க வேண்டாம்.

துபாய் ராஜா said...

தம்பி லோகு, மற்றும் நண்பர் நாடோடி இலக்கியனின் பின்னூட்ட வரிகளை வரிக்குவரி வழிமொழிகிறேன்.

அரவிந்து தம்பி,மெய்யாலுமே நீங்கதான் புள்ளி ராசான்னு ஒத்துக்கறோம். சாரி, ஃபிங்கர் சிலிப்பாயிடுச்சு.புள்ளி விவர ராசான்னு ஒத்துக்கறோம். இப்படி தேவையில்லாத ஆராய்ச்சியை எல்லாம் விட்டுட்டு உருப்படியா ஏதாவது உபயோகமான அறிவியல்,பொது விஷயங்களை படிச்சு ஆராய்ந்து பதிவா இட்டு எங்க கூட பகிர்ந்துகிட்டிங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவோம்.

உங்க எழுத்து வேகம் குருவி,வில்லு, வேட்டைக்காரனை விட கொடுமையானதுன்னு பலரையும் வெளிப்படையா சொல்ல வச்சிடாதீங்க. தொடர்ந்து இப்படி எழுதினா 133 பேரும் சொல்லாம, கொள்ளாம காணாம போயிடுவாங்க. எம்புட்டு கஷ்டப்பட்டு எல்லாரையும் சேர்த்தீங்கன்னு கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாருங்க.

நீங்க எழுதின பதிவுகளை கொஞ்சம் இல்லை நிறையவே கஷ்டப்பட்டு படிச்சு பார்த்தீங்கன்னா அதற்கப்புறம் யாரையும் மட்டமாக எழுத மனம் வராது.

எல்லா பதிவிற்கும் தலைப்பு நல்லா சிந்திச்சு வைக்கறீங்க. ஆனா மேட்டர்...???!!! இருக்கான்னு படிச்சு,பார்த்து அதை புள்ளிவிவரத்தோடு பல பதிவா போடுங்க. நாங்களும் படிச்சு பலன் அடையறோம்.

ஏற்கனவே உங்களுக்கு 200க்கு கவுண்டவுன் வச்சமாதிரி இப்ப ஒரு பகிரங்க சவால்.

இன்னும் ஒரு 11 பதிவு உங்க இஷ்டத்துக்கு (எங்க கஷ்டத்துக்கு) எப்படின்னாலும் எழுதிக்கோங்க.

அதற்கப்பறம் உங்களாலே உருப்படியா எல்லோரும் ரசிக்கிற மாதிரி ஒரு (சில) காதல் கவிதை(கள்) அல்லது இயற்கை சம்பந்தப்பட்டது ஏதாவது வார்த்தைகளை வலிந்து திணிக்காம இயல்பா எழுதமுடியுமா...இது சவால் நம்பர் 1.

சவால் நம்பர் 2 : ஏற்கனவே பலமுறை சொன்னமாதிரி மொக்கை போடாமல் உங்களாலே ஒரு தொடர்(கதை) அல்லது ஒரு சம்பவ வர்ணிப்பு இயல்பா எழுதமுடியுமா....

உங்கள் எழுத்து திறமையை வளர்க்கத்தான் இந்த சவால்கள். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

காதல் அனுபவம் இல்லை. எழுதும் படி பெரிய சம்பவ பகிர்வு இல்லை என்றெல்லாம் சொல்லி ஜகா வாங்கினிங்கன்னா, அதற்கும் ஒரு சவால். உங்க கனவான விஸ்காம் தான் படிக்க முடியலை. எப்படியாவது திரையுலகம் நுழைய கொஞ்சம் முயற்சி எடுத்தீங்கன்னா அது எவ்வளவு கஷ்டம்ன்னு புரியும்.அதில் இருக்கிறவங்க எவ்வளவு பாவப்பட்டவங்கன்னும் புரியும்.

உங்களை சுத்தி(போட்டு) இருக்கிற இரும்புத்திரையில் இருந்து கொஞ்சம் வெளியே வாங்க தம்பி. உலகம் ரொம்ப அழகானது. ரசிப்பதற்கும், பகிர்வதற்கும் சினிமா தவிர எவ்வளவோ விஷயம் இருக்கு.

லாஸ்ட் பட் லீஸ்ட். சிறுவர்களை பதிவுலகம் பக்கம் விடாதீங்கன்னு யாரையும் சொல்ல வச்ச்சுடாதீங்க...

அறிவுரையாக எடுத்துக்கவேண்டாம். அனுபவ பகிர்வாக எடுத்து கொள்ளுங்கள்.

thamizhparavai said...

//வெரி சாரி அரவிந்த்,சும்மா பரபரப்புக்காக எழுதுவதை விட்டு விட்டு வேறுமாதிரி எழுதுங்க, உங்களின் திறமையை தேவையில்லாத இடுகைகளாக்க வேண்டாம்.//
வழிமொழிகிறேன்...

துபாய் ராஜா said...

தம்பி அரவிந்த் மற்றும் நண்பர்கள் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு தகவல்.

சிறுவர்கள் என்று குறிப்பிட்டது அரவிந்த் தம்பியின் ஆராய்ச்சி மற்றும் புள்ளி விவரப்பதிவுகளால் மிரண்டு, மெர்சலாகி பத்தி பத்தியாக பின்னூட்டமிடும் அடியேன்,தம்பி லோகு மற்றும் நண்பர் நாடோடி இலக்கியனைப் பற்றிதான். எங்களைப் பார்த்து பரிதாபப்பட்டு பதிவுலகம் பக்கம் (மிரண்டு,மெர்சலாகி பின்னூட்டமிடும்) சிறுவர்களை விடாதீங்கன்னு யாராவது சொல்லி விடக்கூடாது என்பதால்தான்.

மேலும் சவால் விட்டதெல்லாம் தம்பி அப்படியாவது நல்லதா நாலு பதிவு எழுதிடமாட்டாரா என்ற நப்பாசையில்தான்.... :))

மற்றபடி எங்கள் கருத்துகளில் உள்குத்து,வெளிக்குத்து,கும்மாங்குத்து, நடுமத்திசென்டர் குத்து ஏதுமில்லை.. என்பதை இங்கிலீஸ்காரன் படத்தில் வடிவேலு ஸ்டைலாக பட்டாபட்டி டவசரின் இரண்டு பாக்கெட்டுகளிலும் கையை விட்டு வெளியே எடுத்து கண்பிப்பது போல் தெளிவுபடுத்தி விட்டோம். :))

இப்பவே கண்ணை கட்டுதே...ஆமா நடுராத்திரி ஒரு மணிக்கு பின்னூட்டம் எழுதினா... கண்ணு மட்டுமா.. எல்லாமேதான் கட்டும். :))

அப்ப வரட்டா.நெக்ஸ்ட் அடுத்த
ப(ப்ப)ரபரப்பானப் பதிவுல மீட் பண்ணுவோம்.

பீர் | Peer said...

உங்களிடமிருக்கும் எழுத்துத் திறமையை வீணாக்குகிறீர்களோ என்ற அச்சம் வருகிறது, அரவிந்த்.

Mottai said...

Hey, you forgot to mention that he is probably the only contemporary hero to sport a lipstick. LIPSTICK !

Raju said...

போங்க பாஸ்.. வடையை மிஸ் பண்ணீட்டீங்க...தலைப்புல உங்க ”தல” பேரைச் சேர்த்திருக்கலாம். ஒரு 1000 ஹிட்ஸ் அதிகமா கிடைச்சுருக்கும்.

I Love You Logu...(எனக்கு கொஞ்சம் இங்கிலீபீஸு வரும்..!)

Raju said...

தலைப்பு சொல்றேன் கேளுங்க..

சாரு மாதிரி எழுதுகிறேனா நான் - அண்ணன் துபாய் ராஜாவிற்கு ஒரு எதிர்வினை.

ஹி..ஹி..ஏதோ நம்மளால முடிஞ்சது.
:-)

CS. Mohan Kumar said...

நீங்களும் ராஜுவும் அடிக்கும் லூட்டியில் மேட்ச் பிக்சிங் இருக்குமோன்னு டவுட்டா இருக்கு

துபாய் ராஜா said...

// Mohan Kumar said...
நீங்களும் ராஜுவும் அடிக்கும் லூட்டியில் மேட்ச் பிக்சிங் இருக்குமோன்னு டவுட்டா இருக்கு//

ஆஹா... இது தெரியாம நாமளா வந்துதான் நடுவுல மாட்டிகிட்டோமா...