Thursday, December 31, 2009

சினிமாவின் அவலம் - டைட்டில் கார்டு

திரையில் பெயர் பார்க்கும் ஆர்வத்தில்
துவக்கம் முதல் கண்கொட்டாத காத்திருப்பு
முந்தைய இரவின் மிச்சம்
இடைவெளியில் கண்ணை நிமிண்டுகிறது
அடிவயிற்றில் பரவும் சூடு
இடைவெளியின் அகலம் தெரியாமல்
அவசரமாக சாப்பிட்ட காபி
காற்று இறக்கப்படும் பலூன்கள்
முன்னிருக்கையில் தள்ளப்படும் தாள்கள்
கடைசியில் வரும் நம்பிக்கையில் சகாக்கள்
எண்ட் கிரேடிட்சில் பெயர் சுழலும் போது
எரியும் விளக்கு அணைக்கப்படும் திரை
நண்பன் சொன்னது காதில் தெறிக்கிறது
"இதிலுமாடா ஹாலிவுட் மோகம்.."
கொட்டை எழுத்தில் நேற்றைய உதவிகளின் நாமங்கள்
திருட்டு விசிடியிலும் பெயர் தெரியாத
சோகத்தில் நாளைய பிரபலம்..

5 comments:

ஆர்வா said...

சினிமாவில் இருப்பதால் இதன் வலிகளை என்னாலும் உணர முடியும். அருமையாக இருந்தது

Cable சங்கர் said...

சரி விடுங்க பேரை முதல்லயே போட்டுருவோம்

Unknown said...

ஆகா.. நல்லா இருக்கே..

அக்னி பார்வை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அக்னி பார்வை said...

//Cable Sankar said...
சரி விடுங்க பேரை முதல்லயே போட்டுருவோம்
//
vazhimozhikiReen