Wednesday, December 16, 2009

சாருவுடன் முரண்பாடு - மிஷ்கின்,இளையராஜா

சாருவுடன் முரண்பாடு என்று சொல்வதை விட அவரின் கருத்தோடு வந்த முரண்பாடு என்று சொல்லலாம்.காரணம் மிஷ்கின்,இளையராஜா.

முதலில் மிஷ்கின் - அமீர் ஆப்பிரிக்கப் படத்தைத் தழுவி எடுத்தார்.இவர் மட்டும் ஜப்பானிய படமான கிகுஜிரோ தழுவாமலா எடுத்து இருக்கிறார்.அமீரின் திருட்டு என்று வெளுத்து எடுத்து இருக்கிறார்.லுங்கியைக் கூட சரியாக கவனித்து இருக்கிறார்(ஞானி "பாசம்").ஆனால் மிஷ்கினை ஒன்றுமே சொல்லவில்லை.

அஞ்சாதே வெளியான சமயத்தில் மிஷ்கினின் பேட்டியில் இருந்து சில வரிகள் - "சித்திரம் பேசுதடி படம் முடிந்தப் பிறகு எனக்கு அடுத்தப் படம் கிடைக்க ஒரு வருடம் ஆனது.அந்த கோபத்தில் நான் முதலில் எடுத்த காட்சி படத்தின் க்ளைமேக்ஸான கறும்பு காட்டில் எடுத்த காட்சிகள் தான்.

ஏற்கனவே அஞ்சாதே படம் பார்த்து வாயை பிளந்து இருந்ததால் அவர் மேல் ஒரு மரியாதையைக் கூட்டியது இந்த பேட்டி.சுப்ரமணியபுரம் படத்தை விட இது சிறந்த படம் என்று இன்று வரை சொல்லி வருகிறேன்.இப்படி படம் கிடைக்காத சமயம் - போராடும் குணமும்.படம் கிடைத்தப் பிறகு அடுத்தவன் கற்பனைத் திருடும் இல்லை தழுவும் குணமும் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

சமீபத்தில் ஆனந்த விகடன் படித்தப் போது அவர் சொன்ன பதில்கள் அவர் மேலிருந்த மரியாதையை முற்றிலும் குறைத்து விட்டது.

ரசிக்கும் எதிரி - ஜப்பானிய இயக்குனர் கிடானோ.(யார் என்று பார்த்தால் கிகுஜிரோ படத்தின் இயக்குனர்).அவரோடு சேர்ந்து நந்தலாலா பார்க்க வேண்டும் என்பது தான் ஆசை என்று சொல்லியிருக்கிறார்.

என் ஆசையும் அதேதான்.அவருடன் பார்த்தால் அவர் இப்படித்தான் சொல்வார் - இந்த படத்திற்கு நந்தலாலா என்ற பெயரை விட கிகுஜிரோ தான் பொறுத்தமாக இருக்கும்.(கண்ணதாசன் பரிசளிக்கப் போன கவிதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கவிதை அவர் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.காரணம் அது அவருடைய கவிதை.முயலுக்கு மூன்று கால் என்று தலைப்பு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அந்த நபரிடம் சொன்னாராம்.)

அடுத்த கேள்வி யாருக்கும் இதுவரை தெரியாத உண்மை - நந்தலாலா படம் என் சொந்த வாழ்வின் பதிப்பே என்று அளந்து விட்டது.

திருடுங்க,தழுவுங்க தப்பேயில்லை - ஒரு டைட்டில் கார்டு போட்டு சொல்லுங்கள்.அதுதான் உண்மையான படைப்பாளிக்கு கொடுக்கும் மரியாதை.

கிகுஜிரோவின் கதை - ஒரு சிறுவன் கோடை விடுமுறையில் தாயைத் தேடி செல்லும் கதை.துணைக்கு ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட முதியவன்.

நந்தலாலாவின் கதை - முதியவனுக்கு பதில் வாலிபன் என்று போடுங்கள்.அட என்ன மாற்றம்.

எழுத்து என்பது எழுத்தாளனின் இரத்தம் என்று சொல்லும் மிஷ்கின் கிகுஜிரோ படம் என்ன ஜப்பானிய இயக்குனரின் கழிவா.(இரத்தம் நமக்கு போனால் தான் இரத்தம்.மற்றவனின் முகத்தில் வழிந்தால் அது தக்காளி சாஸ் போல.)

உங்களுக்காக இரண்டு படங்களின் புகைப்படங்கள்.


அட ஜப்பான் படத்தில் சிறுவன் வலதுப்பக்கம் நிற்கிறான்.நந்தலாலாவில் இடதுப்பக்கம் நிற்கிறான்.(யோவ் விளக்கெண்ண..நம்ம ஊர்ல கீப் லெப்ட்.)

அட ஜப்பான் படத்தில் பேண்ட் இடுப்பில் நிற்கிறது.நந்தலாலாவில் இடுப்பில் நிற்கவில்லை கையில் பிடித்திருக்கிறார்.

அட ஜப்பான் படத்தில் நாயகனின் முகம் பார்க்கிறான்.நந்தலாலாவில் திரும்பி நம்மை பார்க்கிறான்.

அட ஜப்பான் படத்தில் வெட்டவெளி.நந்தலாலாவில் ஒரு மரம் இருக்கிறது.

அட ஜப்பான் படம் வண்ணத்தில் இருக்கிறது(புகைப்படம்).நந்தலாலாவில் கறுப்பு வெள்ளையில் இருக்கிறது.(ஒவியம்).

ஆறு வித்தியாசம் கண்டுப்பிடிச்சி சொல்லாமல் இருந்தால் குமுதம் நடுப்பக்கம் என் கனவில் வராதே.

அட ஜப்பான் படம் வெளிவந்து விட்டது.நந்தலாலா இன்னும் வரவில்லை.சரி இது வேண்டாமா அது ஜப்பான்.இது தமிழ்.இதுவும் சரியில்லையா இளையராஜாவின் பெயர் மிஷ்கின் பெயருக்கு முன்னால் வருகிறது.

ஒரு புகைப்படத்தில் இவ்வளவு வித்தியாசம் காட்டும் மிஷ்கின் படத்தில் எவ்வளவு காட்டியிருப்பார்.காப்பி அடிப்பவன் அதிக மார்க் வாங்குவது தான் உலக நியதி.அவன் சரக்கையும் சேர்த்து விடுவான்.அதற்காக காப்பி அடிக்கவில்லை என்று அர்த்தமா.

அடுத்த முரண்பாடு - இளையராஜா.

சீனிகம் படத்தின் தரத்தையும்,நான் கடவுள் படத்தின் தரத்தையும் இளையராஜா இசை தான் குறைத்து விட்டது என்று சாரு சொல்லியிருக்கிறார்.

இசைக்கு இளையராஜாவை குற்றம் சொல்வதில் எனக்கு உடன்பாடே கிடையாது.காரணம் அவரிடம் சேர்ந்து பணியாற்றும் இயக்குனரை தான் குறை சொல்ல முடியும்.

இளையராஜாவால் தான் என்னால் இந்தி பேசும் மக்களைப் பகடி செய்ய முடிந்தது.சீனிகம் பாடல்களை எல்லோரும் விரும்பி கேட்டப் போது நான் சொன்னேன்.இதெல்லாம் நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்னால் கேட்டது என்று நக்கல் செய்ய முடிந்தது.

நான் கடவுள் பாடல்களை விட,பா படத்தின் பாடல்களை விட நந்தலாலா படத்தின் பாடல்கள் தரம் குறைந்தது தான்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான சாபக்கேடு - லூசு பசங்க பாடும் போது மட்டும் கருத்துள்ள பாடல்கள் பாடுகிறார்கள்.

"தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்..
தாய் உன்னை காண தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்.."

இப்படி ஒரு பாட்டு இளையராஜாவின் குரலில்.

நான் என் அம்மாவை வருடத்தில் இருபது நாள் தான் பார்க்கிறேன்.பார்த்ததும் இப்படி பாடல் பாட நான் ஒரு லூஸாக மாறத் தயார்.

என்னை கவர்ந்த ஒரே பாட்டு - நரிக் குறவர்கள் பாடல்.

மிஷ்கின் படம் என்பதால் இசை உலகத்தரமாகி விடாது.

இருந்தாலும் இந்தப் படத்தை நான் பார்க்க விரும்பும் காரணங்கள்.

ட்ரைலர் ஜோசியம் - அந்த பையன் மிஷ்கினை விட நன்றாக நடித்து இருக்கிறான்.அப்ப மிஷ்கின் - அமீரை விட நன்றாக நடித்து இருக்கிறார்.

கடைசி இருபது நிமிடங்கள் - வசனம் கிடையாது பிண்ணனி இசை மட்டும் தான்.

ரோகினி - மொட்டை அடித்துக் கொண்டு மிஷ்கினின் தாயாக நடித்து இருக்கிறார்.(இது மிஷ்கினின் இடைச்செருகலாக இருக்கும் என்பது சர்வ நிச்சயம்.)

இளையராஜா காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் கொடுத்தார் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது பாரதிராஜா,பாலு மகேந்திரா மற்றும் மணிரத்னம் தான்.அப்படி நந்தலாலா பாடல்கள் நிற்காது என்பது மட்டும் உறுதி.

இளையராஜாவிடம் படு மொக்கையாக இசை வாங்க முடியும் என்பதற்கு உதாரணம் - ஜெகன் மோகினி படம்.

இளையராஜாவை குறை சொல்வதை விட அவரோடு சேர்ந்து பணியாற்றும் இயக்குனர்களைக் குறை சொல்லலாம்.

டிஸ்கி :

இந்த என் சொந்த சரக்கில் எழுதியது தான் - எந்த பதிவையும் தழுவவில்லை.

சாரு சிலாகித்த அளவுக்கு படம் இல்லை என்று ஒத்துக் கொண்ட மிஷ்கினுக்கு இந்த வார பூச்செண்டு.அப்படியே நந்தலாலா படத்தின் மூலம் கிகுஜிரோ படம் தான் என்று ஒத்துக் கொண்டால் இந்த மாத பூச்செண்டு. அப்படியே கிடானோவுக்கு நன்றி என்று டைட்டில் கார்ட் போட்டால் இந்த வருட பூச்செண்டு.இந்த செலவிற்கு ஸ்பான்சர் ஞானி.(அவருக்கு தான் பூச்செண்டு பிடிக்காதாமே.ஆனா குமுதத்தில் தருவதால் அவர் தான் ஸ்பான்சர்.)


தலைப்பில் மட்டும் தான் சாரு.எல்லாம் ஒரு விளம்பரம்.அவர் கூட முரண்பாடா யார் சொன்னது.(பதிவு முடியும் பொது தோசையைத் திருப்பிட்டானே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்)

12 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

திருடுங்க,தழுவுங்க தப்பேயில்லை - ஒரு டைட்டில் கார்டு போட்டு சொல்லுங்கள்.அதுதான் உண்மையான படைப்பாளிக்கு கொடுக்கும் மரியாதை.
super
இந்த என் சொந்த சரக்கில் எழுதியது தான் - எந்த பதிவையும் தழுவவில்லை.
disky super

வெண்ணிற இரவுகள்....! said...

//முதலில் மிஷ்கின் - அமீர் ஆப்பிரிக்கப் படத்தைத் தழுவி எடுத்தார்.இவர் மட்டும் ஜப்பானிய படமான கிகுஜிரோ தழுவாமலா எடுத்து இருக்கிறார்.அமீரின் திருட்டு என்று வெளுத்து எடுத்து இருக்கிறார்.லுங்கியைக் கூட சரியாக கவனித்து இருக்கிறார்(ஞானி "பாசம்").ஆனால் மிஷ்கினை ஒன்றுமே சொல்லவில்லை //
நண்பா நீங சாரு அடியாள் அல்ல ....
சாருவை அடிக்கின்ற ஆள் ......
கருத்தால் ...
நானும் அப்படியே படம் வந்த பிறகு சாருவிற்கு கேள்விகள் இருக்கு

Mohan said...

குறைந்த பட்சம் 'நந்தலாலா' படத்தைப் பார்த்துட்டு, இந்த பதிவை போட்டிருக்கலாம்.

Raju said...

எக் காவ் மே ஏக் அடியாள் ரகத் தாத்தா...!

Unknown said...

// திருடுங்க,தழுவுங்க தப்பேயில்லை - ஒரு டைட்டில் கார்டு போட்டு சொல்லுங்கள்.அதுதான் உண்மையான படைப்பாளிக்கு கொடுக்கும் மரியாதை.//

இது நாள தான் வெங்கட் பிரபுவை எனக்கு ரொம்ப பிடிக்கும்...,

Ashok D said...

நல்லாதான் எழுதியிருக்கீங்க அரவிந்த். கடைசி வரி ஏன்?

புலவன் புலிகேசி said...

என்னுடைய கருத்து என்னவென்றால் சாரு பிரச்சினையை கிளப்பி பேர் வாங்கும் எழுத்தாளர். முந்தைய தினம் அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றவர் அந்த புத்தகங்கள் பற்றி எழுதாமல் சும்மா சின்னப் பசங்க மாதிரி அங்க ஞானி இப்புடி பன்னாரு அப்புடி பன்னாருன்னு எழுதிருக்கார். அப்புறம் முக்கியமான விசயம் "மனுஷ்ய புத்திரன்" பற்றி ஞானியாவது ஒரு முறை சொன்னதோடு நிறுத்தி விட்டார். அதை அவமானமாக நினைக்கும் இவர் பதிவெழுதி அதே "மனுஷ்ய புத்திரனை" அசிங்கப் படுத்தி விட்டார்.

புலவன் புலிகேசி said...

முக்கியமான விசயம் நான் ஞானியின் ஆதரவாளன் அல்ல...சாருவின் எதிரியுமல்ல..

Raju said...

\\Mohan said...
குறைந்த பட்சம் 'நந்தலாலா' படத்தைப் பார்த்துட்டு, இந்த பதிவை போட்டிருக்கலாம்.\\

அதான், தல டிரைலரையே பார்த்துருச்சுல..! படத்தை பக்கனுமாம் படத்தை.
:-)

Lakshmikanthan said...

பருத்திவீரன்,அஞ்சாதே என்று தமிழின் மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்த படங்களை இயக்கியவர்களான அமீரும்,மிஷ்கினும் தங்களின் அடுத்த படத்திற்கான கதையை வெளிநாட்டு படங்களின் டி.விடிகளில் தேடியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.நந்தலாலா பாடல்கள் மிகவும் சுமார்.நான் கடவுளில் மூன்று பாடல்கள் பழைய மெட்டுக்களை அடிப்படையாக கொண்டவை.ராஜாவின் கர்வம் அவரை தமிழின் சிறந்த இயக்குனர்களிடம் இருந்து தள்ளியே வைத்திருக்கிறது.உளியின் ஓசை,தனம்,ஜகன் மோகினி போன்ற படங்களுக்கு இசையமைக்கும் ராஜாவிற்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்று அவரது ரசிகர்கள் புலம்புவது நல்ல நகைச்சுவை.என்னை கேட்டால் மேற்படி படங்களின் இயக்குனர்களை பழிப்பதை விட இந்த மாதிரி படங்களுக்கு என்னுடைய இசை தேவையில்லை என்று ராஜா உறுதியாக மறுத்திருக்க வேண்டும்.சமீபத்தில் கேரளத்தில் மலையாள திரையுலகின் மிகச்சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஓ.என்.வி பழசிராஜா படத்திற்கு பாடல்களை சரியாக எழுதவில்லை என்றும் தான் தான் அவற்றை திருத்தி எழுதியதாகவும் பழசிராஜா பாடல் வெளியீட்டு விழாவில் மிகவும் ஆணவத்துடன் பேசியிருந்தார் ராஜா.தெரியாமல்தான் கேட்கிறேன் மலையாள திரையுலகின் மிகச்சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஓ.என்.வியின் பாடல்களில் திருத்தம் செய்யும் அளவிற்கு தமிழரான ராஜாவிற்கு மலையாள மொழியில் புலமை உள்ளதா?இப்படித்தான் முன்பு வைரமுத்து எழுதிய பாடல்களில் தேவையற்ற திருத்தங்களை செய்து வைரமுத்துவுக்கும் ராஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றி இருவரும் இணந்து பணியாற்றவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.80களில் தொடங்கி லேட் 90களோடு இளையராஜாவின் இசை சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது.இப்போது அவர் ஹிந்தியில் போட்டு வெற்றி பெறும் பாடல்கள் கூட 80களில் தமிழில் வெளி வந்தவைதான்.

குறிஞ்சி said...

hi Lakshmikanthan

//சமீபத்தில் கேரளத்தில் மலையாள திரையுலகின் மிகச்சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஓ.என்.வி பழசிராஜா படத்திற்கு பாடல்களை சரியாக எழுதவில்லை என்றும் தான் தான் அவற்றை திருத்தி எழுதியதாகவும் பழசிராஜா பாடல் வெளியீட்டு விழாவில் மிகவும் ஆணவத்துடன் பேசியிருந்தார் ராஜா.தெரியாமல்தான் கேட்கிறேன் மலையாள திரையுலகின் மிகச்சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஓ.என்.வியின் பாடல்களில் திருத்தம் செய்யும் அளவிற்கு தமிழரான ராஜாவிற்கு மலையாள மொழியில் புலமை உள்ளதா?//

Don't comment without knowing the truth: see the following videos

http://www.youtube.com/watch?v=Z0rvMg4Xpb0

http://www.youtube.com/watch?v=2RFfBx8UeZs

These videos taken while Pazhasi Raja Tamil version released.
அவர் சொல்லியது வேறு. பத்திரிக்கைகள் எழுதியது வேறு. அதை படித்து விட்டு மக்கள் comment செய்வது வேறு. எல்லாம் ராஜாவின் ராசி.

Lakshmikanthan said...

நண்பர் குறிஞ்சி,பத்திரிகைகளில் படித்த தகவல்களின் அடிப்படையில்தான் பழசிராஜா விவகாரம் குறித்து பதிவு செய்திருந்தேன்.நீங்கள் குறிப்பிட்டிருந்த வீடியோக்களை பார்த்தேன்.ராஜாவின் பேச்சில் சில முரண்பாடுகள் உள்ளது.ஓ.என்.வி பாடலாசிரியரே தவிர இசையமைப்பாளர் இல்லை.எனவே ஓ.என்.வி எழுதிய பாடலுக்கு எப்படி இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டியவர் ராஜாதான்.அதைத்தான் ராஜா செய்திருக்கிறார்.எந்த அடிப்படையில் அந்த மெட்டை உருவாக்கினார் என்பதை ஓ.என்.வியிடமோ இயக்குனரிடமோ கூறாமல் லெஃப்ட் ரைட் என்று ஒரு வித எள்ளலோடு பொது மேடையில் கூறுவது சரியா?.திரை இசை என்பது பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளரின் கூட்டு முயற்சி.ஒரு பாடல் எப்படி உருவானது என்பதை பற்றிய அக்கறை யாருக்கும் இல்லை.பாடல் நன்றாக இருந்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் இல்லையென்றால் நிராகரித்து விடுவார்கள்.ராஜாவின் இசை ஞானம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.அதை அவரே இப்படி அடிக்கடி யாருக்கும் புரியாத விதத்தில் விளக்க முற்படுவதை தவிர்ப்பது நல்லது.