Friday, December 25, 2009

ஆயிரத்தில் ஒருவனும்,தமிழ்படமும்

நான் எவ்வளவு தான் பார்க்கக் கூடாது என்று போராடினாலும் அதை பார்க்க நேர்ந்து விடுகிறது.ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவை பார்த்து விட்டு வந்த கோபத்திற்கு அளவு இருந்தது.

செல்வராகவன் - தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என்று நான் நினைக்கும் இயக்குனர்களில் ஒருவர்.விழாவில் அவர் பேசியதில் இருந்து சில வார்த்தைகள்."சினிமாவை கோலிவுட்,பாலிவுட்,ஹாலிவுட் என்று பிரித்து பார்க்கக் கூடாது..ஹாலிவுட் தரம் என்று ஒன்றும் இல்லை.இது ஒரு முயற்சி.இது போல முயற்சி வெற்றி பெற மேடையில் இருக்கும் பெரியவர்கள் எல்லாம் உதவ வேண்டும்.அப்படி உதவினால் தமிழ் படத்தின் தரத்திற்கு இணையான ஆங்கிலப் படங்கள் என்று சொல்லும் காலம் வரும்..இன்னும் இருபத்தியிரண்டு துறைகள் வேண்டும் அப்போது தான் இது சாத்தியமாகும்"

அடுத்து பேசிய வைரமுத்து - "நாம் இது போல நாலு படம் எடுத்தால் போதும் ஹாலிவுட் நம்மிடம் பிச்சை வாங்கும்.."

இரண்டு பேர்களுக்கும் என் பதில் - அவர்கள் கதைகளைக் கொண்டு நடிகர்களை உருவாக்குவார்கள்.நாம் நடிகர்களுக்காக கதையை வளைப்போம். முன்பாவது கதைக்கு தான் பஞ்சம்.இப்போ படத்திற்கு பெயர் வைக்கவே திண்டாடுகிறோம்.தமிழில் வார்த்தைகள் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். அதற்கு உதாரணமான பெயர்கள் தான் ஆயிரத்தில் ஒருவன்,குட்டி. இது மாதிரி முயற்சிகள் தவறேயில்லை.நாம் புதிதாக யோசித்து எடுத்தால் தான் முயற்சி வெற்றி பெறும். அதை விட்டு விட்டு மம்மியையும்,மம்மி ரிடன்ஸ் படத்தையும் கலந்து எடுத்து இன்னொரு நாயகனை (காட்பாதர் இரண்டு பாகங்கள் கலந்து அடித்தது தான் நாயகன்) உருவாக்க வேண்டாம்.ஏமாந்து வாயை பிளக்க இது 1987ம் வருடமும் இல்லை. கிங் சாலமன்ஸ் மைன்ஸ் படத்தை போல எடுத்து விட்டு இது புது முயற்சி என்று சொன்னால் கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கிறது. அவ்ர்கள் தரம் என்றுமே நம்மை விட இருபது முதல் முப்பது ஆண்டுகள் முன்னால் தான் உள்ளது. அதற்கு உதாரணம் அம்மா,பெண்ணும் ஒருவனையே காதலித்து ஏமாந்து போகும் படம் தமிழில் முதல் முறையாக வந்தது 1975 ம் ஆண்டு.(அவள் ஒரு தொடர்கதை.)இது மாதிரி கதைகளை அவர்கள் 1958ம் ஆண்டே தொட்டு விட்டார்கள்.நாம் அவர்கள் படத்தை,அவர்கள் கற்பனையை திருடாமல் இருந்து வித்தியாசமான படம் கொடுத்தால் ஹாலிவுட் திரும்பி பார்க்கும்.ஸ்லம்டாக் மில்லினியர் படத்தை பத்து தடவை பார்த்து ஒரு திரைக்கதையின் அமைப்பு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இல்லை எனக்கு கற்பனை அந்த அளவுக்கு வேலை செய்யாது என்று சொன்னால் இப்படி பேசுவதை நிறுத்தி விடுங்கள்.

செல்வராகவன் என்னும் நல்ல இயக்குனர் இப்படி பிரமாண்டம் என்ற புதைக்குழிக்குள் விழுகிறார் என்று நினைக்கும் போது வருத்தம் தான் வருகிறது. அவருடைய எல்லா தமிழ் படத்திலும் எதாவது ஒரு கதையில் உலா வரும் பாத்திரம் செத்து போகும்.துள்ளுவதோ இளமை(இவருடைய கதை - கண்ணாடி போட்ட நண்பன்),காதல் கொண்டேன் - தனுஷ்,7/ஜி ரெயின்போ காலனி - சோனியா அகர்வால்,புதுப்பேட்டை - சினேகா.இந்த படத்தில் சாகப் போவது யார் - ரீமா சென்,ஆன்ட்ரியா,அழகம் பெருமாள்.நடனமும் முதலில் யாராவது ஒருவர் மட்டும் ஆடுவார்.பிறகு அந்த கும்பலே ஆடும்.இந்த பாணிகள் எல்லாம் மாறாமல் இருந்தால் வெற்றி இயக்குனர்களாக உலா வந்த விக்ரமன்,ஆர்.வி.உதயகுமார் நிலை தான் ஏற்படும்.

இன்னும் 22 துறைகள் வேண்டும் என்று சொன்னதை நினைக்கும் போது ஒரு கிராமத்து பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.(அறுக்க மாட்டாதவன் இடுப்பைத் சுத்தி முப்பது கறுக்கறுவாளாம்.

கமல் சொன்னது தான் எனக்கு பிடித்திருந்தது - "நேர்மை என்பது அரிதாக இருக்கும் ஆடம்பரம்..".இது மாதிரி படங்கள் வராத மாதிரி பேச்சுகள் வேண்டாம்.(ஹாலிவுட் ஹாலிவுட் தான்.கோலிவுட் கோலிவுட் தான்.)

நான் இண்டியானா ஜோன்ஸ் நாலு பாகங்களையும் பார்க்க முடிவு செய்துள்ளேன்.காரணம் பார்த்தால் எழும் கோபம் மிச்சம்.மேலாக காசும் மிச்சம்.

அடுத்து தமிழ் படம். இந்த மாதிரி ஒரு பெயர் வைக்கவே இத்தனை வருடம் ஆகியுள்ளது.அதற்காகவேஒரு ஷொட்டு.ரஜினி தொடங்கி(சிவாஜி - ரஜினி நடித்த படம்),காக்க காக்க என்று எல்லா படங்களையும் மானாவாரியாக நக்கல் செய்துள்ளார்கள்.

விஜய் இல்லாமலா - ஒப்பனிங்கு சாங்கில் அண்ணனை அடித்து வெளுத்துள்ளார்கள்.2011 முதல்வர் ஆசை,கிழவிகளுடன் முகத்தை தேய்த்து போஸ். இந்த ஒரு நக்கலுக்காகவே இந்த படம் பார்ப்பேன்.

இதே மாதிரி ஒரு படத்தை வேறு யாராவது எடுத்து இருந்தால் விட்டு இருப்பார்களா.இளிச்சவாயன் என்றால் எகிறுவோம்.லொள்ளு சபாவில் பேக்கரி என்று போக்கிரி படத்தை கிண்டல் செய்த காரணத்தால் கொஞ்ச நாள் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.இந்த படத்திற்கு வருங்கால முதல்வர் த்ரப்பில் இருந்து என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

"ஒமகசியா ஓசியாலா..நாக்க மூக்க,டைலாமோ டைலாமோ.." என்று வெத்து வார்த்தைகளை வைத்தே ஒரு பாட்டு.

என்னை கேட்டால் இது தான் ஒரு முயற்சி.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

11 comments:

அத்திரி said...

//அம்மா,பெண்ணும் ஒருவனையே காதலித்து ஏமாந்து போகும் படம் தமிழில் முதல் முறையாக வந்தது 1975 ம் ஆண்டு.(அவள் ஒரு தொடர்கதை.)இது மாதிரி கதைகளை அவர்கள் 1958ம் ஆண்டே தொட்டு விட்டார்கள்.//

அடேங்கப்பா இவ்ளோ மேட்டர் தெரிஞ்சுவச்சிருக்கியே

அப்துல் சலாம் said...

//நான் இண்டியானா ஜோன்ஸ் நாலு பாகங்களையும் பார்க்க முடிவு செய்துள்ளேன்.காரணம் பார்த்தால் எழும் கோபம் மிச்சம்.மேலாக காசும் மிச்சம்//
சீக்கிரம் பார்த்துவிடுங்கள், 1000 -ல் ஒருவன் விமர்சனம் எழுத வசதியாக இருக்கும்.

DR said...

இத படிச்சிட்டு எனக்கு ஆயிரம் கைகள் மறைதாலும் ஆதவன் மறைவது இல்லை, சூரியன பாத்து நாய் குழைத்ததாம் என்ற இந்த 2 பழமொழிகள் தான் ஞாபகத்துக்கு வருது.

அகல்விளக்கு said...

அட...

தல

டிரைலர் ஸ்டார்டிங்ல

ரீமாவும் இன்னொரு பொண்ணும் என்ன பேசுராங்க.....

(தமிழ் சினிமாவாம்..........

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

wtf is going on in tamil cinema.

Bala said...

excuse me,
அம்மா,பெண்ணும் ஒருவனையே காதலித்து ஏமாந்து போகும் படம் தமிழில் முதல் முறையாக வந்தது 1975 ம் ஆண்டு.(அவள் ஒரு தொடர்கதை.) That movie is not Aval ory thodar kadhai. That movie name is called Apoorva ragangal. Rajinikanth first movie. Summa cinifield la pathi theriyucha mathiri blog la eluthatheenga.. ok mate???

ரமேஷ் கார்த்திகேயன் said...

தமிழ் படம்
நல்லதொரு நகைசுவை படமாக இருக்கும் என நினைக்கிறன்

பாலாஜி சங்கர் said...

"அம்மா,பெண்ணும் ஒருவனையே காதலித்து ஏமாந்து போகும் படம் தமிழில் முதல் முறையாக வந்தது 1975 ம் ஆண்டு.(அவள் ஒரு தொடர்கதை.)"

படத்தின் பெயர் அபூர்வ ராகங்கள்
ரஜினி முதல் படம்
பாலசந்தர் இயக்கம்

Unknown said...

நாங்கள் எல்லாம் மிர்ச்சி சிவாவின் ரசிகர்கள் நல்ல மொக்க போடுவார்.., அப்புறம் விஜயால் இவர்களை ஒன்னும் பண்ண முடியாது ஏனெனில் இதை வெளியிடுவது அழகிரின் பையன்..,

அப்துல் சலாம் said...

//அம்மா,பெண்ணும் ஒருவனையே காதலித்து ஏமாந்து போகும் படம் தமிழில் முதல் முறையாக வந்தது 1975 ம் ஆண்டு.(அவள் ஒரு தொடர்கதை.)"

படத்தின் பெயர் அபூர்வ ராகங்கள்
ரஜினி முதல் படம்
பாலசந்தர் இயக்கம்//

"அவள் ஒரு தொடர்கதை" படத்திலும் படாபட் ஜெயலட்சுமியும் அவர் அம்மாவாக நடித்த நடிகையும் ஒரே ஆளை காதலித்து ஏமாந்து போவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

Vikram said...

I guess the movie 'tamizh padam' is also loosely based on the hollywood movie 'Scary movie' which had three sequels. The "Scary movie" series was a spoof of all hollywood horror movies. This has been slightly changed to a spoof of all tamizh movies in 'tamizh padam'....

ஈரோடு சுரேஷ் said...

நான் தமிழ் படம் பாட்டு கேட்டு விட்டு இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்.. அதுவும் பச்சை மஞ்ச....... பாட்டு superoooo super :=))