மதுபானக் கடையின் குப்பைகளாக
சிதறிக் கிடக்கிறது உச்சரித்த வார்த்தைகள்
சொல்லிக் கேட்பவர்களின் எண்ணிக்கையும்
கேட்டுச் சொல்பவர்களின் நிதானமும் மட்டும்
பகடை காய் எண்களாக மாறி மாறி விழுகிறது
ஒரு குடிகார இரவில் எடுத்த சத்தியங்கள்
இன்று கண்முன்னே வேறொருவன் கையில் தவழ்கிறது
வாந்தியாய் வெளியேறுகிறது இராஜாங்கத்தின் வார்த்தைகள்
கழுவப்பட்டுக் காத்திருக்கிறது புதியவன் வருகைக்காக
கிளர்ச்சி தரும் வாசனையோடு
டிஸ்கி : இது உரையாடல் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.
Thursday, December 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
சரக்கடிச்சுட்டு தான் படிக்கனும்!
ஒரே மப்பா இருக்குப்பா..
கேபிள் சங்கர்
//ஒரு குடிகார இரவில் எடுத்த சத்தியங்கள்//
இந்த சொல்லாடலை ரசித்தேன்.
குப்பைகளாக சிதறிக் கிடக்கிறது உச்சரித்த வார்த்தைகள்
ஒரு குடிகார இரவில் எடுத்த சத்தியங்கள்
so good and wishes to win
மப்பு அழகா இருக்கு
செம மப்பு தல...
வா தல டாஸ்மாக் போலாம்...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
enakkum tasmaac kkum romba thoram anne...
enakku antha palakkam ellam illainga
/ஒரு குடிகார இரவில் எடுத்த சத்தியங்கள்
இன்று கண்முன்னே வேறொருவன் கையில் தவழ்கிறது//
அருமை இரும்புத்திரை அரவிந்த் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நல்லாருக்கு..
வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் அரவிந்த்
நல்ல கவிதை
வெற்றி நிச்சயம்
நல்லா இருக்கு.., என்ன இனிக்கு ஒரே சரக்கு வாசமா இருக்கு..,
நல்லா இருக்கு கவிதை.பிடிச்சுருக்கு.
வாழ்த்துக்கள்!
கோவில் மண்டபத்துலே வச்சி... நான் சொன்ன கவிதைய.... போட்டிக்கு போட்டுட்டியா... நீயி..
உலகத்துலே யாரை நம்புறதுன்னே தெரியலே...
நல்லா இருக்கு அரவிந்த். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நீங்களும் நேத்து சரக்கா...? :))
கவிதை மிகவும் அழகா இருக்கிறது...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
நல்லாதான் இருக்குதுபா.. கிளைமாக்ஸ்லதான் கொஞ்சம் புரியலை.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரொம்ப பிடிச்சிருக்கு.வெற்றி பெற வாழ்த்துக்கள் அரவிந்த்!
கருத்துள்ள கவிதை,வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ம்ம்ம்ம்.
-வித்யா
//"இனி குடிக்கவே கூடாது - உரையாடல் கவிதை போட்டிக்கு"//
போட்டிக்காக கவிதை எழுதலாம். அது ஏன் குடிச்சீங்க?
போட்டி சூடாயிட்டுருக்கு
அன்புடன்,
அன்பு
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
கவிதை நல்லா இருக்குங்க ... வெற்றி பெற வாழ்த்துகள்
கவிதையைப் படிக்கும்போதே சரக்கடிக்கணும்போல தோணுதே..!!!
Post a Comment