Thursday, December 17, 2009

ஏணிப்படிகள் படமும்,நடிகை ஷோபாவின் மரணமும்

ஏணிப்படிகள் படம் ரொம்ப நன்றாக இருக்கும் என்று அம்மா பல தடவை சொன்னாலும் அது திரையிடும் போது ஏதாவது ஒரு வேலை வந்து விடும்.இல்லை வெளியில் இருக்கும் போது திரையிடப்படும்.பல தடவை படம் பார்க்க முடியாமல் போய் விட்டது.முந்தா நாள் தான் இந்த படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதில் வந்த பெயர்களே வசீகரித்தது - ஷோபா,கதை - கே.விஸ்வநாத்,மகேந்திரன்,பி.மாதவன்,கே.வி.மகாதேவன் என்று ஜாம்வாங்களின் பெயர்கள் வரிசையாக அணி வகுத்தது.

ஒரு சாதாரண கதை - திரைக்கதை மகேந்திரன் அருமையான திருப்பங்கள் படத்தில் இருந்தது.உலகப் படங்களில் மோகம் பிடித்து அலையும் ஞானக் கிறுக்கர்கள் இந்த படத்தைப் பார்த்து விட்டு குறட்டை விடலாம்.

தியேட்டரில் குப்பைப் பொறுக்கும் பெண் பெரிய நட்சத்திரம் ஆகிறாள்.அதற்கு அவளுடைய காதலன் உதவுகிறான்.உறவுகளின் சூழ்ச்சியால் காதலர்கள் பிரிகிறார்கள்.பிறகு சேர்ந்தார்களா என்பது தான் கதை.

இந்த படத்தில் வரும் காட்சிகள் - ஷோபாவின் நிஜ வாழ்க்கையை சித்தரித்து காட்டியது.எனக்கு இதில் ஒருவருடைய நடிப்பு தான் பிடித்தது என்பதை விட கவர்ந்தது.அது - சத்யராஜ் ஷோபாவின் அண்ணனாக நடித்து இருந்தார்.ஜோடி தான் நம்ப முடியவில்லை.சி.ஐ.டி சகுந்தலா.

நடிகை லஷ்மியின் இரண்டாவது கணவர் மோகன் இந்த படத்தில் நடித்துள்ளார்.(கோலங்கள் அபி,ஆதியின் அப்பாவாக வருவாரே..)

பணம்,புகழ்,அந்தஸ்து அதில் வெளியே வர முடியாமல் தவிக்கும் ஷோபா பிரபல நடிகையாக மாறி மரித்தும் விடுகிறார்.நிஜ வாழ்விலும் அது தான் நடந்தது. படத்தில் வரும் திருப்பம் போல நடந்திருக்க கூடாதா என்று கொஞ்ச நேரம் ஏங்கித் தவித்தேன்.

முப்பது வருடங்களுக்கு முன் வந்த கதை என்பதை நம்ப முடியவில்லை.நான் நடிகை ஆகா விட்டால் டாக்டர் ஆகியிருப்பேன்,எனக்கு பிடித்த எழுத்தாளர் என்று படிக்காத கை நாட்டு அடித்து விடுவது எல்லாம் சம காலத்திலும் நடக்கிறது.அதை அன்றே பகடி செய்து உள்ளார்கள்.

புலியைப் பார்த்து பூனை சூடுப் போட்ட கதையாக மனோரமாவின் கிளைக்கதை.

"பூந்தேனில் கலந்து.., பொன்வண்டு எழுந்து.." அருமையான பாடல்.

இவ்வளவு நாள் இந்த படத்தைப் பார்க்காமல் இருந்து விட்டேன்.

துணைக் கதாபாத்திரங்கள் திரைக்கதை நகர மிகவும் துணை நிற்கிறது.

சாணித் தட்டும் பெண் - வாய்ப்புத் தேடும் பெண் - முதல் பட நாயகி - வெற்றி பெற்ற நாயகி அருமையான நீரோட்டம் போல கதையின் நாயகியின் சீரான நடிப்பு.

ஷோபாவின் நிஜ வாழ்க்கையின் போக்கையே சித்தரித்த படம் என்று தான் சொல்ல வேண்டும்.அது தெரியாமலே அந்த படத்தில் நடித்து இருக்கிறார்.பதினெட்டு வயதில் பசி படத்தோடு அவருடைய திரைப் பிரவேஷமும்,இந்த உலக பிரவேஷமும் ஒன்றாக முடிந்து விட்டது.படத்தின் முடிவில் அவருடைய சேலையை கடலில் இருந்து கொண்டு வருவார்கள்.நிஜத்தில் அவருடைய மெல்லிய உடலின் பாரம் தாங்காமல் சேலை கிழிந்து இருந்ததாம்.

சாசனம் படத்தில் மகேந்திரனின் திரைக்கதை எவ்வளவு மோசமாக இருந்ததோ அவ்வளவு சிறப்பாக இதில் இருந்தது.

டிஸ்கி :

மகேந்திரன் இது மாதிரி திரைக்கதையை ஒரு புதுப் படத்திற்கு எழுத வேண்டும்.ஷோபா போல நாயகியை உருவாக்க வேண்டும்.திரும்பவும் படம் எடுக்க வருகிறார் என்று படித்தேன்.வாழ்த்துக்கள் மகேந்திரன்.

8 comments:

Cable சங்கர் said...

ஏணிப்படிகள் ஏற்கனவே அதற்கு முன்பே தெலுங்கிலும், ஹிந்தியிலும் வந்தது என்று நினைக்கிறேன்.

Raju said...

\\ஷோபா,கதை - கே.விஸ்வநாத்,மகேந்திரன்,பி.மாதவன்,கே.வி.மகாதேவன் என்று ஜாம்வாங்களின் பெயர்கள் வரிசையாக அணி வகுத்தது.\\

இவங்கள்ளாம் எதுக்கு ஜாம் வாங்கப் போனாங்க..?
அதுவும் வரிசையா அணிவகுத்து.....

Prathap Kumar S. said...

நல்ல விமர்சனம்... உதிரிப்பூக்கள் மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்ககிறேன். படத்தை பார்க்கலை.

மகேந்திரன் திரும்பவும் வருகிறாரா நல்ல விசயம். அவரது மகன், சச்சின் அப்படின்னு ஒரு படம் எடுத்தாரு. யப்பா சகிக்கலை.. ஒரு ஜாம்பவானுக்கு மகனாக ஒரு ஜன்டுபாம்...

Raju said...

\\நாஞ்சில் பிரதாப் said...
நல்ல விமர்சனம்...
உதிரிப்பூக்கள் மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைக்கிறேன்.
படத்தை பார்க்கலை.\\\

அண்ணே, டெய்லி நைட்டு 11 மணிக்கு கே டிவி பாருங்க...
"பட்டம் பறக்குது" போன்ற அருமையான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக்கூட அசால்ட்டாக‌
பார்க்கலாம். நேத்து கூட "மண்ணுக்கு மரியாதை"ன்னு சங்கவி நடிச்ச படம் போட்டாங்களே..!

புலவன் புலிகேசி said...

ஏணிப்படிகள் இன்னும் பார்க்கல..பார்க்கிறேன்..

Ganesan said...

நல்ல விமர்சனம்

Unknown said...

இவ்ளோ நாளா படம் தான் பாக்கல...டிரைலர் கூடவா பாக்கல...,

ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கிடீங்க கவனிச்சிங்களா...

shortfilmindia.com said...

லட்சங்கள் கோடிகளாக வாழ்த்துக்கள்

கேபிள் சங்கர்