Tuesday, July 13, 2010

இனி என் பதிவு பரிந்துரையில் சம்மணம் போட்டு உக்காரும்

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ·
1 2 3 4 5 6 7 8 9 0
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
க் ங் ச் ட் த் ப் ர் வ் ய் ற் ம் ஞ் ந் ன் ண் ழ் ல் ள்

இப்படி கூட எனக்கு தெரிஞ்ச மொழியில உள்ள எழுத்தை எல்லாம் கூட கஷ்டப்பட்டு எழுத வேண்டாம். வெறும் புள்ளி இல்லன்னா கமா வைச்ச பதிவு நான் போட்டா கூட இனி பரிந்துரையில் நிற்கும், உக்காரும், கழியும், கூட்டும்.

ஏற்கனவே ஒரு பதிவின் பின்னூட்டதில் சொன்னது இங்கே..

சில முழுவேக்காடுகள் வந்து ஓட்டு,ஹிட்ஸ்,அதிக பின்னூட்டம் என்று பேசி எனக்கு எதையாவது உளறி எனக்கு வரும் பின்னூட்டத்தின் எண்ணிக்கைகளை உயர்த்த வேண்டாம்.பிரோபைல் காட்ட தெரியாத அறிவுஜீவிகள் எல்லாம் தமிலீஷ் பற்றியும்,ஹிட்ஸ் பற்றியும் பேசுகிறது.(நான் கிளிக் பண்ணிலாலும் ஹிட்ஸ் எண்ணிக்கை கூடும்,என்னால் தமிலீஷில் பத்து வோட்டுகள் போட முடியும்.சந்தேகம் இருந்தால் அடுத்த வாரம் ஏதாவது பதிவில் போட்டு காட்டுகிறேன்.அப்படியே பின்னூட்டத்தின் எண்ணிக்கையும் கூட்ட முடியும்.).இது ஏப்ரம் மாதம் சொன்னது.


அதில் ஒரு மாற்றம் இரண்டு கணினி வேண்டாம்.இப்போது ஒரே கணினி போதும்.

ஜனவரி மாதம் சொன்னது இங்கே

தமிலீஷ்,தமிழ்மணம்,சங்கமம் எல்லாவற்றிலும் கள்ள ஓட்டு குத்த முயற்சி செய்தேன்.பக்காவாக எல்லா திரட்டியிலும் விழுந்தது.காரணம் கோல்மால் செய்வது எனக்கு புதிது அல்ல.பழகிய ஒன்று தான்.என்னால் தமிழ்மணத்தில் நாலு ஒட்டுக் குத்தி பரிந்துரையில் நிற்க முடியும்.ஆனால் செய்யவில்லை.இருபது ஓட்டுக் குத்தி மகுடத்திலும் ஏற முடியும்.செய்யப் பிடிக்கவில்லை.தமிழ் மணம் இந்த ஓட்டு முறைகளை நிறுத்தி விட்டு சுழற்சி முறையில் எல்லோருடைய பதிவுகளையும் கொண்டு வரலாம்.நிறைய புதியவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளலாம்.நான் ஏதோ சும்மா சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.சங்கமம்(tamil.blogkut.com) போய் நிறைய ஓட்டு வாங்கிய பதிவுகளைப் பார்க்கலாம்.முதல் ஆறு பதிவும் என்னுடையது தான்.கள்ள ஓட்டே போட முடியாது என்று நினைத்த சங்கமத்திலே இந்த கோல்மால் சாத்தியம் என்றால் தமிழ்மணம்,தமிலீஷ் எல்லாம் என்ன கதியாகும் என்று யோசித்து கொள்ளலாம்.இனி புதியவர்களும் அவர்களே நாலு ஓட்டுக் குத்திக் கொண்டால் பரிந்துரையில் நிற்கும்.எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள ரூபாய் ரெண்டாயிரத்தை எனக்கு அனுப்பி வைக்கவும்.குஜராத் பதிவர் என்றால் நாலாயிரம்.பிம்பிளிக்கி பிலாப்பி அதாங்க பத்தாயிரம் ஆவதற்குள் அணுக வேண்டிய முகவரி - 13ம் நம்பர் வீடு, வியட்நாம் காலனி,அண்ணா நகர் முதல் தெரு,சென்னை - 600028.


ஆராய்ச்சி முழு வெற்றி.எனக்கு குழு எல்லாம் வேண்டாம்.ஏழு அல்ல நூறு ஓட்டு என்னால் எல்லா திரட்டிகளில் போட முடியும். இது தமிழ்மணம் யோசிக்க வேண்டிய நேரம் என்று நினைக்கிறேன்.தமிழிஷ் திரட்டியை விட தமிழ்மணம் டிராபிக்,அலெக்ஸா என்று எல்லாவற்றிலும் பின் தங்கியிருக்க காரணம் முகப்பு பக்கத்தில் அதுவும் பரிந்துரையில் எப்போதும் தெரிந்து கொண்டிருக்கும் பதிவர்களே. கொஞ்சம் அல்ல நிறைய யோசித்து பரிந்துரையைத் தூக்கி விடுங்கள். அடிக்கடி பிரச்சனை வர காரணங்கள் தொடங்கும் இடமே பரிந்துரை தான். ஏன் என்றால் அங்கு தான் குழுக்கள் பிறக்கின்றன.

கோவி.கண்ணன் மற்றும் நான் சொல்வது போல எல்லோரும் கோல்மால் செய்தால் அல்லது குழு அமைத்து ஓட்டுப் போட்டால் என்னவாகும் என்று யோசியுங்கள்.இன்னும் அதை நான் செயல்படுத்தவில்லை. செயல்படுத்த என்னை செய்து விடாதீர்கள்.ஒரே ஐடியில் இருந்து இரண்டு ஓட்டுக்கள் கூட போட முடியும்.ஆக இதற்கு தேவை ஏழு ஐடிகள் தான்.

11 comments:

Raju said...

யோவ் பாஸு அடங்கவே மாட்டீங்களா பாஸு..!
:-)

ஆர்வா said...

எப்படி அர்விந்த் உங்களால மட்டும் முடியுது?.. இனிமேல் யாராவது ஓட்டு விழலை. அது இதுன்னு பேசுவாங்களா? இந்த பேஜை புக் மார்க் பண்ணுங்கப்பா....


உங்களோட இந்த கண்டுபிடிப்புக்கு என்னோட பரிசு...(நித்தியானந்தாவோட அடுத்த சொற்பொழிவுக்கு வீவீஐபி டிக்கெட் ரெண்டு) மறுக்காம வாங்கிக்கணும்...

இரும்புத்திரை said...

நான் பதிவு போட்டா மட்டும் ஏன் தமிழ்மணம் என்னை சேர்க்க மாட்டேங்குது..

இரும்புத்திரை said...

திருட்டுத்தனத்துக்கு

எல்லாம் கூட்டணி சேர்க்கக் கூடாது..
இருந்தாலும்

ப்ரெண்டுன்னு சொல்லிட்டீங்க
எப்படி

போடணும்னு சொல்றேன்..
முதல்ல

ஏழு ஜிமெயில் ஐடி கிரியேட் பண்ணணும்..
அப்புறம்

அதை தமிழ்மணத்தில் ரெஜிஸ்டர் பண்ணணும்..(வேற வேற பெயர்ல..உதா இதையும் நானே தர்றேன் கனவு,சொற்சமாதி)
அப்புறம்

டெம்ப்ரவரி இண்டர்னெட் பைல்லை டெலிட் பண்ணணும்..
ஒவ்வொரு

தடவை பண்ணும் போது ஒரு குத்து..
இதுவே

மகுடம் ஏறணும்மா சோ சிம்பிள்..ஒரு நாப்பது ஐடி கிரியேட் பண்ணுங்க..
அப்புறம்

ஏன் குழு எல்லாம் தனியாவர்த்தனம் தான்

ராம்ஜி_யாஹூ said...

கொடநாட்டு அம்மாவும் இதை தான் சொல்லுறாங்க- வாக்கு அளிக்கும் எந்திரத்தில் கோளாறு, எந்த சின்னத்திற்கு வாக்கு அளித்தாலும் உதய சூரியனுக்கே சென்று விடுகிறதாம்.

அது மாதிரி தான் இதுவுமோ, எந்த பதிவிற்கு வாக்கு அளித்தாலும் சொற் சித்திரதிற்கே சென்று விடுகிறதா வாக்குகள்.

நட்புடன் சொல்கிறேன்- ஆடத் தெரியாத கங்குலியும், திராவிடும் பிட்ச் சரி இல்லை என்று சொன்னார்களாம்.

VJR said...

தமிழ் எழுத்துக்கள் மட்டும் மாறினதுக்கு உள்குத்து இருக்கா?

ஹி.. ஹி.. இல்ல, தற்காப்புக்கா?

just kidding.

good one.

கோவி.கண்ணன் said...

//"இனி என் பதிவு பரிந்துரையில் சம்மணம் போட்டு உக்காரும்"/

இப்படியெல்லாம் தலைப்பிட்டு எழுதாதீர்கள், இது போல் தான் தமிழச்சி என்கிற பெண் பதிவர் பதிவு தலைப்பில் சவா(வடா)ல் விட தமிழ்மணம் திரட்டியில் இருந்து விலக்கியது

இரும்புத்திரை said...

கோவியண்ணே நீங்களே சொல்லித் தருவீங்க போல..இப்படி சம்பந்தமில்லாத மாதிரி பின்னூட்டம் போட்டுட்டு உங்க பதிவுல அடுத்து யார வெளுக்கப் போறீங்க..

இளா யொய் கொலைவெறி..இனிமே என்னை நட்சத்திரமா இல்லை விடிலைட்டா கூட கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறீங்க..

கணேஷ் அண்ணே ஆர்டர் மறந்துப் போச்சு

ராஜூ எல்லாம் உங்க ஆசிர்வாதம்

கவிதை காதலன் தூம் ததா

ராம்ஜி டிராவிட் எல்லாம் பிட்சுலயும் நல்லா மட்டையப் போடுவாரு..என்னைக்காவது அடிப்பாரு..அப்படித்தான் இதுவும்

Jackiesekar said...

உண்மைய உறக்க சொல்லி இருக்க... இதுக்கும் தமிழ் மணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...

ஆனா இப்ப புரியுது.. எப்படி எப்பபார்த்தாலும் ஓட்டு வாங்கறாங்கன்னு...

ஆனா எனக்கு விழுந்த ஓட்டுக்கள் அப்படி அல்ல என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்....

ராஜவம்சம் said...

இப்படியெல்லாமா நடக்குது!!!!

Robin said...

//ஏன் என்றால் அங்கு தான் குழுக்கள் பிறக்கின்றன.// உண்மைதான்.