Friday, July 9, 2010

புலியைப் பார்த்து சூடு போட்ட பூனை

இந்த பதிவு ப்ளாக் மென் தென்றல்,டிவிட்டர் தென்றல்,பஸ் சூறாவளி,புயல்,லைலா,காத்ரீனா சாருவின் சிஷ்யக்கோடி,தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளராக மாறப் போகும் புலி கென்னுக்கும், சாந்தாணிக்கும் சமர்ப்பணம்.அதனாலே அடிக்கடி நான் பூனையாக மாறி சூடுப் போட்டு கொள்கிறேன்.

"என் மேல சத்தியமா எதிர்வினை எழுத மாட்டேன்னு சொல்லு.." இப்படி நச்சரிக்கிறா சாதாமணி. இவளை கொன்னுற வேண்டியது தான்.சத்தியம் பண்ணிட்டு எதிர்வினை எழுதிற வேண்டியது தான்.

"நீ பாப்பானா சொல்லவேயில்லைன்னு கேலி செய்யுறா சாதாமணி.நீ தானடி முதல்ல அப்படி சொல்ல ஆரம்பிச்சன்னு சொன்னா புரியாம முழிக்கிறா."காதலிக்கிறதுக்கு முன்னாடி என்னை உத்து உத்து பாப்பான்,பாப்பான்னு சொல்லலை நீ.."

சாதாமணி முத்தத்தின் விலை முப்பது ரிங்கட் கதை படித்து விட்டு காட்டுக்கத்தல் கத்தினாள்.நான் எல்லாத்துக்கும் பேரம் பேசுபவனாம்.பேரம் பேசி எத்தனை முத்தம் வாங்கினாய் என்று கோபத்தில் அவளிடமிருந்த என் சட்டையைக் கிழித்து விட்டாளாம். யாருக்கு நஷ்டம்.இனி குடுத்து குடுத்தே சட்டையில்லாமல் திரிகிறேன்.

"தண்ணியெல்லாம் அடிக்க ஆரம்பித்து விட்டாயா.." என்று போனிலே அழுகிறாள் சாதாமணி. அடிக்கவில்லை என்று சத்தியம் செய்தாலும் நம்பவில்லை.லேபிளில் புனைவு என்று போடவில்லையாம். அதற்கு தான் இந்த அக்கப்போரா.புனைவுக்கு வேறு பெயர் வைத்து கொஞ்ச நாளாகிறது என்று யாராவது அவளிடம் சொல்லுங்களேன்.ப்ளீஸ் சொல்லுங்களேன்.

"தொடை தெரிய தான் ஆடை அணிவார்களாமே பெண்கள்.." கேட்ட சாதாமணியிடம் தெரியாமல் ஆமாம் என்று சொல்லி விட்டேன்.பிறகு இப்படி சொன்னதும் தான் சமாதானம் ஆகி அவள் அனுப்பிய குறுஞ்செய்திகள் முழுவதும் முத்தத்தால் நிரம்பி வழிகிறது.பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை."இந்திய முத்தத்தை விட இங்குள்ள கவர்ச்சியில் பெரிதாக போதையில்லை.." என்று சொன்னேன்.இதேயே தான் இங்குள்ள பெண்ணிடமும் சொல்ல முடிவு செய்திருக்கிறேன்.வார்த்தைகளை மாற்றிப் போட்டு.

"உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது.." எல்லோரையும் போல சாதாமணியும் சொல்லி விட்டாள். எனக்குள் அவள் தானிருக்கிறாள்.அந்த பிரச்சனையே நீதான் என்று சொல்லி இன்னொரு பிரச்சனையை இழுக்க நான் தயாரில்லை.

4 comments:

ஒரு காசு said...

ஆப்பு ஆரம்பமா ?

இரும்புத்திரை said...

தெளிய தெளிய வைத்து அடித்தாலும் அடங்கவே மாட்டார்கள் போல..எவ்வளவு அடித்தாலும் போதை தெளியாது போல..இப்படியே போனால் அது சொற்சமாதியாக மாறி விடும்..

Unknown said...

ஹேய் நீ வேறப்பா..

அவரு யாரோ ரோட்டுல கிடந்தவனப் பாத்து எழுதினாராம். நீ புனைவுல எல்லாம் எதையாவது ஏத்திப் பாத்துக்கிட்டு.

அடுத்து தர்மன், துரியோதனன் கதையச் சொல்லிடப் போறாரு.

ஆனாலும் நர்சிமுக்கு அறிவே இல்லை. இது புனைவுதான். ரோட்டுல பாத்த ஒரு பூக்காரியப் பத்தி ரெண்டு பேரு பேசிக்கிட்டிருந்ததப் பத்தி எழுதினேன்னு சொல்லிட்டுப் போயிருந்திருக்கலாம். தேவையில்லாம மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு..

டிஸ்கி: அடுத்து அநேகமா என் முதுகைத் தடவி நூல் தட்டுப் படுதான்னு பாப்பாங்கன்னு நினைக்கிறேன்.

இரும்புத்திரை said...

முகிலன்..எனக்கு ஏற்கனவே தடவிப் பாத்தாச்சு..நர்சிம் இவர்களுக்காக எழுதாமல் வேறு இருக்கிறார்.நல்ல வேளை பின்னூட்டம் இங்கே போட்டீர்கள்.அங்கு போட்டு இருந்தால் விவாதம் திசை திரும்பிகிறது,கரை ஏறுகிறது என்று சொல்லி பெட்டி அடைக்கப்பட்டிருக்கும்.அந்த பின்னூட்டமும் வெளியே வந்திருக்காது.வெளியிட்டால் தானே தெரியும் திசை திரும்புகிறதா இல்லை கரை ஏறுகிறதா என்று..