Sunday, July 4, 2010

இராவணன் - என் பங்காய் இதாவது இருக்கட்டுமே

இராவணன்,இராவணன்,இராவணன்,இராவணன்,இராவணன்,இராவணன் - இந்த பெயரை கேட்டாலே நங்,நங்,நங்,நங்,நங்,நங் என்று சத்தம் கேட்க ஆரம்பித்து விடுகிறது.ஒரு வேளை சுகாஷிணி,மணிரத்னத்திற்கும் ஏதாவது நேர்ந்திருக்கும் அதனாலே பக்,பக்,பக்,பக்,பக்,பக் என்று சத்தமும்,டண்,டண்,டண்,டண்,டண் என்று சத்தமும் இராவணன் கதாபாத்திரம் வழியாக சொல்லப்பட்டதாக எடுத்து கொண்டேன்.யாருக்கு எந்த சத்தம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இராவணனுக்கு மேலும் ஒரு கிளைக்கதை உண்டு.அதாவது இராவணனின் மகள் தான் சீதை என்று இன்னுமோர் கதை இருக்கிறது.மகளை கடத்தி வைத்தால் என்ன சுவாரஸ்யமிருக்கும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ இராவணன் பெண்டாள நினைத்த பெண் சீதை என்று பெரும்பாலானவர்களின் மூலக்கதைகளிலும் வருகிறது.இனி அந்த சொல்லப்படாத கதை.

இராவணன் புஷ்பக விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது இந்திரனின் அந்தப்புரத்தில் உறங்கி கொண்டிருக்கும் இந்திர ராணியைப் பார்த்து மோகம் கொள்கிறான்.இந்திரன் உருவத்தில் போய் அவளை அடைய நினைக்கிறான்.தமிழ் படங்களின் கிளைமேக்ஸ் போல கூடலின் முடிவில் தான் தெரிகிறது வந்திருப்பவன் கணவன் அல்ல என்று.உடனே சபித்து விடுகிறாள்.எப்படி என்றால் விருப்பம் இல்லாத பெண்ணின் மீது கை வைத்தால் இராவணன் இறந்து விடுவான் என்றும்,(அதனால் தான் சீதையைக் கடத்தும் போதும் மண்ணோடு பெயர்த்தது) அவனுக்கே மகளாக அடுத்த ஜென்மத்தில் பிறந்து இலங்கையே அழிப்பேன் என்று சொல்லி விட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதற்கு சம்பந்தமில்லாத ஒன்று.தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவனாக இந்திரனும் லேசுப்பட்ட ஆளில்லை.அவனும் அடுத்தவர் மனைவியைப் பெண்டாள நினைக்கும் போது அவளது கணவனின் உருவம் எடுப்பவன் தான்.உதா அகலிகை.அப்படி இருந்ததற்கு அவனுக்கு கிடைத்த சாபம் அவன் உடம்பில் உருவான ஆயிரம் பெண் குறிகள்.எல்லோர் முன்னும் வர வெட்கப்பட்டு ஒரு பூவிற்குள் ஒளிந்து கொண்டு லிங்கத்தை பூஜித்து சாப விமோசனம் பெற்றப் பிறகே வந்தானாம்.எனக்கு என்னவோ காரணன் வேறு மாதிரி இருக்கும் என்று தோன்றுகிறது.கொஞ்சம் "ஏ" தான்.அரக்கர்களும் தேவர்களும் லேசுப்பட்ட ஆளில்லை.எதுவும் கிடைக்காமல் இந்திரனின் உடம்பில் இருப்பதில் ஏதாவது ஒன்றில் நுழைத்து விட்டால் அது தெரிந்து தான் அவர்களின் தலைவர் தலைமறைவாகி விட்டார்.

பேக் டூ இராவணன்.இராவணனுக்கு மகளாக சீதை பிறக்கிறாள்.ஜாதகம் பார்த்தால் இவள் இங்கு இருந்தால் இலங்கை அழிந்து விடும் என்று சொல்ல மண்ணில் புதைத்து விடுகிறார்கள்.குழந்தை பாக்கியம் இல்லாத ஜனகன் பூமியில் ஏரால் உழுது வைக்க ஏர்க்கலப்பையில் பெட்டி சிக்கிக் கொள்கிறது.மண்ணில் இருந்து வந்தவள் என்ற பொருள் வருமாறு பெயர் வைக்கிறார்கள்.இதில் உள்ள ஆச்சர்யம் என்னவென்றால் சீதை மறையும் போது பூமி பிளந்து உள்ளே போய் விடுகிறாள்.நிலக்கரி பூமிக்கு அடியிலே இருந்து வைரமாக மாறுவது போல் வைர,தங்கம்,பிளாட்டின நகைகள் இருந்தால் லட்சுமி கடாட்சம் எண்டு சொல்கிறார்கள்.

பிறகு என்ன இராமன் பார்க்கிறான்,சீதையும் பார்க்கிறாள்.இந்த இடத்தில் இராமனின் மோகனம்,ஜானகி மந்திரம் என்று பாடல் மலேசிய எப் எம்மில் இருந்து ஒலிக்கிறது.

வனவாசம் வருகிறார்கள்.வயதுக்கு வந்த மகனை காணாமல் அவனை தேடி காட்டுக்குள் வருகிறார் சூர்ப்பனகை.இராம,இலட்சுமணிடம் கேட்கிறாள்.தெரியாது என்று இராமன் சொல்ல லட்சுமணனிடம் கேட்க சொல்கிறான்.இலட்சுமணனோ தெரியாது என்று சொல்லி விட்டு இராமனிடம் இந்த கேள்வியை கேட்டாயா என்று கேட்க ஆம் என்று இவள் சொல்ல அவள் ஏகபத்தினி விரதன் என்று லட்சுமணன் சொல்ல அப்புறம் ஏன் இரண்டு ஆண்கள் ஒரு பெண் இருக்கிறீர்கள் என்று சூர்ப்பனகை பகடி செய்ய நான் அவளையும் பார்த்து என் மகனைப் பற்றி கேட்க வேண்டும் என்று சொல்ல வாக்குவாதம் முற்றி மூக்கை அறுத்து விடுகிறான்.உண்மையில் தர்ப்பை புல்லுக்கு நடுவில் தவம் செய்து கொண்டிருந்த சூர்ப்பனைகையின் மகனை கொன்றதே லட்சுமணன் தான்.புல் அறுக்கும் போது உள்ளிருந்தவன் கழுத்தும் சேர்த்து அறுக்கப்பட்டது.

இராவணனைப் பழி தீர்க்கவே(கணவனை கொன்றதால்) அவனுடைய அரண்மனையில் இருக்கும் சூர்ப்பனகை இப்போது இராம இலட்சுமணர்கள்((மகனை கொன்றதற்கும்,சீதையை காண்பிக்காமல் மூக்கை அறுத்த காரணத்திற்கும்) மீது ஆத்திரப்படுகிறாள். இருவருக்கும் மூட்டி விட முடிவு செய்து சீதை என்ற யோனி வழியாக பிறக்காத பெண் இராமனிடத்தில் இருக்கிறாள்.அவள் இருக்க வேண்டிய இடம் இலங்கை என்று சொல்ல சீதை கடத்தப்படுகிறாள்.ஆனால் இப்படி இருந்தால் சுவாரஸ்யம் வருமா என்றால் வராது அதனால் சர்ச்சையில் பொருட்டே சூர்ப்பனகை இராமனை விரும்பினாள்,காதலித்தாள் என்று அடித்து விட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.காரணம் இராமனுக்கு திருமணம் முடியும் போது பதினாலு வயது.காட்டிற்கு போகும் போது இன்னும் ஒரு வயது கூடியிருக்கும்.சூர்ப்பனகையின் மகனுக்கே அந்த வயதிருக்கும்.

சூர்ப்பனகையின் மூக்கு,தசரதனுக்கும் இராவணனுக்கும் இருக்கும் பகை,ரிஷிகளுக்கு பாதுகாப்பு தரும் இராமன்,இறந்த இந்திர மனைவியின் சாபம் எல்லாம் சேர்ந்து இலங்கை அழிவிற்கு காரணமாகிறது.மகள் என்று இராவணனுக்கு தெரிந்திருக்கும்.சீதை காட்டில் கஷ்டப்படுவதற்கு பதில் தன்னுடனே இருக்கட்டும் எண்டு நினைக்க அதுவே அவனின் முடிவிற்கு வழி வகுக்கிறது.மாளிகையே அமைத்து கொடுத்திருப்பான் சீதை அதை ஏற்காமல் அ"சோக" இருக்கிறாள்.

சுவாரஸ்யமான தகவல் - சீதை காட்டில் இருக்கும் போது நேரம் போக பல்லாங்குழி விளையாடுகிறாள். துணைக்கு யாருமே இல்லாமல் தனி ஒரு ஆளாக விளையாட முடியும்.ஆட்டத்தின் முதலில் எப்படி காய்களை வரிசைப்படுத்துகிறோமோ அதே பாணியில் காய்கள் குழியில் திரும்ப வந்து விடும் ஏழாவது ஆட்டத்தின் முடிவின் போதும்.திரும்ப விளையாடி கொண்டே இருக்கலாம்.கிராமத்தில் ஆச்சி சொல்லித் தந்தது.அந்த ஆட்டத்தின் பெயர் - சீதாப்பாண்டி.

இதற்கும் நங்கென கேட்கும் சத்தத்திற்கும் காரணம் என்று கேட்டால் சீதை இராவணின் மகன் என்று நான் சொல்ல இல்லை என்று ஒரு தடிமாட்டுப்பயல் சொல்ல தோற்றவனுக்கு ஒரு குட்டு என்று பந்தயம் கட்டி தமிழ் ஆசிரியை தான் நீதிபதி என்று அவனே முடிவு செய்து அவர்களிடம் கேட்க அவர்களும் அவன் சொன்னது தான் சரி என்று சொல்லி வைக்க அந்த தடிமாட்டு பயல் எனக்கு நங்கென ஒரு குட்டு வைத்து விட்டான்.

குட்டின் வேகம் மட்டும் வீரியம் கூடியதற்கு காரணம் - அவன் தங்கையோடு நான் வறுத்த கடலையாகவும் இருக்கலாம் என்று பின்னாளில் ஒரு நாள் தெரிய வந்தது.அதிலிருந்து தங்கை இல்லாதவனோடு தான் பந்தயம் வைப்பது.இராவணன் விமர்சனம் அடுத்த பதிவில் வரலாம்.வராமலும் போகலாம்.மணி பிழைத்து போகட்டுமே(நான் சொன்னது என் பர்ஸிலிருக்கும் ஆங்கில மணி).

10 comments:

Paleo God said...

பக் பக் பக் பக் ஹா டன் டன் டன் டன்..

(ஐயோ இதுக்கு படமே தேவல!) எம்.ஆர்.ராதா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!! :))

இரும்புத்திரை said...

ஷங்கர் என்ன கொடுமை இது..பதினாலு வருடங்களுக்கு முன் இதே பாணியில் ஒரு புனைவு ஆனந்த விகடனில் எழுதப்பட்டது.அதெல்லாம் பொற்காலம்.தற்போது ஆனந்த விகடன் நிரந்தர வனவாசம் போயுள்ளது வருத்தம் தான் .

எறும்பு said...

//மலேசிய எப் எம்மில் இருந்து ஒலிக்கிறது.//

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அண்ணன் அரவிந்த் மலேசியாவில் குடியேறிவிட்டார்.

:)

எறும்பு said...

//Profile Location: mumbai Chennai : Maharastra Tamilnadu //

Change this to malaysia... truly asia..

:)

Vikram said...

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஓர் பதிவு.. welcome back. ஒரே ஒரு இடத்தில் மட்டும் punctuation காரணமாக ரொம்பவே தடுமாறினேன்.. "இராவணனைப் பழி தீர்க்கவே அவனுடைய அரண்மனையில் இருக்கும் சூர்ப்பனகை(கணவனை கொன்றதால்) இப்போது இராம இலட்சுமணர்கள் மீது ஆத்திரப்படுகிறாள்(மகனை கொன்றதற்கும்,சீதையை காண்பிக்காமல் மூக்கை அறுத்த காரணத்திற்கும்) இருவருக்கும் மூட்டி விட முடிவு செய்து சீதை என்ற யோனி வழியாக பிறக்காத பெண் இராமனிடத்தில் இருக்கிறாள்." கொஞ்சம் நிதானம் தேவை... படிப்பவரையும் சேர்த்துதான் சொல்கிறேன். Anyways happy that you are back to blogging... Keep rocking..

இரும்புத்திரை said...

நன்றி விக்ரம்.நடுவில் ஒரு அழைப்பு.விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் போது கொஞ்சம் தடமாற்றம் ஆகி விட்டது.நான் எழுதாத காலத்தில் விசாரித்த முக முக்கியமான ஆள் நீங்கள் தான் விக்ரம்.விக்ரம் என் நெருங்கிய நண்பனின் பெயர்.சிங்கப்பூரில் இருக்கிறான்.பழைய நினைவுகள்.

இரும்புத்திரை said...

நன்றி எறும்பு நான் திருநெல்வேலியில் இருப்பதாக வதந்தி.புரோபைல் கூட அதை தான் ஊர்ஜிதம் செய்கிறது.

இரும்புத்திரை said...

நன்றி விக்ரம் மாற்றி விட்டேன்.இன்னும் எழுத்துப் பிழைகளும் இருக்கிறது.அதையும் மாற்றி விடுகிறேன்.

அத்திரி said...

மலேசியா போனாலும் போனாரு நம்ம அரவிந்து ....பின்னுட்டத்துக்கெல்லாம்
பதில் சொல்றாரு...........................

பனித்துளி சங்கர் said...

/////////சுகாஷிணி,மணிரத்னத்திற்கும் ஏதாவது நேர்ந்திருக்கும் அதனாலே பக்,பக்,பக்,பக்,பக்,பக் என்று சத்தமும்,டண்,டண்,டண்,டண்,டண் என்று சத்தமும் இராவணன் கதாபாத்திரம் வழியாக சொல்லப்பட்டதாக எடுத்து கொண்டேன்.யாருக்கு எந்த சத்தம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்..////////////

கொலை வெறியில் இருக்கீங்க என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது .