Wednesday, April 7, 2010

தமிழ் சினிமாவின் யதார்த்தம்

தமிழ் சினிமா யதார்த்தமாக மாற வேண்டும் என்றால் முதலில் சில கிளிஷேகளை விட்டு தொலைத்தால் தான் முடியும் என்பது மட்டுமே யதார்த்தம்.இரண்டரை மணி நேரத்தில் அரை மணி நேரம் பாடல்களுக்கே ஒதுக்கப்படுகிறது.அடுத்தது சண்டை வைக்க வேண்டுமே நாயகனின் வீரத்தை நிரூபிக்க அது தேவைப்படும்.மிக முக்கியமாக காதல்.இது மூன்றும் இல்லாவிட்டால் கதையை யோசிக்க முடியாதா என்ன.

நிஜ வாழ்க்கையில் கஷ்டம் வரும் போது அல்லது சந்தோஷம் வரும் போது உணர்ச்சி பொங்க ஏதாவது பாடல்களை வேறு ஒருவர் குரலில் பாடுகிறோமா.நாயகனுக்கு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் தான்.நன்றாக படிப்பான்,பாடுவான்,ஆடுவான்,சண்டை போடுவான்(இரும்பு கம்பியால் இருபது அடி வாங்கிய பிறகும் கடைவாயில் லேசாக தக்காளி சாஸ் வழியும்),ரொம்ப நல்லவனாக இருப்பான்.(சுத்தி இருப்பவனை கெட்டவனாக காட்டி விட்டால் இன்னும் நல்லவனாக தெரிவான்).

கமல் சொன்னது இது தான் - எல்லோரும் போகும் வழியில் நாமும் போனால் மாற்று சினிமா வராது.நாம் வேறு திசையில் ஓட வேண்டும்.சொல்லி பல வருடம் ஆகி விட்டது.அவரே அந்த பாதையில் ஓடுவதில்லை என்பது தான் அதிக வருத்தம் தருகிறது.

ஆஸ்கர் என்று வாயை பிளக்க தான் தெரியும்.முதலில் லகான் வாங்காமல் போனதற்கு கூட பாடல்கள் தான் காரணமாக இருக்கும்.இந்திய சினிமாக்களைத் தவிர எந்த நாட்டு சினிமாவிலும் இந்த பாடல்களை வெளி நாட்டில் காக்கா வலிப்பு வருவது போல் எடுப்பதில்லை.இந்தி சினிமா கூட மாறி விட்டது.பாடல் வேண்டும் என்றால் அது பிண்ணனியில் தான் ஒலிக்கும். அங்கு எந்த கட்டை குரல் நாயனுக்கும் பாடும் போது இனிமையான குரல் வருவதில்லை.(இஷ்கியா படத்தில் நஸ்ரூதீன் ஷா காதல் வசப்படும் போது வரும் பாடலை கவனித்தாலே தெரியும்)

அங்காடி தெரு படம் பார்க்கும் போது உச்சக்கட்டத்தில் எரிச்சல் அடைந்தது."உன் பெயரை சொல்லும் போது.." என்ற பாடல் காட்சியில் தான்.நடனம் ஆடத் தெரியாத நாயகன் - நாயகி இப்படி தான் ஆடுவார்களா.(ஒரு முறை அழகன் மம்மூட்டியையும்,ரெயின்போ காலனி ரவி கிருஷ்ணாவையும் சென்னை 600028 சிவாவையும் ஆடும் போது இயக்குனர் கவனித்து இருக்கலாம்).யதார்த்த படம் என்றாலும் பாடல் காட்சியில் அஞ்சலியின் இடையை காட்டியே ஆக வேண்டுமா.அங்கு கேமரா இருக்கும் என்று அங்கு வேலை செய்யும் என்று குழந்தைகளுக்கு தெரியவே தெரியாதா.

பசங்க குழந்தைகள் படம் என்று சொன்னால் சிரிப்பு தான் வருகிறது.அடுத்தது ரெட்டை சுழி அதுவும் குழந்தைகள் படமா.தேங்க்ஸ் மா என்று ஒரு இந்தி படம் இருக்கிறது.அந்த படத்தில் யதார்த்தமும்,பேப்பர் கட்டிங்களை எப்படி படம் எடுக்க வேண்டும் என்ற நேர்த்தியும் இருக்கிறது.வட்டார மொழி எப்படி இருக்கும் என்று தெரியாமலே அதில் அதிகமாக புழங்கும் வார்த்தைகளை சேர்த்து விட்டால் வந்து விடுமா.வட்டார மொழியில் படம் எடுக்கும் போது இந்தி சினிமாவில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் வசனம் எழுதுகிறார்கள்._த்தா என்று அடிக்கடி சொன்னால் அது சென்னை பாஷை என்றாகி விடாது.எதையாவது எடுத்து விட்டு யதார்த்தம் என்று சொன்னால் அதை ஒப்புக் கொள்ளவே முடியாது.அது என் குருவாக இருந்தாலும் சரி.

22 comments:

இரும்புத்திரை said...

சில முழுவேக்காடுகள் வந்து ஓட்டு,ஹிட்ஸ்,அதிக பின்னூட்டம் என்று பேசி எனக்கு எதையாவது உளறி எனக்கு வரும் பின்னூட்டத்தின் எண்ணிக்கைகளை உயர்த்த வேண்டாம்.பிரோபைல் காட்ட தெரியாத அறிவுஜீவிகள் எல்லாம் தமிலீஷ் பற்றியும்,ஹிட்ஸ் பற்றியும் பேசுகிறது.(நான் கிளிக் பண்ணிலாலும் ஹிட்ஸ் எண்ணிக்கை கூடும்,என்னால் தமிலீஷில் பத்து வோட்டுகள் போட முடியும்.சந்தேகம் இருந்தால் அடுத்த வாரம் ஏதாவது பதிவில் போட்டு காட்டுகிறேன்.அப்படியே பின்னூட்டத்தின் எண்ணிக்கையும் கூட்ட முடியும்.)

அப்புறம் தமிழ்மணம் ஓட்டு இந்த லிங்கில் பாருங்கள்.மூன்று ஓட்டுப் போட்டது நான் தான்.ஓட்டு போட எனக்கு ஏழு நண்பர்கள் எல்லாம் தேவையில்லை.இரண்டு கணினி போதும்.

Madhavan said...

ENNA BOSS ULARRI KOTTAREENGA

இரும்புத்திரை said...

enakku poluthu pogala anaani

வால்பையன் said...

//அது என் குருவாக இருந்தாலும் சரி.//


யார் அந்த அபாக்கியசாலி!

இரும்புத்திரை said...

கடவுள் எதிர்ப்பில் நீங்க தான் என் குரு வால்.ஒவ்வொரு விஷயத்தில் ஒரு ஆள் குரு.

Anonymous said...

correct thaleeva....but appdi padam vantha oodathu....producer ku neenga panam kudupeengala?

neenga vena 10 crore la appdi padam edunga. appo theriyum!!

entha cinema vum makkal rasanaiya poruthaan amaiyum. namma maaranum. kuthu paatu, sexy dance, punch dialogue ithellam namma makkal rasikkiraanga. so vera vazhi illa.

btw, ethukku neenga oscar vaanganum? why they need to certify our standard? athu oru entertainment media. what you have to do is, increase awareness among ur friends not to encourage masala movies!

சங்கர் said...

அப்போ, மொக்க போடுறதுல நான் உன் குருவா?

சங்கர் said...

இங்க பாரு

http://sivakannivadi.blogspot.com/2010/04/blog-post.html

லோகு said...

/தமிழ் சினிமா யதார்த்தமாக மாற வேண்டும் என்றால் முதலில் சில கிளிஷேகளை விட்டு தொலைத்தால் தான் முடியும் என்பது மட்டுமே யதார்த்தம்.இரண்டரை மணி நேரத்தில் அரை மணி நேரம் பாடல்களுக்கே ஒதுக்கப்படுகிறது.அடுத்தது சண்டை வைக்க வேண்டுமே நாயகனின் வீரத்தை நிரூபிக்க அது தேவைப்படும்.மிக முக்கியமாக காதல்.இது மூன்றும் இல்லாவிட்டால் கதையை யோசிக்க முடியாதா என்ன./

இது மூணும் இல்லாம எடுக்கறாங்க தல, நீங்க பார்த்தது இல்லையா.. சன் டிவி, கலைஞர் டிவியில ஓடுதே ஏராளமான மெஹாஆஆஆ சீரியல்ஸ்.. அதை பார்த்தது இல்லையா? :)

Kavi said...

நல்லா எழுதிறீங்க. எனக்கும் பாடல்கள் பிடிப்பதில்லை. அதிலும் ரோட்டில ஆடிப்பாடுறது மாதிரி வரும் காட்சிகள் சகிக்க முடிவதில்லை!

சகாதேவன் said...

யதார்த்தம் பொன்னுசாமி என்று ஒரு நடிகர் இருந்தார். தூக்குதூக்கி படத்தில் பார்த்தேன்.வேறு படங்கள் நினைவில்லை.அவரைப் பற்றித்தான் சொல்ல வரீங்களோன்னு நினைத்தேன்

பாலா said...

நண்பா ஆஸ்காரிலேயே ஆயிரம் ஓட்டைகள், அரசியல்கள். லகான் ஆஸ்கர் வாங்காததற்கு பாடல்கள் காரணம் அல்ல. அந்த குழுவினருக்கு சொரிந்து விடாததே காரணம். ஆஸ்கர் என்று நீங்களும் பிராண்ட் நேம் பின்னாடி செல்கிறீர்களே.. ஆஸ்கர் வாங்கினால்தான் நல்ல படமா? ஆங்கிலத்திலும் முழு நீள musical படங்கள் வந்துள்ளதே. அக்சய் குமார் நடித்த மொக்கை மசாலா ஹிந்தி படங்கள் இன்னும்தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாடல்கள், சண்டைகள் எல்லாம் மிகை படுத்தல்கல்தான். எதற்கு எந்த மொழி படமும் விதிவிலக்கல்ல.

Prasanna Rajan said...

இன்றைய ட்ரெண்ட் செட்டர், நாளைய க்ளிஷே. சொல்லப் போனால் க்ளிஷே என்ற வார்த்தை தான் பதிவர்கள் வாயில் க்ளிஷே ஆகிவிட்டது.

‘தமிழ் படம்’ என்ற படம் பார்த்தீர்களா. விட்டால் அதையும் க்ளிஷே என்பீர்கள் போல் இருக்கிறது. ’அங்காடி தெரு’ பிடிக்கவில்லையா? பரவாயில்லை. அதை எழுதுங்கள். ஏனென்றால் எல்லாருக்கும் எல்லாவற்றையும் பிடிப்பதில்லை. ஆனால் அதை விட்டு எதையோ எழுத ஆரம்பித்து, வேறு எதையோ எழுதி இருக்கிறீர்கள்.

‘பசங்க’ குழந்தைகள் பற்றி எடுக்கப்பட்ட படம் தான். அது குழந்தைகள் படம் அல்ல. சரி அப்படியே இருந்தாலும், தமிழில் எத்தனை குழந்தைகள் படம் வந்து இருக்கின்றன. வேறு வழியில்லை, இது போன்ற படங்களைத் தான் குழந்தைகள் படம் என்று எடுத்துக் கொள்ளக் கூடிய சூழல்.

திரைப்பட படைப்பாளியின் வலி தெரியாமலும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் வெளி, நீங்கள் எது வேண்டுமானாலும் எழுதலாம் தவறில்லை. ஆனாலும் மாற்று பார்வை பார்க்கிறேன் பேர்வழி என்று அறிவுஜீவித் தனத்தை தான் வெளிபடுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.

முதல்வன் ஸ்டைலில் ஒரு வேண்டுகோள்: நீங்கள் ஒரு நாள் சினிமா படைப்பாளியாக் இருந்து பாருங்கள், உங்களுக்கு அந்த வலி தெரியும். இதை சீரியசாக எடுத்து கொள்வது உங்கள் இஷ்டம். மேலும் இது இந்த பதிவுக்கு மட்டும் போட்ட பின்னூட்டமல்ல...

Anonymous said...

பாட்டு... அரவிந்த நம்ம ஊர்லயெல்லாம் குழந்தைபிறந்தாலே ஆயாமார்கள் வாயால் ஓலமிட்டவாறு தண்ணீர் தொட்டுவைப்பது வழக்கம்.புரியவில்லையா.சரி நம் வரலாற்றை எடுத்துக்கொள்ளுங்கள், எந்த ஒரு சடங்கிற்கும் பாட்டுயில்லாமல் இருக்காது.. அது நம் இனம் தோன்றியகாலத்தில் அதுவும் தோன்றியது... சங்க இலக்கியங்கியங்களில் அதற்கான சாட்சியங்கள் உண்டு. நான் சிறுவனாக இருந்த போது,பொங்கள் நாட்களில் எங்கள் வீட்டுவாசலில், தெருவில் இருக்கும் பெண்கள் ஒன்றுகூடி வட்டமிட்டவாறு கைகளை தட்டிக்கொண்டு கும்பிப்பாட்டு பாடுவார்கள்.அது நான் எங்கேயும் கேட்காத பாட்டு.எப்படி பாட்டு என்பது உங்களுக்கு எதார்த்ததை தாண்டியது.வேற்று மொழி படங்களை ஒப்பிடாதீர்கள் அவர்கள் கலாச்சாரம் வேறு.அவர்களில் நம் பாடல்களை கண்டு வாய்ப்பிளந்தவர்கள் நிறைபேர் உண்டு.
sound of music இந்த படம் கிடச்சா பாருங்க. ஒரு பாட்டுக்கும் மனிதவாழ்க்கையின் சந்தோஷத்துக்கு எவ்வளவு நெருக்கம் உண்டுன்னு அழகா சொல்லியிருப்பாங்க.நம்ம தலைவியை முதலிரவுக்கு அழைத்துக்கொண்டு விடும் நாண்கு பெண்கள் எப்போதும் நம் வரலாற்றில் உண்டு.அதனால் குரூப் டான்சும் பாட்டும் சிமாவுல தினிக்கப்பட்டதல்ல... நம் வாழ்க்கையின் சுவடுகள்.சில பேர் அதோட வளர்ச்சிய வேறவிதமா பயன்படுத்துறாங்க. அப்புறம் உதிரிப்பூக்கள் பாத்திருப்பீங்க.அதுல அந்த நாயகிக்கு கல்யாணம் நடக்கறப்போ ஒரு பாட்டு வரும். அத பாத்துட்டு சொல்லுங்க. மேல்நாட்டு மக்களின் உணர்வுகள் வேற they r very shuttled.ஆனா நம்ம ஆளுங்க கோபப்பட்ட எதையும் பாக்காம நடுரோட்ல நின்னு காட்டு கத்தலா கத்துரவங்க.நீங்க ஆஸ்கர பத்தி சொல்லியிருக்கிரதெல்லாம் ரொம்ப அபத்தமா இருக்கு.அப்புறம் ஏதாவது உருப்படியான காரணங்கள் எடுத்து எழுதுங்க.படிக்க அவருப்பான கோபம் தான் வருது மீண்டும் திட்டவேண்டாமென்றுதான் யோசிக்கிறேன்.இங்கே தகவல் சொல்லிகளுக்கு மதிப்பில்லை. உணர்ந்து எழுதுங்க.எதையும் ஒப்பிட்டு எழுதாதீங்க.உங்களுக்கு குறைகூற எது தேவையோ அதை ஒரு ஆக்கத்திலுருந்து பொருக்கிகொள்கிறீர்கள்.கீழ்தரமான செயல்.சூழ்நிலைகளாலும் பருவமாற்றங்களாலும் உலத்தின் உள்ள ஒவ்வொரு இனத்திற்குமான ரசனை வேறுபடுகிறது,வாழ்க்கைமுறை வேறுபடுகிறது.தென்அமெரிக்காவின் ரசனை தான் சிறந்ததென்றால் அங்கே சென்று வாழ முயற்சி செய்யுங்கள்...

Prasanna Rajan said...

ஏங்க தெரியாம தான் கேட்குறேன். உங்களுக்கு வேலை மெனக்கெட்டு பின்னூட்டம் போடுகிறோமே. அதற்கு பதில் பின்னூட்டம் போடக் கூட முடியாதா. பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பது தானே நல்லதொரு விவாதத்திற்கு வழி வகுக்கும்.

உங்கள் பின்னூட்டங்களை அதிகரிக்க வேண்டாமெனில், எதற்கு பதிவு எழுதி அதை திரட்டிகளில் சேர்க்கிறீர்கள்? நீங்களே எழுதி அதை படித்துக் கொண்டு இருக்கலாமே.

இரும்புத்திரை said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் பிரசன்ன ராஜன்.

பதில் சொல்ல ஆசை தான்.ஆனால் நீங்கள் சொன்னதைப் பார்த்து "மாற்று பார்வை பார்க்கிறேன் பேர்வழி என்று அறிவுஜீவித் தனத்தை தான் வெளிபடுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்." ஒரு தயக்கம்.

பாடல்களும்,காதலும் தான் மாற்று சினிமா வராமல் தடுக்கிறது என்பது மிகப் பெரிய உண்மை.கமல் ர்ன்று சொன்னதும் மும்பையில் உள்ளவர்கள் சொல்லும் படம் ஏக் துஜே கேலியே அல்ல.அவர்கள் கொண்டாடுவது புஷ்பக் படத்தைத் தான்.(தமிழில் பேசும் படம்).எல்லோரும் ஒரு வழியில் போகும் நாம் வேறு வழியில் போக வேண்டும் என்று சொன்ன படம்.இன்றும் பேசப்படுகிறது.

அதை தான் நானும் செய்கிறேன்.நான் வேறு வழியில் தான் போவேன்.உங்களை உங்கள் வழியில் போகாதீர்கள் என்று நான் தடுக்கவில்லையே.அங்காடித் தெரு பிடித்திருந்தால் அவர்களை நான் அறிவுஜீவி என்று பகடி செய்யவதில்லையே.உங்கள் பார்வை உங்களுக்கு என் பார்வை எனக்கு.நாளையே உங்களுக்கு பிடிக்கும் படம் எனக்கு பிடிக்கலாம்.அப்போது என்னை கேள்வி கேட்பீர்களா.ஏன் பிடிற்ற்திருக்கிறது என்று.மாட்டீர்கள் தானே பிரசன்ன ராஜன்.

இரும்புத்திரை said...

அப்புறம் எனக்கு இரவு தான் இணையம் இலவசம்.பின்னூட்டங்கள் அவ்வளவாக போடுவதில்லை.பகலில் சொன்னேன்.பாடல்களே எனக்கு பிடிப்பதில்லை.அதுவும் நடன இயக்குனரோடு சேர்ந்து எடுப்பதில் எனக்கு உடன்பாடு இருந்ததே கிடையாது.பிண்ணனியில் குரல் ஒலிக்க பாடல்களை காட்சி படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.அப்படி கடைசியாக என்னை கவர்ந்த பாடல் - கற்றது தமிழ் படத்தில் வரும் பறவையே எங்கு இருக்கிறாய்.பாடல் கேட்டு விட்டு பெரிதும் ஏமாந்தது - முன் தினம் பார்த்தேனே பாடல் காட்சியில் தான்.தற்போது அங்காடித் தெருவில் ஏமாற்றம்.லேசாக கசப்பை உணர்ந்தவுடன் மொத்தமாக வெளுக்கும்படி ஆகி விடுகிறது.

இரும்புத்திரை said...

பிரசன்ன ராஜன் ஏதாவது ஒரு தடவையாவது நான் உருப்படியான பதிவு எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன்.அதில் விவாதம் செய்ய ஆசைப்பட்டு இருக்கிறேன்.திரட்டியில் அதை இணைத்தாக ஞாபகம்.உங்கள் பின்னூட்டம் காணவில்லையே.ஏன்.உங்களுக்கு எது தேவையோ அதில் நீங்கள் விவாதம் செய்கிறீர்கள்.எனக்கு எது தேவையோ அதில் நான் விவாதம் செய்வேன்.

இரும்புத்திரை said...

பாஸ் நான் என்றுமே சொன்னதில்லையே தென் அமெரிக்கா பற்றி.எனக்கு இந்தி சினிமா கொஞ்சம் மாறியிருப்பதாக தெரிகிறது.அதனால் தான் மும்பையில் இருக்கிறேன்.என்ன பண்ண.அங்கும் சுறா வருகிறதே.என் இடத்திற்குள் வந்தால் அது புட்டு செய்யப்படும் இந்திராகிசரவணன்.

Prasanna Rajan said...

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இது இந்த பதிவுக்கு மட்டும் போடப்பட்ட பின்னூட்டம் அல்ல அரவிந்த் (அது தான் உங்கள் பெயர் என்று நினைக்கிறேன்). பதிவு எழுதுவதே ஒவ்வொருவரின் மேதைமையைக் காட்டுவதற்காகத் தான். ஆனால் அந்த மேதாவிலாசம், பேதாவிலாசம் ஆகிவிடுகிறது. அந்த தொணி உங்களின் எல்லா பதிவுகளிலும் அட்சர சுத்தமாக பிரதிபலிக்கிறது.

நீங்கள் தமிழ்மண ஓட்டு பிரச்சனையை பற்றி பேசுகிறீர்கள் என்றால், அதை தமிழ்மண நிர்வாகிக்கு தெரிவியுங்கள். அதை விட்டு அதை சொல்பவர்களிடம் முழுவேக்காடு, முக்காவேக்காடு என்று தரை டிக்கெட் ரேஞ்சுக்கு எதுக்கு விளிக்கிறீர்கள். உங்கள் பதிவுகளை படிப்பவர்களை குறைந்த பட்ச மரியாதை கூட கொடுக்காதது தெளிவாகத் தெரிகிறது.

நீங்கள் திரட்டிகளை குறை சொல்வதாக இருந்தால் திரட்டிகளின் நிர்வாகிகளிடம் இதை கொண்டு செல்லுங்கள். திரட்டிகள் தான் நம்மை வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்க்கின்றன. அப்படி இல்லையென்றால் திரட்டிகளில் சேர்க்காமல் தனி ஆவர்த்தனம் தொடங்க வேண்டியது தானே. உங்கள் திரட்டிகள் பற்றிய டென்ஷன் ஆவது குறையும்...

இரும்புத்திரை said...

பிரசன்னா இதுக்கு பெயர் தான் பூடம் தெரியாமல் சாமி ஆடுவது.அதை கேட்டது ஒரு அனானி.நான் அவரை தான் சொன்னேன்.திரட்டிகளுடன் எனக்கு என்ன பிரச்சனை.ஒன்றும் இல்லை.தவிர அனானிகளுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.அவர்கள் அடுத்தவர்களை அரை வேக்காடு என்று சொல்லும் போது நான் அவர்களை முழு வேக்காடு என்று சொல்ல கூட உரிமை இல்லையா.சொல்லுங்கள் நிறுத்தி கொள்கிறேன்.உங்களுக்கு இங்கு ஏதாவது அல்லது எங்காவது என்னால் மரியாதை குறைவு ஏற்பட்டுள்ளதா சொல்லுங்களேன்.திருத்தி கொள்கிறேன்.யாரையும் மதிப்பதில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லக் கூடாது.

Questioning the insanity said...

Correcta sonnenga. Oru nanbar ippadiyellam padam edutha odathunu solrar. Nanba naama paathathana padam odum? Padatha paakamale nala irrukathunu solra mathiri iruuku neenga solrathu. ennaya ketta intha Sun pictures, Red Gaint, cloud nine ivanga moonu perum Angadi theru mathi padatha release pannalam paiyaava panrathuku bathila. Kaadhalil vilunthen hit agum pothu angaadi theruvum aagum.