Saturday, July 10, 2010

நர்சிமின் தயக்கம்

தலைப்பு நிகழ்கால சூழ்நிலைக்கு எவ்வாறெல்லாம் பொருந்தி போகிறது என்பது ஆச்சர்யமே.கதையின் சுருக்கம் கதா நாயகனின் உண்மை சூழ்நிலையையும் காட்டுகிறது.சிறு குறிப்பு - இரண்டு ஆண்டுகளாக சாதித்து விட்டு ஒரு பிரச்சனையின் போது எப்படி தயக்கம் காட்டுகிறான்.இனி புலிப்பாய்ச்சல் காட்டுவானா என்பது இனி தான் தெரிய வரும்.கதை தினகரன் வசந்தத்தில் இருபத்தி இரண்டாம் பக்கத்தில் உள்ளது.வெளியான நாள் ஜூன் ஆறு.

அந்த கல்லூரிக்குள் தயக்கத்துடன் சாதிக் நுழைந்தான்.பயந்து பயந்து எம்.எஸ்சி கெமிஸ்டரி எங்கிருக்கிறது என்று விசாரித்து வகுப்பறை முன் நின்றான்.

"புது அட்மிஷனா..உள்ள வா!" என பேராசிரியர் அழைத்தார்.நுழைந்தவன் காலியான இருக்கையில் அமர்ந்தான்.அவனது பெயர், விவரம், தனித்திறமைகளை பேராசிரியர் கேட்டார். மாணவ, மாணவிகள் மத்தியில் ஆர்வம். சாதிக்கையே பார்த்தார்கள்.

மற்றவற்றுக்கு பதில் சொன்னவன், 'தனித்திறமை'க்கு மட்டும் மவுனமாக இருந்தான். " ஓ... தத்தியா?ஒரு திறமையும் கிடையாதா?" - பேராசிரியர் கேட்க, அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.அந்த நேரம் பார்த்து கல்லூரி பியூன் ஸ்ர்க்குலருடன் வந்தான்.அன்று மதியம் மாவட்ட கல்லூரி மைதானத்தில் மாவட்ட அள்விலான கிரிகெட் போட்டு நடப்பதாகவும், அனைத்து மாணவ மாணவிகளும் கண்டிப்பாக வர வேண்டுமென்றும் கல்லூரி பிரின்ஸிபல் ஆர்டர் போட்டிருந்தார்.

"இந்தாம்மா ரேவதி, நம்ம க்ளாஸ் பசங்க எல்லோரும் மைதானத்துக்கு வர்றாங்களானு நீதான் பார்க்கணும். யாராவது வரலைனா எங்கிட்ட சொல்லு.." என்றார் பேராசிரியர்.

மதியம் மைதானம் மாணவர்களால் நிரமியிருந்தது. ஆனால் சாதிக்கை மட்டும் காணவில்லை. ரேவதி பல்லைக் கடித்தாள். "புதுப் பையன்...தயங்கித் தயங்கி பேசினப்பவே நினைச்சேன்..." என்று அவன் முணுமுணுத்த போது ஒலி பெருக்கி அதிர்ந்தது.

"நம் மாவட்டத்தின் கேப்டனும், நம் கல்லூரியில் புதிதாக சேர்ந்திருப்பவருமான சாதிக் பாட்ஷா, டாஸில் வென்று விட்டார். இதோ, நம் அணி பேட்டிங் செய்ய களம் இறங்குகிறது..." பலத்த கரகோஷத்துடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக சாதிக் களம் இறங்கினான். ரேவதி உட்பட அனைவரும் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அன்று ஆரம்பித்த சாதிக்கின் சாதனைகள் அடுத்து வந்த இரு வருடங்களிலும் தொடர்ந்தது. கிரிக்கெட் மட்டுமல்ல, படிப்பிலும் அவன் கில்லாடியாக இருந்தான்.

ஒருநாள் ரேவதி அவனிடம் கேட்டாள். "இந்த ரெண்டு வருஷத்துல நாம எவ்வளவோ பேசியிருக்கோம். ஆனா தயக்கம் இல்லாம நீ என்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்லவே இல்ல... ஏன் சாதிக்?"

"தயக்கம்னா என்ன ரேவதி?"

"எதுக்கெடுத்தாலும் பயந்து பேசாம் இருக்கிறது?"

"யெஸ்...நீ நாளைக்கு என்ன ஆகப் போறங்கிற பயமோ, இன்னிக்கு ராத்திரிக்கு என்ன சாப்பிடலாம்கிற கவலையோ உனக்கு இல்ல... ஆனா, எனக்கு இருக்கு. என்னோட இந்த நாள் எங்க அப்பாவோட முப்பது வருஷ கூலி, அவர் ஒரு நாள் கூட இரும்பையோ நெருப்பையோ பாத்து வேலை செய்ய தயங்கினதே இல்ல...அவரு வெல்டிங்ல ஒட்ட வைக்கிறது இரும்வ இல்ல...என் வாழ்க்கைய...நான் தயங்காம இருந்திருந்தா பத்தாவதுலயே லவ் பண்ணி இருப்பேன்..."

"சாதிக்..."

"சில நேரங்கள்ல சில விஷயங்களுக்குத் தயங்கினா தப்பே இல்ல...இப்போ நாம எப்படியும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணப் போறோம்.கிரிக்கெட்டும் அடிஷனலா இருக்கு. ஸோ, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வேலை கிடைக்கும். அப்ப தயக்கமில்லாம வந்து உங்க வீட்ல பொண்ணு கேட்பேன்.இப்ப நான் தயங்கறது, அப்ப தயக்கமில்லாம இருக்கத்தான்..."

சொல்லிவிட்டு சென்ற சாதிக்கை காதலுடன் பார்த்தாள் ரேவதி.

6 comments:

இரும்புத்திரை said...

ஒரு சுவாரஸ்யமான பின்னூட்டம்..

பைத்தியக்காரன் said...

அன்பின் வால் பையன்,

////பம்பாய் படத்தில் முஸ்லிம் மக்களே தீவிரவாதத்தை ஆரம்பிப்பது போல் காட்சி துடங்குகிறது,//


எதை வைத்து இதை சொல்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா தோழரே!//

இதற்கு பதில், 'பம்பாய்' படத்தை நீங்களே பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

இஸ்லாமிய இளைஞன், இந்துப் பெண்ணை காதலிப்பதுபோல் மணிரத்னம் ஏன் அப்படத்தை இயக்கவில்லை என்று கேள்வியில்தான் அவரது பார்ப்பனீய மேல்சாதி - வர்க்க சிந்தனை அடங்கியிருக்கிறது. பெண்ணின் கருப்பையை எந்த இன ஆண் ஆளவேண்டும் என்று தீர்மானிப்பதிலேயே சீழ் வடியும் மேட்டுக்குடி வர்க்க பாசிச சிந்தனை அடங்கியிருக்கிறது. இதை கடவுளை மறுத்து சாதியை மறுக்கும் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்த கதையில் வர்க்க சிந்தனை கதாசிரியரால் தூக்கிப் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது.மும்பை என்று யார் வேண்டுனாலும் படம் எடுக்கலாம்.

மேலும் படிக்க

http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post_23.html

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு.......வாழ்த்துகள்

இரும்புத்திரை said...

மைனஸ் போடும் போது மொத்தமாக(கூட்டமாக) வந்து போடுங்கள்..தனியே தன்னம்தனியே என்று எல்லாம் கிழிந்து தெரிகிறது..

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு.......வாழ்த்துகள்.

VJR said...

இதென்ன தலைப்பு? காஞ்ச புண்ண சொரிஞ்சு சொரிஞ்சு ஈ மொக்கவெக்கிறதுல அப்படி என்ன ஒரு சந்தோசம்?

இதவுட்டுட்டு அடுத்தத யோசிங்க தம்பி.

கணேஷ்

இரும்புத்திரை said...

கதையோட தலைப்பே அதான்..படிக்காமலே பின்னூட்டம் போடக் கூடாது விஜேஆர் கணேஷ்..

காய்ஞ்சப் புண்ணை நான் தான் சொறியிறேனா அது சரி..உங்களுக்கு சொற்சித்திரம் பிடித்த அளவுக்கு சிறுகதை பிடிக்காது போல..