Saturday, July 10, 2010

ராவ(ண)ன் - மணிரத்னத்தின் மைனர் பீஸ் கோம(ண)ம்

ஒரு காட்சியாவது என்னை கவர்ந்து விடாதா என்று எந்த முகாத்திரமின்றி பார்த்தாலும் என்னை கவர்ந்தது என்னவோ முடிவில் தெரிந்த சலனமில்லாத வெள்ளைத்திரை தான்.மணிரத்னம் அளவுக்கு மீறி கொண்டாடப்படுகிறார் என்று தான் நினைக்கிறேன்,சொல்லியிருக்கிறேன் அது மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகியிருக்கிறது.அதே போலத்தான் கௌதம் மேனனும்.எந்த படமுமே முந்தைய படத்தின் வெற்றியுமே முந்தைய படத்தின் வெற்றியில் இருந்தே ஆரம்பிக்கிறது.அப்படி பார்த்தால் மணியின் முந்தைய வெற்றி அலை பாயுதே தான்.மௌன ராகம் தவிர எந்த படமும் அதுவும் கார்த்திக் வரும் காட்சிகளைத் தவிர எந்த படமும் என்னை பெரிதாக ஈர்த்ததேயில்லை.ரஜினி இரசிகனாக துள்ளிய காலத்தில்(இன்னும் குசேலன் பார்க்கவில்லை) கூட தளபதி அவ்வளவாக ஈர்க்கவில்லை.காரணம் மணிரத்னத்தில் செயல்பாடுகள் அப்படித்தானிருக்கும்.தளபதி படம் கேரளாவில் ஓடும் போது மம்மூட்டி இறக்க மாட்டார் அவருக்கு பதில் ரஜினி இறப்பார் என்று சொல்லித் தெரிந்து கொண்டேன். ரோஜா படத்திற்கு முன் இந்திய அளவில் கவனம் பெற்றாகி விட்டார்.பிறகு தோசையை ஏன் திருப்ப மாட்டார்.

சரி படத்திற்கு வருவோம்.இராமாயண கதையை எடுத்து கொண்டாலும் ராமனின் கதாபாத்திரம் கொண்டிருந்த நம்பகத்தன்மையை மணி சிதைக்க முயன்றாலும் (வெட்டுப்பட்டவன் கையை மேலும் சிதைப்பது, தூதுவனாக செல்லும் விக்ரமின் தம்பியைக் கொல்வது,இன்று போய் நாளை வா என்று சொல்லாமல் பிருத்விராஜ் தான் அன்று போய் அடுத்த நாள் வருவார்) கடைசியில் ராமன் ஜெயிப்பது போல் ஏன் இந்த நாடகத்தனம்.அமிதாப் சொன்னதில் எந்த தவறுமிருப்பதாக தெரியவில்லை.ஏன் என்றால் இவர் ஹாலிவுட் படத்தைப் பார்க்க ஆரம்பித்த காலத்திலேயே அமிதாப்பின் படத்தில் சுட்ட காட்சியைப் புகுத்தியிருப்பார்கள்.இராமாயண கதைகளில் நிறைய கிளைக்கதைகள், சொல்லிய விதம் இருக்கிறது.அதில் ஒன்று.

விக்ரம் நடிப்பை எல்லோரும் பெரிதாக சொல்கிறார்கள்.பெரிய வித்தியாசமில்லை.சேதுவில் படாத கஷ்டமா இதில் பட்டு விட்டார்.எனவே என்னளவில் அது நிராகரிக்கப்படுகிறது.விகரம்,ஐஸ்வர்யா ராய் என்று எல்லார் முகத்திலும் வயது தெரிகிறது.இந்த படத்தை ஸ்டார் வேல்யூ இல்லாமல் எடுத்திருந்தாலும் இதே அளவு ஓடியிருக்கும்.ஆனால் வியாபாரம் செய்ய முடியாதே.மணிரத்னம் ஒரு நல்ல கதாசிரியர் இல்லை ஆனால் தேர்ந்த வியாபார காந்தம்.

தங்கை கணவனின் கையை வெட்டிய விக்ரம் ஏன் தங்கையைக் கெடுத்தவனை ஒன்றும் செய்யாமல் விட்டார் என்று கேள்வி வருகிறது.இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மீது தான் ஐஸ்வர்யா மீது ஈர்ப்பு,பயிர்ப்பு எல்லாம் வருகிறது.மேலும் கையில்லாமல் இருப்பவனை விட நிர்வாணப்படுத்தி நினைவில்லாமல் அனுப்பப்படுபவன் நிலை தான் எனக்கு பெரிதாக தெரிந்தது.கார்த்திக் கேரக்டர் இனி ஜான்பாபு என்ன பேசினாலும் இதை சொல்லியே கேலி செய்ய முடியும்.வாயை அடைக்க முடியும்.இரண்டு பேருக்கும் ஆகாது என்று காட்சியமைத்துள்ளார்.கையை இழந்தவனை கேலி செய்வதை விட மானம் இழந்தவனை கேலி செய்வது தான் எளிது.அதனால் என்னளவில் இதுவும் நிராகரிக்கப்படுகிறது.

படத்தில் திருநெல்வேலியில் கல்யாணம் நடக்கும் போது காசியில் தெரியும் கோபுரங்கள் தெரியும், பிருத்விராஜ் சவரம் செய்யப் போகும் போது துப்பாக்கி சத்தம் கேட்டு சவரம் செய்யாமல் துடைத்து விட்டு ஓடுவார்.அப்போது முகத்தில் தாடி தெரியும்.அடுத்த காட்சியில் மழுங்க சிரைத்த முகத்துடன் வருவார் - இப்படி தொடர்ச்சியும்,கதையின் பின்புலத்திலேயே ஓட்டையிருக்கும் போது லாஜிக் எல்லாம் எம்மாத்திரம்.

கார்த்திக் போன்ற நல்ல நடிகனுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கொடுத்து விட்டார்களே என்று யாராவது சொன்னால் அதுவும் மணியின் வழக்கம் தான்.அவர் படத்தில் நாயகனாக நடித்தவர்களான கார்த்திக்,பிரபு,அரவிந்த் சாமி,மாதவன் போன்றவர்கள் துக்கடா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அவர்களின் பிம்பத்தை உடைக்க வைத்தவர்.நல்ல வேளை ரஜினியும்,கமலும் தப்பி விட்டார்கள்.விக்ரம் நீங்களும் உஷாராகி விடுவது நல்லது.இல்லை என்றால் ஆப்பிள் தோட்டம் தான்.

மணிரத்னம் ஒரு வியாபார காந்தம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.ரஞ்சிதாவின் மசாஜ் நிஜத்தில் நடந்தது போல திரையிலும் அப்படித்தான் வந்தது.பிறகு ஏன் விசில் சத்தம் பறக்காது.

பிருத்வியும் பிரியாமணியை வன்புணர்ச்சி செய்த கூட்டத்தில்(எதுவும் செய்யாவிட்டாலும்) இருந்திருப்பார் என்று ரசிகர்களின் அனுமானத்தில் விடப்படுகிறது.அதாவது ராவணன் இராமனை விட நல்லவன் என்று சொல்லப்படுகிறது. தொடக்க காட்சியில் தற்கொலைக்கு முயலும் ஐஸ்வர்யா ராய் இராவணன் என்ற நல்லவன் இராமன் என்ற கெட்டவனால் நயவஞ்சகமாக கொல்லப்படும் போது ஏன் காப்பாற்ற குதிக்கவில்லை.புராண கதைப்படி சீதை தீக்குளித்தாளே நல்லவள் என்று நிரூப்பிக்க இதிலும் மலையில் இருந்து குதித்திருந்தால் கணவனின் சந்தேகப்புத்தி தாங்க முடியாமல் குதித்து விட்டாள் என்று நான் எடுத்து கொண்டாலும் இராவணனோடு இறந்து விட்டாள் என்று யாராவது போராட்டம் நடத்தி விட்டால்.பயம் இருக்கிறது தானே.பிறகு ஏன் இராமாயணம் மணிரத்னம்.பேசாமல் கோல்ப் விளையாடி நாளை கழியுங்கள்.

6 comments:

நீ தொடு வானம் said...

ஆர்டர் தெரியாமல் விமர்சனம் எழுதக் கூடாது.முதல்ல சிங்கம்.

ராம்ஜி_யாஹூ said...

why this much length of post is required for this useless movie

மாலோலன் said...

சண்டையெல்லாம் முடிந்துவிட்டதா?:)-
க்ளைமேக்ஸில் யார் ஜெய்த்தது? ரவியா,நீங்களா,பைத்திய்க்காரனா,சிவாவா அல்லது மாதவராவா? இல்ல aravind target -part 2 தொடருமா?
SATHISH

இரும்புத்திரை said...

கணேஷ் - எழுதி விட்டால் போச்சு..

ராம்ஜி - இனிமேல் வசூல் பாதிக்காதாம்..அதனால் தான் எழுதினேன்..

சதீஷ் - இது சண்டையா..சாம்பிள்..வலை விரித்தாயிற்று..எதிர்பார்த்தது விழும் வரை பார்ட் 2 இல்லை..எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத ஒன்று விழுந்திருக்கிறது.

Unknown said...

வன்புணர்ச்சி செய்தவன் எதிரி. அவனிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

ஆனால் தாலி கட்டிவிட்டு விட்டுவிட்டு ஓடியவன் துரோகி. அவனைத்தான் முதலில் களையெடுக்க வேண்டும்.

இறைவா என் எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று!

seethag said...

when did mani rathnam ever direct a proper movie. ?they are all mega'plays'.i mean his movies are two dimensional stage shows devoid of any emotional depth..slight exception may be mouna ragam
என்னுடய பின்னூட்டம்...

ரிலாக்ஸ் ப்ளீஸ்
"ஜூலை 31 எந்திரன் பாடல் ரிலீஸ்!!"இந்த பதிவுக்கு.வருண் என்பவரின் பதிவிற்க்காக.