Tuesday, July 20, 2010

துவையல் - சந்தேகம் ஸ்பெஷல்

மதராசப்பட்டிணம் படத்தில் கிழவி ஆகி ஆண்டு அனுபவித்தப் பிறகு தான் ஆர்யா ஞாபகம் வருகிறது. தமிழ் சினிமா போல மேஜர் ஆகாத பெண் என்று சொல்லி இங்கிலாந்து அழைத்து போயிருந்தாலும் பிரிந்து போய் ஐம்பது வருடம் வராத நினைவு செத்து சுண்ணாம்பானப் பின் அதுவும் பனிரெண்டு வருடங்கள் கழித்து வருகிறது. ஏன் கல்யாணத்திற்கு முன் வந்திருக்க வேண்டியது தானே என்ற கேள்வி எல்லாம் கேட்க முடியாது. கேட்டிருந்தால் மெளன ராகம் படமும் அதில் கலந்திருக்கும். எதுக்கு இந்தியா வந்தாங்க நேரா சொர்க்கத்திற்கு போயிருந்தால் பரிதியை சந்திருக்கலாம்.இந்த படம் பார்க்கும் போது நண்பனொருவன் அடிக்கடி சொல்லும் பன்ச் பக்காவாக பொருந்தியது. "பெண் எல்லாம் மதில் மேலிருக்கும் பூனை..எந்த பக்கம் குதிப்பாங்கன்னு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.." . உடனே சிக்கிட்டான்டா அடிக்க வர வேண்டாம். நான் ஆணாதிக்கவாதி தான். யாராவது இல்லை என்று சொன்னால் நிச்சயம் அந்த பயபுள்ள யாரையோ காதலிக்கிறான் என்று அர்த்தம்.இதுவும் நான் சொல்லவில்லை.அதே பன்ச் பாஷாவின் டயலாக் தான் இதுவும்.

களவாணி படத்தின் முடிவில் சரண்யா சொல்வார் - "பாருங்க பையன் கம்ப்யூட்டர்ல வேலை பாக்குறான்.." உடனே இளவரசு "நானும் துபாய்ல வேலை பார்த்துயிருக்கிறேன்..அவன் வேலை பாக்குறது பெட்ரோல் பங்குல.." என்று சொல்வார். ஒரு வேளை அறிக்கி ப்ளாக் எழுதும் பழக்கம் வந்திருக்குமோ. பேரன் பிறந்தவுடன் இளவரசுக்கு ஒரு கண்ணாடி மாட்டி கிழவனாக மாற்றியிருப்பார்கள். கொஞ்சம் முன்னர் தான் இளவரசுவின் நண்பர் அவருக்கென்ன இன்னொரு கல்யாணம் பண்ணலாம் என்று சொல்வார். பேரன் பிறந்தாலும் இளமையாக இருக்கலாம். யார் மாதிரி சாரு மாதிரி. அப்போ தான் நள்ளிரவில் நல்லா தூக்கம் வரும்.யாரும் ஸ்கீரின் ஷாட் எடுக்காத நேரத்தில் பதிவு போட முடியும்.

வாரணம் ஆயிரம் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். சூர்யா சமீராவின் மரணத்திற்குப் பின் ஏர்போர்ட்டிக் அழுதுக் கொண்டிருப்பார். ஒருவர் வந்து தேற்றுவார். அவர் குழந்தை காணாமல் போகும் போது சூர்யா சொல்வார். "என் வாழ்வில் வந்த திருப்பத்திற்கு காரணமே சந்தீப் மேனன் தான்.." ராஜீவ் மேனன் என்று கேட்டுத் தொலைத்தது. இப்படி குறியீடுகளாக எல்லா படத்திலும் கௌதம் கொட்டினால் போதும்.இன்னும் வி.தா.வ மாதிரி "நல்லப் படங்கள்" எல்லாம் நமக்கு கிடைக்கும்.

சாரு திட்டும் போதெல்லாம் ஜெயமோகன் தளத்தில் நேரம் போக்கிக் கொண்டிருந்தேன். விஷ்ணுபுரம் படித்தவர்கள் மட்டும் தான் ஜெயமோகனை விமர்சிக்கலாம் என்று சொன்னப் பின் படித்துக் கொண்டிருந்த இரவு நாவல் அதே இடத்தில் நிற்கிறது. ஏன் இப்படி யாராவது சொல்லுங்களேன்.

பிரேசில் அணியை காலியிறுதியில் ஜெயிக்கும் அணி அது எப்படி சரியாக இறுதிப் போட்டியில் தோற்கிறது. 2010 - நெதர்லாந்து , 2006 - பிரான்ஸ், 2002ல் இங்கிலாந்து ஜெயித்திருக்க வேண்டியது ரொனாடில்னோ அடித்த பனானா கிக்கினால் ஜெயித்து விட்டார்கள். கால்பந்து இடுகை எழுதலாம் என்று நினைத்தால் சமாதானமாக போவதற்கே நேரம் சரியாகயிருக்கிறது.

ஏர்டேல் ஜூனியர் சூப்பர் சிங்கர், சூர்யா அடித்த பல்டி, சீமான் போட்ட குட்டிக்கரணம் எல்லாம் முன்னாலே சொன்னாலும் இணையம் இல்லாத காரணத்தால் வடை போய் விட்டது. சரி தில்லாங்கடி விமர்சனம் எழுதலாம் என்று பார்த்தால் லக்கி எழுதியிருக்கிறார். ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது. வடிவேலு தான் படத்தை காப்பாற்ற வேண்டும் ஆனாலும் பிரம்மானந்தம் அளவிற்கு முடியாது என்று நினைக்கிறேன்.ஜெயம் ராஜா அலுங்காமல் போடும் ரீமேக் கோடு இந்த தடவை மிஸ்ஸாக வாய்ப்பிருந்தாலும் சன் காப்பாற்ற வந்திருக்கிறது.அதற்கெல்லாம் வட்டியும் முதலும் எந்திரனில் கிடைத்து விடாமலிருக்க வேண்டும். வேலாயுதம் விமர்சனம் எழுதி விட வேண்டியது தான். அதுவும் எனக்கு முன்னால் யாராவது எழுதப் போகிறார்கள்.வழக்கம் போல வடை போகுமா என்று சந்தேகம் வந்து வந்து போகிறது.

5 comments:

இரும்புத்திரை said...

சண்டை போடும் போதெல்லாம் இருக்கும் பாலோயர்கள் விமர்சனம் எழுதும் போது ஏன் காணாமல் போகிறார்கள் - போன வார சந்தேகம்.

நீ தொடு வானம் said...

விமர்சனம் ஒழுங்கா எழுதினா இப்படி நடக்குமா இன்னொரு சந்தேகம்

ஜெட்லி... said...

//இன்னும் வி.தா.வ மாதிரி "நல்லப் படங்கள்" எல்லாம் நமக்கு கிடைக்கும்.//

ஹ்ம்...ரைட்..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

ருசியான துவையல்


தத்துவம் :

வடை போனா பரவால்ல.........
ஆனா வடை ஊசி போகக்கூடாது....

Vidhoosh said...

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் - தொடர் பதிவு எழுத அழைப்பு வச்சுருக்கேன். முடிஞ்சா எழுதுங்க. சரியா.