Friday, July 16, 2010

சாருவிடம் சுரேஷ் கண்ணனுக்காக ஒரு கோரிக்கை

முதல்ல சாருவுக்கு என் கடும் கண்டனம் தெரிவித்து விடுகிறேன். இல்லை இந்த பதிவை படித்தபின் நான் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று என்னை யாரும் அடித்து ஸாரி நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை.

நேற்று என்னுடைய பதிவில் இருந்து ஒரு பத்தியை எடுத்து கென்னின் பஸ்ஸில் போட்டிருந்தேன். பஸ்ஸின் தலைப்பே ஏன் சாருவை மட்டும் அதிகம் வெளுக்கிறார்கள்.

சாரு இணையதளம் போனால் மன நோயாளியை சமாளிப்பது எப்படி என்று எழுதியுள்ளார். அதை படித்தால் நான் மன நோயாளியாகி விடுவது உறுதி.சாருவிடம் எனக்கு பிடித்ததே இரண்டு தான்.எழுத்துப் பிழைகள் மிகவும் குறைவு அல்லது அரிது. எதை எழுதினாலும் கீழே வரை வாசிப்பவனைக் கொண்டு வரும் சாத்தியம்.அவர் மற்றவர்கள் சொல்வது போல் பத்தி எழுத்தாளராகவே இருந்தாலும் அது சாத்தியமாகிறது.புரிந்தும் தொலைக்கிறது.எல்லோரும் முழுதாக படித்தவுடன் எதிர்வினை வைக்க கிளம்பி விடுகிறார்கள். இனி அவரிடம் சொல்ல வேண்டும் ஜெயமோகன் மாதிரி புரியாமல் எழுதுங்கள் என்று.சொல்லி விட்டு மீண்டு வந்தால் அடுத்த பதிவு எழுதுகிறேன்.

இதை நான் சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது இன்று காலையில் தான் தெரிந்தது.க் அதனால் தான் எதுவும் சொல்வதில்லை.இனி விஷ்ணுபுரம் படித்து விட்டு தான் ஜெயமோகனை விமர்சிப்பேன் என்று சாரு சொல்வதற்கு முன்பே ரோமியோவிடம் புத்தகம் கேட்டிருந்தேன். சாருவே சொல்லி விட்டார் விஷ்ணுபுரம் சிறந்த நாவல் என்று.

அதே பஸ்ஸில் சுரேஷ் கண்ணன் என்ன சொல்லியிருந்தார் என்றால்

சுரேஷ் கண்ணன் - சாருவை மாத்திரம் ஏன் அதிகம் ஓட்டுகிறார்கள்..

1) அவர்தான் இணையத்தில் அதிக பிரபலம்.
2) அவரை ஓட்டினால் உடனடி கவனம் கிடைக்கிறது.
3) அப்படி ஓட்டுவதற்கான காரணங்களை சாருவே ஏற்படுத்தித் தருகிறார்.
4) இணையத்தில் எழுதும் நிறைய பதிவர்களுக்கு சாரு,ஜெமோ,எஸ்.ராவைத்தவிர இணையத்தில் உள்ள அல்லாத மற்ற பல எழுத்தாளர்களைப் பற்றின வாசிப்பு குறைவு.8:22 pm

இந்த வார்த்தைகளின் படி அதாவது மூன்றாவது பாயிண்ட்டின் படி சாருவே வடைகளை அள்ளித் தருகிறார். அதில் இன்னொரு கோணமும் எல்லோருமே சுரேஷ் கண்ணன் உட்பட அந்த வடைகளுக்காக காத்திருக்கிறோம் என்பது தான் உண்மை. நான் இன்னும் ஸ்கீரின் சாட்ஸ் (சுரேஷ் கண்ணன் அளவிற்கு எடுக்க தெரியாத காரணத்தால்) காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

அதை தொடர்ந்து பை.கா பஸ்ஸிலும் கென் பஸ்ஸிலும் நாலு முறை கமெண்டினேன்.ஒன்று மேலே இருக்கிறது.அடுத்த மூன்றும்..

suresh kannan athikam chaaru padikkaatheenga..ellorum solra maathiri avar paathippu theriyuthu :-))))))))))))))) - பை.கா பஸ்ஸில் நான் எழுதியது.

பை.கா பஸ்ஸில் சு.கவை விமர்சித்து விட்டேனே..எனக்கு அவர் மேல் எந்த வெறுப்பும் கிடையாது.அங்க வேணா போய் பாருங்க..ஸ்மைலி எல்லாம் போட்டு இருக்கேன்.

innoru inaiya aalumai suresh kannan..ithuvum serious (பாருங்க ஸ்மைலி கூட போடவில்லை)

இது இரண்டும் கென் பஸ்ஸில் நான் எழுதியது.

அதனால் எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் சுரேஷ் கண்ணன் மீது கிடையாது. அவருடைய அதி தீவிர வாசகன் நான் (என்ன சிரிப்பு சின்னப்புள்ளத்தனமா).

டிசம்பர் மாதம் ஒரு சின்ன சண்டையில் வெண்ணிற இரவுகள் கார்த்தி சாருவின் அடியாள் (அதற்கு முன் நான் அப்படி சொன்னேன்.மறைத்து விட்டேன் என்று பின்னூட்டத்தில் சண்டைக்கு வரக்கூடாது) அது சாருவின் தளத்தில் வந்தது.தொடர்ந்து தண்டோரா பதிவும்.

டிசம்பர் மாதம் சாருவுக்கு சுரேஷ் கண்ணன் எதிர்பதிவு எழுத, யாரும் அதை பெரிதாக எடுக்கவில்லை. ரோசா வசந்த் இது சாருவுக்கான எதிர்வினையே இல்லை என்று சொல்லி விட்டார். சுரேஷ் கண்ணன் ஏதோ ஒரு இடத்தில் சாருவை ஆதரித்து மொக்கையாக ஜால்ரா தட்டினால் கூட போதும்.அவர் தளத்தில் வந்து விடும். இன்று பயன்படும் என்று அன்று தெரியாத காரணத்தால் அதை ஸ்கீரின் சாட் எடுக்கவில்லை.

ஜனவரி மாதம் இளையராஜாவின் இசையை சாரு கேலி செய்து அவர் தளத்தில் எழுத எதிர்வினை சுரேஷ் கண்ணன் எழுத சாரு அதை வெளியிட்டு சுற்றி வளைத்து விவாதம் செய்துள்ளார் என்று போகிற போக்கில் இடது ஒரமாக ஒதுக்கி வண்டியை லாரியால் தட்டுவது போல தட்டி விட்டு போய் விட்டார். கூடவே சரவணகுமரனின் சுட்டியும் அதில் இருந்தது. சாரு சுட்டி தந்தார் என்பதற்கு ஆதாரம் - லக்கியின் பின்னூட்டம் தான்.அது சுரேஷ் கண்ணனின் பதிவிலே இருக்கிறது.

அதற்குப்பிறகு நித்தியின் விளைவால் சாரு அந்த தளத்தைத் தூக்கி விட அதையும் ஸ்கீரின் சாட் எடுக்கும் பாக்கியம் எனக்கில்லாமல் போய் விட்டது. நித்தியின் விஷயம் பெரிதாக விவாதிக்கப்பட்டது கூட சுரேஷ் கண்ணன் சாருவுக்கு எதிராக ஒரு எதிர்வினையையும் வைக்கவில்லை.அவர் தளத்தில் சாரு என்ற லேபிளை சுட்டவும். அடுத்த எதிர்வினை மே மாதத்தில் தான் வருகிறது அடுத்து ஜூன்.அடுத்தது இன்று என்று தொடர்ச்சியாக வந்தது. அப்போதெல்லாம் எத்தனை முறை ஸ்கீரின் சாட் எடுத்திருக்கலாம், எத்தனை எதிர்வினை எழுதியிருக்கலாம் ஏன் எழுதவில்லை.காரணம் சுட்டியின் மகிமை என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மே மாதம் எழுதிய பதிவு கூட பகடி தான் என்று அடுத்த மாத எதிர்வினையில் அவர் சொன்னப் பிறகு தான் எனக்கு புரிந்தது.

சாருவுக்கு கோரிக்கை வைக்கும் படலம் இங்கு வருகிறது - நீங்கள் தயவு செய்து எது எழுதினாலும் சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை சுட்டி கொடுத்து விடவும்.இப்படி ராத்திரி நேரத்தில் துப்பறியும் வேலைகளும் எதிர்வினைகளும் இருக்காது. சுட்டு மகிமை அப்படி. இதை நான் அடுத்த பதிவில் பகடியாக எழுதினேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

அவரை மாதிரி நல்ல இணைய எழுத்தாளர்கள் எங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தயவு செய்து அவருக்கு சுட்டி தந்து விடவும். தராமல் போனால் சட்டிகளோடு வந்து உங்கள் வீட்டின் முன் போராட வேண்டியிருக்கும்.

அப்புறம் தல என்பவருக்கு ஒரு வேண்டுகோள் இந்த பதிவிற்கு மட்டும் மைனஸ் போடாதீர்கள்.நல்ல இலக்கியவாதி இலக்கில்லாமல் போய் விடக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த பதிவு. அப்படியும் மைனஸ் போட வேண்டும் என்றால் போடவும். உங்களுக்கு கோபம் வரும் அளவிற்கு நான் எழுதுகிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியே.

16 comments:

நீ தொடு வானம் said...

இது கோரிக்கையா இதுக்கு நேரா எதிர்வினை தான் எழுதினேன் என்று சொல்லி தொலைத்தால் என்ன கேடு.இது லேபிள் தான் இன்னும் கொடுமை.அசொற்சித்திரமா.அடங்கவே மாட்டீங்களா.

இரும்புத்திரை said...

எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான்.இன்று கூகுள் அலுவலகத்தில் இருந்து காலையில் பதினெட்டு ஐ.பி அட்ரஸ்களில் இருந்து ஒரு மணி நேரமாக 150 பக்கங்களைப் பார்த்து கும்மியடித்தார்கள். பிறகு ஒபாமா சும்மா இருக்கிறார் என்று என் ப்ளாக் அட்ரஸைக் கொடுத்து விட்டால் என்ன செய்வது.

Romeoboy said...

\\சாரு சொல்வதற்கு முன்பே ரோமியோவிடம் புத்தகம் கேட்டிருந்தேன். சாருவே சொல்லி விட்டார் விஷ்ணுபுரம் சிறந்த நாவல் என்று.//

அவரு சொன்னதான் படிபிங்கலோ

வால்பையன் said...

இது பாலோஅப்புக்கு!

வால்பையன் said...

//தல என்பவருக்கு ஒரு வேண்டுகோள் இந்த பதிவிற்கு மட்டும் மைனஸ் போடாதீர்கள்.//

இது உங்கள் விருப்பம்!

//நல்ல இலக்கியவாதி இலக்கில்லாமல் போய் விடக் கூடாதே//

இது என்ன காமெடி!?

நல்ல இலக்கியவாதி என்றால், கெட்ட இலக்கியவாதி என்று ஒருவர் இருக்கிறாரா!?

இரும்புத்திரை said...

அதான் சொன்னேனே..அவர் அப்படி எழுதாமலிருந்தாலும் கேட்டிருப்பேன்..நான் அந்த புக்க ரெண்டு நாளா உங்கக்கிட்ட கேக்குறேன்..

இரும்புத்திரை said...

வால் அப்ப இலக்கியவாதி எல்லோருமே கெட்டவர்களா

வால்பையன் said...

//வால் அப்ப இலக்கியவாதி எல்லோருமே கெட்டவர்களா //

யாருக்கும் புனிதபிம்பம் இல்லை என்பதே என் கருத்து, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை!

இரும்புத்திரை said...

வால் அது சும்மா காமெடிக்காக எழுதியது..குறை எல்லா இடத்திலும் இருக்கு..

வால்பையன் said...

//வால் அது சும்மா காமெடிக்காக எழுதியது.//


அதுன்னா எது தல?

இரும்புத்திரை said...

நல்ல,கெட்ட

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

Aravind, you are insulting Suresh Kannan! அவர் சாரு சுட்டி தருவதற்காகத்தான் எழுதுகிறார் என்பதெல்லாம் டூ மச். அது பகடி என்று புரியாவிட்டால் அது அவர் பிரச்சனையா?

இரும்புத்திரை said...

கண்டிப்பா இல்லை சுந்தர்ஜி..மேலும் இந்த இடுகையே அவரின் கடைசி வரிகளில் இருந்து எடுத்தேன்..அவர் தலைப்பை விடவா நான் மோசமாக எழுதி விட்டேன்..

//இந்தப் பதிவை வாசித்துவிட்டு சாரு என் மீதும் இதை விட அதிக வன்மத்துடன் பாயலாம்.//

பாய வேண்டும் என்றே விமர்சனம் வைத்தது போலிருந்தது.அதனால் எனக்கு அப்படி தோன்றியது.

சைக்கோ லீலைகள் என்பதில் ஒருவனை திட்டுவது கூட வரும் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்..

நந்தா said...

////இந்தப் பதிவை வாசித்துவிட்டு சாரு என் மீதும் இதை விட அதிக வன்மத்துடன் பாயலாம்.//


ஆம். இந்தக் கேள்வி வருவது இயற்கைதானே. ஒத்தைக் கேள்வி கேட்டதற்கே உண்டு இல்லைன்னு ஆக்கிய மனுஷன் இப்படி யோக்கியதையை கிழிச்சு எழுதினா எப்படி வேணாலும் பாய நேரலாம் என்பது அவரது அனுமானம். இதில் என்ன தவறு.

அவ்வளவு பெரிய கட்டுரையில் சாருவின் செயல்கள் குறித்தான குறிப்பாய் அந்தக் கட்டுரைகளில் வெளிப்ப்ட்ட சாருவின் வக்கிர உணர்வுகளை குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினால் கூட பிரபலமாக என்று மறைமுகமாய் சொல்கின்றீர்கள்.

இதன் மூலம் வெகு எளிதாக சு.க வின் கேள்விகளை புறம் தள்ளி விட்டு போக ஏதுவான ஒரு சூழலை உருவாக்க முனைகின்றீர்கள். அப்பதிவில் அதீஷாவின் பின்னூட்டமும் இதே நோக்கத்திற்கான இன்னொரு வகையான முயற்சிதான்.

ராம்ஜி_யாஹூ said...

nandha, well said

இரும்புத்திரை said...

சாரு மூலமாக அவர் பிரபலம் ஆக வேண்டும் என்ற அவசியமில்லை.

இளையராஜா பதிவு கூட சாருவை விமர்சித்து எழுதியது தான்.அவரை புகழ்ந்தால் தான் லிங்க் தருவார் என்பதும் ஜெயமோகனை படிக்காமல் விமர்சனம் செய்தால் திட்டுவேன் என்று சொன்னதும் எனக்கு தெரிந்து மாற்றமே.