Friday, July 23, 2010

பெண்கள் v/s ஆண்கள்

பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள்

1.பெண்களிடம் பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் நிச்சயம் விஜய்,அஜித்,சூர்யா,மாதவன் என்று கல்யாணம் ஆன நபர்களின் பேரே வரும்.ஒரு குரூப்புக்கே (நான்கு முதல் ஐந்து வரை) ஒரே ஒரு ஹீரோவின் பேர் தான் இருக்கும்.இதுவே ஆண்களிடம் கேட்டால் லேட்டஸ்ட் நாயகியின் பேரை மந்திரமாக உச்சரிப்பார்கள் (அவர்களுக்கு கல்யாணம் ஆகும் வரை தான் அதுக்கு அப்புறம் அது போன மாசம் கதைதான்)

2.பெண்கள் பெரும்பாலும் ஒத்த ரசனை உள்ளவர்களிடம் நட்பாக இருப்பார்கள்.( ஒரே சென்ட் உபயோகிப்பார்கள்,ஒரே மாதிரி சாப்பாடு ஆர்டர் செய்வார்கள்)ஆண்கள் மாறுப்பட்ட ரசனை உள்ளவர்களிடம் நட்பாக இருப்பார்கள்.(அப்பதான் விவாதம் என்று வந்தால் டவுசர மாத்தி மாத்தி கிழிக்க முடியும்.)

3.பெண்களுக்கு அனுபவசாலிகளை ரொம்ப பிடிக்கும்( அது தெரிந்து தான் எனக்கு ஏற்கனவே லவ் பெயிலியர் இந்த பிட்ட பசங்க ஆயுதமா போடுறாங்க)ஆண்களுக்கு அனுபவசாலிகளை கண்டாலே பிடிக்காது காரணம் அட்வைஸ்.( அனுபவத்தில் தெரிந்து கொள்ள ஆசை படுவார்கள் நெருப்பு சுடும் என்பதை கையை விட்டு தான் தெரிந்து கொள்வார்கள்.)

4.பெண்களுக்கும் சண்டை வரும் பொழுது ரகசியங்கள் வெளியே வந்தே ஊரே சிரிக்கும். (உதாரணம் குடுத்தா எனக்கு வர்ற ஒன்னு இரண்டு பின்னுட்டங்களில் என் காதில் ரத்தம் வரும்)ஆண்கள் சண்டை போடும் பொழுது சேர்ந்து செய்த "மிக பெரிய தவறை" மட்டும் சாமர்த்தியமாக மறைத்து விட்டு சண்டை போடுவார்கள் (இதுக்கும் உதாரணம் கிடையாது காரணம் இருபாலரும் சமம். மேலே கொடுத்தால் இங்கேயும் வரும்)

5.பெண்கள் பெரும்பாலும் மிக சரியாக யோசித்து தவறாக முடிவு எடுப்பார்கள்.செயல்படுத்தும் பொழுது சரியாக நடக்கும் (girl's thing என்று பந்தா செய்வார்கள்)ஆண்கள் யோசிக்கவே மாட்டார்கள் எண்பது சதவீதம் சரியாக இருக்கும் ஆனால் நடக்காது. இருபது சதவீதம் தவறாக இருக்கும் உடனே நடந்து விடும்.

6.பெண்கள் அவர்களது கருத்துக்கு உடன் படும் ஆண்களை ரொம்ப பிடிக்கும்
(எப்பவும்மே இப்படிதானா).ஆண்களுக்கு எதிர் கருத்து சொல்லும் பெண்களை ரொம்ப பிடிக்கும்.(காதலிக்கும் பொழுது மட்டும் )

7.ஒரு விசயத்தில் பெண்கள் என்னுடைய பாட்டி காலத்தில் இருந்தே மாறவில்லை.(1970 ஆம் ஆண்டு இருந்த பெண் சுதந்திரத்திற்கும் இப்பொழுது இருக்கும் பெண் சுதந்திரத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு இன்னும் வரும் ஆண்டுகளில் இதுவும் மாறும் அப்பொழுதும் எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றே சொல்வார்கள்)ஆண்கள் எப்பொழுதுமே பெண்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.புரிந்து கொள்ளவே முடியாது.
மாறி கொண்டே இருக்கிறார்கள் இந்த விசயத்தில்.ஆண்களை வளர்ப்பதே பெண்கள் தான்.

8.பெண்கள் ஆண்கள் கண்டுப்பிடிப்பதை எடுத்து கொள்வார்கள்.
(ஹைஹீல்ஸ் ஆண்களுக்காக கண்டுப்பிடித்தது)ஆண்கள் வேறு எதாவது செய்ய போய் விடுவார்கள்.(அப்பத்தானே தங்கமணி கிட்ட நல்ல பேர் வாங்க முடியும்)

4 comments:

இரும்புத்திரை said...

1.நான் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பவன் தலைப்பை பார்த்தாலே தெரியும் .


2.பெரும்பாலும் பாதி தேர்விலே நான் தூங்கி விடும் பழக்கம் உண்டு அது போல நினைத்து கடைசி சில பாயிண்ட்களை யாரவது பின்னுட்டத்தில் எழுதி விடுங்கள்.

இரும்புத்திரை said...

போன வருஷம் ஜூலை மாசம் போட்ட மொக்கை மறுபடியும்..

http://irumbuthirai.blogspot.com/2009/07/vs.html

Vikram said...

old wine (post) in a new bottle(new year)... but still very very interesting. it created a light atmosphere...

ஊர்சுற்றி said...

:)