சினிமாவில் அவர் வெற்றி பெற்ற வருடம் டிசம்பர் 98.பதினாறு வருடப் போராட்டம்.நானும் என் நண்பர்களும் உல்லாசம் படத்தில் இருந்து அவரை கூர்ந்துக் கவனித்து வந்தோம்.சேது படத்திற்கு பிறகு அவரின் பழையப் போராட்டங்களைப் புரட்டினோம்.அதிலிருந்து சில.
விக்ரம் 1983 பாட்ச்சில் லயோலா கல்லூரியில் படித்தவர்.அவருடன் படித்தவர்கள் தரணி,கலாநிதி மாறன்.(நானும் ஒரு லயோலா கல்லூரியின் பழைய மானவன்(2001*)).
படிக்கும் போதே சினிமாவின் மேல் ஒரு தீராத காதல்.காரணம் அவரின் அப்பா.நடிகராக ஆசைப்பட்டு தோற்றவர்.பகவதிபுரம் ரெயில்வே கேட் படத்தில் கார்த்திக் - நடத்துனர்.விக்ரமின் அப்பா - ஓட்டுநர்.
ஒரு விபத்தில் கால் எலும்பு உடைந்து நாலு வருடங்கள் படுத்தப் படுக்கையாகவே இருந்திருக்கிறார்.அந்த சமயம் விக்ரமின் மாமா ஒரு பிரபல நடிகர்.1990 முதல் அவரது பையனும் பிரபல நடிகர்.ஒரு காலத்தில் அவரைப் பற்றி பரபரப்பாக செய்தி வரும்.இப்பொழுது எதுவும் கிடைக்கவில்லை என்றால் வரும்.நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர் "இனிமே சினிமாவில் நொண்டி வேடம் தான் கிடைக்கும்.." என்று சொல்லி இருக்கிறார்.மருத்துவரும் இனி நடக்கவே முடியாது என்று சொல்லி இருக்கிறார்.அதிலிருந்து மீண்டு வந்த காட்சி தான் தில் படத்தில் வைத்தது.(அந்த படத்தின் இயக்குனர் தரணிக்கும் காலில் ஒரு விபத்து). அந்த காயத்தின் மேல் தான் சேது படத்தில் மேக்கப் போட்ட்டார்கள்.(பாண்டிமடத்தில் விக்ரமை அபிதா வந்து பார்க்கும் காட்சி)
சான்ஸ் எதுவும் கிடைக்காமல் மலையாளம்,தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். விக்ரமைக் கட்டிப் போட்டு அடிப்பார்கள்.சுரேஷ் கோபியோ இல்லை மம்மூட்டியோ வந்து காப்பாற்றுவார்கள். இன்று கேரளாவில் டப்பா கந்தசாமி படத்தை மூன்று கோடிக் குடுத்து வாங்கி இருக்கிறார்கள்.
செய்த வேறு வேலைகள். டெலி ப்லிம்மில் நடிப்பது.வாய்ஸ் கொடுப்பது (பிரபுதேவா,அப்பாஸ்).குருதிப்புனல் படத்தில் நாஸருக்கு அடுத்த நிலையில் இருக்கும் வில்லனுக்கு வாய்ஸ் கொடுத்து இருப்பார்.அப்படி செய்ய்யும் போது நிச்சயம் கண்ணீர் விட்டு இருப்பார். குருதிப்புனல் படத்தில் நாஸரை விட விக்ரமின் குரல் நன்றாக இருக்கும்.
கடைசியில் எல்லா முயற்சியும் தோல்வி அடைந்து ஆஸ்திரேலியாவில் ஆப்பிள் தோட்டத்திற்க்கு வேலைக்குப் போக முடிவு செய்துள்ளார்.சேது படம் வந்தவுடன் முடிவை தள்ளிப் போட்டுள்ளார்.எடையைக் குறைக்க பதினெட்டு மைல் நடந்தே போவார்.சாப்பிட மாட்டார்.சேது படத்தை முடிக்க டெலி ப்லிம்மில் நடித்து அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளார்.
இன்று தேவையே இல்லாமல் பீமா,கந்தசாமி படத்தில் நடித்து நேரத்தையும்,திறமையையும் வீணடிக்கப் பார்க்கிறார்.
இது மாதிரி படத்தில் அவர் இனிமேல் நடிக்க கூடாது என்று நான் கந்தசாமி கோவிலில் சீட்டு கட்டப் போகிறேன்.
டிஸ்கி : இன்னும் நாலு படம் இப்படி எடுத்தா உங்களுக்கு ஆப்பிள் தோட்டம் தான்.
Wednesday, August 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
விக்ரம் டைரக்டர் ஸ்ரீதரோட அறிமுகம்ன்னு நினைக்கிறேன்.பாஸ், நீங்களாவது "உல்லாசம்" தான். நானெல்லாம் "புதிய மன்னர்கள்" படத்துலயே..!அந்த படத்துக்கு மியூஸிக்கே ஏ.ஆர்.ரகுமான்தான்.குருதிபுனல் படத்துல கமல் நல்லா யூஸ் பண்ணியிருப்பார் அவரை.படத்துல அவரோட வாய்ஸ் சூப்பரா இருக்கும்.சேது படத்தப்போ ஃபாரினுக்கு விக்ரம் கூட இன்னோர் ஆளும்வேலைக்கு போகவிருந்தாப்ல. அவர் ஸ்ரீமன். ரெண்டு பேருக்குமே "சேது" ஒரு திருப்புமுனை.
/இது மாதிரி படத்தில் அவர் இனிமேல் நடிக்க கூடாது என்று நான் கந்தசாமி கோவிலில் சீட்டு கட்டப் போகிறேன்//
பல பேரு கட்டியாச்சு என்னாகும்னு பார்ப்போம் .. பயபுள்ளைகள பிரமாண்டம் கண்ண கட்டி உருட்டி சேத்துல முக்கிட்டு இருக்கு .. எப்போ வெளியே வ்ரப்போறாங்களோ?
/அந்த சமயம் விக்ரமின் மாமா ஒரு பிரபல நடிகர்.1990 முதல் அவரது பையனும் பிரபல நடிகர்//
யாருங்க அது ?
/விக்ரம் 1983 பாட்ச்சில் லயோலா கல்லூரியில் படித்தவர்.அவருடன் படித்தவர்கள் தரணி,கலாநிதி மாறன்.(நானும் ஒரு லயோலா கல்லூரியின் பழைய மானவன்(2001*)).//
அப்போ கூடிய விரைவில் பெரும்புள்ளி ஆகிருவியனு சுயதம்பட்டமா ? ரைட்டு
//சூரியன் said...
/அந்த சமயம் விக்ரமின் மாமா ஒரு பிரபல நடிகர்.1990 முதல் அவரது பையனும் பிரபல நடிகர்//
யாருங்க அது ?
//
அப்பா மப்படியான் பையன் கொத்து அருவா! நடிப்புன்னா கிலோ எத்தனை ரூபான்னு கேட்கும் பையன்! இப்பதான் விவாகரத்து வாங்கினாரு!
நல்ல இடுகை
பாராட்டுகள்
விக்ரம் மேல் அக்கரை கொண்டுள்ள அலசல்..
விக்ரமின் தந்தைதானே... கில்லியில் திரிஷாவின் தந்தையாக வருபவர்
டிஸ்கி சூப்பர்.
\\சூரியன் said...
விக்ரம் 1983 பாட்ச்சில் லயோலா கல்லூரியில் படித்தவர்.அவருடன் படித்தவர்கள் தரணி,கலாநிதி மாறன்.(நானும் ஒரு லயோலா கல்லூரியின் பழைய மானவன்(2001*)).//
அப்போ கூடிய விரைவில் பெரும்புள்ளி ஆகிருவியனு சுயதம்பட்டமா ? ரைட்டு\\
தவறான புரிதல் சூரியன்.
ஒழுங்காக படித்தவர் மட்டும்தான் பெரும்புள்ளி ஆவர்.
ஆனா, நம்மாளு டிஸ்க்ன்டினியூடு. அதுக்குதான் பயபுள்ள 2001 க்கு மேல ஸ்டார் போட்ருக்கு.
:)
//குசும்பன் said... அப்பா மப்படியான் பையன் கொத்து அருவா! நடிப்புன்னா கிலோ எத்தனை ரூபான்னு கேட்கும் பையன்! இப்பதான் விவாகரத்து வாங்கினாரு//
புரிஞ்சிடுச்சு தல
டக்ளஸ்... said...
//தவறான புரிதல் சூரியன்.
ஒழுங்காக படித்தவர் மட்டும்தான் பெரும்புள்ளி ஆவர்.
ஆனா, நம்மாளு டிஸ்க்ன்டினியூடு. அதுக்குதான் பயபுள்ள 2001 க்கு மேல ஸ்டார் போட்ருக்கு.
:)//
அடடா சரியா பாக்கலேயே ..
குசும்பா இருந்தாலும் நீங்க மம்படியான மப்படியான்னு ஏன் சொன்னீங்கனு தெரில ..
ஒருவேளை மப்புள ரொம்ப புரளுவாரோ ?
நல்ல அலசல். விக்ரமை சில மலையாளப் படங்களில் பார்த்திருக்கிறேன். மிகவும் தாமதமாக கடும் போராட்டத்திற்கு பின் பிரபலமானவர். அந்நியன் நீண்ட கால தயாரிப்பாக இருந்தாலும் வெற்றிக்கண்டது. அதற்கு பிறகு வந்த எந்த படமும் விக்ரமின் பெயர் சொல்லும்படியாக இல்லை. இப்ப கந்தசாமியும். விக்ரமின் ஒவ்வொரு படமுமே மிகவும் தாமதமாக வருகிறது அவையும் இப்படி ஊத்திவிடுவது அவருக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். விக்ரம் அதை புரிந்துக்கொண்டு செயல்படவேண்டும். ஒரு நல்ல திறமையான நடிகர் இப்படி வீணாக கூடாது. ஆதங்கம் தான்.
உண்மைதான்.ச்சீயான் விக்ரம் கடும் உழைப்பாளி.சேது படத்தைப் போல தில் படத்திலும் பயங்கரமாக உடம்பை குறைத்து S.I செலக்சன் செல்பவர் போலவே இருப்பார்.
ஆனால் தற்போது இயக்குநர்களின் தவறுகளால் அவரது உழைப்பெல்லாம் விழலுக்கு இறைக்கும் நீராவது மிகவும் வருத்தத்திற்குரியது.
ம்ம்ம்.என்ன செய்ய.நாங்கெல்லாம் நல்ல (???!!!) வாய்ப்பு கிடைக்காமத்தான் இப்படி ஒட்டகம் மேய்ச்சிட்டு திரியறோம். :))
நன்றி டக்ளஸ்(2)
நன்றி சூரியன்(5)
நன்றி குசும்பன்
நன்றி கதிர் - ஈரோடு
நன்றி நாடோடி இலக்கியன்
நன்றி மஞ்சூர் ராசா
நன்றி துபாய் ராஜா
ஒரு ஸ்ரீதர் படம், விக்ரமன் படம், அமிதாப் படம், ஸ்ரீராம் படம் இப்படி பல பெரிய ஆட்கள் படத்தில் நடித்தும் தலைவர் பிண்ணனியிலேயே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..,
மீரா....................,
ஸ்ரீதர் : 'தந்து விட்டேன் என்னை'
விக்கிரமன் : விண்ணுக்கும் மண்ணுக்கும்'
PC ஸ்ரீராம் : மீரா...
இது தவிர 'காவல் கீதம்' (இயக்கம் SP முத்து ராமன் என்று நினைகிறேன்)...
இது எல்லாத்துக்கும் இருக்கிற ஒரு ஒற்றுமை(விக்ரம் நடிச்சத தவிர)????
நீங்க நினச்சது சரி. "எதும் ஓடலை"
நல்ல பதிவு... தொடர்ந்து நிறைய எழுதுங்கள் அர்விந்த்.
நட்புடன்,
ராஜ்.
தலைப்பு வக்கிறதுக்குனே தனியா ஒரு மூளை வச்சிருக்கீங்களா? குருதிப்புனல் படத்தில் வரும் இரவல் குரல்தான் ஞாபகத்து வர மாட்டேங்குது? அந்த சின்ன வில்லன் (நாஸருக்கு அடுத்த) யாருன்னும் தெரியமாட்டேங்குது?
நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)
நன்றி ராஜாதி ராஜ்
நன்றி ஜெகநாதன்
உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....
நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.
எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.
ஊர் கூடி தேர் இழுப்போம்.
எப்படி பணம் அனுப்புவது ?
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
நன்றி தமிழினி.
நன்றி ஞானி சார்.
விக்கிரமன் : விண்ணுக்கும் மண்ணுக்கும்'//
அதை இயக்கியது ராஜகுமாரன்
ஸ்ரீதர் படத்துக்கு முன்பே என் காதல் கண்மணி என்ற படத்தில் நடித்ததாகவும் முதல் ஷோ பார்த்த அவரின் தோழி "உனக்கெல்லாம் இது தேவையா" என்று கேட்டதாகவும் விக்ரமே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார்.
நன்றி கானா பிரபா
அந்த படம் புதிய மன்னர்கள் விக்கிரமன் இயக்கியது
அந்த தோழியே அசந்து விட்டார் சாமி படம் பார்த்து
Post a Comment