Thursday, December 31, 2009

2010 - சினிமா,அரசியல் மற்றும் இரும்புத்திரையில் என்ன மாற்றங்கள் நிகழும்

சரியாக எட்டு வருடங்களுக்கு முன் 2002 புதுவருடம் வீட்டில் எல்லோரும் சொந்தகாரர்கள்,நண்பர்கள் என்று தெரிந்தவர்கள் எல்லோருக்கும் தொலைப்பேசியில் வாழ்த்தினார்கள்.நான் மட்டும் ஒரமாக இருந்து கொண்டு இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.வற்புறுத்தி துன்புறுத்தி என்னை வாழ்த்து சொல்ல சொன்னார்கள்.வேண்டா வெறுப்பாக சொல்லிக் கொண்டிருந்தேன்.அடுத்த நாள் பூகம்பம் வெடிக்கப் போவது தெரியாமல் புது நாள் பிறந்தது.

பதினெட்டு வயதை நான் தொட பதினைந்து நாட்களுக்கும் குறைவாகவே இருந்தது.தோழி வந்தப் போது தான் கவனித்தேன்.முகமே சரியில்லை."நீ ஏன் எனக்கு நேத்து போன் பண்ணல.." முதல் கேள்வியே அதிக பவுன்ஸானது.குனிந்து விட்டு இருக்கலாம்.அதுதான் எந்த காலத்திலும் கிடையாதே. "இவ்வளவு அக்கறை இருக்குல..நீ பண்ண வேண்டியது தானே..".ஒரு நண்பனின் பெயரை சொல்லி - "அவன் பண்ணினான் தெரியுமா.." முகத்துக்கு நேரே புல்டாஸ்."அவன் எல்லோருக்கும் போன் பண்ணுவான்..அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..ஏன் கம்பேர் பண்ற..". "அவன் எவனோ ஒருத்தன் அவனே பண்ணும் போது உனக்கு என்ன கேடு.." நெஞ்சில் படும் போலத் தெரிந்தது."அப்ப அவன் தான் உனக்கு பொருத்தமாக இருப்பான் பெஸ்ட் ஆப் லக்.." சொல்லும் அவளோடு இருபது வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அயர்ச்சி பதிலில் தெரிந்தது.புது வருடத்தோடு நட்பு காலி. வெள்ளைக்காரனின் பின்னால் போய் நம் சுயத்தை இழந்து கொண்டு இருக்கிறோம் என்று இதுவரை புத்தாண்டை பெரிதாக நினைத்தது கிடையாது.

அது மாதிரி எந்த நட்புகளையும் நான் இழக்க விரும்பவில்லை.அதனால் புதிய நாள் வாழ்த்துக்கள்.தூங்கி முழிக்கும் ஒவ்வொரு இரவும் புதிய நாள் தான் புத்தாண்டு தான்.சுயம் கொஞ்சம் போனால் தான் என்ன - புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே.

இனி என்ன மாற்றங்கள் நிகழும்..

இரும்புத்திரையில் இருந்து ஒரு தொழிலதிபர் உருவாகலாம்.(புண்ணாக்கு,குண்டூசி கூட விற்கலாம்)

சுறாவை சன் வாங்கி வெளியிட்டு மக்களை பதம் பார்க்கலாம்.பதிலுக்கு எந்திரனை மக்களும் பதம் பார்க்கலாம்.

பா.ம.க எந்த கட்சியில் இருக்கிறது என்று குழப்பங்கள் வரலாம்.

குடியாத்தம் தேர்தலில் உடன் பிறப்புகள் வெற்றி பெற்று மைனாரிட்டியில் இருந்து மெஜாரிட்டிக்கு ஒரு படி முன்னேறலாம்.

மகேஷ் பாபு படம் நடித்து வெற்றி பெற்றால் விஜய் 2011லில் ஒரு உண்மையான வெற்றி படம் குடுக்கலாம்.

இரும்புத்திரையில் இருந்து புத்தகம் வரலாம்.(பி.டி.எப் கோப்புகளாக என் பதிவை மாற்றி தருகிறேன் என்ற அர்த்ததில் சொன்னேன்.)

விஜய் பா.ஜ.க இளை ஞர் அணியில் சேரலாம்.விஜயகாந்த் கூட்டணி வைக்கலாம்.(மக்கள் கூடத் தான்)

கேப்டன் டிவியில் விருதகிரி படம் பார்த்து மகிழலாம்.

பொன்சேகா வெற்றி பெற்று குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து சாப்பிடலாம்.(அதுல கொஞ்சமாக விஷம் கலக்க முடியுமா..) அல்லது ராஜப்பக்சே வெற்றி பெற்று பொன்சேகா நாடு கடத்தப்படலாம்.

உலக கோப்பை கால் பந்து போட்டியில் பிரேசில் வெற்றி பெறலாம்.

சொல்லாமல் கொள்ளாமல் இரும்புத்திரை பதிவுலகை விட்டு காணாமல் போகலாம்.(என்னா சந்தோஷம்..வாய்ப்பு கம்மி தான்..)

வேறு பெயர்களில் பதிவு ஆரம்பித்து கும்மியடிக்கலாம்.(அதானே பாத்தேன்..)

சென்னைக்கு இடம் பெயரலாம்.(ஆபத்து நெருங்குதே..)

டிஸ்கி போடாமல் எழுதலாம்.(போட்டுட்டா மட்டும்..)

அசல் படம் தோரணம் கட்டப்படலாம்.(நான் அவன் இல்லை)

கவிதை ஆனந்த விகடனில் வரலாம்.(அவ்வ்வ்வ்வ்)

சேரன் குமுறாமல் அழலாம்.நந்தலாலா இரும்புத்திரையில் கிழிக்கப்படலாம்.(தெரிந்தது தானே..)

ஜோதியடர் ஷெல்லி மூன்று வருடங்களுக்கு முன் குழந்தை பிறக்கும் என்று சொன்ன கோபிகாவுக்கு குழந்தை பிறக்கலாம்.(எவ்வளவு லேட்..)

விடுமுறைகள் மிகவும் கம்மி என்று கண்டபடி திட்டலாம்.

எதிர்பதிவுகள் அனல் கக்கலாம்.(யாரையோ குறி வைச்சிருக்கு பயப்புள்ள்..)

இப்"போதை"க்கு இவ்வளவு தான்.

எனக்கு நாளைக்கு லீவ் இல்லை.அதனால் என்னை தவிர எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.அப்ப எனக்கு இந்த ஸ்டேடஸ் மெசேஜ் தான் - 2011 தேர்தல் வேற நெருங்குதே விஜய் ஆச்சியைப் பிடிப்பாரா.நீங்க சொல்வீங்க தானே - எனக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் .

சினிமாவின் அவலம் - டைட்டில் கார்டு

திரையில் பெயர் பார்க்கும் ஆர்வத்தில்
துவக்கம் முதல் கண்கொட்டாத காத்திருப்பு
முந்தைய இரவின் மிச்சம்
இடைவெளியில் கண்ணை நிமிண்டுகிறது
அடிவயிற்றில் பரவும் சூடு
இடைவெளியின் அகலம் தெரியாமல்
அவசரமாக சாப்பிட்ட காபி
காற்று இறக்கப்படும் பலூன்கள்
முன்னிருக்கையில் தள்ளப்படும் தாள்கள்
கடைசியில் வரும் நம்பிக்கையில் சகாக்கள்
எண்ட் கிரேடிட்சில் பெயர் சுழலும் போது
எரியும் விளக்கு அணைக்கப்படும் திரை
நண்பன் சொன்னது காதில் தெறிக்கிறது
"இதிலுமாடா ஹாலிவுட் மோகம்.."
கொட்டை எழுத்தில் நேற்றைய உதவிகளின் நாமங்கள்
திருட்டு விசிடியிலும் பெயர் தெரியாத
சோகத்தில் நாளைய பிரபலம்..

Wednesday, December 30, 2009

200வது பதிவு - 2009,அலெக்ஸா ரேங்கிங்,பிராபல பதிவர்,பதிவுலகத்துக்கு விவாகரத்தும்

மே மாதம் பத்தாம் தேதி

ரயில்வே டிராக் பக்கத்தில் சரக்கடித்து கொண்டுயிருந்தோம்.அடிக்காத நான் ஒருவன் மட்டும் உளறிக் கொண்டிந்தேன்.மே பீ சரக்கின் வாசனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.பதிவுலகின் சூட்சுமங்கள் தெரியாமல் என்ன எழுதுவது என்றே தெரியாமல் திரிந்து கொண்டிருந்த நேரம். யாருமே என்னை படிக்கவில்லை எனக்கு எழுத வராது என்று நானே முடிவு கட்டியிருந்தேன்.விஜியிடம் புலம்பித் தள்ளினேன்.எந்த கோணத்தில் போனாலும் அந்த இரண்டு மணி நேரம் நான் சொல்லிக் கொண்டிருந்த மூன்று வார்த்தைகள் - (ஐ லவ் யூ இப்படி சொல்லியிருப்பேன் என்று யாராவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.)."பிரபல பதிவர் ஆவேனா..".என் தொல்லை பொறுக்காமல் இரண்டு பீர் நாலாவதை நெருங்கி கொண்டிருந்தது.அன்றே அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது.

டிசம்பர் மாதம் பத்தாம் தேதி

ஏழு நாட்களில் நாற்பது மைனஸ் பிரபலத்தில் ஒரு கால் சேர்த்து பிராபலமாக உருவான நாட்கள்.கும்மாம்குத்துகள் வாங்கிய நாட்கள்.சவாலை ஏற்றுக் கொண்ட நாட்கள்.பதிவுலகத்தை விட்டு விலகி விடலாமா என்று நினைத்த நாட்கள்.அலெக்ஸாவில் நினைத்ததை அடைந்த நாட்கள்.பாலோயர்கள் போய் விடாமல் இருக்க என்ன செய்யலாம் என்று 500 பாலோயர்களை வைத்திருக்கும் வால்பையனின் வாலை முறுக்காமல் கேட்ட நாட்கள். ஏதாவது கயிறு வைத்து இருக்கீங்களா என்று பொறாமையுடன் கேட்ட நாட்கள்.சாருவின் அடியாள் என்று சொன்னவுடன் நெருங்கிய நட்புகள் விலகிய நாடகள்

1500 மீட்டர் ஒட்டப்பந்தயம்
மூச்சிறைக்க ஓடும் போதெல்லாம்
மூக்கருகில் குருதி வாசனை எழும்
கடைசியாக எல்லைக் கோட்டைத் தொடுகிறேன்.
இன்று 200ஐ நெருங்கும் முன்
ரத்தம் வழிந்து கால் செருப்பை நனைக்கிறது
முதலாவது வந்தேனா தெரியவில்லை
கனவில் வராத பின்னூட்டங்களுடன் சஞ்சரிக்கிறேன்
பொறுக்காமல் மேலாளர் உலுக்குகிறார்
"EXETREME LEVEL OF ADDICTION"

அக்டோபர் மாதம் பத்தாம் தேதி

விஜியை பார்க்க டீக்கடையில் காத்திருந்தேன்.நாய் ஒன்று என்னை முறைத்து பார்த்து கொண்டிருந்தது.வரும் போது வாலை மிதித்து விட்டேனா யோசித்து பார்த்தால் தலைவலி தான் மிச்சம்.விஜி வந்தவுடன் "வாங்க போகலாம்.." என்று சொன்னார்.நாய் பக்கத்தில் மட்டும் தான் வழி இருந்தது.(எனக்கு நாயை கண்டாலே அலர்ஜி.சின்ன வயதில் மும்பையில் இருக்கும் போது கரடியை வைத்து வித்தை காட்டுபவன் பின்னால் போக என் பின்னால் பக்கத்து வீட்டு நாய் வர நாயின் வாலை வைத்து என்னை கண்டுப்பிடித்து விட்டார்கள்.வயது இரண்டு.பயமில்லாமல் இருந்தது.வரும் ஜனவரியில் பதிமூன்று மடங்காக பயமும் வயதும் வளர்ந்து விடும்.)நாய் போனால் தான் வருவேன் என்று அடம் பிடிக்கிறேன்.ஜாலியாக இருக்கும் போது தெலுங்கு வசனம் பேசுவது வழக்கம்.அது மாதிரி விஜய் சொல்ல சொன்னார்."நேனு பிரபல பதிவர்லு..இக்கட தீஸ்கோ..அக்கட ஆயாலு சம்பேஸ்தானு" நான் சொன்னேன் - "ஏன்யா இந்த கொலைவெறி..என் பக்கத்து வீட்டுக்காரனுக்கு கூட தெரியாது நான் பிரபலம்னு..இப்படி சொன்னா அது ஆள்காட்டி விரலை கடிக்கும்..டைப் அடிக்க முடியாம இருக்கிற வேலையும் போயிரும்..".அப்புறம் என்னவா நாய் போன பிறகு தான் நான் போனேன்.

ஜூலை மாதம் பத்தாம் தேதி

தமிளிஸ் மற்றும் தமிழ்மணத்தில் இணைந்தப் பிறகு எழுத தொடங்கினேன்.மூன்று நாட்களில் ஆறு பதிவு.2200 ஹிட்ஸ்.நர்சிம்,லக்கி பின்னூட்டம்.ஜெகன் அண்ணாவின் அரவணைப்பு.எனக்கும் என் மேல் கொஞ்சம் நம்பிக்கை பூத்த நாட்கள்.என்னையும் படிக்கிறார்கள் என்று தெரிந்து குதுகலித்த நாட்கள்.ஒருவரும் கண்டுக்கொள்ளாத நிலையில் என்னை படித்த தங்கை கொஞ்சம் கொஞ்சமாக பதிவு வெற்றி பெற்று விடும் என்று நான் நம்பிய போது ஊருக்கு போய் விட்டாள்."உங்கிட்ட இவ்வளவு திறமையா.." அவள் ஆச்சர்யமே எனக்கு அதிசயமாக இருந்தது.என் கவிதையை அடம் பிடித்து வாங்கி படித்து விட்டு இஞ்சி தின்ற குரங்கு போல முகம் மாறிய பெண் நினைவுக்கு வந்தாள்.

ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி

வலைப்பூ ஆரம்பித்து முதல் பதிவு நான் அடிக்க தொடங்கி முடியாமல் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து சோர்ந்து போய் அடுத்து பதிவே அடிக்காமல் சந்தோஷமாக இருந்த நாட்கள்.அந்த சந்தோஷத்தில் ஆனந்த தாண்டவம் பார்த்து தாண்டவம் ஆடாமல் ஒரு விமர்சனப் பதிவை கோட்டை விட்ட நாள். பிறகு சேரனை காய்ச்சி ஒரு பதிவு எழுதி அது மின்சாரம் போனதால் சொல்ல முடியாமல் போனது எதை - பொக்கிஷம் தான் கொரியன் படம் க்ளாஸிக் என்பதை.

நவம்பர் மாதம் பத்தாம் தேதி

பேராண்மை சண்டை கொஞ்ச கொஞ்சமாய் ஒய்ந்த நாட்கள்.எத்தனை பாலோயர்கள் காணாமல் போனார்கள் என்று தெரியவில்லை.ரமேஷ் வைத்யா அண்ணா பாராட்டிய போது அந்தரத்தில் மிதந்த இரண்டு நாட்கள்.சாரு தளத்தில் இன்னொரு முறை பதிவு வந்தப் போது சாரு பாராட்டினார் என்று கேள்விப்பட்டு யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளே மகிழ்ந்த நாட்கள்.மைனஸ் வாங்க ஆரம்பித்த நாட்கள்.பல மொக்கைகளையும் சில நல்ல பதிவுகளையும் எழுத ஆரம்பித்த நாட்கள்.பாராட்டுகளையும் திட்டுகளையும் வாங்கிக் கொண்டு வெளியில் காட்டாமல் திரிந்த நாட்கள்.வீட்டுக்கு நேரம் கழித்து போக ஆரம்பித்த நாட்கள்.

டிஸ்கி : சரி விடுங்க.மெக்ஸிகன் இயக்குனர் பாணியில் எழுதிய பதிவு. வரிசைப்படுத்தி படித்து கொள்ளவும்.

ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி

சாருவின் தளத்தில் நான் எழுதிய கிசுகிசு வெளியான சமயம்.காலையில் என் ஹிட்ஸ் கவுண்டர் ஆயிரத்தில் காட்டிக் கொண்டிருந்தது.நம்பவே முடியாமல் வேறு ஏதோ வலைப்பூக்கு வந்து விட்டேன் என்று நினைத்து மூடி மறுபடியும் திறந்து பார்த்தேன்.அப்போதும் அதே எண்ணிக்கையை விட ஒன்று அதிகமாக காட்டி உண்மை என்று சொல்லியது.தீடிரென் இருந்த பாலோயரில் ஒருவரை காணவில்லை.தேடிப் பிடித்து கண்டுப்பிடித்து அழைத்து வந்தேன்.கொஞ்சம் மனசுக்கு வருத்தமாக இருந்த நாள்.பதிவர்களுடன் நெருங்கிய நாட்கள்.

2010 ஏதோ ஒரு மாதம் பத்தாம் தேதி.

பதிவுலத்தை விட்டு தற்காலிகமாக விலகப் போகும் நாட்கள்.(ஐ ஜாலி..).மூன்று நாட்களுக்கு ஒரு பதிவு வரும் நாட்கள்.அல்லது ஒரு நாளைக்கு மூன்று பதிவு வரும் நாட்கள்.(அதானே பாத்தேன்)

ஜூன் மாதம் பத்தாம் தேதி

என் புருஷனும் அரசாங்க உத்தியோகம் பார்க்கிறார் என்பது மாதிரி உரையாடல் போட்டிக்கு கதை எழுதி அனுப்பினேன்.நர்சிமின் ஒரு பதிவை பக்கத்தில் திறந்து வைத்து கொண்டு காற்கோளையும்,மேற்கோளையும் பார்த்து பார்த்து முற்றுப்புள்ளி வைத்து என் கதையை நானே படித்து நானே பின்னூட்டமும் போட முயன்ற நாட்கள்.சரியான அலைவரிசைக்கு மாற்றும் போது ஏற்படும் இரைச்சல் மாதிரி இருந்தது.

செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி

ஏற்கனவே வடகம்,கூழ்வத்தல் என்று எழுதி பல்ப் வாங்கியதால் துவையல் என்று பெயர் மாற்றி எழுத தொடங்கினேன்.அலெக்ஸா பார்க்க தொடங்கிய நாட்கள்.மே மாதம் பார்க்கும் போது நான் 44 லட்சத்தில் இருந்து புழுங்கி கொண்டிருந்தேன்.யாரையாவது முந்த வேண்டும் என்று டார்க்கெட் செட் செய்து கொண்டு கொலை வெறியாக பதிவு போடத் துவங்கிய நாட்கள்.பத்து லட்சத்துக்குள் வந்து கொண்டிருந்தேன்.கவிதை,கவுண்டமணி-செந்தில்,உன்னைப் போல் ஒருவன் என்று கும்மியடித்து ஒய்ந்த நாட்கள்.இரண்டு முதல் மூன்று பாலோயர்கள் காலி.கண்டுப்பிடிக்க முடியவில்லை.மனது அதற்கெல்லாம் பழகியிருந்தது.பிடிப்பதும் பிடிக்காததும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தான் இருக்கிறது என்று உணர்ந்த நாட்கள்.

2010 ஜனவரி மாதம் பத்தாம் தேதி.

இதுவரை எழுதியதற்கு நண்பர்கர்களைத் தவிர என்ன கிடைத்தது என்று யோசித்த தருணத்தில் பிறந்த நாள் பரிசாக கிடைக்கப் போகும் ஒரு அங்கீகாரத்திற்காக தற்காலிக விவாகரத்தைத் தள்ளி வைத்த நாட்கள்.இன்னும் அடையாத ஒரு லட்சியம் அதை நிறைவேற்ற போகும் நாட்கள். நூறாவது பதிவில் இருந்த எழுத்துப் பிழைகளை எல்லாம் திருத்த உதவிய நாட்கள்.நூறாவது பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன்.பாரபட்சம் இல்லாமல் எல்லோரையும் கலாய்க்க வேண்டும்.

Tuesday, December 29, 2009

அவதார் படத்திற்காக தமிழ்ப்படத்தின் கருவை அப்பட்டமாக உருவினார்களா

டைட்டானிக் படம் எடுத்த பிறகு பனிரெண்டு ஆண்டுகள் கழித்து அவதார் படம் எடுத்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.1994ம் ஆண்டே இந்த யோசனை அவருக்கு இருந்தாலும் அப்போது உள்ள தொழில் நுட்பங்களின் உதவி சாத்தியம் இல்லாத காரணத்தால் அதை கொஞ்சம் தள்ளி வைத்தார்.அது மாதிரி ஒரு படத்தை எடுக்க யாராவது முயற்சி செய்தார்களா என்று உலகம் முழுக்க வெளியான படங்களை பார்க்க தொடங்கினார். அதற்கே நேரம் சரியாக இருந்த காரணத்தால் எந்த படத்தையும் இயக்க ஒத்துக் கொள்ளவில்லை.டெர்மினேட்டர் மூன்றாம் பாகம் அவர் இயக்க மறுத்த காரணத்தால் படுதோல்வி அடைந்தது. ஆனால் அவர் தேடல் மட்டும் முடியவடையவில்லை.முடிவில் அவதார் படம் எடுப்பது சாத்தியம் என்று நிரூப்பித்து காட்டியது ஒரு தமிழ்ப்படம்.அதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்.மீள்வே கொஞ்ச காலம் பிடித்தது.ஆனால் இன்று தமிழ் நாட்டு மக்கள் அவதார் படத்தை வாயை பிளந்து பார்த்தாலும் இதனுடைய மூலப்படத்தை காலில் போட்டு மிதித்தார்கள்.அந்த படம் வெளியான நேரத்தில் அதை புரிந்து கொள்ளாமல் போய் விட்டார்கள்.

அப்படி அவர் பார்த்த படம் ரஜினிகாந்த் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான பாபா படம் தான்.இதில் இருந்த மைனஸ்களை(தெரியாமல் எழுதி விட்டேன்.உடனே ஓட்டுக் குத்த ஓட வேண்டாம்.) எல்லாம் எடுத்து விட்டு ப்ளஸாக மாற்றி எடுத்த படம் தான் அவதார்.

படத்தின் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்..

பொறுப்பில்லாத பையன் வீட்டில் இருந்தால் அது ஒரு ஊனம் தான்.ஆனால் அவதாரில் நாயகனுக்கே ஊனம்.

இங்கு காதலை துறந்தவுடன் இமயமலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.ஆனால் அங்கு கிரகத்திற்கு போனவுடன் நாயகனுக்கு ஒரு காதல் பிறக்கிறது.

இமயமலையில் மகாஅவதார் இருக்கிறார்.சம்ஸ்கிருதம் தான் மொழி.அதிலிருந்து அடித்த பெயர் தான் அவதார்.இங்கு புதிதாக ஒரு மொழி இருக்கிறது.எல்லோரும் சேர்ந்து வேண்டிக் கொண்டால் உயிர் பிழைத்து விடுகிறார்கள்.பாபாவில் ரஜினியை எரிக்க பார்ப்பார்கள் அவர் பிறகு தப்பி விடுவார்.

வேற்று கிரகத்திற்கு வித்தியாசம் காட்ட வேண்டுமே - வினோத மிருகங்கள்,பறக்கும் மலை எல்லாம் 3டியில் காட்டப்படுகிறது.

பாபாவில் அவர் பார்க்க முடியாத வெளிச்சத்தில் இருப்பார்.உடனே அதை மாற்றி கிருஷ்ணரில் நிறமான நீல நிறம் நவி கிரகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இதுக்கு மேல சொல்ல ஒண்ணும் ஒரு ஹாலிவுட் படத்திற்கு ஒரு தமிழ்ப்படம் தான் முன்னுதாரணம் என்று தெரிந்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இப்படி நான் எழுதப் போறேன் என்று சொன்னவுடன் நிறைய நண்பர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.காரணம் பாபா படம் இன்னொரு முறை பார்த்து விட்டார்களோ என்று ஐயம் வருகிறது.

அதனால் அவதார் பார்க்கும் முன் பாபா பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.குசேலன் படத்தை வைத்து ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படம் எடுக்க முயற்சி செய்கிறாரா என்று ஆராய்ந்து விட்டு சொல்கிறேன்.எதற்கும் குசேலன் படத்தையும் சேர்த்து பார்க்கவும்.பின்ன நான் பெற்ற இன்பம்....

Monday, December 28, 2009

துவையல் - காமெடி ஸ்பெஷல்

நான் ஒரே ஒரு நாள் அதுவும் ஞாயிறு மட்டும் தான் வரவில்லை.அதற்குள் பதிவுலகம் ரத்தப் பூமியில் மிதக்கிறது.இது எப்படி இருக்கிறது என்றால் நாடோடிகள் படத்தில் டீக்கடை ஆரம்பித்து ஐந்தே நிமிடத்தில் வாழ்விழந்த வாலிபர்களுக்கு வாழ்வளித்த அண்ணன் சின்னமணி அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.சின்ன மணி மாதிரி அந்த பதிவும் ஒரு உச்சக்கட்ட காமெடி பீஸ்.ரொம்ப முக்கியத்துவம் குடுத்தால் மனச்சோர்வு தான் மிச்சம். நானும் படிச்சி தொலைத்து விட்டேன்.அதனால் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு மாதிரி சொல்லிட்டு கிளம்புறேன்."நற்குடிகள் என்றுமே தாங்கள் நற்குடிகள் என்று பிரகடனம் செய்வதில்லை..".நானும் உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு ஆதரவாக மூன்று விமர்சனம் போட்டேனே.இதை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறதா என்று தெரியவில்லையே.(காமெடி சொல்லிட்டு சீரியஸாக கும்மியடிக்கிறதே வேலையா..).இனி ஞாயிறு கூட வந்து யாரும் இல்லாத கடையில் டீ ஆத்த வேண்டும்.உரிமை இருக்கு நான் அந்த வசனத்தை குறிப்பிட்டு நல்லாயில்லை என்று சொன்னேன்.

"அதான் ரெண்டு இருக்கே.." இந்த வசனத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை..இது வசனம் எழுதியவருக்கு உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் ஒன்றை ஒருவன் கொன்று விடுகிறான் என்று வைத்து கொள்வோம்..அதான் மிச்சம் ரெண்டு இருக்கே என்று சந்தோஷமாக இருப்பீர்களா..

யூத் படத்தின் காமெடி பார்த்துக் கொண்டிருந்தேன்.விவேக் சொல்லிக் கொண்டிருந்தார்."எம் பேரு கருத்து கந்தசாமி..ஷார்ட்டா கே.கே என்று கூப்பிடுவார்கள்..".என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.காரணம் சாரு,ஞானி சண்டை.சுருக்கி கூப்பிட்டால் எப்படி கூப்பிட வேண்டும் என்று பெயர் சொல்லி சாருவை ஞானி அழைக்க,சாரு கோபத்தில் கொத்து புரோட்டா போட, சாரு ஞானியின் மனுஷ்யபுத்திரன் பற்றி சொன்ன கருத்துகளால் ஞானியை கிழித்து தோரணம் கட்ட ஞானி அதை பற்றி ஒன்றுமே சொல்லாமல் எல்லோரும் தெரிந்த விஷயங்களைத் தான் சொல்கிறார்.கருத்து கந்தசாமி ஞாபகம் தான் வந்தது.யாராவது நமக்கு அந்த பட்டப்பெயரை வைத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து கிராமத்தில் இருக்கும் போது முந்திக் கொண்டு அந்த பெயரை மற்ற பையங்களுக்கு வைத்து விடுவோம்.அதை தான் ஞானியும் செய்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

நடிகை டெமிமூர் தன்னை விட பதினைந்து வயது குறைவான ஆஸ்டன் கட்சரை மூன்றாவதாக மணந்த போது ஞாபகம் வந்த காமெடி ஏபிசிடி படத்தில் வடிவேல் சொல்வார் - "உன்னை விட லீடிங்கில் இருக்கு.." ஆஸ்டன் கட்சருக்கு அது முதல் திருமணம்.

இன்னொரு காமெடி என் வாழ்க்கையிலே நடக்கும் என்று நானே எதிர்பார்க்கவில்லை.ராத்திரி ஒரு மணிக்கு தண்ணி வராமல் பைப்பைத் திறக்க கிட்டத்தட்ட உடைந்த நிலையில் போக்கிரி வடிவேலு மாதிரி நின்றுக் கொண்டு ஒரு வழியாக அடைத்து முடித்தேன்.

நேத்து தான் கொஞ்சம் ஒழுங்காக பந்து போட்டதாக ஞாபகம்.அதற்குள் பிட்ச் சரியில்லை என்று சொல்லி விட அடப்போங்கப்பா.தம்பி இன்னும் டீ வரல மாதிரி பீல் பண்ணி சொல்லாமல் ஜாலியாக நல்லா தூங்கினேன்.இதுவே அவர்கள் அடி வெளுத்திருந்தால் நம்ம ஆளுங்க சொல்லியிருப்பாங்க - வட போச்சே.

நா ஆட்டோகிராப் படம் பார்த்து விட்டு வெறுத்து விட்டேன்.ரவி தேஜா ஏன் இப்படி.அடுத்து தொடர்ந்து நாடோடிகள் தெலுங்கு ரீமேக்கான சம்போ சிவசம்போ பார்த்து விட்டு சுருண்டு படுத்து விட்டேன்."நல்லா தானே போய்கிட்டு இருந்தது.." கஞ்சா கருப்பாக சுனில் என்று நினைக்கிறேன். "இப்பவே கண்ணை கட்டுதே..".சமுத்திரகனியிடம் சொல்ல வேண்டும் - "நீங்க ஆணியே ..........................." ஆமா அதே தான்.

இதை படித்து விட்டு யாரும் வடிவேலு போல உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் அப்படி சொல்லி விட்டு கண்ணை குத்திக் கொள்ள வேண்டாம்.குத்த வேண்டும் என்றால் பதிவுல ஓட்டு குத்துங்க.(சொல்லாமலே மைனஸ் குத்தி விளையாடுவாங்க..இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே)

விட்டத்தை பார்த்து தூங்கினா எவ்வளவு சொகம்மா இருக்கு அதனால டிஸ்கி இல்ல.

Sunday, December 27, 2009

கவனிக்கப்படாமலே போன சில தமிழ்(ப்)படங்கள்

சில நல்ல தமிழ்ப்படங்கள் கவனிக்கப்படாமலே போய் விடுகிறது.ஆங்கிலப் படங்களை சுட்டு இது புது மாதிரியான முயற்சி என்று சொல்பவர்களுக்கு மத்தியில் இது மாதிரி படங்கள் எடுப்பதே பெரும் முயற்சி தான். தனி மனிதனாக சண்டையில் இருவரை கூட சமாளிக்க முடியாத நம்மால் நூறு பேரை பறக்க விடும் நடிகர்களுக்கு மத்தியில் இது மாதிரி படங்கள் வருவதே பெரும் முயற்சி தான். கரகாட்டகாரன் மாதிரியான படங்கள் இன்றும் பார்க்க நன்றாக இருந்தாலும் கிராமத்தில் கரகாட்டக்கம் ஆடும் பெண்ணின் ஜாக்கெட்டில் குத்த போராடும் கைகளின் எண்ணிக்கைகள் தான் உண்மையான நிதர்சனம்.அப்படி எல்லாம் உண்மைகளை கொஞ்சம் கூட காட்டாத படங்களின் மத்தியில் இது மாதிரி உண்மையை சொல்லும் படங்களின் வெற்றி என்பது பெரும் முயற்சி தான்.அப்படி வந்த படங்கள் சில.

முகம் - நாசர்,ரோஜா,தலைவாசல் விஜய்,விவேக்,மௌனிகா நடித்த படம்.வெளியான உடனே இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன்னில் ஒளிப்பரப்பான படம். அவலட்சணத்தின் மொத்த உருவமாக இருக்கும் நாசர் பார்ப்பவர்களிடம் அசிங்கப்படுகிறார்.சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு அசிங்கப்படுத்தப் படுகிறார். முகமூடி கிடைத்து நெருப்பின் அருகில் வைத்து பார்க்கும் போது அது முகத்தில் ஒட்டிக் கொள்ள அவர் அழகாக மாறுகிறார்.விளைவு ஒரு நாயகன் உதயமாகிறான்.ரோஜா உண்ணாவிரதம் இருந்து கைப்பிடிக்கிறார் அழகிய முகத்திற்காக.ரசிகர்கள் கையில் நாசரின் முகத்தை பச்சை குத்திக் கொள்கிறார்கள்.கணவரின் கையில் இருக்கும் பச்சையை பார்த்து விட்டு மௌனிகா தடுமாறுகிறார்.உண்மையான முகத்திற்கு ஏங்கும் நாசர் முகமூடியை கழற்ற,பழைய முகத்தோடு பரவசப்பட,ரோஜா கதவை தட்ட,அவசரத்தில் முகமூடி ஜன்னல் வழியாக வெளியே விழுகிறது.ரோஜா உண்மையான முகத்தை பார்த்து அலற,வீட்டில் இருப்பர்கள் அடிக்க வெளியே வந்து விழுகிறார் நாசர்.திரும்ப முகமூடியை மாட்டிக் கொள்ள ரசிகர்களின் ஆரவாரத்தோடு படம் நிறைவடைகிறது.

படத்தின் கல்லா கட்டவில்லை.காரணம் இந்த படத்தில் குத்தாட்டம் இல்லையோ.

தயா - ஈ படத்தின் முன்னோடி.யாருக்குகாவும் சமரசம் செய்யாத நாயகன்.பிராமணரின் வீட்டு பூஜையறையில் கன்றுக்குட்டியை வெட்டி அறிமுகம் ஆகும் நாயகனாக பிரகாஷ்ராஜ். திருத்த பார்த்து முடியாமல் ஏமாந்து போகும் நாயகியாய் மீனா.பள்ளி நடத்தும் லட்சுமி.சின்னப் பெண்ணைக் கெடுத்து விட்டு சிறைக்கு சென்று விட்டு திரும்பிய அவரின் கணவராக ரகுவரன்.லட்சுமியை கொல்ல பிரகாஷ்ராஜை அனுப்பும் ரகுவரன் அதற்காக நல்லவனாக நடிக்க சொல்கிறார்.நல்லவனாக நடிக்கும் பிரகாஷ்ராஜை நம்பும் லட்சுமி, அதை நம்பாத மீனா.லட்சுமியின் நம்பிக்கையை பெற்று அவருக்கு பின் பள்ளியை நடத்த போகும் வாரிசாக ஆகும் நேரத்தில் லட்சுமிக்கு விஷம் வைக்கிறார்.மருத்துவமனையில் உண்மை தெரிந்து எல்லோரும் அடித்து துரத்த சுடுகாட்டில் சுயபரிதோதனை செய்து கொள்ளும் பிரகாஷ்ராஜை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் லட்சுமி என்று இறுதி காட்சியில் சொதப்பிய படம்.பிரகாஷ்ராஜ் தயாரித்த முதல் நேரடி தமிழ்ப்படம்.(உடனே தப்பு என்று யாரும் சொல்ல வேண்டாம்.அந்தப்புரம் தெலுங்கு படம்.தமிழில் பார்த்திபன்,மன்சூர் அலிகான் காட்சிகள் மட்டும் மீண்டும் படமாக்கப்பட்டது).இந்த படத்தை ஜெயா டிவியில் பார்க்கலாம்.

நாம் - பிரகாஷ்ராஜின் அடுத்த தயாரிப்பு.பிரகாஷ்ராஜ்,இளவரசு,கலாபவன் மணி,பிரகாஷ்ராஜின் மைத்துனர் ஜெயவர்மா நடித்த படம்.பிரகாஷ்ராஜ் தீவிரவாதி.அவரை பிடிக்க அலையும் கலாபவன் மணி. வாழ்க்கையில் முன்னேற முடியாமல் அதன் போக்கிலும் போகவும் பணம் தேவை படும் நாலு நிஜமான யூத் + ஒரு பெண்.போலீஸ் வேலையில் சேர லஞ்சக் காசு இல்லாமல் தவிக்கும் முன்னாள் காவலரின் மகன்.அவர்களின் தேவை ஐம்பது லட்சம்.அதற்காக பிரகாஷ்ராஜை கடத்துகிறார்கள்.எதற்கெடுத்தாலும் பயப்படும் ஒரு பையன்.(தமிழில் மிகப் பெரிய காமெடியனாக வந்திருக்க வேண்டியவர் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை.) கடத்தி கடத்தல் கும்பலிடம் பணம் கேட்கிறார்கள்.வெடிகுண்டோடு பணமும் தருகிறார்கள். மனம் மாறி ஒவ்வொருவராக இறங்கி கொள்ள வண்டி வெடிக்கிறது.கலாபவன் மணி பிரகாஷ்ராஜை கைது செய்கிறார்.வீட்டுக்கு சோர்வோடு வருபவர்கள் வீட்டில் ஒரு மூட்டையைப் பார்த்து பயந்து பதுங்குகிறார்கள்.பயம் தெளிந்து எடுத்து பார்த்தால் ஐம்பது லட்சம் பரிசு பணம்.இந்த படத்தை ராஜ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

அன்புடன் - அருண்குமார் என்ற அருண் விஜய்,ரம்பா,கறுப்பாக இருக்கும் நிஜமான நாயகி.நாயகனை காதலிப்பதாக கடிதம் எழுதும் நாயகி அதை நம்பி அவளைத் தேடி அலையும் நாயகன். பேருந்தில் இருக்கும் எல்லோரிடமும் கேட்டு விட்டு ஒரு பெண்ணை மட்டும் கேட்காமல் நிராகரிக்கிறார்கள். நாயகியின் சர்வ லட்சணங்களையும் உடைத்த படம்.நாயகன் அசிங்கமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளும் தமிழ் சினிமா பார்க்கும் தமிழ் சமூகம் இந்த படத்தை நிராகரித்ததில் எந்த வியப்பும் இல்லை.கடைசி வரை நாயகியின் முகம் பார்க்காத நாயகன் அவள் முகம் பார்க்க சுடுகாட்டுக்கு ஓடுகிறான்.அங்கு அவள் எரிவதை பார்க்கிறான்.இதை அப்படியே அம்மா என்று மாற்றினால் தனுஷ் நடித்த கன்னட ரீமேக் கிடைக்கும்.இதையும் ராஜ் டிவியில் பார்க்கலாம்.

ஆறு தான் எனக்கு ராசியான நம்பர் என்பதால் இன்னும் இரண்டு வித்தியாசமான படங்கள்.

பிடிச்சிருக்கு - அசோக்,விசாகா நடித்த்து.வித்தியாசமான காதல் படம்.ஊர் சுற்றாமல் பொறுப்பாக இருக்கும் ஒருவனுக்கும் கல்லூரி நாயகிக்கும் வரும் காதல்.இடைவேளை வரும் திரைக்கதை ஈ படத்திற்கு பிறகு ஒரு வித்தியாசமான திரைக்கதை.இடைவேளைக்கு பிறகு அ..ய்..யோ அ..ம்..மா. (மொக்கை என்று சொல்லவில்லை தேவையில்லாத அளவுக்கு இழுத்து விட்டார்கள்.) தூத்துக்குடியில் ஆரம்பித்து பூனாவில் முடிகிறது. மோதலில் ஆரம்பித்து காதலில் விழும் இருவரின் கதை.படம் கலைஞர் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.நாயகி பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார். (விவெல் சோப் விளம்பரத்தில் பளிச்சென்று ஆகும் பெண்)

ஆழகிய அசுரா - வித்தியாசமான ஒன்லைன்.நாயகியை காதலிக்கும் நாயகன் அவள் முன் அவள் தோழியை காதலிப்பதாக நடிக்கிறான்.அவள் போலிகளை மிரட்ட சேர்த்து வைக்க சொல்லி அவளை மிரட்டி அவளிடம் நெருங்குகிறான்.அவள் அவனை நல்லவன் என்று தெரிந்து கொள்கிறாள். நாயகியை காதலிப்பதாக சொல்ல அவள் மறுத்து நிச்சயதார்த்ததிற்கு தயாராகிறாள்.பிறகு என்ன நடந்த்து என்று கொட்டாவியோடு சொல்லும் கதை.அவ்வ்வ்வ்.கதையின் நாயகிக்காக பார்த்த படம்.அவளுடைய உண்மையான பெயரும்,கதாபாத்திரத்தின் பெயரும் என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்தவர்களின் பெயர்.அதுக்காவே இந்த படம் பார்த்தேன்.கே டிவியில் இந்த படத்தை பார்க்கலாம்.சங்கீதாவின் (ஆமா பிதாமகன் சங்கீதா) கணவர் பாடகர் கிருஷ் நடித்துள்ள படம்.நாயகனின் நண்பனாக நடித்துள்ளார்.

டிஸ்கி - ரமணா,உமா,சீதா நடித்த ரைட்டா தப்பா என்ற படத்தை இதுவரை பார்க்கவில்லை.வித்தியாசமான கதை.ஈவ்டீசிங்கால் பாதிக்கப்பட்டவர்களின் கதை.வந்ததே தெரியவில்லை.தெரிந்தவர்கள் சொல்லவும்.படம் நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.அனேகமாக ஜீ டிவியில் போடுவார்கள் என்று நினைக்கிறேன்.

இதில் குறைந்த பட்சம் இதில் ஒரு நான்கு படத்தையாவது பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.நாம் எந்த படத்திற்கு முக்கியத்துவம் குடுக்கிறோம் என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.இந்த படங்களின் தோல்விக்கு காரணம் என்ன தொப்புள் காட்சிகள் நிறைய இல்லாமல் போனதா.இல்லை அந்தரத்தில் பத்து பேரை பறக்க விடாததா.இல்லை ஆங்கிலப் படத்தை அடித்து விட்டு ஒரு முயற்சி என்று காதில் பூ சுத்தாமல் இருப்பதா.இல்லை உண்மைக்கு வெளியே நிற்பதாலா.
நல்ல படங்கள் என்று நான் தலைப்பில் போடவில்லை.காரணம் அப்படி சொல்ல இந்த படங்களை நான் திரையரங்குகளில் பார்க்கவில்லை.அப்படி சொல்ல அருகதை எனக்கு இல்லாத காரணத்தால் அந்த வார்த்தை விடுபட்டு விட்டது.

Saturday, December 26, 2009

சாணிக்குழி - கதை உருவான விதம்,சிமெண்ட் தரையில் உருளும் மிருகம்

இந்த கதைக்கு எருக்குழி அல்லது சாணிக்கிடங்கு என்று தான் பெயர் வத்திருக்க வேண்டும்.சின்னதாக இருந்தால் அது எருக்குழி.பெரிய பண்ணையாக இருந்தால் அந்த வீட்டில் சாணிக்கிடங்கு இருக்கும். இரண்டு வழக்கில் இருந்த சொல்லையும் திருடி புது பெயராக வைத்து விட்டேன்.எனக்கு பச்சை நிறம் தான் பிடிக்கும்.சாணி மெழுகிய வீடு கரும் பச்சையிலும் இளம் பச்சையிலும் கலந்து புது பச்சை நிறத்தில் இருக்கும்.பிள்ளையார் பிடித்து செம்பருத்தி பூவை வைக்க கூட பயன்படுத்துவோம்.

கதை ஆயிரத்தில் ஒருவன் மாதிரி சில நூற்றாண்டுகளுக்கு முன் செல்லப் போகிறது.பழைய காலத்தில் பெண்களுக்கான உரிமை எப்படி இருந்தது என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பெண்களுக்கான மறுமணம் சரி என்பதையே பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தான் ஏற்றுக் கொண்டோம். சமமான உரிமைகள் உண்டா என்று பார்த்தால் உணவில் கூட நாற்பது ஆண்டுகளுக்கு முன் கிடையாது.ஆண் பிள்ளைகளுக்கு முழு முட்டையும்,பெண் பிள்ளைகளுக்கு அரை முட்டையும் தான் கொடுத்தார்கள்.

அப்படி பணக்கார வீடுகளில் ஒரு பெண் விதவை ஆகி விட்டால் பிறகு எதிலும் பங்கேற்க முடியாது.அல்லது அந்த ஆணிடம் ஏதோ பிடிக்காமல் மனம் ஒப்பாமல் இருந்து அந்த வீடுகளில் வேலை செய்யும் வேற்று ஆண்களிடம் தொடர்பு ஏற்பட்டாலோ அல்லது வேலை செய்யும் ஆண்கள் தெரியாமல் பகடி செய்து விட்டாலோ ரத்தம் வரும் சாட்டையால் அடித்து வீட்டின் பின்புறம் இருக்கும் பத்தடி ஆழ சாணிக்குழியில் தள்ளி விட்டால் ரத்த இழப்பால் மயக்கம், கை கால்களில் கட்டு வேறு.சாணியில் உள்ள அமிலம் காயத்தில் பட்டு தாங்க முடியாத எரிச்ச்ல் மற்றும் மூச்சுத்திணறல் எல்லாம் சேர்ந்து துடித்து யாரும் பார்க்காமலே உயிர் அடங்கி விடும். பெண்ணை காதலித்து விட்டு வீட்டை விட்டு ஓட முயற்சி செய்து மாட்டிக் கொண்டால் இன்னும் பல நடக்கும்.அதில் ஒன்று தான் சாணிப்பால் மற்றும் சாணி அபிஷேகம்.

இப்படி ஒரு சித்ரவதை பிண்ணணியில் ஒரு கதை எழுத ரொம்ப நாளாகவே ஆசை.காதலும் அடிதடிகளும் கலந்தே இருந்த முன்னோர்களின் வாழ்வு முறை என்னைடம் வரும் போது காமமும்,பயமும் கலந்து கழிகிறது.

கதையில் வேகம் இருக்கிறது என்று துபாய் ராஜாவும்,லோகுவும் சொன்னார்கள்.ஒத்துக் கொள்கிறேன்.இருக்கும் இடம் அப்படி இங்கு வேகம் தான் பிரதானம்.நான் வேகமாக நகராவிட்டால் என் மேல் ஒரு கூட்டம் நடந்து போகும்.

பள்ளி மாண்வனுக்கு குடிக்க ஊத்திக் கொடுக்கும் சித்தப்பா - இது மாதிரி நடந்த உண்மை சம்பவங்கள் ஏராளம்.தீடிரென ஆடு மேய்க்கவோ.மாடு மேய்க்கவோ ஆள் இல்லாமல் போனால் படிப்பு நிறுத்தப்படும்.மீண்டும் அடுத்த வருடம் பள்ளிக்கு போவார்கள்.பனிரெண்டாம் வகுப்பைத் தொடும் போது இருபது வயதாகியிருக்கும் சிலருக்கு.பிறகு படித்த உடன் கல்யாணம் தான்.கள் இறக்க துணைக்கு பதினாறு வயது பையனை கூப்பிட்டு சென்று பனையில் ஏறிக் குடிக்கும் போது சமயம் பெரும்பாலும் இரவு நேரமாகயிருக்கும்.துணைக்கு சென்றவன் கெட்டுப் போய் பின் அவனே பனை ஏறுவான்.அதனால் குடியும் சாதாரணம் தான்.இந்த கதையில் வரும் மரணங்களைத் தவிர எல்லாமே உண்மை சம்பவங்கள் தான்.

நிறைய விஷயத்தில் நான் என் அம்மா மாதிரி.சின்ன வயதில் சாணி கூட்ட சொன்னால் அம்மா,மாமா எல்லாம் காளை மாட்டு சாணியை தான் எடுப்பார்களாம்.காரணம் அது கையில் ஒட்டாது.நானும் காளை மாட்டு சாணத்தை மட்டும் தான் தொட்டு இருக்கிறேன்.வீடு மெழுகவும் அதை தான் பயன் படுத்துவார்கள்.சாணி அபிஷேகம் நடத்த உதவுவது பெரும்பாலும் எருமை சாணிகளாக இருக்கும்.

சின்ன வயதில் நண்பனுடன் போட்டி போட்டுக் கொண்டு குறுக்கு வழியில் வீட்டுக்கு செல்ல சுவர் ஏறிக் குதித்து ஓடி வரும் போது வழியில் எருக்குழி இருந்தது.காய்ந்து இருப்பது போல் தெரிந்தது.நானும் குதித்து விட்டேன்.ஒரு கால் மட்டும் உள்ளே மாட்டிக் கொண்டது. நான் வெளியே வர உதவி செய்தவன் இன்று உயிரோடு இல்லை.அப்படி இருந்த நான் போன வருடம் தெரியாமல் சாணியில் கால் வைத்து விட்டு - "சிட்டிக்குள்ள எவண்டா மாடு வளர்க்கிறது.." என்று கத்தினேன்.நான் இப்போது சிமெண்ட் தரையில் உருளும் மிருகமாகி விட்டேன்.

அவனுக்காக இந்த கதை.

Friday, December 25, 2009

ஆயிரத்தில் ஒருவனும்,தமிழ்படமும்

நான் எவ்வளவு தான் பார்க்கக் கூடாது என்று போராடினாலும் அதை பார்க்க நேர்ந்து விடுகிறது.ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவை பார்த்து விட்டு வந்த கோபத்திற்கு அளவு இருந்தது.

செல்வராகவன் - தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என்று நான் நினைக்கும் இயக்குனர்களில் ஒருவர்.விழாவில் அவர் பேசியதில் இருந்து சில வார்த்தைகள்."சினிமாவை கோலிவுட்,பாலிவுட்,ஹாலிவுட் என்று பிரித்து பார்க்கக் கூடாது..ஹாலிவுட் தரம் என்று ஒன்றும் இல்லை.இது ஒரு முயற்சி.இது போல முயற்சி வெற்றி பெற மேடையில் இருக்கும் பெரியவர்கள் எல்லாம் உதவ வேண்டும்.அப்படி உதவினால் தமிழ் படத்தின் தரத்திற்கு இணையான ஆங்கிலப் படங்கள் என்று சொல்லும் காலம் வரும்..இன்னும் இருபத்தியிரண்டு துறைகள் வேண்டும் அப்போது தான் இது சாத்தியமாகும்"

அடுத்து பேசிய வைரமுத்து - "நாம் இது போல நாலு படம் எடுத்தால் போதும் ஹாலிவுட் நம்மிடம் பிச்சை வாங்கும்.."

இரண்டு பேர்களுக்கும் என் பதில் - அவர்கள் கதைகளைக் கொண்டு நடிகர்களை உருவாக்குவார்கள்.நாம் நடிகர்களுக்காக கதையை வளைப்போம். முன்பாவது கதைக்கு தான் பஞ்சம்.இப்போ படத்திற்கு பெயர் வைக்கவே திண்டாடுகிறோம்.தமிழில் வார்த்தைகள் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். அதற்கு உதாரணமான பெயர்கள் தான் ஆயிரத்தில் ஒருவன்,குட்டி. இது மாதிரி முயற்சிகள் தவறேயில்லை.நாம் புதிதாக யோசித்து எடுத்தால் தான் முயற்சி வெற்றி பெறும். அதை விட்டு விட்டு மம்மியையும்,மம்மி ரிடன்ஸ் படத்தையும் கலந்து எடுத்து இன்னொரு நாயகனை (காட்பாதர் இரண்டு பாகங்கள் கலந்து அடித்தது தான் நாயகன்) உருவாக்க வேண்டாம்.ஏமாந்து வாயை பிளக்க இது 1987ம் வருடமும் இல்லை. கிங் சாலமன்ஸ் மைன்ஸ் படத்தை போல எடுத்து விட்டு இது புது முயற்சி என்று சொன்னால் கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கிறது. அவ்ர்கள் தரம் என்றுமே நம்மை விட இருபது முதல் முப்பது ஆண்டுகள் முன்னால் தான் உள்ளது. அதற்கு உதாரணம் அம்மா,பெண்ணும் ஒருவனையே காதலித்து ஏமாந்து போகும் படம் தமிழில் முதல் முறையாக வந்தது 1975 ம் ஆண்டு.(அவள் ஒரு தொடர்கதை.)இது மாதிரி கதைகளை அவர்கள் 1958ம் ஆண்டே தொட்டு விட்டார்கள்.நாம் அவர்கள் படத்தை,அவர்கள் கற்பனையை திருடாமல் இருந்து வித்தியாசமான படம் கொடுத்தால் ஹாலிவுட் திரும்பி பார்க்கும்.ஸ்லம்டாக் மில்லினியர் படத்தை பத்து தடவை பார்த்து ஒரு திரைக்கதையின் அமைப்பு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இல்லை எனக்கு கற்பனை அந்த அளவுக்கு வேலை செய்யாது என்று சொன்னால் இப்படி பேசுவதை நிறுத்தி விடுங்கள்.

செல்வராகவன் என்னும் நல்ல இயக்குனர் இப்படி பிரமாண்டம் என்ற புதைக்குழிக்குள் விழுகிறார் என்று நினைக்கும் போது வருத்தம் தான் வருகிறது. அவருடைய எல்லா தமிழ் படத்திலும் எதாவது ஒரு கதையில் உலா வரும் பாத்திரம் செத்து போகும்.துள்ளுவதோ இளமை(இவருடைய கதை - கண்ணாடி போட்ட நண்பன்),காதல் கொண்டேன் - தனுஷ்,7/ஜி ரெயின்போ காலனி - சோனியா அகர்வால்,புதுப்பேட்டை - சினேகா.இந்த படத்தில் சாகப் போவது யார் - ரீமா சென்,ஆன்ட்ரியா,அழகம் பெருமாள்.நடனமும் முதலில் யாராவது ஒருவர் மட்டும் ஆடுவார்.பிறகு அந்த கும்பலே ஆடும்.இந்த பாணிகள் எல்லாம் மாறாமல் இருந்தால் வெற்றி இயக்குனர்களாக உலா வந்த விக்ரமன்,ஆர்.வி.உதயகுமார் நிலை தான் ஏற்படும்.

இன்னும் 22 துறைகள் வேண்டும் என்று சொன்னதை நினைக்கும் போது ஒரு கிராமத்து பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.(அறுக்க மாட்டாதவன் இடுப்பைத் சுத்தி முப்பது கறுக்கறுவாளாம்.

கமல் சொன்னது தான் எனக்கு பிடித்திருந்தது - "நேர்மை என்பது அரிதாக இருக்கும் ஆடம்பரம்..".இது மாதிரி படங்கள் வராத மாதிரி பேச்சுகள் வேண்டாம்.(ஹாலிவுட் ஹாலிவுட் தான்.கோலிவுட் கோலிவுட் தான்.)

நான் இண்டியானா ஜோன்ஸ் நாலு பாகங்களையும் பார்க்க முடிவு செய்துள்ளேன்.காரணம் பார்த்தால் எழும் கோபம் மிச்சம்.மேலாக காசும் மிச்சம்.

அடுத்து தமிழ் படம். இந்த மாதிரி ஒரு பெயர் வைக்கவே இத்தனை வருடம் ஆகியுள்ளது.அதற்காகவேஒரு ஷொட்டு.ரஜினி தொடங்கி(சிவாஜி - ரஜினி நடித்த படம்),காக்க காக்க என்று எல்லா படங்களையும் மானாவாரியாக நக்கல் செய்துள்ளார்கள்.

விஜய் இல்லாமலா - ஒப்பனிங்கு சாங்கில் அண்ணனை அடித்து வெளுத்துள்ளார்கள்.2011 முதல்வர் ஆசை,கிழவிகளுடன் முகத்தை தேய்த்து போஸ். இந்த ஒரு நக்கலுக்காகவே இந்த படம் பார்ப்பேன்.

இதே மாதிரி ஒரு படத்தை வேறு யாராவது எடுத்து இருந்தால் விட்டு இருப்பார்களா.இளிச்சவாயன் என்றால் எகிறுவோம்.லொள்ளு சபாவில் பேக்கரி என்று போக்கிரி படத்தை கிண்டல் செய்த காரணத்தால் கொஞ்ச நாள் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.இந்த படத்திற்கு வருங்கால முதல்வர் த்ரப்பில் இருந்து என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

"ஒமகசியா ஓசியாலா..நாக்க மூக்க,டைலாமோ டைலாமோ.." என்று வெத்து வார்த்தைகளை வைத்தே ஒரு பாட்டு.

என்னை கேட்டால் இது தான் ஒரு முயற்சி.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Thursday, December 24, 2009

எம் பர்ஸ் பழுக்கல-வேட்டைக்காரன் ஜாலியோ ஜிம்கானா

வேட்டைக்காரன் படம் பாத்துட்டு அக்கு வேற ஆணி வேற பதிவுலகம் கழட்டியாச்சி.ஆனா உண்மையில் விஜய்யும்,சன் பிக்சர்ஸ் பேனரும் நல்லா கல்லா கட்டியாச்சி. இதுல வெப்துனியா தமிழ் அடிக்கிற கூத்து இருக்கே அய்யோ அம்மா முடியல. சாதாரணமா நல்ல படங்களுக்கு ஒரு பக்க விமர்சனம் எழுதும் வெப்துனியா விஜய் படத்துக்கு மட்டும் ரெண்டு பக்கம்.முழு திரைக்கதையும் எழுதி விஜயை கிண்டல் செய்கிறேன் என்று அட போங்க பாஸ் இழந்த காசை நினைச்சி பாத்ரூம்ல தண்ணியத் திறந்து விட்டு அழுங்க.அத விட்டுப் போட்டு விமர்சனமாம் விமர்சனம். இதுல சன் நியூஸ்ல தொல்லைக்காட்சியில் செய்தி வேற.படத்துல ரத்தக் காயத்தோட தண்ணியில குதிச்சாராம்.வெளியே வரும் போது ரத்தக் காயம் இல்லையாம்.( தண்ணியில விழுந்தா மேக்கப் கலையாதா..) அப்புறம் ஸ்ரீஹரி வீட்டுக்கு போகும் போது ரத்தக்காயம் இருக்குமாம்.(ஆமா திரும்ப மேக்கப் போட்டா இருக்காதா) என்ன சின்னப்புள்ளத் தனமாயில்ல இருக்கு விமர்சனம்.அதுவும் ரெண்டு பக்கம்.முதல்ல படத்தை படம் மாதிரி பாருங்க.நிஜம் மாதிரி பாத்தா இப்படித்தான் ஆகும்.

எப்படியும் சுறா பாக்க போறீங்க.அப்புறம் என்ன நக்கல்.இனிமே ஒரு சட்டம் கொண்டு வந்தா தான் சரியா வரும்.விஜய் படம் பாக்காதவங்க மட்டும் தான் கிண்டல்,கேலி செய்யலாம் இப்படி வந்தா தான் என்னை மாதிரி இருக்கிற ஆளு காட்டுல மழை கொஞ்சமாவது பெய்யும்.

நான் ஏற்கனவே சொன்னது தான் என்னைக்கு சாரு ஆன்லைன்ல விஜய் படம் விமர்சனம் வருதோ அன்னைக்கு தான் என் காசை தார வார்ப்பேன்.அப்படி நடக்கவே போறதில்லை.

என் தம்பி விஸ்காம் படிக்கும் போது திங்களும்,வெள்ளியும் தியேட்டர் வாசலில் தான் நிப்பான்.படம் வந்தவுடனே நான் கேப்பேன் எப்படி இருக்குனு வழக்கம் போல நல்லாயில்ல இப்படிதான் பதில் வரும்.நான் அவன் கிட்ட சொன்னது இது தான் - "எந்த படத்தையும் பத்து நாள் கழிச்சி பாரு.முதல் நாளே பாத்து என்னவாக போகுது..".அதே வார்த்தைகளை தான் உங்களுக்கும் சொல்வேன்.கேபிள் சங்கர் அண்ணன் எப்படியும் விமர்சனம் எழுதுவார். அப்புறம் வேணா பாக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வோம்.

இப்படி மொக்கை படங்களா விட்டு அவங்க உலக பணக்கார வரிசையில் முன்னுக்கு வந்துருவாங்க.விஜய் எம்.பி ஆகி எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கவர்னர் பதவி கிடைக்கும்.உங்களுக்கு - நிறைய விமர்சனம் கிடைக்கும்.

இனி மேலாவது சுறா படம் போது பத்து நாள் கழிச்சி பாருங்க.அப்படியே முதல் நாள் பாத்துட்டு தலைவலி மாத்திரை வாங்காதீங்க.வாங்கிட்டு பாதி காசாவது கிடைக்குமான்னு பதிவு போடாதீங்க.(இந்த வரிகளுக்கும் முன்னால் போட்ட எதிர்பதிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வரப் போற எம் மாமியார் மேல சத்தியம் பண்ணி சொல்றேன்.சத்தியம் கூட சரியா பண்ணத் தெரியலயே)

நான் எவ்வளவோ தடுத்தும் வேட்டைக்காரன் படத்துக்கு போன நைனா அதை சரிகட்ட அவதார் பாத்தாராம்.அவதார் பாத்துட்டு இது நம்ம அம்புலிமாமா கதை ஒரு இந்தியப் படம் என்று சொன்னார். நான் சொன்னேன் வேட்டைக்காரன் ஹாலிவுட் படம் என்று.சரிதானே..

அதனால் சன் பிக்சர்ஸ் குட்டி படம் விடுறாங்களாம். ஒழுங்கா எல்லோரும் ஆர்யா படம் பாருங்க. அப்புறம் பாத்துட்டு குட்டி சரியா ஈனவில்லை.சரியா பேணவில்லை என்று ஏதாவது சொல்லாதீங்க.

அப்புறம் அனுஷ்காவுக்காக தான் படம் பாத்தேன்னு யாரும் சொல்லாதீங்க.நான் நைனா கிட்ட சொன்னது இதுதான்."நீங்க அனுஷ்காவுக்காக படத்துக்கு போகாதீங்க அதுக்கு சூப்பர்னு ஒரு தெலுங்கு படம் இருக்கு.அதை பாருங்க..".அதே மாதிரி அனுஷ்கா ஒண்ணுமே காட்ட இல்ல இல்ல நடிக்கலையாமே.பின்ன நம்மாளு படத்துல எப்படி பிரியங்கா சோப்ராவையும்,பிபாஷா பாசுவையும் காட்டினாங்க என்று யோசித்து பாருங்க.எவ்வளவு பட்டும் நாம திருந்தவே மாட்டோம்.தமன்னாவுக்காக சுறா படம் பாக்க நினைக்கிற எல்லோரும் போய் தெலுங்கு ஹேப்பி டேஸ் பாருங்க.ஓடுங்க.

ஒசியில நாடகம் பாக்கும் போது அது சரியாயில்லாமல் இருந்தால் எப்படி கத்துவோம்..அதுவே காசு குடுத்து மொக்கை படம் என்று தெரிந்தே பாத்துட்டு மொக்கை என்று சொல்வது நல்லாயில்ல.பாக்காம சொல்லுங்க..(இதுக்கு பத்து மைன்ஸ் விழ வேண்டும் ஆண்டவா..)

வேட்டைக்காரன் பாக்காதீங்க அப்படி சொல்லி பார்த்த கார்த்திக் யாரும் கேக்காமல் போன வருத்தத்தில் பதிவுகத்தை விட்டு போக பாத்தாரு.அப்புறம் எழுதாம இருந்தா வேட்டைக்காரன் படத்துக்கு வலுக்கட்டாயமாக இழுத்துட்டு போவேன் என்று சொன்ன பிறகு அவருக்கே புரிந்து திரும்ப வந்து விட்டார்.

அடுத்து ஆயிரத்தில் ஒருவன் பாத்துட்டு கும்மி அடிப்போம். வேட்டைக்காரனை விட்டு விடுவோம்.இல்லன்னா இருக்கவே இருக்கு சுறாவே இப்போ இருந்தே கும்மியடிப்போம்.ஸ்டார்ட் த மியூசிக்.

என் தம்பியும் பாக்கல.அந்த காசை பிரியாணி வாங்கி சாப்பிட்டு விட்டான்.வேட்டைக்காரன் படம் வருவதற்கு முன்னால் நான் எழுதிய விமர்சனம்.அதுவும் நவம்பர் மாசம் இருபத்திமூணாம் தேதி எழுதிய விமர்சனம் உங்களுக்கு. குறிப்பாக முதல் பத்தியும்,கடைசி பத்தியும் படிக்கவும்.நான் சொன்ன மாதிரி பத்து பதிவு எழுதிட்டேன்.நீங்களும் சுறா பாக்காம இருந்தா எத்தனை வட கிடைக்கும்னு பாருங்க.

சுறா பாத்து ஒரு விமர்சனம் வேணுமா இல்ல..பத்து பதிவு போட்டு மைனஸ் வாங்கி பிராபலப் பதிவர் ஆகணுமா நீங்களே முடிவு பண்ணுங்க.

பிரகாஷ்ராஜ் கற்றுத் தந்த பாடங்கள்

உலகத்திலே சிறந்த சுயசரிதை அல்லது வாழ்க்கைப் பதிவு என்று எடுத்து கொண்டால் நிச்சயம் முதல் பத்து இடத்தில் பாபர் நாமா வரும்.பாபரின் சுயசரிதையில் பயணிக்கும் போது(படிக்கும் போது) பதிமூன்று வயதில் இருந்து போர்களத்தில் இருந்து மகனுக்காக சாவது வரை(இந்த பாதிப்பு வெயில் படத்தில் வரும் தம்பியின் உயிருக்கு பதிலாக என் உயிரை எடுத்துக் கொள் என்று கதறும் பசுபதி) நாம் நிறைய இடத்தில் நம்மை எரிக்க வரும் தீக்குள் விரல் விடாமல் தப்பிக்கலாம்.

அப்படி சினிமாவில் ஜெயித்தவர்களில் சிறந்த சுயசரிதை என்று எடுத்து கொண்டால் முதலில் சேரன்,பிறகு பிரகாஷ்ராஜ்.(இந்த வரிசையில் நான் பெரிதும் கொண்டாடும் பாலாவிற்கு கூட இடமில்லை,அது மாதிரி செல்வராகவனுக்கும் இடமில்லை).இந்த வார்த்தைகளை என்றும் சொல்வேன்.அதில் தவமாய் தவமிருந்து படத்திற்கு பிறகு நடந்த சம்பவங்களை எல்லாம் சேர்த்தால் அது என்னுடைய மதிப்பில் இருந்து இறங்கும். அனால் இன்னும் எதை சேர்த்தாலும் பிரகாஷ்ராஜ் பற்றிய மதிப்பு மாறாது.(பொதுவாக திரைப்படத் துறையினரின் பேட்டிகளைத் தவிர்க்க விடுமுறை நாட்களில் கூட அலுவலகத்திற்கு வந்து யாருமே இல்லாத பிரதேசத்தில் டீ ஆத்தியிருக்கிறேன்.காரணம் ஏதாவது சொல்லும் போது கோபம் வந்தால் அடுத்த நாள் பதிவில் அவர் காய்ச்சி எடுக்கப்படுவார்.குறிப்பாக கமல் நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பேன்.அப்புறம் அடி விழும்.ஆனால் இதில் இருக்கும் ஒரே விதிவிலக்கு நிறைய நாட்களாக(வருடங்களாக) பிரகாஷ்ராஜ் மட்டுமே)

அம்மாவை எப்படி பார்த்து கொண்டேன் என்பதில் ஆரம்பித்து இந்த தலைமுறைக்கு காதல் கடிதம் கூட எழுதத் தெரியாமல் இருக்கிறதே என்ற ஆதங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம் - கொஞ்சம் வித்தியாசமான மனிதர் என்று. ஐந்து பக்கம் கடிதம் கொடுக்காமல் கழிவறையில் கிழித்துப் போட்ட நாட்கள் எல்லாம் நினைத்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் தந்தது பிரகாஷ்ராஜ் என்ற குரு ஸ்தானத்தில் நான் வைத்திருக்கும் நபர் தான்.

நண்பன் காதலித்த பெண்ணுடன் தனியறையில், கதவை திறக்க சொல்லும் நண்பன்,திறக்காதே என்று சொல்லும் பெண் முடிவில் ஜெயித்தது அந்த பெண்.தோற்றது பிரகாஷ்ராஜ் நண்பனின் தற்கொலையால். இதே மாதிரி வீட்டில் தனியாக நானும்,அவளும் பேசிக் கொண்டிருந்த போது தீடிரென வந்த நண்பர்களிடம் முகம் குடுத்து பேசாமல் போக,நண்பர்களுக்கும் தோழிக்கும் நடந்த ஈகோ போராட்டத்தில் நான் சிக்கிக் கொண்டு முழிப் பிதுங்கி நண்பர்களுக்காக அந்த பெண்ணுடன் சண்டை போட்டது தனிக்கதை.சண்டை போட்டதற்கு இன்னொரு காரணம் - அந்த பெண்ணை நான் காதலிக்கிறேன்..விட்டுக் கொடு என்று கண் கலங்கிய இன்னொரு நண்பன். நான் சண்டை போட்டப் பிறகு அவன் இன்னொரு பெண் பின்னால் போனது அந்த கதையின் கிளைக்கதை.

எடிஎம் கார்டு நிறைய காசு ஆனா சாப்பிட கடை இல்லை. ஒரு தடவை கடை எல்லாம் திறந்து இருக்கு ஆனா சாப்பிட காசு இல்ல அப்ப நானே சிரித்துக் கொள்வேன்.பிரகாஷ்ராஜ் மாதிரி வாழ்கிறேன் என்று கர்வமாக இருந்தது.

இன்னும் என்ன ஒற்றுமைகள் என்று பார்த்தால் சாமி கும்பிடுவது இல்ல.கிறிஸ்துவப் பள்ளியில் தான் அதிகம் படித்து இருக்கிறேன்.விபூதி வைத்து கொண்டு போனால் ஒண்ணும் சொல்ல மாட்டார்கள்.சென்னை வந்ததும் முதலில் சேர்ந்தது அக்மார்க் இந்து பள்ளியில் விபூதி வைக்கவில்லை என்றால் அடிப்பார்கள். நான் முதலில் விபூதியை அழித்தேன்.என்னை பார்த்து நிறைய பேர் அழித்தார்கள்.வற்புறுத்தும் பழக்கத்தை விட்டு விட்டார்கள். மரணம் நாலு முறை கிட்டே வந்து குலசம் விசாரித்து இருக்கிறது.இப்போதும் விபூதி இட்டுக் கொள்வது உண்டு பூசுவது என் அம்மாவாக இருக்கும் அல்லது கொடுப்பது நெருங்கிய பெண்களாக இருக்கும்.அவர்கள் நகர்ந்ததும் அழித்து விடுவது வழக்கம்.

பலமான ஒற்றுமை என்னவென்று பார்த்தால் திமிர். இதற்காக என்னை ரசித்தவர்களும், வருத்தப்பட்டவர்களும் உண்டு.உனக்கு நடிக்கத் தெரியவில்லை என்று சொன்னது கேட்டு சந்தோசமாக இருந்தது.சமீபத்தில் ஒரு உறவுக்காரப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன்.சின்ன வயதில் நாங்கள் இருவரும் எலியும் பூனையும் தான்.பார்த்தால் கூட பேசிக் கொள்ள மாட்டோம். ஒருமுறை வீட்டுக்கு அம்மா மிதிச்சிட்டான் என்று அழுது இருக்கிறாள். என்ன மிதிச்சான் என்று கேட்டதற்கு செருப்பை என்று சொன்னாளாம். சமீபத்தில் என்னை பற்றி சொன்னது."நீ ரொம்ப நல்லவன்.." (வீரபாகு வடிவேலு கண் முன்னால் வந்தார்.)நான் அப்படியே தான் இருக்கிறேன் அவள் பார்வை மாறியிருக்கிறது.

பலமான வேறுபாடு - மொழி தான்.இரண்டு வார அவகாசம் குடுத்தால் ஜப்பான் மொழியில் டப்பிங்கெல்லாம் பேசுவேன் என்று சொல்கிறார்.நான் நாலு வருடம் ஆகப் போகிறது இன்னும் "ஏக் காவ் மே ஏக் கிஸான்.." தான்.

இன்னும் தீராத கோபம் - "ஏன் உங்க வாழ்க்கையைப் பத்தி அதிகம் எழுதுவதில்லை.." என்று கேட்ட உதவி இயக்குனரை "அடுத்தவன் படுக்கையறையை எட்டி பாக்கும் புத்தியை மாற்றிக் கொள்.." என்று முகத்தில் அடித்து சொன்னது.இப்படி எழுதியது அந்த சுயசரிதையின் கடைசி அத்தியாயத்தின் முந்தைய அத்தியாயத்தில்.வந்த கோபத்தில் டூயட் மூவிஸ் அலுவலக முகவரி கண்டுப்பிடித்து ஒரு கண்டன கடிதம் அனுப்ப முடிவு செய்தேன்.சாராம்சம் - நாங்களா உங்களை சொல்ல சொன்னோம் என்று ஆரம்பித்து அந்த உதவி இயக்குனர் ஒரு பிரபலமாக இருந்திருந்தால் இப்படி சொல்லி இருப்பீர்களா என்று முடிந்தது.மொழி படம் வந்து அந்த கோபத்தை அடக்கி விட்டது.பிரகாஷ்ராஜிற்கு சரியாக தெரிந்தது எனக்கு தப்பாக தெரிந்தது.

அது போல நான் சொல்ல நினைத்தது ஒன்று சொல்லியது ஒன்று. எனக்கு சரியாக தெரிந்தது மற்றவர்களுக்கு தப்பாக தெரிந்தது.
இனி கவனமாக எழுதப்படும்.

இன்னொரு கோபம் - ஆட்டோகிராப் வாங்க வந்த பையனை துரத்தி பிடித்து அடித்தது.காரணம் பேசிக் கொண்டிருப்பதை இடை மறித்ததால் வந்த கோபம்.

பின் குறிப்பு - இன்னும் நிறைய ஒற்றுமை இருந்தாலும் சொல்ல விடாமல் ஏதோ ஒன்று தடுப்பதால் சொல்லவில்லை.அதையும் மீறி சொல்ல நான் பிரகாஷ்ராஜ் இல்லையே.

Wednesday, December 23, 2009

சாணிக்குழி - காதலுக்கு வந்த எச்சரிக்கை

முன்னோட்டம் : மினி உதவியுடன் ஜெயாவும்,குமாரும் காதலிக்கிறார்கள்.குழந்தைகள் உதவியுடன் கையாட்டல்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. அதட்டலான குரல் கேட்கிறது. மேலும் படிக்க முதல் பாகம்..இனி..

குமார் குரலை கேட்டு அதிர்ந்து போய் திரும்பி பார்த்தால் சித்தி கோபத்தில் நின்றுக் கொண்டிருப்பது தெரிந்தது.எப்படி தெரிந்திருக்கும்,யார் சொல்லியிருப்பார்கள் என்று யோசித்து பார்த்தால் மூத்த புள்ளப்பூச்சியின் தலை மட்டும் தெரிந்தது. காசு குடுக்காமல் வந்தது நினைவுக்கு வந்தது.

"சித்தி..ஒண்ணுமில்ல..சும்மா தான் உக்காந்திருந்தேன்.." குமார் எச்சில் கூட்டி விழுங்கலாம் என்று பார்த்தால் எச்சில் சுரப்பி வேலை செய்யவில்லை.

"என்னடா ராத்திரி எல்லாம் பிள்ளத் தூங்காம இருமுதேன்னு பாத்தா..இதான் காரணமா.." திட்டும் சித்தியை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியமால் கண்ணு முழி பிதுங்கியது.திரும்பி பார்த்தால் ஜெயா காணாமல் போயிருப்பது தெரிந்தது.

"சித்தப்பா கிட்ட எல்லாம் சொல்ல வேண்டாம் சித்தி.." கெஞ்சி கொண்டிருந்தான் குமார்.

"சொல்லிட்டா மட்டும் கண்டிக்கவா போறாங்க..சேர்ந்து தண்ணியடிக்கமாக இருந்தா சரி..அப்படியே அப்பன்மாரு புத்தி..என் புள்ளைய கெடுத்துராத.." சொல்லி விட்டு குழந்தையை வாங்கி கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

கொஞ்ச தூரம் போனவுடன் திரும்பி பார்த்து "அங்க என்ன வாய் பாக்குற..வா வெரசா நட.." கூடவே இழுத்து செல்லாத குறை தான்.

"அந்த பொண்ணு பேரென்ன..அவ எல்லாம் நமக்கு சரிப்பட மாட்டா..அவங்க வேற நாம வேற..புரியுதா..எம்புட்டு சொன்னாலும் புரிஞ்ச மாதிரி தெரியலயே.."

"சித்தி..அது வந்து அவ ரொம்ப நல்லப் பொண்ணு.."

"ஆனா அவ அப்பன் எல்லாம் அது மாதிரியில்ல..தெரியுமில்ல சாணிக்குழி கத..டேய் மூத்தவன நீயும் அண்ணன் மாதிரி ஆயிராதே.."

"சரி யம்மா.." கோபத்தில் மூத்த வாண்டை முறைத்தான்.குமார் கண்களுக்கு அவன் ஒரு குட்டி சாத்தான் மூக்கு வடித்து கொண்டு நடந்து வருவது மாதிரி தெரிந்தது.சாரத்துக்குள் அவனை விட்டு தலையில் கொட்டும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.

பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும்,புதிதாக சேர்ந்திருந்த பதினொராம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒரு பெண் விவகாரத்தில் சண்டை மூள,நடந்த அடிதடியில் இரண்டு பக்கமும் தலா மூன்று பேருக்கு ரத்த காயம்.

ஆசிரியர்களும் புதிதாக சேர்ந்தவர்களுக்கு வக்காலத்து வாங்க,ராத்திரியோடு ராத்திரியாக பள்ளிக் கொடிக் கம்பத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. ஏற்றியது குமார் கோஷ்டி தான் என்று சில பேர் சொல்ல, விசாரணை செய்ய ஒரு முரட்டு ஆசாமியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

"டேய் வாயத் தொறங்கடா..யாருடா கொடி ஏத்துனது.."

"நாங்க இல்ல சார்.."

"அப்புறம் என்ன உங்க பொண்டாட்டி வந்து ஏத்துனாளா..ஏண்டா எந்தாலிய அறுக்குறீங்க..அப்படியே சுவத்தோட வைச்சி ஒரு எத்து எத்தின்னா எப்படி இருக்கும் தெரியுமில்ல.." அடிக்க கை ஒங்கிக் கொண்டு வர,ஐந்து பேரும் சேர்ந்து புரட்டு எடுத்து விட, அது தற்காலிக நீக்கத்திற்கு வழி கோலியது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சாணிக்குழி பக்கத்தில் இருந்த திண்டில் துண்டை விரித்து படுத்திருக்க, சித்தப்பா வந்து எழுப்பிய பிறகு தான் சுய நினைவே வந்தது.

"எழுந்திருடா..உனக்கு படுக்க இடமே கிடைக்கவில்லையா..இந்தா தண்ணி அடி.."

"என்ன சித்தப்பா நேரம் காலம் தெரியாம விளையாடிக்கிட்டு.."

"பின்ன என்ன..உங்கூட சேந்து வாத்திய அடிச்சவன் எல்லாம் மன்னிப்பு கேட்டுக்கிட்டு பரிட்ச்சை எழுதப் போறான்.."

"நான் போகல சித்தப்பா.."

"நீ போய் மன்னிப்பு கேளு..எல்லாம் முடிஞ்சப் பொறவு அவன சாணிக்குழியில் புதைச்சிருவோம்..யாருக்கும் தெரியாது..இதுக்கு முன்னாடி செஞ்சது தானே.."

"தண்ணியப் போட்டுக்கிட்டு சலம்பாதீங்க..போய் படுங்க.."

குமார் மட்டும் எழுதாத பொதுத்தேர்வு வேகமாக முடிந்திருந்தது.முடிவுகள் வந்தவுடன் அடுத்த அதிர்ச்சி முதல் மதிப்பெண் வாங்கும் ஜெயா பார்டரில் பாஸ். ஜெயா குமாரை பார்க்க வந்திருந்தாள்.

"வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க..என்ன பண்றதுன்னே தெரியல.."

"என்னை கேட்டா நான் என்ன சொல்ல..நீ தானே முடிவு எடுக்கணும்.."

"சரி வீட்ட விட்டு ஓடிரலாம்..நகை எல்லாம் நிறைய இருக்கு எடுத்துட்டு வர்றேன்.."

"ஜெயா முட்டாள் மாதிரி பேசாதே..நான் இப்ப எங்க அப்பன் காசுல திங்குறேன்..இதுல இன்னொரு அவமானம் வேறத் தேடிக் குடுக்கணுமா.."

"அப்ப நான் சாவறது எல்லாத்துக்கும் முடிவு.." இப்படி சொன்னதும் அதிர்ச்சியில் குமாரின் வாய் அனிச்சையாக முணுமுணுத்தது. "சரி.." என்று நடக்க காத்திருக்கும் விபரீதம் தெரியாமல்.

பல நாள் கழித்து வானத்தை நிமிர்ந்து பார்த்தால் தேய்பிறை நிலா மர்மமாக சிரித்தது தெரியாமல் வீடு வந்து சேர்ந்தான்.பின்னால் நிலாவும் நகர்ந்தது இன்னும் சிறிது தேய்ந்து..

(தொடரும்..)

Tuesday, December 22, 2009

சாணிக்குழி - இரண்டாவது சவாலுக்கு பதில் தொடர்கதையாக

"ஜெயா..சரியா தெரியல..இன்னும் கொஞ்சம் மேலத் தூக்கு.." இப்படி அவளுக்கு கேட்கும்படி காதருகில் குமார் சொன்ன விதம் தான் ஜெயாவை அதிகம் வசீகரித்தது.

"இதுக்கு மேல எப்படி..யாராவது பார்த்துருவாங்க..எத்தன தடவப் படிச்சி படிச்சி சொன்னாலும் உனக்கு புரியாதா.." குரலில் கண்டிப்பு தெரிந்தாலும் அவன் சொன்னதை செய்தாள்.

"ஜெயா அங்க என்னடி நடக்குது..பேப்பரை கீழே வைச்சு ஒழுங்கு மரியாதையா பரிட்சை எழுது.." டீச்சரின் சத்தம் பின்னால் இருந்து கேட்டது.

"இந்த கிழடுக்கு நான் காப்பி அடிக்கும் போது மட்டும் தான் கண்ணு நல்லா தெரியும்.." குமார் மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தான்.

பரிட்சை முடிந்ததும் டீச்சர் மேலிருந்த கோபத்தில் ஜெயாவிடன் முறுக்கிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு போய் விட்டான்.எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் குழப்பத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தால், அங்கே குழப்பத்தைத் தீர்க்கும் விதமாக மினி நின்றுக் கொண்டிருந்தாள்.

மினியும்ஜெயாவும் எட்டாம் வகுப்பு ஒரே பெஞ்ச்சில் குப்பைக் கொட்டியவர்கள். குமார் வழக்கம் போல மாப்பிள்ளை பெஞ்சு தான். ஒன்பதாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போக வேண்டும் என்பதால் அதோடு மினியின் மேல்படிப்பிற்கு வீட்டில் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

"என்னடி இந்தப்பக்கம்.."

"எப்பவும் வர்றது தான்..ஐயா முத நட கண்ணு அறுத்துக்கிட்டு வருவாரு..இங்கிட்டு இருந்து வீட்டுக்கு நான் தூக்கிட்டுப் போகணும்.." சொன்ன மினியின் பாவாடை சட்டை முழுவதும் வாழைக்கறை இருந்தது.வாழைக்கண்ணை எடுத்து செல்வதற்கே இந்த உடையுடன் வந்திருப்பாள் போல என்று ஜெயா நினைத்து கொண்டாள்.

" சரி போற வழியில குமாரை பாத்தா குளத்தாங்கரைக்கு வர சொல்றியா.." ஜெயா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.இப்படி ஒரு லைன் ஓடுவது தெரிந்த மூன்றாவது ஆள் மினி தான்.

மினியின் ஐயா வந்து வாழைக்கண்ணு கட்ட அவள் தலையில் ஏற்றி விட்டப் பிறகு "ஐயா..ரெண்டாவது நட வரணுமா.." என்று கேட்டதும் "இல்லப் புள்ள நான் கொண்டு வந்துருவேன்.." சொல்லி விட்டு கிளம்ப

"நான் வர்றேன் ஜெயா..குமார் கிட்ட எப்படியும் சொல்லிருவேன்.." சொல்லி விட்டு பதிலுக்கு காத்திருக்காமல் கிளம்பினாள்.

குமார் வீட்டுக்கு அருகில் வந்ததும் பாரம் தாங்காமல் கட்டை இறக்குவது போய் இறக்கி "குமார் கொஞ்சம் தூக்கி விடேன்.." என்று சொன்னாள் மினி.

"இரு மினி..வர்றேன்.." தூக்கி விடும் போது சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சொன்னாள். "ஜெயா மடையில் காத்திருப்பா..போய் பாரு.."

மினிக்கு கிளம்பும் போது தான் தெரிகிறது சிவா நின்று கொண்டு இருப்பது.சிவா குமாரின் அண்ணன்.

"ஏய்..போஸ்ட் மேன் கொஞ்சம் நில்லு..அதான் தினமும் கட்டு சரியா என் வீட்டுப் பக்கம் சரியுதா.." மினியை வம்புக்கு இழுக்க

"ஆமா..இவரு ரதி தேவி புரியன்..இவரப் பாக்க எங்க கட்டு சரியுதாம்..ம்க்கும்.." தலையை வெட்ட முயற்சி செய்தது தலை பாரத்தால் தோள் பட்டையில் இடிக்காமல் நின்று விட்டது.

"பாத்து..பாத்து..மெதுவா..தல கீழே விழுந்துறப் போகுது.." விடாமல் சிவாவும் வம்புக்கு இழுக்க.

"எங்க ஐயா கிட்ட சொல்லிருவேன்.."

"சும்மாவே உங்கப்பனுக்கு தலையாடும்..இதுல நீ சொல்றது காதுல விழவா போகுது.." விடாமல் கேலி செய்ய திருப்பத்தில் கொன்னுப்புடுவேன் என்று விரலை காட்டி நாக்கைத் துருத்தி வலிச்சம் காட்டினாள்.

"பாத்து நாக்குத் துண்டாகி கீழே விழுந்துறப் போகுது..அப்புறம் போஸ்ட் மேன் வேலை செய்ய முடியாது.." சிவா சொல்லி விட்டு திரும்பி பார்த்தால் குமார் முறைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

படிக்க போகிறேன் என்று புத்தகத்தை எடுத்துக்கிட்டு போனால் இவன் படிக்கற அழகில் குளம் நெரம்பி ஊரே வெள்ளக்காடா மிதக்கும். அதனால சித்தி வீட்டுக்கு போய் குழந்தைக்கு வேடிக்கை காட்டுவது போல குளத்துக்கு போயிரலாம்.

"சித்தி..தம்பி தூங்கிட்டானா.."

"என்னப்பா..தீடிர் பாசம்..சோழியன் குடுமி இப்போ எதுக்கு ஆடுது.."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை..சும்மா இப்படி வந்தேன்..தம்பியை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.."

"உலையில அரிசி போட்டு இருக்கேன்..மூத்தவனையும் இவனையும் வெளியில கூட்டிக்கிட்டு போ.."

வெளியே வந்ததும் மூத்த பையனுக்கு விவரம் தெரியும் என்பதால் கழட்டி விட முடிவு செய்தான்.மிட்டாய் வாங்கி குடுத்தாலும் அவன் குமார் கூடவே வந்துக் கொண்டிருந்தான்.

"டேய் அங்க போய் விளையாடு.."

"நான் உன் கூட தான் வருவேன்.."

"அடி வாங்காம ஓடிப்போயிரு.."

"என் தம்பிய குடு..போறேன்.."

"நான் வாங்கி தந்த மிட்டாய் எனக்கு இப்ப வேணும்..குடுத்துட்டு உன் தம்பிய எடுத்துக்கோ.." குமார் மிரட்ட வேறு வழியில்லாமல் இன்னும் ஒரு ரூபாய் வாங்கி கொண்டு வழியை விட்டான்.

குளத்தாங்கரையில் ஜெயா பெண்கள் குளிக்கும் இடத்தில்,குமார் ஆண்கள் குளிக்கும் இடத்தில். ஜெயா கையில் அவளுடைய அண்ணன் குழந்தை.குழந்தைகளை மாற்றி மாற்றி டாட்டா காட்ட சொல்லி மரோ சரித்ரா பாணியில் காதல் வளர்த்தார்கள்.

அது கொஞ்சம் கொஞ்சம் மாறி குழந்தைகள் மூலமாக பறக்கும் முத்தங்களும் பறிமாற்றப்பட்டன.லஞ்சப் பணம் ஒரு ரூபாயில் இருந்து இரண்டாக மாறியிருந்தது.

ஆறு மாதம் கழித்து குமாருக்கு மோசமான நாளில்..பறந்து வந்த முத்தத்தைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கும் போது

"குமார்..இங்க என்னடா பண்றே.." கோபத்தில் ஒலித்த குரலில் அதிர்ந்து போய் குமார் திரும்ப..

அங்கே..

(தொடரும்..)

டிஸ்கி :

ரொம்ப நாள் கழித்து லேபிளில் மொக்கை என்று போட வைத்த அண்ணன் துபாய் ராஜாவுக்கு இந்த தொடர்கதை சமர்ப்பணம்.நீங்கள் கேட்டவை.

கதை பிடிக்கவில்லை என்று யாரும் என்னை திட்டக் கூடாது.இந்த கொலைவெறிக்கு காரணம் அண்ணன் தான்.அவரை திட்டவும்.

கதை பிடித்திருந்தது என்றாலும் யாரும் என்னை பாராட்ட வேண்டாம்.பாராட்டுகளும் அவருக்கே.

அப்புறம் இந்த கதையில் நான் இருக்கிறேன்.எந்த கேரக்டர் என்று கண்டுப் பிடிப்பவர்களுக்கு அண்ணன் துபாய் ராஜா ஒரு ஒட்டகம் வாங்கி தருவார். அல்லது தம்பி உடைந்த கண்ணாடி இதயத்தை ஒட்ட கம்மாவது வாங்கி தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

Monday, December 21, 2009

துவையல் - அலம்பல் ஸ்பெஷல்

ராமராஜனுக்கு ரசிகர்கள் அதிகம் என்று நான் ஒத்துக் கொள்கிறேன்.நெக்ஸ்ட் மீட் பண்றேன்.இதுக்கும் கட்டையைத் தூக்கி என் காலில் போடாதீங்க. சண்டையில் கிழியாத சட்டை கிடைக்குமிடம் தெரியுமா. அவசரமாக தேவைப்படுது.மேதை படம் நிச்சயம் ஓடி விடும் என்று எனக்கு நம்பிக்கை வந்து இருக்கிறது.விஜய் பற்றிய பதிவு போட்டதை விட ராமராஜனுக்கு அதிக கூட்டம்.வாழ்க மக்கள் நாயகன். இத்தனை ராமராஜன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய நான் ஒரு காரணமாகி விட்டேன் என்பதில் எனக்கு சந்தோஷம்.விஜய்யும்,ராமராஜனும் ஒன்றா என்று கேட்டவர்கள் அதிகம். அதனால் காசை சேமித்து வைத்து மேதை படம் பாருங்கள். முடிந்தால் அந்த படம் வெளி வருவதற்கும் பணம் போடுங்கள்.சுறா பார்க்க வேண்டாம்.

தம்பி லோகுவுக்கு ஒரு வேண்டுகோள். குறள் போடும் கூடவே விளக்கமும் போட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.அதை எழுதியது திருவள்ளூவர் என்று போட வேண்டாம்.அப்புறம் நைனா பார்த்தால் அதற்கும் எதிர்குறள் போடுவார். இனி தம்பி பேச்சை கேட்க முடிவு செய்து விட்டேன். அதனால் நாளை வெளியாக வேண்டிய சுறா விமர்சனப் பதிவு இன்னும் ஐந்து மாதங்கள் கழித்து வெளியாகும்.பதிவு எழுத நேரம் இருக்கிறது எண்டி சொல்ல வேண்டாம்.மூன்று நாட்களாக மெகா சைஸ் ஆணிகள்.

நிறைய பேருக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப் போடத் தெரியவில்லை என்பதை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது.அதுவும் என் பதிவில் மட்டும் தான் இப்படி குத்துகிறார்கள். இடது பக்க மூலையில் இருப்பதில் குத்த வேண்டும் என்று தெரியாமல் வலது பக்கம் குத்தி விட்டார்கள். இந்த ஒரு வாரத்தில் அதிகமான குத்து வாங்கியது நானாகத்தான் இருக்கும் என்பதில் பெரு மகிழ்ச்சி. பெயர் வெளியே தெரிந்தால் போடுவார்களா என்று எனக்கு சந்தேகம்.அதை தமிழ்மணம் நிவர்த்தி செய்ய வேண்டும்.

இந்த வாரம் வலைச்சரத்தில் தண்டோரா அண்ணன் கையால் அறிமுகம்.மோதிரக்கை குட்டு.அதை தக்க வைத்து கொள்ள இதுவரை பயங்கரமாக மொக்கை போட்டு வந்த நான் இனி மொக்கை பயங்கரமாக போடுகிறேன். நல்லவேளை ஊருக்கு போய் விட்டார் என்று நினைக்கிறேன். அவரும் மக்கள் நாயகனின் ரசிகராக் இருப்பாரோ நினைத்தாலே உடம்பு ஜெர்க் ஆகுது.

எனக்கு டிரெண்ட் செட்டர்களை தான் பிடிக்கும். தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது சேது வந்தப் பிறகு தான் அதிகமானது.அதனால் பாலா மீது என்றுமே ஒரு தீராத ஆச்சர்யம் உண்டு. சேது படத்தின் யதார்த்தம் தாக்கிய அளவுக்கு எனக்கு பருத்தி வீரன் படமோ,சுப்ரமணியபுரம் படமோ ஈர்க்கவில்லை. காரணம் அதே மாதிரி இறுதியில் நாயகன் அல்லது நாயகியின் சாவு.பாலாவின் நாலு படத்திலும் இறுதி காட்சி இப்படி தான் இருக்கும். அந்த தாக்கம் ரேனிகுண்டா வரை தொடர்கிறது.அதை விட எனக்கு கடந்த இரண்டு வருடத்தில் எனக்கு பிடித்தப் படங்கள். அஞ்சாதே,பசங்க, சிந்தனை செய்,ஈரம்.அதனால் ரசனை வேறுபாடு (நான் அப்படி தான் சொல்வேன்) தானே ஒழிய தம்பி சொல்வது மாதிரி இது ரசனை குறைபாடு அல்ல.சசிகுமாரையும் எனக்கு பிடிக்கும்,தயாரிப்பாளர் என்ற டிரெண்ட் செட்டராக.நானும் ஒரு டிரெண்ட் செட்டர் ஆகலாம் என்று முயற்சி செய்ய நினைத்தேன் கடந்த வெள்ளிக்கிழமை வரை.(சிரித்தது ஒரு தப்பா..)

நல்லவேளை தம்பி டக்ளஸ் என் பழைய பதிவுகளை எல்லாம் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.டி.ராஜேந்தரும்,நாடோடிகளும் ஒரே பதிவில் வெளுக்கப்பட்டுள்ளது. இது தம்பிக்கு நான் தரும் இன்னொரு எதிர்வடை.

நையாண்டி நைனா என்று தமிழில் டைப் செய்து கூகிளில் தேடினால் முதலில் வரும் பதிவு அவருடையது அல்ல.என்னுடையது.அது போல இனி அத்திரி என்று தேடினால் என் பெயர் வருமாறு செய்யலாம் என்று இருக்கிறேன்.அதுவும் வெற்றி பெற்று விட்டால் கடைசியாக கேபிள் இணைப்பு பெறலாம் என்று இருக்கிறேன்.

டிஸ்கி :

இப்போ தான் புரியுது ஏன் ஆப்பிரிக்க இசையைப் பற்றி எழுதுகிறார் என்று.அதனால் இனி வரும் நாட்களில் ஒரிய மொழி நடிகர்களை வைத்து ஏதாவது பதிவு எழுதுகிறேன்.யாராவது ஒரிய மொழி படம் பார்த்தால் இப்படி யோசித்தாலே கொஞ்சம் வோரியாக இருக்கிறது.

இவ்வளவு களேபரத்திலும் பிரசாந்த் ரசிகர்கள் என்னை ஒண்ணும் சொல்லவில்லை.(நானே வாய விட்டுட்டேனே..)

Sunday, December 20, 2009

மேதை ராமராஜன் - எதிவினைக்கு எகிறும் வினை

ராமராஜன் படங்களை எனக்கு பிடிக்காது என்று நான் போன பதிவில் சொல்லவேயில்லை.நான் சிரித்த காரணம் - அவர் "தொடர்ந்து" இருபத்தியாறு வெற்றிப் படங்கள் கொடுத்தேன் என்று சொன்னதற்கு தான்.இப்பவும் இந்த வார்த்தைகளைத் தட்டச்சு செய்யும் போது சிரிக்கிறேன்.அவர் நடித்த நாற்பத்தி மூன்று படங்களில் இருபத்தியாறு ஹிட் கொடுத்து இருக்கலாம்.ஆனால் தொடர்ந்து அவர் கொடுத்திருக்க முடியாது.உதாரணம் - என்னை விட்டுப் போகாதே,மில் தொழிலாளி,அன்புக்கட்டளை,தேடி வந்த ராசா இதெல்லாம் ஹிட்டா.அப்படி இது எல்லாம் வெற்றிப் படங்கள் என்றால் அஜித் நடித்த ஆழ்வார்,ஜி,ஜனா(இனிமே விஜய் பத்தி எழுதல.அசல் வருதாமே அவரை பத்தி எழுதுறேன். போன்ற படங்களும் அந்த வரிசையில் சேர்க்கலாம். சும்மா பகடி செய்தாலே எனக்கு விஜய்யை பிடிக்காது என்று தம்பி ராஜூ சொல்லி விட்டார்.) தொடர்ந்து என்ற வார்த்தையில் ராமராஜன் கொடுத்த அழுத்தம் தான் சிரிக்க காரணம். இதை நேற்று சொல்லாமல் விட்டது தான் நான் செய்த தவறு. காரணம் விஜய் மற்றும் சன் பிக்சர்ஸை தான் கேலி செய்கிறேன் என்று விட்டு விட்டேன்.உடனே தம்பி சரியாக வடையை கேட்ச் செய்து விட்டார்.

விஜய் எப்படி ரஜினி வழியை முயற்சி செய்கிறாரோ அதே போல ராமராஜனும் எம்.ஜி.ஆர் வழியை முயற்சி செய்தார். காணாமல் போனார். எம்.ஜி.ஆர் கூட "தொடர்ந்து" இருபத்தியாறு வெற்றி படங்கள் கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம் தான்.ஜாக்கி சான் உலகம் அறிந்த அவரும் "தொடர்ந்து" இந்த இருபத்தியாறு பட வெற்றிகளைத் தாண்டினாரா என்பது பெரிய கேள்விக்குறியே.

நான் நேற்று ராமராஜனை பகடி செய்யவில்லை.அவர் ஒரே மாதிரி நடித்து காணாமல் போய் விட்டார் என்ற ஆதங்கமே அது. பாடல்களும், தொய்வில்லாத திரைக்கதை அமைப்பும் தான் அவர் படத்தை தூக்கி நிறுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை.அதே பாணி தான் அவருக்கு பின்னால் குழியும் வெட்டியது.

நான் பகடி செய்தால் எப்படி செய்வேன் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இதோ.

ராமராஜனுக்கு தாய்குலங்கள் மற்றும் தங்கைகளிடன் தான் அமோக ஆதரவு.அவர் வளர்ந்து வந்த காலத்தில் கல்யாணம் ஆகாத பெண்கள் தென் மாவட்டங்களில் பீடி சுற்றும் தொழிலில் தான் அதிகம் ஈடுப்பட்டார்கள்.ராமராஜனை ஒரு அண்ணனாக தான் பார்ப்பார்கள். அப்போதும் கிராமத்து இளந்தாரிகள் அதிகம் ரஜினி ரசிகர்களாகத் தான் இருந்தார்கள். காரணம் ராமராஜன் திரையில் காட்டிய புனிதப் பிம்பம். எம்.ஜி.ஆர் பாணியில் குடிக்க மாட்டார்,புகைக்க மாட்டார்,பெண்களை ஆண்களுக்கு சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வார். கேலி செய்யும் பெண்களுக்கு அவர் பதிலடி கொடுக்கும் விதத்தில் தெரியும். குடித்து விட்டு வரும் இளந்தார்களிடம் எனக்கு ராமராஜன் மாதிரி ஒரு பிள்ளை இல்லையே என்று சொல்லி வாங்கி கட்டியவர்கள் தான் அதிகம்.

ராமராஜன் படங்கள் ஆபத்தில்லாதவை என்று சொல்வதை விட ஆபத்து கண்ணுக்கு தெரியாதவை.எப்படி என்றால் வில்லன் பெண் பித்து பிடித்து அலைவான்.வில்லன் கற்பழிக்க முயற்சி செய்யும் பெண் சுமாராக இருந்தால் அவள் தங்கை.சூப்பராக இருந்தால் நாயகி. நாயகனுக்கு உதவும் நல்லவன் முதலில் ராமராஜனோடு மோதுவான்.பிறகு உதவுவான்.ஆனால் அவனுக்கு குடிப் பழக்கம் உண்டு. இப்படி அவர் மட்டும் உத்தமராய் இருப்பாராம்.சுற்றி இருப்பவர்கள் மட்டும் அயோக்கியர்களாம். திஸ் அப்ரோச் இஸ் நோன் அஸ் காரக்டர் அஸாசினேஷன்.(கோபப்படும் போது மட்டும் தான் ஆங்கிலம் வருது.)

தம்பி சொல்லியிருக்கிறார். அந்த அபிமானம் அவரை எம்.பி யாக்கியது என்று.அந்த அபிமானம் குறைந்த காரணத்தால் தான் அடுத்த தேர்தலில் அவர் செருப்பை வீசினார்கள். மக்கள் நாயகன் என்று கட் அவுட் இருந்தது - பத்து ஆண்டுகளுக்கு முன் இப்போது அந்த இடத்தில் ஒரு கம்பி தான் இருக்கிறது.(உதாரணம் சாத்தான் குளம் பக்கத்தில் இருக்கும் இட்டமொழி என்ற ஊரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்தது - வெறும் கம்பி தான் மிச்சம்.).அவர் தொடர்ந்து வெற்றிப் படங்கள் குடுத்திருந்தால் செருப்பு வருமா சொல்லுங்கள் தம்பி.

டவுசர்,கலர் சட்டை என்று போடாமல் விட்டு விட்டேன்.இன்றும் பளபள சட்டைப் போட்டால் "என்ன ராமராஜன் டிரஸ்ஸா.." என்று கேட்பார்கள். அது ஒன்று தான் இன்றும் அவரின் வெற்றியை நினைவுப்படுத்துகிறது.

அண்ணன் துபாய் ராஜா சொல்லியிருந்தார் - எந்த நாயகனும் டவுசர் அணிந்து நடிக்கவில்லை. சிவாஜி நடித்து இருக்கிறார் ஞானஒளி. ரஜினி - அதிசியப் பிறவி.ராமராஜன் அந்த படத்திலாவது மாடு பிடிக்க டவுசர் போடுவார்.சரி ஒத்துக் கொள்கிறேன்.பட்டங்கள் பறக்கட்டும் படத்தில் மாடு கிடையாது.நகரத்தில் நடக்கும் கதை. அதிலும் டவுசரில் வருவார்.

என் குரு நாதர் போல் பரபரப்பு கூட்டுவதற்காக எழுதியிருக்கிறேன் என்று சொன்னார். பரபரப்பாக எழுத விஷயங்கள் நிறைய இருக்கும் போது இதை வைத்து பரபரப்பு கூட்ட எந்த அவசியமும் இல்லை.

இளையராஜா கிராமத்தில் காலுன்ற ராமராஜன் படங்கள் பெரிதும் உதவியது என்று சொன்னார். இதுக்கு சிரிக்காமல் எதுக்கும் சிரிக்க முடியாது. அன்னக்கிளி,பதினாறு வயதினிலே படங்களின் பாடல்கள் கிராமப்புறங்களில் பட்டையைக் கிளப்பிய போது ராமராஜன் மதுரை மேலூரில் டவுசர் பையான இருந்திருப்பார். முடியலப்"பா".

அடுத்து கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு அடித்தளம் ராமராஜன் படங்கள் தான் காரணமாம். அப்போ இந்த படங்கள் வைதேகி காத்திருந்தாள் (மேண்டில் காமெடி),உதய கீதம் (முதலில் இருவரும் சேர்ந்த படம்),கீதாஞ்சலி (குதிரை ஓட்டுபவர்களாக வருவார்கள்) இந்த படங்கள் எல்லாம் வரும் போது ராமராஜன் பட்டங்கள் பறக்கட்டும் படத்தில் டவுசரில் நடித்திருப்பார்.இல்லை சொங்கி மாப்பிள்ளை ரவுடிகளிடம் மாட்டிக் கொண்டு விழிப்பவராக நடித்திருப்பார்.(படம் சூரக்கோட்டை சிங்கக்குட்டி பிரபு நடித்தது)

"மறைமுகமாக ராமராஜன் படங்கள் பெரும்பாலும் நிலபிரபுத்துவ அதிகாரத்தைக் காட்டின.." - இந்த மாதிரியான பித்தளை வரிகளை உதித்தது தம்பி "டக்"-"அவுட்" ராஜூ. அதற்கு குழலி பின்னூட்டத்தில் பதில் சொல்லி இருக்கிறார். சுகுணாவின் பதிவை படிக்கவும். இல்லை வைர வரிகள் உதிர்க்க தம்பி இந்த வயதிலாவது பாலகுமாரனின் பழைய நாவல்களைப் படிக்கலாம்.

ராமராஜனுக்கு ஜாதி ரீதியாக சப்போர்ட் இல்லையாம். என்ன கொடுமை. அவர் படத்தில் நடிக்கும் போது இருந்தது. அவர் மாதிரி புனித பிம்பம் காட்டாமல் பீடிப் பிடித்து கொண்டு,சரக்கடித்தது போல் நடித்த சரத்குமாருக்கு மாறியது.(படங்கள் - ஆதித்யன்,ஊர் காவவன்.)

ரஜினி படங்கள் வெளியிட தயங்குவாரா - டீ.ஆர் படங்களும்,ரஜினி படங்களும் நிறைய முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.எதிவினை எழுதும் போது சரியான புள்ளி விவரங்களுடன் எழுதவும்.அதற்கு பேராண்மை மாதிரியான திருடியப் படங்களைப் பார்த்த உடன் மறந்து விடவும். (ஜன நாதனுக்கு பிடித்த நடிகரும் ராமராஜன் தான்)

டிஸ்கி :

மேதை படம் வெளியாகும் போது நேற்று ராமராஜனுக்கு குடுத்த ஆதரவை நீங்கள் கண்டிப்பாக குடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விஜய் படம் பார்க்க செலவளித்த காசை அந்த படத்திற்கும் செலவளியுங்கள். மதுர தம்பி அந்த படத்தை தொலைக்காட்சியில் வரும் வரை காத்திருக்காமல் தியேட்டரில் கண்டுக் களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.தயவு செய்து மேதை படத்தை வெற்றி பெற செய்யுங்கள்.

Saturday, December 19, 2009

விஜய்,சன் பிக்சர்ஸ் - இவர்களில் யார் அடுத்த ராமராஜன்

ராமராஜன் படமே இல்லாத நிலையில் அவருடைய பேட்டி குமுதத்தில் வந்தது.அதில் அவர் சொன்ன ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடித்தது."நான் தொடர்ந்து இருபத்தியாறு படம் ஹிட் கொடுத்தவன்.இதை யாராலும் முறியடிக்க முடியாது..". இதை படித்தப் பிறகு உருண்டு புரண்டு சிரித்தேன். கூடிய விரைவில் ராமராஜனின் நிலை விஜய்க்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. விஜய்யும் பிரசாந்த்,ராமராஜன் போல ஒரு காமெடி பீஸ் ஆகாமல் இருக்க இந்த ஸ்டிரியோ டைப் படங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஆனால் விஜய் ராமராஜன் ஆக விட மாட்டோம்.ராமராஜனின் கதி எங்களுக்கு தான் நேர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் அடம் பிடிக்கிறது.விதி வலியது. வேட்டைக்காரன் இப்படி கேவலமாக இருப்பது தெரிந்தும் சுறாவுக்கு வலை வீசி இருக்கிறார்கள்.

விலை தான் ரொம்ப ஜாஸ்தி.காஸ்ட்லி சுறா.நாங்க எல்லாம் காஸ்ட் கட்டிங்கில் பிழைப்பு நடத்தும் பார்ட்டிகள்.ராமராஜனாவது தொடர் ஹிட் குடுத்து சாப்பிட வழியில்லாமல் இருக்கிறார்.இவங்க எல்லாம் தொடர் மொக்கைகள் குடுத்து என்னை சாப்பிட விடாமல் செய்து விடுவார்கள் போல. ஒவராக மொக்கை படங்கள் வெளியிடாதீங்க.அப்புறம் எந்திரன் கதி அதோ கதி தான்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு இப்படி மிதமிஞ்சிய விஷத்தைக் குடுக்குறீங்களே. எந்திரன் ஆலாகாலம் விஷமாகி விடும்.

குருவி செத்துப் போச்சு.வில்லு நெளிஞ்சு போச்சு.அப்ப வேட்டைக்காரன் என்ன பண்ணப் போறான் என்று நேற்று நண்பன் சொன்னான். கோட்டிக்காரன் ஆக்கிப் புடுவான் அப்படி சொன்னேன். அதே மாதிரி ஆகிப் போச்சே மக்கா.

இனிமே எப்ப விஜய் படம் பாப்பேன்னா சாரு ஆன்லைன்ல என்னைக்கு விமர்சனம் வருதோ அன்னைக்கு தான் நானும் படம் பாப்பேன்.

ராமராஜன் செய்த தப்பு - எப்ப பாத்தாலும் பாட்டுப் பாடுறது.மாட்டைக் கூட பாட்டாலே அடக்குறது.தெம்மாங்கு பாட்டுக்காரன்,வில்லுப் பாட்டுக்காரன்,கரகாட்டக்காரன்,எங்க ஊரு காவல்காரன் இப்படி நடிச்சே காணாம போயாச்சு.

விஜய் படத்திலையும் அது தான் நடக்குது எதாவது ஊர்ல இருந்து கிளம்ப வேண்டியது - இன்னோரு ஊருக்கு போய் ஆ (இல்ல நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.) ஆள் அடிக்கிறது.இதை அருண் விஜய் வரை எல்லோரும் பண்ணிட்டாங்க.அதனால் ரூட்டை மாத்துங்க.இல்ல சுறா இறாவாகிரும்.

ராமராஜனாவது எம்.பி ஆனாரு.இப்படியே நடிச்சா அப்புறம் எம்பி கூட குதிக்க முடியாது. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட தெனாவட்டு படத்துக்கும் வேட்டைக்காரன் படத்துக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. ராமராஜனுக்கு டவுசர் என்றால் விஜய்க்கு முக்கா பேன்ட். இந்த படம் நல்லா இருக்குன்னு விஜய் ரசிகர்கள் சொன்னால் அவர் இந்த மாதிரி தொடர்ந்து மொக்கை படம் கொடுத்து இன்னும் கொல்வார்.

டிஸ்கி :

பேசாமல் காதலுக்கு மரியாதை படத்தை ரீமேக் பண்ணுங்க.

சன் டிவிக்கு - பசங்க,ஈரம் அது மாதிரி படங்களை வாங்குங்க.இந்த ஈர வெங்காயத்தை எல்லாம் எடுத்து எங்களுக்கு உள்காயம் உண்டாக்காதீங்க.

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் விமர்சனம்

முதல்ல ஒப்பனிங்கு சாங்கு அட ஆமாங்க பைட் முடிஞ்சப் பிறகு தான் சின்னப்புள்ள மாதிரி கேள்வி கேக்க கூடாது ஆமா சொல்லிப்புட்டேன்.

எல்லாரும் போக்கிரி படத்தை கண் முன்னால கொண்டு வாங்க..முடியலையா சிவகாசி படம். ஒகே அது மாதிரி சண்டை முடிந்ததும் எல்லாரையும் போட்டு அடிச்சிட்டு இந்த பாட்டு வருது.

"நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட.."

இதை ரீமிக்ஸ் பண்ண கை துடித்தாலும் மனசு சத்தியத்தை நினைவுப்படுத்துது.முதல்ல போக்கிரி ஹேங்க் ஒவர்ல இருந்து வெளியில வாங்க. ஒவர்.

அடுத்து தலைவர்(அடுத்த தலைவர் இல்ல சரியா படிக்கவும்) சென்னை வர்றாரு இதுல திருப்பாச்சி ஞாபகம் வந்தா நான் பொறுப்பல்ல.ஹீரோயினை பாக்குறாரு.

"சின்னத் தாமரை.." என்று ஆரம்பிக்கும் பாடல்.இந்த ஒரு பாட்டை நம்பி நான் ஏமாந்துட்டேன்.அருமையான மெலடி.(மெலடி தானே கன்பார்ம் பண்ணுங்க..)

தலைவருக்கும் வில்லனுக்கும் பிரச்சனை உடனே வீடு புகுந்து அடிக்கிறாரு.(புதிய கீதை அதேதான்..).உடனே அவரை ஒரு கூட்டம் தத்துக் கொடுக்குது இல்ல எடுக்குது.(பகவதி ஞாபகம் வரணும்..).வேற என்ன பாட்டு தான்.

அது என்ன பாட்டுன்னா புலி உறுமுது புலி உறுமுது. புலிகளுக்கு எதிராக பாட்டுப் போட்டு டியுன் எழுதி இருக்கிற வரிகளைப் பாருங்க.இதுக்கும் ரீமிக்ஸ் போட கை வருது மனசு தடுக்குது.

"புலி உறுமுது..புலி உறுமுது.." யப்பா முடியல

அதுல ஒரு வரி "பாமரனின் பாமரனின் கூட்டுக்காரன்.." இவர் திறந்த ஏழைகளுக்கான கணினி மையம் அடைச்சே கிடக்கு.

சண்டை (அதுவும் மூஞ்சியில சந்தனம் பூசாம) முடிந்தப் பிறகு ஹீரோயின் கூட டூ இட் இல்லன்னா எப்படி - டூயட் பாடுறாங்க.

அதுதான் "கரிகாலன் காலப் போல.." பரவாயில்லை ரகம்.ஆனா சன் டிவி,சன் மியூசிக் இதை தூக்கி நிறுத்தும்.

அப்புரம் ஒரு பைட்.க்ளைமாக்ஸ் முன்னால ஒரு பாட்டு வேணுமே அதுதான் இது கில்லி,திருப்பாச்சி முக்கா பேண்ட் அப்படி எல்லாம் சொல்லப்புடாது.

எனக்கு சாருலதா மணியின் குரலில் இந்த பாட்டு ரொம்பவே பிடிச்சியிருக்கு.

"என் உச்சி மண்டையில சுர்ங்குது.." சுருங்குது இல்ல.படம் பாத்தா மூளை சுருங்கிரும் அது வேற விசயம்.

அப்புறம் சண்டை அழகியத் தமிழ் மகன் மாதிரி ஒட்டம்.தமிழன் மாதிரி போலீஸை அடிக்கிறது (இது நடுவில் வரும் விட்டுட்டேன்..)

அப்புறம் சுபம்.

ஏதாவது பாட்டு இடம் மாறியிருந்தா சண்டைக்கு வராதீங்க..

டிஸ்கி :

இது பாடல் கேட்டு எழுதும் விமர்சனம் எழுதும் முயற்சி.படம் கண்டிப்பா ஓடணும்.(தியேட்டரை விட்டு இல்ல..).அப்பத்தான் இறங்கி கலாய்க்க முடியும்.

அப்ப படத்துக்கு விமர்சனம் - எப்படியும் பொங்கலுக்கு சன் டி.வியில் போடுவாங்க..பாத்துட்டு எழுதுறேன். அப்படி எழுதினா படம் வந்து ஒரு மாமாங்கம் ஆகப் போகுது என்று யாரும் சண்டைக்கு வரக் கூடாது.

மைனஸ் ஓட்டுப் போட்டு பழக வேண்டுமா - இந்தப் போஸ்ட்டுக்கு வாங்க.

கண்ணு கெட்டுறப் போகுது

ஐந்து வயதில் இருந்தே இந்த வார்த்தைகள் என்னை நோக்கி சீறிப் பாய்ந்து இருக்கிறது.சிறுவர்மலர் புத்தகத்திற்காக வெள்ளி கிழமைகளில் இருட்டு விலகுவதற்கு முன் நான் போர்வையில் இருந்து விலகியிருப்பேன்.பேப்பர் போடுபவர் சைக்கிளை நிறுத்துவதற்குள் நான் அவரை நெருங்கியிருப்பேன். இருட்டில் வார்த்தைகள் தெரிகிறதா என்று துலாவிப் பார்ப்பேன்."கண்ணைக் கெடுக்காம அடங்க மாட்ட.." என்ற வசவுகள் என்னை தாண்டிச் செல்லும்.

அப்புறம் எங்கும் புத்தகம்,துண்டு காகிதம் கிடைத்தாலும் வாசிப்பது - சாப்பிடும் போது,பஸ் பயணத்தில்.அதிலும் எதை வாசிப்பேன் என்றால் பயணத்தின் போது புத்தகம் வாசிக்கக் கூடாது இப்படி இருக்கும் வரிகளை இரண்டு முறை படிப்பேன். என் ஆர்வக் கோளாறால் அப்பா நூலகத்திற்கு அழைத்து செல்ல அங்கு குடுத்த புத்தகத்தை நிமிர்ந்து கூட பாக்காமல் ஒரு மணி நேரத்தில் முடித்திருந்தேன்.இவ்வளவு வேகம் கூடாது.கண் பார்வை பாதிக்கும் என்று மிரட்டினார்.உண்மையான காரணம் நான் அடுத்த புத்தகம் கேட்டேன்.

தொல்லை தாங்காமல் பத்து வயதிலேயே தண்ணித் தெளித்து விட்டார்கள்.அம்புலிமாமா எல்லாம் பெரியவங்க படிக்கும் என்று சொன்ன ஒரு பெண்மணியைப் பார்த்து பயங்கரமாக சிரித்தேன்.காரணம் அன்று காலையில் படித்திருந்த மண்குதிரை நாவல். கதை - அம்மா,பெண் இருவரையும் காதலிக்கும்,மயக்கும் அவர்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஒருவன்.மாலையில் அம்மா தரும் டிகாஷன் என்றால் இரவில் பெண்ணிடம் சேர்ந்து குல்பி. இப்படி சதிராடும் வேளையில் மாடியில் இருந்து இறங்கி வரும் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள்.காலையில் யாரும் இல்லாத பொழுது தீக்குளித்து விடுகிறாள்.பெண்ணுக்கு விஷயம் தெரிந்து அவனை அடித்து துரத்துகிறாள்.இந்த நாவலை பதுக்கி பதுக்கி படித்தேன்.போர்வைக்குள், இருட்டில் எவ்வளவு வேகமாக முடியுமோ அத்தனை வேகம். இதே பாணியில் இதற்கு நேர் மாறான கதை டிஸ்கியில்.

பிறகு தொலைக்காட்சி கறுப்பு வெள்ளையில்.கிராமத்தில் அரிதாக புழக்கத்தில் இருந்தது. வீட்டின் சொந்தகாரன் என்பதால் இருக்கும் இரண்டு சேனல் மாத்த அருகிலேயே அமர்ந்து எல்லோருக்கும் தொல்லை குடுப்பேன்.சென்னை வந்தப் பிறகு பதின்ம வயதின் படிக்கட்டுகளில் நடக்கவேயில்லை.ஓடினேன். விஜய் தொலைக்காட்சியில் சென்ஸார் செய்யாத காட்சிகள் வரும். அதை பார்க்க டி.வியின் முன் நின்று கொள்வேன். யாராவது வந்தால் சேனல் சேஞ்சுவேன்.இப்படி டிவி பாத்தா கண்ணு என்னத்துக்கு ஆகும் என்று யாராவது அங்கலாய்ப்பார்கள்.

2004லில் சிஸ்டம்.ஒரு நாள் செமஸ்டர் தேர்வை வைத்துக் கொண்டு விடிய விடிய கேம்ஸ்.முடித்து விட்டு ஒய்ந்தேன்.அந்த தேர்வில் தான் அதிக மதிப்பெண்.

2006லில் மும்பை வந்தவுடன் பெண்கள் அணிந்த ஆடையைக் கண் கொட்டாமல் பார்த்தது நினைவுக்கு வருகிறது.அதுவும் வெள்ளி கிழமைகளில் சிறுவர் மலர் படிக்க காத்திருந்த அனுபவம் தான்.

2008லில் இருந்து இணையக் கிறுக்கு பிடித்து ஆட்டுகிறது.ஒரு நாளைக்கு எத்தனை படிக்கிறேன்.எழுதுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.
ஆனா கண் கெட்டு விடும் என்று சொல்வதற்கு தான் அருகில் யாருமில்லை.

டிஸ்கி :

மண்குதிரை கதைக்கு நேர் மாறான கதை - புளிக்காரக்கா நர்சிமின் கை வண்ணத்தில்.படித்துக் கொண்டிருக்கும் போது யாரோ வருவது போலத் தெரிய நேராக பின்னூட்டங்களுக்கு வந்து விட்டேன்.தல அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கி இருக்கிறார்.நான் அவரிடம் ஒரு குறி சொல்லி இருக்கிறேன். பலிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

மண்குதிரையில் அம்மா தற்கொலை செய்து கொள்வாள்.நர்சிம் கதையில் பெண்.

அங்கே பெண் அடித்து துரத்துவாள்.இங்கே அம்மா வர சொல்கிறாள்.

பேய் தொடக்கம் தான் மெதுவாக இருந்தது.முடிவில் மராத்தான் ஓடுவது போல ஒரு உணர்வு.

ஏதாவது ஒரு கதை படிக்கும் போது பழைய நினைவுகளில் மூழ்கினால் அது தான் அந்த கதயின் வெற்றி.நர்சிம் எழுதிய பல பதிவுகளில் அதை நான் அனுபவித்தேன்.

மண்குதிரையும் சரி,நர்சிம் கதையும் சரி இரண்டையும் ஒளித்து வைத்து தான் படித்தேன்.

Thursday, December 17, 2009

பாலுமகேந்திராவின் பள்ளி

பத்தாவது படிக்கும் போது தசரதபுரத்தில் கிரிக்கெட் விளையாட செல்லும் போது பாலு மகேந்திராவின் கட்டி முடிக்கப்படாத வீட்டின் வழியாக தான் செல்வோம்.வீடு படத்திற்காக கட்டிய வீடு என்று பின்னர் தான் தெரிந்தது.பிறகு ஒரு நாள் அந்த படம் பார்க்க நேர்ந்த போது அதன் யதார்த்ததில் சற்று உறைந்து தான் போனேன்.வீடு படத்தில் அர்ச்சனாவும்,பானுசந்தரும் அந்த வீட்டை கட்டி முடிக்கப் போராடுவார்கள்.இறுதி வரை முடிக்கவே முடியாது.மைதானத்தில் ஒழுங்காக விளையாடுவனை கலாய்ப்பது,ஜெயிக்க வேண்டிய மாட்ச்சைத் தோற்றுக் கொடுப்பது - இதனால் கடுப்பாகி எங்களை அடுத்த மேட்ச்சில் சேர்க்க மாட்டார்கள்.மறுபடியும் பாலுமகேந்திராவின் வீடு வழியாக மெதுவாக நடந்து செல்வோம்.அந்த வீடு தான் பாலு மகேந்திராவின் பள்ளியாக உருவாகியிருக்கிறது.

பாலு மகேந்திரா - புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவில் தங்கப்பதக்கம்.(சினிமா மேல் உள்ள ஆசையால் தம்பியை இந்த கல்லூரியில் தான் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த கல்லூரியின் கட்டணத்தைப் பார்த்து பின் வாங்கியிருந்தோம்.பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் விஸ்காம் படித்து விட்டு சி.டி.எஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறான்.சினிமா கனவு அடுத்த தலைமுறைக்குத் தள்ளி வைக்கப்பட்டது).முதல் படம் மலையாளத்தில் அதற்கு மா நில அரசு விருது.படம் பெயர் நெல்லு.(இந்த பெயரில் நாம் இப்போது தான் படம் எடுக்கிறோம்.அதுவும் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று சொன்னப் பிறகு.பெயர் வைப்பதில் கூட நாம் எங்கே இருக்கிறோம் என்பதற்கு இது தான் நிதர்சனம்.அப்ப கதையில் - ?????)

ரவி.கே.சந்திரன் ஒரு முறை பாலு மகேந்திரா கேமிரா வைத்த இடத்தில் வைத்த கோணத்தில் நாங்கள் சின்னப் பிள்ளைகள் மாதிரி கேமிரா வைத்து சந்தோஷப்படுவோம் என்று சொன்னார்.காரணம் ஷோபாவை பாலு மகேந்திராவின் கேமராவைத் தவிர யாருடைய கேமிராவும் அவ்வளவு அழகாக காட்டவில்லை.உதாரணம் முள்ளும் மலரும் - செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்.அழியாத கோலங்கள்,மூடுபனி.காரணம் கேட்டப் போது பாலு மகேந்திரா சொன்னாராம் - "நான் ஷோபாவை காதலோடு பார்த்தேன்.."

தமிழில் முள்ளும் மலரும் படத்திற்கு பிறகு அவர் பிற இயக்குனர்களின் படங்களில் ஒளிப்பதிவு செய்யவில்லை.அவர் ஒளிப்பதிவு மட்டும் செய்ய ஆசைப்பட்ட இயக்குனர்கள் இருவர் தான் - மணிரத்னம்,கற்றது தமிழ் ராம்.

இயக்கிய முதல் படம் - கோகிலா.கன்னடத்தில் கமல்,ஷோபா,மோகன் நடித்தது.கமல் நடிப்பை விமர்சனம் செய்த மதனுக்கு கமல் இந்தப் படத்தை சிபாரிசு செய்தாராம்.கமல் நடிப்பின் உச்சம் தொட்ட படம் என்று சொல்லலாம்.காரணம் பாலு மகேந்திரா மற்றும் யதார்த்தம்.

இன்று அவர் சினிமா கற்றுக் கொடுத்த இயக்குனர்கள் வழியாக அந்த யதார்த்தம் தமிழ் சினிமாவில் தொலையாமல் இருக்கிறது.

இன்று பெரிதாக பேசப்படும் இயக்குனர்கள் பாலா,ராம்,வெற்றிமாறன் எல்லாரும் குறைந்தப் பட்சம் அவருடன் எட்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள்.

இளையராஜாவை விட்டு எல்லோரும் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றாலும் விதிவிலக்கு பாலு மகேந்திரா,கமல் (அவர் இயக்கும் படத்தில் இளையராஜா இருப்பார்.அவர் இயக்க நினைத்த மர்மயோகியில் ஏ.ஆர்.ரகுமானோடு இணைய நினைத்தாலும் விதி அவரை செய்ய விடவில்லை.)

அவுட் ஹவுஸில் பாலா தங்க வைத்து காலையில் எழுப்பி ஆங்கில நாளிதழ்கள் படிக்க சொல்வாராம்.சத்தம் வீடு வரை கேட்க வேண்டும் என்று சொல்வாராம். பாலா தனியாக முதல் படம் செய்யும் போது பாலு மகேந்திராவின் குரு குடுத்த வியூ வைண்டரை குடுத்தாராம்.பாலா அதை அமீருக்கு பருத்தி வீரம் வந்த பிறகு கழுத்தில் மாலையாக போட்டாராம்.அந்த பரிசை எட்டி உதைக்கும் விதமாக யோகி வந்து விட்டது.

குருகுல வாசம் போல் அவர் அருகில் இருந்து பிள்ளைகள் போல் வளர்ந்து சினிமா கற்றுக் கொண்டதன் பயன் தான் யதார்த்தம் - பாலாவின் சீடர்களிடமும் கொஞ்சம் இருக்கிறது.அதற்கு பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம்(எனக்கு இந்த இரண்டு படங்களும் பிடிக்கவில்லை அது வேறு விஷயம்).

பொல்லாதவன் - வில்லனை கூட கம்பீரமாக சித்தரித்த படம்.கற்றது தமிழ் - சில் காட்சிகளும் பாடல்களும் எனக்கு பிடித்து இருந்தது.

பாடல் காட்சிகளை நடன இயக்குனர்களிடன் குடுத்து நடனம் அமைக்காமல்,காட்சிகள் மூலமாகவே நகர்த்த தெரிந்த இயக்குனர்கள் தான் முழுமையானவர்கள்.பிண்ணனியில் பாடல்கள் ஒலிக்கும் (சேது,பிதாமகன்,பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம்,பொல்லாதவன்,கற்றது தமிழ் - இப்படி எல்லாமே பாலு மகேந்திராவின் வாரிசுகள் தான் அல்லது அவரின் வாரிசுகளுக்கு வாரிசுகள்)

நிறைய வெளிபடங்களைத் தழுவி இருந்தாலும் அதில் நேடிவிட்டி இருக்கும்.ஒரு பெரிய அதிசயம் என்னவென்றால் சைக்கோ பார்த்துக் கொண்டிருக்கும் பாதியிலேயே அதை கண்டுப்பிடித்து விட்டேன் அதை தமிழில் மூடுபனியாக பார்த்து இருக்கிறேன் என்று.அதனால் பாதியிலேயே படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.மூடுபனி பாடல்கள் படத்தில் தவிர எதுவும் உருப்படி இல்லை.

1993ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதிற்காக தேவர் மகனும்,ரோஜாவும் மோதிக் கொண்டது.அதை முடிவு செய்யப் போவது பாலு மகேந்திராவின் ஒரு ஓட்டு.கமலும்,இளையராஜாவும் பாலு மகேந்திராவுக்கு நெருங்கிய நண்பர்கள்.ஆனால் அவர் ஓட்டுப் போட்டது ரோஜாவுக்கு. காரணம் முதல் படத்திலேயே சாதித்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அவர் கொடுத்த அங்கீகாரம்.மோதிர கைக்குட்டு.

கட்டணம் செலுத்தி அவரிடம் மாணவர்கள் படித்தாலும் இனி ஒரு பாலா உருவாவது கஷ்டம் தான்.முதலிலேயே குரு தட்சிணை குடுத்து படிப்பவர்களிலிருந்து யாரும் அவ்வாறு உருவாவது கிடையாது.

வாத்தியார் பிள்ளை மக்கு என்பது போல அவர் மகன் ஷங்கி பெரிய அளவு சாதிக்கவில்லை.ஷங்கியின் மகன் இன்னொரு பாலு மகேந்திராவாக வர வாழ்த்துக்கள். நிச்சயம் வருவார் என்று பாலு மகேந்திராவின் சந்தோஷத்தில் தெரிகிறது.

டிஸ்கி :

கமல் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் நடிக்கிறார் என்று ஒரு வதந்தி கிளம்பியது.அது உண்மையாக வேண்டிக் கொள்கிறேன்.

ஏணிப்படிகள் படமும்,நடிகை ஷோபாவின் மரணமும்

ஏணிப்படிகள் படம் ரொம்ப நன்றாக இருக்கும் என்று அம்மா பல தடவை சொன்னாலும் அது திரையிடும் போது ஏதாவது ஒரு வேலை வந்து விடும்.இல்லை வெளியில் இருக்கும் போது திரையிடப்படும்.பல தடவை படம் பார்க்க முடியாமல் போய் விட்டது.முந்தா நாள் தான் இந்த படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதில் வந்த பெயர்களே வசீகரித்தது - ஷோபா,கதை - கே.விஸ்வநாத்,மகேந்திரன்,பி.மாதவன்,கே.வி.மகாதேவன் என்று ஜாம்வாங்களின் பெயர்கள் வரிசையாக அணி வகுத்தது.

ஒரு சாதாரண கதை - திரைக்கதை மகேந்திரன் அருமையான திருப்பங்கள் படத்தில் இருந்தது.உலகப் படங்களில் மோகம் பிடித்து அலையும் ஞானக் கிறுக்கர்கள் இந்த படத்தைப் பார்த்து விட்டு குறட்டை விடலாம்.

தியேட்டரில் குப்பைப் பொறுக்கும் பெண் பெரிய நட்சத்திரம் ஆகிறாள்.அதற்கு அவளுடைய காதலன் உதவுகிறான்.உறவுகளின் சூழ்ச்சியால் காதலர்கள் பிரிகிறார்கள்.பிறகு சேர்ந்தார்களா என்பது தான் கதை.

இந்த படத்தில் வரும் காட்சிகள் - ஷோபாவின் நிஜ வாழ்க்கையை சித்தரித்து காட்டியது.எனக்கு இதில் ஒருவருடைய நடிப்பு தான் பிடித்தது என்பதை விட கவர்ந்தது.அது - சத்யராஜ் ஷோபாவின் அண்ணனாக நடித்து இருந்தார்.ஜோடி தான் நம்ப முடியவில்லை.சி.ஐ.டி சகுந்தலா.

நடிகை லஷ்மியின் இரண்டாவது கணவர் மோகன் இந்த படத்தில் நடித்துள்ளார்.(கோலங்கள் அபி,ஆதியின் அப்பாவாக வருவாரே..)

பணம்,புகழ்,அந்தஸ்து அதில் வெளியே வர முடியாமல் தவிக்கும் ஷோபா பிரபல நடிகையாக மாறி மரித்தும் விடுகிறார்.நிஜ வாழ்விலும் அது தான் நடந்தது. படத்தில் வரும் திருப்பம் போல நடந்திருக்க கூடாதா என்று கொஞ்ச நேரம் ஏங்கித் தவித்தேன்.

முப்பது வருடங்களுக்கு முன் வந்த கதை என்பதை நம்ப முடியவில்லை.நான் நடிகை ஆகா விட்டால் டாக்டர் ஆகியிருப்பேன்,எனக்கு பிடித்த எழுத்தாளர் என்று படிக்காத கை நாட்டு அடித்து விடுவது எல்லாம் சம காலத்திலும் நடக்கிறது.அதை அன்றே பகடி செய்து உள்ளார்கள்.

புலியைப் பார்த்து பூனை சூடுப் போட்ட கதையாக மனோரமாவின் கிளைக்கதை.

"பூந்தேனில் கலந்து.., பொன்வண்டு எழுந்து.." அருமையான பாடல்.

இவ்வளவு நாள் இந்த படத்தைப் பார்க்காமல் இருந்து விட்டேன்.

துணைக் கதாபாத்திரங்கள் திரைக்கதை நகர மிகவும் துணை நிற்கிறது.

சாணித் தட்டும் பெண் - வாய்ப்புத் தேடும் பெண் - முதல் பட நாயகி - வெற்றி பெற்ற நாயகி அருமையான நீரோட்டம் போல கதையின் நாயகியின் சீரான நடிப்பு.

ஷோபாவின் நிஜ வாழ்க்கையின் போக்கையே சித்தரித்த படம் என்று தான் சொல்ல வேண்டும்.அது தெரியாமலே அந்த படத்தில் நடித்து இருக்கிறார்.பதினெட்டு வயதில் பசி படத்தோடு அவருடைய திரைப் பிரவேஷமும்,இந்த உலக பிரவேஷமும் ஒன்றாக முடிந்து விட்டது.படத்தின் முடிவில் அவருடைய சேலையை கடலில் இருந்து கொண்டு வருவார்கள்.நிஜத்தில் அவருடைய மெல்லிய உடலின் பாரம் தாங்காமல் சேலை கிழிந்து இருந்ததாம்.

சாசனம் படத்தில் மகேந்திரனின் திரைக்கதை எவ்வளவு மோசமாக இருந்ததோ அவ்வளவு சிறப்பாக இதில் இருந்தது.

டிஸ்கி :

மகேந்திரன் இது மாதிரி திரைக்கதையை ஒரு புதுப் படத்திற்கு எழுத வேண்டும்.ஷோபா போல நாயகியை உருவாக்க வேண்டும்.திரும்பவும் படம் எடுக்க வருகிறார் என்று படித்தேன்.வாழ்த்துக்கள் மகேந்திரன்.

Wednesday, December 16, 2009

தனி குலுங்கானாவைத் தொடர்ந்து தனி பைலாபுரம்

குலுங்கானா கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவதாக அறிவித்த காரணத்தால் நாடு முழுவதும் கோரிக்கைகள் வருகிறது. தனி குர்க்காலேண்ட் வேண்டும் என்று ஆட்சியில் இருக்கும் சாயாவதியும் கேட்கிறார்.அதை பார்த்ததும் தைலாபுரத்தில் பரபரப்பு.நாம இப்படியே இருந்தால் மரம்வெட்டி,பச்சோந்தி என்ற பட்டங்கள் தான் மிஞ்சும்.எப்படியும் முதல்வர் என்ற பட்டம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து பைலாபுரம் செயற்குழு கூடி கும்மியடித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்கிறது.

குண்டாக இருக்கும் தொண்டன் - "ஐயா,குலுங்கானா ஐம்பது வருஷக் கோரிக்கை.அதனால் தான் மத்திய அரசு ஒத்துக்கிட்டாங்க..நாம தைலாபுரத்தைத் தனி ஸ்டேட்டா கேட்டா தருவாங்களா.."

ஆமதாஸ் - "வரலாறு தெரியாம பேசாத.. எங்க அண்ணா காலத்திலே நாம தனி நாடு கேட்டாச்சு..கூட்டிக் கழிச்சு பாரு ஐம்பது வருஷம் வரும்..வரலன்னாலும் பரவாயில்ல ரெண்டு மூணு மரத்தை வெட்டிப் போட்டு சேத்துக்கோ.."

கூடுகட்டி - "பைலாபுரம் தனி ஸ்டேட்டா மாறிச்சுன்னா..எனக்கு கூடுகட்டிய தனி மாவட்டம் என்று அறிவிக்கணும்..எனக்கு வரலாறு தெரியும்.."

ஆமதாஸ் - "அந்தப் பெட்டியத் தூக்கியது நீ தானே..அப்புறம் வழக்கம் போல எல்லைப் பிரச்சனை செய்து இடத்தை விஸ்தரிக்க வேண்டியது.."

கூடுகட்டி - "அதுக்கு என்ன பண்ணப் போறீங்க.."

ஆமதாஸ் - "அதான் ஆவ் காட்டிய வழி தான்..தொடர் உண்ணாவிரதம் தான்.."

கூடுகட்டி - "இருங்க அரை மணி நேரத்தில் வந்து விடுறேன்.."

ஆமதாஸ் - "எங்கப் போற.."

கூடுகட்டி - "உண்ணாவிரதம்னு சொன்ன உடனே வயிறு கலங்கி விட்டது..இருங்க "லைட்டா" சாப்பிட்டுப் போட்டு வர்றேன்.."

ஒட்டுக் கேட்கும் உள்ளூர்த்துறை தலைவருக்கு பேக்ஸ் அனுப்புகிறது.

ஏற்காடு சாமி - "தலைவரே பேக்ஸ் வந்து இருக்கு.."

ஆசிரியர் - "முதல்ல அதை கிழிச்சிப் போடு.."

கிழித்துப் போட்டவுடன் உள்ளூர்த்துறை ஐ.ஜியை போனில் லெஃப்ட் ரைட் வாங்குகிறார்.

ஆசிரியர் - "இனி எதுவா இருந்தாலும் தந்தி தான் அனுப்பணும்..முதல்ல அந்த தத்திப் பசங்களை மாத்துங்க.."

தந்தி வந்ததும் படித்து விட்டு ஏற்காட்டார் காதில் கிசுகிசுக்கிறார்.

பேக் டூ பைலாபுரம்..

ஆமதாஸ் - "ம்..ம்.. உண்ணாவிரதம் தொடங்க வேண்டியது தான்..எல்லாரும் நல்லா சாப்பிடுங்க..காலையில் ஏழு மணிக்கு தொடங்கி மத்தியானம் ஒரு மணிக்கு முடிச்சிரலாம்..எல்லாம் அண்ணன் காட்டிய வழி.."

கூடுகட்டி - "ஐயா..ஒன்பது மணிக்கெல்லாம் முடிக்க முடியாதா..எதுக்கு வெறும் அஞ்சு மணி நேரம்..நூத்தி இருபது நிமிஷம் இருக்கலாமா.."

ஜே.கா.கனி - "நாம அப்படி எல்லாம் உண்ணாவிரதம் இருக்க முடியாது..அவங்க அதுக்கு காப்பிரைட்ஸ் வாங்கிட்டாங்களாம்.."

ஆமதாஸ் - "யார் தடுத்தாலும் இது தொடரும்..ஆளுக்கு அரை மணி நேரம்..ஆள் மாத்தி ஆள் மாத்தி உண்ணாவிரதம் இருப்போம்.."

கூடுகட்டி - "தலைவரே அப்ப நான் தான் கடைசி.."

உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்புறம் இரண்டு மரங்களை வெட்டிப் போட்டு அடைத்து விட்டு யாருக்கும் தெரியாமல் சாப்பிடுகிறார்கள்.

முதல் பந்தியில் அமர்ந்த கூடுகட்டி இரண்டாவது பந்தியிலும் தொடர்கிறார்.

பந்தி பரிமாறும் ஆள் - "நீங்க இன்னும் எந்திரிக்கலையா.."

கூடுகட்டி - "உனக்கு ஞாபக சக்தி அதிகம்..எனக்கு ஜீரண சக்தி அதிகம்..தமிழக மக்கள் தான் எல்லாத்தையும் மறந்துருவாங்களே அப்புறம் நீ எப்படி..சட்டிப் பொட்டியத் தூக்கணுமா.."

ப.ப.ஆள் - "நான் ஆந்திரா.."

சாப்பாடு முடிந்ததும்..

கூடுகட்டி - "நிருபர்கள் எல்லாம் வர்றாங்க..ஏடாகூடமா ஏதாவது கேப்பாங்க..நீங்க பேசாம உண்ணாவிரதத்தோடு சேர்த்து மவுன விரதமும் இருங்க.."

ஆமதாஸ் கூடுகட்டியை ஊத்துப் பார்க்கிறார்.

கூடுகட்டி - "என்ன தலைவரே அப்படி பாக்குறீங்க.."

ஆமதாஸ் - "மூக்குப் புடைப்பா இருக்கான்னு பாக்குறேன்..மவுன விரதம் இருந்தா விருத்தாசலத்துல கவுன்சிலர் கூட ஆக முடியாது..தாடியார் கூட தான் கூட்டணி வைக்கணும்"

ஜே.கா.கனி யாரும் இல்லாத கூட்டத்தில் சொற்பொழிவு ஆத்துனு ஆத்துனு ஆத்துகிறார்.எச்சில் தெறிக்கிறது.தீடிரென மேடைக்குப் பின்புறம் இருந்து புகை வருகிறது.

ஜே.கா.கனி - "யாருடா அங்க புகைப் பிடிக்கிறது.."

ஆமதாஸ் காதில் சொல்கிறார் - "பின்னாடி சமையல் வேலை நடக்குது..நீ சாப்பிட்டு வந்துட்டு என்னை சாப்பிட விடாம பண்ணாதே.."

கூடுகட்டி ஆத்த வருகிறார்.எச்சில் லேசாகத் தெறிக்கிறது.

ஆமதாஸ் - "மழை விட்டு விட்டது..தூவானம் அடிக்கிறது.."

பொன்னுமணி உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார்.

ஆமதாஸ் - "என்ன இங்க இருக்கிற.."

பொன்னுமணி - "என்ன விட்டு விடுங்க..ஒரு மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சி நான் டீனா வேலை பாக்குறேன்..டாக்டரா வேலை பாக்க கே.எஸ் குவிக்குமார் வருவாரா.."

ஆமதாஸ் - "விதையப் போட்டா உன் பேரன் அனுபவிப்பான்..ஆனா மரத்தை வெட்டி பாரு..பலனை நாமளே அனுபவிக்கலாம்.."

பொன்னுமணி - "சீக்கிரம் விதையைப் போடுங்க..நம்ம புள்ளைங்க வெட்ட மரம் இல்லாம போயிரும்.."

நிருபர்கள் நேரம்..

நிருபர் - "தனி மாநிலம் கிடைச்சா என்ன பண்ணுவீங்க..விவசாயம் பண்ணுவீங்களா..அதுவும் குறிப்பா மரம் நடுவீங்களா.."

ஆமதாஸ் - "நீ அந்த டி.வி தானே..மரத்துக்கு கால் வலிக்க கூடாதுன்னு படுக்கப் போட்டா இந்த மாதிரி பேசக் கூடாது.."

நிருபர் - "உங்களுக்கு பிடிச்ச பாட்டு.."

ஆமதாஸ் - "மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்.."

நிருபர் - "உங்களுக்கு பிடிச்ச பழமொழி.."

ஆமதாஸ் - "தனி மரம் தோப்பாகாது.."

நிருபர் (மனதுக்குள்) - "இருக்க விட்டாதானே தோப்பு ஆகும்.."

ஆமதாஸ் - "மைன்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் கேக்குது..பசுமை தாயகம் திட்டத்தில் இதுவும் உண்டு..உனக்கெல்லாம் கரண்ட் கட் ஆக மாட்டேங்குதே.."

நிருபர் - "உங்க எதிர்காலத் திட்டம்.."

ஆமதாஸ் - "சிலிக்கான் வேலி மாதிரி மரவேலி அமைப்போம்.."

மாநிலம்,மத்தியில் இருக்கும் இரண்டு அரசுகளுமே கண்டுக் கொள்ளவில்லை.மரம் வெட்டி விறகாக்கி சமைத்து சாப்பிடுவது மட்டும் தொடர்கிறது. புகை ஓசோனில் ஓட்டையை இன்னும் பெரிதாக்க குய்.நா சபையின் தலையீட்டால் தனி மாநிலம் தர மத்திய அரசு முடிவு செய்கிறது.

சிருத்தாலம் தான் தலை நகரம் மற்றும் ஒரே மாவட்டம்.

அதிலும் போட்டியிட்டு குஜயகாந்த் வெற்றி பெறுகிறார்.அவர் முதல்வராகி விட திரும்ப உண்ணாவிரதப் போராட்டம் செய்ய முடிவு செய்கிறார்கள்.

பொன்னுமணி - "என்ன எல்லோரும் வெறுங்கையோடு வர்றீங்க.."

தொண்டர்கள் - "நாம போன முறை செய்த போராட்டத்திலேயே ஒரு சுள்ளியை கூட விட்டு வைக்கவில்லை..பின்ன மரம் எங்கே இருக்கும்.."

பொன்னுமணி - "அடுத்து என்ன பண்ணலாம்..தேர்தல் வேற வருது.."

பக்கத்து மாநிலங்களில் இருந்து மரம் கடத்த முயற்சி செய்து முடியாமல் மரங்கள் டி.வியில் தமிழ் பேசினால் மரப்பாச்சி பொம்மை நிகழ்ச்சி நடத்த செல்கிறார்கள்.

சாருவுடன் முரண்பாடு - மிஷ்கின்,இளையராஜா

சாருவுடன் முரண்பாடு என்று சொல்வதை விட அவரின் கருத்தோடு வந்த முரண்பாடு என்று சொல்லலாம்.காரணம் மிஷ்கின்,இளையராஜா.

முதலில் மிஷ்கின் - அமீர் ஆப்பிரிக்கப் படத்தைத் தழுவி எடுத்தார்.இவர் மட்டும் ஜப்பானிய படமான கிகுஜிரோ தழுவாமலா எடுத்து இருக்கிறார்.அமீரின் திருட்டு என்று வெளுத்து எடுத்து இருக்கிறார்.லுங்கியைக் கூட சரியாக கவனித்து இருக்கிறார்(ஞானி "பாசம்").ஆனால் மிஷ்கினை ஒன்றுமே சொல்லவில்லை.

அஞ்சாதே வெளியான சமயத்தில் மிஷ்கினின் பேட்டியில் இருந்து சில வரிகள் - "சித்திரம் பேசுதடி படம் முடிந்தப் பிறகு எனக்கு அடுத்தப் படம் கிடைக்க ஒரு வருடம் ஆனது.அந்த கோபத்தில் நான் முதலில் எடுத்த காட்சி படத்தின் க்ளைமேக்ஸான கறும்பு காட்டில் எடுத்த காட்சிகள் தான்.

ஏற்கனவே அஞ்சாதே படம் பார்த்து வாயை பிளந்து இருந்ததால் அவர் மேல் ஒரு மரியாதையைக் கூட்டியது இந்த பேட்டி.சுப்ரமணியபுரம் படத்தை விட இது சிறந்த படம் என்று இன்று வரை சொல்லி வருகிறேன்.இப்படி படம் கிடைக்காத சமயம் - போராடும் குணமும்.படம் கிடைத்தப் பிறகு அடுத்தவன் கற்பனைத் திருடும் இல்லை தழுவும் குணமும் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

சமீபத்தில் ஆனந்த விகடன் படித்தப் போது அவர் சொன்ன பதில்கள் அவர் மேலிருந்த மரியாதையை முற்றிலும் குறைத்து விட்டது.

ரசிக்கும் எதிரி - ஜப்பானிய இயக்குனர் கிடானோ.(யார் என்று பார்த்தால் கிகுஜிரோ படத்தின் இயக்குனர்).அவரோடு சேர்ந்து நந்தலாலா பார்க்க வேண்டும் என்பது தான் ஆசை என்று சொல்லியிருக்கிறார்.

என் ஆசையும் அதேதான்.அவருடன் பார்த்தால் அவர் இப்படித்தான் சொல்வார் - இந்த படத்திற்கு நந்தலாலா என்ற பெயரை விட கிகுஜிரோ தான் பொறுத்தமாக இருக்கும்.(கண்ணதாசன் பரிசளிக்கப் போன கவிதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கவிதை அவர் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.காரணம் அது அவருடைய கவிதை.முயலுக்கு மூன்று கால் என்று தலைப்பு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அந்த நபரிடம் சொன்னாராம்.)

அடுத்த கேள்வி யாருக்கும் இதுவரை தெரியாத உண்மை - நந்தலாலா படம் என் சொந்த வாழ்வின் பதிப்பே என்று அளந்து விட்டது.

திருடுங்க,தழுவுங்க தப்பேயில்லை - ஒரு டைட்டில் கார்டு போட்டு சொல்லுங்கள்.அதுதான் உண்மையான படைப்பாளிக்கு கொடுக்கும் மரியாதை.

கிகுஜிரோவின் கதை - ஒரு சிறுவன் கோடை விடுமுறையில் தாயைத் தேடி செல்லும் கதை.துணைக்கு ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட முதியவன்.

நந்தலாலாவின் கதை - முதியவனுக்கு பதில் வாலிபன் என்று போடுங்கள்.அட என்ன மாற்றம்.

எழுத்து என்பது எழுத்தாளனின் இரத்தம் என்று சொல்லும் மிஷ்கின் கிகுஜிரோ படம் என்ன ஜப்பானிய இயக்குனரின் கழிவா.(இரத்தம் நமக்கு போனால் தான் இரத்தம்.மற்றவனின் முகத்தில் வழிந்தால் அது தக்காளி சாஸ் போல.)

உங்களுக்காக இரண்டு படங்களின் புகைப்படங்கள்.


அட ஜப்பான் படத்தில் சிறுவன் வலதுப்பக்கம் நிற்கிறான்.நந்தலாலாவில் இடதுப்பக்கம் நிற்கிறான்.(யோவ் விளக்கெண்ண..நம்ம ஊர்ல கீப் லெப்ட்.)

அட ஜப்பான் படத்தில் பேண்ட் இடுப்பில் நிற்கிறது.நந்தலாலாவில் இடுப்பில் நிற்கவில்லை கையில் பிடித்திருக்கிறார்.

அட ஜப்பான் படத்தில் நாயகனின் முகம் பார்க்கிறான்.நந்தலாலாவில் திரும்பி நம்மை பார்க்கிறான்.

அட ஜப்பான் படத்தில் வெட்டவெளி.நந்தலாலாவில் ஒரு மரம் இருக்கிறது.

அட ஜப்பான் படம் வண்ணத்தில் இருக்கிறது(புகைப்படம்).நந்தலாலாவில் கறுப்பு வெள்ளையில் இருக்கிறது.(ஒவியம்).

ஆறு வித்தியாசம் கண்டுப்பிடிச்சி சொல்லாமல் இருந்தால் குமுதம் நடுப்பக்கம் என் கனவில் வராதே.

அட ஜப்பான் படம் வெளிவந்து விட்டது.நந்தலாலா இன்னும் வரவில்லை.சரி இது வேண்டாமா அது ஜப்பான்.இது தமிழ்.இதுவும் சரியில்லையா இளையராஜாவின் பெயர் மிஷ்கின் பெயருக்கு முன்னால் வருகிறது.

ஒரு புகைப்படத்தில் இவ்வளவு வித்தியாசம் காட்டும் மிஷ்கின் படத்தில் எவ்வளவு காட்டியிருப்பார்.காப்பி அடிப்பவன் அதிக மார்க் வாங்குவது தான் உலக நியதி.அவன் சரக்கையும் சேர்த்து விடுவான்.அதற்காக காப்பி அடிக்கவில்லை என்று அர்த்தமா.

அடுத்த முரண்பாடு - இளையராஜா.

சீனிகம் படத்தின் தரத்தையும்,நான் கடவுள் படத்தின் தரத்தையும் இளையராஜா இசை தான் குறைத்து விட்டது என்று சாரு சொல்லியிருக்கிறார்.

இசைக்கு இளையராஜாவை குற்றம் சொல்வதில் எனக்கு உடன்பாடே கிடையாது.காரணம் அவரிடம் சேர்ந்து பணியாற்றும் இயக்குனரை தான் குறை சொல்ல முடியும்.

இளையராஜாவால் தான் என்னால் இந்தி பேசும் மக்களைப் பகடி செய்ய முடிந்தது.சீனிகம் பாடல்களை எல்லோரும் விரும்பி கேட்டப் போது நான் சொன்னேன்.இதெல்லாம் நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்னால் கேட்டது என்று நக்கல் செய்ய முடிந்தது.

நான் கடவுள் பாடல்களை விட,பா படத்தின் பாடல்களை விட நந்தலாலா படத்தின் பாடல்கள் தரம் குறைந்தது தான்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான சாபக்கேடு - லூசு பசங்க பாடும் போது மட்டும் கருத்துள்ள பாடல்கள் பாடுகிறார்கள்.

"தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்..
தாய் உன்னை காண தானே தவிச்சு நான் ஓடி வந்தேன்.."

இப்படி ஒரு பாட்டு இளையராஜாவின் குரலில்.

நான் என் அம்மாவை வருடத்தில் இருபது நாள் தான் பார்க்கிறேன்.பார்த்ததும் இப்படி பாடல் பாட நான் ஒரு லூஸாக மாறத் தயார்.

என்னை கவர்ந்த ஒரே பாட்டு - நரிக் குறவர்கள் பாடல்.

மிஷ்கின் படம் என்பதால் இசை உலகத்தரமாகி விடாது.

இருந்தாலும் இந்தப் படத்தை நான் பார்க்க விரும்பும் காரணங்கள்.

ட்ரைலர் ஜோசியம் - அந்த பையன் மிஷ்கினை விட நன்றாக நடித்து இருக்கிறான்.அப்ப மிஷ்கின் - அமீரை விட நன்றாக நடித்து இருக்கிறார்.

கடைசி இருபது நிமிடங்கள் - வசனம் கிடையாது பிண்ணனி இசை மட்டும் தான்.

ரோகினி - மொட்டை அடித்துக் கொண்டு மிஷ்கினின் தாயாக நடித்து இருக்கிறார்.(இது மிஷ்கினின் இடைச்செருகலாக இருக்கும் என்பது சர்வ நிச்சயம்.)

இளையராஜா காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் கொடுத்தார் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது பாரதிராஜா,பாலு மகேந்திரா மற்றும் மணிரத்னம் தான்.அப்படி நந்தலாலா பாடல்கள் நிற்காது என்பது மட்டும் உறுதி.

இளையராஜாவிடம் படு மொக்கையாக இசை வாங்க முடியும் என்பதற்கு உதாரணம் - ஜெகன் மோகினி படம்.

இளையராஜாவை குறை சொல்வதை விட அவரோடு சேர்ந்து பணியாற்றும் இயக்குனர்களைக் குறை சொல்லலாம்.

டிஸ்கி :

இந்த என் சொந்த சரக்கில் எழுதியது தான் - எந்த பதிவையும் தழுவவில்லை.

சாரு சிலாகித்த அளவுக்கு படம் இல்லை என்று ஒத்துக் கொண்ட மிஷ்கினுக்கு இந்த வார பூச்செண்டு.அப்படியே நந்தலாலா படத்தின் மூலம் கிகுஜிரோ படம் தான் என்று ஒத்துக் கொண்டால் இந்த மாத பூச்செண்டு. அப்படியே கிடானோவுக்கு நன்றி என்று டைட்டில் கார்ட் போட்டால் இந்த வருட பூச்செண்டு.இந்த செலவிற்கு ஸ்பான்சர் ஞானி.(அவருக்கு தான் பூச்செண்டு பிடிக்காதாமே.ஆனா குமுதத்தில் தருவதால் அவர் தான் ஸ்பான்சர்.)


தலைப்பில் மட்டும் தான் சாரு.எல்லாம் ஒரு விளம்பரம்.அவர் கூட முரண்பாடா யார் சொன்னது.(பதிவு முடியும் பொது தோசையைத் திருப்பிட்டானே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்)

Tuesday, December 15, 2009

மதன்பா(ஆ)ப்பும்,சாருவின் புத்தக வெளியீட்டு விழாவும்

முதலில் விழாவைத் தொகுத்து வழங்க வருகிறார் நிர்மலா பெரியசாமி.

கீழிருந்து "ஒஜாரி ஒயே.." அப்படி சத்தம் வருகிறது.யார் என்று பார்த்தால் மதன்பாப் முதல் முறையாக புத்தகம் வெளியீடுவதால் அசத்தப் போவது யார் நிகழ்ச்சியில் இருந்து ஒரு குரூப் கோய் சூட்டோடு முதல் வரிசையில் அமர்ந்து இருக்கிறார்கள்.

"வணக்கம்ம்ம்ம்ம்ம்.." என்று நிர்மலா பெரியசாமி ஆரம்பித்தவுடன் சுதாரித்து கடைசி வரிசையில் பம்மி விடுகிறார்கள்.

"அது உஷா இல்லடா.." கோவை குணா சோகத்துடன் சொல்ல அதை கவனிக்காமல் கோட் பட்டனை சரி செய்து கொண்டு இருக்கிறார் மதுரை முத்து.

"வழக்கம் போல நான் தான் முதல்ல..ஆனா என்ன ஒரே ஒரு குறை சிட்டி பாபு சார் தான் வரலை..அவருக்கு பதிலா பத்து ஜட்ஜ்.."

"வந்துட்டாலும்..சனிக்கிழமை ஆனாலே இப்படி கிறுக்குப் பிடிச்சி திரியிறானே.." குணா சோகத்துடன் மேலே பார்க்கிறார்.

"முதலில் விழாவைத் தொகுத்து வழங்குபவர் மனுஷ்யபுத்திரன்.." நிர்மலா பெரியசாமி அறிவிக்கிறார்.

"என்ன அண்ணே என்ன கூப்பிடவே இல்ல..இவரு என்ன விட நல்லா காமெடி பண்ணுவாரா.." இப்படி முத்து புலம்பியது நின்று கொண்டு விழாவைப் பார்க்கும் நர்சிம் காதில் விழுகிறது.

"என்ணங்கள் எழுத வேண்டிய கையால அடிச்சேன் கன்னம் பழுத்துரும்..ஒரே ஊர்காரனா போயிட்ட..அதனாலா சும்மா விடுறேன்.." நர்சிம் கோபத்தில் திட்டுகிறார்.

"இங்கேயும் ஊர்பாசமா..இதே திண்டிவனம் காரன் சொல்லியிருந்தா சும்மா விடுவீங்களா.." என்று ஒரு வளரும் பதிவர் கேட்கிறார்.

"இப்படி சொன்ன உடனே பாம்பேயில இருக்கிறவனுக்கு மூக்கு வேர்த்துரும்..சும்மாவே பாய்ந்து வருவான்.." நர்சிம் சமாதானமாக சொல்கிறார்.

குஜராத் மண்ணின் மோடி மஸ்தான் கேபிளுக்கு போன் போடுகிறார்.சரியாக எஸ்.ராமகிருஷ்ணன் பேச வருகிறார்.கேபிள் ஸ்பீக்கரில் போடுகிறார்.

எஸ்.ராவின் குரல் கேட்கிறது - "மலாவி தேசத்திற்கு போகாமலே அதை விவரித்த பாங்கு அருமையானது.."

குஜராத் மோடி மஸ்தான் கத்துகிறார் - "இது என்ன பிரமாதம்..அவரு சிஷ்யன் இல்ல இப்படி சொன்னா தான் சரியா இருக்கும் அடியாள் ஒருத்தன் ட்ரெயிலர் பாத்தே விமர்சனம் பண்ணுவான்.."

வளரும் பதிவர் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.("இவங்க ஊர்காரர் அமீரை அடிச்ச கோபம்..அதனாலத் தான் இந்த விமர்சனம் வெப்பம்..இல்லன்னா ஒண்ணா தான் திரிவாணுங்க..வெளியில என்னமா நடிக்கிறாங்க..உலக நடிப்புடா சாமி..பாசத்துல மதுரை நெல்லையை விண் பண்ணிரும் போல..")

நர்சிம் மனதுக்குள் நினைத்து சிரிக்கிறார்.("மைன்ட் வாய்ஸ் இங்க வரை கேக்குது..விஜய்யை விட நல்லா நடிக்க முடியுமா..")

கேபிள் - "ஆமா நான் கூட சாருவின் சிஷ்யனா சேரப் போறேன்..அப்பத்தான் நானும் இந்த வாரம் அப்படி தான் விமர்சனம் எழுதணும்.வேட்டைக்காரன் படத்தை வேற பாக்கணுமா..இப்பவே கண்ணக் கட்டுதே.."

மோடி மஸ்தான் - "இங்க வரைக்கும் விஷயம் தெரியும் போல..இன்"ஷூ"ரன்ஸ் கூட தர மாட்டேன் சொல்லிட்டாங்க.."

கேபிள் - "இதுல போலீஸ்காரங்களை எல்லாம் அடிக்கிறாரு..நடக்கிற விஷயமா..ஆனா போக்கிரியில் இவர் போலீஸா நடிச்சா ஒரு அடி கூடப் படாது.."

வளரும் பதிவர் - "ஹலோ..அவர் தமிழன் படத்துல கூட போலீஸை அடித்து இருக்கார்..அப்பவே கேக்க வேண்டியது.."

கேபிள் - "இப்போ நான் ஐ.பி.எஸ்.காந்தி கொலை கேஸ் எல்லாம் நான் தான் விசாரிக்கிறேன்..இந்த பதிவை எழுதியவன் தான் எனக்கும் அந்த பட்டம் குடுத்தான்.."

இரும்புத்திரை - "அண்ணா உங்களுக்கும் தெரிஞ்சிப் போச்சா..பதிவை எழுதியது நைனா தான்னு.."

நைனா - "ரைட் விடு.."

நிர்மலா பெரியசாமி - "இப்பொழுது மதன்பாப் பேசுவார்.."

மதன்பாப் - "ஹி..ஹி..இவரு ரொம்ப நல்ல எழுத்தாளர்..ஹி..ஹி..வேரைட்டி தான் இவரோட ஸ்பெஷல்..ஹி..ஹி..எப்பவும் அப்டூ டேட்டா இருப்பார்.. ஹி..ஹி..அதுலையும் ஸ்டாண்டப்..ஹி..ஹி.."

நர்சிம் - "பாப்பூ வைக்காதீங்க ஆப்பு.."

மதன்பாப் - "சாரு தான் நாலு வரி பேச சொன்னாரு.."

மதுரை முத்து - "என்னை மட்டும் திட்டுனீங்களே..எங்க ஜட்ஜ் கூட சனிக்கிழமை ஞாபகத்தில் தான் இருக்குறாரு.."

ஒரு வழியாக வந்து உக்காருகிறார்.

மிஷ்கினிடம் மதன்பாப் - "எப்படி சார் என் பெர்ஃபார்மன்ஸ்.."

வண்டு முருகன் வடிவேலுவை ஜட்ஜ் ஒரு பார்வை பார்ப்பாரே.அது மாதிரி மிஷ்கின் பார்க்கிறார்.மதன் பாப் திரும்பி கொள்கிறார்.

கடைசியாக சாரு பேச வருகிறார்.

சாரு - "யோகி படத்தில் மதுமிதா லுங்கி அணிந்து இருந்தார்..மூலப்படத்திலும் அது மாதிரி தான் இருந்தது.அது அப்பட்டமான காப்பி..ஆனால் நந்தலாலா அப்படி இல்லை..அங்கு நாயகன் சாதாரண உடையில் இருந்தார்.இங்கு மிஷ்கின் காவலாளி உடையில் இருக்கிறார்.."

மதன்பாப் - "நான் அப்பவே சொன்னேன்..நீங்க தான் கவனிக்கல..அங்கப் பாருங்க..ஸ்டாண்டப் காமெடி எப்படி பிச்சி உதறுறாரு.."

மிஷ்கின் அதை கவனிக்காமல் - "இங்கிட்டு மிஷ்கின்..அங்கிட்டு கமல் சாரா.."

மதன்பாப் - "இது கெஸ்ட் அசத்துற நேரம்..உங்க முதல் ரெண்டு படத்தில் உள்ள குத்துப்பாட்டு தான் பேசப்பட்டதுன்னு நீங்களே சொன்னீங்க..என்ன பண்ணப் போறீங்க..ஆடப் போறீங்களா..இல்ல பாடப் போறீங்களா..இல்ல நடிச்சி அசத்தப் போறீங்களா.."

மிஷ்கின் - "நடிச்சு தான் அசத்தப் போறேன்.." சொல்லி விட்டு அஞ்சாதே படத்தில் வருவது மாதிரி அந்த இடத்தை விட்டு ஓடி விடுகிறார்.

கடைசி வரிசையில் இருந்து "ஒஜாரி ஒயே.." என்று சத்தம் வருகிறது.பதிவர்கள் குரூப் பாய்ந்து வந்து அசத்தப் போவது யார் அணியை அள்ளிச் சென்று நன்றாக "கவனிக்கிறார்கள்".

பார்ட்டியில் ஒருவர் சாருவிடம் வந்து "நீங்க இதுக்கு வடிவேலுவையோ இல்ல கவுண்டமணியையோ கூப்பிட்டுக் கொண்டு வந்து இருக்கலாம்.."

கேபிள் ஓடி வருகிறார் - "அப்ப நீங்க தான் _வுச்சியா.."

கேள்வி கேட்டவர் இடத்தை விட்டு மெதுவாக நகர்ந்து விடுகிறார்.

கேபிள் - "உங்களை விமர்சனம் செய்த _வுச்சி கூட உங்களுக்கு நல்லது செய்கிறார்..உங்க ஜால்ரா என்று சொல்லிக்கிட்டு மும்பையில் இருக்கிறவன் அது அவரு விழாவுக்கு வடிவேலு வரட்டும் என்று பதிவு போடுகிறான்..அவனை நம்பாதீங்க.."

தெலுங்கானா பிரிவை கேள்விப்பட்டு நைனாவிற்கு போன் செய்கிறார் இரும்புத்திரை.

இரும்புத்திரை - "நீங்க நெல்லைக்கு முதல்வரா..எனக்கு துணை முதல்வர் பதவியாவது குடுங்க.."

நைனா - "நீ சென்னை கேளு..புரியுதா வெண்ணை.."

இரும்புத்திரை - "சென்னை என் தல சாருவுக்கு.."

நைனா - "உனக்கு சென்னை வேணுமா..நான் சொல்ற மாதிரி கேளு..சாரு கிட்டப் போய் அடுத்த ஆண்டு புத்தக வெளியீடு விழாவுக்கு குமரிமுத்து தான் வரணும்னு அடம் பிடி.."

இரும்புத்திரை - "ஏன் என் குரு நாதருக்கு கூட்டம் சேர்ந்தா உனக்குப் பொறுக்காதே.."

நைனா - "நான் இதை வச்சு ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்..உன் ப்ளாக்குல நீயே போட்டுக்கோ.."

இரும்புத்திரை - "எப்படியோ ஹிட்ஸ் ஏறினா சரி.."

பதிவுப் போட்டப் பிறகு அதை படித்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்."யோவ் நைனா நீங்க அனுப்புறேன்னு சொன்ன வைரஸ் இது தானா..". பதிவை அழிக்க மறந்து மயங்கி விழுகிறார்.

நைனா - "வழக்கமா டிஸ்கி போடுவானே..நாம போடலையே..இத வைச்சே கண்டுப்பிடிச்சுருவாங்களே.."

மயங்கி கிடக்கும் இரும்புத்திரையை இழுத்து செல்கிறார் நைனா.எதுக்கு தெரியுமா பதுங்குக் குழியில் ஒரு மாமாங்கம் தங்கி ஒளிந்துக் கொள்ளத் தான்.

பிய்யாத தோசை,கன்னிப் பெண்,அப்பாலிக்கா என்ன

சமையலறையில் காத்திருப்பு
பிய்யாத தோசை கிடைக்கும் வரை.
கடைக்காரனோடு சண்டை
உறை பிரித்த ஹீரோ பென்னிற்காக.
முகம் தூக்க்கிப் பிறகு கிடைத்த
வெட்டப்படாத கையளவு அழிரப்பர்
ஆயிரம் காலத்துப் பயிரை நினைத்து
பரிதவிப்பில் ஜோசியக்கார மாமா
சிரித்தப்படி தரையில் ஒரு ஜாதகம்

அப்பாலிக்கா என்ன எதிர்கவிதை தான்

வைன்ஷாப்பில் காத்திருப்பு
அதிகாலையில் இறங்கிய சரக்கிற்காக.
சிப்பந்தியுடன் சச்சரவு
பிரிக்கப்பட்ட மிக்ஸர் பொட்டலம்.
சட்டையைப் பிடித்தப் பிறகு
கிடைத்த அரிய ஓட்டை நாணயம்.
நானூறு வருடப் பழசை மறைத்து
பரிதவிக்கும் போதையில் நண்பன்
அடியில் தட்ட காத்திருக்கும் போத்தல்.

டிஸ்கி :

எனக்கு வேலை அதிகம் வரணும்,என் வலைப்பூவில் வைரஸ் வரணும் என்று சாபம் விட்ட நைனாவிற்கு இந்த கவிதைகள் சமர்ப்பணம்.ஒரு வட போச்சு. முடிந்தால் இரண்டு வடைக்கும் எதிர்வடை போடலாம்.

Monday, December 14, 2009

துவையல் - நையாண்டி ஸ்பெஷல்

சாருவுக்கு இசைப் பற்றி எழுத தான் தெரியும் என்று கொத்துப் புரோட்டாவில் அண்ணன் கேபிள் சங்கர் கொத்தி எடுக்கிறார்.ஆனால் அவன் பதிவுகளை ஒரு இணையத் தளத்தில் காமெடி போஸ்ட் என்று போட்டுக் காமெடி செய்து இருக்கிறார்கள்.ஒரு வேளை அசைவ ஜோக் போடுவதால் இருக்குமோ. கவிதை என்றால் மெதுவாகத் தான் படிக்க வேண்டும் என்று கார்த்திக் கேபிள் அண்ணனுக்கு சொல்லித் தருகிறான்.எண்டர் தட்டி எழுதினால் அது கவிதையாகுமா என்று கேட்டபவர்களுக்கு மத்தியில் எண்டர் கவிதை எழுதியவர் அண்ணன் என்று தெரியாமல் இப்படி எழுதி விட்டாயே கார்த்தி.அலெக்ஸாவில் சாரு,ஜெயமோகனை எல்லாம் முந்தி இருக்கிறார்.அலெக்ஸா ரேங்கில் முதல் ஐம்பதாயிரம் இடத்துக்குள் வர அண்ணன் கவிதை எழுதுவதாக ஒரு வதந்தி.அந்த இணையத்தளத்தில் சாருவுக்கு கூட இடமில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அவரு கிட்ட போய் கவிதையை இப்படி படிங்க அப்படி படிங்க அப்படி சொல்லிக்கிட்டு என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு.

பாதி ஆட்டத்தில் எழுந்து உன் கூட எல்லாம் சேர்ந்தா வீட்ல திட்டுவாங்க,என் தங்கச்சி கோவிச்சுக்கும் இப்படி சொன்னா எப்படி - அதனால என்னைப் பற்றி என்று இருப்பதில் பெருங்கோவம் கொண்டவன் அதை எடுத்து விடவும்,பேரன்பு கொண்டவன் அது தான் பொருத்தமா இருக்கும். அரசியல் எழுதக் கூடாதுன்னு சொன்னதுல இருந்து ரஜினி பா படம் மாதிரி நடிக்கணும் கோரிக்கை எல்லாம் பலமா இருக்கு.ஆனா பிடிச்ச படம் என்று பாட்ஷா படம் இருக்கு. ரஜினி வள்ளி என்று ஒரு படம் எடுத்தார்.ஏன் குறிப்பிடவில்லை.பொக்கிஷம் நல்ல படமா.ஏன் இந்த கொலைவெறி.நீ எழுதும் அரசியல் பதிவு நல்லாயிருக்கு மக்கா.பேசாம அப்படியே எழுது.அப்புறம் வாழ்த்துக்கள்.நான் சொன்னது பலிச்சிருச்சி இல்ல.

இப்பவும் எப்பவும் சேரனின் வாழ்க்கை வரலாறு தான் எனக்கு பிடித்தது என்று சொல்வேன்.மாயக்கண்ணாடி பாக்க ஏழு நாள் எடுத்துக் கொண்டேன். பொக்கிஷம் பார்க்க முடியாமல் ஓடி வந்து விட்டேன்.அதைப் பாத்து முடிக்க எத்தனை வருஷம் ஆகுமோ தெரியல.

இனிமே விஜய் பத்தி எழுதவே கூடாது என்று அஜித் ரசிகர் சொல்லி விட்டார்.நானும் அரை மனதுடன் சம்மதித்து விட்டேன்.இனி வராது.கடைசியாக இது.நைனாவிடம் வேட்டைக்காரன் பாட்ஷா படம் மாதிரி இருக்கு என்று சொன்னேன்.உனக்கு ஏன்யா இந்த கொலைவெறி என்று போனை வைத்து விட்டார்.தப்புத்தான் தப்புத்தான் இனிமே சொல்ல மாட்டேன்.

தமிழ்மணம் விருதுகளுக்காக இரண்டு பதிவுகள் தேர்வு செய்ய சொன்னார்கள்.எனக்கு எதை தேர்வு செய்ய என்று தெரியவில்லை.பின்ன கொஞ்ச நஞ்சமா எழுதி படிக்க வைச்ச அப்படி நீங்க சண்டைக்கு வர்றது தெரியுது.

நோ சொல்லியிருக்கார்.ப்ளாக் எழுதுறதை வைச்சே ஆள் எப்படி என்று சொல்லி விடுவேன் என்று அதுக்கு தான் அன்னிக்கு வந்து என் வலைப்பூவில் மேய்ங்க என்று அழைப்பு விடுத்தேன்.வரவில்லையே.ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது.கென் அடிச்ச அடியில அண்ணனை ரொம்ப நாளா காணோம்.

ரீத்திஷ் எம்.பி சொன்னது தான் எனக்கு பிடிச்சியிருக்கு.சீட் கொடுக்கும் போது உன் தொகுதிக்கு செலவு செய்வாயா என்று கேட்டவுடன் ரீத்திஷ் சொன்னாராம் - "பக்கத்து தொகுதிக்கும் சேர்த்து செலவளிப்பேன்..".அது நட்சத்திர தொகுதி.விரைவில் தல நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.கூப்பிடு தூரத்தில் தான் உள்ளது.(கூப்பாடு என்று படித்தால் அவருக்கு கானல் நீர் படம் அனுப்பப்படும்.)

நமீதா கனவில் வர மாட்டார் என்று சொன்னாலும் சொன்னேன்.குஜராத் மோடி மஸ்தான் என் பதிவு பக்கம் வருவதில்லை.வந்தாலும் பின்னூட்டம் போடுவதில்லை.எனக்கு என்னமோ இவர் குஜராத்தில் இருப்பது போல் தெரியவில்லை.அலெக்ஸாவில் பார்த்தால் டான்சானியா என்று காட்டுகிறது.

டிஸ்கி :

உரையாடல் போட்டி கவிதைகளுக்கு நைனா எதிர்கவிதை போட மாட்டாராம்.என்னுடைய கவிதை தப்பி விட்டது.இனிமே தான் கவிதையே எழுத மாட்டேனே.உரையாடல் போட்டுக்கு மட்டும் தான் எழுதுவேன். அப்ப என்ன பண்ணுவார்.

கவிதைப்போட்டி,கதை எழுதும் போட்டி எங்க நடந்தாலும் நான் கலந்துக்குவேன்.ஆறுதல் பரிசாவது கிடைக்கும் வரை கொலைவெறி தொடரும்.