Wednesday, December 30, 2009

200வது பதிவு - 2009,அலெக்ஸா ரேங்கிங்,பிராபல பதிவர்,பதிவுலகத்துக்கு விவாகரத்தும்

மே மாதம் பத்தாம் தேதி

ரயில்வே டிராக் பக்கத்தில் சரக்கடித்து கொண்டுயிருந்தோம்.அடிக்காத நான் ஒருவன் மட்டும் உளறிக் கொண்டிந்தேன்.மே பீ சரக்கின் வாசனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.பதிவுலகின் சூட்சுமங்கள் தெரியாமல் என்ன எழுதுவது என்றே தெரியாமல் திரிந்து கொண்டிருந்த நேரம். யாருமே என்னை படிக்கவில்லை எனக்கு எழுத வராது என்று நானே முடிவு கட்டியிருந்தேன்.விஜியிடம் புலம்பித் தள்ளினேன்.எந்த கோணத்தில் போனாலும் அந்த இரண்டு மணி நேரம் நான் சொல்லிக் கொண்டிருந்த மூன்று வார்த்தைகள் - (ஐ லவ் யூ இப்படி சொல்லியிருப்பேன் என்று யாராவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.)."பிரபல பதிவர் ஆவேனா..".என் தொல்லை பொறுக்காமல் இரண்டு பீர் நாலாவதை நெருங்கி கொண்டிருந்தது.அன்றே அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது.

டிசம்பர் மாதம் பத்தாம் தேதி

ஏழு நாட்களில் நாற்பது மைனஸ் பிரபலத்தில் ஒரு கால் சேர்த்து பிராபலமாக உருவான நாட்கள்.கும்மாம்குத்துகள் வாங்கிய நாட்கள்.சவாலை ஏற்றுக் கொண்ட நாட்கள்.பதிவுலகத்தை விட்டு விலகி விடலாமா என்று நினைத்த நாட்கள்.அலெக்ஸாவில் நினைத்ததை அடைந்த நாட்கள்.பாலோயர்கள் போய் விடாமல் இருக்க என்ன செய்யலாம் என்று 500 பாலோயர்களை வைத்திருக்கும் வால்பையனின் வாலை முறுக்காமல் கேட்ட நாட்கள். ஏதாவது கயிறு வைத்து இருக்கீங்களா என்று பொறாமையுடன் கேட்ட நாட்கள்.சாருவின் அடியாள் என்று சொன்னவுடன் நெருங்கிய நட்புகள் விலகிய நாடகள்

1500 மீட்டர் ஒட்டப்பந்தயம்
மூச்சிறைக்க ஓடும் போதெல்லாம்
மூக்கருகில் குருதி வாசனை எழும்
கடைசியாக எல்லைக் கோட்டைத் தொடுகிறேன்.
இன்று 200ஐ நெருங்கும் முன்
ரத்தம் வழிந்து கால் செருப்பை நனைக்கிறது
முதலாவது வந்தேனா தெரியவில்லை
கனவில் வராத பின்னூட்டங்களுடன் சஞ்சரிக்கிறேன்
பொறுக்காமல் மேலாளர் உலுக்குகிறார்
"EXETREME LEVEL OF ADDICTION"

அக்டோபர் மாதம் பத்தாம் தேதி

விஜியை பார்க்க டீக்கடையில் காத்திருந்தேன்.நாய் ஒன்று என்னை முறைத்து பார்த்து கொண்டிருந்தது.வரும் போது வாலை மிதித்து விட்டேனா யோசித்து பார்த்தால் தலைவலி தான் மிச்சம்.விஜி வந்தவுடன் "வாங்க போகலாம்.." என்று சொன்னார்.நாய் பக்கத்தில் மட்டும் தான் வழி இருந்தது.(எனக்கு நாயை கண்டாலே அலர்ஜி.சின்ன வயதில் மும்பையில் இருக்கும் போது கரடியை வைத்து வித்தை காட்டுபவன் பின்னால் போக என் பின்னால் பக்கத்து வீட்டு நாய் வர நாயின் வாலை வைத்து என்னை கண்டுப்பிடித்து விட்டார்கள்.வயது இரண்டு.பயமில்லாமல் இருந்தது.வரும் ஜனவரியில் பதிமூன்று மடங்காக பயமும் வயதும் வளர்ந்து விடும்.)நாய் போனால் தான் வருவேன் என்று அடம் பிடிக்கிறேன்.ஜாலியாக இருக்கும் போது தெலுங்கு வசனம் பேசுவது வழக்கம்.அது மாதிரி விஜய் சொல்ல சொன்னார்."நேனு பிரபல பதிவர்லு..இக்கட தீஸ்கோ..அக்கட ஆயாலு சம்பேஸ்தானு" நான் சொன்னேன் - "ஏன்யா இந்த கொலைவெறி..என் பக்கத்து வீட்டுக்காரனுக்கு கூட தெரியாது நான் பிரபலம்னு..இப்படி சொன்னா அது ஆள்காட்டி விரலை கடிக்கும்..டைப் அடிக்க முடியாம இருக்கிற வேலையும் போயிரும்..".அப்புறம் என்னவா நாய் போன பிறகு தான் நான் போனேன்.

ஜூலை மாதம் பத்தாம் தேதி

தமிளிஸ் மற்றும் தமிழ்மணத்தில் இணைந்தப் பிறகு எழுத தொடங்கினேன்.மூன்று நாட்களில் ஆறு பதிவு.2200 ஹிட்ஸ்.நர்சிம்,லக்கி பின்னூட்டம்.ஜெகன் அண்ணாவின் அரவணைப்பு.எனக்கும் என் மேல் கொஞ்சம் நம்பிக்கை பூத்த நாட்கள்.என்னையும் படிக்கிறார்கள் என்று தெரிந்து குதுகலித்த நாட்கள்.ஒருவரும் கண்டுக்கொள்ளாத நிலையில் என்னை படித்த தங்கை கொஞ்சம் கொஞ்சமாக பதிவு வெற்றி பெற்று விடும் என்று நான் நம்பிய போது ஊருக்கு போய் விட்டாள்."உங்கிட்ட இவ்வளவு திறமையா.." அவள் ஆச்சர்யமே எனக்கு அதிசயமாக இருந்தது.என் கவிதையை அடம் பிடித்து வாங்கி படித்து விட்டு இஞ்சி தின்ற குரங்கு போல முகம் மாறிய பெண் நினைவுக்கு வந்தாள்.

ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி

வலைப்பூ ஆரம்பித்து முதல் பதிவு நான் அடிக்க தொடங்கி முடியாமல் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து சோர்ந்து போய் அடுத்து பதிவே அடிக்காமல் சந்தோஷமாக இருந்த நாட்கள்.அந்த சந்தோஷத்தில் ஆனந்த தாண்டவம் பார்த்து தாண்டவம் ஆடாமல் ஒரு விமர்சனப் பதிவை கோட்டை விட்ட நாள். பிறகு சேரனை காய்ச்சி ஒரு பதிவு எழுதி அது மின்சாரம் போனதால் சொல்ல முடியாமல் போனது எதை - பொக்கிஷம் தான் கொரியன் படம் க்ளாஸிக் என்பதை.

நவம்பர் மாதம் பத்தாம் தேதி

பேராண்மை சண்டை கொஞ்ச கொஞ்சமாய் ஒய்ந்த நாட்கள்.எத்தனை பாலோயர்கள் காணாமல் போனார்கள் என்று தெரியவில்லை.ரமேஷ் வைத்யா அண்ணா பாராட்டிய போது அந்தரத்தில் மிதந்த இரண்டு நாட்கள்.சாரு தளத்தில் இன்னொரு முறை பதிவு வந்தப் போது சாரு பாராட்டினார் என்று கேள்விப்பட்டு யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளே மகிழ்ந்த நாட்கள்.மைனஸ் வாங்க ஆரம்பித்த நாட்கள்.பல மொக்கைகளையும் சில நல்ல பதிவுகளையும் எழுத ஆரம்பித்த நாட்கள்.பாராட்டுகளையும் திட்டுகளையும் வாங்கிக் கொண்டு வெளியில் காட்டாமல் திரிந்த நாட்கள்.வீட்டுக்கு நேரம் கழித்து போக ஆரம்பித்த நாட்கள்.

டிஸ்கி : சரி விடுங்க.மெக்ஸிகன் இயக்குனர் பாணியில் எழுதிய பதிவு. வரிசைப்படுத்தி படித்து கொள்ளவும்.

ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி

சாருவின் தளத்தில் நான் எழுதிய கிசுகிசு வெளியான சமயம்.காலையில் என் ஹிட்ஸ் கவுண்டர் ஆயிரத்தில் காட்டிக் கொண்டிருந்தது.நம்பவே முடியாமல் வேறு ஏதோ வலைப்பூக்கு வந்து விட்டேன் என்று நினைத்து மூடி மறுபடியும் திறந்து பார்த்தேன்.அப்போதும் அதே எண்ணிக்கையை விட ஒன்று அதிகமாக காட்டி உண்மை என்று சொல்லியது.தீடிரென் இருந்த பாலோயரில் ஒருவரை காணவில்லை.தேடிப் பிடித்து கண்டுப்பிடித்து அழைத்து வந்தேன்.கொஞ்சம் மனசுக்கு வருத்தமாக இருந்த நாள்.பதிவர்களுடன் நெருங்கிய நாட்கள்.

2010 ஏதோ ஒரு மாதம் பத்தாம் தேதி.

பதிவுலத்தை விட்டு தற்காலிகமாக விலகப் போகும் நாட்கள்.(ஐ ஜாலி..).மூன்று நாட்களுக்கு ஒரு பதிவு வரும் நாட்கள்.அல்லது ஒரு நாளைக்கு மூன்று பதிவு வரும் நாட்கள்.(அதானே பாத்தேன்)

ஜூன் மாதம் பத்தாம் தேதி

என் புருஷனும் அரசாங்க உத்தியோகம் பார்க்கிறார் என்பது மாதிரி உரையாடல் போட்டிக்கு கதை எழுதி அனுப்பினேன்.நர்சிமின் ஒரு பதிவை பக்கத்தில் திறந்து வைத்து கொண்டு காற்கோளையும்,மேற்கோளையும் பார்த்து பார்த்து முற்றுப்புள்ளி வைத்து என் கதையை நானே படித்து நானே பின்னூட்டமும் போட முயன்ற நாட்கள்.சரியான அலைவரிசைக்கு மாற்றும் போது ஏற்படும் இரைச்சல் மாதிரி இருந்தது.

செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி

ஏற்கனவே வடகம்,கூழ்வத்தல் என்று எழுதி பல்ப் வாங்கியதால் துவையல் என்று பெயர் மாற்றி எழுத தொடங்கினேன்.அலெக்ஸா பார்க்க தொடங்கிய நாட்கள்.மே மாதம் பார்க்கும் போது நான் 44 லட்சத்தில் இருந்து புழுங்கி கொண்டிருந்தேன்.யாரையாவது முந்த வேண்டும் என்று டார்க்கெட் செட் செய்து கொண்டு கொலை வெறியாக பதிவு போடத் துவங்கிய நாட்கள்.பத்து லட்சத்துக்குள் வந்து கொண்டிருந்தேன்.கவிதை,கவுண்டமணி-செந்தில்,உன்னைப் போல் ஒருவன் என்று கும்மியடித்து ஒய்ந்த நாட்கள்.இரண்டு முதல் மூன்று பாலோயர்கள் காலி.கண்டுப்பிடிக்க முடியவில்லை.மனது அதற்கெல்லாம் பழகியிருந்தது.பிடிப்பதும் பிடிக்காததும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தான் இருக்கிறது என்று உணர்ந்த நாட்கள்.

2010 ஜனவரி மாதம் பத்தாம் தேதி.

இதுவரை எழுதியதற்கு நண்பர்கர்களைத் தவிர என்ன கிடைத்தது என்று யோசித்த தருணத்தில் பிறந்த நாள் பரிசாக கிடைக்கப் போகும் ஒரு அங்கீகாரத்திற்காக தற்காலிக விவாகரத்தைத் தள்ளி வைத்த நாட்கள்.இன்னும் அடையாத ஒரு லட்சியம் அதை நிறைவேற்ற போகும் நாட்கள். நூறாவது பதிவில் இருந்த எழுத்துப் பிழைகளை எல்லாம் திருத்த உதவிய நாட்கள்.நூறாவது பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன்.பாரபட்சம் இல்லாமல் எல்லோரையும் கலாய்க்க வேண்டும்.

17 comments:

இரும்புத்திரை said...

பதிவுலகத்துக்கு விவாகரத்தா - என்னை மாதிரி உங்களை நம்பி இருக்கும் ஜீவங்கள் நிலை.அப்படி எல்லாம் செய்யாதீங்க

இரும்புத்திரை said...

ஐயோ நான் என் பெயர்ல பின்னூட்டம் போட்டு நானே என்னை காட்டிக் குடுத்துட்டேனே.வேற ஐடியில இருக்கிறேன் என்று நினைத்து போட்டுட்டேனே.முதல்ல போட்டது மனசாட்சி.(எப்படி எல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கு..)

வால்பையன் said...

இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள் தல!

கண்ணகி said...

வாழ்த்துக்கள். இந்த இடத்துக்கு வர எவ்வள்வு கஸ்டம். மனம் திறந்து சொல்லிட்டிங்க.

வால்பையன் said...

//பாலோயர்கள் போய் விடாமல் இருக்க என்ன செய்யலாம் என்று 500 பாலோயர்களை வைத்திருக்கும் வால்பையனின் வாலை முறுக்காமல் கேட்ட நாட்கள். ஏதாவது கயிறு வைத்து இருக்கீங்களா என்று பொறாமையுடன் கேட்ட நாட்கள்.//


நான் யாரையும் வாசகர்களாக பார்ப்பதில்லை, நண்பர்களாகவே பார்க்கிறேன், பகிர்ந்து கொள்ளும் விசயங்கள் நமக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம் ஆனால் நண்பர்களுக்கும் அதே மாதிரி இருக்குமா என அதிகம் யோசிப்பேன்!, தினம் எதாவது எழுதி அவர்களை சங்கடத்துகுள்ளாக்க கூடாது என நினைப்பேன், நண்பர்கள் நமக்கு மட்டுமே நண்பர்கள் அல்ல, நம்மை போல பலருக்கு, விரிவான உரையாடலுக்கு நேரம் எடுத்து கொள்ள வேண்டும், அவர்களுடய முழு நேரத்தையும் நாமே எடுத்து கொள்ள கூடாது என நினைப்பேன்! பதில் மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்!, கருத்து வேறு நட்பு வேறு என நினைப்பேன், மாறுபட்ட கருத்துகள் இருந்தால் தயங்காமல் சொல்லுவேன்!, இவையெல்லாம் செய்கிறேன் என்று நம்புவேன்!

வால்பையன் said...

மேன்மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள் தல!

Unknown said...

தல.., என்னோட கதை போலவே நல்லா இருக்கு..( என்னது..பல்ல கடிக்க்ஜ்றது கேக்குது.,).., ஆனா நல்லாவே புரியுது.., ஹம்ம்...

Jerry Eshananda said...

இம்புட்டு நீளமாக்கூட தலைப்பெல்லாம் வைக்கமுடியுமா? இன்னைக்குதான் தெரியுது. நல்லா கீது

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் இரண்டு சதத்துக்கு!

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள்...

கோவி.கண்ணன் said...

200 க்கு வாழ்த்துகள் !

யோ வொய்ஸ் (யோகா) said...

congrats

Karthikeyan G said...

Congrsts!!

beer mohamed said...

வாழ்த்துக்கள்
http://beermohamedtamilgroup.blogspot.com
http://tamilnanbarkal.blogspot.com

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்!~

புலவன் புலிகேசி said...

200க்கு வாழ்த்துக்கள் தல..

Cable சங்கர் said...

மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.