Wednesday, December 2, 2009

எல்லாப் புகழும்(ஜால்ராவும்) சாருவுக்கே

போன முறை சாருவின் இணையத்தில் என் பதிவு வெளியானப் போது அது ஏற்படுத்திய சாதனைகள்(ஹிட்ஸ்,பின்னூட்டம்,திட்டு,பாராட்டு) எல்லாவற்றையும் இந்த முறை அவர் தளத்தில் வெளியான பதிவு உடைத்து உள்ளது.அதற்கு அவருக்கு நான் நன்றி கூட சொல்லவில்லை.இனியும் சொல்லவும் போவதில்லை.காரணம் நன்றி சொல்லி அவர் மேல் இருக்கும் பிரமிப்பு மற்றும் ஆச்சர்யங்களைக் குறைத்துக் கொள்ளப் போவதில்லை.

புதிதாக நான் சாருவின் ஜால்ரா என்று பட்டம் கொடுத்து உள்ளார்கள்.ஒரு வாரத்திற்கு முன்பு தான் பாசிஸ்ட் பட்டம் வாங்கியதால் இதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன்.அந்த பட்டம் கொடுத்த இன்ப அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.அதனால் ஜால்ரா பட்டத்தை இரண்டு வாரங்கள் கழித்து வாங்கிக் கொள்கிறேன்.கொடுத்தவர் மன்னித்து விடவும்.பிரிஜ்ஜில் வைத்து பாதுக்காக்கவும்.

நேற்று ஒரே நாளில் வந்த ஹிட்ஸ் மட்டும் நான் ஒரு வாரம் பதிவு எழுதி முக்கி முக்கி தொடும் எண்ணிக்கை.இப்படி ஒரு வாசகர் வட்டம்(பெரும்பாலும் பிடிக்காது என்று சொல்லும் வட்டம்,ஆனால் அவரைப் படிக்கும் வட்டம்) வைத்திருக்கும் ஒரு எழுத்தாளருக்கு நான் ஜால்ராவா.கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.இந்த முறை மிஷ்கின் புத்தகம் வெளியிடுகிறார்.(நந்தலாலா பற்றிய எனது பதிவு சாருவின் தளத்தில் வருமா..)

சாருவின் எல்லா கருத்துகளிலும் உடன்பாடு இல்லாத எனக்கு ஜால்ரா பட்டம் ஒத்து வருமா என்ற தயக்கம் இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.மேலும் சென்னையில் பட்டம் விடுவதை தடை செய்து இருப்பதால் ஏற்கனவே வாங்கிய பட்டத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஜால்ரா யாருக்கு அடிக்கிறேன் என்று நான் பார்த்ததேயில்லை.எதற்கு அடிக்கிறேன் என்று பார்த்து விட்டு தான் அடிக்கிறேன்.அரசியல் முடிவுகளில் நான் பா.ம.க கட்சியை வறுத்து எடுத்தாலும்,மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளுக்காக அதற்கு ஜால்ரா என்ன மேளமே வாசிப்பேன்.நீங்கள் சாருவின் ஜால்ராவா என்று வி நாயகா சொன்னார். அவருக்கும் நான் ஜால்ரா அடிக்க தயார், அவர் கருத்துகள் எனக்கு ஒத்து வரும் பட்சத்தில்.(அவர் புரோபைல்லே இல்லாத காரணத்தால் இப்போ நான் யாருக்கு ஜால்ரா அடிப்பது என்று தெரியவில்லை.அவர் திரும்ப வந்து சொல்வாரா..)

சாருவின் பத்து புத்தகம் முன்னாள் தலைவர் பிறந்த நாளில் வெளி வருகிறது.வாங்கி படித்து விட்டு ஜால்ரா அடிக்கலாம்.இல்லை அவருக்கு ஜால்ரா அடிப்பவர்களை அடிக்கலாம்.

நர்சிமின் அய்யனார் கம்மா புத்தகமும் வெளி வருகிறது.அதற்கும் உங்களின் ஆசிகளோடு ஆதரவையும் தாருங்கள்.(இது ஜால்ரா வகையில் வருமா..)

ரமேஷ் வைத்யா அண்ணனிடம் பேசினேன்.(அண்ணன் பேசினார்.நான் தலையை மட்டும் ஆட்டினேன்.).எனக்கு பிடித்த பதிவர்களில் நீயும் ஒருவன் என்று சொன்னார்.இதை தான் நான் பெரிதாக நினைக்கிறேன்.அண்ணனுக்கு நன்றி.

டிஸ்கி :

வரும் வருடங்களில் இன்னொரு அண்ணனின் படைப்புகளும் புத்தகமாக வரும் என்று பட்சி சொல்கிறது.அவரிடம் பேசிய போது "தம்பி நீ எனக்கு ஜால்ரா கூட அடிக்க வேண்டாம்..என் பெயரை சொன்னாலே மைனஸ் ஓட்டு விழும்.." என்று சொன்னார்.அதனால் பெயரை சொல்லவில்லை.

ஜால்ரா அடித்தால் காலரா வராது என்று மேலை நாடுகளில் கண்டுப்பிடித்து உள்ளார்கள்.டாக்டர் புருனோ இதை தயவு செய்து விளக்கி உண்மையா என்று சொல்லவும்.

இரண்டு வாரங்கள் கழித்து ஜால்ரா பட்டம் வாங்குவது என்று முடிவு செய்தாகி விட்டது.இனி அடிக்க தொடங்குவோம்.எனக்கு இவர் பெரிய அண்ணன்.ஒரு இலக்கியவாதி.ஒவியரும் கூட.இவர் கதைக்கு இவரே படம் வரைந்து கொள்வார்.செலவு மிச்சம்.அண்ணனின் இந்த கதையைப் படித்து விட்டு அவரின் ஜால்ரா கோஷ்டியில் சேர வருக வருக என்று அழைக்கிறோம்.

அண்ணனின் கவிதை

அண்ணனின் கதை

தற்போது தனியாக சிங்கி அடித்து வரும் ஒரு சிங்கி..

இனி வரும் பதிவுகளில் ஜால்ரா சத்தம் அதிகமாக வரும்.அதனால் தீப்பொறி படாத தூரத்தில் இருந்து படிக்கவும்.

16 comments:

அகல்விளக்கு said...

அதுக்குள்ள அடுத்த பட்டமா ???...

எங்க பறக்க விடப்போறீங்க தல...

வெண்ணிற இரவுகள்....! said...

தலைக்கு நான் ரெண்டாவது ஜால்ரா

வெண்ணிற இரவுகள்....! said...

யாருக்குமே ஜால்ரா போடாதவன் தான் சாருக்கு போட முடியும் பெருமை படு நண்பா ...
இவண் சாரு ரசிகர்கள் ........பதிவு எண் ..............தலைமை ரசிகர் மன்றம் பதிவுலகம் ....
இந்திய dostovesky சாரு ரசிகர் மன்றம் .....ஜீரோ degeree எழுதிய எங்கள் ஹீரோ

வெண்ணிற இரவுகள்....! said...

நாளைய herta muller ....நீ நோபெல் பரிசு வாங்கினால் பரிசுக்கு தான் பெருமை எப்படி ஜால்ரா

தினேஷ் said...

சிங்..

//தம்பி நீ எனக்கு ஜால்ரா கூட அடிக்க வேண்டாம்..என் பெயரை சொன்னாலே மைனஸ் ஓட்டு விழும்.//

ரொம்ப பெரிய பிரபலமோ?

தினேஷ் said...

நாளைய herta muller ....நீ நோபெல் பரிசு வாங்கினால் பரிசுக்கு தான் பெருமை

தினேஷ் said...

/// நாளைய herta muller ....நீ நோபெல் பரிசு வாங்கினால் பரிசுக்கு தான் பெருமை //

அவ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/*வெண்ணிற இரவுகள்....! said...
நாளைய herta muller ....நீ நோபெல் பரிசு வாங்கினால் பரிசுக்கு தான் பெருமை எப்படி ஜால்ரா*/

அது என்னங்க...herta muller???? அது "Killer" ஜீன்ஸ் மாதிரி புது ரகமா? எனக்கு இந்த ரேஞ்சுலே தெரிஞ்சது எல்லாம் "Cater Pillar" மட்டுந்தான்
அவ்வ்வ்வ்வ்

Nathanjagk said...

பொதுவாக... ம்க்க்கும்... ஜால்ராக்களில் மூன்று வகைகள் இருப்பதாக அறிகிறோம்!!
1. மேட்டருக்கு தகுந்த மாதிரி சிம்பிளாக ஒரு அடி அடித்துவிட்டு அமைதியாகி விடுவது
2. சாமி வரவழைக்கிற ரேஞ்சுக்கு, சக ஜால்ராக்களையும் சேர்த்துக் கொண்டு வேண்டப்பட்டவரின் காதிலேயே பலமாக அடித்து அடித்து உசுப்பி விடுவது
3. தமக்கே தெரியாமல் அடித்து விட்டு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு எஸ்கேப்பி விடுவது (அதாவது இவங்களுக்கு அடிக்கவும் வெக்கமா இருக்கும்; ஆனா அடிக்காமலும் இருக்க்க்க முடியாது)

தம்பி அரவிந்த் ஒரு வீர ஜால்ரா! ​சொல்லி அடிச்சிருக்காரு!! இந்த ஜால்ராவுக்கு இங்கிலீஷ்ல magnanimousன்னு சொல்வாங்க!

வால்பையன் said...

//ரமேஷ் வைத்யா அண்ணனிடம் பேசினேன்.(அண்ணன் பேசினார்.நான் தலையை மட்டும் ஆட்டினேன்.)//

இருங்கம், அவருகிட்ட போட்டு கொடுக்குறேன்!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க யாருங்க இந்த சாரு? நான் இது வரைக்கும் கேள்விப்பட்டதே இல்லை!! நான் இன்னும் வளரனுமோ!!!

குப்பன்.யாஹூ said...

whats that munnal talaivar birthday (are Rajni's fans are chnaging to Vijay or Thala.

Raju said...

ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1234567890
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1234567890
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1234567890
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1234567890
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1234567890
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1234567890
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1234567890
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1234567890
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1234567890
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
1234567890

Unknown said...

//பொதுவாக... ம்க்க்கும்... ஜால்ராக்களில் மூன்று வகைகள் இருப்பதாக அறிகிறோம்!!
1. மேட்டருக்கு தகுந்த மாதிரி சிம்பிளாக ஒரு அடி அடித்துவிட்டு அமைதியாகி விடுவது
2. சாமி வரவழைக்கிற ரேஞ்சுக்கு, சக ஜால்ராக்களையும் சேர்த்துக் கொண்டு வேண்டப்பட்டவரின் காதிலேயே பலமாக அடித்து அடித்து உசுப்பி விடுவது
3. தமக்கே தெரியாமல் அடித்து விட்டு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு எஸ்கேப்பி விடுவது (அதாவது இவங்களுக்கு அடிக்கவும் வெக்கமா இருக்கும்; ஆனா அடிக்காமலும் இருக்க்க்க முடியாது)

தம்பி அரவிந்த் ஒரு வீர ஜால்ரா! ​சொல்லி அடிச்சிருக்காரு!! இந்த ஜால்ராவுக்கு இங்கிலீஷ்ல magnanimousன்னு சொல்வாங்க!//

சே என்ன ஒரு ஆராய்ச்சி...,

Nathanjagk said...

அன்பு ​பேநா மூடி,
//சே என்ன ஒரு ஆராய்ச்சி...,//

இது ஜா. நம்பர் 1க்கு பெஸ்ட் எக்ஸாம்பிளு :-)1. மேட்டருக்கு தகுந்த மாதிரி சிம்பிளாக ஒரு அடி அடித்துவிட்டு அமைதியாகி விடுவது
(-:

ச்சும்மா... லுலூலாயி.. சீரியஸ் ஆகாதீங்க!!

கார்க்கிபவா said...

நடத்துங்க பாஸ்..

நீங்கதாங்க சிறந்த பதிவர்..

நீங்கதாங்க நியாயமானவர்

நீங்கதாங்க நல்லவரு..

இப்படிக்கு,

ஜால்ராவுக்கே ஜால்ரா அடிப்போர் சங்கம். எஙக்ளுக்கு எங்கும் கிளையோ, வேலையோ, மூளையோ கிடையாது

:)))