இது தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜினிகாந்த் படிக்கும் பிட்டுக் கதை என்று யாராவது நினைத்து வந்தால் தலைப்பை மட்டும் படித்து விட்டு அப்படியே முந்தைய பதிவிற்கு சென்று விடவும்.இது எல்லாம் பார்டர் க்ராஸ்(பாகிஸ்தான் பார்டர் இல்ல..) நாற்பது மார்க் பார்டரைத் தாண்டும் போது அடித்த பிட்டும். அதில் மாட்டிக் கொண்டு முழித்த கதைகளும்.
நெல்லையில் இருந்து சென்னை வந்தப் பிறகு சேர்ந்த பள்ளியில் பாடம் நடத்தும் விதமே அலாதியாக இருக்கும்.வீட்டுப்பாடம் கிடையாது.வாரத்தேர்வு கிடையாது.நேரடியாக முதல் இடை நிலை தேர்வு,காலாண்டுத் தேர்வு தான்.டியுசன் சேரவில்லை முதல் இடை நிலை தேர்வில் எனக்கு மைன்ஸ் ஓட்டுக் குத்தி விட்டார் அறிவியல் ஆசிரியர்.உடனே மூளையில் ஒரு மூலையில் பல்ப் எரிந்தது.மார்க்கைத் திருத்தி விட்டேன்.(தமிழ் மணத்தில் தான் திருத்த முடியவில்லை.பிரபு தேவா கதைக்கு கூட மைனஸ்..)
காலாண்டுத் தேர்வு வழக்கம் போல எப்படியும் பெயில் செய்து விடுவார் என்று தோன்றியது.துணிந்து விட்டேன்.என் திறமைக்கு பிட்டா ச்சே என்ன ஒரு அவமானம்.புத்தகம் நமக்கு சரி என்று அதை எடுத்து சென்றேன்.காரணம் பிட் எழுத சோம்பேறித்தனம் மற்றும் புத்தகத்தைக் கிழிக்க மனசு வரவில்லை விதி என் கோமணத்தைக் கிழிக்க அங்கு காத்திருப்பது தெரியாமல் தேர்வுத் தாளை வாங்கி எழுதத் தொடங்கினேன்.அறிவியல் எடுக்கும் ஆசிரியர் நான் தேர்வு எழுதிய வகுப்புக்கு வந்து விட்டார்.மாட்டினால் அதோ கதி என்பதால்.அவருடன் பேச்சுக் கொடுத்து நான் உங்களிடம் டியுசனில் சேர்கிறேன் என்று எங்க ஊரு அல்வாவை ஒரு அண்டா எடுத்து வாயில் திணித்தேன்.அவரும் என்னை கவனிக்காமல் இருந்து விட்டார்.நான் இங்கே வெளுத்து வாங்கினேன்.எழுதி முடித்ததும் புத்தகத்தை பேண்ட்டில் சொருகி வைத்து கொண்டு வந்தேன்.அவர் வழியை மறித்து அவர் வீட்டிற்கு வரும் வழியை சொல்ல தொடங்கும் போது புக் நழுவத் தொடங்கியது.கதை முடிந்தது என்று நினைத்தேன்.எப்படியோ கீழே விழுவதற்குள் சமாளித்து விட்டு வந்தேன்.
அரையாண்டு தேர்வு - அதே அறிவியல் அதே புக்.வாத்தியார் மட்டும் வேற.அடித்து முடித்தப் பிறகு என்னை பிடித்து விட்டார்.இதுவரை யாரையுமே பிடிக்காத வாத்தியார் யாரிடமும் மாட்டாத என்னைப் பிடித்து விட்டார்.கென்யா வெஸ்ட் இண்டீஸ் அணியை துவைத்தது போல் இருந்தது.பார்த்து எழுதியதை எல்லாம் அடித்து விடு என்று சொன்னார்.நான் பாக்காமல் எழுதியதை மட்டும் அடித்து விட்டு வந்து விட்டேன்.ச்சே அவர் கிட்ட மாட்டின ஒரே ஆள் நீ தாண்டா இப்படி நக்கல் செய்தே சாக அடித்தார்கள்.
முழ்கும் முழுயாண்டுத் தேர்வு - வழக்கம் போல அறிவியல் தேர்வு.இந்த முறை திறந்த ஹாலில் தேர்வு நடந்தது.முதல் முறையாக பிட்.தேர்வு தொடங்கியவுடன் ஒரு டெரர் வாத்தியார் வந்து எனக்கு பிட் வாசனை வருது.மரியாதையா எல்லோரும் வெளியே போட்டுருங்க.பிடிச்சா ஒருத்தனும் பாஸ் கிடையாது.வகுப்பே எழுந்து பிட்டை எறிந்து விட்டு வந்தார்கள்.எறியப் போன நண்பனை நான் தடுத்தேன்.அது எப்படி பிட் வாசனை வரும்.கழுதைக்கு மட்டும் தான் பேப்பர் வாசனை வரும்.அவர் என்ன கழுதையா.அவரும் சொன்னா நீயும் போறியே.தைரியமா அடி.நானும் அவனும் மாத்தி மாத்தி அடி வெளுத்தோம்.தமிழ் தேர்வில் அவன் எழுதிய பதில் அக்னி நட்சத்திரம் சாயலில் வந்த படம் எது - நேருக்கு நேர்.
அப்புறம் பள்ளி மாறியதும் எனக்கு படிப்பே வரவில்லை.காப்பி அடிக்கவும் என் முன்னாடி இருந்தவனுக்கு தைரியம்.பின்னாடி இருந்தவனுக்கும் எனக்கும் ஆகாது.பயந்து கொண்டே காட்டி அவன் மாட்டிக் கொண்டான்.சார்வாள் என்னை விட்டு விட்டு அவனை வெளுத்து விட்டார்.அடுத்து நடந்த தேர்வில் அந்த அறையில் இருந்தவன் தன்னை யூத் என்று சொல்லிக் கொள்ளாத நிஜமான யூத்.அவன் கிட்ட என் பப்பு வேகவில்லை.
அடுத்த வருடம் பின்னால் இருந்தவன் என்னுடன் ராசியாகி விட நானும் அவனும் காலாண்டுத் தேர்வில் ஆரம்பித்து பொதுத் தேர்வு வரை விடாமல் காப்பி அடித்தோம்.லயலோ கல்லூரியில் கூட ஆரம்பத்தில் நடந்த ஒரு தேர்வில் காப்பி அடித்தோம்.பிறகு நான் பொறியியல் படிக்க வந்து விட்டேன்.முதல் ரெண்டு செமஸ்டர் எங்க ராஜ்ஜியம் தான்.
மூன்றாவது செமஸ்டரில் பிராக்டிகல் தேர்வு.படிச்சி பார்த்தேன் ஒண்ணும் சரி வரவில்லை.சட்டையில் பிட்.வயிற்றில் ப்ளாப்பி.சாக்ஸில் மினி ஜெராக்ஸ்.இந்த தேர்வுக்கு வந்தவனும் ஒரு உண்மையான யூத்.தேர்வு தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் நன்றாக பிட் அடிக்கும் ஒருவனைப் பிடித்து விட்டான். எனக்கு ஒண்ணும் புரியவில்லை.சோதனை செய்தால் என் மேல் எல்லா செக்சனிலும் வழக்குப் போடுவார்கள்.பக்கத்தில் இருந்த "பெண்ணிடம் எப்படியும் உன்னை எல்லாம் செக் பண்ண மாட்டாங்க.இதை வைத்து கொள்" என்று சொன்னேன்.அது வரை சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தவள் "இப்படி எல்லாம் ஏதாவது சொன்ன..நானே உன்னை போட்டுக் குடுத்துருவேன்.." என்று சொல்லி அந்தப் பக்கம் திரும்பி கொண்டாள்.
நான் எழுதிய "சி" புரோகிராமை "சி" கண்டுப் பிடித்த்வன் பார்த்து இருந்தால் சிரித்து சிரித்தே செத்துப் போய் இருப்பான்.நான் என்ன எழுதினேன் என்று எனக்கே தெரியவில்லை.இப்படி ஒரு அவுட் ஸ்டாண்டிங்கா இருந்து நான் கத்துக்கிட்ட பாடம்.
பத்தாவது படித்து முடித்த பிறகு தான் தெரிந்தது - அது ஒண்ணும் கம்ப சூத்திரம் இல்லை என்று.அதே மாதிரி தான் இருக்குது பொறியியல் முடிச்சப் பிறகும்.
டிஸ்கி :
எங்க கல்லூரியிலே நல்லா புரோகிராம் எழுதியவன் இன்னைக்கு சாப்ட்வேர் துறையில் இல்லை.ஒண்ணும் தெரியாத நாங்க எல்லாம் சாப்ட்வேரில் வேலை பார்த்து சாப்பிடுகிறோம்.பதிவும் போடுறோம்.அதனால இந்த பஞ்சர் டயலாக்..
"வாழ்க்கை என்பது சாப்ட்வேர் மாதிரி.அதை இன்ஸ்டால் பண்றது ஒருத்தன்.ஆனா அதை யூஸ் பண்றது இன்னொருத்தன்."
Thursday, December 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
// பத்தாவது படித்து முடித்த பிறகு தான் தெரிந்தது - அது ஒண்ணும் கம்ப சூத்திரம் இல்லை என்று.அதே மாதிரி தான் இருக்குது பொறியியல் முடிச்சப் பிறகும்.//
இது எனாக்கு படிக்கும் காலத்திலேயே தெரிந்து விட்டதால் அத்தனை ஆசிரியர்களும் என்னை விரோதியை போல் பார்க்க தொடங்கினார்கள்..
யோவ்..யாரைக்கேட்டாலும் கம்ப சூத்திரம் கம்ப சூத்திரம்ன்னே சொல்றீங்களே..! எப்பதான்யா நிகழ்காலத்துக்கு வரப் போறீங்க..?
ஒரு சுஜாதாசூத்திரம்..!
ஒரு எஸ்.ரா சூத்திரம்..!
ஒரு ஜெ.மோ சூத்திரம்ன்னு சொல்லப்புடாதா..? என்னமோ போங்கயா.
/*♠ ராஜு ♠ said...
யோவ்..யாரைக்கேட்டாலும் கம்ப சூத்திரம் கம்ப சூத்திரம்ன்னே சொல்றீங்களே..! எப்பதான்யா நிகழ்காலத்துக்கு வரப் போறீங்க..?
ஒரு சுஜாதாசூத்திரம்..!
ஒரு எஸ்.ரா சூத்திரம்..!
ஒரு ஜெ.மோ சூத்திரம்ன்னு சொல்லப்புடாதா..? என்னமோ போங்கயா.*/
டேய் தம்பி ராசு...
வேண்டும் என்றே எங்க "தல" யை இருட்டடிப்பு செய்த உனது குள்ளநரித்தனம் வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது...
பிட்டு மன்னா வாழ்க ! எனக்கு பிட்டு எல்லாம் அடிக்க தைரியம் இல்ல , பள்ளியில் படிப்பாளி . கல்லூரி செமஸ்டர் இறுதி நாட்களிலே புத்தகத்தை தேடும் பேர்வழி . எக்ஸாம் ஹால்ல எனக்கு பின்னாடி இரண்டு பசங்க என் நண்பர்கள்தான் அவ்ளோ கதைபேசி discuss பண்ணி எழுதுவாங்க எனக்கு கணக்குணா அலர்ஜி . கப் எல்லாம் வாங்கி அழுதழுது முடிச்சேன் . இப்போதான் பசங்க சொல்றாங்க நாங்கல்லாம் காப்பில kingnu (எப்படித்தான் அடிக்கீங்க ?).ஒருமுறை மட்டும் design paper எக்ஸாம் formulas ஒரு அரைகிலோமீட்டர் நீளம் இருக்கும் , நமக்கு தட்டறது பிடிக்காது , தைரியமா code book la ஒரு பக்கத்துல எழுதி செக்கிங் வந்து நல்ல வேலை மாட்டமா தப்பிச்சேன் (பொண்ணுனால சரியா அவங்க செக் பண்ணல மாட்டினா மானம் போய் repeat sem ).அதுதான் நான் அடிச்சா முதலும் கடைசியுமான பிட்டு .
நல்ல வேளை "நிருபர் தம்பி ராசு" ன்னு சொல்லலை..!
நம்ம ஊரு அல்வா நல்லா கைகொடுக்குது ! campus interview வர்ர HR க்கு எல்லாம் பசங்க போகும்போது அல்வாவோடதான் அனுப்புவாங்க , அடுத்த வருஷம் வரணும்ல .நானும் இப்போ நிறைய அல்வா குடுக்குறேன் officela (சாப்பிடுற அல்வாதாங்க )..
ஆஹா, என் இனமடா நீ...! நானெல்லாம் பிட்டு இல்லாம எக்ஸாம் எழுதினதா சரித்திரமே கிடையாது. அதை சொல்லனும்னா ஒரு பதிவு பத்தாது. முடிஞ்சா நானும் அதை பத்தி எழுதுறேன். இப்ப உங்க கிட்ட இப்படி மொக்கை போடுறேன்னா அதுக்கு காரணம், பிட்டு.. பிட்டு.. பிட்டு..! :))
'பிட்'குறள் :
பிட் அடித்தோரே வாழ்வார் வாழாதார்
படித்து பாஸ் செய்பவர்.
micro zerox try paningala
//தமிழ் மணத்தில் தான் திருத்த முடியவில்லை//
))))))))))))
Post a Comment