Monday, November 23, 2009

துவையல் - சினிமா ட்ரைலர் ஸ்பெஷல்

எது எடுத்தாலும் விஜய் பற்றி தொடங்காமல் இருந்தால் அன்னிக்கு எனக்கு துக்கம்(தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்ததால் கக்கத்தில் கால் மாட்டி விட்டது) தான்.ட்ரைலர் பார்த்தே கதை சொல்லும் திறமை இருந்தாலும் இந்த படத்தில் அது வேலை செய்யாமல் போய் விட்டது.படம் பகவதியில் ஆரம்பித்து மதுர வழியாக திருப்பாச்சி வந்து ஆதி,அழகிய தமில்(ழ்) மகன் படத்தை எல்லாம் நினைவுபடுத்தி படுத்தி எடுக்கிறது. ட்ரைலரில் பகவதி போல விஜய் பின்னால் ஒரு கூட்டம்,மதுர படத்தில் வருவது போல செல்போன் வித்தை,திருப்பாச்சியை நினைவுபடுத்தும் முக்கா பேன்ட் நடனம்,சண்டை காட்சிகள்,ஆதி படத்தில் வில்லனாக வரும் சாய்குமாரின் தம்பி இதில் வில்லன்.(ஆர்.டி.எக்ஸ் தம்பி தானே ஒவர் சவுண்ட்).அழகிய தமில்(ழ்) மகன் மாதிரி ஓட்டம்..இது விஜய்க்கு 49வது படமாம்.என்ன செய்ய கதை பஞ்சம்.100வது படத்தில் நடிக்கும் போது நிறைய கதை கிடைக்கும்.இதுவே முடியல..படம் வந்தா தமிழ் நாட்டை ஆண்டவன் தான் காப்பாத்த வேண்டும்.மீண்டும்..

*****************

ட்ரைலர் பாத்து படம் பாக்க போய் ஏமாந்த படம் இரண்டே இரண்டு தான்.படத்தின் பேரை வெளியே சொல்லவே வெட்கமாக இருக்கிறது.அது சின்னா. ட்ரைலர் எனக்கு பிடித்து இருந்தது.படம் பார்த்த பிறகு நான் சின்னா பின்னா.ஜூராஸிக் பார்க் படத்தில் வரும் காட்சி எல்லாம் இதில் வருகிறது.நான் படம் பார்க்க போன சமயம் பெட்டி வரவில்லை.தப்பிக்க முயன்று கடைசி கட்டத்தில் இருக்கும் போது பெட்டி வர என்னை உள்ளே தள்ளி படம் பார்க்க வைத்து ஒரு வழி ஆக்கி விட்டார்கள்.

அடுத்த படம் சேவல்.ஹரி இயக்கி,வடிவேலு நடித்து இருக்கிறார் என்று தெரிந்தும் ரிஸ்க் எடுத்த படம்.காரணம் ஏகன்.படம் எப்படி இருந்தது என்று தெரிய வேண்டுமா.படம் பார்த்த பிறகு நான் சொன்னது - "நூறு ரூபாய்க்கு விஷம் வாங்கி குடித்து இருக்கலாம்..".என் மாமா பையன் சொன்னது - "அந்த காசை கிழித்து போட்டு இருக்கலாம்..".அவனுக்கு சாக விருப்பம் இல்லை.எத்தனை தெலுங்கு படம் பார்த்து இருப்பான்.

*****************

பருத்தி வீரன் வந்தாலும் வந்தது - யதார்த்த சினிமா எடுக்கிறேன்,வட்டார மொழி பேசுகிறேன் என்று உயிரை வாங்குகிறார்கள்.ரேணிகுண்டா படத்தில் கொலை செய்வது எப்படி என்று பாடம் எடுக்கிறார்கள்.அப்படியே புதைப்பது எப்படி,தடயங்களை அழிப்பது எப்படி எல்லாம் சொல்லி குடுத்தால் பணத்துக்காக நண்பனையே கொல்லும் சிறுவர்களுக்கு வசதியாக இருக்கும்.அதுல ஒரு கேரக்டர் வட்டார மொழி பேசுகிறது.இன்னோரு சிட்டி ஆப் காட் படமா..முடியலைடா சாமி..

*****************

யோகி ட்ரைலர் - நான் சொல்லியே ஆகணும் ரியாக்சன் தராமல் நடிப்பதில் சேரனை மிஞ்சும் அளவு நடிப்பு அமீருக்கும் வருகிறது.கூப்பிட்ட வந்தேன் அடிக்கிற உன் வீடுங்கிறதுனாலையா ? இந்த காட்சியில் நியாயமா பாத்தா எவ்வளவு கோவம் வரணும்.வரலையே..அய்யா சாமிகளா நடிப்பதை விட்டு விட்டு நடிப்பு சொல்லி குடுக்க வாங்க.சென்னையை காட்டி விட்டு சென்னை பாஷை யாரும் பேசவில்லையே..(ராஜேஷ் நாவல் மாதிரி இருக்கிறது..கதை கோவையை சார்ந்து இருந்தாலும் யாரும் கோவை மொழி பேச மாட்டார்கள்)

*****************

பேராண்மை படம் ட்ரைலர் பார்க்கவில்லை.போஸ்டர் தான் பார்த்தேன்.வடிவேலு இருப்பதைப் பார்த்து விட்டு ஓட தயார் ஆனாலும் இயக்குனரின் பழைய படங்கள் ஞாபகம் வந்த காரணத்தால் போய் பார்த்து விட்டு வாங்கி கட்டினேன்.அதுவும் பத்தாமல் நாலு பதிவு வேறு எழுதினேன்.பலத்த அடி.இனியும் வாங்க தயாராக இல்லாததால் பேராண்மை உரையை இதோடு அடித்து முடிக்கிறேன்.

*****************

ஆதவன் - வடிவேலு இருந்ததால் போகவில்லை.ட்ரைலர் பார்க்கும் போது வடிவேலு கையை சூர்யா கடித்து வைத்ததால் எனக்குள் பல்ப் எரிந்து காசு மிச்சம் ஆகி விட்டது.கடைசியில் பார்த்தால் படம் என் பதிவை விட மொக்கை என்று தெரிந்து கொண்டேன்.நான் இப்போதும் மொக்கை என்று நினைக்கும் வடிவேலு தான் படத்தை காப்பாற்றினார் என்று பேச்சு அடிபட படம் எப்படி இருக்கும் என்று தெளியாக தெரிந்து விட்டது.

*****************

அடுத்த கிறிஸ்மஸ் வரை சன் டிவி பார்க்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்.பின்ன என்ன வேட்டைகாரன் ட்ரைலர் வருவதை நினைத்தாலே கசக்குது இந்த படித்தவனுக்கு.கண்டேன் ரிமோட்டை.என்னது வேட்டைகாரன் படம் பாக்கலைன்னா ஒரு வட(பதிவு) போயிருமா..

கண்ணா நல்லா தெரிஞ்சுக்கோ படம் பாத்தா ஒரே ஒரு விமர்சனம்.பாக்காம இருந்தா பத்து விமர்சனம்.(அவங்க பத்து படத்தில் இருந்து சூடும் போது நான் பத்து பதிவு போட கூடாதா..)

*****************

டிஸ்கி :

முதல் பத்திக்கு செல்லவும்....குறிப்பாக முதல் பத்திக்கு மட்டும்....

*****************

18 comments:

மணிஜி said...

/யோகி ட்ரைலர் - நான் சொல்லியே ஆகணும் ரியாக்சன் தராமல் நடிப்பதில் சேரனை மிஞ்சும் அளவு நடிப்பு அமீருக்கும் வருகிறது.கூப்பிட்ட வந்தேன் அடிக்கிற உன் வீடுங்கிறதுனாலையா ? இந்த காட்சியில் நியாயமா பாத்தா எவ்வளவு கோவம் வரணும்.வரலையே..அய்யா சாமிகளா நடிப்பதை விட்டு விட்டு நடிப்பு சொல்லி குடுக்க வாங்க.சென்னையை காட்டி விட்டு சென்னை பாஷை யாரும் பேசவில்லையே..(ராஜேஷ் நாவல் மாதிரி இருக்கிறது..கதை கோவையை சார்ந்து இருந்தாலும் யாரும் கோவை மொழி பேச மாட்டார்கள்)//

அரவிந்த், அமீர் நடிப்பு சொல்லி கொடுக்கும்போது நான் பார்த்திருக்கிறென்.அதில் பாதி அவர் பண்ணியிருந்தாலே பாஸ்தான்

அத்திரி said...

விஜயை பற்றி எதாவது சொல்லலைனா உங்களுக்கு தூக்கம் வராதோ?????

அகல்விளக்கு said...

//பேராண்மை உரையை இதோடு அடித்து முடிக்கிறேன்.//

அப்பாடா முடிச்சிட்டாரு !!

விஜய் பத்தி 100 மார்க்குக்கு எழுதியிருக்கீங்க தல.

:-)

முரளிகண்ணன் said...

\\..(ராஜேஷ் நாவல் மாதிரி இருக்கிறது..கதை கோவையை சார்ந்து இருந்தாலும் யாரும் கோவை மொழி பேச மாட்டார்கள்)
\\

\\அந்த காசை கிழித்து போட்டு இருக்கலாம்\\

கலக்கல் கமெண்ட்ஸ்

Toto said...

அமீர், ரேணிகுண்டா க‌மெண்ட்ஸ் க‌ல‌க்க‌ல், ஸார்.

-Toto
www.pixmonk.com

அறிவு GV said...

நீங்க பதிவு போடுறதுக்காவது விஜய் உதவுரார்ல, அப்பறம் என்ன..! இது நம்ம முதல் வருகை. வாங்களேன், சூட ஒரு தடவே வேட்டைக்காரன் படம் பாத்துட்டு வருவோம்...!
அப்படியே நம்ம கடைப்பக்கம் வார்றது தான...! http://arivugv.blogspot.com மத்த பின்னூட்ட நண்பர்களுக்கும் "வருக வருக".

உண்மைத்தமிழன் said...

இந்த டிரெயிலரை எல்லாம் எதுல பார்க்குறீங்க..?

மேவி... said...

சகா ... அதே மாதிரி இந்த உலக சினிமாவை எல்லாம் இங்கே சூப்பரா PHOTOCOPY எடுப்பதை பற்றி சொல்லி இருக்கலாம்.....

அதே நாணயம் ன்னு ஒரு படம்..... LEAGUE OF GENTLEMEN < OCEANS 11 மிக்ஸ் பண்ணி எடுத்து இருக்காங்க ன்னு நினைக்கிறேன்.... அதிலிருந்தும் தப்பித்து கொள்ளவும்.....

மேவி... said...

"உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இந்த டிரெயிலரை எல்லாம் எதுல பார்க்குறீங்க..?"



காலையில் காப்பி குடிக்கும் போது சன் டிவி போட்டு பாருங்க ..... மரண மொக்கையான பட விளம்பரங்களை பார்க்கலாம்...

நானும் தனிமையில் இருந்து தப்பித்து கொள்ள இதை எல்லாம் பார்ப்பேன்

க‌ரிச‌ல்கார‌ன் said...

படம் பார்த்துட்டு விமர்சனம் பண்ணினாலே இந்த பதிவர்களால் தான் படம் ஓடல ?? அப்படின்னு எல்லாரும் (சேரன் உட்பட) சொல்றாங்க இதுல ட்ரைலர் விமர்சனம் வேறயா ம் போலாம் ரைட் .........

க‌ரிச‌ல்கார‌ன் said...

படம் பார்த்துட்டு விமர்சனம் பண்ணினாலே இந்த பதிவர்களால் தான் படம் ஓடல ?? அப்படின்னு எல்லாரும் (சேரன் உட்பட) சொல்றாங்க இதுல ட்ரைலர் விமர்சனம் வேறயா ம் போலாம் ரைட் .........

thiyaa said...

விஜய் ....

வெண்ணிற இரவுகள்....! said...

ஒரு காலத்தில் ராமராஜனுக்கு ஒரு மரியாதை இருந்தது ....அப்புறம் டி ஆர் ........அவர்களின் வாரிசாக விஜய்...
வந்தாலே சிரிக்கிறார்கள் .......................................

Unknown said...

ஆரம்பமும் விஜய் முடிவும் விஜயா... கலக்குங்க...

வால்பையன் said...

வேட்டைகாரன் 200 நாள் ஓடும்னு பேசிகிறாங்களே!

"ராஜா" said...

இருந்தாலும் விஜய்ய நீங்க இவ்ளோ அசிங்கபடுதிருக்க கூடாது.... வேட்டைகாரன்ல உங்கள எல்லாம் வேட்டையாட போராருங்கோ?
இந்த படம் ஆஸ்கர் வாங்கும்னு பேசிகிறாங்க அப்டியா?

Marimuthu Murugan said...

//படம் வந்தா தமிழ் நாட்டை ஆண்டவன் தான் காப்பாத்த வேண்டும்//....

ஏற்கனவே கடவுள் காப்பாத்திட்டார்....
.............
............
பன்ச் லயலாக்ல பாதி கட் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்.....

Anonymous said...

உங்கள் பதிவுகளை தவறாமல் படிக்கிறேன். உங்களோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!!