Sunday, December 6, 2009

அச்சம் தவிர்,நையப் புடை - இதுவும் எதிர்வினையா..

முன் டிஸ்கி : இது எதிர்வினை இல்லை.அதனால் தைரியமாக படிக்கலாம்.(ஏற்கனவே சனிக்கிழமை மட்டும் இரண்டு பாலோயர் அவுட்.ஆவ்வ்வ்வ்.)இது என்னை பிரதிபலிக்கும் பாடலகள்.இது தினமும் இரவு முழுவதும் இந்த ஆறு பாடல்கள் ஒலிப்பதால் கொஞ்சம் மனப்பாடம் ஆகி விட்டது.

அச்சம் தவிர்,நையப் புடை - அஞ்சாதே

படத்தில் பெயர் போடும் போது வந்த பாடல்.மிஷ்கின் பாடிய பாரதியார் பாடல்.நீ ஒரு தனி மனிதன் என்று அடிக்கடி உணர்த்தும் பாடல்.நான் குருவாக நினைப்பவர் கூட அடிக்கடி சொல்லும் வார்த்தை - "யாருக்காவும் உன் உரிமையை விட்டு கொடுக்காதே.குறிப்பாக எனக்காக."அதை தான் என் நண்பர்களுக்கும் சொல்வதுண்டு.நான் தப்பு செய்தாலும் என்னை வெளுத்து வாங்குங்கள்.அதில் பதிவுலக நண்பர்களுக்கு அதிக உரிமை உண்டு.

ரவுத்திரம் பழகு.
நேர்பட பேசு.
கீழோர்க்கு அஞ்சேல்.
புதியன விரும்பு.

அவ அவ என்ன என்ன தேடி - வாரணம் ஆயிரம்.

தாமரை எழுதிய கானா.இரண்டு முறை அரை பைத்தியமாக திரிந்திருக்கிறேன்.(இப்போ மட்டும் என்ன வாழுதாம் என்று கேட்க கூடாது)ஒரு முறை வேலை கிடைக்கவில்லை.இன்னொரு முறை ஒரு பெரிய ஏமாற்றம்.இலக்கில்லாமல் திரிந்த காலம் அது.கையில் காசு இல்லாமல் நடந்தும்,டிக்கெட் எடுக்காமலும் பயணித்துயிருக்கிறேன்.கோவிலுக்கு எல்லாம் போவதை நிறுத்தி விட்டேன்.

"அடங்கா குதிரையைப் போல அலைஞ்சவன் நானே..ஒரு பூவப் போல பூவப் போல மாற்றி விட்டாளே.."(ஒழுங்கா கம்யூட்டர் க்ளாஸ் போனவனை தேவுடு காக்க வைத்தாளே.)

"வாழ்க்கை ஒரு ராட்டினம் தாண்டா..தினம் சுத்துது ஜோரா..அது மேலே கீழே.."

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - அங்காடித் தெரு.

வகுப்பு நடக்கும் போது சோலார் கால்கூலேட்டர் வைத்து அதில் இருக்கும் கண்ணாடி வைத்து அவளை பார்ப்பது உண்டு.சரியாக பார்க்க முடியவில்லை என்று நண்பனின் கால்கூலேட்டரைக் கூட பிடிங்கி பார்ப்பது உண்டு.இத்தனை மணிக்கு நீ புருவம் சுருக்கினாய்.முகம் சுளித்தாய் எண்டு சொல்வதுண்டு."யூ ஆர் சோ ரொமாண்டிக்.." அவர்கள் படத்தில் பொம்மை பேசுவது தலையை சரித்து சொல்வாள்."இங்கீலிஸ் க்ளாஸ்ல எதுக்கு கால்கூலேட்டர்..ஒவரா கணக்கு போடாதே.." என்று ஆங்கில ஆசிரியை சொல்வதுண்டு.விஜய் ரசிகை.எக்ஸாம் நடக்கும் போது டவுட் கேட்பேன்.ஒழுங்காக படிக்க வேண்டியது தானே என்று கடிந்து கொண்டாலும் இதுக்கு இது தான் விடை என்று சொல்வார்.நான் ஷாஜகான் படத்தில் விஜய் எப்படி ரயிலில் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டார் என்று கேட்பேன்.விஜய்யை சீண்டாமல் இருக்க முடியாதே என்று அலுத்து கொண்டாலும் ஒரு செமஸ்டர் எக்ஸாமில் பிட் கொடுத்து உதவினார்.

அவள் திட்டும் போது வலிக்கவில்லை..(டைப் ப்ண்ணும் போது கை வலிக்குது)

அவள் உடுத்தும் உடைகள் பிடிப்பதில்லை.

முன் தினம் பார்த்தேனே - வாரணம் ஆயிரம்..

சூர்யா சிம்ரன் ஆன்ட்டி கிட்ட சொல்வது மாதிரி நானும் சொல்லியிருக்கிறேன்.ஆன்ட்டி தான் இப்போதான் கல்யாணம் ஆகி விட்டதே.எனக்கு போன் ட்ரிக்ஸ் சொல்லிக் குடுத்து பைத்தியமாக ஆக்கியதுண்டு.எனக்கும் சேர்த்து எல்லாம் எழுதுவதுண்டு.பக்கத்து வரிசையில் உக்கார்ந்து கொண்டு எனக்கு அவள் பேப்பர் காட்டியது உண்டு.எனக்கு சொல்லி கொடுத்து அவள் பெயிலாகி விட்டு அழுதது எல்லாம் உண்டு.

துலா தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே..

ஒ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேணடி..
புகை போல படாமல் பட்டு நகர்வேண்டி..
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி..

கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்

இந்த படம் பிடிக்கவில்லை.சுவாதியின் கண்களை குருடாக்கி விடுவது போல் எடுத்து விட்டு கடைசியில் அந்த காட்சி படத்தில் வரவில்லை.படத்தை தூக்கி நிறுத்திய பாடல்.பெரும்பாலும் கல்லூரியில் நடத்தும் தேர்வுக்குப் படிக்காமல் போவது தான் வழக்கம்.ஒரு தடம் அப்படி போய் ஒரு பதினாறு மதிப்பெண் வினாவுக்கு மட்டும் பதினாறு பக்கம் எழுதி விட்டு வந்தேன்.மூன்று மணி நேரம் இரண்டு மணி நேரம் சும்மா தான் இருப்பேன். பெரும்பாலும் இருப்போம்.நேரம் போக்குவதற்கு யாரையாவது வேடிக்கை பார்ப்பது உண்டு.அப்போது தான் நண்பனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் நடுவில் சங்கேத ஓசைகள் இருக்கிறது என்று.மூன்று முறை பேனாவில் சப்தம் எழுப்பினால் அந்த பெண் திரும்பி பார்க்கும்.நேரம் போகவில்லை.நான் முன்னாடி இருந்த நண்பனிடம் சொன்னேன்.அவன் சிக்னல் கொடுப்பதற்கு முன் நாங்கள் பேனாவில் சப்தம் செய்வோம்.அந்த பெண் எங்களை பார்ப்பாள்.அவன் கெஞ்சி கூத்தாடியப் பிறகு விட்டு விட்டோம்.

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்..
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் என மாற்றி..

தாய் தின்ற மண்ணே - ஆயிரத்தில் ஒருவன்

இந்த பாட்டு எனக்கு சுத்தமாக பிடிப்பது இல்லை என்றாலும் கேட்பது உண்டு.காரணம் தாய்மொழி தெலுங்கு.(யாருக்கு யாருக்கோ..).அதனால் இந்த பாடலை தினமும் கேட்பதுண்டு.விஜய் ஜேசுதாஸிடம் இந்த பாட்டைக் கொடுத்து மொக்கை செய்து விட்டார்கள் என்றே நினைக்கிறேன்.மலையாள உச்சரிப்பு தெரிகிறது.ஹரிகரன்,சங்கர் மகாதேவனிடம் கொடுக்க வேண்டிய பாட்டு.(இதுக்கு மைனஸ் வோட்டு போடாதீங்க..இது என்னுடைய கருத்து மட்டுமே..)

கயல் விளையாடும் வயல்வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள்..
காவேரி மலரின் கடிமணம் தேடி கருகி முடிந்தது நாசி..

பின் டிஸ்கி : இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.நிஜம் என்று நினைத்தால் நிஜம் நிகழ்ச்சியைப் பார்த்து தெளிவு பெறலாம்.அப்படியே இது நிஜம் என்றாலும் காதல் என்ற முத்தின கத்திரிக்காய் எல்லாம் இல்லை.வெறும் ஈர்ப்பு என்ற இளம் பிஞ்சே.ஆறு மாதங்கள் ஒரு பெண்ணிடம் நட்பாக இருந்தாலே பெரிய விஷயம்.அதுக்கு மேல் சண்டையில் தான் முடிந்து இருக்கிறது.

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

//ஆறு மாதங்கள் ஒரு பெண்ணிடம் நட்பாக இருந்தாலே பெரிய விஷயம்.அதுக்கு மேல் சண்டையில் தான் முடிந்து இருக்கிறது//

நல்ல அனுபவம்...

ஆ.ஞானசேகரன் said...

உண்மைய சொல்லனுனா,.. நிறைய இடங்கள் எனக்கு புரியமாட்டேங்குது! வயதாகியதால் அப்படியா?

angel said...

வெறும் ஈர்ப்பு என்ற இளம் பிஞ்சே

ithaye soli ethna time escape agaporinga

Raju said...

யோவ்..தேதி ஆறுதான்யா ஆகுது..!

செழியன் said...

idhe velaiya alaaiyuringala

Unknown said...

// வகுப்பு நடக்கும் போது சோலார் கால்கூலேட்டர் வைத்து அதில் இருக்கும் கண்ணாடி வைத்து அவளை பார்ப்பது உண்டு.சரியாக பார்க்க முடியவில்லை என்று நண்பனின் கால்கூலேட்டரைக் கூட பிடிங்கி பார்ப்பது உண்டு.//

கல்லூரி நாட்களை ஞாபக படுத்தி விட்டீர்கள்..,