Tuesday, December 1, 2009

சாரு,கமல்,அமீர்,விஜய் - தொடர்ச்சி

முதல் பாகம் படிக்க

பருத்திவீரன் வெளியாகி வெற்றிப் பெற்ற உடன் விகடனில் அமீரின் பேட்டி.பருத்திவீரன் எல்லாம் வெறும் எள்ளுருண்டை தான்.இன்னும் பெரிய பெரிய படங்களுக்கானத் திரைக்கதை எல்லாம் மனதில் உறங்குகிறது.ஓசியோ காசு கொடுத்து வாங்கியதோ அது ஒரத்தில் கிழிந்து இருந்தாலும் மனது வலிக்கும்.பிட் அடிக்கும் போது கூட கிழிக்க மனது இல்லாமல் முழு புத்தகத்தை வைத்து அடித்து மாட்டி இருக்கிறேன்.ஆனால் அமீர் பேட்டி இருந்த பக்கத்தை மட்டும் கிழித்து பர்ஸில் வைத்து இருந்தேன்.

அமீர் மீது இருந்த மரியாதையில் பெரிய விவாதமே நடக்கும்.அமீர் குடுத்த பேட்டியில் இருந்து சில வரிகள் - "மௌனம் பேசியதே எடுக்கும் போது எனக்கு எதுவும் தெரியாது.ரெக்காடிங்,எடிட்டிங் இப்படி எல்லாவற்றையும் அந்த படம் முடியும் போது தான் கற்றுக் கொண்டேன்."

இந்த வார்த்தைகளை நண்பரிடம் சொல்லும் போது - "நீங்க அமீரை தேவைக்கு அதிகமாக புகழாதீங்க.அந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும் எடுக்கலாம்" என்று சொன்னார்.எதை என்று அன்று புரியவில்லை.இன்று நன்றாக புரிகிறது.

கே.எஸ்.ரவிகுமாருக்கும்,நாட்டாமை படத்தின் ஒளிப்பதிவாளருக்கும் சண்டை.அவர் வெளியே சென்று விட்டார்.உதவியாளர்கள் கேமராவைத் தொட தயங்குகிறார்கள்.கே.எஸ்.ரவிகுமாரே கேமராவை இயக்குகிறார்.இப்படி செய்த உடன் நல்லா தானே செய்கிறோம் அடுத்தப் படத்திலும் நாமே செய்தால் என்ன என்று நினைத்தாராம்.பிறகு நமக்கு இயக்கம் மட்டும் தான் என்று முடிவு செய்தாராம்.(நடிப்பதையும் முத்துக் குளிக்க வாரீகளா படத்துடன் நிறுத்தி விட்டார்.)

அது மாதிரி அமீரும் பரிசோதனை முயற்சி எல்லாம் நிறுத்தி விடலாம்.இதற்கு அமீர் நாடோடிகள் படத்தில் நடித்து இருக்கலாம்.இனி சுப்ரமணிய சிவா போன்றவர்களை அருகில் சேர்க்காமல் இருக்கும் ஜால்ரா கூட்டங்களை எல்லாம் துரத்தி விடலாம்.

அப்படியே உலக சினிமா டிவிடிகளை எல்லாம் உடைத்து விட்டு மறுபடியும் புது திரைக்கதையோடு திரும்பி வரலாம்.

இதே பாணி கதை தான் பெண் இயக்குனர் நந்தினி எடுத்த திருதிரு துறுதுறு. குழந்தையின் தாய் வண்டியில் அடிப்பட்டு மயங்கி விடுகிறாள். அதனால் குழந்தையை பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு அஜ்மலுக்கு வருகிறது.கூடவே ரூபா.குழந்தை கடத்தும் கும்பல்.குழந்தையைத் தேடும் அப்பா அம்மா.குழந்தையை எந்த கொடுமையும் செய்யாமல் எடுத்து இருந்தார்கள்.அந்த படம் தான் அது என்று கண்டுப்பிடிக்க முடியாமல் எடுத்து இருந்தார்கள்.

குழந்தை திருடும் பெண்ணிடம் மென்மையான வகையில் சித்ரவதை செய்கிறார்கள்.எப்படி என்றால் - காலில் கிச்சம் காட்டுவது.காதுக்கு பக்கத்தில் ஒரு தட்டை வைத்து அதில் கரண்டியைத் தேய்ப்பது.இது பெண்களால் மட்டுமே கொடுக்க முடியும் யோசனைகள்.தயவு செய்து அந்த படத்தைப் பார்க்கவும் அடுத்த உலக சினிமா பார்க்கும் முன்.

படம் எடுக்க முடியாமல் போனால் நான் மதுரைக்குத் திரும்பி விடுவேன் என்று அமீர் ஒரு பேட்டியில் சொன்னார்.அப்படி நினைத்து மதுரைக்குப் போய் அமைதியான சூழலில் ஒரு புதிய திரைக்கதை எழுதலாம்.திரும்ப வரலாம்.வெற்றி பெறலாம்.

டூட்ஸி(2005) இந்த ஆப்பிரிக்கப் படத்தைப் பார்க்கவில்லை என்று அமீர் சொல்கிறார்.அப்போ இந்த ஆங்கிலப் படத்தைப் பார்த்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆப்பிரிக்கப் படம் டூட்ஸி(2005) - - ஆங்கில படம் ஷூட் எம் அப்(2007) - - தமிழ் படம் யோ(க்)கி(யன்) 2009.

அதுவும் சரியாக இரண்டு வருடம் இடைவெளி சொல்லி வைத்தது போல்.

ஷூட் எம் அப்(2007) - இந்தப் படம் விஜய்,அஜித் நடிக்க வேண்டிய படம் என்று நண்பர் சொன்னார்.என் தானைத் தலைவி 45 வயது குமரி மோனிகா பெலுக்சி நடித்து இருக்கிறார்.("யூத்து" எல்லாம் பார்க்க வேண்டிய படம்).

எரிவாயு பயன்பாட்டிற்கு கொடுத்த சலுகைகளை ரத்து செய்து விட்டு தமிழில் பெயர் வைத்தால் படத்திற்கு வரிவிலக்கு என்று சலுகை தருகிறார் முதல்வர்.படத்திற்கு மட்டும் தமிழ் பெயர் - படம்,படத்தின் கதை எல்லாம் ஆங்கிலப் படத்தில் அடிப்பது.என்ன கொடுமை முதல்வரே இது.அடுத்தவன் உழைப்பைத் திருடி பணம்,பெயர் சம்பாதிப்பவர்களுக்கு இந்த சலுகைகள் எல்லாம் அதிகம்.

மக்கள் தொலைக்காட்சியில் உலக சினிமாவை எல்லாம் போட வேண்டாம் என்று யோகி சொல்கிறார்.ஒருத்தன் நல்லது செய்தாலும் பொறுக்காதே.அப்படி இருந்தால் தானே திருடுவதற்கு வசதியாக இருக்கும்.

டிஸ்கி :

உலக சினிமாவை பார்த்தோமா சந்தோசம் அடைந்தோமா என்று இருக்க வேண்டும்.அதை நகல் எடுக்காமல் இருப்பதே உலக சினிமாவுக்கு நாம் செய்யும் மரியாதை.

போன வாரம் வியாழக்கிழமை வரை அமீருக்கு ரசிகனாக இருந்த நான் வெள்ளிக்கிழமையில் இருந்து விஜய் ரசிகனாக மாறுகிறேன்.உலக சினிமாவை நகல் எடுத்து தன் பெயரைப் போட்டுக் கொள்ளும் அமீரை விட தன் படத்தையே வேறு பெயரில் எடுத்து இயக்குனரின் பெயரில் போடும் விஜய் எவ்வளவோ மேல்.

வருங்கால காமெடியன் விஜய் வாழ்க..

ரொம்ப சாரி..புது ரசிகன் அதான் சரியா கோஷம் போடவில்லை.

வருங்கால முதல்வர் வாழ்க.

10 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

அமீர் சொன்னது வடிகட்டின பொய் ...என் சினிமா நண்பர் சொன்னார் ..........நிறைய காட்சிகளில் அதே ஷாட் என்று சொன்னார் ....ஷாட் கூட எப்படி படம் பார்க்காமல் எடுத்து இருப்பார்கள்

சென்ஷி said...

//ங்கில படம் ஷூட் எம் அப்(2007)//

ஷூட் எம் அப் - பக்கா மசாலாப் படம்.. டூட்ஸி விமர்சனங்களுடன் ஒப்பிடும்போது இந்தப் படம் அதன் பக்கத்தில் கூட நிற்காது.

ஆங்கிலப்படத்தின் ஹீரோவுக்கு சுடுவதற்கும் ஹீரோயினை அணைப்பதற்கும் மாத்திரமே நேரம் இருக்கும் :-)))

அப்பப்ப குழந்தையையும் காட்டுவாங்க.

புலவன் புலிகேசி said...

//உலக சினிமாவை நகல் எடுத்து தன் பெயரைப் போட்டுக் கொள்ளும் அமீரை விட தன் படத்தையே வேறு பெயரில் எடுத்து இயக்குனரின் பெயரில் போடும் விஜய் எவ்வளவோ மேல்.//

அதுக்காகாகல்லாம் விஜய் ரசிகனாயிடாதீங்க தல...

Unknown said...

shoot em up... படத்திற்கு யோகி எவ்வளவோ மேல்...
அப்பால..
வாழ்க காமடியன் விஜய்...
சொர்ரிப்பா....
வருங்கால முதல்வர் விஜய்...

Raju said...


அண்ணே, இந்த உலகப் படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்களேன். பிளீஸ்.

நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
அண்ணே, இந்த உலகப் படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்களேன். பிளீஸ்.*/

இதுக்கு தான் அடிச்சு... அடிச்சு சொன்னேன்... இந்த அமீரு சகவாசம்லாம் நமக்கு வேண்டாம்னு...ராசு...

எப்பா... ராசு... இதுவும் பிரபல தென்னாப்பிரிக்க பிரபல
பதிவர் பிரபல நைனா கிட்டே இருந்து... பிரபல காப்பி அடிச்சது தானா....... பிரபல ஆவ்வ்வவ்வ்வ்....

நீங்க பிரபல "டவுட்டு தங்கதொறையா"
இருந்ததா இங்கே போய் பாருங்க..

Vikram said...

Thanks for sharing the info.. I was getting reminded of this film when I saw scenes from yogi..That african film's name is Tsotsi..

கார்க்கிபவா said...

:))))

உங்க பதிவ படிச்ச பிறகு அமீரே தேவலாம்ன்னு தோணுச்சு..

Anbu said...

\\\வருங்கால காமெடியன் விஜய் வாழ்க..

ரொம்ப சாரி..புது ரசிகன் அதான் சரியா கோஷம் போடவில்லை.

வருங்கால முதல்வர் வாழ்க. \\

இந்த மூன்று வரிகளும் அழகு..

அகல்விளக்கு said...

லேட்டா வந்தாலும் சாரு வெப்சைட் பாத்துட்டுத்தான் வர்றேன்...

1935 views

செம ஹிட்டு போல தெரியுதே தல...