நையாண்டி நைனா குரு வணக்கம் செய்து விட்டு கவிதை(ஒரிஜினல்) எழுதியதில் பதிவுலகமே கிலியடித்துக் காணப்படுகிறது.கவிதை போட்டியில் கலந்து கொண்டால் படிக்கும் முன்பே விடிந்து விடும் என பயந்து அண்ணன் உண்மைத்தமிழனின் வலைப்பூவில் வைரஸ் அனுப்பப் பட்டதாக உளவுத்துறை செய்தி சொல்கிறது.(கூகுள் தான் வைரஸ் அனுப்பியது என்று ஒரு வதந்தியும் நிலவுகிறது).இனி மேலும் தாக்குப் பிடிக்க முடியாது என பயந்து உரையாடல் போட்டியமைப்பாளர்கள் நையாண்டி நைனாவுக்கு மட்டும் அல்ல எதிர்கவிதைகள் எழுதும் ஆட்களுக்கு மட்டும் ரீமேக் போட்டி நடத்துகிறார்.
விதிமுறைகள் இரண்டு தான்.
1.ஆளுக்கு 500 ரூபாய் தரப்படும்
2.உலக சினிமா ரீமேக் தடை செய்யப்பட்டுள்ளது.(ஒன்லி உள்ளூர் சினிமா)
முதல் கட்டமாக நைனாவிற்கும்,அரவிந்திற்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
முதல் ரீமெக் படம் - தலை நகரம்.
பெரிய கவுஜர் ஆகி விட வேண்டும் என் கிராமத்தில் இருந்து வரும் யூத்தாக அண்ணன் கேபிள் சங்கர்.கவிதை எழுதிய நண்பனின் பேனா உடைந்து விட்டதால் கவிதை எழுத மாட்டேன் என்று அடம் பிடிக்கும் இன்னோரு யூத் அனுஜன்யா.கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டு பேப்பர் கடை வைத்து இருக்கிறார் அனுஜன்யா.ஒவ்வொரு கடையாக பேனாவைக் காட்டி பேப்பர் பிடுங்குகிறார் கேபிள்.எல்லாம் கவிதை எழுதிப் பாக்கத்தான்.குப்பை அதிகம் சேருவதாக சென்னை மா நகராட்சி இவரை ஆள் வைத்து தேடுகிறது.போலீஸில் பிடித்துக் கொடுத்தாலும் ரைட்டரிடம் பேப்பரைப் பிடிங்கி புகாரைக் கூட மடக்கி மடக்கி எழுதி தருகிறார்.
போலீஸ் அவரை துரத்தி விடுகிறது - காரணம் சாதாரண பேப்பர் சுமாரா மடங்கி இருக்கும்.இவர் கவிதை எழுதின பேப்பர் மடங்கி சுமாரா இருக்கும்.
இந்த நிலைமையில் கவிதை எழுத தாள் இல்லாமல் போக,அனுஜன்யாவின் கடைக்குப் போய் மிரட்டுகிறார்.
அனுஜன்யா - "முத்ல்ல கவிதை எழுதனுன்னா பேனாவை இப்படி பிடிக்கணும்.."
கேபிள் - "நான் யார் தெரியுமா..பெரிய கவுஜர்..எம் பேரு கேபிள்.."
அனுஜன்யா - "உங்க முறைப் பொண்ணு எங்க வீட்ல தான் இருக்கு..அவங்க உங்களை தான் தேடுறாங்க.."
கேபிள் கற்பனையில் மதுர படத்தில் வந்த தேஜாஸ்ரீயுடம் குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார்.
வீட்டுக்கு போனவுடன் திரும்பி நின்று கொள்கிறார்.அந்த பெண் வந்ததும் திரும்பி பார்த்து மயண்கி விழுகிறார்.அது தேஜாஸ்ரீ இல்லை பாத்த்ரம் தேய்க்கும் முனியம்மா.
பா.முனியம்மா - "இது தான் அழகுல மயங்குறதா.."
அனுஜன்யா - "இவரு தலையிலே கட்டி நாம தப்பிக்களாம்னு பாத்தா முடியாது போலயிருக்கே.."
பா.முனியம்மா அழுது கொண்டே வருகிறார்.என்னவென்று பார்த்தால் அவர் பாட்டுக்கு யாரோ எதிர்பாட்டு பாடி இருக்கிறார்கள்.நான் இருக்கும் போது எதிர்கவிதையா என்று பொங்கி புலியாகப் புறப்படுகிறார்.
பா.முனியம்மா பாடிய பாடல் - "புலி உறுமுது..புலி உறுமுது.."
வந்த எதிர்பாடல் - "சரக்கு திருகுது..சரக்கு திருகுது.."
கேபிள் கூட்டிக் கொண்டு போய் கவிதை மாதிரி மடங்கி மடங்கி போ என்று பா.முனியம்மாவின் காலை உடைத்து விடுகிறார்.பின்னாடியே அனுஜன்யா வருகிறார்.
எதிர்கவுஜ குரூப் - "இவர் ஏன் இங்கே வர்றாரு..எதிர்கவிதை போடுவது கொஞ்சம் சிரமம் தான்.."
அனுஜன்யா - "ஏன்யா இவங்க காலை உடைச்ச..வா வந்து அவங்க வேலையை எல்லாம் பாரு.."
கேபிள் - "பேப்பர் குடுடா.."
கடைக்காரன் - "இப்போ எதுக்கு பேப்பர்.."
கேபிள் - "கவித எழுத தான்.."
எ.க.கு - "பெரிய கவுஜரோ.."
கேபிள் - "உங்க எதிர்கவிதைக்கே எதிர்கவிதை போட வந்த கவுஜ நான்.."
எ.க.கு - "இந்தா எதிர்கவிதை.."
கேபிள் - "ஒண்ணு.."
எ.க.கு - "இந்தா இன்னொரு எதிர்கவிதை.."
கேபிள் - "ரெண்டு.."
எ.க.கு - "இந்தா இன்னொரு எதிர்கவிதை.."
கேபிள் - "மூணு.."
எ.க.கு - "மூணுக்கு மேலப் போனா எழுதுவீங்களா.."
கேபிள் - "ஒரு கணக்கு வேணாம்..நீ பாட்டுல எழுது..நான் பாட்டுல எண்ணிக்கிட்டு இருக்கேன்..என்ன திரும்ப எழுதுறீங்களா"
எ.க.கு - "இனிமே யாரு எழுதுவா.."
கேபிள் - "ஊருக்குள்ள பெரிய பெரிய எழுத்தாளர் எல்லாம் எங்கிட்ட மோதிட்டு நெருங்க முடியாம கிடக்குறாங்க..நீங்க எல்லாம் பொடிப் பசங்க.."
எல்லோரும் பேனாவை கீழே போட்டு விடுகிறார்கள்.
எதிர் கவுஜ குரூப்பில் வால்பையன்,நையாண்டி நைனா,டக்ளஸ்,சூரியன் இருக்கிறார்கள்.ஒரு வேன் வருகிறது.உங்களை எல்லாம் திரட்டி ஒனர் கூப்பிட்டார்.வண்டியில் ஏறுங்கள் என்று ஒரு குரல் வருகிறது.
அவர்களுடம் சேர்ந்து கேபிளும் ஏறுகிறார்.
குருஜி - "நீங்க யாரு..இதுல எதுக்கு ஏறுறீங்க.."
கேபிள் - "நானும் ஒரு கவுஜர் தான்.ஊருக்குள்ள பார்ம் ஆயிட்டேன்.." என்று அடம் பிடிக்கிறார்.
வேறு வழியில்லாமல் அவரையும் ஏற்றிக் கொண்டு வேன் புறப்படுகிறது.
கேபிள் - "நல்லா பாத்துக்க..நானும் கவுஜர் தான்..போட்டிக்கு போறேன்..போட்டிக்கு போறேன்..போட்டிக்கு போறேன்.." என்று கையாட்டி விட்டு போகிறார்.
(தொடரும்..)
டிஸ்கி :
எதிர்பாராத திருப்பங்களுடன் அடுத்த பாகம் வரும்..
Friday, December 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
சூப்பர்.. ஏ பாருங்கப்பா. நானும் ரவுடிதான் ரவுடிதான் ரவுடிதான்
கேபிள் சங்கர்
This post has also been removed by the author.
ஓ... பார்ட் 2 வேறயா...
பார்ட் 2 க்கு வெயிட்டிங்...
நமக்கு நெடுந்தொடர்-லாம் பிடிக்காது தல...
சீக்கிரம்.
:-))))))
அசத்து
அட்டகாசம்.
:-)))
அசத்தல்... :-)
Post a Comment