Sunday, December 13, 2009

நான் விஜய்க்கே டாட்டா காட்டாதவண்டா

விஜய் மேல மட்டும் ஏன் இம்புட்டு பாசம்(காண்டு) அப்படி தொடர்ந்து யாரும் கேட்பாங்க நினைச்சி எழுதிய பதிவு இது.ஆனா யாரும் கேக்கல அதனால பிற்காலத்தில் கேட்டா அதுக்கு இந்த அவசர வெளியீடு.

பத்தாவது படிக்கும் போது நாங்க சாலிகிராமத்தில் தான் இருந்தோம்.தொடர்ந்து இரண்டு பள்ளியில் பிரச்சனை.காலையிலே பள்ளிக்கு போயிட்டு மதியம் ஒரு மணி அடிக்கும் முன் வீட்டில் இருப்போம்.விஜய் வீடு வழியா தான் பஸ் வரும்.அப்ப தலைவரு கண்ணே கண்ணு இரண்டே இரண்டு ஹிட்டு தான் கொடுத்து இருந்தார்.அப்போ விஜய் ஒரு காமடி பீஸூ(இப்போ மட்டும் என்ன வாழுதாம் அப்படி யாராவது கேட்டால் - அவர் பாணியில் தான் பதில் வரும்) சைலன்ஸ்.. சொல்லிட்டு இருக்கேன்ல.. அப்படி பயங்கரமா என்னை கத்த வைச்சுராதீங்க.

இப்போ தான் சன் டி.வி பொங்கல் வைச்சுடாங்களே.எங்கே உட்டேன்.நடத்துனா தானே படிக்க.ஏரியா ஏரியா போய் கிரிக்கெட் விளையாடிட்டு வர்றது தான் ஒரே பொழுது போக்கு.விஜய் வீட்டு வழியா தான் போவோம்.பெரும்பாலான நேரம்(பலான நேரம் இல்ல..சரியா வாசிக்கணும்..) தலைவரு பால்கனியில் தான் இருப்பாரு.(படம் இருந்தா தானே..).நம்ம பசங்க சும்மா இல்லாம கை காட்டுவோமா.. அப்படி சொல்வாங்க.அதுக்கும் யார் கிட்ட இருந்தாவது கமென்ட் பாய்ந்து வரும் - சேரன் பாண்டியன் கவுண்டமணி மாதிரி - "அதுக்கு கையை அடுப்புல வைச்சு கருக்கிரலாம்..".சில சமயம் வேற யாராவது இருந்தா அவங்களுக்கு கை காட்டுவாங்களே தவிர மறந்தும் விஜய்க்கு கை காட்ட மாட்டாங்க.

காதலுக்கு மரியாதை படத்தில் இருந்து விஜய்க்கு ஒரு ரசிகன் உருவாகியிருந்தது தெரியாம அவன் கூட பழகிட்டோம்.(பழகித் தொலச்சிட்டோம்).அவன் என்ன பண்ணினான் என்னுடைய க்ளோஸ் பிரெண்டு அவனை கூட்டிக்கிட்டு ப்டியமுடன் படம் பாக்க போயிருக்கான்.டிக்கெட் முப்பது ரூபா.இவன் கிட்ட இருந்த காசை வாங்கிட்டு மச்சி வெளியில் வெயிட் பண்ணு அப்படி சொல்லிட்டு அவன் மட்டும் படம் பாக்க போயிட்டான்.இதை கேட்டதுல இருந்து அவன் மேல மட்டும் இல்லாம விஜய் மேலயும் ஒரு காண்டு.அவன் அடிக்க ப்ளான் பண்ணினோம்.விஜய்யை கிண்டல் செய்தால் எப்படியும் சண்டைக்கு வருவான் போட்டுத் தாக்கிரணும்.அது தான் திட்டம்.அப்படி வெறித்தனமா கிண்டல் பண்ணியும் அவன் அசைந்து கொடுக்கல. யாரோட ரசிகன்.பிறகு தலைவர் வழியிலே ஒரு பொண்ணுக்கு சோப்பு போடப் பாத்தான்.அன்னைக்கு அவனை அடிச்சி வெளுத்தோம்.

தலைவரு துள்ளாத மனமும் துள்ளும் படம் ஹிட்டு கொடுத்தவுடன் அவருக்கும் பத்து ரசிகர்கள் சேர்ந்தாங்க.பசங்க நல்லா படிக்கணும் அப்படி எங்க ஸ்கூலில் ஞாயிறு என்று கூட பாக்காமல் ஸ்பெஷல் க்ளாஸ்.(கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்) உயிரை வாங்கி மத்தியானம் தான் விடுவாங்க.அதுக்குள்ள என் தம்பி வயித்துக்குள்ள கோழிக் கால் போற மாதிரியே பீலிங்கு.அவசரம் அவசரமா பஸ் பிடிச்சி ஓடியாந்தா இங்க விஜய் வீட்டு முன்னால பத்து இருபது பேர் நிப்பாங்க அதுவும் பஸ் போக வழி விடாம நிப்பாங்க.கேட்டா ரசிகர்கள் சந்திப்பாம்.ஒரு நாள் பசியில "டேய் உங்களுக்கு வேலையே இல்லையா.." அப்படி கத்திட்டேன்.இவங்க பண்ற அட்டகாசம் எல்லாம் எங்க கொலைவெறியா திரும்பிச்சி.

அதுல விஜய்யை நக்கல் அடிக்கிறது தான் முதல் வேலையா இருந்துச்சி.குஷி படம் ரீலிஸாகி தலைவருக்கு பெண் ரசிகைகள் வேற.கூட கொஞ்சம் வறுத்து எடுத்தோம்.

அப்புறம் காலேஜ் வந்தப் பிறகு விஜய் ரசிகை அப்படி தெரியாம ஒரு பொண்ணு கிட்ட பேசிட்டேன்.இந்தா ஷாஜகான் பாட்டு கேளுன்னு கேஸட் குடுத்தா.நான் என் ஆன்ஸர் பேப்பரைக் கூட கசக்கி தான் தருவேன்.அதே ஞாபகத்தில் அந்த கேஸட் கவரைக் கசக்கி விட்டேன்.விஜய் படம் கசங்கி விட்டதாம்.அம்மா கொஞ்ச நாளைக்கு பேசவே இல்ல.பேசாமல் இருந்தா என்ன நட்டமா.ரொம்ப வசதி.நான் முடிவு பண்ணிட்டேன்.நான் கால்ல விழுந்தா விஜய்யை கிண்டல் பண்ண முடியாது.அப்புறம் அவளே வந்து பேசினா.எதுக்கு பேசினோம் அப்படி வருத்தப் படுற அளவுக்கு விஜய்யை நக்கல் செய்து தீர்த்து கொண்டேன்.

எனக்கு தலைவரு நடிச்சப் படத்திலேயே பிடிச்சது - புதிய கீதை.(ஏன் புதிய பைபிள் அப்படி வைக்க வேண்டியது தானே.மாட்டாங்களே இளிச்ச வாயன் யாரு..அவன் தலையில தானே மிளகாய் அரைக்க முடியும்.சாந்தி தியேட்டரில் படம் பாக்கும் போது சொன்னாங்க.)

அப்புறம் மடிப்பாக்கம் போனப் பிறகு இலங்கை தமிழர்கள் எல்லாம் விஜய் ரசிகர்கள் தான்.நல்லா பொழுது போகும்.ஆனா இன்னைக்கு அவங்களே படத்தைப் புறக்கணிப்போம் அப்படி சொன்னது தான் ஹைலைட்.எங்க வீட்டுப் பிள்ளை அப்படி தூக்கி வைச்சு கொண்டாடிய மக்களே புறக்கணிக்கிற அளவுக்கு அவங்க வீட்டுப் பிள்ளை அரசியல் ஆசையில் விளையாடிப் பார்த்துட்டாரு.

இவரை நக்கல் பண்ணினா மட்டும் இவரும் இவரோட ரசிகர்களும் பொங்கி வருவாங்க.ஆனா தலைவரு தொப்பை வைச்சுக்கிட்டு ஆடுவாரு.ஆனா போக்கிரி படத்தை லொள்ளு சபாவில் பேக்கரி என்று நக்கல் செய்தவுடன் அதோட இயக்குனர் மிரட்டப்பட்டாராம்.(நானும் அப்படி என்னத்தான் அப்படி பண்ணிட்டாங்கன்னு பாத்தா - அந்த வீடியோ எங்கிட்ட இருக்கு.கூடிய சீக்கிரம் போடுறேன்.எந்த படம் வந்தாலும் அது பொருந்தும்.அப்படி ஒரு கலாய்.)

எனக்கு ஒரு ஆசை என்னன்னா வேட்டைக்காரன் படம் சன் டிவி புண்ணியத்துல ஓடணும்.அப்போ தான் இன்னும் நல்லா கலாய்க்க முடியும்.

டிஸ்கி :

எனக்கு தலைவரு கிட்ட பிடிச்ச விஷயம் ரெண்டே ரெண்டு தான்.பன்ச் டயலாக் பேசும் போது பொறிப் பறக்கும் கண்ணும்,நடனமும்.ஆனா ஒரே மாதிரி நடிச்சி என் உயிரை வாங்கியதால் நான் கடைசியா பாத்தப் படம் - அழகிய தமிழ் மகன்.

இவங்க ரசிகர்கள் பொங்கி வரும் காவிரி மாதிரி சண்டைக்கு வர்றதப் பாத்தா தான் கூட கொஞ்சம் கலாய்க்கத் தோணுது.

தலைவரு அப்படியே விபூதியையும்,குங்குமத்தையும் குறைச்சுக்கிட்டா எங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கிடைக்கும்.யாரும் பொங்க வேண்டாம் பொங்கினா இன்னும் கொஞ்சம் சீண்டத் தான் தோணுது.

7 comments:

jayam said...

konjam mokkai overa aayiduchu ....

ஆ.ஞானசேகரன் said...

//விஜய் மேல மட்டும் ஏன் இம்புட்டு பாசம்(காண்டு) அப்படி தொடர்ந்து யாரும் கேட்பாங்க நினைச்சி எழுதிய பதிவு இது.ஆனா யாரும் கேக்கல அதனால பிற்காலத்தில் கேட்டா அதுக்கு இந்த அவசர வெளியீடு.//

ஏன் இந்த காண்டு....?

லோகு said...

:(((((((((((((

சிநேகிதன் அக்பர் said...

பஸ்ஸுக்கு வழிவிடாததற்கு இவ்வளவு கோபமா.

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு பாஸு.

angel said...

இவங்க ரசிகர்கள் பொங்கி வரும் காவிரி மாதிரி சண்டைக்கு வர்றதப் பாத்தா தான் கூட கொஞ்சம் கலாய்க்கத் தோணுது.


coz avanga hero sanda podratha kalaithu kalaithu apdi ayidichu

அத்திரி said...

நானும் ரவுடிதான் அப்படின்ற ரேஞ்சுதான்......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரைட்டு .நடக்கட்டும்

Raju said...

பிளீஸ்..யாராவது வந்து "இது ஒரு சுய கழிவிறக்கப் பதிவு"ன்னு சொல்லுங்க பாஸ்..! இவரு தொல்லை தாங்க முடியல.