டம்ளர் தண்ணீர் தன் வரலாறு கூறுதல்(நான் ப்ளாக் ஆரம்பித்த கதை) - இப்படி தான் இந்த பதிவுக்குத் தலைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன்.நூறாவது பதிவாக இதை தான் எழுத வேண்டும் என்று என்றோ முடிவு செய்து விட்டேன்.ஆனால் பதிவுலகத் தொடர்பதிவு விதிகளை மீறி விடுவானோ என்ற பாசத்தில் இதை எழுத அழைத்த அன்பு நர்சிமிற்கு என் பணிவான நன்றிகள்.இந்த தலைப்பும் நர்சிம் கொடுத்தது தான்
முதலில் வலைப்பூக்களைப் பற்றி நான் ஆனந்த விகடனில் பார்த்து இருக்கிறேன்.அந்த வலைப்பூ தேடுஜாப்ஸ் செந்தழல் ரவியின் வலைப்பூ.நான் எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என்று பார்த்து விட்டு வந்து விடுவேன்.சைன் இன்,கிரியேட் ப்ளாக் இதேல்லாம் என்னால் பார்க்க முடியாது.பிறகு அதையெல்லாம் விட்டு விட்டு மாலைமலர்,தினதந்தி,தினமலர்,தினகரன்,குமுதம் போன்ற பாத்திரங்களில் என்னை நிரப்பிக் கொள்வேன்.
என் அலுவலகத்திற்கு தென் மாவட்டத்து நண்பர் ஒரு வேலையாக வந்து சேர்ந்தார்.அவர் பெயர் ஜெயகுமார்.(தலைக்கு அக்டோபர் 25ம் தேதி திருமணம்.என்னோடு நீங்களும் வாழ்த்துங்கள்)நேரம் போக சாருவைப் படிப்பேன் என்று சொன்னார்.நீங்களும் படித்து பாருங்கள் என்று சொன்னார்.அதுவரை எனக்கு சாருவின் மீது வெறுப்பு தான் உண்டு.காரணம் அவர் என் ஆதர்ஷ இயக்குனர் பாலாவின் படங்களை(சேது படம் பார்த்ததில் இருந்து) விமர்சித்த விதம்.(நந்தா - தாலியறுத்தான் கதை,பிதாமகன் படத்துக்கும் காட்டமான விமர்சனம்).வேண்டாவெறுப்பாக படிக்க ஆரம்பித்த நான் அவர் எழுத்து தந்த போதையில் மூழ்கி கிடந்தேன்.(மூன்று நாட்களாக எந்த வேலையும் செய்யாமல் அவர் இணையத்தை முழுவதும் படிது முடித்தேன்.)இந்த டம்ளர் தண்ணீர் கை தவறி விழுந்து கொட்டியதே சாரு என்ற பெரிய காட்டாற்றில் தான்.அந்த வேகம் தாங்காமல் எல்லோர் மீது இருந்த ஆதர்ஷமும் வடிந்து விட்டது.அவ்வா சிறுகதை படித்து விட்டு முதல் முறையாக கதைப் படித்து கண் கலங்கினேன்.
ஜெயகுமாரிடம் புலம்பி தீர்ப்பேன்.எப்படியெல்லாம் எழுதிகிறார் என்று சிலாகித்து ஒரு விவாதமே நடக்கும்.ஜெயகுமார் எப்பவும் சொல்வார் "ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க..இது எழுத்து தான்..".அவர் சொல்வதை மனது கேட்காமல் சாருவின் எழுத்திற்கு ஒரு அடிமையாக மாறியிருந்தேன்.உச்சகட்டமாக அந்த நிகழ்ச்சி நடந்தது.ஒரு விடுமுறை நாளில் ஒரு போன் வந்தது.தூக்க கலக்கத்தில் ஜெயகுமார் என்று நினைத்து என் மாமாவிடம் சாரு,காமக்கதைகள்,தற்கொலை முயற்சி,அது சரியான விதம் என்று பேசி முடிக்க,ஒரு கட்டத்தில் எனக்கு சந்தேகம் வந்து யார் என்று கேட்க..உடனே அவர் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ல அந்த விஷயம் என் வீடு வரை போய் விட்டது.பிறகு புஸ் என்று ஆகி விட்டது.பத்து வயதில் பாலகுமாரன் படித்த பையனை என்ன சொல்வார்கள். சாருவும்,பாலகுமாரனும் ஒரே மாதிரி எழுதுவார்கள் என்று வீட்டில் நினைத்து இருப்பார்கள்.(இப்படி நான் எழுதுவது சாருவிற்கு தெரிந்தால் கருட புராணம் படி எனக்கு என்ன தண்டனை கிடைக்கும்).சிரித்து கொண்டே விட்டு விட்டார்கள்.(இந்த சம்பவத்திற்கு பிறகு நான் என்னை மாற்றி இருந்தேன்.அது பாரபட்சம் இல்லாமல் எல்லோரையும் கலாய்க்க வேண்டும்.அது தான் என் இயல்பு.சாருவைப் படித்த பிறகு என் இயல்பு மாறி இருந்தது.காரணம் சுஜாதாவிற்கு பிறகு எனக்கு மிகவும் சாருவை எனக்கு பிடித்து இருந்தது)
சாருவின் தளத்தில் இருந்த லுக்கியின் பதிவும்,நர்சிமின் பதிவும் என் கண்ணில் பட்டது.பெரிய ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் கிளை நதி போல எல்லாமே தெளிவாக இருந்தது.லக்கியிடமிருந்து அதிஷா.நான் இவர்கள் மூவரையும் ஒரு நீரோடை என்று தவறாக நினைத்து விட்டேன்.இவர்களும் ஒரு காட்டாறு என்று போகப் போக தெந்தது.நர்சிம் எழுதிய ஏதாவது செய்யனும் பாஸ் என்ற பதிவில் இருந்து பரிசல்.பரிசலிடம் இருந்து ஆதி(தாமிரா).இந்த பதிவில் இருந்து மாதவராஜ்,வடகரைவேலன்,வால்பையன், இன்னும் நிறைய. பிறகு அங்கே போய் இன்னும் இன்னும் இன்னும் ............. முடிவே இல்லாத பயணம் என்று தோன்றியது.இந்த பயணம் திரட்டி என்னும் கடலில் போய் முடிந்தது.பிரமித்து விட்டேன்.சாருவிடம் இருந்து குருஜி அங்கு இருந்து கென்.இப்படி கிளை ஆறுகள் முளைத்துக் கொண்டே இருக்கிறது.இன்னும் முளைக்கும்.அப்படி முளைக்கும் கிளை ஆறுகளில் எல்லாம் நான் நீந்துவேன்.
எழுதுபவர்களுக்கு நிறைய நண்பர்கள்."எப்படி எல்லோரும் ஒண்ணு(ப்ளாக் பற்றித் தெரியாமல் இணையத்தளம் என்று நினைத்து கொண்டேன்) வைச்சு இருக்காங்க..ரொம்ப செலவு ஆகுமே.." என்று ஜெயகுமாரிடம் கேட்டேன்.காரணம் நான் அப்பொழுது நான் டோமைன் நேம் மாற்றிய பதிவுகள் மட்டுமே எனக்கு தெரியும்.இப்படி ஒரு கேள்வி இப்போழுது யாராவது என்னிடம் கேட்டால் நான் சிரித்தே அவனை காலி செய்து இருப்பேன்.ஆனால் அவர் அப்படி செய்யாமல் "இது இலவசம்..கூகுள் தருகிறது.." என்று சொன்னார். "என்ன இலவசமா..அப்ப எனக்கு ரெண்டு பாட்டில் பினாயில்.." என்று மற்றவர்களை தொல்லை குடுக்க முடிவு செய்தேன்.நண்பர்கள் எளிதாக கிடைக்க எழுத்து தான் உதவும் என்று நான் +2 படிக்கும் போதே நிருபித்து இருக்கிறேன்.ஒரு சின்ன ப்ளாஷ்பேக்..
பள்ளியில் என் நெருங்கிய நண்பன் ஒரு பிரபலம்.எப்பவும் அவன் பையில் பலானது பலானது இருக்கும்.ஏதோ கேட்க போய் என்னை ரொம்ப அசிங்கப்படுத்தி விட்டான்."நான் ஒரு பிரபலம்..நீ.." என்று கேட்டு விட்டான்.ஆலிவர் டூவிஸ்ட் என்ற ஆங்கில நான் டிடையிலை மொழி பெயர்த்து ஒரு கதை எழுதினேன்.சிறிது விரசம் கலந்து காமடி கதை.வரலாறு காணாத பயங்கர வெற்றி.ஒரே ராத்திரியில் பள்ளியில் என் புகழ் கொடி கட்டி பறந்தது.அவன் நீ ஒரு பிரபலம் என்று சொன்னான்.அப்படி சொன்னவுடன் வினை வந்து விட்டது.நான் கதை எழுதிய காகிதத்தை யாரோ திருடி விட்டார்கள்.அதில் வரும் பெயர்களைப் படித்தால் பள்ளியை விட்டே என்னை தூக்கி விடுவார்கள்(எனக்கு பிடிக்காத ஆசிரியர் பெயர் அந்த கதையில் இருந்தது).+1 அல்லது +2 இது என் குடும்பத்தில் நிறைய பேருக்கு ஒரு பெரிய கண்டம்.சிக்கல் வரும் தேர்வு எழுத மாட்டார்கள். பயத்தில் ஜூரம் வந்து இரண்டு நாட்கள் பள்ளிக்கே போகவில்லை.பயந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.அந்த திருடிய கதையை ஆங்கில பொது தேர்வின் போது என்னிடம் கொடுத்தார்கள்.பிறகு எதுவுமே எழுதவில்லை.இந்த சம்பவம் மட்டுமே சுஜாதா வாழ்விலும் என் வாழ்விலும் நடந்த ஒற்றுமை.(கல்லூரியில் கதை எழுதிய அவர் அதற்கு பிறகு வேலையில் சேர்ந்து கொஞ்ச நால் கழித்து எழுத தொடங்கினாராம்).இந்த ஒற்றுமை உதாரணத்திற்கு யாரும் கோவப்படக் கூடாது.
அது மூலம் தெரிந்து கொண்டது எனக்கு எழுத வரும்.அதிலும் குறிப்பாக காமடி வரும் என்று.புது நண்பர்களும் கிடைப்பார்கள் என்று.
ப்ளாக் ஆரம்பிக்க நாள் குறித்து விட்டேன்.பொங்கல் - காரணம் என் பிறந்த நாள்.வில்லு படம் போல அந்த முயற்சி படுதோல்வி.ஹார்ட் டிஸ்க் அவுட்.வைக்க நினைத்த பெயர் ஸ்படிகம்.படு தோல்வி.பிறகு ஏப்ரலில் ஆரம்பித்து ஒரு பதிவு எழுதுவதற்கு முன் மூச்சி திணறி விட்டேன்.மே மாதம் சண்டை இழுத்தேன்.எங்கு போனாலும் இதே வெலை தான் எனக்கு.முதன் முதலாக ஒரு வீட்டில் குடிபோகும் போது அங்கு இருந்த ரெஜினா என்ற பென்னை அடித்து விட்டேன்.பிறகு அவள் தான் எனக்கு நெருங்கிய தோழி.என்னை விட ஐந்து வயது பெரியவள்.சாப்பிடும் போது கதை சொல்லுவாள்.பள்ளி செல்லும் நேரம் தவிர அவள் வீட்டில் தான் நான் இருப்பேன்.
இதுவரை நான் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
முதலில் வந்த 2000 ஹிட்ஸில் ஆயிரம் என்னுடையது.மனம் உடைந்து விட்டேன்.அப்போதெல்லாம் ஆரம்ப கால நர்சிம் பதிவைப் பார்த்து மனதை தேற்றிக் கொள்வேன்.திரட்டியில் இணைத்தப் பிறகு மூன்று நாட்களில் இரண்டாயிரம் ஹிட்ஸ்."லக்கியை அழைத்தீர்களா" - இந்த பதிவில் நர்சிம் பின்னூட்டம்.அதை ஒரு வெற்றியாக நினைத்தேன்.அதற்கு முன்னர் லக்கி,அதிஷா பின்னூட்டத்தை ஒரு வெற்றியாக நினைத்தேன்.
பிறகு சாரு இணையத்தில் என் கடிதம் வெளியானது.ஒரே நாளில் 2890 ஹிட்ஸ்.மூன்று நாளில் ஆறாயிரம் ஹிட்ஸ்.(சாரு வாசகர்களுக்கு நேரம் சரியில்லை) - இது அடுத்த வெற்றி.
பிறகு நாடோடி இலக்கியனிடம் ஆரம்பித்த சாட்டிங் நட்பு ராஜூ,நைனா,நர்சிம்,கேபிள் சங்கர்,தண்டோரா,கதிர்,சூரியன்,ஜெகநாதன் ,வால் பையன்,துபாய் ராஜா,லோகு,அசோக்,வசந்த்,வினோத்,அதிஷா,வனம் ராஜராஜன்,தாமிரா,பாலாஜி,ஞானசேகரன்,பீர் இன்று பிரபாகரிடம் வந்து நிற்கிறது.இன்னும் தொடரும்.... இது தான் நான் நினைத்த வெற்றி.
என் பதிவை அவர்கள் வலைப்பூவில் இடம் கொடுத்து இருக்கும் ஜெகனாதன்(தம்பி தங்கக் கம்பிகள் என்று பதிவு போட்டார்),தண்டோரா,ஆதி,வடகரைவேலன் அண்ணாச்சி(இவரிடம் ஒரே ஒரு பின்னூட்டம் பெற்று இருக்கிறேன்),அக்கீலிஸ்,யோ,மற்றும் நாடோடி இலக்கியன் எல்லோருக்கும் நன்றி.இவர்கள் வலைப்பூவில் இடம் பெறாதா என்று ஏங்கி இருக்கிறேன்.இதையும் ஒரு வெற்றியாக கருதுகிறேன்.
குறிப்பாக இருவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என் தம்பி மற்றும் ஜெயகுமார்.இருவரும் முதலில் இருந்து என் வலைப்பூவை மேய்பவர்கள்.(படித்து விட்டு காய்பவர்கள்)
எனக்கு இருக்கும் ஒரு ஆசை..ரெஜினா நீ என் பதிவை என்றாவது படிக்கனும்.தமிழ் தேர்வின் போது படிக்காமல் "வணக்கம் வாத்தியாரே" என்ற மொக்கை படத்திற்கு உன்னுடன் வந்தேன்.நீ அன்று செய்த பாவத்திற்கு இது தான் நான் உனக்கு தரும் தண்டனை.நீ சொல்லி குடுத்த கதைகளை நான் ஒழுங்காக எழுதுகிறேனா என்று சொல்ல வேண்டும்.அது தான் எனது மிகப் பெரிய வெற்றி என்று நினைப்பேன்.( சிவந்த மலர் என்ற மொக்கை படத்தின் கதையை எனக்கு சொல்ல நீ மூன்று மணி எடுத்து கொண்டாய்.படமே இரண்டரை மணி நேரம் தான்)
இதுநாள் வரை ஆதரவு தந்து என் பதிவை வாசித்தவர்களுக்கு என் நன்றிகள்.என்னை தொடரும் 70 நண்பர்களுக்கும் நன்றி.
டிஸ்கி :
நூறாவது பதிவில் இருந்து மொக்கை போடுவதைக் நிறுத்தப் போகிகிறேன்.நான் சொன்னது லேபிள்ல மொக்கைன்னு போடுறதை.
நிறைய எழுதுங்கள்.நீங்கள் தான் நாளைய பிரபலம்.
என்றும் நட்புடன்,
அரவிந்த்
யார் பெயரையாவது குறிப்பிடாமல் இருந்தால் தவறாக எடுக்க வேண்டாம்.நீங்கள் என் மனதில் இருக்கிறீர்கள்.புதிய நண்பர்களுக்கும் இடம் உண்டு.இந்த நட்பூக்களைப் பெற்று தந்த பதிவுலகம் வாழ்க.
ப்ளாக் ஆரம்பிக்க காரணமாக இருந்த ஜெயகுமாருக்கு மீண்டும் சொல்கிறேன் திருமண வாழ்த்துகள் தல.
இது போல மொக்கை போட நான் அழைக்கும் ஆறுவர்
நையாண்டி நைனா.
தண்டோரா.
ராஜூ. (பிறந்த நாள் வாழ்த்துகள்)
பிரபாகர்.
சூரியன்.
லோகு.
Thursday, October 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
பதிவு எழுத வந்த கதை பயங்கமாயில்ல இருக்கு... கலக்குங்கப்பு. பள்ளி நாட்களை விவரித்தவிதம், சாரு, நரசிம், ஜெயக்குமார், .... எல்லாம் அருமை தம்பி. நல்ல நடை, விவரித்தல்.... நீங்கள் சாதிக்க நிறைய இருக்கு. பதிவுலகிற்கு வந்து இன்னும் பார்த்த டே வே கொண்டாடல.... இருந்தாலும் தம்பி அழைப்புக்காக வரலாற எழுதறேன்....(எத்தனைய படிச்சிடுப்போம்... நிலக்கரி தன் வரலாறு கூறுதல், ஆறு தன வரலாறு கூறுதல்..னு)
Keep it up.. Congrats.
பிரபாகர்.
arumai.. நன்றாக எழுதியிருக்கிறாய் அரவிந்த்.. இந்த நூறு பல ஆயிரம்நூறு கோடிகளாக வாழ்த்துக்கள்..
ஆமா.. என்னையும், தண்டோரவையும் வச்சி கலாய்ச்சி பதிவு போட்டு அடி வாங்கினதை சொல்லவேயில்லை..:)
வாழ்த்துக்கள் தம்பி....நான் கொஞ்சம் டைம் எடுத்துக்கவா?(நான் ஒரு பிராபல பதிவர் ஆச்சே)
நூறாவது பதிவுக்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டேன்....
வாழ்த்துக்கள்... சீக்கிரம் டபுள் சென்சுரி அடிக்க வாழ்த்துக்கள்...
பிரபாகர்.
நல்ல சுவாரஸ்யமான எழுத்து அரவிந்த். இவ்வளவு வேகமாக நூறு எழுதியிருக்கும் உங்களைப் பார்த்தால்...வேறென்ன பொறாமைதான். வாழ்த்துகள்.
நிறைய வாசியுங்கள். நிறைய எழுதுங்கள். Keep rocking.
அனுஜன்யா
நாங்க(?) முன்னமே சொன்ன மாதிரி நீங்க ஒரு ஜூனியர் -------- வா..? (கோடிட்ட இடத்தை அந்த பி.ப. நிரப்புவாரா...?!)நடத்துங்கண்ணே..!
//முதலில் வந்த 2000 ஹிட்ஸில் ஆயிரம் என்னுடையது.மனம் உடைந்து விட்டேன்.அப்போதெல்லாம் ஆரம்ப கால நர்சிம் பதிவைப் பார்த்து மனதை தேற்றிக் கொள்வேன்.//
:))))
நீங்க சொல்ல வந்ததும் சொல்லப்படதும் அப்படியே தலைகீழ்.
100-வது பதிவுக்கு வாழ்த்துகள்!
//இதுவரை நான் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.//
ஏன்ன்ன்ன்ன்ன்... இப்புடி...
வேகமாக அடித்த 100க்கு வாழ்த்துகள் அரவிந்த்
nice
:)
wishes
kalakkal thala...
vaalthukkal for 100.
வாழ்த்துகள் தோழர்! :-)
அதுக்குள்ள நூறா.. வாழ்த்துகள் அர்விந்த். அனு சொன்ன மாதிரி நிறைய வாசியுங்கள், நிறைய எழுதிப் பழகுங்கள்.
/*ஜோ/Joe said...
//முதலில் வந்த 2000 ஹிட்ஸில் ஆயிரம் என்னுடையது.மனம் உடைந்து விட்டேன்.அப்போதெல்லாம் ஆரம்ப கால நர்சிம் பதிவைப் பார்த்து மனதை தேற்றிக் கொள்வேன்.//
:))))
நீங்க சொல்ல வந்ததும் சொல்லப்படதும் அப்படியே தலைகீழ்.*/
அண்ணே குட்டைய கொலப்பாதீங்க அண்ணே...
அவர் சொல்ல வந்தது... "நல்லா எழுதுற அவருக்கே...!!! அப்படின்னா... நாம எம்மாத்திரம்??" என்று நினைத்து அவர் சொல்லி இருக்கிறார்.
வாழ்த்துகள் அரவிந்த்..:-)))
வாழ்த்துகள் சகா...
இந்த தடவை வடைய குட் கேட்ச் போலயே...!
\\ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அதுக்குள்ள நூறா..
வாழ்த்துகள் அர்விந்த்.
அனு சொன்ன மாதிரி
நிறைய வாசியுங்கள்,
நிறைய எழுதிப் பழகுங்கள்.\
இந்த கவிதை நல்லாருக்கே...!
:-)
\\ஜோ/Joe said...
//முதலில் வந்த 2000 ஹிட்ஸில் ஆயிரம் என்னுடையது.மனம் உடைந்து விட்டேன்.அப்போதெல்லாம் ஆரம்ப கால நர்சிம் பதிவைப் பார்த்து மனதை தேற்றிக் கொள்வேன்.//
:))))
நீங்க சொல்ல வந்ததும் சொல்லப்படதும் அப்படியே தலைகீழ்.
100-வது பதிவுக்கு வாழ்த்துகள்!\\
சந்தேகமே இல்லை..
ஜோ ஒரு அறிவு ஜீவிதான் போலயே..!
:)
100க்கு வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்கள் பாஸ்.வாழ்த்துக்கள்
நூறுக்கு வாழ்த்து(க்)கள்.
கலக்கல்:-)
சதத்திற்கு வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்...
சுவாரஸ்யமான எழுத்து நடை....
அன்புத்தம்பி அரவிந்த், செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.அடுத்து வரும் காலங்களிலும் அடிச்சு தூள் கெளப்புங்கள்.
வாழ்த்துக்கள்
100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா.
நானும் தங்களைப்போலவே சாருவை வெறுப்பவன்...இன்றுவரையில், அவரது எழுத்துக்களை இதுவரையில் படிக்கவில்லை.
நீங்க பிளாக் ஆரம்பித்த கதை நல்லாருக்கு. தொடர்ந்து வேகமாய் 100ம் முடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
அன்பர் ஜெயக்குமாருக்கு வாழ்த்துக்கள்...
தொடர்க உங்களின் எழுத்துப்பணி...
ஆரம்பத்தில் இருந்து உங்கள் பயணத்தை பின் தொடர்ந்தே களைப்படைந்தேன் நண்பரே!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
/*ஜோ/Joe said...
//முதலில் வந்த 2000 ஹிட்ஸில் ஆயிரம் என்னுடையது.மனம் உடைந்து விட்டேன்.அப்போதெல்லாம் ஆரம்ப கால நர்சிம் பதிவைப் பார்த்து மனதை தேற்றிக் கொள்வேன்.//
:))))
நீங்க சொல்ல வந்ததும் சொல்லப்படதும் அப்படியே தலைகீழ்.*/
அண்ணே குட்டைய கொலப்பாதீங்க அண்ணே...
அவர் சொல்ல வந்தது... "நல்லா எழுதுற அவருக்கே...!!! அப்படின்னா... நாம எம்மாத்திரம்??" என்று நினைத்து அவர் சொல்லி இருக்கிறார்.//
ஓ ..அந்த 'ஆரம்ப கால' -வை நான் கவனிக்கல்ல ..மன்னிக்கவும் :)
தங்களின் 100வது இடுகைக்கு வாழ்த்துகள்.
நல்லா எழுதியிருக்கீங்க... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் அரவிந்த்!.
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் அர்விந்த். உங்க பதிவு எல்லாமே அருமையா எழுதறீங்க. இன்னும் நிறைய படிங்க. நிறைய எழுதுங்க. உங்க எழுத்துக்கள் இன்னும் பிரபலமாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//முதலில் வந்த 2000 ஹிட்ஸில் ஆயிரம் என்னுடையது //
நீங்க பெரிய ஆளு. எனக்கு வந்த முதல் 2000த்தில் 1900 என்னோடது :)
சதத்திற்கு வாழ்த்துக்கள் அரவிந்த்.
//நீங்க பெரிய ஆளு. எனக்கு வந்த முதல் 2000த்தில் 1900 என்னோடது :)
//
அப்துல்லா!
:lol:
கலக்கல்!!
வாழ்த்துக்கள் 100!
100-வது பதிவுக்கு வாழ்த்துகள்! ;-)
வாழ்த்துக்கள் அரவிந்த்..!
100 க்கு வாழ்த்துக்கள்..
சீக்கிரம் 10 கோடி ஹிட்ஸை தாண்ட வாழ்த்துக்கள்..
(கோடிக்கு எத்தனை பூஜ்யம் 'ன்னு தெரியலைங்க... :) )
அரவிந்த்,
வெறும் பாசத்தால் அணுகிற எந்த இலக்கியமும் சரியான அனுபவத்தைத்(அல்லது படிப்பினையைத்)தரவே தராது.
அது சுஜாதாவாக இருந்தாலும் சரி, சாருவாக இருந்தாலும் சரி. நெஞ்சை நிமிர்த்தி.. என்னத்தடா எழுதிக் கிழிச்சிருக்கான் என்று படிக்கும் இலக்கியத்தில் கிடைக்கும் திடுக் ட்ரீமெண்டில்தான் நம் மனம் நிமிர்ந்து உட்காருகிறது.
இந்தப் பெயரைப் போட்டால் எனக்கு(ம்) ப்ரபல்யம் கிட்டும் என்றால், போடா நீயும் ஒம் பெயரும் என்று விட்டேத்தியாக போகும் ஜென்மம் நான்.
எனக்கு நான்தான் பெரிய்ய்ய்ய்ய இ(எ)லக்கியவாதி!! மற்றவர்கள் எழுத்து என் அனுபவங்களைக் கிளறும் கரண்டி, தூண்டுகோல் என்ற அளவில் மட்டும் கொள்வேன்.
எனக்கு மிகப்பிடித்த இலக்கியத்தை தீவிரமாக விமர்சிக்கும் பாங்கு கொண்டவன் நான்.
உங்களை விமர்சித்து (காட்டமாக) எழுதுகிறேன் என்றால் உங்களைக் கூர்ந்து கவனிக்கிறேன் என்று அர்த்தம்.
(இது என் பல பழைய பின்னூஸ்களில் தெரிய வந்திருக்கும்)
சாருவைக் கொண்டாடுங்கள்; நான் யாரையும் தடுக்கும் எதிர்-இலக்கியவாதி கூட்டம் அல்ல. விமலா ரமணி, ஆர்னிகா நாசர்-களுக்கு பெரிய ரசிகர் மன்றமே கொண்ட பூமியிது! வைரமுத்துவுக்காக உயிரையும் விடும் ஆட்கள் கொண்ட நாடுயிது. விஜய்க்காக விரலை வெட்டிக்கொள்ளும் கலைவெறியர்கள் நிரம்பிய தேசமும் இதுதான்.
நான்கூட வைரமுத்துவை பேனா சித்திரமாக வரைந்துள்ளேன். பழமலய்க்கும் வைரமுத்துவுக்கும் நடந்த கவிப்போரில் (குமுதம் ரெகுலராக வாசித்தவர்களுக்குத் தெரியும்) கலங்கி வைரமுத்துக்காக கவிதை கூட எழுதியிருக்கிறேன்.
சாருவின் கலகம் காதல் இசை படித்த பின் அது பிடித்துப்போய் அவருக்கு கடிதம் கூட எழுதினேன் (அதை அவர் மதிப்புரை என்று அவர் இணையத்தில் வெளியிட்டார்) இதற்கு பலஆண்டுகளுக்கு முன்பு என் நெருங்கி இலக்கிய நண்பர் சொன்னது: சாரு ஒரு வேஸ்ட். நீ விரும்பிப் படிக்கும் கவிஞன் ஒருநாள் அரிவாள் எடுத்துக்கொண்டு அவனை வெட்ட துரத்து துரத்து என்று துரத்தினான்.. அதனாலேயே பத்து ரூபாய் ஸீரோடிகிரியைக் கூட அப்போது வாங்கிப் படிக்கவில்லை. சாருவின் இணையதளம் மூலம் ஸீரோ டிகிரி, ராஸ லீலா எல்லாம் வாங்கிப் படித்தாயிற்று. பட்... அப்படியொன்றும் கவரவில்லை. (ஆனால், இதற்கு முன்னே சாருவின் படத்தைக் கூடக் கச்சிதமாய் பென்சிலாய் தீட்டியிருக்கிறேன்!)
பெரிய பிரபலங்கள் நிழலில் வளரும் சின்னச் செடிகள் போலிருக்க என்னால் முடியுமா என்று தோன்றவில்லை. ஏனென்றால், Plants always remain small under a big tree! இது நாம் (பதிவர்கள்) எல்லோரும் இன்னும் பாய்ந்து செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்பதற்காகச் சொல்லியது. இதை சாக்காக எண்ணி சண்டைக்கு வருவேன் என்பவர்கள் என்னை (மட்டும்) இலக்காக்கிக் கொள்க. இந்த பதிவிலேயே கும்மியடிக்க வேணாம். பாவம் அரவிந்த்!
திடீர்னு இப்படி எழுதறானே இவன்னு நீங்க நினைக்க வேண்டாம். என் முதல் பதிவே இந்த இலக்கிய பிரேமைகளை அலசிய ஒன்றுதான். அதேபோல் யமுனா ராஜேந்திரன் என்பவர் எழுதிய (ஜெமோ, சாரு) பற்றிய பதிவிற்கு காட்டமாய் பின்னூவும் அனுப்பியிருக்கிறேன்.
ரைட். இங்கு சாரு ஒரு அளவுகோல் என்ற அளவில் மட்டும் எடுத்துக் கொள்ளவும். இதுபோல் நிறைய இலக்கிய, அரசியல், சினிமா மயக்கங்கள் கொண்ட சமுதாயம்தான் நமது. அரசியலில் வம்சாவளியாக ஒரே சின்னத்தில் குத்தும் ஜீன் எவ்வளவு ஆபத்தோ அதே மாதிரிதான் இலக்கிய அபிமானமும். முகம், பெயர், பிரபல்யம், கெட்டப் பார்த்து அணுகும் இலக்கியம் மறைமுகமாக நம்மை அந்த படைப்பாளியிடம் (மட்டும்) கொண்டு சேர்க்கும். வேறு ஒரு பிரயோசனமும் தெரியாது.
நீங்கள் இங்கு என்னென்னவோ எழுதியிருக்கிறீர்கள்.. ஆனால் எனக்கு மிகப் பிடித்தது.. ஸாரி.. என்னை நிறுத்தி வாசிக்க வைத்தது.. ரெஜினாவை நீங்கள் அடித்த வரிகள்தான்.. இதுதான் நம்மைத் தாண்டிய, நம்மை நடத்திச் செல்லும் இலக்கியம் என்பது.
நூறாவது பதிவா? வாழ்த்துக்கள் அரவிந்த்!!!
கடைசியா 1:
இரும்புத்திரையில் மாற்றுக்கருத்துக்கு இடம் உண்டு என்ற நம்பிக்கையில், இப்படி ஒரு பின்னூ குத்துகிறேன். பிடிக்காவிட்டால் அசால்ட்டாக இதைத் தூக்கிவிட்டு எப்போதும் போல் சாட்டிங்குக்கு வாங்க!
கடைசியா 1ணே 1:
யாரும் கொறஞ்ச படைப்பாளியில்லே! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையிலே சமர்த்துதான். ஒரேயடியாக ஒரேமாதிரியான எழுத்துதான் படைப்பில் உடைப்பு ஏற்படுத்துகிறது. ஸோ.. உங்க ஸ்டைலில் நீங்க நல்லா வளர்ந்து.. அடடே இரும்புத்திரையா.. வாசிச்சே ஆகணும் என்று அரசியல், சினிமா, கலைத்துறையினர் எல்லோரும் விரும்புகிற மாதிரி, இரும்புத்திரை பலமொழிகளிலும் (ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மன், ரஷ்யன், தெலுங்கு) ஒரே நாளில் மொழிப்பெயர்ப்பு ஆகிற மாதிரி திகழ மனதார வாழ்த்துகிறேன்.
இது சும்மா கொசுறுக்கு 1ணே 1 (ஹிஹி):
பிரான்ஸில் ரெண்டு பேர் பேசிக்கிறாங்க...
இவன்: என்னப்பா, ஏதோ புதுசா புக் வந்திருக்கே; வாங்கலாமா?
அவன்: நல்ல புக்கா என்னென்னு தெரியலே. புது படைப்பாளி. நம்பி வாங்கலாமா?
இவன்: நீ வேற? இரும்புத்திரையிலேயே நல்ல புக்கு போட்டிருக்காங்க
அவன்: யப்பா! அப்படின்னா வாங்கிட வேண்டியதுதான்!!!
- இதுதான் நீங்கள் (மற்றும் நாம் அனைவரும்) எட்ட வேண்டிய உயரம்!
தல சுத்துது தல
100 க்கு வாழ்த்துகள்..
நல்லா எழுதி இருக்கீங்க..
Post a Comment