Wednesday, September 23, 2009

உ.போ.ஒ கமலும்,பிற்சேர்க்கையும்

படம் வெட்னஸ்டே போல இல்லை,கமல் நஸ்ருதீன் ஷா போல நடிக்கவில்லை.இன்னும் பல இல்லைகள்.நான் அதிகம் வெறுப்பதே இந்த கம்பரிஷன்னை தான்.நம் வீட்டு பிள்ளையும்,பக்கத்து வீட்டு பிள்ளையும் ஒன்றா..வெட்னஸ்டே படம் நன்றாக இருப்பது போல் தெரிந்தால்,கமல் இதை கெடுத்து இருப்பார் உங்களுக்கு முன்னரே தெரியும் என்றால் ஏன் ஸார் இந்த படத்தைப் பார்கனும்..ஹிந்தி தரத்திற்கு அவ்வளவு முடியும் என்றால் கமல் தரத்திற்கு இதுதான் முடியும்.

கமல் ஒரு காமன் இல்லை தான் நான் ஒத்துக் கொள்கிறென்.யெஸ் ஹி இஸ் நாட் அ ஆர்டினரி காமன் மேன்,ரிச் டிபரண்ட் மேன்..அதுதான் வசனத்திலே வருகிறதே எந்த சுப்பனோ குப்பனோ இதை செய்ய முடியுமா என்று..

"என்னைப் பொறுத்த மட்டும்" பணக்காரனால்(வசதி படத்தவன் கமல் போல தேவையான பொருட்களை வாங்கும் அளவிற்கு) தான் புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எளிதாக எடுத்து செல்ல முடியும்.அதற்கு ஒரு உதாரணம் போதும்.அவர் சே.அவர் வந்து சேர்ந்தப் பிறகு தான் கியூபப் புரட்சி வெற்றி பெற்றது அதுக்கு முன்னாடி வரைக்கும் பிடல் கேஸ்ற்றோவின் போராட்டங்கள் தோல்வியைத் தான் தழுவியது.

சே என்ன ஏழையா.மருத்துவம் படிக்கும் அளவிற்கு வசதி உள்ளவர்.இன்னும் நாம் ஷங்கர் போன்றவர்களின் தாக்கத்தில் இருந்து வெளியே வரவில்லை.ஏழையாக அல்லது கொஞ்சம் வசதி உள்ளவன்(சிவாஜி விதிவிலக்கு) அவனுக்கு ஒரு பாதிப்பு ஏற்படும் போது பொங்கி எழுந்து(சிவாஜியும் விதிவிலக்கல்ல) நம்ப முடியாத சாகசங்களை செய்கிறான்.மாட்டி கொண்டால் கண்ணீர் வழிந்து காய்ந்து போன தடத்தில் ஈ மொய்க்கும் அளவிற்கு ஒரு பாடாதி ப்ளாஷ்பேக்.ஏதாவது செய்யனும் என்று வேண்டுகோள்.சேரிப் பக்கம் ஒரு கருத்து கேட்பு.மக்கள் புரட்சி..சட்டி பானை உருட்டல்..இத்யாதி இத்யாதி..இந்த வகையறா படங்களை முறியடித்த கமல் ஒரு காமன் மேன் இல்லை தான்.

இது எதுவுமே இந்தப் படத்தில் இல்லை.மேலே சொன்னவற்றை செய்பவன் தான் காமன் மேன் என்ற புனிதப் பிம்பம் உருவாக்கப் பட்டுள்ளது(ஜெண்டில்மேன் தொடங்கி நொந்தசாமி(அட இதுவே ஷங்கர் படத்தின் கட்டிப்பிடி தான் ஸாரி த்ழுவல்) வரை).அது உன்னைப் போல் ஒருவனின் உடைக்கப்பட்டுள்ளது.படத்தில் கமலுக்கும்,அவர் குடும்பத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லை.யாரோ ஒரு சகபயணியின் சாவைத் தட்டி கேட்டு விட்டு மாட்டாமல் போகும் கமல் ஒரு காமன் மேன் இல்லை தான்.(காமன் மேன் எல்லாம் கடைசியில் தங்கள் தரப்பை நீதிமன்றத்தில் சொல்வார்கள்..இதில் அப்படி இல்லையே)

குறைந்தப் பட்ச தண்டனையை அனுபவிப்பார்களே அது கூட கமலுக்கு கிடைக்கவில்லை என்ன கொடுமை..காமன் மேனாக இருந்தால் இப்படி இருந்திருக்குமே..

"மும்பை தாக்குதலைப் பற்றி தமிழகத்தில் கவலை இல்லை என்று ஒரு வசனம்" இரா.முருகன் இந்த ஒரு வசனதிற்காவே நான் கை தட்டுவேன்.ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்து பயனம் செய்யும் எனக்கு தெரியும்.உன்னை போல் ஒருவன் அளவிற்கு மும்பை தாக்குதலைப் பற்றி பதிவுலகத்தில் விவாதம் நடந்ததா?

"அதான் ரெண்டு இருக்கே.." இந்த வசனத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை..இது வசனம் எழுதியவருக்கு உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் ஒன்றை ஒருவன் கொன்று விடுகிறான் என்று வைத்து கொள்வோம்..அதான் மிச்சம் ரெண்டு இருக்கே என்று
சந்தோஷமாக இருப்பீர்களா..

கமல் உங்களுக்கு இது தேவை தான் பாபர் மசூதி இடித்தப் போது எதிர்ப்பு தெரிவித்த முதல் நடிகன் கமல் தான்.அப்ப நீங்க என்ன த்துவா..என்ன இசம் இல்ல என்ன ரசம்(பாதரசமா..)

டிஸ்கி :

கடைக்கு போகும் கமல் ஏன் மட்டன் வாங்காமல் காய்கறி வாங்கினார்..(அவரு சைவ முஸ்லீம்..இந்துவாக இருந்தால் அன்னைக்கு விரதம்) - இது எல்லாம் ஒரு கேள்வி..

தேவர் மகனில் அவர் எப்படி நடிக்கலாம்..(அவர் என்ன அந்த ஜாதியா..இளையராஜாவின் ஜாதியைக் குறிப்பிட்டு கமல் அந்த படத்திற்கு வேலை வாங்கினார் இன்று மனுஷ்யபுத்திரனிடம்(இங்கு மதம் வருகிறது) வேலை வாங்கினார் அவருக்கு உள்ளது ஒரு குயபுத்தி என்று எழுதியவரே உங்க காலை இருந்த இடத்தில் இருந்து நீட்டுங்கள் நான் இங்கே இருந்தே கும்பிடுறேன்)

பதிவாக இருந்தாலும் சரி..படமாக இருந்தாலும் சரி உங்களுக்கு பிடிக்காதக் கருத்தைப் பிடித்து தொங்கினால் யாரும் விளக்கம் கொடுக்க முடியாது.(அது திருப்தி தராது)

இனி ஒரு நடிகனையும் விட வேண்டாம் கமல் இந்த நடிகரைப் போல படத்தின் ஆரம்ப காட்சியில் விபூதியையும்,அடுத்தப் படத்தில் குங்குமத்தையும் பூசிக் கொண்டு எமாற்றினாரா இல்லை கட்சி ஆரம்பிக்க முடிவு செய்ததும் முருகன் கோவிலுக்கு சென்றாரா இப்படியும் கேள்வி வரும்.

நாஸர் தான் கமல் ரோலே செய்ய வேண்டும் என்றால் ஆர்யா எப்படி அகோரியாக நடிக்கலாம்..ஷாம் எப்படி அந்தோணியாக நடிக்கலாம்..என்ன கொடுமை சார் இது..நடிகனாக பாருங்கள்..மதங்களும்,ஜாதியும் எங்கே வருகிறது

"படைப்பை மக்களிடம் வைத்த பிறகு அது படைப்பாளிகளுக்கு சொந்தமில்லை..வெற்றியோ தோல்வியோ அங்கே நின்றால் அடுத்த வேலை செய்ய முடியாது" - இதை சொன்னவரும் கமல் தான்.

வாங்க நாம அடிச்சிக்கிட்டு தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவோம்.கமல் வேறு படம் எடுக்கும் வரை நமக்கும் பொழுது போக வேண்டுமே..

(இதுவும் ஒரு பதிவு தான்..பதிவை மட்டும் விமர்சனம் செய்யுங்கள்..)

இந்த களேபரத்தில் நான் நாடோடி இலக்கியனின் வேட்டைகாரன் பதிவை ரசித்தேன்..

இது தான் அடுத்த சண்டைக்கு நான் எடுத்து தரும் டாபிக் - வேட்டைகாரன்.

16 comments:

மணிஜி said...

கரப்பான் பூச்சி லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கய்யா...

நையாண்டி நைனா said...

NALLAA IRUKKE...

Unknown said...

அதான்...இவங்க எல்லாம் எப்பத்தான் திருந்த போறாங்களோ.....ச்சே அந்த ஒரு பதிவு படிக்கவே அருவருப்பா இருக்கு...அவருக்கு பின்னூட்டம் மோசமா வந்ததாம்....பதிவ விட பினூட்டங்கள் அவ்வளவு அருவருப்பு இல்லை....
ச்சே...எல்லாத்தையும் படிச்சா செம கடுப்பு வருது...ஒரு படத்த எப்படி பாக்கனும்னு தெரியாத இவங்கல்லாம்......என்னமோ போங்க :(((((((((((((((

Raju said...

மும்பையில 25 தான் ரிலீஸ்னு சொன்னாங்களே...!

நீ தொடு வானம் said...

//நாஸர் தான் கமல் ரோலே செய்ய வேண்டும் என்றால் ஆர்யா எப்படி அகோரியாக நடிக்கலாம்..ஷாம் எப்படி அந்தோணியாக நடிக்கலாம்..என்ன கொடுமை சார் இது//

நிறைய காடுவெட்டி குரு பதிவுலகத்துல உருவாக்கி இதுக்கும் போராட்டம் நடத்துவாங்க

ஈரோடு கதிர் said...

//வாங்க நாம அடிச்சிக்கிட்டு தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவோம்.கமல் வேறு படம் எடுக்கும் வரை நமக்கும் பொழுது போக வேண்டுமே..//

சரியா சவுக்கடி அரவிந்த்

என்ன கொஞ்ச நாளா மொக்கை போய் கோபம் பொத்துக்கிட்டு ஊத்துது...

எதிலயோ படிச்சேன் கமல் போட்டிருக்கிற செருப்பில கூட குத்தம் கண்டுபிடிக்கிறாங்க..

அந்த நடாசா பிடிச்ச சிகரெட்டு என்ன பிராண்டுனுதான் இன்னும் சண்டை வரல

அமுதா கிருஷ்ணா said...

கடைக்கு போகும் கமல் ஏன் மட்டன் வாங்காமல் காய்கறி வாங்கினார்..(அவரு சைவ முஸ்லீம்..இந்துவாக இருந்தால் அன்னைக்கு விரதம்) -

நல்லாயிருக்கு இந்த பாயிண்ட்..படம் பார்க்காவதர்களை பயமுறுத்துறாங்க...

நீ தொடு வானம் said...

//"படைப்பை மக்களிடம் வைத்த பிறகு அது படைப்பாளிகளுக்கு சொந்தமில்லை..வெற்றியோ தோல்வியோ அங்கே நின்றால் அடுத்த வேலை செய்ய முடியாது" - இதை சொன்னவரும் கமல் தான்.
//

அட கமல் அடுத்த படம் இயக்குறாரா
பாலச்சந்தரும் அந்த படத்தில் உண்டா
ரெண்டு பேர் மாட்டுனாங்க டோய்

தினேஷ் said...
This comment has been removed by the author.
ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

நல்ல பதிவு அரவிந்த்.. :)

தினேஷ் said...

/அந்த நடாசா பிடிச்ச சிகரெட்டு என்ன பிராண்டுனுதான் இன்னும் சண்டை வரல//

ஹ ஹ ஹ ..

"மும்பை தாக்குதலைப் பற்றி தமிழகத்தில் கவலை இல்லை என்று ஒரு வசனம்" இரா.முருகன் இந்த ஒரு வசனதிற்காவே நான் கை தட்டுவேன்.ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்து பயனம் செய்யும் எனக்கு தெரியும்.உன்னை போல் ஒருவன் அளவிற்கு மும்பை தாக்குதலைப் பற்றி பதிவுலகத்தில் விவாதம் நடந்ததா?

யாராச்சும் பதில் சொல்லுங்கய்யா இதுக்கு அதவிட்டுட்டு அந்தாளு ஏன் இப்படி அப்படி எப்படி அடுப்படி கடுப்படி நெத்தியடினு மாறீ மாறீ கூவுறீங்க..

இதுவரை எத்தனையோ படங்களுக்கு அண்ணன் கேபிள் மற்றும் சிலர் விமர்சனம் எழுதியிருக்கார்கள் அப்போது பொங்காத ஜனங்க இப்போ மட்டும் என்ன திடீர் விமர்சன பொங்கல்,கண்டன பொங்கல் வைக்கிறாங்கனு தெரியலை..

மொத்தத்துல ஆளாலுக்கு பதிவு போட கிடைச்சிருச்சு ஒண்ணு ரெண்டுனு போட்டு சாணி தொளிக்கிறாங்க நடக்கட்டும்

Unknown said...

இன்னும் முடியலையா..??

ஜோ/Joe said...

ரொம்ப சூடா சொல்லியிருக்கீங்க ..ஒரு 'காமன் கமல் ரசிகனின்' கோபம் :)

//கமல் வேறு படம் எடுக்கும் வரை நமக்கும் பொழுது போக வேண்டுமே..//

இது தான் பஞ்ச்!

ஏனென்றால் சரியோ ,தவறோ விமர்சிக்கவும் விவாதிக்கவும் தகுதிடையதாக இருப்பதே ஒரு படத்தின் சிறப்பு தான் ..சரக்கு இருந்தால் தான் விவாதிக்க முடியும் .. அது அநேகமாக எல்லா கமல் படத்திலும் உண்டு ..அதனால் தான் கமல் படம் எப்படா வரும் ..பேப்பரும் பேனாவுமா தியேட்டருக்கு போய் குறிப்பெடுத்து எப்படா பிரிச்சு மேயலாம் -ன்னு ஒரு கூட்டமே இருக்கு :)

Ashok D said...

படிச்சிட்டு வரன்பா...

Cable சங்கர் said...

அலோவ்.. இப்படி கூட எழ்துவியா.. நீயீ..? சூப்பர்.. நச்னு அடிச்சாப்புல இருக்கு..உன் பதிவு..

andygarcia said...

செருப்ப குத்தம் சொன்னது தான் செம காமெடி