Wednesday, December 9, 2009

க்கா,கைக் காப்பும்,ஜிமெயில் முகவரியும்

சென்னை - 600028லில் இருந்து மடிப்பாக்கத்திற்கு ஜாகை மாறியிருந்தோம்."இது எங்க ஏரியா முதலில் வந்தவுடன் என் வீட்டுக்கு தான் வரணும்..இல்ல நான் பேசவே மாட்டேன்.." என்று மிரட்டியிருந்தாள் கல்லூரித் தோழி.ஒரு பைவ் ஸ்டார் வாங்கிக் கொண்டு அவள் வீட்டுக்கு போனேன்.என் வீட்டில் சாமான் களைக் கூட அடுக்காமல் அங்கே போயிருந்தேன்.அவளுடைய பாட்டி குடுத்த வரவேற்பே சரியில்லை.பெயருக்கு கொஞ்ச நேரம் இருந்து விட்டு வாங்கி இருந்த பைவ் ஸ்டாரையும் நானே சாப்பிட்டு விட்டு அந்த பேப்பரை மட்டும் அவள் புத்தகத்தில் திணித்து விட்டு வந்தேன்.

"தப்பா எடுத்துக்காத..எல்லாம் எங்க அக்காவை சொல்லணும்.அவ மட்டும் பசங்களைக் கூப்பிட்டு வந்திருந்தாள் உனக்கு வரவேற்பே தனியாக இருந்திருக்கும்.."

"குடுத்த வரைக்கும் போதும்..இனிமே இந்தப் பக்கம் கூட நான் வர மாட்டேன்.."

வீட்டுக்கு சோர்வாக வந்து மெத்தையில் படுத்து தூங்கி விட்டேன்.அழைப்பு மணி சத்தம் கேட்டது.யார் என்று போய் பார்த்தால் எங்கள் பக்கத்து வீட்டுக்கு புதிதாக வந்த குடும்பத்தில் இருந்து ஒரு பெண்.

"சுத்தியல் கிடைக்குமா.."

"விலைக்கு குடுப்பதில்லை.."

"ஆணி அடிச்சிட்டு தந்து விடுவோம்.."

"இந்தாங்க சுத்தியல்..இந்த நாற்காலியையும் எடுத்திட்டு போங்க..திரும்ப வந்து பெல் அடிக்க வேண்டாம்.." அங்கே இருந்த எரிச்சலில் கொஞ்சம் சூடாகவேயிருந்தேன்.

போன் கனெக்சன் வரவில்லை.அவர்கள் வீட்டுக்கு வேகமாக வந்து விட்டது.கல்லூரித் தோழி தினமும் என்னிடம் பேச வேண்டும்.இல்ல சண்டை தான் அப்படி மிரட்டியிருந்தாள்.கையில் வேறு காசும் கிடையாது.அவளே காசு கொடுப்பாள்.தினமும் இருபது,முப்பது தொடங்கி அவள் போடும் மொக்கையில் அவள் அப்பாவின் பர்ஸ் பழுக்கத் தொடங்கியது.

சில சமயம் காசு இல்லாமல் பக்கத்து வீட்டு எண்ணை வாங்கி கொடுத்து இருந்தேன்.அவர்கள் வீட்டில் இருப்பேன்.காரியம் ஆக வேண்டும் காலில் விழுந்து விட வேண்டியது தானே.சரண்டராகி இருந்தேன் எல்லாம் அந்த போனுக்காக.

அவர்கள் இலங்கை தமிழர்கள்.இலண்டனிலும்,ஜெர்மனியிலும்,கனடாவிலும் உறவினர்கள் இருந்தார்கள்.எப்போது போன் வரும் என்றே தெரியாது. இருந்தாலும் மணிக்கணக்காக மொக்கை.

"என்ன அடிக்கடி போன் வருது.."

"படிப்பில் சந்தேகம்.."

"பாத்து இவ்வளவு சந்தேகம் இருக்க கூடாதுடா யப்பா.." இப்படி நக்கல் செய்தாலும் சிரித்துக் கொள்வேன்.இரண்டு சின்ன பசங்க மூத்த அக்காவுக்கு.தப்பு செய்தால் அடிக்கும் அடியில் எனக்கே மூச்சு நின்று விடும்.பிள்ளை வளர்ப்பது ஒரு கலை தான் தெரிந்து கொண்டேன்.சமயத்தில் சின்னப் பெண்ணும் வெளுப்பார்.யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டார்கள்.தடுத்தால் எனக்கும் அடி விழுமோ என்று அபாயம் இருப்பதால் பயத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன்.

கையில் இரும்புக்காப்பு அணியப் பிடிக்கும்.அப்பாவுக்கு பிடிக்காது என்பதால் கல்லூரிக்கு செல்லும் போது அணிவேன்.வீட்டிற்கு வரும் போது எடுத்து விடுவேன்.பெரும்பாலும் அந்த சின்ன தமக்கை தான் கழட்டி விடுவார்.

முதல் வருடம் விடுமுறை.எல்லோரும் நெல்லைக்கு சென்று விட நான் மட்டும் தனியாக.அவர்கள் வீட்டில் இருந்து தான் சாப்பாடு.ஆறு மாதம் ஆகி விட்டதால் போன் நட்புகளுடன் எல்லாம் சண்டை.பெரும்பாலும் உள்ளூர் படங்களைப் பார்த்துக் கொண்டு இருப்பேன்.வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வார்.யாருமே இவ்வளவு அன்பு காட்ட மாட்டார்கள்.

இரண்டாம் வருடம் தொடங்கி விட்டது.
போன கதையில் நான் அடித்த கூத்து மாதிரி ஆகி விடக் கூடாது என்று தம்பி மடிப்பாக்கத்தில் உள்ள பக்கத்து பள்ளியில் சேர்த்தார்கள்.

"என்ன இப்போ போன் வருவதில்லை..படிப்பு வரவில்லையோ.."

"ஜூனியர் யாராவது வரட்டும்..அவங்களுக்கு க்ளாஸ் எடுப்போம்.."

"திருந்தவே மாட்ட.."

தம்பி மிஸ்டர் பெர்பெக்ட்.நான் அப்படியல்ல.யார் கிங்கு பீர் ரம் இல்ல கம்பீரம் என்று ஓட்டெடுப்பு நடத்துவார்கள்.நான் மெஜாரிட்டி ஓட்டில் நீங்க நினைப்பது மாதிரி இல்ல..தோற்று விடுவேன்.

சின்னப் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்கள்.முதலில் சரி என்று சொன்னவன் பின் எனக்கு கௌசல்யா மாதிரி வேணும் என்று சொல்லி விட்டான்.நான் இப்படி நினைப்பது இரண்டாவது முறை.எனக்கு மட்டும் பத்து வயது அதிகமாக இருந்தால் நானே உங்களை கல்யாணம் செய்து கொள்வேன்.சொல்ல நினைத்தாலும் வீட்டில் கட்டப் போகும் டின்னை நினைத்து அமைதியாகி விட்டேன்.

பிறகு அவர்களும் இலங்கை போய் விட்டார்கள்.நானும் மறந்து விட்டேன்.போர் உக்கிரம் அடைந்த சமயம் தான் அவர்கள் நினைப்பே வந்தது.விசாரித்து பார்த்தப் போது அவர்கள் லண்டன் போய் விட்டதாக தெரிந்தது.நிம்மதியாக இருந்தது.இலங்கையில் இல்லாமல் எங்கு இருந்தாலும் அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று நான் நினைக்க காரணம் அந்த குழந்தைகளும்,அந்த குடும்பமும் தான்.

ரொம்ப நாள் கழித்து போன வருடம் அவர்களைப் பார்த்தேன்.கல்யாணமாகி கனடாவில் இருப்பதாக சொன்னார்கள்.காலில் அடிப்பட்டு இருந்தது. பதறிய போது சொன்னார்கள்.சின்ன காயம் தான்.

"எப்போ கல்யாணம்.."

"அடுத்த வருடம் செய்வேன்.."

"இப்போ என்ன அவசரம்..இன்னும் சில வருடங்கள் போகட்டும்.."

"சரி உங்கிட்ட ரொம்ப நாளா கேட்கணும் என்று நினைத்துக் கொண்டுயிருக்கிறேன்.."

"என்ன சொல்லுங்க.."

"தம்பி அன்னைக்கு கல்யாணம் நின்று போன போது என்ன நினைத்தாய்.."

"என்ன நினைத்தேன்.."

"பத்து வருடங்களுக்கு முன்னால் பிறந்திருந்தால் என்னை கல்யாணம் செய்து இருக்கலாம் என்று நினைத்தாய் தானே.."

"இல்லையே.."

"அப்போ அக்கா சொல்.."

"எனக்கு என்ன பயமா.."

"அப்ப சொல்லு.."

"க்கா.."

"முழுசா சொல்லு.."

"காக்கா.."

"என்ன.."

"ஜன்னல் கிட்ட இருக்கு..காக்கா பிரியாணி வைச்சுருவோமா..இனி அடுத்து எப்போ.."

"தம்பி கல்யாணத்துக்கு தான்.." என்று சொல்லும் போது தம்பியில் ஒரு அழுத்தம் இருந்த மாதிரி தெரிந்தது.

"உன் மெயில் ஐடி சொல்லு.."

"a_a_ _ _ _a_ _ _a@gm_il.com"

ரொம்ப நாள் கழித்து மெயில் வந்து இருந்தது.

"நீ அன்னிக்கு என்ன நினைச்ச..சொல்லு..சொல்லு.." என்று இருந்தது.

நான் பதில் அனுப்பியிருந்தேன்."உங்களுடைய எந்த மெயிலும் கிடைக்கவில்லை.."

பதிலுக்கு ஒரு மெயில் - "என்னுடைய இமெயில் முகவரி எப்படி கிடைத்தது..காக்கா குடுத்துதா.."

பதில் அனுப்பாமல் நினைத்து சிரித்தேன்."ஒத்துக் கொண்டால் தான் அக்காவா.."

டிஸ்கி - இப்போது மும்பையில் இருந்தாலும் கையில் வளையம் அணிவதில்லை.கழற்றி விட யாரும் இல்லை என்பதால்.

அந்த ஜிமெயில் முகவரியை யாரும் நிரப்பி பார்க்க வேண்டாம்.எல்லாம் கற்பனையே.இப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை.

அப்பவே ஜீன்ஸ் பேன்ட்டை ஒரு வாரம் போடுவேன்.இப்போ இலக்கியவாதி ஆகும் ஆசை இருப்பதால் இருக்கும் ஒரு ஜீன்ஸ் பேன்ட்டையும் துவைப்பதேயில்லை.

6 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

//நீ அன்னிக்கு என்ன நினைச்ச..சொல்லு..சொல்லு.." என்று இருந்தது.

நான் பதில் அனுப்பியிருந்தேன்."உங்களுடைய எந்த மெயிலும் கிடைக்கவில்லை.."
//
நன்றாய் இருந்தது அரவிந்த்

தமிழினியன் said...

//.எல்லாம் கற்பனையே.இப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை.//
ஹை நம்பிட்டோம்

புலவன் புலிகேசி said...

//கையில் வேறு காசும் கிடையாது.அவளே காசு கொடுப்பாள்.தினமும் இருபது,முப்பது தொடங்கி அவள் போடும் மொக்கையில் அவள் அப்பாவின் பர்ஸ் பழுக்கத் தொடங்கியது.//

கொடுத்து வச்சவரய்யா நீர்...எல்லாத்தையும் எழுதிட்டு கடைசியா கற்பனைன்னு போட்டா நாங்க நம்பிருவமா...????

Unknown said...

// அப்பவே ஜீன்ஸ் பேன்ட்டை ஒரு வாரம் போடுவேன்.இப்போ இலக்கியவாதி ஆகும் ஆசை இருப்பதால் இருக்கும் ஒரு ஜீன்ஸ் பேன்ட்டையும் துவைப்பதேயில்லை. //

இது தான் இலக்கியவாதி ஆவதற்கு qualification -ஆ .., அப்போ நானுன் சீக்கிரம் ஆகிடுவேன்..,

அறிவு GV said...

கதையோ கற்பனையோ, கலக்கலா இருக்கு.
///எனக்கு மட்டும் பத்து வயது அதிகமாக இருந்தால் நானே உங்களை கல்யாணம் செய்து கொள்வேன்///
உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா..?
உங்களை சாட்ல மீட் பண்றேன்.

angel said...

//.எல்லாம் கற்பனையே.இப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை.//
ஹை நம்பிட்டோம்

repeatttttttttttttt