Tuesday, December 8, 2009

சினிமா எடுப்பது எப்படி

ஏற்கனவே குடுத்த யோசனைகளையும் பார்க்கலாம்..

மூன்று வருஷத்துக்கு ஒரு தடவை அதே சாயலில் இருக்கும் படங்களை எடுத்தால் மக்களுக்கே புரியாது.உதாரணத்திற்கு நாவரசு கொலையில் தண்டனை பெற்ற ஜான் டேவிட் எங்கே என்றால் தெரியாது.அந்த சமயத்தில் படம் சூடாக இருக்க வேண்டும்.புது மாதிரியான படம் என்று ஆதரவு தருவார்கள்.

உதாரணத்திற்கு ஆண்-பெண் இவர்களுக்கு நடுவில் இருக்கும் ஈகோ இதை வைத்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை படம் எடுத்து வெற்றி பெறலாம்

2000 - விஜய்,ஜோதிகா நடித்த குஷி.ஸ்கீரின் இத்து போகும் அளவுக்கு எக்கோ இல்ல அகம் பிடிச்ச கழுத இல்ல ஏதோ ஒண்ணு.இதை நூல் பிடிச்சி எடுத்தது தான் அதற்கு பிறகு வந்த படங்கள்.

2003 - திருடா திருடி.

2005 கடைசியில் லைலா பிரசன்னா நடித்த கண்ட நாள் முதலாய்.

2009 தொடக்கத்தில் சிவா மனசுல சக்தி.

2012 இந்த உலகம் அழியும் முன்னாடி எந்த படம் வரும் என்று பார்ப்போம்.

அடுத்து வருவது உலக சினிமாவில் இருந்து நேக்காக உருவி பாடல்களை சொருகுவது.பாடல் எடுக்க யோசிக்க வேண்டுமா.ச்சே இல்ல தெலுங்கு படத்தில் மிட் நைட் மசாலா பார்த்தால் தேறி விடும்.முடிந்தால் அதே படத்தை விழாவுக்கும் அனுப்ப வேண்டியது.இன்னும் முடிந்தால் நடுவராக அங்கே கலந்து கொள்வது.

சேரனின் உலக சினிமாவான பொக்கிஷம் வேர்ல்ட் க்ளாஸிக் பிரிவில் திரையிடப்படுகிறது.இது என்ன கொடுமை என்று பார்த்தால் அந்த ஒரிஜினல் படத்தின் பெயரே க்ளாஸிக் தான்.

அமீரின் படம் துபாயில் ஆசிய-ஆப்பிரிக்கப் பிரிவில் திரையிடப்படுகிறது.அதனுடைய மூலம் ஆப்பிரிக்கா தான்.

எல்லா தப்புகளின் தொடக்கமே காசு புழங்கத் தொடங்கும் போது தான் - இதை சொன்னவர் பிரியங்கா சோப்ரா.இது ஏதாவது உலகப் படத்தின் வசனமா.

மூன்றாவது எல்லா படத்துகளையும் கலந்து அடிப்பது.ஒரு மாதிரியாக மாறி இருக்கும்.நான் கதை மட்டும் சொல்வேன்.நீங்கள் எந்த படம் என்று கண்டுப்பிடிக்க வேண்டும்.டீலா நோ டீலா.(இரண்டுமே மொக்கை என்று கத்த வேண்டாம்).கொஞ்சம் மாற்றி விடுவது.

சத்ரியன் படத்தில் இருந்து ஆரம்ப காட்சி - அப்பா அம்மாவை கண் முன்னால் கொல்லும் ஒருவன்,அவனை பழி வாங்க கத்தியை எடுத்து குத்தப் போகும் பிடிக்கப் பட்டு சிறைக்கு அனுப்பப் படுகிறான்.அங்கு உள்ள சிறுவர்களுடன் சண்டை போட்டால் அது மீண்டும் சத்ரியன் ஆகி விடும்.அங்கு இருக்கும் நால்வர் அணி போலீஸ் அடிக்காமல் இவனை காப்பாற்றுகிறது.சிறையில் இருந்து தப்பித்து உடனே மாட்டிக் கொண்டால் அது சத்ரியன். யாரிடமும் மாட்டாமல் மும்பைக்கு போய் விட்டால் அது நாயகன்.மும்பைக்கு நகரில் தஞ்சம் புகும் நோக்கில் செல்லும் வழியில் மாட்டிக் கொண்டு இறங்கினால்

இனி சுப.வீரபாண்டியன் எழுதிய ஆனந்த விகடனின் தொடரில் இருந்து கொஞ்சம் எல்லாம் கலந்தால் ஒரு ப்ளேவர் வரும்.அந்த ஊரில் சுப்ரமணியபுரம் மாதிரி 5:1 அந்த ரேஷியோவில் நாயகியுடன் காதல்.கண்ணால் தான் பேச வேண்டும்.அப்ப என்ன பண்ணலாம் நாயகியை ஊமையாக்கி விடலாம். சுப்ரமணியபுரம் படத்தில் வரும் ஒருவருக்கு காலில் குறை.இங்கே உயரம் இல்லை.பழக்கத்திற்காக கொலை.அவர்களைத் தேடும் போலீஸ்.வலுவான துணை கதாபாத்திரங்கள்.

அங்கே பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் சித்தப்பா.இங்கே பணத்திற்காக உடல் விற்கும் பெண்.பொல்லாதவன் மாதிரி க்ளைமாக்ஸில் இருந்து தொடங்கும் படம்.

திருட்டுப் பயலே மாதிரியான முடிவு - நாயகி விமான நிலையத்தில் இருப்பதற்கு பதிலாக பக்கத்து இரயில் நிலையம்.அவளுடன் சேர வரும் நாயகன் கொல்லப்படுகிறான்.அவன் கொல்லப்படுவதற்கு முன்னால் சில சாகசங்கள் செய்கிறான்.காத்திருக்கும் பெண் கேமராவில் காட்டியபடி படம் முடிவடைகிறது.

இது சமீபத்தில் வெளியான எந்த படத்தையாவது ஞாபகப்படுத்தினால் நான் பொறுப்பு அல்ல.மேக்கிங்கில் வித்தியாசம் காட்டினால் தெரிந்த கதையும் வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கடைசி துணிந்து அடிப்பது.

உதவி இயக்குனர்களின் கதையைத் திருடுவது.இல்லை யாரோ நம்பிக்கையுடன் குடுத்து விட்டு சென்ற முழு ஸ்கிரிப்ட்டையும் எடுத்து படமாக்கி விடுவது.அதற்கு உதாரணம் தான் மகதீரா.தமிழ் கதாசிரியரின் கதை.எடுத்தது யார் பெயரில் ராஜமௌலி பெயரில்.

டிஸ்கி :

நமக்கு பெயரும்,புகழும்,பணமும் வேண்டுமானால் யாரையும் காலில் போட்டு நசுக்க தயங்க கூடாது.தயங்கினால் நீ நல்லவன் கிடையாது ஏமாளி. திருட்டை கண்டுப்பிடித்து சொன்னால் கோமாளி.

8 comments:

Lakshmikanthan said...

தல சேரனை கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க.முடியல.ஒரு நல்ல இயக்குனராக தொடர்ந்திருக்க வேண்டியவர் இப்படி சோகமான காட்சிகளில் முகத்தை மூடிக்கொண்டு சிணுங்குவது பார்க்க சகிக்கவில்லை.இப்ப இந்த அமீர் தம்பி வேற நடிக்கிறேன்னு கிளம்பிடிச்சு.யாராச்சும் சொல்லுங்கப்பா.கமல் மாதிரி கொஞ்சம் பாலிஷா அடித்தால் கூட ரொம்ப தெரிந்திருக்காது.மிஸஸ் டௌப்ட் ஃபயரின் மூலக்கதையை மட்டும்தான் கமல் சுட்டிருந்தார்.சீன் பை சீன் அப்படியே உருவவில்லை.இது கமல் இதுவரைக்கும் அடித்திருக்கும் மற்ற காப்பிகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.இன்சைட் மேனை அப்படியே சீன் பை சீனாக கேவலாமாக சுட்டு ஒரு தமிழ் படம் எடுத்திருந்தார்கள்.படத்தின் பெயர் நினைவில்லை.ஆனால் ரொம்ப கொடுமையாக இருந்தது.பருத்திவீரனை தந்த அமீர் இந்த அளவிற்கு இறங்கியிருக்க வேண்டாம்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அலசல்தான்

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பார்வை நானும் classic பார்த்து உள்ளேன். முதலில் சேரன் நம் மண்ணில் உள்ள கதைகளை படம் பிடிக்க வேண்டும். அவர் மிக சிறந்த இயக்குனர் ஆனால் சொந்தமாய் படம் செய்ய வேண்டாமா????
இதற்க்கு எதற்கு பெருமை வேறு .

Unknown said...
This comment has been removed by the author.
புலவன் புலிகேசி said...

நல்ல ஆய்வு தல...ஆனா நம்ம பாலாதான் இதில் சற்று வித்தியாசமானவர் என நினைக்கிறேன்...

Unknown said...

//திருட்டுப் பயலே மாதிரியான முடிவு - நாயகி விமான நிலையத்தில் இருப்பதற்கு பதிலாக பக்கத்து இரயில் நிலையம்.அவளுடன் சேர வரும் நாயகன் கொல்லப்படுகிறான்.அவன் கொல்லப்படுவதற்கு முன்னால் சில சாகசங்கள் செய்கிறான்.காத்திருக்கும் பெண் கேமராவில் காட்டியபடி படம் முடிவடைகிறது.

இது சமீபத்தில் வெளியான எந்த படத்தையாவது ஞாபகப்படுத்தினால் நான் பொறுப்பு அல்ல.மேக்கிங்கில் வித்தியாசம் காட்டினால் தெரிந்த கதையும் வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.//

அஞ்சு நிமிஷம் யோசிச்சு தான் என்ன படம்னு கண்டு பிடிச்சேன்.. நல்ல தான் சுட்டு இருக்காங்க..,

rooto said...

அண்ணை தயவு செய்து அது என்ன படம் எண்டு சொல்லுங்கோ இல்லாட்டி எனக்கு தலையே வெடிச்சிடும்!!! இப்ப வாற தமிழ்படங்கள நல்லது,பாக்கலாம் என்று எழுதினாதான் பார்ப்பன். அதுக்குகாரணம் நம்ம இளையதலைவலிதான்!!! ஆன சூப்பர ஐடியா தந்தீங்க!! நானும் டைரக்கடர்தான்!! நானும் டைரக்டர்தான்!!!

kailash,hyderabad said...

Is it ?. is Magatheera not Rajamouli
story ?.I think they copy and slightly changed the story from Hindi
'Om Shanthi OM '.
1.both are punar jenma stories.
2.in both hero heroine died in first lives also they could not marry.
3.both have technicians introducing song at lost.

another comedy also happens.
somebody copy one particular movie from Telugu to Tamil.It may get average success.then Telugu cinema
persons buy the (same) story and starting production in Telugu.
there are lot of examples.