Thursday, December 24, 2009

எம் பர்ஸ் பழுக்கல-வேட்டைக்காரன் ஜாலியோ ஜிம்கானா

வேட்டைக்காரன் படம் பாத்துட்டு அக்கு வேற ஆணி வேற பதிவுலகம் கழட்டியாச்சி.ஆனா உண்மையில் விஜய்யும்,சன் பிக்சர்ஸ் பேனரும் நல்லா கல்லா கட்டியாச்சி. இதுல வெப்துனியா தமிழ் அடிக்கிற கூத்து இருக்கே அய்யோ அம்மா முடியல. சாதாரணமா நல்ல படங்களுக்கு ஒரு பக்க விமர்சனம் எழுதும் வெப்துனியா விஜய் படத்துக்கு மட்டும் ரெண்டு பக்கம்.முழு திரைக்கதையும் எழுதி விஜயை கிண்டல் செய்கிறேன் என்று அட போங்க பாஸ் இழந்த காசை நினைச்சி பாத்ரூம்ல தண்ணியத் திறந்து விட்டு அழுங்க.அத விட்டுப் போட்டு விமர்சனமாம் விமர்சனம். இதுல சன் நியூஸ்ல தொல்லைக்காட்சியில் செய்தி வேற.படத்துல ரத்தக் காயத்தோட தண்ணியில குதிச்சாராம்.வெளியே வரும் போது ரத்தக் காயம் இல்லையாம்.( தண்ணியில விழுந்தா மேக்கப் கலையாதா..) அப்புறம் ஸ்ரீஹரி வீட்டுக்கு போகும் போது ரத்தக்காயம் இருக்குமாம்.(ஆமா திரும்ப மேக்கப் போட்டா இருக்காதா) என்ன சின்னப்புள்ளத் தனமாயில்ல இருக்கு விமர்சனம்.அதுவும் ரெண்டு பக்கம்.முதல்ல படத்தை படம் மாதிரி பாருங்க.நிஜம் மாதிரி பாத்தா இப்படித்தான் ஆகும்.

எப்படியும் சுறா பாக்க போறீங்க.அப்புறம் என்ன நக்கல்.இனிமே ஒரு சட்டம் கொண்டு வந்தா தான் சரியா வரும்.விஜய் படம் பாக்காதவங்க மட்டும் தான் கிண்டல்,கேலி செய்யலாம் இப்படி வந்தா தான் என்னை மாதிரி இருக்கிற ஆளு காட்டுல மழை கொஞ்சமாவது பெய்யும்.

நான் ஏற்கனவே சொன்னது தான் என்னைக்கு சாரு ஆன்லைன்ல விஜய் படம் விமர்சனம் வருதோ அன்னைக்கு தான் என் காசை தார வார்ப்பேன்.அப்படி நடக்கவே போறதில்லை.

என் தம்பி விஸ்காம் படிக்கும் போது திங்களும்,வெள்ளியும் தியேட்டர் வாசலில் தான் நிப்பான்.படம் வந்தவுடனே நான் கேப்பேன் எப்படி இருக்குனு வழக்கம் போல நல்லாயில்ல இப்படிதான் பதில் வரும்.நான் அவன் கிட்ட சொன்னது இது தான் - "எந்த படத்தையும் பத்து நாள் கழிச்சி பாரு.முதல் நாளே பாத்து என்னவாக போகுது..".அதே வார்த்தைகளை தான் உங்களுக்கும் சொல்வேன்.கேபிள் சங்கர் அண்ணன் எப்படியும் விமர்சனம் எழுதுவார். அப்புறம் வேணா பாக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வோம்.

இப்படி மொக்கை படங்களா விட்டு அவங்க உலக பணக்கார வரிசையில் முன்னுக்கு வந்துருவாங்க.விஜய் எம்.பி ஆகி எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கவர்னர் பதவி கிடைக்கும்.உங்களுக்கு - நிறைய விமர்சனம் கிடைக்கும்.

இனி மேலாவது சுறா படம் போது பத்து நாள் கழிச்சி பாருங்க.அப்படியே முதல் நாள் பாத்துட்டு தலைவலி மாத்திரை வாங்காதீங்க.வாங்கிட்டு பாதி காசாவது கிடைக்குமான்னு பதிவு போடாதீங்க.(இந்த வரிகளுக்கும் முன்னால் போட்ட எதிர்பதிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வரப் போற எம் மாமியார் மேல சத்தியம் பண்ணி சொல்றேன்.சத்தியம் கூட சரியா பண்ணத் தெரியலயே)

நான் எவ்வளவோ தடுத்தும் வேட்டைக்காரன் படத்துக்கு போன நைனா அதை சரிகட்ட அவதார் பாத்தாராம்.அவதார் பாத்துட்டு இது நம்ம அம்புலிமாமா கதை ஒரு இந்தியப் படம் என்று சொன்னார். நான் சொன்னேன் வேட்டைக்காரன் ஹாலிவுட் படம் என்று.சரிதானே..

அதனால் சன் பிக்சர்ஸ் குட்டி படம் விடுறாங்களாம். ஒழுங்கா எல்லோரும் ஆர்யா படம் பாருங்க. அப்புறம் பாத்துட்டு குட்டி சரியா ஈனவில்லை.சரியா பேணவில்லை என்று ஏதாவது சொல்லாதீங்க.

அப்புறம் அனுஷ்காவுக்காக தான் படம் பாத்தேன்னு யாரும் சொல்லாதீங்க.நான் நைனா கிட்ட சொன்னது இதுதான்."நீங்க அனுஷ்காவுக்காக படத்துக்கு போகாதீங்க அதுக்கு சூப்பர்னு ஒரு தெலுங்கு படம் இருக்கு.அதை பாருங்க..".அதே மாதிரி அனுஷ்கா ஒண்ணுமே காட்ட இல்ல இல்ல நடிக்கலையாமே.பின்ன நம்மாளு படத்துல எப்படி பிரியங்கா சோப்ராவையும்,பிபாஷா பாசுவையும் காட்டினாங்க என்று யோசித்து பாருங்க.எவ்வளவு பட்டும் நாம திருந்தவே மாட்டோம்.தமன்னாவுக்காக சுறா படம் பாக்க நினைக்கிற எல்லோரும் போய் தெலுங்கு ஹேப்பி டேஸ் பாருங்க.ஓடுங்க.

ஒசியில நாடகம் பாக்கும் போது அது சரியாயில்லாமல் இருந்தால் எப்படி கத்துவோம்..அதுவே காசு குடுத்து மொக்கை படம் என்று தெரிந்தே பாத்துட்டு மொக்கை என்று சொல்வது நல்லாயில்ல.பாக்காம சொல்லுங்க..(இதுக்கு பத்து மைன்ஸ் விழ வேண்டும் ஆண்டவா..)

வேட்டைக்காரன் பாக்காதீங்க அப்படி சொல்லி பார்த்த கார்த்திக் யாரும் கேக்காமல் போன வருத்தத்தில் பதிவுகத்தை விட்டு போக பாத்தாரு.அப்புறம் எழுதாம இருந்தா வேட்டைக்காரன் படத்துக்கு வலுக்கட்டாயமாக இழுத்துட்டு போவேன் என்று சொன்ன பிறகு அவருக்கே புரிந்து திரும்ப வந்து விட்டார்.

அடுத்து ஆயிரத்தில் ஒருவன் பாத்துட்டு கும்மி அடிப்போம். வேட்டைக்காரனை விட்டு விடுவோம்.இல்லன்னா இருக்கவே இருக்கு சுறாவே இப்போ இருந்தே கும்மியடிப்போம்.ஸ்டார்ட் த மியூசிக்.

என் தம்பியும் பாக்கல.அந்த காசை பிரியாணி வாங்கி சாப்பிட்டு விட்டான்.வேட்டைக்காரன் படம் வருவதற்கு முன்னால் நான் எழுதிய விமர்சனம்.அதுவும் நவம்பர் மாசம் இருபத்திமூணாம் தேதி எழுதிய விமர்சனம் உங்களுக்கு. குறிப்பாக முதல் பத்தியும்,கடைசி பத்தியும் படிக்கவும்.நான் சொன்ன மாதிரி பத்து பதிவு எழுதிட்டேன்.நீங்களும் சுறா பாக்காம இருந்தா எத்தனை வட கிடைக்கும்னு பாருங்க.

சுறா பாத்து ஒரு விமர்சனம் வேணுமா இல்ல..பத்து பதிவு போட்டு மைனஸ் வாங்கி பிராபலப் பதிவர் ஆகணுமா நீங்களே முடிவு பண்ணுங்க.

10 comments:

அத்திரி said...

ஏன் இப்படி ஆப்பை தேடி நீயே அலையுற

லோகு said...

பாவம்ங்க அவரு.. வேட்டைக்காரனை இப்படி எல்லாரும் தொரத்தி, தொரத்தி வேட்டை ஆடறது பார்க்க பாவமா இருக்கு...

Prathap Kumar S. said...

தலைவா போதும் விட்டுருங்க... கொஞசம் சுறாவுக்காக மிச்சம் வைச்சுக்கோங்க...
படத்தை பத்தி அலசுவாங்க படத்துக்கு விமர்சனம் போட்டதை அலசுறதுக்கு ஒருபதிவா...முடில

அப்துல் சலாம் said...

இதில் ஏதாவது உள்குத்து இருக்கா பாஸு ?

Cable சங்கர் said...

என்னை வச்சு ஏதோ உள்குத்து குத்தியிருக்கறமாதிரி இருக்கு..?:))

அகல்விளக்கு said...

வேட்டைக்காரனை எல்லாரும் வேட்டையாடுராங்களே...

Unknown said...

ஹா ஹா.., வேட்டைக்காரன் - வெற்றிக்காரன் சரி தான..

♥Manny♥ said...

ஆஹா... இந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு தான் Tamilwire.comல இப்போ ”வேட்டைக்காரன்” படம் பார்த்துட்டு இருக்கேன்...இப்போ தான் விஜய் காலேஜ்ல சேர்ந்த காட்சி பார்த்தேன்.அதுல அந்த மேடம் class windowலாம் மூடுனவுடனே விஜய் போய் ஜன்னல திறந்து அங்க வேலை பார்க்குறவங்கள கொஞ்ஜ நேரம் கழிச்சு வேலை பார்க்க சொல்றாரு அந்த காட்சி அப்பிடியே "The Beautiful Mind"-னு Russel Crowe நடிச்ச படத்துல இருந்து சுட்டுட்டாங்க...உடனே உங்க நினைவு வந்து இங்க இந்த மேட்டர போஸ்ட் பண்ணிட்டேன்..இனி முழு படமும் பார்த்தாதான் மீதி ஹாலிவுட் படம்லாம் தெரியும்...

♥Manny♥ said...

Please watch this video

http://www.youtube.com/watch?v=2E0fHHh3lAU&feature=related

யார் சொன்னது பாபுசிவன் விஜய்யோட முந்தைய படங்களை மட்டும் காப்பி அடிச்சதுன்னு,,,அவரு ENGLISH படம் கூட பார்க்குறாருங்கறதுக்கு இதுவே ஒரு சாட்சி...
The above link has the Spanish version, sorry I couldn't find the link to English version...But if you watch this video you could understand, they copied the exact scene in this "Vettaikaran"...I think they would have chosen the word "Kollaikkaran" as a movie title it would suit for them...Are they not ashamed of stealing other person's thought,,,

SIV said...

"எந்த படத்தையும் பத்து நாள் கழிச்சி பாரு.முதல் நாளே பாத்து என்னவாக போகுது.."

சுறா பத்து நாள் ஓடுமா?