Tuesday, December 1, 2009

வேட்டையாட வாங்க - வேட்டைகாரன் ட்ரைலர் பார்த்து கதை சொல்லும் போட்டி

நேற்று முதல் நான் விஜய் ரசிகனாக மாறி விட்ட காரணத்தால் இந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறேன்.அதனால் உலக பதிவுலக, இந்திய பதிவுலக, தமிழக பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக இந்த போட்டி நடத்தப்படுகிறது.

நடுவராக உலக சினிமா என்று சொன்னால் கால் கிலோ கிடைக்குமா என்று ஒண்ணும் தெரியாமல் நடிக்கும் குஜராத் மோடி மஸ்தான் பிரபல நடுவர் டக்ளஸ் இருக்க சம்மதம் தெரிவித்து உள்ளார்.

அவர் அஜித் ரசிகன் என்பது இந்த ஊருக்கே தெரியும்.அதனால் விஜய்யின் படங்களை அதிகப்படியாக கிண்டல் செய்து பரிசு பெறும் எண்ணம் இருந்தால் அதில் தண்ணீர் தெளித்து அழித்து விடலாம்.

இதில் நான் பார்வையாளன் மட்டுமே.நடுவரே அவர் சொந்த செலவில் பரிசு வழங்கி சூன்யம் வைத்து கொள்வார்.பரிசு விபரம் முடிவில்..

போட்டி இன்று மதியம் உச்சி வெயில் அடிக்கும் போது தொடங்கி - வரும் டிசம்பர் 17 ராத்திரி உச்சக் கட்ட நேரத்தில் முடியும்.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது.அவர் தீர்ப்பு உங்களுக்கு பிடிக்காத பட்சத்தில் அவருடைய முகவரி தருவோம்.நீங்கள் அங்கு சென்று இறுதி தீர்ப்பு அவருக்கு வழங்கி விட்டு வரலாம்.எங்கே அடிக்கலாம் என்ற பட்டியலை அவரே தருவார்.


போட்டியின் விதிமுறைகள் :

1.விஜய் நடித்த பழைய படங்களின் விமர்சனமும் ஏற்றுக் கொள்ளப்படும்.அதற்காக முன்னர் அவர் நடித்த நாற்பத்தி எட்டு படங்களின் விமர்சனங்களையும் ஒருவரே எழுதி அனுப்பினால் அவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.பழைய படங்கள் பார்த்து ஏற்படும் சேதங்களுக்கு கம்பெனி பொறுப்பு அல்ல.

2.இது எந்த படத்தின் சாயல் என்று சரியாக சொல்பவருக்கு நடுவரின் சாயலில் ஒரு ரோபோ பரிசு வழங்கப்படும்.

3.போட்டியின் முடிவு இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.ஜெட்லி,கேபிள் சங்கர்,உண்மைத் தமிழன் இவர்களின் விமர்சனத்தோடு ஒப்பிடப்படும்.அவர்களின் விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்படாது.ஆனால் அவர்களுடைய விமர்சனத்தை காப்பி அடித்து போடலாம்.ஆனால் அவர் விமர்சனத்தைக் கண்ணால் கூட பார்த்தது இல்லை என்று கற்பூரம்(கற்பகத்தை அல்ல) ஏற்றி சத்தியம் செய்ய வேண்டும்.நன்றி அமீர்,டக்ளஸ் - இந்த யோசனை வழங்கியதற்கு.

4.பழைய எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைகாரன் விமர்சனத்தை யாராவது எழுதி அனுப்பினால் அவருக்கு ஆதி,வில்லு படம் பார்சலில் அனுப்பப்படும்.

5.கதை இருந்தால் தானே போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று யாரும் பின்னூட்டம் இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. (காரணம் விஜய் எங்க தலைவர்.நாங்க கிண்டல் செய்வோம்.யாரும் கேக்கக் கூடாது.நாங்க தட்டிக் கேட்போம்.யாராவது கிண்டல் செய்தால் - கிண்டல்,கேலி,நக்கல் செய்பவர்கள் முதலில் விஜய் ரசிகர் மன்றத்தில் சேரவும்)

6.தவறுகள் இருந்தால் பரிசின் மதிப்பு குறைந்து கொண்டே வரும்.முதல் பரிசு - போட்டி முடிந்ததும் தலையில் தேய்க்க எலுமிச்சம் பழம்.

போட்டியில் கலந்து கொள்ள முடியாத ஏக்கத்தில்,சோகத்தில்

அரவிந்த்.

8 comments:

"ராஜா" said...

ஒரு டீ ஸ்பூன் மதுர, அப்புறம் ஒரு கரண்டி திருபாச்சி, ரெண்டு சொட்டு திருமலை கடைசியா அரை டம்ளர் போக்கிரி, எல்லாத்தையும் கலந்து கட்டுனா அதாங்க வேட்டைக்காரன்....

பெசொவி said...

நானும் விஜய் ரசிகன்தான்.........எனவே, இந்த போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லை என்பதை ஏக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீழ்ப்பாக்கத்திலிருந்து
சினிமாபித்தன்

Prathap Kumar S. said...

என் வலைபூவுல பாதிவிஜய் பத்தின (கலாய்த்தல்)இடுகைகள் தான்... அதைவெச்சே...நான் பரிசு வாங்கிருவேனே...


//பழைய எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைகாரன் விமர்சனத்தை யாராவது எழுதி அனுப்பினால் அவருக்கு ஆதி,வில்லு படம் பார்சலில் அனுப்பப்படும்.//

டர்ர்ர்ர்ர்... அய்யோ...வேணாம்.. நான் இந்த வெளாட்டுக்கே வர்ல...

கார்க்கிபவா said...

டக்ளஸ், ஹார்லிக்ஸுடன் வந்து பார்க்கிறன்ப்பா

அத்திரி said...

ஏதோ ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க ............கார்க்கி ஆட்டோ அனுப்பலாமா இல்ல வேற ஏதாவது

ரெண்டு said...

இரும்புத்திரை, நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா..........................
இன்னும் படமே வரல....அதுக்குள்ளேயா

Unknown said...

//.. கார்க்கி said...

டக்ளஸ், ஹார்லிக்ஸுடன் வந்து பார்க்கிறன்ப்பா ..//

ஏன் சகா, விமர்சனம் படிச்சாவே அட்மிட் ஆய்டுவாரா? இல்ல, 'ரசிகர்கள்' ஆட்டோ அனுப்பிடுவாங்களா?

பீர் | Peer said...

//அவர் அஜித் ரசிகன் //

சின்ன திருத்தம்...
அவர் அஜித் ரசிகர் ன்னு இருக்கணும்.

அப்பறம் அந்த பேரு.. குஜராத் மோடி மஸ்தான் நாட்டாமை டக்ளஸ் நல்லாத்தான் இருக்கு :))